Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் விச வாயுவை பயன்படுத்த அரசு திட்டம்.

Featured Replies

...... களத்தை விட்டு அகன்ற நாம் தான்.. காரணம்..! அதை நினைவில் இருத்தி களத்துக்கு வெளியில் இருந்தேனும் எமது தமிழீழப் படைப்பலத்தையும் மக்களையும் பலப்படுத்தும் துரித நடவடிக்கையை செய்வதே அரசுகள் முன் வைக்கும் சவால்களை முறியடித்து எமது தேசத்தை விடுவிக்கும்..! :unsure:

ஐயா நெடுக்காலபோவான்,

என்ரை ஒரு வரி கேள்விக்கு 116 வரியில ஒரு பதிலை (யாழ்கள சாதனை?) எழுதி என்னை நெகிழவைச்சிட்டீங்க.

உங்கள் பற்றிற்கும் பொறுமைக்கும் முதலில் நன்றிகள்!

போராட்டம் வென்றால் யார் காரணமோ அவர்தான் தோல்விக்கும் காரணம்!

எதிரிகளும், அவர்களால் உருவாக்கப்பட்ட துரோகிகளும் இல்லாவிட்டால் போராட்டம் எதற்கு?

தோல்விக்கு அவர்களை காரணம் கூறுவது வீரனுக்கு அழகல்ல!

மீண்டும் மீண்டும் அதைபற்றியே நீங்கள் அதிகம் எழுதி இருந்தாலும்... கடைசிக்கு முதல்வரியில் உண்மையை கூறியுள்ளீர்கள்.

என் கேள்வியில் நான் சமாதானகாலத்திற்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு தான் யார் காரணம் என்ற கருத்தில்தான் கேட்டிருந்தேன். (தவறுக்கு மன்னிக்கவும்)

ஆனால்.. ஐநா அமைப்பு தனக்கு பாதுகாப்பான வழித்துணை செய்து தாருங்கள் என்று சிறீலங்காப் படையினருக்கு நிகரா வைத்து கேட்கும் அளவுக்கு தமிழ் மக்களின் இராணுவமாக இன்று தமிழீழ விடுதலைப் புலிகளே விளங்குகின்றனர். அவர்களே தமிழீழத்தின் தேசிய முப்படையாகவும் வளர்ந்து நிற்கின்றனர்.

இந்த பந்தாகாட்டும், பப்பாவில் ஏற்றும் பழக்கத்தை நீங்களும், தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகிற என்று கூறிக்கொள்ளும் ஊடகங்களும் கைவிடுங்கள்.

இது இறந்த காலத்தை மீட்கும் நேரமல்ல. எமது தமிழீழ தேசத்தின் முப்படைகளையும் பலப்படுத்தி.. தமிழீழ மக்களை சர்வதேச சதி வலைக்குள் இருந்து மீட்க பாடுபடும் நேரம் என்பதை எனியாவது துரோகிகள் உணர்ந்து தமிழ் மக்களின் தேசிய தலைமையோடு ஒருங்கிணைந்து அல்லது உபத்திரபம் அளிக்காமல் செயற்பட முன் வரட்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் கூட.

இது நல்ல நகைச்சுவை... ஒரு வெள்ளைக்காரனிடம் உதவி கேட்கும் போது, "எங்கள் தேசத்தை கொள்ளையடித்த வெள்ளைக்கார நாயே, தயவு செய்து ஒரு உதவி செய்வாயா?" என்றா கேட்பீர்கள்?

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செய்திகளை யாழ்களத்தில் ஒட்டியதற்காக உங்களுக்கே "துரோகிப்பட்டம்" கிடைத்ததல்லவா!

எடுத்ததற்கும் துரோகிபட்டம் கட்டும் இந்த வியாதியை கைவிடுங்கள்!

இழப்புக்களுக்காக ஒப்பாரி வைக்க தேவையில்லை. இனியும் இழப்புக்கள் நிகழாதிருக்க.. எமது படைப்பலத்தை பலப்படுத்துவதே முக்கியம்.

ஒப்பாரி வைக்கவில்லை... இழப்புகளுக்கான காரணங்களை பக்கச்சார்பின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

திரும்பவும் உடனடியாக பதில் எழுத ஆராம்பிக்காமல்... கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.... இந்த பின்னடைவுகளுக்கு காரணம்....

போராட்டத்தை நடத்தும் புலிகளும், போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்கும் புலம்பெயர்ந்த மக்களும்தான்.

தொடரும்.....

சாணக்கியன் இப்போதாவது உங்கள் உண்மையான முகத்தைக் காட்டியதற்கு நன்றிகள்.

உங்களைப் பொறுத்தவரை புலிகள் போராடாது இருந்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும், அப்படித்தானே? இவ்வளவு காலமும் வடக்குக் கிழக்கில் நடந்த இன அழிப்பிற்கு தமிழர் அவ்வப்போது பதில் அளிக்காது இருந்திருந்தால் தனி ஈழம் கிடைத்திருக்கும், அப்படித்தானே?

ஆகப் புலிகள் இவ்வளவு காலமும், இன்றும் நடத்திவரும் தனியரசு என்பது மாயை என்கிறீர்கள். சனம் பப்பாவில ஏறினதுதான் மிச்சம் என்கிறீர்கள்! ஆக டக்கிளசும், கருணாவும், பிள்ளையானும் தங்களது திறமையினால்த்தான் திறமையற்ற பிரபாகரனின் கொலைத் திட்டங்களில் இருந்து தப்பி வருகிறார்கள் என்கிறீர்கள்?

ஆக எங்களால் இனி ஏலாது எண்டு முடிவுக்கு வந்து விட்டீர்கள். நல்லது.

ஆனால் எமது போராட்டம் என்பது உங்கள் போன்ற சுயநலவாதிகளின் கைய்யில் இல்லாமல் தலைவரினால் வழிநடத்தப்படுகிறது.

இப்ப என்ன ? ரசயாண ஆயுதம் பாவிக்கப் போறாங்கள், ஆனால் நாங்கள் இதை வெளியில் சொல்ல இயலாது? அதுதானே உங்கள் கவலை? ஆனால் நீங்கள் மட்டும், கொழும்பில 100 கிராம் குண்டு வெடிச்சாலும் உடனேயே அதைத் தூக்கிக் கொண்டு,"குய்யோ, முறையோ, கொழும்பில சிங்களச்சனம் எல்லோ காயப்படப் போகுது?" எண்டு கொண்டு இதுக்குள்ள ஓடி வாங்கோ .

பதில் எழுதுறஅளவுக்கு புதிசா நீங்கள் எதையும் எழுதவில்லை.

நன்றி

அடச் சை... நான்கூட ஈழச் சுதந்திரப்போருக்கு அடிப்படை சிங்களப் பேரினவாதம்தானெண்டு இவ்வளவு காலமும் நினைச்சுக்கொண்டிருந்தனப்பா..! இப்பத்தானே விளங்குது, சிங்களவன் அண்டைக்கு 83 கலவரத்தில ஒரு பாசத்திலதான் எங்களை எல்லாரும் உள்ள வச்சு வீட்டையும் கொளுத்தி விட்டவனெண்டு..! இதை விளங்கிக் கொள்ளாமல் புலியும் போராடப் புறப்பட்டுட்டுது..! அதால இப்ப சாண‌க்கியனுக்கு கொழும்பில பிரச்சினை...! :unsure:

புலி போராடாம விட்டிருந்தா இப்ப சாணக்கியனும் அந்த சிங்களப் பாசத்தை அநுபவிச்சிருக்கலாம்தானே..! சே.. கெடுத்துட்டாய்ங்களே..! :unsure:

டங்குவார் அண்ணை, ஒரு ரகசியம் தெரியுமே 83 இல அழிஞ்சதை விட அதுக்கு பிறகு 30 மடங்கு அழிஞ்சு போச்சுதாம் கேள்வி பட்டனியளே?

சனம் மிச்சம் இருக்கிறவரை உங்கடை காசை போட்டு விளையாடிப்பாக்கலாம் எண்டு முடிவெடுத்திட்டியள் போல!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் உடனடியாக பதில் எழுத ஆராம்பிக்காமல்... கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.... இந்த பின்னடைவுகளுக்கு காரணம்....

போராட்டத்தை நடத்தும் புலிகளும், போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்கும் புலம்பெயர்ந்த மக்களும்தான்.

தொடரும்.....

சாண‌க்கியன்,

நீங்களும் புலம்பெயர்ந்து ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாளராக மாற வாழ்த்துக்கள்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் அண்ணை, ஒரு ரகசியம் தெரியுமே 83 இல அழிஞ்சதை விட அதுக்கு பிறகு 30 மடங்கு அழிஞ்சு போச்சுதாம் கேள்வி பட்டனியளே?

சாணக்கியன்,

30 மடங்கு 300 மடங்கு என்பதல்ல விடயம். போராட்டத்துக்கென்று ஒரு தார்ப்பரியம் இருந்திருக்கிறது என்பதே செய்தி. புலிகள் இப்போராட்டத்தை ஆரம்பித்திராவிட்டால் இன்னொரு அமைப்பு அதை நடத்தியிருக்கும் பின்னொரு காலத்தில்.

83 இல் அடிவாங்கினவனெல்லாம் சாரி சாரியா போய் போராட்டத்தில இணைஞவங்கள். அவையள் என்ன செய்திருக்க வேணுமெண்டு சொல்லுறியள்? கொஞ்ச நாள் ஊரில இருந்திட்டு திருப்பியும் கொழும்பில கந்தோர் வேலை செய்திருக்கோணுமே? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் தவறு பிரபாகரனுடையது மட்டுமல்ல.

தந்தை செல்வா மற்றும் தமிழர்களுக்கு உரிமை கேட்ட அரசியல்வாதிகளும் காரணமாகிறார்கள் (தமிழரசு கட்சி, 50/50 கேட்ட ஜி.ஜி.பொன்).

பேசாம தனிச் சிங்கள சட்டத்தை ஏற்றிருக்கலாம்.

குட்டக் குட்ட குனிஞ்சு கொண்டிருந்திருக்கலாம். ஒரு கட்டத்தில் அவனே குட்டி அலுத்துவிடுவான் என பொறுமை காத்திருக்கலாம்.

தரப்படுத்தலை எதிர்க்காமல் விட்டிருக்கலாம்.

அவன் நாடு அவன் மொழி. நாங்கள் வந்தேறு குடிகள். அவன் எங்கு வேண்டுமென்றாலும் குடியேறுவதை அலட்டிக் கொள்ளாமல் விட்டிருக்கலாம்.

எல்லாவற்றிலும் சிறந்தது சிங்களவனாகவே மாறியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை முடக்கவா இலங்கை - இந்திய பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம்

பிசாசுடன் கூட்டுவைத்தாவது தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் எனக்கூறினார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவருடைய வழிவந்த சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னையவர் தான் எண்ணியதை வெளிப்படையாகச் சொன்னார். பின்னையவர் அதையே தான் மிகுந்த மதிநுட்பத்துடன் செய்யமுற்பட்டதாக எண்ணுகிறார். புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசு வெளியிட்ட அதிகாரப10ர்வமான அறிக்கையில் ‘இலங்கைப் பிரதமரும் இந்தியப் பிரதமரும் அண்மையில் சந்தித்தபோது இலங்கை இனச்சிக்கலுக்கான தீர்வு எந்த வரையறைக்குள் அமைய வேண்டும் என உடன்பாடு’ கண்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

புலிகளின் இடைக்கால வரைவைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் அங்குள்ள ஏன் இந்தியாவை இழுக்கவேண்டும்? இனச்சிக்கலின் இறுதித்தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென இந்தியா கொண்டுள்ள கருத்தை ஏன் புலிகளின் இடைக்கால வரைவு பற்றி வெளியிட்ட அறிக்கையினுள் புகுத்த வேண்டும்? நீங்கள் உங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுகின்ற விடயத்தில் எல்லைமீறினால் அதைத் தடுக்க இந்தியா எம்பக்கம் நிற்கிறது என மறைமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே நாம் மேற்படி அறிக்கையைக் கொள்ள வேண்டியிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டிடும் ஆவலில் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும், புலிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூக்குரலிட்டு வருகின்றன.

இந்தியா புலிக்கு எதிரி, புலி நமக்கு எதிரி எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சிங்கள அரசியலாளர் பலர் சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவதும், பேசுவதும் அதைக்கண்டு எம்மத்தியிலுள்ள படித்த பேதைகள் பலர் ‘ஆகா, நம் பாரதத்தாயை சிங்களப் பேரினவாதிகள் குழப்பிவிட்டார்கள். நாம் உண்மையை எடுத்தியம்பி இந்தியாவை எம்பக்கம் திருப்பிட வேண்டும்” என அங்கலாய்ப்பர். இவற்றிடையே ‘புலிகளின் கடற்படை இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என டெல்லியில் உள்ளவர்கள் கவலை கொள்கின்றனர். புலிகள் எங்ஙனம் தமது படை பலத்தை இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது இரட்டிப்பாக்கியுள்ளனர் என நான் இந்தியாவிற்கு விளக்கினேன்” என்பது போன்ற கூற்றுகளை அடிக்கடி வெளியிட்டு அவருக்கே கைவந்த பாணியில் கோமாளிக் கூத்தாடுகிறார் கதிர்காமர்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் சிறிலங்காவும் இந்தியாவும் விரைவில் ‘பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம். (Defense Cooperation Agreement) ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாகவும் அதுபற்றி இருதரப்பும் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கிளம்பி எம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டால் புலிகளின் படைவலு முடக்கப்பட்டுவிடும் எனவும் பேச்சுவார்த்தை பிழைத்து சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்கள் மீது போரைக் கட்ட விழ்த்து விடும் போது மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா உதவும் எனவும் ஒரு கருத்து இப்போது உலவுகிறது.

இவ்வொப்பந்தம் நமது உரிமைப் போராட்டப் பாதையில் ஒரு பெரும்பின்னடைவை ஏற்படுத்தப்போகின்றது என வீரியமற்ற தமிழ்க் கருத்தியலாளர் முனகுவதையும் நாம் கேட்கக் கூடியதாயுள்ளது. பழம் எப்போ நழுவிப்பாலில் விழும் அது எப்போ நழுவி வாயில் விழும் என எம்மிடையே காத்துக்கிடந்த எட்டப்பர்கள் சிலர் இது தான் சரியான சந்தர்ப்பமென எண்ணி “இந்தியாவே தமிழரின் தாயகம். எனவே இந்தியா இங்கு வந்து தமிழரைக் காப்பாற்ற வேண்டும்” என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டால் புலிகளைப் பற்றிப் பயப்படத்தேவையில்லை எனக் கனவு காண்கின்றனர் இந்தியதாசர்ளாக மாறியுள்ள ஜே.வி.பி. போன்ற பல சிங்களப் பேரினவாதிகள். இனி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் என இந்தியா கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.

இதில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவ்வொப்பந்தம் சிறிலங்காவுக்கென பிரத்தியேகமாக இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் சிறிலங்காவுக்கெனவே விசேடமாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமானது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், திறந்த வான் பறப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைப்போல ஒரு பொதுச் சட்டகத்தினடிப்படையில் அமைந்ததாகும். 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வியட்நாம் அரசுடன் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டது. வியட்நாமினுடைய ரஷ்ய தயாரிப்பு மிக் வேக வானு}ர்திகளை பழுதுபார்க்கவும், அவற்றிற்கான புதிய ஓட்டிகளுக்குப் பயிற்சியளிக்கவும், சிறிய மற்றும் நடுத்தர ஆயுத உற்பத்தி செய்ய உதவி வழங்கவும், வியட்நாமியக் கடற்படையின் சண்டைப்படகுகள், கப்பல்கள் ஆகியவற்றைப் பழுதுபார்க்கவும், தரமுயர்த்தவும் மேற்படி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா ஒத்துக்கொண்டது. அத்துடன் இந்தியா தயாரிக்கும் போர்த் தளபாடங்களை முன்னிணக்க விலைக்கு வியட்நாமிற்கு விற்கவும் இந்த ஒப்பந்தம் வழிசமைத்தது. இந்திய படைகளுக்கு விசேட காட்டுச் சண்டைப் பயிற்சி வழங்கவும் இந்தியாவிடமிருந்தது அதிவேக ரோந்துப்படகுகளை வாங்கவும், இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையுடன் கூட்டாகச் செயற்படவும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தின்படி வியட்நாம் ஒத்துக்கொண்டது. 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி வியட்நாம் தலைநகர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அங்கு ஐந்து நாள் தங்கி மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி டெல்லி சென்ற சிங்கப்ப10ர் பாதுகாப்பு அமைச்சர் தியோசீ ஹியானும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ{ம் இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கடந்த ஆண்டு சிங்கப்ப10ர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இவ்வொப்பந்தம் நிறைவேறியது. தென் கிழக்காசியாவின் அமெரிக்கச்சார்புக் கூட்டணியான ஆசியானின் (ASEAN) அமைப்பை சேர்ந்த நாடுகளில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்ட முதலாவது நாடு சிங்கப்ப10ராகும்.

புலனாய்வுப் பரிமாற்றம், படைத்துறைப் பயிற்சி படையதிகாரிகள் பரிமாற்றம், கூட்டுக் கடற்படைப்பயிற்சி நடவடிக்கை என்பன இந்திய – சிங்கப்பர் பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும். இந்திய மாகடல் வரை படத்தை நீங்கள் அவதானித்தால் சிங்கப்பரின் இருப்பிற்கும் பொருளாதார நலனுக்கும் இன்றியமையாத மலாக்கா நீரிணையின் வாயிலாக இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தமான் - நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதைக் காணலாம். இந்த வகையிலும், மலேசியா, இந்தோனேசியா ஆகிய பெரிய நாடுகளின் பிராந்தியச் செல்வாக்கை ஓரளவு சமநிலைப்படுத்தவும் சிங்கப்ப10ருக்கு இருக்கும் தேவையை கணக்குப் பண்ணி இந்த பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொண்டுள்ளது எனலாம். (எனினும் இது அமெரிக்காவிற்கும் சிங்கப்ப10ருக்குமிடையில் இருக்கும் மிக நெருக்கமான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)

நவம்பர் மாத இறுதியில் இந்தியத் தலைநகரம் வந்த பிறேசில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும் அந்நாட்டின் உயர்மட்ட படைத்துறைக்குழுவினரும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடன் ஒரு விரிவான பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைத் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆயுதம் மற்றும் பல்வேறு போர்த்தளபாட, சண்டை வானு}ர்தி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மூன்றாம் உலக நாடு பிறேசிலாகும். ஆதன் போர்த்தளபாட, ஆயுதத் தொழிற்றுறையில் பங்கெடுக்கவும், பயனடையவும் அந்நாட்டுடனான பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும் என்பது டெல்லியின் கணிப்பு.

இதுபோல செக் குடியரசுடனும் இந்தியா இந்த பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விரிவான பேச்சுக்களை நடத்து முகமாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதி வரை செக்குடியரசின் தலைநகரான பிராக் சென்றிருந்தார். “இந்தியப்படைகளுக்கான பார ஊர்திகளை கூட்டாக உற்பத்தி செய்வது தொடர்பாகவும் வு-72 தாங்கிகளையும் ஆi ரக உலங்கு வானு}ர்திகளையும் தரமுயர்த்துவது பற்றியும், இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் பெர்னாண்டஸ{க்கும் செக் பாதுகாப்பு அமைச்சர் மிரேஸ்லாவ் கொஸ்டெல்காவிற்குமிடையில் விரிவான பேச்சுகள் நடைபெற்றன” என இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். பெர்னாண்டசும் செக் பாதுகாப்பு அமைச்சரும் அக்டோபர் 20 ஆம் திகதி பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கடந்த மாதம் ஓமான் நாட்டுடனும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான விரிவான பேச்சுவார்த்தைகளை இந்தியா ஆரம்பித்தது. அதற்குரிய இறுதிவரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஓமானின் படைவீரர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தியா பயிற்சி வழங்கும். அத்துடன் இந்தியப் போர்த் தளபாடங்களை ஓமான் இதனடிப்படையில் வசதிவிலைக்கு வாங்கவும் ஏற்பாடாகிறது.

இவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்து பார்ப்போமேயானால் இந்தியாவின் பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் யாதென்பது ஓரளவேணும் புரியும். உலகின் பல்வேறு படைகளுடன் நேரடிப் பயிற்சி, கூட்டு நடவடிக்கைகள், தகவல் மற்றும் புலனாய்வுப் பரிமாற்றம் என்பவற்று}டாக தொடர்புகளை வளர்த்தெடுத்தல், போர்த்தளபாட விற்பனவு, கூட்டு உற்பத்தி என்பவற்றிற்கான வாய்ப்புக்களைப் பெருக்குதல் என்பவற்றையே மேற்படி இந்திய பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்திற்கு அப்பாலும் போரியற் செல்வாக்குள்ள ஒரு அரசாக உலக அரங்கில் காலடி எடுத்துவைக்கவும் இவ்வொப்பந்தம் இந்தியாவிற்கு வழிசமைக்கிறது. அதைவிட மிக முக்கியமானதாக இவ்வொப்பந்தத்தில் நாம் கவனிக்க வேண்டியவிடயம் என்னவெனில் இது எவ்வகையிலும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல என்பதே. அந்த நோக்கில் அதன் சட்டகம் வடிவமைக்கப்படவில்லை என்பது மேற்கூறிய உதாரணங்களிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்.

பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமாயின் அதைக் கைச்சாத்திடும் இரு நாடுகளில் ஒன்றுக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற நாடு படையுதவி செய்யவேண்டுமென்பதே அதன் அடிப்படை. இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தை 1971 ஆம் ஆண்டு சோவியத் குடியரசுடன் மட்டுமே இந்தியா செய்திருந்தது. அதுவும் 2001 ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. இந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் எதிர்மறையான விளைவுகளிலிருந்து விடுபடுவதும் மேற்படி கூட்டுறவு ஒப்பந்தங்களை பரவலாக இந்தியா செய்வதன் பின்னணியிலுள்ள ஒரு நோக்கமாகும்.

இது சிறிலங்காவிற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தமல்ல என்பதும் தெளிவு.

21.12.2003 சிவராம்.

சாணக்கியன்,

30 மடங்கு 300 மடங்கு என்பதல்ல விடயம். போராட்டத்துக்கென்று ஒரு தார்ப்பரியம் இருந்திருக்கிறது என்பதே செய்தி. புலிகள் இப்போராட்டத்தை ஆரம்பித்திராவிட்டால் இன்னொரு அமைப்பு அதை நடத்தியிருக்கும் பின்னொரு காலத்தில்.

83 இல் அடிவாங்கினவனெல்லாம் சாரி சாரியா போய் போராட்டத்தில இணைஞவங்கள். அவையள் என்ன செய்திருக்க வேணுமெண்டு சொல்லுறியள்? கொஞ்ச நாள் ஊரில இருந்திட்டு திருப்பியும் கொழும்பில கந்தோர் வேலை செய்திருக்கோணுமே? :unsure:

டங்குவார்,

நீங்கள் 30, 300 என்று குழப்பினவுடன தேடிப்பாத்தன்... நீங்கள் சொன்னது சரிதான்... 83 கலவரத்தில 3,000 மாம் (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Black_july ) இப்ப அது 300,000 (ஆதாரம்: http://genocide.org.uk/genocide ) மாம்...!

நூறுமடங்கு....! மக்கள் கொல்லப்பட்டிருக்கினம்!

இன்னும் எத்தனை லட்சம் பேரை கொல்லுறதா உத்தேசம்?

--------------

தொடர்ச்சி............

நீங்கள் உங்கடை அறிவையும் திறமையையும் பாவிச்சு தானே வன்னியிலையும் நிக்காம, கொழும்பிலையும் நிக்காம, வெளியாலை போய் உங்கடை எதிர்காலத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு பொழுது போக்கா இப்பிடிக் கதைக்கிறிங்கள்!

போராட்டத்தாலை இனி உங்களுக்கு உயிர், உடமை இழப்புகள் எதுவும் ஏற்படப்போவதில்லை!

அதனால தீவிர ஆதரவாளரா காட்டிக்கொள்ளுறீங்க, எழுதுறீங்க!

யாழ்ப்பாணத்திலையும், கொழும்பிலையும் உள்ளவர்களை பார்த்து புரட்சி செய்ய சொல்லுற நீங்கள் கனடாவில அரசாங்கம் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடை செய்ததிற்கெதிராக வீதியில இறங்கி போராட புத்திசாலித்தனமா மறக்கிறீங்க!

உண்மையா இந்தப் போராட்டத்தை தலையால சுமக்கிறது யார்? ஊரில தொழிலை நம்பி வாழ்ந்த ஏழைகள்தானே!

நீங்கள் தன்மானத் தமிழன், வீரப்புலி, மாற இலட்சியம், கொண்ட கொள்கை என்றெல்லாம் அங்கை இருந்து போதனை செய்து, நீங்கள் கடைசியா அவையளுக்கு சொல்லுறது வீரமரணம் தானே!

உங்கடை வீட்டுக்குள்ளையோ, இல்லாட்டி உங்கட அலுவலகத்திலயோ இப்பிடி இலட்சியப்பற்றோட நின்று போராடுறனிங்களோ? நெளிவு சுளிவா, தட்ட வேண்டிய இடத்தில தட்டி பணிய வேண்டிய இடத்தில பணிஞ்சு போறியள் தானே?

யாருடையதோ உயிர்தானே என்று எவ்வளவு கவலையீனமா இருக்கிறீங்க?

பெரிய பெரிய வரலாறுகள், சமன்பாடுகள் எல்லாம் சொல்லுற நீங்கள், சூழ்நிலைக் கைதிகளாக சிக்கி சாகிற அந்த பொடியங்களுக்கு உண்மையா உங்களை போல வாழத்தான் விருப்பம் என்கிறதை ஏன் ஏற்கிறீங்க இல்லை?

இன்டைக்கு "நாலு பெண்களின் சடலங்கள் கரையொதிங்கிய" செய்திக்கும், "விசவாயு தாக்குதல்" செய்திக்குமிடையில உங்களுக்கு இருக்கிற அக்கறையே இதற்கு சாட்சி.

உங்கடை உண்மையான இரக்கமற்றதன்மையும், முழுமையான அக்கறையற்ற தன்மையும்தான் இந்த வீழ்ச்சிக்கும், நீட்சிக்கும் காரணம்!

(புலிகளின் தவறுகள் பற்றி இங்கு கதைக்க முடியாது)

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சாணக்கியன் நடந்ததுகளை கதைச்சு ஏதும் ஆகப் போகிறதில்லை.

இதுக்கு என்ன தீர்வு நீங்க சொல்லுறீங்க.

ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஒட்டுமொத்த சரணடைவு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருடையதோ உயிர்தானே என்று எவ்வளவு கவலையீனமா இருக்கிறீங்க?

பெரிய பெரிய வரலாறுகள், சமன்பாடுகள் எல்லாம் சொல்லுற நீங்கள், சூழ்நிலைக் கைதிகளாக சிக்கி சாகிற அந்த பொடியங்களுக்கு உண்மையா உங்களை போல வாழத்தான் விருப்பம் என்கிறதை ஏன் ஏற்கிறீங்க இல்லை?

இன்டைக்கு "நாலு பெண்களின் சடலங்கள் கரையொதிங்கிய" செய்திக்கும், "விசவாயு தாக்குதல்" செய்திக்குமிடையில உங்களுக்கு இருக்கிற அக்கறையே இதற்கு சாட்சி.

உங்கடை உண்மையான இரக்கமற்றதன்மையும், முழுமையான அக்கறையற்ற தன்மையும்தான் இந்த வீழ்ச்சிக்கும் நீட்சிக்கும் காரணம்!

எது உண்மை..!

இனக்கலவரங்களின் போது உயிரிடன் எரிக்கப்பட்டது உண்மையல்ல. அங்கு உயிர்கள் பலியாகவில்லை.. வெறும் சடங்களா எரிக்கப்பட்டன. ஏன் அவர்களுக்கு வாழ விருப்பமின்றியா எரிந்து போயினர்..??!

சாணக்கியனின் கருத்துப்படி.. மனிதன் சாவுக்குப் பயந்து வாழ்வதுதான் விதிப்பு எங்கிறார்.

ஆனால் மறுபுறத்தே ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலியிட்டு ஒரு அரசு ஏன் ஒரு இனத்தின் மீது யுத்தம் செய்ய வேண்டும்..??! அந்த சிங்கள இளைஞர்கள் சடங்களா.. அவர்களுக்கு அமைதியாக வாழ தேசம் இல்லையா.. வசதி இல்லையா.. இருந்தும் ஏன் சாவுக்களத்தைத் தேடி அனுப்பப்படுகின்றனர்..??! ஏன் இந்தச் சாணக்கியனுக்கு அவை மரணங்களாக.. பலியிடல்களாகத் தெரியவில்லை..???!

இனத்தின் இருப்பை காக்கப் போராடும் இளைஞன் முன் வாழ்வுக்கு ஆசைகாட்டும் சாணக்கியன்.. ஏன் ஒரு இனத்தை வலிந்து அழிக்க சாகத் துணியும் சிங்கள இளைஞனுக்கு வாழ ஆசை காட்டுகின்றார் இல்லை..!

மனித வரலாறு யுத்தம்.. இயற்கை அழிவு என்று பேரழிவுகள் இன்றி.. சாவுக்குப் பயந்தா வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது ஐயா உண்மை.

பலமானவன் அடிக்கிறான்.. பலவீனமானவன் வாங்கிக் கொண்டு.. வாழ்வுக்கு ஆசைப்பட்டு பலமானவனுக்கு அடிமையாக வாழ வேண்டும்... இதுவா உலக இயற்கையியல் உண்மை..!

நீங்கள் யுத்தத்தில் ஈடுபடும் இளைஞர்களில் ஒரு தரப்பில் மட்டும் குறை காண்பதும்.. இரக்கம் காட்டுவதும் உங்களின் போராட்டத்துக்கு எதிரான சூழ்ச்சிகரமான நோக்கத்தைதச் சொல்கின்றனவே தவிர. அதில் மனிதாபிமானமோ உண்மையாக இரக்கமோ கிடையாது.

விடுதலைப்புலிகள்.. யாருமல்ல. தமிழ் மக்களின் பிள்ளைகளே. அந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்களா..??!

சிங்கள் இராணுவத்தினர் யார்.. சிங்கள மக்களின் பிள்ளைகளே.. அந்த உண்மையையாவது ஏற்றுக் கொள்கிறீர்களா..??!

இரு தரப்பும் மனிதக் குழந்தைகளே. அப்போ ஏன் விடுதலைப்புலிகள் மீது மட்டும் உங்களின் மனிதாபிமானம் வீச்சுப் பெறுகிறது. சிங்கள இளைஞன் மீதல்ல. சிங்கள இளைஞன் யுத்தத்துக்கு வரவில்லையேல்.. ஏன் விடுதலைப்புலி.. மடியப் போகிறான்..??! ஏன் உங்களின் ஆசை வார்த்தைகளை வாழ நிலமும்.. வசதியும்.. சுதந்திரமும் உள்ள சிங்கள இளைஞனுக்குக் காட்டி அவனை.. போர்க்களத்திலின்றும் அகற்றி.. விடுதலைப்புலிகளின் போராட்டத் தேவையை.. மரணத்தை இல்லாமல் செய்கிறீர்கள் இல்லை..???!

தமிழ் மக்களின் பிள்ளைகள்.. தமது நிலத்தில் நிம்மதியான வாழ்வைத் தானே கேட்கின்றனர். 5 ஆண்டுகள் சமாதானம் பேசியும் கேட்டனர். ஏன் சிங்கள இளைஞனிடம் தமிழ் இளைஞர்கள் அவனின் நிலத்தையா பறிக்கப் போராடுகின்றனர். ஏன் அப்போ சிங்கள இளைஞன் வலிந்து தமிழ் இளைஞனின் சுதந்திர வாழ்வை மறுதலிக்க வேண்டும். அது நியாயமா..??!

ஏன் உங்களுக்கு இப்படியெல்லாம் மனித உணர்வு கேட்கத் தூண்டவில்லை..??!

விடுதலைப்புலிகள் தவறு செய்யவில்லை என்பதற்கும் அப்பால் அவர்களை தவறு செய்யத் தூண்டியது துரோகிகளின் இலட்சியப்பற்ற மக்கள் ஏமாற்றும் நடவடிக்கைகளே.

உலகில் ஒவ்வொரு இனமும் தன் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. காகத்தின் கூட்டில் இருந்து வரும் குஞ்சுக்கும் வாழத்தான் ஆசை. அதற்காக பருந்து அதனைக் கண்டு இரங்கிவிட்டுப் போக வேண்டும் எங்கிறீர்கள் சாணக்கியன். அல்லது ஜீவகாருணியம் மிக்க நீங்கள் காகக் குஞ்சுகளை காத்துக் கொண்டா திரிகிறீர்கள்..! எது உண்மை என்றும் சொல்கிறீர்கள்..??!

நாம் எமது சகோதரர்களின் அழிவை விரும்பவே இல்லை. அவர்களும் வாழ வேண்டும். ஆனால் எம்மை எமது இனத்தை வலிந்து அழிக்க இன்னொரு மனிதனுக்கு இடமளிக்கத்தான் வேண்டுமா..??! என்பதே அங்கு முன்னிலை நிற்கிறது.

குஞ்சைப் பிடிக்க வரும் கோழி.. ஏன் பருந்துடன் சண்டை போடுகிறது. இறப்பைப் பற்றி சிந்திக்காமல் வெற்றி பெற முயல்கிறது..??! ஏன்.. இவையெல்லாம்.. இயற்கையில்... இவை இரக்கமற்ற செயல்கள் அல்லவா..???!

என்றோ ஒரு நாள் எமக்கெல்லாம் மரணம் உண்டு. மரணத்திலின்றும் தப்பி எவரும் வாழ முடியாது. ஒருவேளை சாணக்கியன்.. தான் சிரஞ்சீவியாக வாழ்ந்திடலாம் என்று கனவு காண்கிறார் போல..!

உலகில் மனிதன் ஆக்கியவற்றால் நிகழும் மரணங்கள் எத்தனை. அவைக்கு காரணமே இல்லை. ஆனால்.. யுத்தத்தில்.. ஒரு இனத்தின் எதிர்கால இருப்புக்காக மடிவதென்பது தியாகம். அது சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து இறப்பதிலும் மேலானது. அதை நான் இப்போது உணர்கிறேன். எனது மரணத்தை வன்னிப் போர்களத்தில் சந்திக்கவே நான் விரும்புகிறேன். ஒரு கார் விபத்தில் வீணே மடிவதிலும்.. அது என் இனத்தை அழிக்க கூவி வரும் எதிரியை அழிப்பதால் எனின்.. அதை வரவேற்பேன்.

இது ஈவு இரக்கமற்ற சிந்தனையின் பால் எழுந்ததல்ல. ஒரு இனத்தின் எதிர்கால இருப்புக்கு.. அவசியம். நான் மட்டும் வாழ்ந்து எனது இனமே அழியும் நிலையை விட்டுச் செல்வதானால்.. சாணக்கியன்.. ஏன் திருமணம் முடித்து பிள்ளை குட்டிகளோடு வாழுகிறார். தானே வாழ்த்து செத்து மடிய வேண்டியதுதானே. இவருக்கேன் சந்ததி..???!

இக்கட்டான வேளைகளில் மக்களை குழப்ப.. போராளிகளைக் குழப்ப.. இப்படியான வாழ்க்கைக்கு ஆசை காட்டும் எதிரிகளை துரோகிகளை நாம் கண்டுவிட்டுத்தான் இருக்கிறோம். எதிரிக்கு எப்படி சாக துணிவிருக்கோ.. அப்படி எமக்கு எமது மண்ணுக்காகச் சாகத் துணிவிருக்கும் சாணக்கியன். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆசை வார்த்தைகளை எதிரியிடம் சொல்லி சிங்கள இளைஞனுக்கு அவனின் சொந்த இடத்தில் குவிந்து கிடக்கும் நிம்மதியான வாழ்வை வாழச் சொல்லுங்கள். எமது சகோதர்களும் யுத்தமின்றி சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வார்கள். அதுதான் சாணக்கியம்.. யதார்த்தம்.. உண்மை.. இரக்கம்.. மனித நேயம். வெறுமனவே புலிகள் மீது மட்டும் நீங்கள் குறிவைப்பது பிரச்சாரம். எமது இனத்தை அழித்தொழிக்க சாவுக்கு அஞ்சாது வரும் எதிரிக்கு நீங்கள் ஊட்டும் உரம். எமது போராளிகளுக்கு நீங்கள் தரும் விசம்.. இது..!

சாணக்கியனின் பக்கச்சார்பான.. உண்மையான மனித நேயத்துக்கு ஜீவகாருணியத்துக்கு அப்பாலான.. இக்கருத்துக்களை பூரண தணிக்கை செய்வதே நியாயம் நடுநிலை. இன்றேல் சாணக்கியம்.. மகிந்தவை நோக்கியும் இவ்வாறு இரக்கம் காட்ட கோர வேண்டும்.. அமெரிக்காவிடமும் இவ்வாறு அமெரிக்க இளைஞர்கள் மீது இரக்கம் காட்டி ஈராக்.. ஆப்கானிஸ்தானில் இருந்து அவர்களை அமெரிக்காவில் அமைதியாக வாழ வைக்க.. குரல் எழுப்ப வேண்டும்..! செய்வாரா.. சிங்களவனின் எலும்புக்கு வீணி வடிப்பவர்..??! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Tigers used ‘CS gas’ on wanni troops- Army

Sri Lanka Army says investigations into a recent LTTE gas attack on advancing troops in the Wanni had found that the Tigers had used ‘CS gas’, which is generally used for anti-hijack or hostage operations.

Army headquarters, in a statement, acknowledged that a few soldiers in the Wanni during their encounters with the LTTE in the most recent past developed breathing difficulties following emission of gas, believed to have been directed by the Tigers towards the advancing troops.

“Investigations which went into the incident soon after admission of those soldiers to hospitals have affirmed Tiger terrorists have used CS gas, generally used for anti-hijack or hostage operations in Wanni. Produced in 1928, the name CS gas came to be known after the death of its founders Ben Corson and Roger Staughton,” the Army said.

The statement further asserted that the Sri Lanka Army is fully equipped and well geared up to face any chemical or gas attacks of the enemy. The army while reiterating its capacity to challenge any such threats in the future said it has already distributed gas masks among the troops fighting in the Wanni.

It is also noted that use of any chemical or gas in the warfare goes against UN stipulated Conventions and worldwide accepted norms.

As reported in the Daily Mirror yesterday the government had put in place contingency plans for a possible chemical attack by the LTTE against the security forces fighting in the North.

Healthcare and Nutrition Minister Nimal Siripala De Silva, had, instructed officials to immediately dispatch extra health staff, medicines and equipment to the North to face any contingencies that may arise in the event of a chemical attack on security forces.

The decision was taken following a discussion held at the ministry and chaired by Mr. De Silva, to draft a contingency plan in the event of a chemical attack on the armed forces.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=26674

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்,

நீங்கள் 30, 300 என்று குழப்பினவுடன தேடிப்பாத்தன்... நீங்கள் சொன்னது சரிதான்... 83 கலவரத்தில 3,000 மாம் (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Black_july ) இப்ப அது 300,000 (ஆதாரம்: http://genocide.org.uk/genocide ) மாம்...!

நூறுமடங்கு....! மக்கள் கொல்லப்பட்டிருக்கினம்!

இன்னும் எத்தனை லட்சம் பேரை கொல்லுறதா உத்தேசம்?

300 என்று நான் சொன்னது ஒரு சொல்லாடல் மூலமான கருத்தாடலுக்கு. அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் கீழே இறங்கி வாருங்கள். :unsure:

நாங்கள் கொல்லுறது இருக்கட்டும்..! புலியின் காலத்துக்கு முன்னையே சிங்களவன் தமிழனை கொன்று குவிச்சிருக்கிறான். அப்ப செத்தவையளுக்கு உங்கட பதில் என்ன? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியின் காலத்துக்கு முன்னையே சிங்களவன் தமிழனை கொன்று குவிச்சிருக்கிறான். அப்ப செத்தவையளுக்கு உங்கட பதில் என்ன? :unsure:

எம்மவரில் பலருக்கு வரலாறு தெரியாது. பிரபாகரனோடு தான் தமிழர் பிரச்சனை ஆரம்பித்தது போல் நினைத்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: சாணக்கியன்,நீங்கள் பதில் எழுத வேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. உங்கள் பதிலை நான் எதிர்பார்த்திருக்கவுமில்லை.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார்,

நீங்கள் 30, 300 என்று குழப்பினவுடன தேடிப்பாத்தன்... நீங்கள் சொன்னது சரிதான்... 83 கலவரத்தில 3,000 மாம் (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Black_july ) இப்ப அது 300,000 (ஆதாரம்: http://genocide.org.uk/genocide ) மாம்...!

நூறுமடங்கு....! மக்கள் கொல்லப்பட்டிருக்கினம்!

இன்னும் எத்தனை லட்சம் பேரை கொல்லுறதா உத்தேசம்?

புரியவில்லை சாணக்கியன். இந்த மக்கள் கொல்லப்பட்டதற்கு யாரைக் குற்றம் சாட்டுகின்றீர்கள். கோவணம் அவிழ்க்லாம் என்று முடிவெடுத்தால், தெளிவாகச் சொல்லலாமே? யாரைச் சொல்ல வருகின்றீர்கள்??

சமாதான காலம் குழப்பியது என்று புலம்புகின்றீர்கள். நிச்சயமாக யாருக்கும் முழு மனதோடு செய்யவில்லை. ஏனென்றால் அங்கே நியாயம் இருக்கவில்லை. இறுதிவரை தமிழனுக்கு எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை. ரணில் ஏதோ ஒரு வகையில் பலிகளைத், தமிழனின் பலங்களைச் சிதைப்பதற்கே முயன்றார். அதற்குப் பதிலாக நடக்கவும் வேண்டி வந்தது.

2003ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நல்லவராகத் தெரிந்த, புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கின்றபோது உத்தமர்களாகத் தெரியாமல் தடை செய்தது. ஏன்? தங்களுடைய தேவையைப் புலிகள் நிவர்த்தி செய்யவில்லை என்பதால். ஆகவே தெரியவேண்டும். எதுவுமே நியாயமாக இல்லை என்று.

இப்படிப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கச் சொல்கின்றீர்களா?

தமிழன் பலத்தால் வரவில்லை. அவன் பலவீனத்தால் தான் வந்தான். இன்றைக்கு சிறிலங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அங்கே மக்கள் துன்பப்படும்போது, உங்களுக்குச் சிறிலங்கா அரசு குற்றவாளியாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பது போலப் பாசாங்கு செய்கின்றீர்கள்.

இந்த மக்களை அரசஆக்கிரமிப்பு பிரதேசத்துக்கு வரச்சொன்னால், அங்கே சித்திரவதைக் கூடம் போல முகாம்கள் அமைத்து வைத்திருக்கின்றான். அங்கே 97களில் இப்படி முகாம்களில் மாட்டுப்பட்ட பல மாணவர்கள், 1,2 வருடம் கல்வியை விட்டு. தரம் குறைந்து கற்றிருக்கின்றார்கள்.

இப்படி ஒரு இழி நிலை தான் அந்த முகாம்கள்.

தமிழனுக்குத் தீர்வு கிடைக்காதவரைக்கும் இந்தப் போர் ஓய்ந்துவிடப் போவதில்லை. இன்று கிழக்கை இராணுவம் ஆக்கிரமித்தாலும் அங்கே செய்தி இருட்டடிப்பு மூலம் முடக்கப்படுகின்றது. அங்கே மக்கள் மீளக்குடியமர்த்த அனுமதிக்கப்படவில்லை.

இப்பாது புலிகள் தோற்றுப் போனால் கூட அது எங்களின் தவறே தவிர, அது குறித்து குற்றம் காட்ட எவ்வித யோக்கியமும் கிடைடயாது.

யாழ்களத்தைப் பொறுத்தவரைக்கும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் யார் எந்தப் புற்றில் இருப்பார்கள் என்று தெரியாது. சிங்கத்தின் குகைக்குள் நீங்கள் இருப்பது போல.

ஏதோ முகமூடியாக இருந்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம், என்னவும் புலம்பலாம் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். உங்களின் ஐபியை வைத்து அடையாளம் காண்பது அவ்வளவுவொன்றும் கஸ்டமானதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

விஷ வாயுவைப் பற்றி தேசம்நெற்றில் வெளிவந்த பின்னூட்டம் ஒன்றில் இருந்து சில பகுதிகள்...

CS gas ஐ உபயோகிப்பது இரசாயன ஆயுதம் உபயோகிப்பது போல் எனக் கருதினால், இலங்கையில் நடைபறும் அனைத்து வகையான ஆர்ப்பாட்ட வகையிலான போராட்டங்களும் கூட இரசாயான ஆயுதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் O-CHLORO- BENZYLMALONONITRILE எனப்படும் இராசாயனப் பெயரை கொண்ட CS gas ஐ, அப்பாவிகளைக் கைது செய்தலையே தொழிலாகக் கொண்ட இலங்கை காவல்துறை நூற்றுக்கணக்கான முறை பல்கலைக்க்ழக மாணவர்கள் மீது நடத்தியிருக்கிறது. சகல பத்திரிகைகளாலும் பிக்ஞையின்றி பயன்படுத்தப்படும் சொல் ‘கண்ணீர்ப்புகைக் குண்டு’ என்பது உண்மையில் CS gas என்பதே.

CS gas ஆயிரக்கணகான தொன்கள் வியட்னாம் யுத்ததில் அமெரிக்க அரசு பயன்படுத்தியது. ஒரு சில செக்கன்களில் தமது வேலையைக் காட்டத்தொடங்கும் CS gas ஐ இரசாயன ஆயுதம் எனக் கூறுவது எவ்வகையில் பொருத்தப்பாடான விடயம் என்பது புரியவில்லை. சாதாரணமாக இராணுவப் பயிற்சி பெறும் போது CS gas ஐ எதிர்கொள்ளும் நோக்கில் கவசம் அணிந்து பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலான இராணுவங்களின் நடைமுறையாகும்.

எதிரில் உள்ளவரை உடனடியாக செய்லற்றதாக மாற்றக்கூடிய CS gas ஐ பயன்படுத்தி இராணுவத்தினரைக் கைதுசெய்ய மட்டுமே முடியும். அதற்கு அப்பால் வேறெந்த விடயத்தையும் செய்ய முடியாது. சில வேளைகளில் புலிகள் இராணுவத்தினரை ஆயிரக்கணக்கில் கைது செய்வதற்கான பரிசோதனை முயற்சியாக இதனைக் கொள்ள முடியும்.

நரம்புகளைப் பாதிக்கக் கூடிய வகையில் அமைந்ததும் உடனடியாக இரத்தத்தை வரவழைக்கக் கூடியதுமான இரசாயன ஆயுதங்கள் உலகத்தில் வல்லரசு நாடுகளால் பரவலாகக் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

எது உண்மை..!

இனக்கலவரங்களின் போது உயிரிடன் எரிக்கப்பட்டது உண்மையல்ல. அங்கு உயிர்கள் பலியாகவில்லை.. வெறும் சடங்களா எரிக்கப்பட்டன. ஏன் அவர்களுக்கு வாழ விருப்பமின்றியா எரிந்து போயினர்..??!

சாணக்கியனின் கருத்துப்படி.. மனிதன் சாவுக்குப் பயந்து வாழ்வதுதான் விதிப்பு எங்கிறார்.

ஆனால் மறுபுறத்தே ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலியிட்டு ஒரு அரசு ஏன் ஒரு இனத்தின் மீது யுத்தம் செய்ய வேண்டும்..??! அந்த சிங்கள இளைஞர்கள் சடங்களா.. அவர்களுக்கு அமைதியாக வாழ தேசம் இல்லையா.. வசதி இல்லையா.. இருந்தும் ஏன் சாவுக்களத்தைத் தேடி அனுப்பப்படுகின்றனர்..??! ஏன் இந்தச் சாணக்கியனுக்கு அவை மரணங்களாக.. பலியிடல்களாகத் தெரியவில்லை..???!

இனத்தின் இருப்பை காக்கப் போராடும் இளைஞன் முன் வாழ்வுக்கு ஆசைகாட்டும் சாணக்கியன்.. ஏன் ஒரு இனத்தை வலிந்து அழிக்க சாகத் துணியும் சிங்கள இளைஞனுக்கு வாழ ஆசை காட்டுகின்றார் இல்லை..!

மனித வரலாறு யுத்தம்.. இயற்கை அழிவு என்று பேரழிவுகள் இன்றி.. சாவுக்குப் பயந்தா வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது ஐயா உண்மை.

பலமானவன் அடிக்கிறான்.. பலவீனமானவன் வாங்கிக் கொண்டு.. வாழ்வுக்கு ஆசைப்பட்டு பலமானவனுக்கு அடிமையாக வாழ வேண்டும்... இதுவா உலக இயற்கையியல் உண்மை..!

நீங்கள் யுத்தத்தில் ஈடுபடும் இளைஞர்களில் ஒரு தரப்பில் மட்டும் குறை காண்பதும்.. இரக்கம் காட்டுவதும் உங்களின் போராட்டத்துக்கு எதிரான சூழ்ச்சிகரமான நோக்கத்தைதச் சொல்கின்றனவே தவிர. அதில் மனிதாபிமானமோ உண்மையாக இரக்கமோ கிடையாது.

விடுதலைப்புலிகள்.. யாருமல்ல. தமிழ் மக்களின் பிள்ளைகளே. அந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்களா..??!

சிங்கள் இராணுவத்தினர் யார்.. சிங்கள மக்களின் பிள்ளைகளே.. அந்த உண்மையையாவது ஏற்றுக் கொள்கிறீர்களா..??!

இரு தரப்பும் மனிதக் குழந்தைகளே. அப்போ ஏன் விடுதலைப்புலிகள் மீது மட்டும் உங்களின் மனிதாபிமானம் வீச்சுப் பெறுகிறது. சிங்கள இளைஞன் மீதல்ல. சிங்கள இளைஞன் யுத்தத்துக்கு வரவில்லையேல்.. ஏன் விடுதலைப்புலி.. மடியப் போகிறான்..??! ஏன் உங்களின் ஆசை வார்த்தைகளை வாழ நிலமும்.. வசதியும்.. சுதந்திரமும் உள்ள சிங்கள இளைஞனுக்குக் காட்டி அவனை.. போர்க்களத்திலின்றும் அகற்றி.. விடுதலைப்புலிகளின் போராட்டத் தேவையை.. மரணத்தை இல்லாமல் செய்கிறீர்கள் இல்லை..???!

தமிழ் மக்களின் பிள்ளைகள்.. தமது நிலத்தில் நிம்மதியான வாழ்வைத் தானே கேட்கின்றனர். 5 ஆண்டுகள் சமாதானம் பேசியும் கேட்டனர். ஏன் சிங்கள இளைஞனிடம் தமிழ் இளைஞர்கள் அவனின் நிலத்தையா பறிக்கப் போராடுகின்றனர். ஏன் அப்போ சிங்கள இளைஞன் வலிந்து தமிழ் இளைஞனின் சுதந்திர வாழ்வை மறுதலிக்க வேண்டும். அது நியாயமா..??!

ஏன் உங்களுக்கு இப்படியெல்லாம் மனித உணர்வு கேட்கத் தூண்டவில்லை..??!

விடுதலைப்புலிகள் தவறு செய்யவில்லை என்பதற்கும் அப்பால் அவர்களை தவறு செய்யத் தூண்டியது துரோகிகளின் இலட்சியப்பற்ற மக்கள் ஏமாற்றும் நடவடிக்கைகளே.

உலகில் ஒவ்வொரு இனமும் தன் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. காகத்தின் கூட்டில் இருந்து வரும் குஞ்சுக்கும் வாழத்தான் ஆசை. அதற்காக பருந்து அதனைக் கண்டு இரங்கிவிட்டுப் போக வேண்டும் எங்கிறீர்கள் சாணக்கியன். அல்லது ஜீவகாருணியம் மிக்க நீங்கள் காகக் குஞ்சுகளை காத்துக் கொண்டா திரிகிறீர்கள்..! எது உண்மை என்றும் சொல்கிறீர்கள்..??!

நாம் எமது சகோதரர்களின் அழிவை விரும்பவே இல்லை. அவர்களும் வாழ வேண்டும். ஆனால் எம்மை எமது இனத்தை வலிந்து அழிக்க இன்னொரு மனிதனுக்கு இடமளிக்கத்தான் வேண்டுமா..??! என்பதே அங்கு முன்னிலை நிற்கிறது.

குஞ்சைப் பிடிக்க வரும் கோழி.. ஏன் பருந்துடன் சண்டை போடுகிறது. இறப்பைப் பற்றி சிந்திக்காமல் வெற்றி பெற முயல்கிறது..??! ஏன்.. இவையெல்லாம்.. இயற்கையில்... இவை இரக்கமற்ற செயல்கள் அல்லவா..???!

என்றோ ஒரு நாள் எமக்கெல்லாம் மரணம் உண்டு. மரணத்திலின்றும் தப்பி எவரும் வாழ முடியாது. ஒருவேளை சாணக்கியன்.. தான் சிரஞ்சீவியாக வாழ்ந்திடலாம் என்று கனவு காண்கிறார் போல..!

உலகில் மனிதன் ஆக்கியவற்றால் நிகழும் மரணங்கள் எத்தனை. அவைக்கு காரணமே இல்லை. ஆனால்.. யுத்தத்தில்.. ஒரு இனத்தின் எதிர்கால இருப்புக்காக மடிவதென்பது தியாகம். அது சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து இறப்பதிலும் மேலானது. அதை நான் இப்போது உணர்கிறேன். எனது மரணத்தை வன்னிப் போர்களத்தில் சந்திக்கவே நான் விரும்புகிறேன். ஒரு கார் விபத்தில் வீணே மடிவதிலும்.. அது என் இனத்தை அழிக்க கூவி வரும் எதிரியை அழிப்பதால் எனின்.. அதை வரவேற்பேன்.

இது ஈவு இரக்கமற்ற சிந்தனையின் பால் எழுந்ததல்ல. ஒரு இனத்தின் எதிர்கால இருப்புக்கு.. அவசியம். நான் மட்டும் வாழ்ந்து எனது இனமே அழியும் நிலையை விட்டுச் செல்வதானால்.. சாணக்கியன்.. ஏன் திருமணம் முடித்து பிள்ளை குட்டிகளோடு வாழுகிறார். தானே வாழ்த்து செத்து மடிய வேண்டியதுதானே. இவருக்கேன் சந்ததி..???!

இக்கட்டான வேளைகளில் மக்களை குழப்ப.. போராளிகளைக் குழப்ப.. இப்படியான வாழ்க்கைக்கு ஆசை காட்டும் எதிரிகளை துரோகிகளை நாம் கண்டுவிட்டுத்தான் இருக்கிறோம். எதிரிக்கு எப்படி சாக துணிவிருக்கோ.. அப்படி எமக்கு எமது மண்ணுக்காகச் சாகத் துணிவிருக்கும் சாணக்கியன். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆசை வார்த்தைகளை எதிரியிடம் சொல்லி சிங்கள இளைஞனுக்கு அவனின் சொந்த இடத்தில் குவிந்து கிடக்கும் நிம்மதியான வாழ்வை வாழச் சொல்லுங்கள். எமது சகோதர்களும் யுத்தமின்றி சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வார்கள். அதுதான் சாணக்கியம்.. யதார்த்தம்.. உண்மை.. இரக்கம்.. மனித நேயம். வெறுமனவே புலிகள் மீது மட்டும் நீங்கள் குறிவைப்பது பிரச்சாரம். எமது இனத்தை அழித்தொழிக்க சாவுக்கு அஞ்சாது வரும் எதிரிக்கு நீங்கள் ஊட்டும் உரம். எமது போராளிகளுக்கு நீங்கள் தரும் விசம்.. இது..!

சாணக்கியனின் பக்கச்சார்பான.. உண்மையான மனித நேயத்துக்கு ஜீவகாருணியத்துக்கு அப்பாலான.. இக்கருத்துக்களை பூரண தணிக்கை செய்வதே நியாயம் நடுநிலை. இன்றேல் சாணக்கியம்.. மகிந்தவை நோக்கியும் இவ்வாறு இரக்கம் காட்ட கோர வேண்டும்.. அமெரிக்காவிடமும் இவ்வாறு அமெரிக்க இளைஞர்கள் மீது இரக்கம் காட்டி ஈராக்.. ஆப்கானிஸ்தானில் இருந்து அவர்களை அமெரிக்காவில் அமைதியாக வாழ வைக்க.. குரல் எழுப்ப வேண்டும்..! செய்வாரா.. சிங்களவனின் எலும்புக்கு வீணி வடிப்பவர்..??! <_<

நல்லதொரு பதில்

அந்தப்பக்கத்தை பலரும் ஆராய்வதில்லை

சிங்களவனுக்கு ஏன் இவ்வளவு வீம்பு????

என்பதை ஆராய்ந்தது மிக நன்று

நன்றி.

எது உண்மை..!

இனக்கலவரங்களின் போது உயிரிடன் எரிக்கப்பட்டது உண்மையல்ல. அங்கு உயிர்கள் பலியாகவில்லை.. வெறும் சடங்களா எரிக்கப்பட்டன. ஏன் அவர்களுக்கு வாழ விருப்பமின்றியா எரிந்து போயினர்..??!

சாணக்கியனின் கருத்துப்படி.. மனிதன் சாவுக்குப் பயந்து வாழ்வதுதான் விதிப்பு எங்கிறார்.

ஆனால் மறுபுறத்தே ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலியிட்டு ஒரு அரசு ஏன் ஒரு இனத்தின் மீது யுத்தம் செய்ய வேண்டும்..??! அந்த சிங்கள இளைஞர்கள் சடங்களா.. அவர்களுக்கு அமைதியாக வாழ தேசம் இல்லையா.. வசதி இல்லையா.. இருந்தும் ஏன் சாவுக்களத்தைத் தேடி அனுப்பப்படுகின்றனர்..??! ஏன் இந்தச் சாணக்கியனுக்கு அவை மரணங்களாக.. பலியிடல்களாகத் தெரியவில்லை..???!

இனத்தின் இருப்பை காக்கப் போராடும் இளைஞன் முன் வாழ்வுக்கு ஆசைகாட்டும் சாணக்கியன்.. ஏன் ஒரு இனத்தை வலிந்து அழிக்க சாகத் துணியும் சிங்கள இளைஞனுக்கு வாழ ஆசை காட்டுகின்றார் இல்லை..!

மனித வரலாறு யுத்தம்.. இயற்கை அழிவு என்று பேரழிவுகள் இன்றி.. சாவுக்குப் பயந்தா வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது ஐயா உண்மை.

பலமானவன் அடிக்கிறான்.. பலவீனமானவன் வாங்கிக் கொண்டு.. வாழ்வுக்கு ஆசைப்பட்டு பலமானவனுக்கு அடிமையாக வாழ வேண்டும்... இதுவா உலக இயற்கையியல் உண்மை..!

நீங்கள் யுத்தத்தில் ஈடுபடும் இளைஞர்களில் ஒரு தரப்பில் மட்டும் குறை காண்பதும்.. இரக்கம் காட்டுவதும் உங்களின் போராட்டத்துக்கு எதிரான சூழ்ச்சிகரமான நோக்கத்தைதச் சொல்கின்றனவே தவிர. அதில் மனிதாபிமானமோ உண்மையாக இரக்கமோ கிடையாது.

விடுதலைப்புலிகள்.. யாருமல்ல. தமிழ் மக்களின் பிள்ளைகளே. அந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்களா..??!

சிங்கள் இராணுவத்தினர் யார்.. சிங்கள மக்களின் பிள்ளைகளே.. அந்த உண்மையையாவது ஏற்றுக் கொள்கிறீர்களா..??!

இரு தரப்பும் மனிதக் குழந்தைகளே. அப்போ ஏன் விடுதலைப்புலிகள் மீது மட்டும் உங்களின் மனிதாபிமானம் வீச்சுப் பெறுகிறது. சிங்கள இளைஞன் மீதல்ல. சிங்கள இளைஞன் யுத்தத்துக்கு வரவில்லையேல்.. ஏன் விடுதலைப்புலி.. மடியப் போகிறான்..??! ஏன் உங்களின் ஆசை வார்த்தைகளை வாழ நிலமும்.. வசதியும்.. சுதந்திரமும் உள்ள சிங்கள இளைஞனுக்குக் காட்டி அவனை.. போர்க்களத்திலின்றும் அகற்றி.. விடுதலைப்புலிகளின் போராட்டத் தேவையை.. மரணத்தை இல்லாமல் செய்கிறீர்கள் இல்லை..???!

தமிழ் மக்களின் பிள்ளைகள்.. தமது நிலத்தில் நிம்மதியான வாழ்வைத் தானே கேட்கின்றனர். 5 ஆண்டுகள் சமாதானம் பேசியும் கேட்டனர். ஏன் சிங்கள இளைஞனிடம் தமிழ் இளைஞர்கள் அவனின் நிலத்தையா பறிக்கப் போராடுகின்றனர். ஏன் அப்போ சிங்கள இளைஞன் வலிந்து தமிழ் இளைஞனின் சுதந்திர வாழ்வை மறுதலிக்க வேண்டும். அது நியாயமா..??!

ஏன் உங்களுக்கு இப்படியெல்லாம் மனித உணர்வு கேட்கத் தூண்டவில்லை..??!

விடுதலைப்புலிகள் தவறு செய்யவில்லை என்பதற்கும் அப்பால் அவர்களை தவறு செய்யத் தூண்டியது துரோகிகளின் இலட்சியப்பற்ற மக்கள் ஏமாற்றும் நடவடிக்கைகளே.

உலகில் ஒவ்வொரு இனமும் தன் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. காகத்தின் கூட்டில் இருந்து வரும் குஞ்சுக்கும் வாழத்தான் ஆசை. அதற்காக பருந்து அதனைக் கண்டு இரங்கிவிட்டுப் போக வேண்டும் எங்கிறீர்கள் சாணக்கியன். அல்லது ஜீவகாருணியம் மிக்க நீங்கள் காகக் குஞ்சுகளை காத்துக் கொண்டா திரிகிறீர்கள்..! எது உண்மை என்றும் சொல்கிறீர்கள்..??!

நாம் எமது சகோதரர்களின் அழிவை விரும்பவே இல்லை. அவர்களும் வாழ வேண்டும். ஆனால் எம்மை எமது இனத்தை வலிந்து அழிக்க இன்னொரு மனிதனுக்கு இடமளிக்கத்தான் வேண்டுமா..??! என்பதே அங்கு முன்னிலை நிற்கிறது.

குஞ்சைப் பிடிக்க வரும் கோழி.. ஏன் பருந்துடன் சண்டை போடுகிறது. இறப்பைப் பற்றி சிந்திக்காமல் வெற்றி பெற முயல்கிறது..??! ஏன்.. இவையெல்லாம்.. இயற்கையில்... இவை இரக்கமற்ற செயல்கள் அல்லவா..???!

என்றோ ஒரு நாள் எமக்கெல்லாம் மரணம் உண்டு. மரணத்திலின்றும் தப்பி எவரும் வாழ முடியாது. ஒருவேளை சாணக்கியன்.. தான் சிரஞ்சீவியாக வாழ்ந்திடலாம் என்று கனவு காண்கிறார் போல..!

உலகில் மனிதன் ஆக்கியவற்றால் நிகழும் மரணங்கள் எத்தனை. அவைக்கு காரணமே இல்லை. ஆனால்.. யுத்தத்தில்.. ஒரு இனத்தின் எதிர்கால இருப்புக்காக மடிவதென்பது தியாகம். அது சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து இறப்பதிலும் மேலானது. அதை நான் இப்போது உணர்கிறேன். எனது மரணத்தை வன்னிப் போர்களத்தில் சந்திக்கவே நான் விரும்புகிறேன். ஒரு கார் விபத்தில் வீணே மடிவதிலும்.. அது என் இனத்தை அழிக்க கூவி வரும் எதிரியை அழிப்பதால் எனின்.. அதை வரவேற்பேன்.

இது ஈவு இரக்கமற்ற சிந்தனையின் பால் எழுந்ததல்ல. ஒரு இனத்தின் எதிர்கால இருப்புக்கு.. அவசியம். நான் மட்டும் வாழ்ந்து எனது இனமே அழியும் நிலையை விட்டுச் செல்வதானால்.. சாணக்கியன்.. ஏன் திருமணம் முடித்து பிள்ளை குட்டிகளோடு வாழுகிறார். தானே வாழ்த்து செத்து மடிய வேண்டியதுதானே. இவருக்கேன் சந்ததி..???!

இக்கட்டான வேளைகளில் மக்களை குழப்ப.. போராளிகளைக் குழப்ப.. இப்படியான வாழ்க்கைக்கு ஆசை காட்டும் எதிரிகளை துரோகிகளை நாம் கண்டுவிட்டுத்தான் இருக்கிறோம். எதிரிக்கு எப்படி சாக துணிவிருக்கோ.. அப்படி எமக்கு எமது மண்ணுக்காகச் சாகத் துணிவிருக்கும் சாணக்கியன். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆசை வார்த்தைகளை எதிரியிடம் சொல்லி சிங்கள இளைஞனுக்கு அவனின் சொந்த இடத்தில் குவிந்து கிடக்கும் நிம்மதியான வாழ்வை வாழச் சொல்லுங்கள். எமது சகோதர்களும் யுத்தமின்றி சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வார்கள். அதுதான் சாணக்கியம்.. யதார்த்தம்.. உண்மை.. இரக்கம்.. மனித நேயம். வெறுமனவே புலிகள் மீது மட்டும் நீங்கள் குறிவைப்பது பிரச்சாரம். எமது இனத்தை அழித்தொழிக்க சாவுக்கு அஞ்சாது வரும் எதிரிக்கு நீங்கள் ஊட்டும் உரம். எமது போராளிகளுக்கு நீங்கள் தரும் விசம்.. இது..!

சாணக்கியனின் பக்கச்சார்பான.. உண்மையான மனித நேயத்துக்கு ஜீவகாருணியத்துக்கு அப்பாலான.. இக்கருத்துக்களை பூரண தணிக்கை செய்வதே நியாயம் நடுநிலை. இன்றேல் சாணக்கியம்.. மகிந்தவை நோக்கியும் இவ்வாறு இரக்கம் காட்ட கோர வேண்டும்.. அமெரிக்காவிடமும் இவ்வாறு அமெரிக்க இளைஞர்கள் மீது இரக்கம் காட்டி ஈராக்.. ஆப்கானிஸ்தானில் இருந்து அவர்களை அமெரிக்காவில் அமைதியாக வாழ வைக்க.. குரல் எழுப்ப வேண்டும்..! செய்வாரா.. சிங்களவனின் எலும்புக்கு வீணி வடிப்பவர்..??! :o

அருமையான எழுத்துக்கள் நெடுக்ஸ்! இதை விட சிறப்பான பதிலை நானோ அல்லது வேறு யாரோ எழுதிவிட முடியாது.

தற்போது தான் வாசித்தேன். அதனால் பாராட்ட தாமதமாகிவிட்டது!

வாழ்த்துக்கள் நெடுக்கர்!!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.