Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எயார் திராவிடா

Featured Replies

logo_air.jpg

"எயார் திராவிடா' தமிழ்நாட்டில் புதிய விமான சேவை விரைவில் ஆரம்பம்

[24 - September - 2008] [Font Size - A - A - A]

"எயார் திராவிடா' என்ற பெயரில் தமிழகத்தில் புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உட்பட இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரங்களிடையேயும் இவ்விமான சேவை நடத்தப்படவுள்ளது.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள இவ்விமான சேவைக் கம்பனிக்கு 100 கோடி இந்திய ரூபா முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்விமான சேவை தொடர்பாக ஷேக் தாவூத் தகவல் தெரிவிக்கையில்;

ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் உலகமெங்கும் தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்பதே எனது நீண்டநாள் கனவு. அதன் காரணமாகவே "எயார் திராவிடா' என்ற பெயரைத் தெரிவுசெய்தேன். எனது இக்கம்பனியில் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உலகெங்குமுள்ள அனைத்து நாட்டு தமிழ் பேசும் மக்களும் பங்குதாரர்கள் ஆகலாம்.

உலகத்தில் தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. அனைவரும் வியப்புற வேண்டும் என்பதற்காகவே "எயார் திராவிடா' எனப் பெயரிட்டேன். அத்துடன், எனது விமானக் கம்பனியில் பணியாற்றும் விமானிகளையும் தமிழர்களாகவே தேர்ந்தெடுத்துள்ளேன். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட 10 தமிழ் விமானிகளை அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளேன். எனது விமான சேவையின் அனைத்துப் பணியாளர்களும் தமிழர்களாகவே இருப்பர். விமானத்தில் அறிவிப்புகளும் தமிழிலேயே இருக்கும். விமானங்களில் மங்கள இசை, நாதஸ்வரம் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

தமிழ் தெரியாத பயணிகளுக்கு மொழிபெயர்ப்பு வசதி செய்துகொடுக்கப்படும். தமிழ் நாட்டு உணவு வகைகள் மாத்திரமே பரிமாறப்படும். மொத்தத்தில் அனைத்துமே தமிழாக இருக்கும். தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ் கலாசாரத்தை மறந்துவிடக்கூடாது.

ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ளூர் சேவையை நடத்தவுள்ள ?"எயார் திராவிடா' விமான சேவை தொடர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு தனது சேவையை விஸ்தரிக்கும். அதனைத் தொடர்ந்து சர்வதேசத்திற்கும் அதன் சேவை நடைபெறும். உலகெங்கும் பரந்துவாழும் அனைத்து நாட்டு தமிழ் பேசும் மக்களும் "எயார் திராவிடா' நிறுவனத்தில் பங்குதாரராக வேண்டும். முதன் முதலில் தமிழன் கப்பலோட்டியதைப் போன்று வானிலும் தமிழனின் பயணிகள் விமானம் பறக்க வேண்டுமென்பதே எனது ஆசை என்றார்.

http://www.thinakkural.com/news/2008/9/24/...s_page58608.htm

  • Replies 61
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பண்பாடும் கலை கலாச்சார விழுமியங்களும் தமிழ் மொழியும் இன்றைய அசுரவேக வர்த்தக நோக்கங்கொண்ட உலகிலிருந்து அழிந்து போய்விடாமல் இன்னெரு ஐம்பது வருடங்களுக்கு அவ்வழிவைத் தள்ளிப்போடவும் முடிந்தால் தமிழையும் தமிழினத்தையும் உலகில் பிரபல்யப்படுத்தவும் இம்முயற்சிகள் சிலவேளை உதவக்கூடும். ஆனாலும் தமிழுக்குப் பதிலாகத் திராவிடா என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள விமான சேவையின் உள்நோக்கம் தனியே வர்த்தகம் மட்டுமேயானால் நாளாவட்டத்தில் தமிழின் பயன்பாடு அற்றுப்போய் இன்றைய சினிமா போலாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் உலகமெங்கும் தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்பதே எனது நீண்டநாள் கனவு. அதன் காரணமாகவே "எயார் திராவிடா' என்ற பெயரைத் தெரிவுசெய்தேன்

எயார் திராவிடா12086.gif

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எயார் திராவிடா12086.gif

என்ன சாத்திரி தமிழக முதலை அமைச்சர் மாதிரியிருக்கு :lol::lol::lol::lol: [முதலமைச்சர்]

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எயார் தமிழா என்று வைத்தால்.. எடுப்பாக இருக்காதா தமிழனுக்கு..! அதுதானே தமிழனுக்கு தனித்துவம். திராவிடம் என்ற அந்நியப் பதத்தால் தமிழனை இனங்காண்பது.. தமிழ்.. தமிழினப் பற்றின் அடையாளமா..??! :lol::lol:

திராவிடம் என்ற வகைக்குள் ஆங்கிலேயர் வகுத்துக் கொண்டது தமிழரை மட்டுமல்ல.. பிறமொழி பேசும் தென்னிந்தியர்களையும் தான்..!

நான் நினைக்கிறேன்.. எயார் கருடா (இந்தோனிசிய தேசிய விமான சேவையின் பெயர்) வின் நகலெடுப்பே இது. இது தமிழருக்கு அவமானம்..! :lol:

கருடன் என்பது தமிழிலும் உள்ள சொல்தான். பருந்து வகைகளில் பெரியது.

இந்தோனிசியர்கள்..

garuda-airlines-logo.jpg

தமிழில் ஒரு பெயரை இவர்களுக்கு முதலே தெரிவு செய்து வைத்துவிட்டனரோ..??! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எல்லாவற்றிலும் மேல் தான் நிற்கின்றார்கள்...Discrimination ல் கூட கண்டிப்பாக... தமிழர் அல்லாதவர்கள் பயணிக்க முடியுமாமா?

தமிழனுக்கு இப்படி காதில பூ சுத்தினால் ஆகா ஒகோ என்று பயணிப்பார்கள்... எயார் தமிழ் என்று வைத்தால் தெலுங்கர்கள் கன்னடிகர்கள் மலையாளிகள் பயணிப்பார்களா? அட.. எயார் திராவிட என்று நிறுவனம் நடத்த இருப்பவர் திராவிடரா என்று பாருங்கள் முதலில்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எல்லாவற்றிலும் மேல் தான் நிற்கின்றார்கள்...Discrimination ல் கூட கண்டிப்பாக... தமிழர் அல்லாதவர்கள் பயணிக்க முடியுமாமா?

தமிழர்கள் தங்களைத் தாங்களே தரம் தாழ்த்தியும் கொள்வர்.. மற்றவர்களையும் தரம் தாழ்த்தியே நோக்குவர்.

உதாரணத்துக்கு அண்மையில் டென்மார்க் நாட்டில் தமிழ் கடைகளை எல்லாம் சோதனை போட்டதில் புழுத்துப்போன பொருட்கள் பிடிபட.. இப்போ பல கடைகளுக்கு மூடுவிழா. சட்டத்திலும் இவர்களுக்காக மாற்றம் செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அத்தனை புழுத்ததையும் விற்றது தமிழருக்கே..!

கனடாவில் இவர்களுக்கு என்று தனியான சட்ட இறுக்கம் ரொரண்டோ பகுதியில். இவர்களுக்கு என்றே தனி ஒரு பொலிஸ் சேவையே இருக்கிறது.

இங்கிலாந்தில் சொல்லி வேலையில்லை. தமிழர்கள் என்றாலே போதும் எல்லோரும் பயந்தடித்து ஓடுகிறர்கள்..! இங்கிலாந்தில் தமிழ்கடை ஒன்று ஒழுங்கா இருந்தது பற்றிச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஏதாவது ஒரு அழுகின பொருள் இல்லாத கடை கிடையாது..! :lol:

இவ்வளவு பெருமைகளையும் தேடித்தந்த மனித உத்தமர்கள் தான் எமது தமிழர்கள்..??! அவர்களைப் போய்..??! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரி தமிழக முதலை அமைச்சர் மாதிரியிருக்கு :lol::lol::lol::lol: [முதலமைச்சர்]

முனிவர் என்னிலை அப்பிடியென்ன கோபம் அந்தளவு நான் மோசமா???????? :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என்ன நகைப்புக்கிடமான் விடயம் என்றால்...இப்படி அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அதிகமானவர்கள் பேசும் மற்றையவர்களை மட்டம் தட்டியே பேசுவார்கள்...(எனக்கு தெரிந்த இரண்டு பேரை மட்டும் வைத்து சொல்கின்றேன்).

ஒரு சிறந்த நகைச்சுவை,ஒரு மூன்று வருடங்களின் முன்னர் இலண்டனில் ஒரு பாடசாலை நண்பரை சந்திக்க நேர்ந்தது.. கிட்டத்தட்ட 10 வருடங்களின் பின்னர்... எப்போ வந்தாய், என்ன செய்கின்றாய்....ஊரில என்ன செய்தாய் இப்படியான மாறி மாறி கேட்கப்பட்ட கேள்விகளின் பின்னர்... அவர் இலண்டன் வந்து இரண்டு வருடங்கள், நான் வந்து 4 வருடங்கள். அதன் பின்னர் ஒரு விடயம் கூறினார்...

அடே நீ வந்து நான்கு வருடங்கள்.. நான் வந்து இரண்டு வருடங்கள்... என்னிடம் இரண்டு வீடு இருக்கு, இரண்டு கடை இருக்கு... இத்தனை பேர் வேலை செய்கின்றார்கள்.. நீங்கள் எல்லாம் படிக்கிறது தான் உழைக்கின்ற நுணுக்கங்கள் தெரியாது... நான் இலண்டன் வந்து வெள்ளைகாரங்களின்ட நுணுக்கங்கள் எல்லாம் அனுபவத்தில தெரிச்சு இப்ப மாதம் 20 000 பவுண்ஸ் உழைக்கின்றன் என்றார்.... நான் சும்மா வாயை வைத்து கொண்டு இருக்காமல்..எனக்கு மட்டை போடுற நுணுக்கம் தெரியாது என்று சொல்ல போக அன்றோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது...

இதில் என்ன கொடுமை என்றால்.... இப்படியானவர்களது சொற்களைத்தான் மக்களும் நம்புகின்றார்கள்...

ஒரு விடயம் எனக்கு புரியவில்லை...எவ்வளவு சம்பளம் எடுத்தாலும் மாதத்திற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே சேமிக்க முடியவில்லை. தனி ஆளாகவே... எப்படி நம் தமிழர்கள் எதுவும் இல்லாமல் இங்கு வந்து ஒன்று அல்லது இரண்டு வருடங்களில கடை வீடு என்று இருக்கின்றார்கள்...இது நான் கேட்ட கேள்வி இல்லை... இலண்டனில் வசிக்கும் அங்கிலேய நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி.. யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்... வெளிப்படையாக கூறினால்.. நான் இலங்கைத்தமிழன் என்று சொல்வதில் ஒரு காலத்தில் பெருமைப்பட்டேன்.. இன்று சொல்வதே இல்லை...

ஏன் இளம்பெண்கள் கூட இப்படியானவர்களைத்தான் விரும்புகிறார்கள். என்னிடம் ஒரு இளம் பெண் (ஊரில் இருந்து பெற்றோரோடு அகதியாக ஓடி வந்தவர்) கதைக்கும் போது சொன்னார்.. தனக்குத் தெரிந்த ஒரு ஆண் வந்து சில மாதங்களிலேயே காரும் வாங்கி வீடும் வாங்கிட்டார்.. நீங்கள் எல்லாம் என்னத்தைக் கிழிக்கிறீங்கள் என்று.

ஆனால் அது உண்மைதான்.

அசைலம் அடிப்பார்கள். விசா கிடைத்ததும்.. வங்கியில் கடன் எடுப்பார்கள்.. திருமணம் முடிப்பார்கள்.. பெண்கள் பிள்ளைகளை பெற்றுப் போடுவார்கள்.. பிறக்கும் பிள்ளைகளை வளர்க்க அரசு காசு கொடுக்கும். கிழமைக்கு கிழமை வங்கியில் அவர்களுக்கு பணமிடும்.

உயர்கல்வி கற்க கடன் வழங்கப்படுகிறது. பெற்றோருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.

சொத்துக்களை, கடைகளை யாரேனும் பெயரில் கடனடிப்படையில் வாங்குவார்கள். அரசுக்கு கணக்கை சுத்திமாத்திக் காட்டுவார்கள். தாங்கள் வருமானமற்றவர்கள் என்று சொல்லி அரசிடம் நிவாரணமும் பெறுவார்கள். நிவாரணமாக இருக்க வீடு.. பிள்ளைக்கு காசு.. அப்பா அம்மாக்கு காசு.. வயது போனவர்களுக்கு இலவச ஓய்வூதியம்.. இலவச தொலைக்காட்சிப் பத்திரம்.. இலவச பயணச்சீட்டு.. இலவச தங்குமிடம்.. இப்படி இருக்கேக்க... அவற்றை எல்லாம் வெள்ளையள் அனுபவிக்கிறதில்லை. காரணம்.. அவன் வரியைக் கட்டிப்போட்டு தன்ர நாட்டைப் பற்றித்தான் சிந்திப்பான்.

(எங்கடையள் அப்படி சிந்தித்திருந்தால்.. தமிழீழம் கிடைச்சிருக்குமே. எப்படி அடுத்தவன்ர வரிப்பணத்தைச் சுரண்டலாம் என்றதில எங்கடையளுக்கு மூளையோ மூளை.)

வாங்கிற வீட்டில தாங்கள் ஆதிக்கம் செய்து கொண்டு.. ஒரு பெட்டி அறையையும் இன்னும் இரண்டொரு அறைகளையும் வாடகைக்கு விடுவார்கள். அதுவே போதும் வீட்டுக்கு மாதாந்தப் பணத்தைச் செலுத்த.

ஒரு வாரத்துக்கு பெட்டி அறைக்கு 55 பவுண் வாங்குகிறார்கள். படுக்கை அறைக்கு 95 பவுண் வாங்குகிறார்கள். இதற்கு வரியும் இல்ல குட்டியும் இல்ல. சிலர் அரசு நிவாரண வீட்டையே வாடகைக்கும் விடுவார்கள்..! அரசு 750 பவுன் கொடுக்கும் வீட்டுக்குச் செலுத்த இவர்கள் வாடகைக்கு விட்டு அதை விட மேலால் உழைப்பார்கள். ஆக ஒரு வீட்டை வைத்தே 1500 பவுண் பார்த்துவிடுவார்கள்..!

1500 பவுன் மாதாந்த சம்பளத்துக்கு வேலை தேடனும் என்றால் ஆகக்குறைந்தது ஒரு இளமானிப்பட்டத்தோடு வேலை இருக்க வேண்டும். இதுதான் வெள்ளைகளின் நிலை. ஆனால் எம்மவர்கள்.. எந்தப்பட்டமும் இல்லாமல்... 1500 பவுணை ஒரு வீட்டை வைச்சே சம்பாதிப்பார்கள். அதுவும் அரசு நிவாரண வீட்டை.. வைத்தே. அப்புறம் என்ன..??! :lol:

நானும் பார்க்கிறன் எனக்கு படிப்பிக்கிற வாத்தியார் (ஆங்கிலேய வெள்ளை) ஒரு கிழமைக்கு இரண்டு சேட் தான் போடுவார். ஒரே காரைத்தான் 10 வருசமா ஓடிறார். இத்தனைக்கும் அவர் ஒரு பிரபல்ய பேராசிரியர்.

ஆனால் நம்மூரில இருந்து தோட்டம் செய்திட்டு இங்க வந்து அசைலம் அடிச்ச கந்தையாண்ணையட்ட கடை.. வீடு.. அவுடி பமிலிக் கார்.. மனைவிக்குக் கார்.. பிள்ளை 18 வயதான உடன கார்.. என்று இருக்குது.

நாங்களும் நண்பர்களாக ஒரு கார் வாங்கித்தான் பார்த்தம். செலவு கட்டுபடியாகாமல்.. நடுத்தெருவில விட்டிட்டு வந்ததுதான்.

எப்படி இது..??! எனக்கும் வியப்பாத்தான் இருக்குது. ஆனால் ரெம்ப ஏமாற்றிப் பிழைக்கத் தெரிந்திருந்தால்.. இவர்களைப் போல வாழலாம் என்பதை தெரிஞ்சு கொண்டுட்டன்..! இன்னொரு விடயம்.. ஒரு போதும் மாணவனாகவோ.. வேலை அனுமதி பெற்றோ வரக்கூடாது. வந்தமா கையத் தூக்கினமா.. அசைலம் அடிச்சமா.. நிரந்தர வதிவிடம் பெற்றமா என்றிருக்க வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.

படிக்க வந்தீங்கள் 1200 பவுணில படிக்கிறதை 12000 கட்டிப் படிக்கச் சொல்லுவாங்கள். வேலை அனுமதி பெற்று வந்தீங்கள் 25% வரி கட்டாயம் கட்டி ஆகனும். அரச நிவாரணங்கள் பெற முடியாது. பிறகெங்க.. மிச்சம்..???! :lol:

Edited by nedukkalapoovan

ஏன் இளம்பெண்கள் கூட இப்படியானவர்களைத்தான் விரும்புகிறார்கள். என்னிடம் ஒரு இளம் பெண் (ஊரில் இருந்து பெற்றோரோடு அகதியாக ஓடி வந்தவர்) கதைக்கும் போது சொன்னார்.. தனக்குத் தெரிந்த ஒரு ஆண் வந்து சில மாதங்களிலேயே காரும் வாங்கி வீடும் வாங்கிட்டார்.. நீங்கள் எல்லாம் என்னத்தைக் கிழிக்கிறீங்கள் என்று.

ஆனால் அது உண்மைதான்.

அசைலம் அடிப்பார்கள். விசா கிடைத்ததும்.. வங்கியில் கடன் எடுப்பார்கள்.. திருமணம் முடிப்பார்கள்.. பெண்கள் பிள்ளைகளை பெற்றுப் போடுவார்கள்.. பிறக்கும் பிள்ளைகளை வளர்க்க அரசு காசு கொடுக்கும். கிழமைக்கு கிழமை வங்கியில் அவர்களுக்கு பணமிடும்.

உயர்கல்வி கற்க கடன் வழங்கப்படுகிறது. பெற்றோருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.

சொத்துக்களை, கடைகளை யாரேனும் பெயரில் கடனடிப்படையில் வாங்குவார்கள். அரசுக்கு கணக்கை சுத்திமாத்திக் காட்டுவார்கள். தாங்கள் வருமானமற்றவர்கள் என்று சொல்லி அரசிடம் நிவாரணமும் பெறுவார்கள். நிவாரணமாக இருக்க வீடு.. பிள்ளைக்கு காசு.. அப்பா அம்மாக்கு காசு.. வயது போனவர்களுக்கு இலவச ஓய்வூதியம்.. இலவச தொலைக்காட்சிப் பத்திரம்.. இலவச பயணச்சீட்டு.. இலவச தங்குமிடம்.. இப்படி இருக்கேக்க... அவற்றை எல்லாம் வெள்ளையள் அனுபவிக்கிறதில்லை. காரணம்.. அவன் வரியைக் கட்டிப்போட்டு தன்ர நாட்டைப் பற்றித்தான் சிந்திப்பான்.

வாங்கிற வீட்டில தாங்கள் ஆதிக்கம் செய்து கொண்டு.. ஒரு பெட்டி அறையையும் இன்னும் இரண்டொரு அறைகளையும் வாடகைக்கு விடுவார்கள். அதுவே போதும் வீட்டுக்கு மாதாந்தப் பணத்தைச் செலுத்த.

ஒரு வாரத்துக்கு பெட்டி அறைக்கு 55 பவுண் வாங்குகிறார்கள். படுக்கை அறைக்கு 95 பவுண் வாங்குகிறார்கள். இதற்கு வரியும் இல்ல குட்டியும் இல்ல. அரசு நிவாரண வீட்டையே வாடகைக்கும் விடுவார்கள்..! அரசு 750 பவுன் கொடுக்கும் வீட்டுக்குச் செலுத்த இவர்கள் வாடகைக்கு விட்டு அதை விட மேலால் உழைப்பார்கள். ஆக ஒரு வீட்டை வைத்தே 1500 பவுண் பார்த்துவிடுவார்கள்..!

1500 பவுன் மாதாந்த சம்பளத்துக்கு வேலை தேடனும் என்றால் ஆகக்குறைந்தது ஒரு இளமானிப்பட்டத்தோடு வேலை இருக்க வேண்டும். இதுதான் வெள்ளைகளின் நிலை. ஆனால் எம்மவர்கள்.. எந்தப்பட்டமும் இல்லாமல்... 1500 பவுணை ஒரு வீட்டை வைச்சே சம்பாதிப்பார்கள். அதுவும் அரசு நிவாரண வீட்டை.. வைத்தே. அப்புறம் என்ன..??! :lol:

எங்கடையள் அப்படி சிந்தித்திருந்தால்.. தமிழீழம் கிடைச்சிருக்குமே. எப்படி அடுத்தவன்ர வரிப்பணத்தைச் சுரண்டலாம் என்றதில எங்கடையளுக்கு மூளையோ மூளை.

நானும் பார்க்கிறன் எனக்கு படிப்பிக்கிற வாத்தியார் (ஆங்கிலேய வெள்ளை) ஒரு கிழமைக்கு இரண்டு சேட் தான் போடுவார். ஒரே காரைத்தான் 10 வருசமா ஓடிறார். இத்தனைக்கும் அவர் ஒரு பிரபல்ய பேராசிரியர்.

ஆனால் நம்மூரில இருந்து தோட்டம் செய்திட்டு இங்க வந்து அசைலம் அடிச்ச கந்தையாண்ணையட்ட கடை.. வீடு.. அவுடி பமிலிக் கார்.. மனைவிக்குக் கார்.. பிள்ளை 18 வயதான உடன கார்.. என்று இருக்குது.

நாங்களும் நண்பர்களாக ஒரு கார் வாங்கித்தான் பார்த்தம். செலவு கட்டுபடியாகாமல்.. நடுத்தெருவில விட்டிட்டு வந்ததுதான்.

எப்படி இது..??! எனக்கும் வியப்பாத்தான் இருக்குது. ஆனால் ரெம்ப ஏமாற்றிப் பிழைக்கத் தெரிந்திருந்தால்.. இவர்களைப் போல வாழலாம் என்பதை தெரிஞ்சு கொண்டுட்டன்..! இன்னொரு விடயம்.. ஒரு போதும் மாணவனாகவோ.. வேலை அனுமதி பெற்றோ வரக்கூடாது. வந்தமா கையத் தூக்கினமா.. அசைலம் அடிச்சமா.. நிரந்தர வதிவிடம் பெற்றமா என்றிருக்க வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.

படிக்க வந்தீங்கள் 1200 பவுணில படிக்கிறதை 12000 கட்டிப் படிக்கச் சொல்லுவாங்கள். வேலை அனுமதி பெற்று வந்தீங்கள் 25% வரி கட்டாயம் கட்டி ஆகனும். அரச நிவாரணங்கள் பெற முடியாது. பிறகெங்க.. மிச்சம்..???! :lol:

கேட்பதாக குறை நினைக்ககூடாது. உ(எ)ங்கட இனம் மீது இவ்வளவு மதிப்பும், மரியாதையும் வச்சு இருக்கும் நீங்கள் எந்த உரிமையுடன் அப்பிடி செய், இப்பிடி செய் எண்டு சொல்லி பந்தி, பந்தியா அறிவுரைகள் எழுதுறீங்கள்? அப்பிடி எண்டால் நீங்கள் கேட்கின்ற அந்த ஒரு ரூபாய் காசு இப்பிடித்தான் வருகிது எண்டுறதயும் கொஞ்சம் நினைவில வச்சு இருங்கோ.

கள்ளனட்டப் போய் பிச்சையெடுக்கேக்க அடேய் கள்ளா களவெடுத்த காசில பிச்சை போடுடா என்றால் போடுவானே. அடிதான் தருவான்.

நமக்கு கள்ளமோ.. நல்லமோ.. வாற ஒரு ரூபாயில கால் வயிறு கஞ்சி ஒரு ஜீவனுக்குக் கிடைக்கும் என்றால் அதுவே திருப்தி என்ற நிலை..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு விடயம்.. ஒரு போதும் மாணவனாகவோ.. வேலை அனுமதி பெற்றோ வரக்கூடாது. வந்தமா கையத் தூக்கினமா.. அசைலம் அடிச்சமா.. நிரந்தர வதிவிடம் பெற்றமா என்றிருக்க வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.

இதை நான் ஒத்துக்கொள்ள முடியாது.. மாணவனாக வந்து 12000, 15000 ஜ வருடத்துக்கு கட்டி நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து மாதம் 4000 சம்பாதிக்கும் போது படிக்கும் போது பட்ட கஸ்டம் எதுவும் நினைவில் நிற்பதில்லை....அத்தோடு... ஒரு காவல் துறை அதிகாரியையோ அல்லது வரிமான வரி அதிகாரியையோ நகர சபை அதிகாரியையோ பார்த்து சாகும் மட்டும் பயப்படவும் தேவையில்லை

Edited by chumma....

12000 கட்டிப் படித்துவிட்டால் வேலை கிடைக்கும் என்பது நிச்சமில்லை. பல பேர் படித்து குறித்த துறைகளில் வேலை கிடைக்காததால்.. கனடா.. அமெரிக்க.. அவுஸ்திரேலியா.. மலேசியா.. சிங்கப்பூர் என்று போகிறார்களே.

அதுமட்டுமன்றி உங்களுக்கு 4000 பவுன் மாத வருமானம் வருகிறது என்றால் எவ்வளவு பணத்தை வரியாகக் கட்டுவீர்கள். நிச்சமாக 750 வரை வரியாகக் கழிக்கப்படும்.

ஆனால்.. வாரத்துக்கு 1500 (நிகர வருமானம்) பவுன் வருமானம் வரக்கூடிய ஒரு கடையை குடும்பத்தின் பெயரில் பதிவு செய்துவிட்டு சுமார் 6000 பவுனை மாதத்துக்கு உழைக்கும் சராசரி பட்டிப்பறிவுள்ள ஆளா.. 4000 பெற அதிலும் 25% வரி செலுத்த.. குறைந்தது முதுமானிப்பட்டம் வைத்திருக்க வேண்டிய ஆளா புத்திசாலி..??! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எயார் தமிழா என்று வைத்தால்.. எடுப்பாக இருக்காதா தமிழனுக்கு..! அதுதானே தமிழனுக்கு தனித்துவம். திராவிடம் என்ற அந்நியப் பதத்தால் தமிழனை இனங்காண்பது.. தமிழ்.. தமிழினப் பற்றின் அடையாளமா..??! :lol::lol:

திராவிடம் என்ற வகைக்குள் ஆங்கிலேயர் வகுத்துக் கொண்டது தமிழரை மட்டுமல்ல.. பிறமொழி பேசும் தென்னிந்தியர்களையும் தான்..!

நான் நினைக்கிறேன்.. எயார் கருடா (இந்தோனிசிய தேசிய விமான சேவையின் பெயர்) வின் நகலெடுப்பே இது. இது தமிழருக்கு அவமானம்..! :lol:

கருடன் என்பது தமிழிலும் உள்ள சொல்தான். பருந்து வகைகளில் பெரியது.

இந்தோனிசியர்கள்..

garuda-airlines-logo.jpg

தமிழில் ஒரு பெயரை இவர்களுக்கு முதலே தெரிவு செய்து வைத்துவிட்டனரோ..??! :lol:

Kumarasamyy.jpg

கருடன் எமது கடவுள்களில் ஒன்றான நாராயணரின் வாகனமாகும்.

இந்தோனேசியா பகுதிகளில் இந்துமதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியா பகுதிகளில் இந்துமதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. :lol:

தமிழ் மன்னர்களான சோழ மன்னர்கள் தென்கிழக்காசியா வரை ஆட்சி செய்தவர்கள். கம்போடியா.. இந்தோனிசியா.. எங்கனும் அவர்களின் காலத்திலேயே கோவில்கள் பல கட்டப்பட்டிருக்கின்றன. இப்போதும் அக்காலக் கோவில்களை அங்கு காணலாம்.

LocationChola_empire_sm.png

தற்போது தமிழர்களை உலகமே ஏய்க்கிறது..! :lol:

http://en.wikipedia.org/wiki/Cholas

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மன்னர்களான சோழ மன்னர்கள் தென்கிழக்காசியா வரை ஆட்சி செய்தவர்கள். கம்போடியா.. இந்தோனிசியா.. எங்கனும் அவர்களின் காலத்திலேயே கோவில்கள் பல கட்டப்பட்டிருக்கின்றன. இப்போதும் அக்காலக் கோவில்களை அங்கு காணலாம்.

தற்போது தமிழர்களை உலகமே ஏய்க்கிறது..! :lol:

அப்ப அங்கையும் நிறைய தென்னைமரம் நிக்கும் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சோழ மன்னர்கள்.. கோவில் கட்டி தேங்காய் மட்டும் உடைக்கவில்லை. பெரும் கடற்படையே வைத்திருந்தவர்கள். படைப்பல ரீதியில் சிறந்து விளங்கியதுமட்டுமன்றி.. பொருளியல் (சோழ நாணயத்தை வெளியிட்டுள்ளனர்..!) சமயம்.. கலாசாரம்.. மொழி.. என்று செழிப்போடு தனித்துவத்தோடு வாழ்ந்திருக்கின்றனர்.

Chola_ships_in_Ceylon_.jpg

சோழக்கடற்படை இலங்கைத் தீவில்..!

Edited by nedukkalapoovan

ரண்டு பேரும் ஏதோ மாறி மாறி வெள்ளைக்காரனிட்ட ஏதோ இல்லையென்று புலம்புறதுபோல தெரியுது.. நீங்க வீடு வாசலோடை சொகுசா இருக்குற வெள்ளையளோடை பழகேலை எண்டு நினைக்குறன்.. :lol: அவங்கள் ஒருவேளை தின்னுறதுக்கு செலவழிக்குற காசில நாங்கள் ஒரு கிழமைக்காவது தின்னுவம்.. இப்பிடிக் கணக்குப் பாத்தியளெண்டால்.. எப்பிடி சொந்த வீடு கார் வந்ததெண்டு கொஞ்சமாலும் புரியும்.. எடுக்குற காசில தண்ணியடிச்சுட்டு.. டிஸ்கோவில கிடந்து.. வாறவளவைக்கு ஹோட்டலில கேக்குறதுகளையெல்லாம் வாங்கிக் கொடுத்தால்.. கையில சல்லிக் காசுகூட நிக்காதுதான்.. :lol: :lol:

(நான் நெடுக்காலபோவனின் கருத்துக்கும் சும்மாவின் கருத்துக்கும் பதில் சொன்னனான்.. மற்றவை கண்டுகொள்ளாதீங்க!!)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12000 கட்டிப் படித்துவிட்டால் வேலை கிடைக்கும் என்பது நிச்சமில்லை. பல பேர் படித்து குறித்த துறைகளில் வேலை கிடைக்காததால்.. கனடா.. அமெரிக்க.. அவுஸ்திரேலியா.. மலேசியா.. சிங்கப்பூர் என்று போகிறார்களே.

அவர் அவர் திறமையை பொறுத்தது..அத்தோடு.. பிரித்தானியாவில் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் படிக்கலாம்.. சித்தியும் அடையலாம்... கற்றதை பாவிக்க தெரிந்திருக்க வேண்டும்.... நிறுவனங்களே உங்களை அழைக்கும்... வேலை கிடைக்கவில்லை என்று சொல்வது எல்லாம் இயலாமையின் வெளிப்பாடு...

There is a diffrent between race driver and an ambulance chaser..

விசாவுக்காக படிப்பவர்களுக்கு எதற்கு வேலை?

ஆனால்.. வாரத்துக்கு 1500 (நிகர வருமானம்) பவுன் வருமானம் வரக்கூடிய ஒரு கடையை குடும்பத்தின் பெயரில் பதிவு செய்துவிட்டு சுமார் 6000 பவுனை மாதத்துக்கு உழைக்கும் சராசரி பட்டிப்பறிவுள்ள ஆளா.. 4000 பெற அதிலும் 25% வரி செலுத்த.. குறைந்தது முதுமானிப்பட்டம் வைத்திருக்க வேண்டிய ஆளா புத்திசாலி..??!

இப்படி பார்த்தால் மகிந்த தான் உலகத்திலேயே புத்திசாலி...

இப்படி எல்லோரையும் ஏமாற்றி வாழ்பவர்களுக்கு வாழும் நாட்டில் என்ன மரியாதை? இவர்களுக்கு மன நிம்மதி இருக்கின்றதா... போலியான வாழ்க்கை தானே...

இன்னொரு விடயம்.. ஒரு போதும் மாணவனாகவோ.. வேலை அனுமதி பெற்றோ வரக்கூடாது. வந்தமா கையத் தூக்கினமா.. அசைலம் அடிச்சமா.. நிரந்தர வதிவிடம் பெற்றமா என்றிருக்க வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.

இதை நான் ஒத்துக்கொள்ள முடியாது.. மாணவனாக வந்து 12000, 15000 ஜ வருடத்துக்கு கட்டி நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து மாதம் 4000 சம்பாதிக்கும் போது படிக்கும் போது பட்ட கஸ்டம் எதுவும் நினைவில் நிற்பதில்லை....அத்தோடு... ஒரு காவல் துறை அதிகாரியையோ அல்லது வரிமான வரி அதிகாரியையோ நகர சபை அதிகாரியையோ பார்த்து சாகும் மட்டும் பயப்படவும் தேவையில்லை

அசைலம் அடிச்சவன் இங்க பயப்பிடுறான் எண்டுறியளோ? இண்டைக்கு ஊரில ஒரு பிரச்சினை.. உறவுகளுக்கு ஒரு தேவை எண்டா அசைலம் அடிச்சவங்கதான் முன்னுக்கு நிக்குறாங்க..நமது கலை கலாச்சார விழாவா.. ஊடகத்துறையா.. அதிலயும் அசைலம் அடிச்சவங்கதான் முன்னுக்கு நிக்குறாங்க.. வியாபார நிலையங்களா.. அதிலயும் அசைலம் அடிச்சவங்கதான் முன்னுக்கு நிற்குறாங்க.. 80க்கு முந்தி வந்தவை என்னத்தை பிடிங்கிச்சினம்.. கொங்சக் காசோடை வந்து, கோப்பை கழுவி அல்லது 'சப்ளை' செய்து பெயருக்கு பின்னால ரண்டு மூண்டு எழுத்தைப் போட்டுக்கொண்டு.. பிள்ளைகளுக்கு பரதநாட்டியம்.. அல்லது வீணை அல்லது வயலின்.. (அதுதான் படிச்சவங்க கலைகளாம்) பழக்கிக்கொண்டு.. வீதியால போற மற்றத் தமிழனை ஏதோ வேண்டாத பொருளைப் பார்ப்பதுபோல அலட்சியம் செய்துகொண்டு.. நுனிநாக்கில் தம்மினத்தவனுடனே ஆங்கிலம் பேசி.. அதுதான் கெளரவம் என நெஞ்சை நிமிர்த்தி... வெறும் சுயநலத்தோடு.. இனம் மறந்:து.. தாய் மொழி மறைத்து.. போலிக் கெளரவத்தைப் போர்த்திக் கொண்டு வாழும் இத்தகைய தமிழங்களுக்கும் பார்க்க.. தன் சொந்தங்களுக்கு உதவுற.. இனத்துக்கு உதவுற.. தன் இனத்தின் பிற தேவைகளுக்காக கடைகளென்றும் கலைகளென்றும் தாய் மொழிக் கல்வியென்றும் ஊடகங்களென்றும் உரிமைக்குரல் எழுப்பிப் பொங்கும் அணிகளென்றும் உருவாக, அடிக்கல்லாக உள்ள.. வேராக உள்ள 'அசைலத் தமிழன்' எவ்வளவோ மேல்.. அவனிருக்கும் தைரியத்தில்தான் தொப்புள் கொடிகளின் கரங்கள் ஐரோப்பா கனடா போன்ற நாடுகளை நோக்கி நீளுகின்றன!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரண்டு பேரும் ஏதோ மாறி மாறி வெள்ளைக்காரனிட்ட ஏதோ இல்லையென்று புலம்புறதுபோல தெரியுது.. நீங்க வீடு வாசலோடை சொகுசா இருக்குற வெள்ளையளோடை பழகேலை எண்டு நினைக்குறன்.. :lol: அவங்கள் ஒருவேளை தின்னுறதுக்கு செலவழிக்குற காசில நாங்கள் ஒரு கிழமைக்காவது தின்னுவம்.. இப்பிடிக் கணக்குப் பாத்தியளெண்டால்.. எப்பிடி சொந்த வீடு கார் வந்ததெண்டு கொஞ்சமாலும் புரியும்.. எடுக்குற காசில தண்ணியடிச்சுட்டு.. டிஸ்கோவில கிடந்து.. வாறவளவைக்கு ஹோட்டலில கேக்குறதுகளையெல்லாம் வாங்கிக் கொடுத்தால்.. கையில சல்லிக் காசுகூட நிக்காதுதான்.. :lol: :lol:

(நான் நெடுக்காலபோவனின் கருத்துக்கும் சும்மாவின் கருத்துக்கும் பதில் சொன்னனான்.. மற்றவை கண்டுகொள்ளாதீங்க!!)

அப்போ எங்கட ஆட்கள் சாப்பிடாமல் இருந்து வீடு கார் எல்லாம் வாங்குகின்றார்களா? இது தெரியாமல் போய்விட்டது.... வீடு வாசலோட வசதியாக இருக்கின்ற அனேக மேற்கத்தியர்களின் கடன் அட்டை நிலுவையை அறிய வாய்ப்பில்லை தான்...

நாங்கள் பேச வந்த விடயம் என்னவென்றால், அகதியாக இங்கு வந்து ஒரு வருடத்தில் கடைகள் வீடுகள் சொந்தமாக எப்படி என்று....வருடம் முழுதும் உண்ணாவிரதம் இருந்தால் கூட சேமிக்க முடியாதே?

நீங்கள் இருக்கும் நாட்டில் நிலைமைகள் வேறு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசைலம் அடிச்சவன் இங்க பயப்பிடுறான் எண்டுறியளோ? இண்டைக்கு ஊரில ஒரு பிரச்சினை.. உறவுகளுக்கு ஒரு தேவை எண்டா அசைலம் அடிச்சவங்கதான் முன்னுக்கு நிக்குறாங்க..நமது கலை கலாச்சார விழாவா.. ஊடகத்துறையா.. அதிலயும் அசைலம் அடிச்சவங்கதான் முன்னுக்கு நிக்குறாங்க.. வியாபார நிலையங்களா.. அதிலயும் அசைலம் அடிச்சவங்கதான் முன்னுக்கு நிற்குறாங்க.. 80க்கு முந்தி வந்தவை என்னத்தை பிடிங்கிச்சினம்.. கொங்சக் காசோடை வந்து, கோப்பை கழுவி அல்லது 'சப்ளை' செய்து பெயருக்கு பின்னால ரண்டு மூண்டு எழுத்தைப் போட்டுக்கொண்டு.. பிள்ளைகளுக்கு பரதநாட்டியம்.. அல்லது வீணை அல்லது வயலின்.. (அதுதான் படிச்சவங்க கலைகளாம்) பழக்கிக்கொண்டு.. வீதியால போற மற்றத் தமிழனை ஏதோ வேண்டாத பொருளைப் பார்ப்பதுபோல அலட்சியம் செய்துகொண்டு.. நுனிநாக்கில் தம்மினத்தவனுடனே ஆங்கிலம் பேசி.. அதுதான் கெளரவம் என நெஞ்சை நிமிர்த்தி... வெறும் சுயநலத்தோடு.. இனம் மறந்:து.. தாய் மொழி மறைத்து.. போலிக் கெளரவத்தைப் போர்த்திக் கொண்டு வாழும் இத்தகைய தமிழங்களுக்கும் பார்க்க.. தன் சொந்தங்களுக்கு உதவுற.. இனத்துக்கு உதவுற.. தன் இனத்தின் பிற தேவைகளுக்காக கடைகளென்றும் கலைகளென்றும் தாய் மொழிக் கல்வியென்றும் ஊடகங்களென்றும் உரிமைக்குரல் எழுப்பிப் பொங்கும் அணிகளென்றும் உருவாக, அடிக்கல்லாக உள்ள.. வேராக உள்ள 'அசைலத் தமிழன்' எவ்வளவோ மேல்.. அவனிருக்கும் தைரியத்தில்தான் தொப்புள் கொடிகளின் கரங்கள் ஐரோப்பா கனடா போன்ற நாடுகளை நோக்கி நீளுகின்றன!! :lol:

அசைலம் ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை என்றால் கொழும்பில் ஒரு குண்டு வெடிக்காதா என்று ஏங்குபவர்களும் இவர்கள் தானே?? ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.. நான் தமிழர்கள் யாருடனும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை அத்தோடு எல்லோரையும் ஒரே மாதிரி தான் நடத்துவதுண்டு..

கொழும்பில் குண்டும் விழுந்தால் இங்கே அசைலம் கிடைக்கும் என்பது உங்களது பாடப்புத்தக அறிவாக இருக்கலாம். ஆகக் குறைந்தது 15 ஆயிரம் யுரோவைக் கொடுத்து ஒருவன் இங்கு வருகிறான். அவனுக்கு நாட்டில் இருக்கலாமென்றால்.. அந்தப் பணத்தை ஒரு வங்கியில் இட்டுவிட்டு.. மாதாமாதம் வட்டியிலேயே குடும்பம் நடத்தி சுகபோகமாக வாழ அவனால் முடியும்.. ஆகவே, உங்க பாடப்புத்தக அறிவின்படி.. அசைலம் அடிப்பவன் 15 ஆயிரம் யூரோ கொடுத்து வந்து.. கொழும்பில் குண்டு விழாதா என ஏங்குவதாக இருக்கலாம். அது ஏட்டுச்சுரக்காய்.. கொஞ்சம் கீழே இறங்கி வந்து, அவர்களுடைய அனுபவங்களை கேட்டுப் பாருங்கள்.. சிலவேளை அவர்கள் உங்களுக்கு சண்டித்தனக்காரர்களாகவோ, பழக்கவழக்கம் தெரியாதவர்களாகவோ அல்லது குழுக்களாகவோ தெரியலாம்.. ஏனெனில் தங்கள் பார்வை அப்படியாக இருப்பின்.. தாங்கள் உண்மையிலேயே அசைலம் அடிக்கும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்பினால், அவர்கள் உங்கள் கண்களுக்கு நிச்சயமாகத் தெரிவார்கள்!! :lol:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

12000 கட்டிப் படித்துவிட்டால் வேலை கிடைக்கும் என்பது நிச்சமில்லை. பல பேர் படித்து குறித்த துறைகளில் வேலை கிடைக்காததால்.. கனடா.. அமெரிக்க.. அவுஸ்திரேலியா.. மலேசியா.. சிங்கப்பூர் என்று போகிறார்களே.

அவர் அவர் திறமையை பொறுத்தது..அத்தோடு.. பிரித்தானியாவில் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் படிக்கலாம்.. சித்தியும் அடையலாம்... கற்றதை பாவிக்க தெரிந்திருக்க வேண்டும்.... நிறுவனங்களே உங்களை அழைக்கும்... வேலை கிடைக்கவில்லை என்று சொல்வது எல்லாம் இயலாமையின் வெளிப்பாடு...

There is a diffrent between race driver and an ambulance chaser..

விசாவுக்காக படிப்பவர்களுக்கு எதற்கு வேலை?

எனக்கு தெரிய பல நண்பர்கள் மிகத் திறமைசாலிகளாக இருந்தும்... 200 மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளுக்குப் போயும் வேலையின்றி வேறு நாடுகளுக்கு தொழில்பெறச் சென்றுள்ளனர்.

இன்னும் சிலர் வேலைகளில் இருந்து திடீர் ஆட்குறைப்புக்களால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளனர்.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை அது மனிதர்களை EU, EEA மற்றும் Non-EU என்று வகைப்படுத்தித்தான் வேலை வழங்குகிறது. விசாக்களையும் வழங்குகிறது. அதாவது வெள்ளைத்தோலுக்கு ஒரு விதிமுறை வெள்ளைத்தோல் அல்லாதோருக்கு இன்னொரு விதிமுறை. அடிப்படையில் இதுதான் நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.

இதில்.. நீங்கள் சொல்லும் திறமை.. என்பது எப்படி பிரித்தானிய விதிமுறைகளை உச்சுவது என்பதாக இருக்குமே தவிர.. திறமை..????! :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.