Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவாளி நடிகர்கள்

அரங்கேற்றும் நாடகம்

ஒன்றல்ல! இரண்டல்ல!!

யாழ் தளத்தில்

தாழில்லை!!

வெட்டி வம்பும்

வீண் வீராப்பும்

இங்கே பொழுதுபோக்கு!

எம் தமிழ்மக்கள்

ஒண்டக்குடிசையின்றி

உண்ண உணவின்றி

உறங்க இடமின்றி

ஊருராய் அலைந்தாலும்

குளிhந்த அறைக்குள்ளே

கூவிடும் அறைகூவல்!

பாட்டி வடை சுட்டகதைக்கு கூட

ஈ.வே.ரா.-க்கு இடமில்லை!

ஏனெனில் இவர்கள் கலங்கம் அடைந்து விட்டால்...

அதனாலே இத்தனை கங்கணம்!

ஈழத்திற்கும் வரும் அறிவுப்படை

அப்போது ஆட்டங்காணும் இக்கூட்டம்

இது வெளிப்படை!!

  • Replies 71
  • Views 25.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணி அவர்களின் கருத்தை மிகவும் வரவேற்கிறென்!

கருத்தை கருத்தோடு எதிர்க்கத் திறன் அற்றவர்கள்தான் தங்களின் வெறுப்பை இவ்வாறு உமிழ்வார்கள்.

பெரியார் மீது விமர்சனங்கள் வையாதீர்கள் என்று நாம் என்றைக்கும் கூறவில்லை. 1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த போது பெரியார் அதில் போதிய அளவு அக்கறை காட்ட வில்லையே என்ற வருத்தம் எனக்கே உண்டு! அனைவரின் கருத்துக்களும் செயற்பாடுகளும் நூற்றுக்கு நூறு சரி என்று நாம் வாதிட முடியாது. அனைவரிடமும் தவறுகள் உண்டு. ஆனால் அனைத்து தவறுகளையும் நாம் ஒன்றாக ஒப்பிட முடியாது. அப்பட்ட மான சாதி வெறியையும் மதவெறியையும்(சங்ரசாச் சாரி, ஆறுமுக நாவலர், சாவர்க்கர், பசும்பொன் முத்துரமலிங்கர், ) காட்டியவர்களின் குற்றங்களை கவனக்குறைவால், அரசியல் நெருக்கடியால் போதிய திர்க்க தரிசனம் இன்மையால் நடந்து கொண்ட பெரியார், அண்ணா, மா.பொ.சி போன்றவர்களின் தவறுகளோடு ஒப்பிடக் கூடாது.

இமைய வரம்பன் என்பவர் எழுதிய தந்தையும் மைந்தரும் எனும் நூலில் ஈழத்துக் காந்தி தந்தை செல்வாவின் அரசியல் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளார். அதற்காக அவரது தவறுகளை சேர். பொன். இராமனாதனின் தவற்றோடு ஒப்பிட முடியுமா?

தங்களுக்கு பிடிக்காதவர்களின் மீது எவ்விதச் சான்றுகளும் இல்லாமல் சேற்றை வாரி இறைப்பதும். பிடித்தவர்களின் மீது தக்க சான்றுகளுடன் விமர்சனங்களை வைத்தால் சகிப்புத்தன்மையற்று வெறித்தனமாக நடந்து கொள்வதுமே இவர்களின் தொழிலாகப் போய்விட்டது.

கருத்துக் கோழைகள் என்றே கருத முடிகிறது.

Edited by இளங்கோ

அரசியல் நெருக்கடியால் போதிய திர்க்க தரிசனம் இன்மையால் நடந்து கொண்ட பெரியார், அண்ணா, மா.பொ.சி போன்றவர்களின் தவறுகளோடு ஒப்பிடக் கூடாது.

அண்ணாத்துரையையும் பெரியாரையும் ஒப்பிடுவது பெரியாரை ஒருகாலத்தில் பின் தொடர்ந்தவர் அண்ணாத்துரை என்பதாலாக மட்டும் இருந்தால் அது தவறு...!!

தமிழகத்தாரின் எதிர்காலம் எதில் தங்கி இருக்கும் என்பதை தீர்க்க தரிசனமாக கண்டு சொன்னவர், செயலாற்றியவர் அண்ணாத்துரை மட்டும்தான்....

பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பூச்சியமாக இருந்த அண்ணாத்துரை. நல்லாட்ச்சி நடத்தி கொண்டு இருந்த காமராஜரை எதிர்த்து தேர்தலில் போட்டி இட்டவர் அதே சமயம் பெரியாரின் ஆதரவை காமராஜர் பெற்று இருந்தார் என்பதும் பிரபல்யம்..

அப்படியான நேரம் அண்ணாத்துரை அவர்கள் வெண்றார், ( சொந்த தொகுதி உட்பட) காமராஜர், பெரியார் கூட்டணி தோற்றது என்பதிலேயே ஒரு முக்கியமான விடயம் அடங்கி இருக்கிறது... அண்ணாத்துரை அளவுக்கு பெரியார் மக்களை வளிப்படுத்தும் அல்லது கவரும் அவர்களை உணர்ந்து கொள்ளும் திறனை கொண்டு இல்லை என்பதே அது... மக்களும் பெரியாரை கண்டு கொள்ள இல்லை... புரிந்து கொள்ள முயலவில்லை..

( பெரியாரும் , அண்ணாவும் ஆளையாள் பற்றி மேடைகளில் முழங்கியவைகளை நீங்கள் மறைத்து,மறந்து விடுகிறீர்கள்)

அண்ணாத்துரை எதிர்க்காலத்தை கணித்து சொல்லி விட்டு போனதுக்கு நல்ல உதாரணம் " ஒண்றே குலம் ஒருவனே தேவன்" எனும் சுலோகம்... அதுதான் திமுக வை மக்கள் மத்தியில் தீ மூட்டி விட்டது...!!! மக்களின் உணர்வுகளை அண்ணாத்துரை மதித்தார்.. மக்கள் அவரை மதித்தனர்...

(பாரதிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் ஜதார்த்த ரீதியில், பாரதியும் அண்ணாவுக்கும் வேறு பாடுகள் கிடையாது)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் கொள்கைகளை உபயோகித்து அண்ணாத்துரை வளர்ந்தார் அல்லது திமுக வளர்ந்தது. பெரியார் உயர்சாதி என்று நினைக்கும் பாப்பனரினால், கீழ்சாதி என பாப்பனரால் அழைக்கப்பட்ட மக்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளுக்காகக் குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று பாப்பணர்கள் தடை விதித்தார்கள். அதனால் உயர்ந்தசாதியினருக்கு மட்டும் பொதுவான அந்தக்கடவுள் தேவையில்லை என்று அக்கடவுளின் சிலையை பொதுவான இடத்தில் உடைத்தார். எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது. கிறிஸ்தவர்களின் வேதாகமத்தை வாசித்துப்பார்த்தால் நம்பமுடியாத பல கட்டுக்கதைகள் இருக்கிறது. தமிழ் நாட்டில் அதிகளவு இருப்பவர்கள் இந்துக்கள். அதிலும் பாப்பனரினால் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த கொடுமைகளின் எண்ணிக்கை அதிகம். அதனால் பாப்பனர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இதனால் பெரியார் கிறிஸ்தவ, மூஸ்லிம் மதங்களுக்கு ஆதரவானவர் என்று சிலர் பிழையாகக் கதைப்பதுண்டு. பெரியார் மக்களுக்கு தொண்டாற்றவே விரும்பினர். அரசியலில் சேர விரும்பவில்லை. ஆனால் பெரியாரின் கொள்கைகளினால் வளர்ந்த அண்ணாத்துரை அரசியலில் வர விரும்பினார். இதனால் பெரியாருக்கு எதிராக சில கருத்துக்களைத் (பெரியாரின் 2ம் திருமணம்) தெரிவித்தார். திமுகவும் வளர்ந்தது. திமுகவின் சன்(இப்பொழுது திமுகவுக்கு எதிரானது என்றாலும் முன்பு திமுகவுக்கு ஆதரவு), கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தீர்கள் என்றால் அதில் வரும் நிகழ்ச்சிகள் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. அதாவது பெரியார் கொளகைகளை உபயோகித்து கமராஜரின் ஆட்சியை வீழ்த்தியது திமுக. பெரியாரின் கொள்கைகளை உபயோகித்து அண்ணாவும் ஆட்சிக்கு வந்தார். பெரியாருக்கு எதிராகவும் கருத்துக்கள் சொன்னார்.

அதாவது பெரியார் கொளகைகளை உபயோகித்து கமராஜரின் ஆட்சியை வீழ்த்தியது திமுக. பெரியாரின் கொள்கைகளை உபயோகித்து அண்ணாவும் ஆட்சிக்கு வந்தார். பெரியாருக்கு எதிராகவும் கருத்துக்கள் சொன்னார்.

பெரியாரின் கொள்கைகள் எண்டு பார்த்தீர்கள் எண்டால் எல்லாமே அவருக்கும் முன் தேண்றிய கம்யூனிச தத்துவங்கள்.... கடவுள் மறுப்பு, திராவிடம் எனும் சில உட் செருகல்களை தவிர...

ஆனால் சமதர்ம வாதிகளும் கடவுளை ஏற்று கொள்ளவில்லை... கடவுளை நோக்கி போகும் மக்கள் வளர்வதை தடுத்தனர், வேறு திசைகளில் பயனிக்க தூண்டினர்... உழைப்பை உரமாக்கினர்... இதைத்தான் பிற்காலத்தில் அண்ணாத்துரையும் செய்தார்... பின்பற்றினார்

அண்ணாத்துரையும் அப்ப்படித்தான், ஆனால் அவர் பெரியாரை விடும் போது திராவிடம் எனும் பதத்தையும் விட்டார்( தி மு க என்பதை விட), அதனால்த்தான் அண்று வரை சென்னை பட்டணமாக இருந்த இடம் தமிழர்களின் நாடு ( தமிழ்நாடு ) எனும் பெயர்மாற்றம் செய்ய பட்டது...

கடவுளே இல்லை எண்று சொன்ன பெரியாரோடு இருந்த அண்ணாத்துரை "ஒண்றே குலம் ஒருவனே தேவன்" எண்றார்...

மெரீனா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலை அண்ணா துரை அவர்கள் ஒரு சமத்துவ வாதியாக தமிழ் நாட்டை பொருளாதாரத்தால் உயற்றி விட பாடு பட்டார் என்பதை சொல்லும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் சார்ந்த மதங்களின் புனித நூல் எந்த மொழியில் உள்ளதோ அதை உயர்வாக என்னும் குணம் பல படிப்பாளிகளுக்கும் சாதாரனமக்களுக்கும் உண்டு.அந்த அடிப்படையில் பாரதியும் சமஸ் கிருதத்தை உயர்வாக நினைத்து இருக்கலாம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க அரபி மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம்.காரணம் மதப்பற்று.

தமிழ் மொழியில் புனித நூல் இல்லையே பாரதி என்ன செய்வார்.தமிழ் கடவுள் தமிழில் வேதமொதவில்லையே அதுவும் ஒரு காரணம்

பாரதியின் சிந்தனையில் எந்த அளவுக்கு சமஸ்கிருதம் கலந்திருந்தது, அவனுடைய மொழிப்பற்று எப்படியானது என்பதையெல்லாம் ஆய்வுசெய்வது சிலருடைய தேவையாக இருக்கலாம். ஆனால் இன விடுதலை நோக்கிய பாதையில் இருக்கும் எங்களுக்கு பாரதியின் பாடல்கள் எந்த அளவில் ஊக்கந்தருகின்றன என்பதை மட்டும் பார்ப்போம். பாரதி ஆரியச் சார்புடையவன், சந்தாப்பவாதி என்றெல்லாம் நிரூபிக்க முயல்வதில் ஏதாவது நன்மை இருக்கிறதா? விட்டால் அவன் தமிழினத் துரோகி என்றும்கூட பட்டங்கட்டிவிடுவார்கள். உலகில் எந்தவொரு மனிதனும் நிறைவானவனாக இருப்பதில்லை. அது பாரதிக்கும் பொருந்தும். குறைகளைப் பெரிதுபடுத்திப் பார்ப்பதை விட, பாரதியிடமிருந்து எங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்வதே காலத்தின் தேவை.

வரலாறு எல்லாவற்றையும் மீள் விமர்சனத்துக்குள்ளாக்கும். அதன் வீச்செல்லைகளுக்குள் சகலதும் கொண்டுவரப்படும். பாரதியாரும் அதற்கு அப்பாற்பட்டவர் அல்ல. மீள் வாசிப்பிற்கும், மீள் விமர்சனத்திற்கும் உட்பட்டவறே

ஆனால், அவர் பற்றிய விமர்சனத்திற்குள் பெரியாரையும், அண்ணாத்துரையையும் வேண்டும் என்றே புகுத்தி, கலந்துரையாடலை ஆரோக்கியமற்றதாக்கி தடம் புரள வைப்பவர்களின் செயல்கள் தான் மிக வெறுப்பை தருகின்றது

மரம் ஒன்றைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னால், அதில் மாட்டைக் கொண்டு வந்து கட்டிவிட்டு, மாடு பற்றி கட்டுரை எழுதும் போக்கைத்தான் இங்கு இவர்களிடம் காண முடிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு தலைவரை இந்த வீச்செல்லைக்குள் கொண்டு வருவீர்களா?? ஏனென்றால் அதை எங்களின் காலத்திலேயே பதிலறுக்க வேண்டும் என நினைக்கின்றோம்.

மற்றவர்களை இழுத்துக் கதைப்பதற்குக் காரணம், யாருக்கும் குற்றம் பார்த்தால் கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது. மேலே நண்பர்கள் சிலர் சொன்னது போல கம்பன், ஒளையார், இளங்கோ, வள்ளுவன், தொல்காப்பியன் எல்லோருமே ஆரிய அருவடிகள் என்று தான் இவர்கள் கட்டுரை வரைந்திருக்கின்றார்கள். இவர்கள் இப்போது பாரதியையும் விட்டு வைக்கவில்லை. ஏதோ எழுந்தமானத்து வரைவது எல்லாம் கட்டுரையல்ல... அதன் பெயர் வஞ்சம். தாங்கள் மட்டுமே உலகத்தில் சரியானவர்கள் என்றும், மற்றவர்கள் தவறானவர்கள் என்பது எல்லாம் இதனுள் அடங்குகின்றது.

ஆரோக்கியமான கலந்துரையாடல் ... யாழில்.... இதற்குள்ளும் நகைச்சுவை நன்றாக அடிக்கின்றீர்கள்...

வரலாற்றை என்றைக்கும் ஆள்பவர்களே எழுதுகிறார்கள். இந்துத்துவப் பார்ப்பனியம் பாரதியின் வரலாற்றை எழுதியது. ஈழத்தின் சைவ வேளாளம் நாவலரின் வரலாற்றை எழுதியது. சிங்களப் பேரினவாதம் சிறிலங்காவின் வரலாற்றை எழுதியது.

அடக்கப்பட்டவர்கள் போராடத் தொடங்குகின்ற பொழுது இந்த வரலாறுகள் மீள்வாசிப்புச் செய்யப்படும். இது ஒரு இயல்பான நிகழ்வு.

அதே போன்று காலமும் சிந்தனையும் மாறுகின்ற பொழுதும் தலைவர்கள் குறித்த மீள்வாசிப்புக்கள் நடைபெறும். இன்றைக்கு சரியாக இருப்பது நாளைக்கு தவறாக இருக்கும்.

கார்ல் மார்க்ஸ், லெனின்,தந்தை பெரியார் என்று யாரும் இந்த மீள்வாசிப்பில் இருந்து தப்பியது இல்லை. தேசியத் தலைவர் பற்றிய மீள்வாசிப்பு நாளை நடைபெறுவதையும் நாம் தடுக்க முடியாது.

ஆனால் பாரதி குறித்த மீள்வாசிப்பு வேறு வடிவானது. நான் முதற் சொன்ன வகையானது. இந்துத்துவ பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்டவர் பாரதி. அவருடைய கவித் திறமை அவரை பல தரப்பினரை ஏற்றுக் கொள்ளச் செய்தது.

ஆனால் பாரதி பற்றி நாம் நடுநிலையாக ஆராய்ந்தல், அவர் பற்றி நாம் கொண்டிருக்கும் பல கருத்துக்களை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

பார்ப்பனிய எதிர்ப்புக்கு பாரதியை துணைக்கு அழைத்த எனக்கும் பாரதி பற்றிய மீள்வாசிப்பு வருத்தத்தையே தருகின்றது. ஆனால் எனக்கு உவப்பானதாக இல்லை என்பதற்காக வரலாற்றை பொய்யாகவே தொடர்ந்தும் கற்பியுங்கள் என்று நான் கோர முடியாது.

இப்ப ஒட்டுக்குழு இணையத்தளத்துக்கு போனால் புலி எதிர்ப்பு பொய்ச்செய்திகளைப் பார்க்கலாம். அவ்விணையங்களை வாசிப்பவர்களில் சிலர் தலைவர் பற்றி பிழையாக விளங்கலாம்.

இந்தியாவில் அதிகளவு விநியோகிக்கிற ஆங்கிலப் பத்திரிகை கிந்து. ஆனால் அதில் அதிகளவு புலி எதிர்ப்புச் செய்திகள் இருக்கும். ஆனால் எங்களுக்கு தெரியும் புலிகள் மீது வெறுப்பினால் இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று. பாரதியார் வாழ்ந்தது 100 வருடங்களுக்கு மேல். அக்காலத்தில் பாரதியின் புகழை விரும்பாதவர்களும் எதாவது எழுதியிருக்கலாம்.

கருணாநிதி திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர். பாப்பணருக்குப் பிடிக்காது. பாப்பணரைப்பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார்.ஆகவே கருணாநிதி சொல்வது எல்லாம் சரியா?. வை.கோ புலிகளுடன் சேர்ந்து தன்னைக் கொல்லப்பார்த்தார் என்றும் கருணாநிதி சொல்லியிருந்தார். அதே போல அண்மையில் புலிகளிடம் காசு வாங்குபவர் என்று நெடுமாறன் பற்றியும் சொல்லியிருந்தார். பாப்பணரைப் பற்றிக் கூடாமல் சொல்லும் கருணாநிதி வை.கோ, நெடுமாறன் பற்றிச் சொன்னது சரியா? .

பாப்பணர் ஆதரவு உள்ள ஜெயலலிதா தான் சங்கராட்சாரியாரைக் கைது செய்தார். கருணாநிதி ஒன்றும் செய்யவில்லை. ஆகவே ஜெயலலிதா சொல்வது எல்லாம் சரியா?. முன்பும் இப்படி மாறி மாறி சம்பவங்கள் நடந்திருக்கும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். எது உண்மை எது பொய் என்று யாருக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை என்றைக்கும் ஆள்பவர்களே எழுதுகிறார்கள். இந்துத்துவப் பார்ப்பனியம் பாரதியின் வரலாற்றை எழுதியது. ஈழத்தின் சைவ வேளாளம் நாவலரின் வரலாற்றை எழுதியது. சிங்களப் பேரினவாதம் சிறிலங்காவின் வரலாற்றை எழுதியது.

அடக்கப்பட்டவர்கள் போராடத் தொடங்குகின்ற பொழுது இந்த வரலாறுகள் மீள்வாசிப்புச் செய்யப்படும். இது ஒரு இயல்பான நிகழ்வு.

அதே போன்று காலமும் சிந்தனையும் மாறுகின்ற பொழுதும் தலைவர்கள் குறித்த மீள்வாசிப்புக்கள் நடைபெறும். இன்றைக்கு சரியாக இருப்பது நாளைக்கு தவறாக இருக்கும்.

கார்ல் மார்க்ஸ், லெனின்,தந்தை பெரியார் என்று யாரும் இந்த மீள்வாசிப்பில் இருந்து தப்பியது இல்லை. தேசியத் தலைவர் பற்றிய மீள்வாசிப்பு நாளை நடைபெறுவதையும் நாம் தடுக்க முடியாது.

ஆனால் பாரதி குறித்த மீள்வாசிப்பு வேறு வடிவானது. நான் முதற் சொன்ன வகையானது. இந்துத்துவ பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்டவர் பாரதி. அவருடைய கவித் திறமை அவரை பல தரப்பினரை ஏற்றுக் கொள்ளச் செய்தது.

ஆனால் பாரதி பற்றி நாம் நடுநிலையாக ஆராய்ந்தல், அவர் பற்றி நாம் கொண்டிருக்கும் பல கருத்துக்களை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

பார்ப்பனிய எதிர்ப்புக்கு பாரதியை துணைக்கு அழைத்த எனக்கும் பாரதி பற்றிய மீள்வாசிப்பு வருத்தத்தையே தருகின்றது. ஆனால் எனக்கு உவப்பானதாக இல்லை என்பதற்காக வரலாற்றை பொய்யாகவே தொடர்ந்தும் கற்பியுங்கள் என்று நான் கோர முடியாது.

நீங்கள் இங்கே நேரத்தை வீண் அடிக்கின்றீர்களோ என்றுதான் என்னால் எண்ண முடிகின்றது....

நீங்கள் எதை பற்றி எழுதினாலும்.... அங்கே பெரியாரை கொண்டுவந்து நிறுத்திவிட்டு. அரைத்த மாவையே அரைக்கும் கூட்டம் ஒரு ஆரோக்கியமான ஆய்வுக்கோ கருத்தாடலுக்கோ முன்வரும் என்ற நம்பிக்கையை நான் இழந்து பலகாலம். சிலர் மதம் வளர்க்க மதத்தில் எதுமில்லை என்பதனால்.... இப்போ பெரியாரை வைத்து மதம் வளர்க்கிறார்கள். இனி பெரியார் அந்த அளவிற்கு ஒன்றும் பெரியவர் அல்ல என்று நீங்கள் சொன்னாலும்.... இந்த கூட்டம் விடாது. அவரை ஒரு மதத்தையே துவம்சம் செய்த பெரிய போர்வீரன் என்று இதுகள் தூக்கி பிடிக்கத்தான் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கார்ல் மார்க்ஸ், லெனின்,தந்தை பெரியார் என்று யாரும் இந்த மீள்வாசிப்பில் இருந்து தப்பியது இல்லை. தேசியத் தலைவர் பற்றிய மீள்வாசிப்பு நாளை நடைபெறுவதையும் நாம் தடுக்க முடியாது.

மீள்வாசிப்புச் செய்து என்னத்தைக் கண்டீர்கள்..??! கார்ல் மார்க்ஸின் கொள்கைகளில் திருத்தங்களை புகுத்தினீர்களா.. அல்லது லெனின் கொள்கைகளை மாற்றி எழுதி வைத்தீர்களா..??! அல்லது இராமசாமி சொன்னவை உளறல்கள் தான் என்பதை ஏற்றுக் கொண்டீர்களா.. இல்லையே..!

தேசிய தலைவரை யாரும் மீள்பார்வை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவரே தன்னை மீள்பார்வை செய்து கொண்டுதான் இருக்கிறார். அவர் மீது தப்புக்கள் காட்டப்படுகின்றனவே தவிர அதன் பின்னால் உள்ள நியாயங்கள் திட்டமிட்டு வெளியில் உள்ளவர்களால் மறைக்கப்படுவதே தொடர்கிறது. அதுவே வெளியில் உள்ளவர்கள் அவர் மீது செய்யும் மீள்பார்வையாகவும் இருக்க முடியும். அதிலும்.. அவரே தன்னைப் பற்றிய மீள்பார்வையைச் செய்வது.. சிறந்தது என்று நினைக்கிறேன். கொள்கை வகுத்தவனுக்குத்தான் தெரியும் அதன் சரியான நியாயப்பாடு.

பாரதிக்குத்தான் தெரியும்.. அவனின் கவி வரிகளின் உண்மையான நியாயப்பாடு. வள்ளுவனின் குறள் வரிகளில்.. விளக்கம் கொடுத்தவர்கள் செய்த திரிபுகளைக் காட்டினும்.. வள்ளுவனே அதற்கு விளக்கம் கொடுத்திருப்பின்.. அதுவே திறமையான விளக்கவுரையாக அமைந்திருக்கும்..!

மருதங்கேணி..

நீங்கள் சந்தடி சாக்கில் இராமசாமியாரை.. பெரியவர் என்ற நிலைக்கு இங்கு புகுத்துவதையே நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

அடிப்படையில் இராமசாமி.. ஒரு சமூகக் குழப்பவாதி. அதன் மூலம் தனது அரசியல்.. தனிப்பட்ட செல்வாக்கை நிறுவ முற்பட்டதே அவரின் நோக்கம். அதில் சமூக அக்கறையோ.. சமூக விடுதலையோ முதன்மையல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை.. இந்திய தேச விடுதலையோடு.. தமிழகத்தில் சமூக விடுதலைக்காக பாடுபட்டவன் பாரதி. அவனுடைய கவி வரிகள்.. இராமசாமியின்.. உளறல்களை விட மிக மிக வலிமையானவை. மக்கள் அனைவரினதும் மனதை.. காயப்படுத்தாமல்.. அடையக் கூடியவை. இராமசாமி அப்படிப்பட்டவர் அன்று. அவருக்கு மக்கள் நாகரிகம் என்பதே தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரின் கொள்கைகள்.. கூற்றுக்கள் மக்கள் ஆதிக்கம் பெறுமென்று எதிர்பார்க்க முடியாது.

அடிப்படையில் பாரதியே தமிழகத்தில்.. பெண் விடுதலையின்.. சாதி அழிப்பின்.. சின்னமாக உள்ளான். இராமசாமி அடிப்படையில் சமூகவியலாளன் அல்ல. அவர் ஒரு அரசியல்வாதி. அவர் தத்துவஞானியல்ல.. சந்தர்ப்பவாதி. பாரதி அரசியலுக்கு வெளியில் நின்ற சமூகக் கவிஞன். சமூக விடுதலைக்குரிய கருத்துக்களை எல்லா மக்களிடமும் எந்தப் பாகுபாடும் காட்டாத வகைக்குக் கொண்டு செல்ல முற்பட்டவன்.

இராமசாமி அப்படிப்பட்டவர் அன்று. பாரதிக்கு இணையாக இராமசாமியை ஒப்பிடுவதே தவறு. பாரதி இமயம் என்றால் இராமசாமி.. மரியானா ஆழி..! ஒரே சமூகத்துள்.. பிரிவினைகளை வளர்த்துக் கொண்டு.. சாதி அழிப்பு என்பது.. என்றுமே சாத்தியமற்ற ஒன்று. இராமசாமியின் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலனுக்காக திணிக்க முனைந்ததன் விளைவே... இன்றும் தமிழகம் சாதியைக் காவிக் கொண்டிருக்க வேண்டியதாகி இருக்கிறது.

ஒருவேளை பாரதியின்.. சாதி அழிப்பை.. பெண் விடுதலையை.. இன்னும் தீவிரமாக முன்னிலைப்படுத்தி இருப்பின்.. தமிழகத்தில்.. முழுமையான சமூகப் புரட்சியை இன்று கண்டிருக்க முடியும்..! :)

Edited by nedukkalapoovan

நீங்கள் இங்கே நேரத்தை வீண் அடிக்கின்றீர்களோ என்றுதான் என்னால் எண்ண முடிகின்றது....

நீங்கள் எதை பற்றி எழுதினாலும்.... அங்கே பெரியாரை கொண்டுவந்து நிறுத்திவிட்டு. அரைத்த மாவையே அரைக்கும் கூட்டம் ஒரு ஆரோக்கியமான ஆய்வுக்கோ கருத்தாடலுக்கோ முன்வரும் என்ற நம்பிக்கையை நான் இழந்து பலகாலம். சிலர் மதம் வளர்க்க மதத்தில் எதுமில்லை என்பதனால்.... இப்போ பெரியாரை வைத்து மதம் வளர்க்கிறார்கள். இனி பெரியார் அந்த அளவிற்கு ஒன்றும் பெரியவர் அல்ல என்று நீங்கள் சொன்னாலும்.... இந்த கூட்டம் விடாது. அவரை ஒரு மதத்தையே துவம்சம் செய்த பெரிய போர்வீரன் என்று இதுகள் தூக்கி பிடிக்கத்தான் போகின்றார்கள்.

சூப்பரா சொன்னீங்கண்ணா...!!

மேலை இருக்கும் கட்டுரையை சரியா படித்தீர்களோ...???? அங்கே பாரதி செந்தமிழ் நாடெனும் போதினிலே எனும் தமிழ் நாட்டு வாழ்த்தை யாரோ ஒரு ஐயரின் வற்புறுத்தலுக்காக ஒரு பத்திரிக்கைக்கு எழுதியதாக சொல்லி இருக்கிறார்களே.... அதனால பாரதிக்கு தமிழ் மேலை பற்று இல்லையாம்...

பாரதி அந்த ஐயர் சொல்லாமலே கவிதையை பத்திரிகைக்கு எழுதி இருந்தால் பார்ப்பணன் பாரதி பரிசுக்காக தான் தமிழ்நாட்டை போற்றி பாட்டு எழுதினார், தமிழ் பற்றினால் இல்லை எண்று இந்த உலக்கை கட்டுரை எழுதி இருக்கும்....!!

எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கு முயண்றுஇருபக்கத்தையும் பாருங்கள்....

Edited by தயா

பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் எனக்கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதி, கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914 ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச்சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (31) கடலூர் வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர்.

பாரதிக்குக் கடலூர் சப்-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். (32)

பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

Om Sakthi

District Jail, Cuddalore,

28 November-1918

To,

His Excellency Lord Pentland,

Governor,

Fort St.George, Madras.

The Humble petition of C.Subramania Bharathi,

May it please your excellency,

It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurance on my part as your excellency may well remember, the Dy.I.G (C.I.D) was sent by your Excellency’s Government a few months back, to interview me at Pondicheery. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.

I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding. I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain Your Excellency’s most obedient Servant

C.Subramaia Bharathi.

(G.O.No.1331 dt.18.12.1918 Public) (32)

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்கு கடிதம் எழுதி, சென்னை அரசு டி.ஐ.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார். (33)

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். (34) மாநில அரசு மீண்டும் டி.ஐ.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை:

1. நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

2. பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும்.

3. அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் எழுத்துப்பூர்வமாகப் பாரதி ஒப்புக்கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918 இல் பாரதியை விடுதலை செய்தார். (35) ஆகவே, பாரதி சிறையில் இருந்த மொத்த நாட்கள் 20.11.1918 முதல் 14.12.1918 வரையுள்ள 25 நாட்களேயாகும். அதற்குள் அன்றைய பார்ப்பன உலகமே அதிர்ந்து போய் அவருடைய விடுதலைக்குப் பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கண்ட நிபந்தனைகளைப் பாரதி ஏற்றுக் கொண்டு நேராகக் கடயம் சென்று விட்டார். அங்கே சமயத் தொடர்பாகப் பேசியும், எழுதியும் வந்தார். அரசியல் வாடை என்பதே அவரிடம் துளியும் இல்லை.

மேலே கண்ட நிபந்தனைகளைத் தாம் ஏற்றுக் கொண்டுள்ளதைப் பற்றிப் பரலி சு.நெல்லையப்பருக்குப் பாரதி எழுதியுள்ள கடிதத்திலும் குறித்துள்ளார். 21 டிசம்பர் 1918 இல் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு, நமஸ்காரம்.

நான் ஸௌக்யமாகக் கடயத்துக்கு வந்து சேர்ந்தேன்...

‘பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்து அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக் கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்...

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை; நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேகிதர். தங்கமான மனுஷன். ஆதலால் அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்பவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடங் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளுக...

உனதன்புள்ள

சி.சுப்பிரமணிய பாரதி. (36)

நன்றி : கீற்று இணையத் தளம்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பதில்லையே

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பதில்லையே

- பாரதி

வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு (-சுப்ரமணிய பாரதியார்)

வருகசெல்வ! வாழ்கமன் நீயே!

வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்

பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த

நற்றவப் புதல்வ! நல்வர வுனதே!

மேதக நீயும்நின் காதலங் கிளியும்

என்றனைக் காணுமாறித்தனை காதம்

வந்தனிர்! வாழ்திர்! என் மனம் மகிழ்ந்ததுவே.

செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை

முன்னொர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்

நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில

போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?

மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,

அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.

போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்

அமைதி பெற் றுய்வராயினர், எனவே,

பாரத தேவி பழமைபோல் திருவருள்

பொழிதர லுற்றனள். பொருள் செயற் குரிய

தொழிற்கணம் பலப் பல தோன்றின; பின்னும்

கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன

யாற்றினிற் பெண்களை எறிவதூஉம், இரதத்

துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,

பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,

எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான

ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம்என்

பாலரின் மீது படுதலுற் றனவே

ஆயினும் என்னை? ஆயிரங் கோடி

தொல்லைகள் இன்னும் தொலந்தன வில்லை.

நல்குர வாதி நவமாம் தொல்லைகள் (நல்குரவு = வறுமை)

ஆயிரம் எனை வந் தடைந்துள நுமரால்

எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்

நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.

நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு

மருத்துவ ராக வந்தனர் என்ப தூஉம்

பொய்யிலை. ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில

நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!

என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி

இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி

ஒருவரை யொருவர் ஒறுத்திட விலாது

செவ்விதின் வாழ்க! அச் சீர்மிகு சாதியின்

இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!

வாழ்கநீ! வாழ்கநின் மனமெனும் இனிய

வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்!

மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை. அருமையான தமிழ் வார்த்தைகள். கவிதைக்கு நன்றி சபேசன். பாகிஸ்தான' கூட தமிழ்நாட்டை இணை என்ற வார்த்தை ஏதும் இடம் பெறாதது திருப்தியைத் தருகின்றது. தவிரவும் ஆங்கிலேயர் வந்து தான் பெண்கள் அணியச் சேலை கொடுத்தனர், கல்விக்கூடங்கள் கட்டி வைத்தனர் எனத் திராவிடக்கும்பல்கள் அடிக்கடி சொல்வதைப் பாரதியாரும் சொல்ல வருவதால், அவ்விடயம் உண்மை போலத் தான் தெரிகின்றது.

வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு (-சுப்ரமணிய பாரதியார்)

வருகசெல்வ! வாழ்கமன் நீயே!

வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்

பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த

நற்றவப் புதல்வ! நல்வர வுனதே!

மேதக நீயும்நின் காதலங் கிளியும்

என்றனைக் காணுமாறித்தனை காதம்

வந்தனிர்! வாழ்திர்! என் மனம் மகிழ்ந்ததுவே.

செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை

முன்னொர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்

நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்

ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில

போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?

மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,

அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.

போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்

அமைதி பெற் றுய்வராயினர், எனவே,

பாரத தேவி பழமைபோல் திருவருள்

பொழிதர லுற்றனள். பொருள் செயற் குரிய

தொழிற்கணம் பலப் பல தோன்றின; பின்னும்

கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன

யாற்றினிற் பெண்களை எறிவதூஉம், இரதத்

துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,

பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,

எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான

ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம்என்

பாலரின் மீது படுதலுற் றனவே

ஆயினும் என்னை? ஆயிரங் கோடி

தொல்லைகள் இன்னும் தொலந்தன வில்லை.

நல்குர வாதி நவமாம் தொல்லைகள் (நல்குரவு = வறுமை)

ஆயிரம் எனை வந் தடைந்துள நுமரால்

எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்

நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.

நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு

மருத்துவ ராக வந்தனர் என்ப தூஉம்

பொய்யிலை. ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில

நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!

என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி

இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி

ஒருவரை யொருவர் ஒறுத்திட விலாது

செவ்விதின் வாழ்க! அச் சீர்மிகு சாதியின்

இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!

வாழ்கநீ! வாழ்கநின் மனமெனும் இனிய

வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்!

மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!

வேல்ஸ் இளவரசரின் வருகைக்கு கூட சமஸ்கிருதத்தில் கவி பாடாது அழகு தமிழிலேயே கவி பாடியுள்ளதால் பாரதியின் உயிர்மூச்சு தமிழாகவே இருந்துள்ளது என்று மேற்கண்ட கவிதையை இங்கே இணைத்து நிரூபித்த சபேசனுக்கு நன்றிகள் !

இல்லையென்றால் "பாரதியின் உயிர்மூச்சு தமிழா ஆரியமா?" என்ற தலைப்பின் கீழ் ஏன் இந்த கவிதையை கொண்டு வந்து சபேசன் இணைத்து இருக்கப் போகிறார்!!! :)

Edited by vettri-vel

இரண்டு விடயங்களை நான் இணைத்திருந்தேன். ஒன்று ஆங்கிலேய அரசுக்கு பாரதி கொடுத்த மன்னிப்புக் கடிதம். மற்றது வேல்ஸ் இளவரசரை வரவேற்றுக் கவிதை எழுதியது.

வேல்ஸ் இளவரசரை பாரதி வரவேற்று பாடல் எழுதியது ஏறக்குறைய 1905 இல். இந்தப் பாடலில் இந்தியாவிற்கு சுபிட்சம் வந்ததே அங்கிலேய அரசால்தான் என்று பாரதி சொல்கிறார். அவர்களை வாழ்த்திப் போற்றி பாடுகிறார்.

மன்னிப்புக் கடிதம் கொடுத்தது 1918இல். 13 ஆண்டுகள் கழித்தும் தான் பிரிட்டிஸ் அரசின் விசுவாசம் மிக்க ஒரு குடிமகன் என்று பாரதி சொல்கிறார்.

ஆனால் இந்த 13 ஆண்டுகளில் சில சிந்தனைகள் பாரதியிடம் மாறிப் போயிருந்தது. பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்த பாரதி இறந்து போயிருந்தார்.

வேல்ஸ் இளவரசர் பற்றிய பாடலில் பெண்கள் உடன்கட்டை ஏறுவதை கண்டித்த பாரதி, பிற்காலத்தில் அப்படி உடன்கட்டை ஏறுகின்ற பெண்கள் உத்தமிகள் என்று சமஸ்கிருதம் கலந்த தமிழில் கட்டுரை எழுதினார்.

வர்ணாச்சிரமத்தைப் போற்றியும், சாதிகளை ஆதரித்தும், தாழ்த்தப்பட்ட மக்களை சாடியும் பாரதி பாடல்களை எழுதினார்.

I watched thee when the foe was at our side

Ready to strike at him, or thee and me

Were safety hopeless rather than divide

Aught with one loved, save love and liberty.

I watched thee in the breakers when the rock

Received our prow and all was storm and fear

And bade thee cling to me through every shock

This arm would be thy bark or breast thy bier.

I watched thee when the fever glazed thine eyes

Yielding my couch, and stretched me on the ground

When overworn with watching, ne'er to rise

From thence, if thou an early grave hadst found.

The Earthquake came and rocked the quivering wall

And men and Nature reeled as if with wine

Whom did I seek around the tottering Hall

For thee, whose safety first provide for thine.

And when convulsive throes denied my breath

The faintest utterance to my fading thought

To thee, to thee, even in the grasp of death

My spirit turned. Ah! oftener than it ought.

Thus much and more, and yet thou lov'st me not,

And never wilt, Love dwells not in our will

Nor can I blame thee, though it be my lot

To strongly, wrongly, vainly, love thee still.

- - - - - - - - - Byron - - - - - - - - -

பிரபல ஆங்கிலக்கவி பைரனின் வரிகள் தான் மேலே உள்ளவை. ஆங்கிலேயர்கள் பைரனின் கவி வரிகளை ரசித்தார்கள்! பொக்கிசமாக பாதுகாக்கிறார்கள்!

ஆனால் "பைரனின் உயிர்மூச்சு ஸ்கொட்டிஷா? இங்க்லீஷா?" என்று இன்று வரை பைரனை மீள்விமர்சனத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தவில்லையே ஏன்?

ஓ!..... ஒரு வேளை ஆங்கிலேயர்கள் அனைவரும் பகுத்தறிவற்ற பரதேசிகளோ என்னவோ!! :)

Edited by vettri-vel

இரண்டு விடயங்களை நான் இணைத்திருந்தேன். ஒன்று ஆங்கிலேய அரசுக்கு பாரதி கொடுத்த மன்னிப்புக் கடிதம். மற்றது வேல்ஸ் இளவரசரை வரவேற்றுக் கவிதை எழுதியது.

வேல்ஸ் இளவரசரை பாரதி வரவேற்று பாடல் எழுதியது ஏறக்குறைய 1905 இல். இந்தப் பாடலில் இந்தியாவிற்கு சுபிட்சம் வந்ததே அங்கிலேய அரசால்தான் என்று பாரதி சொல்கிறார். அவர்களை வாழ்த்திப் போற்றி பாடுகிறார்.

மன்னிப்புக் கடிதம் கொடுத்தது 1918இல். 13 ஆண்டுகள் கழித்தும் தான் பிரிட்டிஸ் அரசின் விசுவாசம் மிக்க ஒரு குடிமகன் என்று பாரதி சொல்கிறார்.

அடிக்கடி தலைப்பை மறந்து விடுகிறீர்கள்!

இங்கே தலைப்பு பாரதி "ஆங்கில அரசை ஆதரித்தானா? இந்திய சுதந்திரத்தை ஆதரித்தானா?" என்பது அல்ல.

அப்படி ஒரு தலைப்புக்கு வேண்டுமானால் உங்கள் இணைப்புகள் பொருந்தி இருக்கலாம்.

ஆனால் இங்கே தலைப்பு "பாரதியின் உயிர்மூச்சு தமிழா ஆரியமா?" என்பது.

மாமரம் காய்க்குமா காய்க்காதா என்று கேட்டால், மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது என்கிறீர்கள்!

உங்கள் நகைச்சுவை களத்தை கலகலப்பாக வைத்திருக்க மிகவும் உதவுகிறது!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை வெற்றி. சபேசனதோ, நோக்கம் சரியாதே. அவரைப் பொறுத்தவரைக்கும், பாரதி என்பவர் தமிழெதிரியாகக் காட்டி, கன்னடர்களுக்க வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றே ஒழிய, அவர் ஆரிய அருவருடியா, ஆங்கில அடிவருடியா என்பது எல்லாம் பிரச்சனை கிடையாது.

வெற்றிவேலின் கேள்வியில் நியாயம் உள்ளது. அக் கவிதைகளுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக புலப்படவில்லை

ஆனால், பாவம் தூயவன்... கன்னடன், பெரியார் எனும் வார்தைகள் இல்லாமல் அவருக்கு எதனையும் எழுத முடியுது இல்லை

இல்லை வெற்றி. சபேசனதோ, நோக்கம் சரியாதே. அவரைப் பொறுத்தவரைக்கும், பாரதி என்பவர் தமிழெதிரியாகக் காட்டி, கன்னடர்களுக்க வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றே ஒழிய, அவர் ஆரிய அருவருடியா, ஆங்கில அடிவருடியா என்பது எல்லாம் பிரச்சனை கிடையாது.

ஆனால் அவசரத்தில் அதை அடிக்கடி கோட்டை விட்டுவிடுகிறார்கள்! :)

ஒரு சுதந்திர போராட்டம் பல நெளிவு சுளிவுகளை கொண்டது. சில வேளைகளில் சில நடவடிக்கைகள் எதிரியை திசை திருப்புவதற்காகவும், போராட்டத்தை இன்னொரு தளத்தில் இன்னொரு விதத்தில் தொடர்வதற்காகவும் எடுக்கப்படுவதுண்டு! எதையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு சகட்டு மேனிக்கு விமர்சிக்க தொடங்கினால் இப்படித்தான் ஒரு தலைப்பை "பாரதியின் உயிர்மூச்சு தமிழா? ஆரியமா?" என்று தொடங்கிவிட்டு "பாரதியின் உயிர்மூச்சு ஆங்கில அரசா? இந்திய சுதந்திரமா?" என்று முடிக்க வேண்டிவரும்

இந்த தலைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் "பாரதியின் உயிர்மூச்சு தமிழா ஆரியமா" என்னும் கட்டுரை ஒரு ஆய்வுக்கட்டுரையின் அடிப்படை தகுதிகளை கூட கொண்டிருக்கவில்லை!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், பாவம் தூயவன்... கன்னடன், பெரியார் எனும் வார்தைகள் இல்லாமல் அவருக்கு எதனையும் எழுத முடியுது இல்லை

எனக்காகப் பரிதாபப்பட்டமைக்கு நன்றிகள். இங்கே மரம், மாடு என்று எதுகைமோனை ஏதும் வருமா என்று பார்த்துச் சொல்லுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.