Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுக்கோத்துக்களிடம் ஒரு கேள்வி

Featured Replies

கு.சா

அஜித்தும் அர்ஜுனும் தங்களை எதிர்வரும் நவ1ம் திகதி திரையுலகம் நடாத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விட்டவர்களிடம் தானே இதனை தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் என்ன பத்திரிகை நிருபர்களை கூட்டியா தெரிவித்தார்கள். தற்போது அஜித்தின் "ஏகன்" திரைப்படம் வெளிவர இருப்பதால் அஜித்திற்கு வேண்டாதவர்கள் இதனை ஊதிப் பெரிதுபடுத்தியுள்ளனர். இப்படியான விடயங்களை கண்டு கொள்ளாமல் விடுவதே எமக்கு அழகு. அஜித்தும் அர்ஜுனும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் விடுவதால் எமக்கு ஒரு நட்டமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

வசம்பு அண்ணா இப்படி எழுதி நீங்களே உங்களை குறைத்து கொள்ளாதீர்கள். உண்ணா விரதத்தில் அவர்கள் கலந்து கொள்ளாமல் விடுவது. அவர்களுடைய விருப்பு வெறுப்பு. அவர்கள் இந்த பதிலை சொல்லியிருந்தால் இலங்கைத் தமிழர்களும் தங்கள் வலிமையை காண்பிக்க வேண்டும்.

நான் தமிழனாக இருப்பதால் நடுநிலை வகிக்க போவதில்லை. நான் தமிழனுடைய பக்கம் தான் இருப்பேன். அது சரி மம்மி கூப்பிடுறா எண்டு ஒரு அம்மி போச்சுது அந்த அம்மி கொஞ்ச நாளைக்கு முன்னர் இங்கு என்னை ஒருதரும் புடுங்கேலாது என்று சவால் விட்டது. இப்ப அடக்கி வாசிக்குது. :(:)

  • Replies 61
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:( அஜீத்தும், அர்ஜூனும் தமிழர்கள் அல்லாதவர்கள், தமிழ்நாட்டில் வழர்ந்தவர்கள். அங்கே பிழைப்பு நடத்துபவர்கள் அவ்வளவுதான். இதற்கு நல்ல உதாரணம் ஒக்கணேக்கல் பிரச்சனையில் விலகியே இருந்து தமது நடுநிலமை உணர்வைக் காட்டியவர்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டுப் பிரச்சைகள் பற்றியே போதிய அறிவு இல்லாதபோது, இவர்களுக்குச் சிறிதுமே சம்பந்தமில்லாத, அல்லது எதுவுமே அறிந்திராத ஈழப் பிரச்சனை பற்றி ஆதரவு தாருங்கள் என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்?

ஜெயலலிதாவோ அல்லது சுப்ரமணிய சுவாமியோ அல்லது சோ வோ ஈழத்தில் என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்து கொண்டும் எம்மை எதிர்க்க வேண்டும் என்று துடிப்பவர்கள்.ஆனால் இவர்களுக்கு ஈழம் என்ன நிறம் என்றோ அல்லது அங்கு நடப்பது என்னவென்றோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமது சுகபோக வாழ்வுக்கு இடைஞ்சலாக திரைப்படக் கலைஞ்ஞர் சங்கம் நடத்தவிருக்கும் போராட்டம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பணத்தைக் கொண்டுவராத நாள், உல்லாச வாழ்வுக்கு எதிரான நாள். இதற்கு அவர்கள் சம்மதிப்பதற்கு அவர்கள் என்ன சீமானும், அமீருமா???

இன்னும் தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனையில் தமிழர்க்கு எதிரான கொள்கையோடு வாழும் எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். பத்திரிக்கைக் கருத்துக் கணிப்புகள் இதற்கு நல்ல உதாரணம்.

விருப்பமுள்ளவன் உதவி செய்யட்டும், இல்லாதவர்கள் விலகியிருக்கட்டும். அதனால் எமக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. தார்மீக ஆதரவு என்பது உணர்ச்சியால் உந்தப்பட்டு வருவது. ஒருவனை பலாத்காரப்படுத்தி அதனைப் பெற முடியாது.

அவர்களை விடுங்கள், எம்மில் எத்தனை பேர் இன்னும் ஈழத்துக்கும், புலிகளுக்கும், எமது போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த அடிமை வாழ்வை அனுபவித்து வரும் அவர்களுக்கே எமது போராட்ட பிழையாகத் தெரியும்போது, பாவம் தமிழ்நாட்டில் பிழைப்புக்காக மட்டுமே வாழும் அந்த பிற மாநிலத்துக்காரர்கள் என்ன செய்வார்கள் ?!

  • கருத்துக்கள உறவுகள்

:(:):D:lol:

இப்படி எல்லாம் பழமொழி இருக்கா? என்னால் எனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனக்கும் தான் இதை வாசிச்சதில இருந்து ஒரெ சிரிப்பு தான் :D:(

கு.சா

அஜித்தும் அர்ஜுனும் தங்களை எதிர்வரும் நவ1ம் திகதி திரையுலகம் நடாத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விட்டவர்களிடம் தானே இதனை தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் என்ன பத்திரிகை நிருபர்களை கூட்டியா தெரிவித்தார்கள். தற்போது அஜித்தின் "ஏகன்" திரைப்படம் வெளிவர இருப்பதால் அஜித்திற்கு வேண்டாதவர்கள் இதனை ஊதிப் பெரிதுபடுத்தியுள்ளனர். இப்படியான விடயங்களை கண்டு கொள்ளாமல் விடுவதே எமக்கு அழகு. அஜித்தும் அர்ஜுனும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் விடுவதால் எமக்கு ஒரு நட்டமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

என்ன வசம்பு!

அஜித் போன்றவர்கள் பத்திரிகைகளை கூட்டிதான் செய்தி தரவேண்டும் என்பது இல்லையே. தங்கள் வாயில் இருந்து வெளிவரும் ஒரு சிறு மறுப்பே

தமிழகத்தில் ஒரு பரபரப்பு செய்தி ஆகிவிடும் என்பதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல.

இப்போது நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும்....

எப்படியோ இந்திய புலனாய்வுத்துறையின் பல்வேறு சதிவேலைகளையும் மீறி தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான ஆதரவு நிலை என்பது தீவிரமாகிவிட்டது. அதை புலனாய்வுத்துறை உடனடியாக ஒரே இரவில் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. ஆனால் அவர்கள் அந்த ஆதரவு நிலையை மெல்ல மெல்ல பலவீனப்படுத்தவே முயற்சி செய்வார்கள்

அப்படி பலவீனப்படுத்தும் அந்த முயற்சியின் முதல் படி, ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் ஒத்த கருத்து ஏற்படுவதை

தவிர்ப்பது. அப்படி ஒத்த கருத்துடன் தமிழ் சினிமாத்துறையின் போராட்டம் நடைபெறாமல் போவதற்கு துணை நிற்கக்கூடிய நடிக நடிகையர்களின் பட்டியல்

ஏற்கனவே புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதும் புலனாய்வுத்துறையினர் சொல்லித்தந்ததையே நடிகர் அஜித்

போன்றவர்கள் செயற்படுத்துகிறார்கள் என்பதும் நியாயமான சந்தேகம்.

அடுத்து புலனாய்வுத்துறை செய்யப்போவது, இப்படியான போராட்ட எதிர்ப்பாளர்களின் கருத்துக்களை மாற்றுக்கருத்துக்கள் என்ற பெயரில் ஊடகங்களில்

பரபரப்பாக வெளியிடுவது. முக்கியமாக வட இந்திய பத்திரிகைகள் இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கும் வண்ணம்

செய்வார்கள். இது தமிழகத்திலேயே ஈழப்போராட்டம் சம்பந்தமாக நல்ல எதிர்ப்பலைகள் உள்ளன என்று பெருவாரியான இந்திய மக்களை நம்ப வைத்து விடும்.

அப்படியான ஒரு உணர்வு இந்திய மக்களிடம் ஏற்பட்டுவிட்டால் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் எல்லாம் ஏதோ சில புலிஆதரவாளர்களால் ஏற்பாடு

செய்யப்படுவது என்னும் தோற்றத்த்தை ஏற்படுத்தி, தன் ஈழத்தமிழர் அழிப்பு வேலையை தொடர்ந்தும் நடத்தவே இந்திய புலனாய்வுத்துறை திட்டமிடுகிறது.

அப்போது காங்கிரசின் வெளியுறவு, பாதுகாப்பு கொள்கைகள் மீள்பார்வைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளும் அடங்கி விடும். இது தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைக்கும் என்று காங்கிரஸ் மேலிடமும் நம்புகிறது

அஜித் போன்ற அரசியல் அறியாதவர்களின் மறுப்புகள் எல்லாம் ஒரு நீண்ட புலனாய்வு சங்கிலியின் ஒரு சிறுபகுதி அவ்வளவு தான்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரினால பாதிக்கபட்ட சமுதாயம் போரைத்தான் பதிவுசெய்ய முடியும். சினிமா பாடல்களுக்கு கூத்தாடவா முடியும்.

சுவிஸ் பத்திரிகையாளர் இதற்கு என்ன சொல்ல போறாரு??????????

War games

iraq20war20gamesqm6.jpg

Children at Play

A 4-year-old Iraqi child cries as older boys stage a mock execution Monday in Baghdad, Iraq. Children's games are under a heavy influence of ongoing violence in the country. One of the more popular games is the clash between militias and police.

பெப்சி

பாதிக்கப்பட்ட சமுதாயம் தமது தாயகத்தில் நடத்துவதற்கும், இன்னொரு மண்ணில் நடத்துவதற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியவில்லையா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்சி

பாதிக்கப்பட்ட சமுதாயம் தமது தாயகத்தில் நடத்துவதற்கும், இன்னொரு மண்ணில் நடத்துவதற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியவில்லையா??

சிறுவர்களின் விளையாட்டு துப்பாக்கிகள் உலகம் எங்கும் தடை செய்யப்பட்ட ஒன்றா வசம்பு?

அவையும் ஒரே விழைவைத்தானே கொடுக்கும்.

சிறுவர்களின் விளையாட்டு துப்பாக்கிகள் உலகம் எங்கும் தடை செய்யப்பட்ட ஒன்றா வசம்பு?

அவையும் ஒரே விழைவைத்தானே கொடுக்கும்.

சிறுவரின் கையிலிருப்பது விளையாட்டுத் துப்பாக்கியா அல்லது நிஜத்துப்பாக்கியா என்பதல்ல விடயம். பொதுவான மேடையில் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி, மற்றவர்களுக்கு என்ன சேதியை கொண்டு செல்கின்றது என்பது தான் இங்கு பிரைச்சினை. இச்சம்பவம் பற்றி சுவிசில் கண்்டனமாக விமர்சித்த பத்திரிகைகள் தான் அதிகம். அதன் பாதிப்பு இங்குள்ள தமிழர்களால்த் தான் உணர முடியும்.

உங்களுக்குத் தெரியுமா இங்கு சில தமிழ் மாணவர்கள் செய்த பாலியல் வல்லுறவு அசிங்கத்தினால், சில மாநிலங்களில் தமிழருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் சுவிஸ் மக்்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவித்தல் ஒன்று இங்கு ஊரி மாநிலத்திலுள்ள பத்திரிகையிலும் வந்துள்ளது.

வசம்பு... மேலே சொன்னதை நிரூபித்தால் இப்பொதே மொட்டை போட்டு, உங்கள் பெயரை நெத்தியில் எழுதி, படம் எடுத்து, இங்கே கொண்டுவந்து ஒட்டுவேன்......

சிறுவரின் கையிலிருப்பது விளையாட்டுத் துப்பாக்கியா அல்லது நிஜத்துப்பாக்கியா என்பதல்ல விடயம். பொதுவான மேடையில் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி, மற்றவர்களுக்கு என்ன சேதியை கொண்டு செல்கின்றது என்பது தான் இங்கு பிரைச்சினை. இச்சம்பவம் பற்றி சுவிசில் கண்்டனமாக விமர்சித்த பத்திரிகைகள் தான் அதிகம். அதன் பாதிப்பு இங்குள்ள தமிழர்களால்த் தான் உணர முடியும்.

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

உண்மையில் சுவிஸ் ஈழத்துச் சிறுவர்கள் ஆயுதங்களுடன் மேடை நாடகத்தில் தோன்றிய அந்த படங்களை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இது போன்ற நாடகங்கள் எமது விடுதலை போராட்டத்திற்கு ஏற்படுத்தக்கூடிய தீமைகள் பற்றி நண்பர் நாரதர் அந்த தலைப்பின் கீழ் விளக்கமாக எழுதி இருந்தார்.

எமது மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியல் கலாச்சார கட்டமைப்புகளை இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நாம் வாழும் நாட்டின் அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்றவகையில் நமது பரப்புரைகள் வடிவமைக்கபடும் வரை அவற்றின் முழுப்பலனையும் நாம் அடைய முடியாது!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனமாக அவதானிக்கப்படுகிற இனமொன்று சாதூரியமாக நடந்து கொள்ளுறதை விட்டிட்டு பேத்தனமாக நடந்து கொண்டால் பிழைச்சு போகும் எல்லாம்.

உண்மையில மனதார கொள்கை முடிவெடுத்து இத போராட்டம் அது இது எண்டு சொல்லாமல் அஜித் பட திரையரங்கில ஈ மொய்க்க விடுங்கோ பாப்பம். பிறகு அந்த செய்தி அங்கை போய் சேரும் போது.. அவருக்கான எங்கட எதிர்ப்ப காட்டினதா விளங்கும்.

ஆனா அது நடக்காது. அஜித்துக்கும் தெரியும். உவங்கள் என்னத்த சொன்னாலும் ஓடியந்து பாப்பாங்கள் எண்டு.

கடைசியில உங்கட போராட்டம் பிசுபிசுத்து போக

தேனீல எழுதுவான் - புலிகளின் அழைப்பை புறகணித்தனர் மக்கள்..

  • தொடங்கியவர்

இங்கு கனடா டொரண்டோவில் காவல்துறையினர் சிறுவர்களுக்கு விளையாட்டு துப்பாகிகள், ஆயுதங்களை விளையாட கொடுக்கவேண்டாம் என்று அறிவுரை கூறி இருக்கிறார்கள். மேலும் காவல்துறையினர் மூலம் இது சம்மந்தமான பல விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விளையாட்டு ஆயுதங்கள் சிறுவர்கள் மனதில இலகுவாக வன்முறையை தூண்டும் எண்டு கருதப்படுகிது.

காவல்துறையினர் விளையாட்டு துப்பாக்கிகளை, ஆயுதங்களை சிறுவர்களிடம் வாங்கிக்கொண்டு அதற்குப்பதிலாக வேறு விளையாட்டுச் சாமான் கள் கொடுத்து வருகின்றார்கள். மேலும், ஒசாவாவில் விளையாட்டு ஆயுதங்கள் வீடுகளில வைச்சு இருக்கக்கூடாது எண்டு சட்டம் கூட அண்மையில கொண்டுவரப்பட்டது.

ஊர் விளையாட்டுக்கள வெளிநாடுகளில காட்டக்கூடாது எண்டுற அடிப்படை விசயம் கூட பல விசுக்கோத்துகளிற்கு விளங்குவது இல்ல.

யாழில ஆக்களுக்கு பட்டம் வைக்கலாம். துரோகி எண்டு கூப்பிடலாம். ஆவேசமாக் கதைக்கலாம். புலிகளுக்கு ஆயுதங்கள் செய்து அனுப்பலாம் எண்டு அறிவுரை சொல்லலாம். ஆனால்... நீங்கள் குரட்டை விடுற பொந்துகளிண்ட அறைக்கதவை திறந்து வீட்டுக்கு வெளியால வந்து இதையே வீதியில வெளியில செய்தால் உள்ளுக்க போய் கம்பி எண்ண வேண்டியதுதான்.

மற்றவனுக்கு ஒரு உபதேசம். தங்களுக்கு ஒரு நடைமுறை... மரமண்டைகளுக்கு இதெல்லாம் எப்ப எப்பிடி விளங்கப்போகிது. உப்பையும், மூத்திரத்தையும் நினைச்சுக்கொண்டு இருக்கிற மனங்களில தெளிவான சிந்தனைகளுக்கு... ஆரோக்கியமான விவாதங்களுக்கு ஆற்றல் இல்லாமல் இருக்கிறதில ஆச்சரியப்படுறதுக்கு எதுவும் இல்ல.

ஒவ்வொருத்தண்ட தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயுறதவிட்டுப்போட்டு... உங்கட மொகரக்கட்டைகளை கண்ணாடியில பாத்து.. உருப்படியான முறையில தாயக மக்களுக்கு எப்பிடி உதவலாம் எண்டு யோசியுங்கோ.

நேசக்கரம் எண்டு யாழில ஒண்டு இருக்கிது. இஞ்ச கருத்து எழுதுற விசுக்கோத்துகளில எத்தினபேர் எப்பவாவது அதுக்கு ஆதரவு குடுத்து இருக்கீறீங்கள்? உதயம் அவர்கள் வாழும் புலத்தில அண்மையில கூட இதுபற்றி எழுதிப்போட்டார். யாராவது பதில் எழுதினீங்களா? உங்கட பேச்சு எல்லாம் சாப்பிட்டுப்போட்டு குசு விடுறதுக்குத்தான் காணும்.

அஜித்தையும், அர்ச்சுனையும் புறக்கணிச்சுப்போட்டு சிலம்பரசன், விஜய், வடிவேலிண்ட கோமணத்தை பார்த்துக்கொண்டு இருங்கோ. ஒருகாலத்தில அவேளும் ஏதாவது சொல்லுவீனம். அதுக்குபிறகு வேற யாருண்டையாவது வாலை பிடிச்சுக்கொண்டு இருங்கோ.

ஆனாப்பட்ட வை.கோ அவர்களுக்கே துரோகி பட்டம் குடுத்த யாழ்கள விசுக்கோத்துகள் ஒருபோதும் திருந்தபோவதில்லை.

வசம்பு... மேலே சொன்னதை நிரூபித்தால் இப்பொதே மொட்டை போட்டு, உங்கள் பெயரை நெத்தியில் எழுதி, படம் எடுத்து, இங்கே கொண்டுவந்து ஒட்டுவேன்......

நீங்கள் மேலே நான் சொன்னதில் எதை நிருபிக்கச் சொல்லுகின்றீர்கள்?? :( நீங்கள் மொட்டை போட்டு எனது பெயரை எழுதிப் படமெடுத்தால், எனக்குத் தான் அவமானம். :) வேண்டுமென்றால் உங்கள் பெயரையே எழுதுங்களேன். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கோணும் விசுக்கோத்து எண்டால் என்ன?ஆராலும் விளக்கம் தரேலுமோ?

:( அஜீத்தும், அர்ஜூனும் தமிழர்கள் அல்லாதவர்கள், தமிழ்நாட்டில் வழர்ந்தவர்கள். அங்கே பிழைப்பு நடத்துபவர்கள் அவ்வளவுதான். இதற்கு நல்ல உதாரணம் ஒக்கணேக்கல் பிரச்சனையில் விலகியே இருந்து தமது நடுநிலமை உணர்வைக் காட்டியவர்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டுப் பிரச்சைகள் பற்றியே போதிய அறிவு இல்லாதபோது, இவர்களுக்குச் சிறிதுமே சம்பந்தமில்லாத, அல்லது எதுவுமே அறிந்திராத ஈழப் பிரச்சனை பற்றி ஆதரவு தாருங்கள் என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்?

ஜெயலலிதாவோ அல்லது சுப்ரமணிய சுவாமியோ அல்லது சோ வோ ஈழத்தில் என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்து கொண்டும் எம்மை எதிர்க்க வேண்டும் என்று துடிப்பவர்கள்.ஆனால் இவர்களுக்கு ஈழம் என்ன நிறம் என்றோ அல்லது அங்கு நடப்பது என்னவென்றோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமது சுகபோக வாழ்வுக்கு இடைஞ்சலாக திரைப்படக் கலைஞ்ஞர் சங்கம் நடத்தவிருக்கும் போராட்டம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பணத்தைக் கொண்டுவராத நாள், உல்லாச வாழ்வுக்கு எதிரான நாள். இதற்கு அவர்கள் சம்மதிப்பதற்கு அவர்கள் என்ன சீமானும், அமீருமா???

இன்னும் தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனையில் தமிழர்க்கு எதிரான கொள்கையோடு வாழும் எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். பத்திரிக்கைக் கருத்துக் கணிப்புகள் இதற்கு நல்ல உதாரணம்.

விருப்பமுள்ளவன் உதவி செய்யட்டும், இல்லாதவர்கள் விலகியிருக்கட்டும். அதனால் எமக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. தார்மீக ஆதரவு என்பது உணர்ச்சியால் உந்தப்பட்டு வருவது. ஒருவனை பலாத்காரப்படுத்தி அதனைப் பெற முடியாது.

அவர்களை விடுங்கள், எம்மில் எத்தனை பேர் இன்னும் ஈழத்துக்கும், புலிகளுக்கும், எமது போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த அடிமை வாழ்வை அனுபவித்து வரும் அவர்களுக்கே எமது போராட்ட பிழையாகத் தெரியும்போது, பாவம் தமிழ்நாட்டில் பிழைப்புக்காக மட்டுமே வாழும் அந்த பிற மாநிலத்துக்காரர்கள் என்ன செய்வார்கள் ?!

மிக மிக சரியான, யதார்த்ததை, தாற்பரியத்தை புரிந்த வார்த்தைகள்

நான் சொன்ன 'மாற்று கருத்து' என்னும் சொல்லில் சிலர் தொங்கி கொண்டு நிற்பது புரிகின்றது.. பாவம் வானத்திற்கு கீழ் உள்ள எல்லாமும், எல்லாரும் தாம் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்னும் அவாவில் உள்ளார்கள். ஆனால் அப்படி நடக்குது இல்லையே என்பதில் அவர்களுக்கு கோபம் போலும், அது தான் மாற்று கருத்து என்பதே துரோக கருத்து என பார்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரண்டு விடயம் புரியவில்லை

1. நெப்போலியன் நாடகத்தை பிரான்ஸில் தான் நடத்த வேணுமா?( நாடக்த்தில் இலங்கை நிலவரத்தைதானே கூறுகிறார்கள்?)

2.இந்த நாடக்த்திற்கும் அஜித்திற்கும் என்ன சம்பந்தம்(ஆராவது நடுவு நிலைமையா விளங்கப்படுத்துங்கோவன்!)

  • கருத்துக்கள உறவுகள்

2.இந்த நாடக்த்திற்கும் அஜித்திற்கும் என்ன சம்பந்தம்(ஆராவது நடுவு நிலைமையா விளங்கப்படுத்துங்கோவன்!)

அஜீத் ஒரு விசுக்கோத்து..! இந்த நாடகத்தை நடத்தினவையும் விசுக்கோத்துகள். அதுதான் சம்பந்தம்...! :(

தெரியாமல் கேக்கிறேன் இனப்போரில் என்னோய் மாற்றுக்கருத்து? கண்டறியாத மாற்றுக்கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கோணும் விசுக்கோத்து எண்டால் என்ன?ஆராலும் விளக்கம் தரேலுமோ?

விசுக்கோத்து - இளகிய பப்படம் ( நன்றாக பொரிக்க விட்டும் )

விசிக்கோத்து எண்ட சொல்ல பயன்படுத்துபவர்களின் வயசு எப்பிடியும் 35 - 50 க்குள்ள இருக்கும்

  • தொடங்கியவர்

இங்குள்ள சிலர் மற்றவனிண்ட **** விட்டுட்டு ஏதாவது உருப்படியாக கருத்தாடல் செய்ய முயற்சித்தால் நல்லது. கருத்தாடல் செய்பவருக்கு 10 வயசா இருவது வயசா அல்லது என்பது வயசா எண்டு ஆராய்ச்சி செய்யுறது தாயக போராட்டத்துக்கு வலுச்சேர்க்கப் போவதில்லை.

தெரியாமல் கேக்கிறேன் இனப்போரில் என்னோய் மாற்றுக்கருத்து? கண்டறியாத மாற்றுக்கருத்து.

மாற்றுக்கருத்து எண்டால் சும்மா ஒரு எதிர்கருத்து , ஆக்கபூர்வமாக இருக்கவேண்டியதல்ல, குசும்புதனமாக சிலவேளை இருக்கும்

ஒரு கருத்தயே மீண்டும் மீண்டும் கூறி , எங்கேயாவது கொண்டே செருக முயல்வார்கள்

, துரோகி பட்டம் கொடுகிறார்கள் எண்டு புலம்புவது, ஏதாவது முயற்சி செய்தால் அவர்களுக்கு பொறுக்க முடியாது,கோளாறு சொல்லிக்கோண்டிருப்பார்கள் , என்ன செய்யவேண்டும் எண்டும் சொல்லமாட்டார்கள் (உ_ம் : இந்த கட்டுரை (புசத்தல்))

  • கருத்துக்கள உறவுகள்

விசிக்கோத்து எண்ட சொல்ல பயன்படுத்துபவர்களின் வயசு எப்பிடியும் 35 - 50 க்குள்ள இருக்கும்

அதை வைச்சு கலியாணமோ கட்டப் போறியள் .

கருத்தாடல் செய்பவருக்கு 10 வயசா இருவது வயசா அல்லது என்பது வயசா எண்டு ஆராய்ச்சி

இதுக்கேலாம் ஆராய்ச்சியா, தேவையே இல்ல :(:) , கிட்டவே வரமாட்டார்கள், எல்லாருக்கும் தெரியும் எப்பிடி இருக்கும் எண்டு

அதை வைச்சு கலியாணமோ கட்டப் போறியள் .

சும்மா சொன்னன் , அத போய் நீங்க...........

Edited by பல்லவன்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொன்னன் , அத போய் நீங்க...........

நானும் , சும்மா தான் சொன்னனான் , பல்லவன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.