Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்

Featured Replies

நான் என் தேசத்தில் போர் அதனால் என் உறவுகள் வாழ முடியவில்லை என் வாழ்க்கை தான் போனது போயிட்டுது எனியாவது நான் வெளிநாட்டுக்குப் போய் பெட்டை ஒன்றைக் கட்டி.. அதன் மூலம் சந்ததி பெருவிருத்தி செய்து நான் வாழும் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் அதனை என் உழைப்பால் முன்னேற்றலாம் என்று வந்திருக்கிறேன்.. என்று சொல்ல முடியாது.

நான் என் தேசத்தின் எதிர்காலத்தில் அதற்கு எவ்வாறு என்னால் உபயோகமாக சேவை செய்ய முடியும் என்ற ரீதியில் இங்கு வாழ்கிறேனே தவிர.. வெள்ளையனிடம் என் தேசத்தை.. அதன் விடுதலைப் போராட்டத்தை.. அதை வேண்டி நிற்கும் மக்களைக் காட்டிக் கொடுத்து.. எனது வாழ்க்கைதான் போச்சுது.. என் பிள்ளையாவது குண்டுச் சத்தம் கேட்காமல் வாழட்டும் என்று வரவில்லை.

எமது மக்கள் சொந்த பூமியில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போது அவர்களுடன் கூட வாழ்ந்து அவர்களின் தேவைகளை குறைவின்றி நிவர்த்தி செய்ய எம்மாலான பட்டறிவைப் பயன்படுத்த அறிவைப் பெற்றுக் கொள்ள முனைகின்றோமே தவிர.. எமது தேசத்துக்கு வெளியில் எமக்கு சுதந்திர வாழ்வில்லை என்பதில் நாம் தெளிவாயே இருக்கின்றோம்..! :icon_mrgreen:

சரி நெடுக்கு

உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். எப்போது உங்கள் பட்டறிவுப் படிப்பை முடிச்சு. அதன் மூலம் நாட்டுக்குச் சேவையாற்ற செல்லப் போகின்றீர்கள். அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அதனால் மற்றயவர்களும் அறிந்து உங்களைப் போல் சேவையாற்ற முன் வரலாமல்லவா!!

  • Replies 152
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரி நெடுக்கு

உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். எப்போது உங்கள் பட்டறிவுப் படிப்பை முடிச்சு. அதன் மூலம் நாட்டுக்குச் சேவையாற்ற செல்லப் போகின்றீர்கள். அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அதனால் மற்றயவர்களும் அறிந்து உங்களைப் போல் சேவையாற்ற முன் வரலாமல்லவா!!

பட்டறிவு தேறின உடன போறதுதான். என் தேசத்தில் படிந்த இரத்தக்கறைக்குப் பயந்து நான் ஓடி ஒளிக்கமாட்டன். எத்தனையோ கரும்புலிகள் தங்கள் வாழ்க்கையையே முழுமையாக மக்களுக்காக அர்ப்பணிக்கும் போது அற்பம்.. எங்கள் வாழ்வில் ஒரு பகுதியை என்றாலும் அர்ப்பணிக்க முன் வர வேண்டும். :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

பட்டறிவு தேறிய பின் என்பது எனக்குப் புரியவில்லை. படிப்பதற்கு ஒரு எல்லையில்லை. வாழ்நாள் முழுக்க படித்துக் கொண்டேயிருக்கலாம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் ஒரு எல்லையை தீர்மானித்திருப்பீர்கள். அந்த எல்லை என்ன. அப்படிப்பட்ட படிப்பு எப்போ முடிகின்றது?? இது தெரிந்தால் தானே உங்கள் வார்த்தையின் உண்மைகளையும் புரிந்து கொள்ள முடியும். மற்றும்படி "படித்தேன்", "படித்துக் கொண்டிருக்கின்றேன்", "படிப்பேன்" என்பதெல்லாம் எல்லோராலும் எழுத முடிந்த ஒன்றே.

இவ்வளவு விபரமா விடுப்புக் கேட்கிறீங்களே.. எங்களோடு இணைந்து தாயகத்துக்கு வரத்தயாராக இருக்கிறீர்களா என்று சொல்லுங்கள். மிச்சம் மீது தேவை என்றால் சொல்லலாம். நீங்கள் விடுப்புக் கேட்டுவிட்டு.. சுவிஸ்லாந்தில் பதுங்கி இருந்திடுவீர்கள்.. நாங்கள் மக்களுக்காக தொண்டு செய்ய விரும்பி.. உங்களிடம் சொல்லிவிட்டு கட்டுநாயக்காவில் இறங்கவே ஒட்டுக்குழுவினர் சகிதம்.. சிறீலங்காப் படையினர் காத்திருப்பர் வரவேற்க. எமக்கும் தற்பாதுகாப்பு அவசியம். இங்கும் பல ஒட்டுக்குழுவினரும்.. அரச உளவாளிகளும் அங்கத்தவர்களாக இருக்கலாம் இல்லையா..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

இவ்வளவு விபரமா விடுப்புக் கேட்கிறீங்களே.. எங்களோடு இணைந்து தாயகத்துக்கு வரத்தயாராக இருக்கிறீர்களா என்று சொல்லுங்கள். மிச்சம் மீது தேவை என்றால் சொல்லலாம். நீங்கள் விடுப்புக் கேட்டுவிட்டு.. சுவிஸ்லாந்தில் பதுங்கி இருந்திடுவீர்கள்.. நாங்கள் மக்களுக்காக தொண்டு செய்ய விரும்பி.. உங்களிடம் சொல்லிவிட்டு கட்டுநாயக்காவில் இறங்கவே ஒட்டுக்குழுவினர் சகிதம்.. சிறீலங்காப் படையினர் காத்திருப்பர் வரவேற்க. எமக்கும் தற்பாதுகாப்பு அவசியம். இங்கும் பல ஒட்டுக்குழுவினரும்.. அரச உளவாளிகளும் அங்கத்தவர்களாக இருக்கலாம் இல்லையா..! :rolleyes:

உங்களை நான் விடுப்புப் புடுங்கவில்லை. உங்கள் உண்மையான முகம் என்வென்பதை நானும் மற்றவர்களும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்துள்ளது அல்லவா. நீங்கள் ஒரு ஆண்டைக் குறிப்பிட்டு அந்த ஆண்டு படிப்பு முடிகின்றது அதன் பின் தாயகத்தில் சேவையாற்றப் போகின்றேன் என்று கூறியிருந்தால் உங்கள் வார்த்தையில் உண்மை இருந்திருக்கும். நீங்கள் என்ன திகதி தாயகம் செல்கின்றீர்கள் என்றா நான் கேட்டேன். உங்கள் குட்டு உடைபடுவதை உணர்ந்து எத்தனை நொண்டிச் சாட்டுகளை வைக்கின்றீர்கள். உண்மையான சேவை மனப்பாண்மை உள்ளவர் எப்போது வேண்டுமென்றாலும் செல்லலாம். என்னையும் வருவீர்களா என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளீர்கள். ஏன் என்னையும் உங்கள் தம்பட்டத்ிற்கு துணை சேர்க்கவா?? அதற்கு உங்களைப் போல் நானும் இங்கு தம்பட்டம் அடித்து மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொதுவாகவே "செய்பவர்கள் சொல்வதில்லை", "சொல்பவர்கள் செய்வதில்லை". :lol: இது உங்களுக்கும் நன்கு பொருந்துகின்றது. :icon_mrgreen:

இந்த விடயத்தில் நிழலியின் வார்த்தையைப் பாராட்டலாம். அவர் நினைத்திருந்தால் கூட உங்களைப் போல் வாய்ச்சவடால் விட்டிருக்கலாம். ஆனால் அவர் தனது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்தே தான் வெளிநாடு வந்ததாக உண்மையை எழுதினார்.

http://www.sinhalajukebox.org/cgi-bin/song...45&compose=

இங்கே உள்ள இணைப்பில் 1வது பாடல் அது.

பாடகர்: ஆத்மா லியனகே

சிங்களத்தில்:

அஜீவன், அண்ணா எனக்கு மதுர வசந்தே எண்டுற சிங்களப்பாடல் மிகவும் பிடிக்கும். சூப்பரான ஒரு பாடல். இணையத்தில கனகாலமா தேடிப்பாத்தன். கிடைக்கவில்ல. உங்களிட்ட அந்தப்பாடல் இருந்தால் கேட்கிறதுக்கு இணைச்சுவிடுவீங்களோ? மதுர வசந்தே.. மல்வல்... எண்டு ஆரம்பிக்கும். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen:நீங்கள் சித்தனா அல்லது பித்தனா?? இப்ப தெரிந்து கொண்டு என்ன "சிங்" "சொய்ங்" போடப் போகின்றீர்களா?? :rolleyes::lol:

முன்பே தெரிந்திருந்தால் எனக்கு நேற்று ஒர் இடத்தில் அரித்தது(கடித்தது) எங்கே என்று கேட்டு உங்களை டெஸ்டு பண்ணி பாத்திருப்பேன், உங்களுக்கு உண்மையிலேயே எல்லாம் தெரியுமா என்று. :D:D:D

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

ம்ம்ம்... 33 வயதெல்லாம் இப்போது 'வயது போனவர்கள்' பட்டியலில் சேர்த்தாச்சா?

30 வயதுக்கு மேற்பட்டா ஈழத்தமிழர்கள் எல்லோரும் எம் போராட்டம் ஆயுதப்போராட்டமாக ஆரம்பித்த காலத்தில் இருந்து அதற்கு ஒரு சாட்சியாக இருப்பவர்கள். இயக்கங்கள் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்று வரை போராட்டத்தினை அவதானிப்பவர்கள் அல்லது அதன் பங்காளிகளாக இருந்தவர்கள்/இருப்பவர்கள். அதனால் அனுபம் அதிகம் அது சொல்லும் பாடங்களும் அதிகம்

உங்களின் வயது சிறிதென்றால், உங்களின் அப்பா அம்மாவிடம் கேட்டு பாருங்கள்... அவர்களில் அனேகர் ஈழ போராட்டம் தொடர்பாக பல ஆழமான கருத்துகளை இலகுவாக சொல்வார்கள்.

Edited by NIZHALI

முன்பே தெரிந்திருந்தால் எனக்கு நேற்று ஒர் இடத்தில் அரித்தது(கடித்தது) எங்கே என்று கேட்டு உங்களை டெஸ்டு பண்ணி பாத்திருப்பேன், உங்களுக்கு உண்மையிலேயே எல்லாம் தெரியுமா என்று. :rolleyes::lol::D

:icon_mrgreen:நல்ல வேளை உங்கள் அரிப்புகளுக்கெல்லாம் நான் தான் காரணமென்று சொல்லாமல் விட்டீர்கள். :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen:நல்ல வேளை உங்கள் அரிப்புகளுக்கெல்லாம் நான் தான் காரணமென்று சொல்லாமல் விட்டீர்கள். :D:rolleyes:

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு அது தெரியாமல் இருக்குமா? இப்படி டபுள் மீனிங்கில் எடுக்ககூடியவர் என்பதால்தான் அடைப்பு குறிக்குள் கடி என போட்டேன், :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் குடாவில் மூன்று காலப் பகுதிகளிலும் இருந்துள்ளேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலம், அரச கட்டுப்பாட்டுக் காலம், சமாதான காலம். இம் மூன்று காலங்களிலும் வித்தியாசமான கட்டுப்பாடுகள் இருந்தன. கேள்விகேட்ட பலருக்கு நடந்ததை இங்கு சொன்னால் வெட்டி விடுவீனம் :lol: . உதாரணத்திற்கு ஒன்று. சமாதான காலத்திலே அரசியல் பணிக்காக போராளிகள் யாழ் வந்த காலமது. எமது பள்ளிக்கூட உயர்தர வகுப்பு பெடியளையும் அரசியல் துறை சந்திக்க விரும்பி, அமுதாப் அண்ணா (இப்போ சாள்ஸ் அன்டனி சிறப்புப் படைத்தளபதியாக இருக்கிறார், நன்கு பேசக்கூடியவர்), லோரன்ஸ் அண்ணா தலைமையில ஒரு குழுவாக வேரூர் இடத்தில் சந்தித்தார்கள். அப்போது குழுவாக பிரித்து எல்லோரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொழுது எனது குழுவிலிருந்த எனது இரண்டு நண்பர்கள் மிகச் சிறந்த, சாதுரியமான இரு கேள்விகளை, கலந்துரையாடலை நடத்தியவரைக் கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த இருவரையும் தனியக் கொண்டுபோய் வெருட்டு வெருட்டு எண்டு வெருட்டினார்கள். இங்கு இருக்கும் கணணி போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள். போராட்டம் 80, 90 2000 என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஆரம்பித்தது வேறு விதம், நடந்தது வேறுவிதம், இப்போது வேறுவிதம். வேறு ஒரு திரியிலும் இந்தக் கேள்வியக் கேட்டனான், உங்களில எத்தின பேர் வன்னிக்கு பொய் ஆயுதமெடுத்து அடிபடத் தயார்? இப்ப அங்க இருக்கிற நிலையில காசு பணம் தேவையில்லை, அனுப்பினாலும் கிடைக்காது, ஆயுதங்களும் கனக்க வச்சிருக்கீனம், ஆக்கள் தான் தேவை. இங்க நிண்டுகொண்டு ஆரோ ரெண்டு பேர் எதையோ பற்றிப் பாட எதையோ சொல்லி கருத்து எழுதுகிறீர்கள். :rolleyes: நான் 1990-2006 காலப் பகுதியில் யாழ்குடாவில் இருந்தேன், அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கூறுகிறேன். எனது கருத்துப்படி அக்கருத்துக்களே இப்போது மாறியிருக்கும். நீங்கள் யாராவது 80, 90 களில் யாழில் இருந்துவிட்டு இப்போதும் மக்களின் மனநிலை, செயற்பாடு எல்லாம் அப்பிடியே இருக்கும் என நினைப்பது அறிவீனம். :icon_mrgreen:

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

:icon_mrgreen:அட கைக்குழந்தை ஒண்டு கருத்துச் சொல்லுது. அது தான் ஒண்ணும் புரியவில்லை. செல்லம் முதலிலே வாயிலை இருக்கிற சூப்பியை ஏடுத்து விட்டு கதையுங்கோ. அப்பவாவது ஏதாவது புரியுதா பார்ப்பம். :lol::D

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு அது தெரியாமல் இருக்குமா? இப்படி டபுள் மீனிங்கில் எடுக்ககூடியவர் என்பதால்தான் அடைப்பு குறிக்குள் கடி என போட்டேன், :D

:rolleyes:அட நானும் உங்க மீனிங்கில தான் பதில் தந்தனான். நீங்கள் ஏன் அதை டபுள் மீனிங்காய் பார்க்கிறீங்க. உங்களுக்கு எதையும் ஒழுங்காய் பார்க்க வராதோ?? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நான் விடுப்புப் புடுங்கவில்லை. உங்கள் உண்மையான முகம் என்வென்பதை நானும் மற்றவர்களும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்துள்ளது அல்லவா. நீங்கள் ஒரு ஆண்டைக் குறிப்பிட்டு அந்த ஆண்டு படிப்பு முடிகின்றது அதன் பின் தாயகத்தில் சேவையாற்றப் போகின்றேன் என்று கூறியிருந்தால் உங்கள் வார்த்தையில் உண்மை இருந்திருக்கும். நீங்கள் என்ன திகதி தாயகம் செல்கின்றீர்கள் என்றா நான் கேட்டேன். உங்கள் குட்டு உடைபடுவதை உணர்ந்து எத்தனை நொண்டிச் சாட்டுகளை வைக்கின்றீர்கள். உண்மையான சேவை மனப்பாண்மை உள்ளவர் எப்போது வேண்டுமென்றாலும் செல்லலாம். என்னையும் வருவீர்களா என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளீர்கள். ஏன் என்னையும் உங்கள் தம்பட்டத்ிற்கு துணை சேர்க்கவா?? அதற்கு உங்களைப் போல் நானும் இங்கு தம்பட்டம் அடித்து மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொதுவாகவே "செய்பவர்கள் சொல்வதில்லை", "சொல்பவர்கள் செய்வதில்லை". :rolleyes: இது உங்களுக்கும் நன்கு பொருந்துகின்றது. :icon_mrgreen:

இந்த விடயத்தில் நிழலியின் வார்த்தையைப் பாராட்டலாம். அவர் நினைத்திருந்தால் கூட உங்களைப் போல் வாய்ச்சவடால் விட்டிருக்கலாம். ஆனால் அவர் தனது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்தே தான் வெளிநாடு வந்ததாக உண்மையை எழுதினார்.

உங்களுக்கோ அல்லது நிழலிக்கோ நான் எனது சொந்த வாழ்க்கையில் உள்ள நிகழ்ச்சித்திட்டங்களை அறிவித்து விளம்பரத் தேடிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் உங்கள் போன்றோரிடம் இருந்து எழக்கூடிய ஆபத்துக்களையும் வலிய விலைக்கு வாங்க வேண்டிய தேவையும் இல்லை. என்னை உங்களுக்கு இனங்காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

வாய்ச்சவாடல்.. இயலாதன்.. குட்டு உடைத்தல்.. இப்படி எம் தமிழர்களின் இயலாமையில் வெளிப்படும் வார்த்தைகளை நான் உங்கள் போன்றவர்களிடம் கேட்டுக் களைத்துப் போய்விட்டேன்.

இப்ப வரைக்கும்.. எனது தேசத்தின் மீது எனது கருசணையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தும்.. நீங்கள் ஏதோ சுவிஸ்லாந்தின் பூர்வீகக் குடிமகன் என்ற தோறனையில் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். எனது நிகழ்ச்சித்திட்டங்களை சொல்லக் கேட்கிறீர்கள். இத்தனைக்கு வசம்பு என்ற பெயரில் எழுதப்படும் கருத்துக்களைத் தவிர நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. உண்மையில் நீங்கள் சுவிஸில் இருந்துதானா வருகிறீர்கள் என்ற எதுவுமே தெரியாத ஒரு போலிச் சூழலுக்குள் உங்களை வைத்துக் கொண்டு என்னிடம் உண்மையை.. அரிச்சந்திர காண்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்.

அதற்கு வசம்பண்ண.. ஏமாற யாராவது இருந்தா இருந்தி வைச்சுக் கருத்தெழுதுங்கோ.. அவன் கேணத்தனமா உங்களோடு வீராப்பென்று சொந்த சோகக்கதையை அள்ளிவிடுவான்.

நீங்கள் வெறும் கருத்தாளன். அந்த எல்லையில் நானும் வெறும் கருத்தாளன். ஊரில் சொல்வார்கள்.. கரடி சண்டை இடும் போது எதிராளியின் பலத்துக்கு நிகராக தன்னை பாவனை செய்து கொண்டுதான் சண்டை இடுமாம். சாச்சா.. அந்தக் கரடிக்கே அவ்வளவு புத்தி இருக்கேக்க.. கதைவிட்டு கதையளந்து.. கணணியோட உங்கள் பிரச்சாரம் முடிந்திட்டுது என்று மகிழ என்மீது.. வாய்ச்சவாடல்.. குட்டு உடைந்தது போன்ற இயலாமைக்குரிய பதங்களை தெளிக்கும் போதே உங்களின் நியாயம் புரிகிறது வசம்பண்ணன். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் குடாவில் மூன்று காலப் பகுதிகளிலும் இருந்துள்ளேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலம், அரச கட்டுப்பாட்டுக் காலம், சமாதான காலம். இம் மூன்று காலங்களிலும் வித்தியாசமான கட்டுப்பாடுகள் இருந்தன. கேள்விகேட்ட பலருக்கு நடந்ததை இங்கு சொன்னால் வெட்டி விடுவீனம் :lol: . உதாரணத்திற்கு ஒன்று. சமாதான காலத்திலே அரசியல் பணிக்காக போராளிகள் யாழ் வந்த காலமது. எமது பள்ளிக்கூட உயர்தர வகுப்பு பெடியளையும் அரசியல் துறை சந்திக்க விரும்பி, அமுதாப் அண்ணா (இப்போ சாள்ஸ் அன்டனி சிறப்புப் படைத்தளபதியாக இருக்கிறார், நன்கு பேசக்கூடியவர்), லோரன்ஸ் அண்ணா தலைமையில ஒரு குழுவாக வேரூர் இடத்தில் சந்தித்தார்கள். அப்போது குழுவாக பிரித்து எல்லோரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொழுது எனது குழுவிலிருந்த எனது இரண்டு நண்பர்கள் மிகச் சிறந்த, சாதுரியமான இரு கேள்விகளை, கலந்துரையாடலை நடத்தியவரைக் கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த இருவரையும் தனியக் கொண்டுபோய் வெருட்டு வெருட்டு எண்டு வெருட்டினார்கள். இங்கு இருக்கும் கணணி போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள். போராட்டம் 80, 90 2000 என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஆரம்பித்தது வேறு விதம், நடந்தது வேறுவிதம், இப்போது வேறுவிதம். வேறு ஒரு திரியிலும் இந்தக் கேள்வியக் கேட்டனான், உங்களில எத்தின பேர் வன்னிக்கு பொய் ஆயுதமெடுத்து அடிபடத் தயார்? இப்ப அங்க இருக்கிற நிலையில காசு பணம் தேவையில்லை, அனுப்பினாலும் கிடைக்காது, ஆயுதங்களும் கனக்க வச்சிருக்கீனம், ஆக்கள் தான் தேவை. இங்க நிண்டுகொண்டு ஆரோ ரெண்டு பேர் எதையோ பற்றிப் பாட எதையோ சொல்லி கருத்து எழுதுகிறீர்கள். :rolleyes: நான் 1990-2006 காலப் பகுதியில் யாழ்குடாவில் இருந்தேன், அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கூறுகிறேன். எனது கருத்துப்படி அக்கருத்துக்களே இப்போது மாறியிருக்கும். நீங்கள் யாராவது 80, 90 களில் யாழில் இருந்துவிட்டு இப்போதும் மக்களின் மனநிலை, செயற்பாடு எல்லாம் அப்பிடியே இருக்கும் என நினைப்பது அறிவீனம். :icon_mrgreen:

நானும் 1990 இல் இருந்து 2000க்கு அப்பாலும் ஊரில தான் வாழந்தனான் பாருங்கோ. இன்னும் எனது உறவினர்கள் பலரும் ஊரில் தான் வாழினம். அவர்களோடு வாரத்தில் கதைத்துத்தான் கொள்கிறேன். அவர்கள் சொல்வதெல்லாம் முன்னர் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசி இணைப்பை வழங்க மறுத்தார்கள் கதைக்க முடியல்ல.. இப்ப யாழ்ப்பாணத்தில ரெலிபோன் இருக்குது.. ஆனால் கதைக்க முடியாது. காரணம் எல்லாம் ஒட்டுக்கேட்கப்படுகுது என்று. வன்னிக்கு இணைப்பை வழங்கிட்டு.. அதையும் ஒட்டுக்கேட்கினம். அதுவும் ஒரு அரசு செய்கிறது. இதுதான் அடக்குமுறை. எம்மின மக்களில் பலர் இராணுவ ஒடுக்குமுறையின் தன்மையை உணர்ந்திருக்கும் அதேவேளை.. இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் பொருளாதார நலிவடைந்த மக்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள அவர்களுக்கு ஆசையூட்டி வருவதும் தெரிந்த விடயமே. அதற்குப் பலியான மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அது பொதுவாக உலகில் ஆக்கிரமிப்பாளர்கள் கையாளும் தந்திரமே.

நானும் பல்வேறு காலக்கட்டங்களில் பல கேள்விகளைக் கேட்டனான் தான் பாருங்கோ. ஆனால் என்னை ஒருத்தரும் தனியக் கூட்டி வைச்சு வெருட்டவும் இல்ல. அல்லது பாஸ் ஒபீஸில மறிச்சு வைச்சுக் கேள்வி கேட்கவும் இல்ல. கேள்வி கேட்கப்பட்ட பொதுமக்கள் வெருட்டப்படேல்ல. ஆனால்.. சந்தேகத்துக்குரிய வகையில் நடந்தவர்கள் விசாரிக்கப்படுவது வழமை. அது போராட்ட காலத்துக்கு அவசியமும் கூட. நான் அதிகம் கேள்வி கேட்கப்பட்டது.. வவுனியாவில் நின்ற ஒட்டுக்குழுவினராலும்.. ஜோசப் படைமுகாம் அதிகாரிகளாலும் தான்.

என்னால் அவர்களிடம் ஒரு கேள்வியைத்தானும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. கேட்டால் ஒட்டுக்குழுவினர் என்னை வவுனியாக் காட்டுக்குள் மரங்களுக்கு உரமாக்கி இருப்பர். குறிப்பாக புளொட் எனும் சிங்களக் கூலிக்கு மாரடிக்கும் ஒட்டுக்குழுவினர். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

ஏன்னா அவர்களே போராடப் போறம் என்று ஆயுதம் தூக்கி.. பெட்டையளுக்கு கலேர்ஸ் காட்டிட்டு.. அவ்வளவையையும் இழுத்துக் கொண்டு கொள்ளையடிச்ச காசுகளில சுவிஸ்லாந்து.. ஜேர்மனி.. கனடா... லண்டன்... போன்ற நாடுகளுக்கு ஆரம்பத்தில் பறக்க ஆரம்பித்திருந்தார்கள். இப்போ அவர்கள் தான் அதிகம் உங்க சாமத்தியச் சடங்குகள் செய்து கொண்டு.. புளித்துப்போன.. புலி எதிர்ப்பு சன நாய் அகம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். :icon_mrgreen:

நான் ஒரு காலத்தில் சகோதர யுத்தம் என்பதைக் கேட்டு வரத்தப்பட்டனான். ஆனால் இவர்களையெல்லாம் குரங்கு கூட சகோதரரா நினைக்காது. அந்தளவுக்கு கொண்ட கொள்கைக்கே மோசம் செய்தவர்கள். :rolleyes:

(மாற்றுக்குழுக்களின் தலைமைகளின் தவறான வழிநடத்தலில் திசைமாறிப் போனோம் என்று ஒத்துக்கொண்டு திருந்தி தமிழ் மக்களின் கொள்கையோடு அதில் ஒரு பிடிப்போடு வாழும் மக்களும் உள்ளனர். அவர்களை எப்போதும் நாம் மதிக்க வேண்டும்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணை, இப்போது எனக்கு பல்கலைக்கழக பரீட்சைகள் இருப்பதால் அதிகம் எழுத முடியாதுள்ளது, முடிந்த பின்னர் நிச்சயம் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அமுதாப் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தாரே தவிர, யாழ்ப்பாணத்துக்கு அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

அமுதாப் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தாரே தவிர, யாழ்ப்பாணத்துக்கு அல்ல..

அமுதாப் யாழ் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தார் என நான் எங்கும் கூறவில்லை :icon_mrgreen: . இளம்பரிதி தான் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார். ஆனால், அமுதாப், லோரன்ஸ், பாப்பா போன்றவர்களும் மாணவர் அமைப்பிற்கு தயா, ஆதவன், ஆதி போன்றவர்களும் பிரச்சாரப் பணி போன்றவரிற்காக வந்து போனார்கள். பாப்பா பின்னர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக வன்னியில் இருந்தார். ஆதி வடமராச்சி கிழக்கிலே சுடப்பட்டு வீரமரண மடைந்ததாக அறிந்தேன். அதுசரி, உங்களுக்கு அமுதாப் அண்ணய நல்லாத் தெரியுமோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ எனக்கு நல்லாதெரியும்! இந்த இந்தி படங்கள்ல நடிச்சவர்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது குழுவாக பிரித்து எல்லோரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொழுது எனது குழுவிலிருந்த எனது இரண்டு நண்பர்கள் மிகச் சிறந்த, சாதுரியமான இரு கேள்விகளை, கலந்துரையாடலை நடத்தியவரைக் கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த இருவரையும் தனியக் கொண்டுபோய் வெருட்டு வெருட்டு எண்டு வெருட்டினார்கள்.

தும்பளையான்.. உங்கள் சக மாணவர்கள் கேட்ட அந்தக் கேள்விகள் என்ன? நிர்வாகம் வெட்டாத முறையில் எழுதுங்கள். நீங்கள் அதை எழுதினால்தான் உங்கள் கருத்தின் ஆழம் மற்றவர்களையும் சென்றடையும்.

நான் 1990-2006 காலப் பகுதியில் யாழ்குடாவில் இருந்தேன், அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கூறுகிறேன். எனது கருத்துப்படி அக்கருத்துக்களே இப்போது மாறியிருக்கும். நீங்கள் யாராவது 80, 90 களில் யாழில் இருந்துவிட்டு இப்போதும் மக்களின் மனநிலை, செயற்பாடு எல்லாம் அப்பிடியே இருக்கும் என நினைப்பது அறிவீனம். :wub:

Thumpalayan,

எனது தனிப்பட்ட கருத்து இது, இந்த காலப்பகுதியில் வாழ்ந்தவன் எண்ட வகையிலும் , எனது சிந்தனைக்கு எட்டிய வகையிலும், மக்களது மனநிலை, செயற்பாடு என்றுமே மாறவில்லை, மனித இயல்பு நான் தப்பவேண்டும், நல்லாய் இருக்க வேண்டும், இதை யாருமே குறை கூறமுடியாது, குறிப்பிட்ட சிலருக்கு தான் தம்மை அர்பணிக்கும் இயல்பு இருக்கும்.

உதாரணமாக, 90 களில் உதவி கேட்டபோது , எம்மில் எத்தனை பேர் மனமுவந்து கொடுத்தோம், எனது குடும்பம் உட்பட, ஆனால் ஏதாவது சம்பவம் இடம் பெற்றால் முதலாவதாய் பேப்பர் வாங்கி வா எண்டு அனுப்புவார்கள். மொத்தத்தில் குளிர்காய நினைப்பவர்கள் அதிகம், நான் உட்பட, குறை கூறமுடியாது, தியாக மனப்பாங்கு எல்லோரிடமும் இல்லை, பொதுவான மனித இயல்பு.

உங்கள் கருத்துகளை வைத்து கேட்கிறேன்( ஆரம்பத்தில் இருந்து), நீங்கள் யாராலாவது பாதிக்கபட்டீர்களா?

உங்களுக்கோ அல்லது நிழலிக்கோ நான் எனது சொந்த வாழ்க்கையில் உள்ள நிகழ்ச்சித்திட்டங்களை அறிவித்து விளம்பரத் தேடிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் உங்கள் போன்றோரிடம் இருந்து எழக்கூடிய ஆபத்துக்களையும் வலிய விலைக்கு வாங்க வேண்டிய தேவையும் இல்லை. என்னை உங்களுக்கு இனங்காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

வாய்ச்சவாடல்.. இயலாதன்.. குட்டு உடைத்தல்.. இப்படி எம் தமிழர்களின் இயலாமையில் வெளிப்படும் வார்த்தைகளை நான் உங்கள் போன்றவர்களிடம் கேட்டுக் களைத்துப் போய்விட்டேன்.

இப்ப வரைக்கும்.. எனது தேசத்தின் மீது எனது கருசணையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தும்.. நீங்கள் ஏதோ சுவிஸ்லாந்தின் பூர்வீகக் குடிமகன் என்ற தோறனையில் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். எனது நிகழ்ச்சித்திட்டங்களை சொல்லக் கேட்கிறீர்கள். இத்தனைக்கு வசம்பு என்ற பெயரில் எழுதப்படும் கருத்துக்களைத் தவிர நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. உண்மையில் நீங்கள் சுவிஸில் இருந்துதானா வருகிறீர்கள் என்ற எதுவுமே தெரியாத ஒரு போலிச் சூழலுக்குள் உங்களை வைத்துக் கொண்டு என்னிடம் உண்மையை.. அரிச்சந்திர காண்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்.

அதற்கு வசம்பண்ண.. ஏமாற யாராவது இருந்தா இருந்தி வைச்சுக் கருத்தெழுதுங்கோ.. அவன் கேணத்தனமா உங்களோடு வீராப்பென்று சொந்த சோகக்கதையை அள்ளிவிடுவான்.

நீங்கள் வெறும் கருத்தாளன். அந்த எல்லையில் நானும் வெறும் கருத்தாளன். ஊரில் சொல்வார்கள்.. கரடி சண்டை இடும் போது எதிராளியின் பலத்துக்கு நிகராக தன்னை பாவனை செய்து கொண்டுதான் சண்டை இடுமாம். சாச்சா.. அந்தக் கரடிக்கே அவ்வளவு புத்தி இருக்கேக்க.. கதைவிட்டு கதையளந்து.. கணணியோட உங்கள் பிரச்சாரம் முடிந்திட்டுது என்று மகிழ என்மீது.. வாய்ச்சவாடல்.. குட்டு உடைந்தது போன்ற இயலாமைக்குரிய பதங்களை தெளிக்கும் போதே உங்களின் நியாயம் புரிகிறது வசம்பண்ணன். :wub:

உங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி யார் கேட்டது. ஆரம்பத்திலிருந்தே களத்தில் விளம்பரம் தேடுவதே உங்கள் வேலை. அது எல்லோருக்கும் தெரியும். முன்பு குருவியாக வந்தீர்கள். பின்பு வீராப்பு பேசி வெளியேறி தற்போது நெடுக்காக மீண்டும் சுயதம்பட்டம் அடிக்கின்றீர்கள். நீங்கள் தான் குருவி என்று பலர் ஆதாரத்தடன் சுட்டிக் காட்டிய போதும். நான் அவனில்லை என்பது போல் கதையளந்தீர்கள். குருவிக்கு மட்டுமே தெரிந்த சில விடயங்கள் உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று சிலர் கேட்டபோது குருவி உங்களுக்குச் சொன்னதாக அதற்கும் கதை அளந்தீர்கள். :wub: எல்லாவற்றிற்கும் மேலாக, சமீபத்தில் ஒருவர் கரும்புலி வீரனாகச் செல்வதை தன் நண்பிக்கு சொல்வதாக உங்கள் கற்பனையில் தோன்றியதாக ஒரு கதை அளந்தீர்களே. அது காசியானந்தன் கவிதை வரிகள் என்பது சில நாட்களின் முன் ஐரோப்பிய வானொலி ஒன்றில் ஒரு நேயர் வாசித்த போது அறிந்து கொண்டேன். எனி அதற்கும் கதை அளக்காதீர்கள் காசியானந்தன் உங்களைக் காப்பியடித்து விட்டாரென்று. :)

இந்த இலட்சணத்தில் அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி உண்டு. நான் சுவிற்சர்லார்ந்திலா அல்லது வேறு நாட்டிலா இருக்கின்றேனென்பது என்னோடு நேரடித் தொடர்புள்ள அத்தனை கள உறவுகளுக்கும் தெரியும். நான் வந்ததிலிருந்தே ஒரே ஐடியும் ஒரே அவாட்டரும் தான் பாவிக்கின்றேன். உங்களைப் போல் ஐடியையும் அவாட்டரையும் அடிக்கடி மாத்திக் கொண்டிருக்கவில்லை.

பாடல் பற்றிய கருத்தாக தொடங்கிய இந்தப் பக்கத்தை உங்கள் சுயநலத்திற்காக திசைமாற்றி தேவையில்லாத விமர்சனங்களை புகுத்தியது நீங்கள். களத்திலே எல்லோரும் ஏமாளிகள் என்று எண்ணித் தானோ இப்படிக் கேணைத் தனமான கருத்துக்களை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். எனியும் அடுத்தவரை முட்டாள்கள் என்று எண்ணிக் கருத்தை வைக்காதீர்கள். இறுதியில் நீங்கள் முட்டாளாகி விடுவீர்கள்.

சுத்துமாத்துக்கள் எண்டுற இணையத்தில யாழ் இணையம் தாங்கள் தமிழ்த்தேசியத்தை வளர்த்ததாகவும், வளப்பதாகவும் கூறுகின்றார்கள். தமிழ்த்தேசியம் யாழ் இணையம் மூலம் எப்படி வளர்ந்தது எண்டு கொஞ்சம் விளங்கப்படுத்த ஏலுமா எண்டு கேட்டு இருந்தார்கள். இஞ்ச இருக்கிற கருத்துக்களை பார்க்க தமிழ்த்தேசியம் யாழ் இணையத்தில வளர்க்கப்பட்ட, வளர்க்கப்படுற இலட்சணம் தெரியுது.

ஆக மொத்தத்தில... மனோகரன் சிங்களவனுடன் தமிழர்-சிங்களவர் ஒற்றுமைய பற்றி பாடினது இல்ல பிழை எண்டு தெரியுது. ஆனால் அவர் அந்த சிங்களவனோட சேர்ந்து தமிழர்-தமிழர் ஒற்றுமை பற்றி ஒரு பாடல் பாடாமல் விட்டதுதான் பிழையாக இருக்கிது.

முரளி,

நீங்கள் சொல்லியதை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

யாழ் களத்தில் தமிழ் தேசியம் பற்றியும், விடுதலை போராட்டத்தின் போக்குகள் பற்றியும் தமிழ் தேசிய ஆதரவாளர் என்று காட்டுவதற்காக கண்ணை மூடிக்கொண்டு, மிகை உணர்ச்சியில் மற்ற எல்லோரையும் பற்றி கேவலமாக விமர்சித்து கொண்டு ஆதரவு தருபவர்களுடன் விவாதித்தால் அது தமிழ் தேசிய போராட்டத்தை வளர்பதற்கு எதிரானதாக போய்விடுமா?

எனக்கு தெரிந்த அரசியல் சித்தாந்ததில், விவாதம் செய்வது ஆரோக்கியமான வளர்ச்சியை கொடுக்கும் என நம்புகின்றேன். யாழில் இதனை கொஞ்சமாவது (பல வெட்டுக்களுடனாவது) அனுமதிக்கின்றனர். அது தவறு என நம்புகின்றீர்களாயின், தயவு செய்த் ஏன் தவறு என விளக்குங்கள்

(மீண்டும் சொல்கின்றேன், நீங்கள் சொல்லியதை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.ஆகவேதான் விளக்கம் பெற விரும்புகின்றேன். தவறாக நான் கற்பிதம் செய்திருந்தால் மன்னிக்கவும்)

-நிழலி-

Edited by NIZHALI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.