Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் புதிய அதிபர் - ஒபாமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் புதிய அதிபர் - ஒபாமா

இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா

புதன்கிழமை, நவம்பர் 5, 2008

சிகாகோ: தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான உரை:

நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.

என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும் பகிர்ந்த அவருக்கு என் நன்றிகள்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பிரச்சாரத்தை நாம் நடத்தினோம். இதற்காக கட்சியினருக்கும் எனக்குத் துணை நின்ற அமெரிக்க மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி எனக்குரியதல்ல, இது அமெரிக்க மக்களின் வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது.

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். மக்களின் குரலைக் கேட்பேன். இந்த வெற்றி அமெரிக்காவுக்கு ஒரு புதிய விடியல்.

அமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி நாம் உண்மையான 'யுனைடட்' ஸ்டேட்ஸ் தான் என்பதையும் நம் மக்களின் ஒற்றுமையையும் நிரூபித்துவிட்டது என்றார்.

ஒபாமாவின் பேச்சை கூட்டம் உற்சாகத்துடன் குரல் எழுப்பி கொண்டாடியது.

பின்னர் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடேனை ஒபாமாவை அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து ஒபாமாவின் மனைவி மிசேல், ஜோ பிடேனின் மனைவி ஆகியோர் ஒபாமா, பிடேனை வாழ்த்திநர்.

இதையடுத்து இருவரின் குடும்பத்தினரும் மேடையேறி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு உலக நாடுகளின் தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

http://thatstamil.oneindia.in/news

அமெரிக்காவின் புதிய அதிபர் - ஒபாமா

இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா

உலகத்துக்கே புதிய விடியல் என நம்புவோம்

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலில் ஒரு திருப்பு முனை ........மாற்றங்களை எதிர்பார்ப்போம் ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ஒபாமா கறுப்பினத்தை தலையுயர வைத்த மற்றுமொரு மனிதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவேன்- பரக் ஒபாமா

வீரகேசரி இணையம் 11/5/2008 4:55:57 PM - அமெரிக்காவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒபாமா, தனது வெற்றி குறித்து இன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனக்குறிப்பிட்ட ஒபாமா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கெயனுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறினார்.

இதேவேளை, புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜோன் மெக்கெயின், அமெரிக்காவின் சுபிட்சத்துக்காக ஒபாமா பாடுபடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள ஹொனோலூலு எனும் பிரதேசத்தில் பிறந்த ஒபாமா 1983ஆம் ஆண்டு கொலம்பிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொடர்புகள் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

1993ஆம் ஆண்டு இலினியோஸ் மாநிலம் சார்பாக அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க வம்சாவழியான இவரது தந்தை கென்யாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

">

">

:)ஆனால் ஒாபாமா கலப்பினமானதால் அவர் நிறம் பழுப்பல்லவோ?? :lol:

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இவரை அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்று முழங்கித் தள்ளுகின்றனவே!

ஓ! இவர் அமெரிக்காவின் முதலாவது பழுப்பின ஜனாதிபதியா? அப்படியா சேதி?

நாலு விசயம் தெரிஞ்ச நல்லவுக சொன்னா தப்பாவா இருக்கும்? :)

Edited by vettri-vel

:)ஆனால் ஒாபாமா கலப்பினமானதால் அவர் நிறம் பழுப்பல்லவோ?? :)

அப்ப... பாடலில் சின்ன திருத்தம். "பழுப்பு தான் எனக்கு பிடித்த கலரு.... எங்க ஊரு ஜனாதிபதி ஒபாமாவும் பழுப்பு தான்" (நுணாவிலான் அண்ணை இப்படி பாடிக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபரின் நிறம் தான் மாறியிருக்கின்றதேயன்றி அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை விரைவில் அடைய முடியாது. பெரும்பான்மையான வெள்ளையர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நபராகத்தான் ஒபாமா இருக்க முடியும். ஏகாதிபத்திய பொருளாதார நிகழ்ச்சி நிரலை விட்டு செயற்பட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பதவிக்கு வரு மட்டும் தான் ...பொறுத்திருந்து பார்போம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் என்ன நிறம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ன நிறம்?

கறுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ன நிறம்?

உமக்கு ஏன் உமது பிறப்பில் சந்தேகமா????????????

அமெரிக்க அதிபரின் நிறம் தான் மாறியிருக்கின்றதேயன்றி அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை விரைவில் அடைய முடியாது. பெரும்பான்மையான வெள்ளையர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நபராகத்தான் ஒபாமா இருக்க முடியும். ஏகாதிபத்திய பொருளாதார நிகழ்ச்சி நிரலை விட்டு செயற்பட முடியாது.

உண்மைதான்

இந்தியாவில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் றோ தானே கொள்கைகளை வகுக்கிறது????????

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் அமெரிக்க விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள் என்று சுமார் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்தத்தாக்குதலை ஆப்கானிஸ்தான் அதிபர் விமர்சித்திருப்பதோடு விமானத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் உச்சரிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதும் அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகளின் செயற்பாடுகளை ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

US Afghan air strike 'killed 40'

US air strikes have been blamed for many civilian deaths

Afghan President Hamid Karzai has said about 40 people were killed in a US air strike in southern Kandahar province.

Many more were wounded when a wedding party was hit. US officials confirmed civilian deaths and are investigating.

"We cannot win the fight against terrorism with air strikes," Mr Karzai said in comments directed at US President-elect Barack Obama.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7710566.stm

ஒபாமா இவற்றை தவிர்ப்பாரா அல்லது இன்று அறிவித்துள்ளது போல புஷ்சின் கொள்கைகளைக் காவ நினைக்கும் மக்கைனுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன் என்ற போர்வையில் இவற்றைத் தொடர்வாரா..???! :):lol:

அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகி புஷ்ஷின் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மற்றொரு புறம் இந்த நிறுவனங்கள் சூதாடியதால் ஏற்பட்ட சுமையினை அமெரிக்க மக்கள் ஏற்கனவே அனுவித்து வருகிறார்கள். அதாவது இந்த முதலாளிகளின் தாக்குதலால் நிலை குலைந்து வேலையையும், வாழ்க்கையையும் பறிகொடுத்திருக்கிறார்கள். பாரக் ஒபாமா வெள்ளை நிறவெறியை மீறி வெற்றி பெற்றிருப்பதற்கு கடந்த சில மாதங்களாக அமெரிக்க மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களுமே காரணம். ஆனால் அதிபரின் மாற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது. கடந்த ஒரு வருடங்களாக அமெரிக்காவில் நடந்த தற்கொலைகளும், கொலைகளும் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதாரக் கொள்ளையினால் நடந்திருக்கின்றன. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை தெரிந்த கொண்ட பிறகாவது அமெரிக்க மாயையிலிருந்து இந்திய நடுத்தர வர்க்கம் விடுபடுமா, என்பதே நமது கேள்வி.... புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும் -http://vinavu.wordpress.com/2008/11/06/usuicide2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.