Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோட்டுச் சிங்களவன்

Featured Replies

சிங்களவர்களின் ராஜதந்திரம்!

எழுதியவர்: பன்னீர் செல்வன்

ஒரு பத்திரிகையாளன் சிறப்பாகச் செயல்படச் சில யுக்திகள் உண்டு. இந்த யுக்திகளை வாசகர்களும் அறிந்துகொள்வது நலம். களத்திலிருந்து வரும் செய்திகளுக்கு வலுசேர்க்க, பத்திரிகையாளன் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலிருந்து பல சான்றுகளையும் புரிதல்களையும் மேற்கோள்களாகக் காட்டி, நிழ்வுகளின் அரசியல், சமுதாய மற்றும் பொருளாதாரப் பின்னணியை வாசகனுக்குத் தர முயலுகிறான்.

கடந்த இரண்டு வாரங்களாக நான் பாகிஸ்தானில் பயணம் செய்ய வேண்டிய அலுவல். முதன்முறையாக உள்ளம் ஓர் இடத்திலும், உடல் வேறு ஓர் இடத்திலும் இருக்க, இரவுநேரப் படிப்பில் பாகிஸ்தான் பற்றி ஏதும் படிக்காமல், ஈழத்தமிழர்களின் படைப்புகளை மட்டுமே படித்தேன். தமிழகத்தில் எற்பட்ட உணர்வு அலைகளில் நேரடியாகப் பங்குபெற முடியாவிட்டாலும், நான் படித்த அந்த மூன்று புத்தகங்களைப் பற்றிய விவரம்தான் இந்த வாரச் சுற்றும் முற்றும்.

அதில் இரண்டு நூல்கள் ஆங்கில நூல்கள்; மற்றொன்று தமிழ். வி. வி. கணேசானந்தன் என்கிற அமெரிக்காவில் வாழும், யாழ். குடாநாட்டைச் சார்ந்த, இளம் பெண் படைப்பாளியின் Love Marriage என்கிற ஆங்கில நாவல், A.J: The Rooted Cosmopolitan என்கிற கட்டுரைத் தொகுப்பு, மு. திருநாவுக்கரசு எழுதிய “ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்” என்கிற அரசியல் புத்தகம், இன்றைய ஈழநிலையைப் பல்வேறு தளங்களில் படம்பிடித்துக் காட்டுகின்றன. நம்முடைய புரிதல்களை மேலும் விரிவுபடுத்தி, அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்ற வினாவிற்குப் பல பதில்களையும் அந்த நூல்கள் தருகின்றன.

முதலில், திருநாவுக்கரசு எழுதிய நூலைப் பற்றிய ஒரு சிறு ஆய்வு. திருநாவுக்கரசு தமிழகத்திற்குப் புதியவர் அல்ல. 1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, புவிசார் அரசியல் நோக்கில், இவரும் இவரது நண்பர் விஜயனும் இணைந்து எழுதிய ‘இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்’ என்ற ஆய்வு நூல் சென்னையில் பல நண்பர்களின் முயற்சியால் வெளியிடப்பட்டது.

இன்று, 2001 செப்டம்பர் 11இல் நடைபெற்ற அமெரிக்காவின் மீதான தாக்குதலுக்குப் பிறகு எற்பட்டுள்ள அரசியல் சூழலில், போரும் சமாதானமும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைத் தன்னுடைய புதிய புத்தகத்தில் விரிவாக எடுத்து விளக்குகிறார் திருநாவுக்கரசு. அந்த 170 பக்க நூலில் பல அரிய கருத்துக்கள் இருந்தாலும், இன்று ஈழத்தில் போர் மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கும் காலத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுவது முக்கியமானது.

“கல் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” என்று தம்மைப் புகழ்ந்துரைத்தும், சிங்கள மக்களை “மோட்டுச் சிங்களவர்” என்று இகழ்ந்துரைக்கும் ஒரு பிழையான போக்குண்டு. மேற்படி இந்த இரு வாக்கியங்களிலுமே கண்மூடித்தனம் உண்டு. “மோட்டுச் சிங்களவர்” என்ற கண்மூடித்தனமான வார்த்தையைப் பிரயோகிப்பவர்கள் உணரவேண்டிய ஒரு யதார்த்த உண்மை உண்டு. ஒரு விரிவுரையின்போது, ஒரு பேராசிரியர் சுட்டிக் காட்டிய விடயம் இது. அதாவது, ஒரு சிறிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற, பிரம்மாண்டமான இந்தியாவிற்குக் கீழ் அமைந்துள்ள ஒரு சிறிய தீவே இலங்கை. அந்த பிரம்மாண்டமான இந்தியாவின் பிடிக்குள் அகப்பட்டுக் கரைந்து போகாமல் 2,500 ஆண்டுகளாகத் தப்பியோடி, தமது அரச பண்பாட்டுப் பாரம் பரியங்களுடன் வாழக்கூடிய திறமை, தந்திரம் என்பன சிங்கள சமூகத்திடம் உண்டு. இந்த பிரம்மாண்டமான இந்தியாவால், சிங்கள அரசையும், கலாசாரத்தையும் தோற்கடித்துத் தம்முடன் இணைத்துக்கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு மிகவும் புத்தி சாதுர்யத்துடன், இந்தியாவை பன்னூற்றாண்டு காலமாகக் கையாண்டு வருவதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதே அர்த்தம்.

யானைக்கு புயம் பலம், எலிக்கு வளை பலம். இதனைச் சிங்கள உயர்குழாத்தினர் சரிவர உணர்ந்திருக்கின்றார்கள். சாணக்கியன் இப்பொழுது உயிரோடு இருந்தால், அவர் சிங்கள ராஜதந்திரிகளிடம்தான் ராஜதந்திரம் கற்க வேண்டியிருக்கும். கூட்டுச்சேரல், விட்டுக்கொடுத்தல், பின்வாங்கல், ஒங்கி அறைதல் போன்ற, தருணத்திற்குப் பொருத்தமான, தெரிவை மேற்கொள்வதில் சிங்கள அரசியல்வாதிகள் மிகவும் சாமர்த்தியமானவர்கள். எல்லாம் முடிந்துவிட்டது. இதோ மூழ்கி அழியப் போகிறார்கள் என்பது போன்ற ஒரு கட்டத்திற்கூட, சிங்களத் தலைவர்கள் நிலைமையைத் திடீரென்று தலைகீழாய்ப் புரட்டிவிட்டு, அதன்மேல் நிற்பார்கள். இலங்கைமீது படையெடுக்கப்போவதாக அச்சமூட்டிய இந்தியாவை, 1987ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனா இப்படித்தான் தமக்குச் சாதகமாய்க் கையாண்டு வெற்றி பெற்றார்.

இவ்வாறு, 2,500 ஆண்டுகளுக்கும் மேலாய்ச் சிங்களவர்கள் நிரூபித்து வருகின்றார்கள்” என்று நாம் அதிகம் கவனம் கொள்ளவேண்டிய, ஆனால், போதுமான கவனத்தைச் செலுத்தாத ஓர் அரசியல் பார்வையைத் திருநாவுக்கரசு முன்வைக்கிறார்.

இங்கு, திருநாவுக்கரசு யார் என்பதையும், ஏன் நாம் அவருடைய பார்வையை அக்கறையுடன் கவனிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர் 1983இல் இனக்கலவரம் துவங்கிய நாள் முதல் இன்றுவரையில் ஈழத்தில் வசித்து வருபவர். இந்த 25 ஆண்டுகாலப் போரின் பல்வேறு கொடுமைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டு இருப்பவர். அதனால், அதிகம் நேரடியான பாதிப்புகளுக்கும் உள்ளானவர். ஆனால், தன்னைச் சுற்றிலும் அழிவு வேலைகள் மிக வேகமாக நடைபெறும் காலத்தில், அதிலிருந்து தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்கிற அக்கறையில், இளைய தலைமுறையினருக்குச் சர்வதேச அரசியல் பற்றிய பிரக்ஞையை உருவாக்கத் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அரசியல் பார்வையினால் தங்களினுடைய போராட்டத்தைச் செம்மைப்படுத்துவதில் திருநாவுக்கரசுக்கு முதலிடம் என்றால், இலக்கியப் பார்வையின் மூலம் போராட்ட காலத்தில் வாழ்க்கையின் உயர்ந்த தன்மைகளை இழக்காமல், மனித மேன்மையின் ஊற்றுக்கண்களை ஈழமக்களுக்கு எடுத்துக்காட்டியவர்தான், சென்ற ஆண்டு மறைந்த எழுத்தாளர் ஏ.ஜே.கனகரத்னா அவர்கள்.

ஏஜேயைப் பற்றி எழுதிப் பல்வேறு அறிஞர்கள் தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தியிருக்கும் நூல்தான் A.J: The Rooted Cosmopolitan என்ற நூல். திருநாவுக்கரசின் நூலைப்போலவே இந்த நூலையும் வெளியிட்டிருப்பவர் ஈழ இலக்கிய வளர்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்நாட்களைத் தியாகம் செய்துவரும் அற்புத மனிதர் பத்மநாப ஐயர் அவர்கள். A.J: The Rooted Cosmopolitan இரு பகுதிகளையுடைய ஒரு புத்தகம். முதல் பகுதி ஏ.ஜே. பற்றி மற்றவர்கள் எழுதியது. இரண்டாவது பகுதி ஏ.ஜே. ஆங்கிலத்தில் எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. எஸ்.வி.ஆர்., தமிழவன் போன்ற தமிழ்நாட்டு அறிஞர்களும், பல்வேறு ஈழத்தமிழர்களும் ஏஜேயைப் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளார்கள். ஆனால், இன்றைய நிலையில், நம்முடைய கவனத்தைக் கவருவது ஏ.ஜே.யின் எழுத்துக்கள்தான்.

மு.புஷ்பராஐனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத் தொகுப்பிற்கு ஏ.ஜே. எழுதியிருக்கும் விமர்சனக் கட்டுரை, புலம்பெயர்ந்த பின்னும் தாய்நாடுமீது இருக்கும் அன்பையும், ஈர்ப்பையும் எப்படித் தமிழ் மக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை 1,000 வார்த்தைக்குள் படம்பிடித்துக் காட்டிவிடுகிறார். பேராசிரியர் சிவத்தம்பியின் நூல் பற்றிய கட்டுரையில் ஏ.ஜே., நாம் இன்றைய சிங்கள-தமிழ்ப் போரில் புரிந்துகொள்ளவேண்டிய மிகவும் முக்கியமான ஓர் அம்சத்தைச் சற்றே உரத்த குரலில் எடுத்துரைக்கிறார். சமாதானம், அமைதி என்கிற விஷயத்தில் தமிழர்கள் பார்வை ஒன்றாக இருப்பதும், சிங்களவர் பார்வை வேறு ஒன்றாக இருப்பதையும் சிவத்தம்பி எப்படிச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அமைதியும் சமாதானமும் கைக்கு எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது. வட-கிழக்கு போர்க்களத்திலிருந்து இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் வருவது நிற்கும்போது, தங்களுடைய சுதந்திரமான நடமாட்டங்களுக்குத் தடையாகப் பாதுகாப்பு வளையங்கள் இல்லாமல் போகும்போது, வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் பாதிக்கும் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது, கொழும்பு நகரில் குண்டுகள் வெடிக்காது என்ற நிலை எற்படும்போது, அமைதி திரும்பிவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழர் களின் நிலையோ நேர்எதிர்.

எங்களில் பலர் வீடுகளை இழந்துள்ளோம். எங்களின் பத்திரப் பதிவுகள் தொலைந்துபோய்விட்டன. எங்களுடைய பொதுக்கட்டிடங்கள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளன. தன்னுடைய கிராமத்திற்கு மீண்டும் சென்று குடியேறலாம் என்றால், அதற்கும் பெரியதாக ஒன்றுமில்லை. கீரிமலையில் சென்று நீராடவேண்டுமென்றால் ராணுவ வீரர்களின் துணை தேவைப்படுகிறது. நாங்கள் அமைதி என்று கருதுவதில், இதுபோன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் மீண்டும் அரங்கேற முடியாத ஒரு சூழல்தான். எங்கள் மக்கள் விவசாயம் முதல் கல்வி வரையில் அனைத்துச் செல்வங்களிலிருந்தும் பிரிக்கப்பட்டுள்ளனர். அந்தச் செல்வங்களை நாங்கள் பெற எந்தத் தடையும் இருக்காது என்று யார் வாக்குறுதி தருவது? அப்படி வாக்குறுதி அளித்தாலும், அது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்? இதுபோன்ற வாக்குறுதிகள் இல்லாத அமைதிக்கு எந்தவிதமான பொருளும் இல்லை.”

ஆக, இன்றைய நிலையில், பொதுவான சிங்கள மக்களும், தமிழ் மக்களும் அமைதியை விரும்பினாலும், அமைதி என்பதற்கான முழுப் பொருளைச் சிங்களவர்கள் இன்றும் உணர்ந்துகொள்ளவில்லை என்பதைச் சிவத்தம்பி பதிவுசெய்ததை - இலங்கையில் போர் நிறுத்த காலத்தில் எழுதியதை - மீண்டும் நமது கவனத்திற்கு ஏ.ஜே. கொண்டுவந்திருப்பதன் மூலம் இன்றைய சிக்கலுக்குத் தீர்வு போர் நிறுத்தம் மட்டுமல்ல, கூடவே மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய நிஜமான அதிகாரப் பரவலாக்கல் மூலம் கிடைக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒரு சமாதான அமைப்புத்தான் என்பது தெளிவாகிறது. அதுபோன்ற ஒரு சமாதான அமைப்பை உருவாக்குவதில்தான் இந்தியாவின் பங்கு இருக்க முடியும். இதைத்தான் இந்தியத் தமிழர்களாகிய நாம் ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் சரியான உதவியாக இருக்க முடியும்?

லவ் மேரேஜ் என்கிற நாவல், போராட்டம் எப்படி ஒரு குடும்பத்தின் கூட்டுச் சூழலை முற்றிலும் தகர்த்துவிட்டது என்பதையும், எவ்வளவுதான் விட்டு விலகியிருந்தாலும் போர் நிகழும்போது, அதன் நிழல் படியாமல் எந்த ஈழத்தமிழர்களும், அவர்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான அறுவை சிகிச்சை வல்லுநர்களாக இருந்தாலும், தங்கள் தனிமனித வாழ்க்கையை நடத்தமுடியாது என்பதை மிகவும் இயல்பாகவும், இலகுவாகவும் சொல்கிறது. மெல்லிய நகைச்சுவை இழையோடும் இந்த நாவலின் சொல்லாடலின் பலம், நாவலைப் படித்து முடித்தபிறகு நம்மை அறியாமல் நம் கண்களிலிருந்து பனிக்கும் சில கண்ணீர்த் துளிகளில் அடங்கியுள்ளது.

நன்றி: நக்கீரன் (02-11-2008) வார இதழ்

நன்றி: அப்பால் தமிழ்

சிந்திக்கவும், விவாதிக்கவும் கூடிய பத்தியை தந்ததற்கும், நல்லதொரு இணைய தளத்தினை அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றி. இக் பத்தி பேசுகின்ற கருத்துகள் பற்றிய ஒரு ஆரோக்கியமான, விவாதம் யாழில் நடந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

“கல் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” என்று தம்மைப் புகழ்ந்துரைத்தும், சிங்கள மக்களை “மோட்டுச் சிங்களவர்” என்று இகழ்ந்துரைக்கும் ஒரு பிழையான போக்குண்டு. மேற்படி இந்த இரு வாக்கியங்களிலுமே கண்மூடித்தனம் உண்டு. “மோட்டுச் சிங்களவர்” என்ற கண்மூடித்தனமான வார்த்தையைப் பிரயோகிப்பவர்கள் உணரவேண்டிய ஒரு யதார்த்த உண்மை உண்டு. ஒரு விரிவுரையின்போது, ஒரு பேராசிரியர் சுட்டிக் காட்டிய விடயம் இது. அதாவது, ஒரு சிறிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற, பிரம்மாண்டமான இந்தியாவிற்குக் கீழ் அமைந்துள்ள ஒரு சிறிய தீவே இலங்கை. அந்த பிரம்மாண்டமான இந்தியாவின் பிடிக்குள் அகப்பட்டுக் கரைந்து போகாமல் 2,500 ஆண்டுகளாகத் தப்பியோடி, தமது அரச பண்பாட்டுப் பாரம் பரியங்களுடன் வாழக்கூடிய திறமை, தந்திரம் என்பன சிங்கள சமூகத்திடம் உண்டு. இந்த பிரம்மாண்டமான இந்தியாவால், சிங்கள அரசையும், கலாசாரத்தையும் தோற்கடித்துத் தம்முடன் இணைத்துக்கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு மிகவும் புத்தி சாதுர்யத்துடன், இந்தியாவை பன்னூற்றாண்டு காலமாகக் கையாண்டு வருவதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதே அர்த்தம்.

சிங்களவர்கள் தங்கள் இனத்தை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் .

தமிழர்களுக்கு காட்டி கொடுப்பது , இரத்தத்தில் ஊறியது போல் இருக்கின்றது .

இணைப்பிற்கு நன்றி இளைஞன் .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை. அந்த பிரம்மாண்டமான இந்தியாவின் பிடிக்குள் அகப்பட்டுக் கரைந்து போகாமல் 2,500 ஆண்டுகளாகத் தப்பியோடி, தமது அரச பண்பாட்டுப் பாரம் பரியங்களுடன் வாழக்கூடிய திறமை, தந்திரம் என்பன சிங்கள சமூகத்திடம் உண்டு.

இந்தியாவை சிங்கள தலைவர்கள் புத்திசாதுரியமாக பல நூற்றாண்டு காலமாக கையாண்டு வருகிறார்கள் என்று சொல்ல ஏலாது.இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுகந்திரம் பெற்ற பிறகு சிங்கள தலைவர்கள் சாதுரியமாக இந்தியாவை கையாண்டு வருகிறார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

இந்தியாவின் அரசியல் சாணக்கியமும் சிறிலங்காவின் அரசியல் சாணக்கியமும் உச்ச கட்டம் தான் தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கின்றது.யாருடைய சாணக்கியம் வெற்றி பெறும் என்பதிற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்திய உபகண்டத்தின் கலாச்சாரம் சிங்கள கலாச்சாரத்தில் நன்றாகவே புகுந்து விளையாடி உள்ளது பெளத்த மதம் வட இந்தியாவில் இருந்து தெற்கினூடாக இலங்கை தீவு பூராக தனது செல்வாக்கை தக்க வைத்து கொண்டது.சிங்கள கலாச்சாரத்தினால் பெளத்த மதம் நுளைவதை தடுத்து நிறுத்த முடியாமல் போய் விட்டது.

பாளி மொழியில் பெளத்தம் போதிக்கபட்டபடியால் பாளி மொழியின் ஆதிக்கம் சிங்கள மொழியில் அதிகமாகவே உண்டு சிங்கள மொழியின் உருவ அமைப்பு..(எழுத்து வடிவம்).இந்தியா மொழிகளின் பாதிப்பு உண்டு.

சிங்கள கலாச்சாரம் தொடர்ந்து அழியாம இருப்பதிற்கு முக்கிய காரணம் பிரித்தானியா இவர்கள் இலங்கையை ஒன்றாக்கி சிங்களவர்களிடம் ஆட்சியை கொடுத்தபடியால் அவர்களிடம் அதிகாரம் சென்றுவிட்டது.இந்த அதிகாரத்தினால் அவர்கள் தங்களது கலாச்சாரத்தை மேலும் பலத்துடன் பேணி பாதுகாத்து கொள்ள முடிந்தது மட்டுமில்லாது தமிழ் பிரதேசத்திலும் தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் திணிக்க கூடியதாகவும் திணித்தும் இருக்கிறார்கள்.

யாழ். குடாநாட்டைச் சார்ந்த, இளம் பெண் படைப்பாளியின் Love Marriage என்கிற ஆங்கில நாவல்

இப் புத்தகம் யாழ் குடாநாட்டு பெண்மணியால் எழுதபட்டதாக குறிப்பிடபட்டுள்ளது அத்துடன் கதையின் கரு ஈழத்து தமிழ் பெண்ணுடம் சம்பந்தபட்டதாகவும் உள்ளது ஆனால் அட்டை படத்தை பார்க்கும் போது ஒரு வட இந்திய (பொட்டு வைத்த மொட்டாக்கு போட்ட பெண் -இப்படி பெண் யாழ்பாணத்தில் இல்லை).பெண்ணின் படம் தான் பிரசுரிக்கபட்டுள்ளது.கருவுக

vasugi.jpg

Love Marriage புத்தகத்தை எழுதிய வாசுகி குறித்த தகவல்கள் :-

http://www.vasugi.com/bio.html

மேலதிக தகவல்கள் :

VV Ganeshananthan's subject is Sri Lanka, the paradise island torn apart by fratricidal conflict since 1983 (or beyond, if you want to look for older hatreds). Ganeshananthan, an American of Sri Lankan (but Tamil) origin, mixes up the sequence, tossing before the reader shards of memories which look like pieces of broken bangles. But when we look at those broken bangles through her kaleidoscope, her twisting of the lens reveals patterns that make it possible to understand aspects of the conflict, even if the horrors cannot be excused....

http://www.independent.co.uk/arts-entertai...han-828950.html

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன்,சின்னகுட்டி உங்கள் இணைப்பிற்கு நன்றி :)

பெண்மனி பத்திரிகை துறையில் பெரிய பட்டம் பெற்றிருக்கிறா அத்துடன் தென்னாசியா பத்திரிகாயாளர் சங்கத்தின் உப தலைவராகவும் செயற்படுகிறா.இந்த பெண்மணிக்கு எங்களது பிரச்சினை அதாவது ஈழதமிழரின் தேசிய பிரச்சினை பற்றி எந்த வகையில் புரிந்து வைத்திருப்பா என்று யாழ்கள நண்பர்களே நீங்கள் நினைக்கிறீங்கள்.

இவர்

1)ஈழதமிழருக்கு ஆதரவான கருத்தை கொண்டிருப்பாரா.

2)ஈழதமிழர் தேசியதிற்கு எதிரான கருத்தை வைத்திருப்பாரா .

3)சிங்கள இனவாதிகள் கூறுவது போல் பயரங்கரவாதம் என்ற போர்வையில் தான் நோக்குவாரா.

4)அமெரிக்கர் கூறுவது போல் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய்வர்களும் பயங்கரவாதி என்று நோக்குவாரா.

5)இலங்கையின் அமெரிக்க தூதுவர் கூறியது போல் அமெரிக்காவில் சிறுபான்மை இன கறுத்தவன் ஜனாதிபதி ஆனது போல் இலங்கையிலும் ஜனாதிபதி ஆகலாம் என்ற கருத்துடன் தான் நிற்பாரா.

நீலந்திருசெல்வம் அவர்களுக்கு எம்.பி பதவி கொடுக்கும் போது நான் சிறுவன்.பத்திரிகைகளிள் அவரை பற்றி சில செய்திகள் வந்தன அமெரிக்காவின் அரசியலில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர் உலக நாடுகளின் அரசியல் யாப்புகளிள் சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்று எல்லாம் அவரை பற்றி ஒரு பெரிய எதிர்பார்புகள் இருந்தன.நான் அப்பொழுது நினைத்தேன் இவர் யாழ்பாணத்து தமிழர் நல்ல பெரிய பல்கலைகழகத்திலும் பட்டம் பெற்றிருக்கிறார் இலங்கையிலும் வந்து அதுவும் அரசியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்,மேலும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினாரகவும் இருக்கின்றார்,அமெரிக்கா மற்றும் ஜக்கிய நாடுகள் சபைகளிள் நல்ல செல்வாக்கு பெற்று இருக்கும் ஒருவர் இவரால் எமது பிரச்சினை வெகு விரைவில் தீர்ந்து விடும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர் செய்ததோ எதிர்மறைவான் செயற்பாடுகள் தான்.

என்னடா புத்தன் மொட்டை தலைக்கு முழங்காலுக்கும் முடிச்சு போடுறான் என்று நினைக்க வேண்டாம் யாழ்பாண பெண்மணி என்று கட்டுரையாளர் குறிப்பிட்டபடியால் நான் இதனை எழுத வேண்டி வந்தது.

இவர் தெற்காசிய பத்திரிகையாளர் சங்கத்தின் உபதலைவராக இருப்பதனால் நிச்சயமாக இந்துராம் மற்றும் சோ,சிங்கள மேல்தட்டு பத்திரிகையாளர் (ஆங்கில பத்திரிகையாளர்) ஆகியோரின் ஆதிக்கம் இவர் மேல் நிச்சயம் இருக்க தான் செய்யும்.இதை பத்தி உங்களின் கருத்து என்ன?

எல்லோரையும் எல்லாராலும் திருப்திப்படுத்த முடியாது. வாசுகி தனது மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறார். கதை குறித்து விமர்சிப்பதை விடுத்து கதாசிரியரை விமர்சனம் செய்வதால் எதுவித பலனுமில்லை. அவர் பீபீசீக்கு ஒரு முறை கொடுத்த செவ்வியில் இலங்கை தமிழர் குறித்து உலகம் பேச தமது நூல் ஒரு தொடக்கமாக இருந்தால் மகிழ்வதாக சொல்லியிருந்தார்.

எதிர்கால புலம்பெயர் நாடுகளில் வாழும் குழந்தைகளும் இதை ஒரு முன்மாதரியாக எடுத்துக்கொண்டு எழுதவேண்டும். இவற்றை நாம் ஊக்குவிக்கவேண்டும்.

புத்தகத்தை வாசிக்குமுன்னே கதாசிரியர் யார் என தேடுவதை விட : கதையை படித்துவிட்டு அதற்கு விமர்சனங்களை முன்வைப்பது சிறந்தது.

[ஃஉஒடெ நமெ='Tகலைவன்' டடெ='ணொவ் 14 2008, 05:13 PM' பொச்ட்='461088']

எல்லோரையும் எல்லாராலும் திருப்திப்படுத்த முடியாது. வாசுகி தனது மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறார். கதை குறித்து விமர்சிப்பதை விடுத்து கதாசிரியரை விமர்சனம் செய்வதால் எதுவித பலனுமில்லை. அவர் பீபீசீக்கு ஒரு முறை கொடுத்த செவ்வியில் இலங்கை தமிழர் குறித்து உலகம் பேச தமது நூல் ஒரு தொடக்கமாக இருந்தால் மகிழ்வதாக சொல்லியிருந்தார்.

எதிர்கால புலம்பெயர் நாடுகளில் வாழும் குழந்தைகளும் இதை ஒரு முன்மாதரியாக எடுத்துக்கொண்டு எழுதவேண்டும். இவற்றை நாம் ஊக்குவிக்கவேண்டும்.

புத்தகத்தை வாசிக்குமுன்னே கதாசிரியர் யார் என தேடுவதை விட : கதையை படித்துவிட்டு அதற்கு விமர்சனங்களை முன்வைப்பது சிறந்தது.

[/ஃஉஒடெ]

மிக சரியாக சொன்னீர்கள் தலைவன். ஒரு பிரதியை வாசிக்காது, அது பற்றியும் அதனை எழுதியவரின் அரசியல் பற்றியும் விவாதிக்க முயல்வது தவிர்க்கப்பட வேண்டும்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முந்தி மோட்டுசிங்களவன் எண்டு ஒரு சொல்லை வைச்சு கருத்தெழுதேக்கையே என்ரை கருத்தை தூக்கின நிர்வாகம் இப்ப அதையே தலையங்கமாய் வைச்சு வந்த கட்டுரையை வேடிக்கை பாக்கினம் போலை கிடக்கு :rolleyes:

இதுக்கெல்லாம் கவலைப் பட்டால் வாழ்க்கை என்னாகும் என்று யோசித்து பாருங்கோ .... குமாரசாமியண்ணை .

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கினவர்கள் வைப்பார்கள் வைத்தவர்கள் தூக்குவார்கள்.

இதை தான் ஓடமும் வண்டிலில் ஏறும் வண்டிலும் ஓடத்தில் ஏறும்.........என்பார்களோ ?

நான் முந்தி மோட்டுசிங்களவன் எண்டு ஒரு சொல்லை வைச்சு கருத்தெழுதேக்கையே என்ரை கருத்தை தூக்கின நிர்வாகம் இப்ப அதையே தலையங்கமாய் வைச்சு வந்த கட்டுரையை வேடிக்கை பாக்கினம் போலை கிடக்கு :unsure:

இது 'சொல்லியழுதிட்டன்' பாகம் 2. :wub::rolleyes:

நாங்க சொறிஞ்சா அது ஸ்டைல்

மற்றவங்க சொறிஞ்சா அது படை சே.... சொறி சிரங்கு

என்று நினைக்கினம் போல

நானும் அழுதிட்டன் சோழியன் அண்ணா :lol:

ஊருக்குத்தான் உபதேசம் ............................( நிரப்புங்கோ?) :)

தூக்கினவர்கள் வைப்பார்கள் வைத்தவர்கள் தூக்குவார்கள்.

இதை தான் ஓடமும் வண்டிலில் ஏறும் வண்டிலும் ஓடத்தில் ஏறும்.........என்பார்களோ ?

செத்த கண்ணாதாசன் வாயில சீனி போடேலாது. பூவாவது தூவலாம். நல்ல பஞ் :lol:

இருந்தாலும் தலைப்பு பொருத்தமேயில்ல. எல்லாரும் வரட்டும் என்று போட்ட மாதரியிருக்கு :o

மிக சரியாக சொன்னீர்கள் தலைவன். ஒரு பிரதியை வாசிக்காது, அது பற்றியும் அதனை எழுதியவரின் அரசியல் பற்றியும் விவாதிக்க முயல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழில எழுதயில்ல என்று கோவமோ என்னமோ?

என்னைப்போல மற்றவனும் வளரக்கூடாது என்ற நம்மவர் மனப்பாங்கு

சூரியனில குடியேறினாலும் மாறுமோ தெரியாது நிழல்? :)

Edited by Thalaivan

நான் முந்தி மோட்டுசிங்களவன் எண்டு ஒரு சொல்லை வைச்சு கருத்தெழுதேக்கையே என்ரை கருத்தை தூக்கின நிர்வாகம் இப்ப அதையே தலையங்கமாய் வைச்சு வந்த கட்டுரையை வேடிக்கை பாக்கினம் போலை கிடக்கு :)

்உண்மை தான் கு.சா

:rolleyes: நம்மவர்கள் மனதளவில் பலவீனப்படும் பொழுது அடுத்தவர்களை முட்டாளாக்கி சந்தோசப்படுவதையே இது காட்டுகின்றது. அந்தப் பலவீனம் இளைஞனுக்கும் ஏற்பட்டிருப்பது வேடிக்கை. அதை களம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. :lol::)

  • தொடங்கியவர்

நல்லது. கட்டுரையை வாசிக்காமல் தான் நானிட்ட தலைப்பு பற்றி கருத்துரைக்கப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். கட்டுரை முழுமையாக வாசித்து உள்வாங்கப் பட்டிருந்தால், "மோட்டுச் சிங்களவன்" எந்த நோக்கில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதும் உள்வாங்கப் பட்டிருக்கும். நான் இணைத்த கட்டுரை இப்படிச் சொல்்கிறது:

“கல் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” என்று தம்மைப் புகழ்ந்துரைத்தும், சிங்கள மக்களை “மோட்டுச் சிங்களவர்” என்று இகழ்ந்துரைக்கும் ஒரு பிழையான போக்குண்டு. மேற்படி இந்த இரு வாக்கியங்களிலுமே கண்மூடித்தனம் உண்டு. “மோட்டுச் சிங்களவர்” என்ற கண்மூடித்தனமான வார்த்தையைப் பிரயோகிப்பவர்கள் உணரவேண்டிய ஒரு யதார்த்த உண்மை உண்டு. ஒரு விரிவுரையின்போது, ஒரு பேராசிரியர் சுட்டிக் காட்டிய விடயம் இது. அதாவது, ஒரு சிறிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற, பிரம்மாண்டமான இந்தியாவிற்குக் கீழ் அமைந்துள்ள ஒரு சிறிய தீவே இலங்கை. அந்த பிரம்மாண்டமான இந்தியாவின் பிடிக்குள் அகப்பட்டுக் கரைந்து போகாமல் 2,500 ஆண்டுகளாகத் தப்பியோடி, தமது அரச பண்பாட்டுப் பாரம் பரியங்களுடன் வாழக்கூடிய திறமை, தந்திரம் என்பன சிங்கள சமூகத்திடம் உண்டு. இந்த பிரம்மாண்டமான இந்தியாவால், சிங்கள அரசையும், கலாசாரத்தையும் தோற்கடித்துத் தம்முடன் இணைத்துக்கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு மிகவும் புத்தி சாதுர்யத்துடன், இந்தியாவை பன்னூற்றாண்டு காலமாகக் கையாண்டு வருவதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதே அர்த்தம்.

யானைக்கு புயம் பலம், எலிக்கு வளை பலம். இதனைச் சிங்கள உயர்குழாத்தினர் சரிவர உணர்ந்திருக்கின்றார்கள். சாணக்கியன் இப்பொழுது உயிரோடு இருந்தால், அவர் சிங்கள ராஜதந்திரிகளிடம்தான் ராஜதந்திரம் கற்க வேண்டியிருக்கும். கூட்டுச்சேரல், விட்டுக்கொடுத்தல், பின்வாங்கல், ஒங்கி அறைதல் போன்ற, தருணத்திற்குப் பொருத்தமான, தெரிவை மேற்கொள்வதில் சிங்கள அரசியல்வாதிகள் மிகவும் சாமர்த்தியமானவர்கள். எல்லாம் முடிந்துவிட்டது. இதோ மூழ்கி அழியப் போகிறார்கள் என்பது போன்ற ஒரு கட்டத்திற்கூட, சிங்களத் தலைவர்கள் நிலைமையைத் திடீரென்று தலைகீழாய்ப் புரட்டிவிட்டு, அதன்மேல் நிற்பார்கள். இலங்கைமீது படையெடுக்கப்போவதாக அச்சமூட்டிய இந்தியாவை, 1987ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனா இப்படித்தான் தமக்குச் சாதகமாய்க் கையாண்டு வெற்றி பெற்றார்.

"மோட்டுச் சிங்களவன்" என்ற சொல்லாடலையும், அதனைப் பயன்படுத்தும் தமிழச்சமூகத்தின் அறிவிலித்தனத்தையும் விமர்சிக்கிறது மேற்கண்ட கட்டுரை. அப்படியொரு கட்டுரையை இணைத்துவிட்டு "மோட்டுச் சிங்களவன்" என்ற தலைப்பையிட என்ன காரணம் அல்லது என்ன நோக்கம் இருக்கமுடியும்?

ஒரு இனத்தை மட்டம் தட்டுவதற்கு அல்லது கீழ்நிலைப்படுத்துவதற்கு "மோட்டுச் சிங்களவன்" என்ற சொல்லாடலை பயன்படுத்துவதற்கும், அப்படிப் பயன்படுத்துவது தவறு என்று விமர்சிக்கிற கட்டுரைக்கு "மோட்டுச் சிங்களவன்" என்று தலைப்பிடுவதற்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. "பரதேசி" என்று ஒருவரைத் திட்டுவதற்கும் "பரதேசி" என்று ஒரு கவிதைத் தொகுப்புக்கு தலைப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு போன்றதே இதுவும். இந்த அடிப்படையான + வெளிப்படையான விடயத்தை புரிந்துகொள்ளமுடியாமல், கட்டுரை பற்றிக் கருத்தாடாமல் தலைப்போடு மட்டும் நின்று...

நல்லது.

நீங்கள் மேலதிகமான விளக்கத்தோடும் வியாக்கியானங்களோடும் வருவீர்கள் என்று தெரியும். எனவே தயவுசெய்து - முடிந்தால் தலைப்பைத் தாண்டி, கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள்.

Edited by இளைஞன்

"மோட்டுச் சிங்களவன்" என்ற சொல்லாடலை பயன்படுத்துவதற்கும், அப்படிப் பயன்படுத்துவது தவறு என்று விமர்சிக்கிற கட்டுரைக்கு "மோட்டுச் சிங்களவன்" என்று தலைப்பிடுவதற்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. "பரதேசி" என்று ஒருவரைத் திட்டுவதற்கும் "பரதேசி" என்று ஒரு கவிதைத் தொகுப்புக்கு தலைப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு போன்றதே இதுவும்.

அப்ப இதை கவிதையென்று சொல்லுங்கோ :lol: நானும் கட்டுரையா வாசிச்சிட்டன் அண்ண. மன்னிச்சுக்கோங்கோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் எல்லாராலும் திருப்திப்படுத்த முடியாது. வாசுகி தனது மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறார். கதை குறித்து விமர்சிப்பதை விடுத்து கதாசிரியரை விமர்சனம் செய்வதால் எதுவித பலனுமில்லை. அவர் பீபீசீக்கு ஒரு முறை கொடுத்த செவ்வியில் இலங்கை தமிழர் குறித்து உலகம் பேச தமது நூல் ஒரு தொடக்கமாக இருந்தால் மகிழ்வதாக சொல்லியிருந்தார்.

இன்றைய உலகத்தில் எத்தனை பேர் புத்தகங்கள் வாசித்து ஒர் இனத்தை பற்றி புரிந்து கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்கள்?தொலைகாட்சி மூலம் சில செய்திகளை கேட்டு அரைகுறையாக விளங்கும் மக்கள் தான் அதிகம்.புத்தகம் வாசித்து ஒர் இனத்தை பற்றி அறியும் மக்கள் கூட்டம் உலகத்தை பொறுத்தவரை 2% வராது.இந்த இலட்சணத்தில் தமிழரை பற்றி அறிய இவர் புத்தகம் எந்தவகையில் உதவி புரியும் என்று தாங்கள் விளக்கமாக கூறின் நல்லது.

இன்றைய இளையதலைமுறையினர் எப்படியான புத்தகம் எழுத வேண்டும் என்று நீங்கள் விரும்புறீங்கள். :rolleyes:

நீங்கள் வாசித்தீங்களோ?

நல்லது. கட்டுரையை வாசிக்காமல் தான் நானிட்ட தலைப்பு பற்றி கருத்துரைக்கப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். கட்டுரை முழுமையாக வாசித்து உள்வாங்கப் பட்டிருந்தால், "மோட்டுச் சிங்களவன்" எந்த நோக்கில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதும் உள்வாங்கப் பட்டிருக்கும். நான் இணைத்த கட்டுரை இப்படிச் சொல்்கிறது:

உங்கள் வியாக்கியானம் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போல் உள்ளது. முதலில் நீங்கள் இணைத்தது உங்கள் சொந்த ஆக்கம் இல்லை. அதை எழுதியவர் அதற்கு ஒரு தலையங்கத்தைக் கொடுத்துள்ளார். அதை மாற்றியதே முதலில் தப்பு. அதுபோல் தலையங்கத்தை மாற்றிய நீங்கள் ஏன் கட்டுரை ஆரம்பத்தில் அந்த மாற்றத்தைச் செய்யவில்லை. சிலர் குறிப்பிட்டது போல் இந்தக் கருத்தை மற்றவர்களை பார்க்க வைக்க ஒரு விளம்பர உத்தியாகவே நீங்கள் இதைக் கையாண்டு இருக்கின்றீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக தலையங்கத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்திருந்தால் "மோட்டுச் சிங்களவன் ?" அல்லது "மோட்டுச் சிங்களவனா??" என்றே தலையங்கத்தை மாற்றி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே. நான் நீங்கள் இணைத்தவற்றை முற்றாக படித்த பின்தான் எனது கருத்தையும் பதிந்திருந்தேன். ஆனால் உங்களிடமிருந்து இப்படியான ஒரு தலையங்கத்தையோ அதற்கான நொண்டிச் சாட்டுக்களையோ எதிர் பார்த்திருக்கவில்லை.

"ஒரு கருத்தாளன் பாவிக்கும் சொற்பிரயோகங்கள் அவனையும் அறியாமல் அவனது மனவக்கிரங்களை படம் பிடித்துக் காட்டிவிடுகின்றது என்பது உண்மையான வார்த்தைகள்."

  • தொடங்கியவர்

்உண்மை தான் கு.சா

:huh: நம்மவர்கள் மனதளவில் பலவீனப்படும் பொழுது அடுத்தவர்களை முட்டாளாக்கி சந்தோசப்படுவதையே இது காட்டுகின்றது. அந்தப் பலவீனம் இளைஞனுக்கும் ஏற்பட்டிருப்பது வேடிக்கை. அதை களம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. :rolleyes::unsure:

உங்கள் வியாக்கியானம் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போல் உள்ளது. முதலில் நீங்கள் இணைத்தது உங்கள் சொந்த ஆக்கம் இல்லை. அதை எழுதியவர் அதற்கு ஒரு தலையங்கத்தைக் கொடுத்துள்ளார். அதை மாற்றியதே முதலில் தப்பு. அதுபோல் தலையங்கத்தை மாற்றிய நீங்கள் ஏன் கட்டுரை ஆரம்பத்தில் அந்த மாற்றத்தைச் செய்யவில்லை. சிலர் குறிப்பிட்டது போல் இந்தக் கருத்தை மற்றவர்களை பார்க்க வைக்க ஒரு விளம்பர உத்தியாகவே நீங்கள் இதைக் கையாண்டு இருக்கின்றீர்கள்.

"நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக தலையங்கத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்திருந்தால் "மோட்டுச் சிங்களவன் ?" அல்லது "மோட்டுச் சிங்களவனா??" என்றே தலையங்கத்தை மாற்றி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே. நான் நீங்கள் இணைத்தவற்றை முற்றாக படித்த பின்தான் எனது கருத்தையும் பதிந்திருந்தேன். ஆனால் உங்களிடமிருந்து இப்படியான ஒரு தலையங்கத்தையோ அதற்கான நொண்டிச் சாட்டுக்களையோ எதிர் பார்த்திருக்கவில்லை.

"ஒரு கருத்தாளன் பாவிக்கும் சொற்பிரயோகங்கள் அவனையும் அறியாமல் அவனது மனவக்கிரங்களை படம் பிடித்துக் காட்டிவிடுகின்றது என்பது உண்மையான வார்த்தைகள்."

முதலில், நான் எனது பலவீனத்தின் காரணமாக அடுத்தவர்களை (சிங்கள மக்களை?) முட்டாளாக்கி சந்தோசப்படுவதாக சொல்கிறீர்கள். பிறகு விளம்பர யுத்திக்காக அப்படி எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். இதில் எந்தக் குற்றச்சாட்டை இறுதியாக என்மீது வைக்கிறீர்கள். அல்லது இரண்டுமா. நல்லது.

முதலாவதற்கு நான் ஏற்கனவே எனது விளக்கத்தை எழுதிவிட்டேன். கட்டுரை எனதும் இல்லை - சிங்கள மக்கள் பற்றிய கருத்தையும் நான் இங்கு எங்கும் எழுதவில்லை. தலைப்பிலிருக்கும் "மோட்டுச் சிங்களவன்" என்ற சொல்லாடலும் கட்டுரையில் இருந்தே பெறப்பட்டதே. கட்டுரையின் தலைப்பும் கட்டுரையின் மேலே இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பை நான் மாற்றியதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது வீணான வாதம். கருத்துக்களத்தில் திரியின் தலைப்பை "மோட்டுச் சிங்களவன்" என்று குறிப்பிட்டிருப்பதால், கட்டுரையின் தலைப்பையும் அப்படி மாற்றியிருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வதும் வீணான வாதமே. கட்டுரை எனதல்லாத போது கட்டுரையின் தலைப்பை நான் எப்படி மாற்றமுடியும்? ஆனால், இந்தத் திரி (thread)யை நான் தொடங்கியதால் கட்டுரைக்கு பொருத்தமான/கட்டுரையின் பேசுபொருளை/கட்டுரையின் விவாதப்பொருளாக நான் கருதுவதை உணர்த்தக்கூடியதாக தலைப்பையிடுவதற்கான உரிமை எனக்குள்ளது. தலைப்பு வாசகர்களை ஏமாற்றும் வகையிலும், கட்டுரைக்குத் தொடர்பில்லாத வகையிலும் அமைந்திருக்கக் கூடாது என்பதே முக்கியம்.

இரண்டாவதற்கு: கட்டுரையை விளம்பரப்படுத்துவதால் எனக்கொன்றும் நன்மையில்லை. கட்டுரை எனதுமில்லை. விளம்பர யுக்தி என்பதெல்லாம் அதிகமான ஒன்று. இந்தக் கட்டுரையை நான் இங்கு இணைத்து அதிகமானோர் இதனைப் படிப்பதால் எனக்கொன்றும் வருமானமும் வரப்போவதில்லை. :huh:

கருத்துக்களத்தில் சிங்கள மக்களை தாக்கி கீழ்த்தரமாக "மோட்டுச் சிங்களவன்" என்று எழுதப்படுவது உண்டு. இந்தக் கட்டுரை அந்த மனோநிலையை விமர்சிப்பதால் பொருத்தம் கருதியே கட்டுரையை இங்கு இணைத்தேன். இதில் வியப்பு என்னவென்றால், நான் என்ன காரணத்துக்காக ("மோட்டுச் சிங்களவன்" என்று வக்கிரத்தனமான சிந்தனைக்கு எதிராக) இந்தக் கட்டுரையை இணைத்தேனோ, அதே காரணத்தை வைத்து (நான் சிங்கள மக்களை வக்கிரத்தனமாக மோட்டுச் சிங்களவன் என்று சொல்வதாக) என்னை விமர்சிப்பது. :huh: புரிதல் இப்படியாக இருக்கிறது என்பது கவலைக்கிடமானதே. நல்லது.

சிங்கள மக்களை தாக்கி அல்லது முட்டாளாக்கி நான் தலைப்பிட்டதாக இங்கு குறிப்பிடப்பட்டதால், இல்லையென அதை மறுத்து நான் என்நிலை விளக்கம் தரவேண்டியிருந்தது. மற்றும்படி, குமாரசாமி அண்ணாவுக்கும், வசம்பு அண்ணாவுக்கும் நன்றி. அதேபோல் கட்டுரை தொடர்பாக கருத்தெழுதிய ஏனையவர்களுக்கும் நன்றி :)

Edited by இளைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.