Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம் - இரண்டு திருட்டு மனங்களின் இணைவு (வயசு வந்தவர்களுக்கு மட்டும்)

Featured Replies

வணக்கம்,

புதிய நாகரீகங்கள், பழக்கவழக்கங்கள், தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சிகளோட மனுச வாழ்க்கையும் தினமும் மாறிக்கொண்டு போகிது. இந்த மாற்றங்களில வெளிநாடுகளில இருக்கக்கூடிய தமிழ் ஆக்களுக்கு சவாலாக இருக்கிற ஒரு விசயம் திருமணம் + குடும்ப வாழ்க்கை. இதுபற்றி இஞ்ச கொஞ்சம் பேசலாம் எண்டு நினைக்கிறன்.

ஒவ்வொரு கிழமையும் வெளிநாடுகளில எங்கையாவது ஒரு ஹோலுக்க தடல்புடலா ஆடம்பரமா எங்கட ஆக்களிண்ட கலியாணங்கள் நடக்கிது. அங்க ஆட்டம் என்ன பாட்டு என்ன எல்லாம் சொல்லி வேலை இல்லை. பிறகு திருமண வரவேற்பு எண்டு கலியாணம் முடிஞ்ச கையோட அடுத்த கிழமை திரும்பவும் ஹோல் எடுத்து அதுக்க பெரிய கொண்டாட்டங்கள். உதுக்கு எல்லாம் ஆகிற செலவு எவ்வளவு தெரியுமோ? சுமார் ஐநூறு பேரை கொண்டாட்டத்துக்கு கூப்பிட்டால் ஓரளவு சிறப்பாக ஆடுவதற்கு இஞ்ச கனடாவில சுமார் $25,000 காசு தேவைப்படும். அத்தோட 200 பேருக்கு வரவேற்பும் வச்சால் செலவை சுமார் $35,000 சொச்சம் எதிர்பார்க்கலாம். பிறகு புதுகலியாண தம்பதியினர் வாழ்க்கை துவங்கிறது எண்டால் வீடு, கார் எண்டு செலவுகள்...

இப்ப கேள்வி என்ன எண்டால் இவ்வளவு செலவு செய்து கலியாணம் கட்டிப்போட்டு எல்லாரும் சந்தோசமாக இருக்கிறீனமோ எண்டுறதுதான். நான் பார்த்த அளவில உவையள் கலியாணம் செய்யேக்க துள்ளிக்குதிக்கிற அளவுக்கு உள்ளுக்க எல்லாரும் உண்மையில சந்தோசமா, மனநிறைவோட, நிம்மதியாக வாழுறதா காண இல்லை. எல்லா வீடுகளுக்கையும் பிரச்சனைகள். சனங்கள் சும்மா வெளியில ஆக்களுக்கு ஷோ காட்டிக்கொண்டு உள்ளுக்க போத்து மூடிக்கொண்டு இருக்கிதுகள். எனது ஆசானாக இருக்கக்கூடிய ஒருவர் திருமணங்கள் செய்து வைக்கிற பதிவாளராகவும் இருக்கிறார். அவர் சொன்னார் ஒருத்தன் தன்னட்ட வந்தானாம் கலியாணம் செய்து வையுங்கோ எண்டு. பிறகு மூண்டு மாதத்தால வந்தானாம் விவாகரத்து எடுத்து தரச்சொல்லி..

பெண்கள் பகுதி பற்றி பார்த்தால் ஊரில இருந்து ஒருத்தியை கலியாணம் செய்துபோட்டு வாழுற வாழ்க்கை வெற்றிகரமானது எண்டு சொல்லிறதுக்கு இல்லை. நான் அறிஞ்ச ஒருத்தர் ஊரில இருந்து கலியாணம் கட்டி கூப்பிட்டார் மனுசியை. அந்தப்பிள்ளை என்னால இஞ்ச இருக்க ஏலாது எண்டு சொல்லிபோட்டு இவரை விட்டுப்போட்டு திரும்ப ஊருக்கு போயிட்டுது. இதுமாதிரி படிக்கிற பெடியங்கள் மனுசிமாரை இஞ்ச கூப்பிட அதுகள் கொஞ்சநாளைக்கு இருந்துபாத்துப்போட்டு நீங்கள் படிப்பை முடிச்சுக்கொண்டு அங்க வாங்கோ என்னால இஞ்ச இருக்க ஏலாது எண்டு சொல்லிப்போட்டு திரும்பி போட்டுதுகள்.

இந்தவகையில ஊரில இருந்து கூப்பிட்டு கலியாணம் செய்யுற விளையாட்டு எல்லாருக்கும் சரிப்பட்டு வருமோ எண்டுறது கேள்விக்குறி. முக்கியமான காரணம் என்ன எண்டால் இங்கு இருக்கும் யதார்த்த சூழ்நிலைகள், இங்கு இருக்கும் வாழ்வு, இஞ்ச இருக்கிற பெடிகள் எப்படி உண்மையில வாழுறீனம் எண்டுற விசயம் ஊரில இருக்கிற பெண்களுக்கு தெரியாது. அவையள் அங்க இருந்து ஏதோ பிரமாண்டமான கற்பனை செய்துகொண்டு இருக்கிறீனம். இதனால அவர்களால புதியசூழ்நிலைகளுக்கு ஈடுகொடுத்து வாழ ஏலாமல் இருக்கிது. தவிர, ஒருத்தன் கலியாணம் கட்டி கூப்பிட்டு இஞ்ச வந்துபோட்டு பிறகு அந்தப்பெண்கள் அவனுக்கு டாட்டா காட்டிப்போட்டு இன்னொருத்தனோட வாழுற கேசுகளும் கனடாவில இருக்கிது. இப்பிடி ஊரில போய் கலியாணம் கட்டின ஆக்களுக்கு ஒருபக்கத்தால பிரச்சனைகள்... சரி...

அப்பிடி எண்டால் இஞ்ச கனடாவில இருக்கிற பெண்களை கலியாணம் கட்டின ஆக்கள் என்ன செய்யுறீனம் எண்டு பார்த்தால்.. அவையளாவது நிம்மதியா இருக்கிறீனமோ எண்டு பார்த்தால் அதை சொல்லிறதுக்கு கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கிது. இஞ்ச கனகாலம் இருக்கும் பெண்கள் (இஞ்ச பிறந்தவர்கள், இஞ்ச சிறுவயதில வந்தவர்கள், இங்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல இருப்பவர்கள்) கூடுதலாக வாழ்க்கையை வியாபாரமாக பார்ப்பவர்களாக இருக்கிறீனம். மற்றது அவையளுக்கு சுயநலம் எக்கச்சக்கம். மற்ற ஆக்களோட சகஜமாக உரையாடி பெடியனிண்ட குடும்ப ஆக்களோட நல்லமாதிரி பழகக்கூடிய தன்மை எல்லாம் இல்லை. ஒருத்தனை கலியாணம் கட்டினால் அவன் மட்டும் வேணும். அவனிண்ட அம்மா, அப்பா, குடும்பம், உறவினர்கள் எல்லாம் வெட்டு. கலியாணம் முடிஞ்ச கையோட பெடியனிண்ட பகுதிக்கு சங்கு. சரி உறவுகளை வெட்டினாலும் பரவாயில்லை. வீட்டுக்கையாவது புருசன், பெஞ்சாதி சந்தோசமா, நிம்மதியா இருக்கிறீனமோ?

எல்லாம் இயந்திர வாழ்க்கை. கடனுக்கு வீடு துவக்கம் தளபாடம் வரை எல்லாம் அள்ளி அள்ளி ஆசையில வாங்கிபோடவேண்டியது. பிறகு கடன் pressure இல, மற்றும் இன்னும் இன்னும் வேணும் எண்டுற ஆசையில சுடுதண்ணி குடிச்ச நாய்மாதிரி ஓடித்திரிய வேண்டியது. ஒழுங்கான சமையல் இல்லை. சாப்பாடு இல்லை. எல்லாம் பாஸ்டாவும், பீசாவும், பியரும் எண்டு ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை. அதாவது...

ஊரில கலியாணம் கட்டி நிம்மதியாக, நிறைவாக, அன்போட, ஆரோக்கியத்தோட வாழுற வாழ்க்கை வெளிநாடுகளில மிகவும் குறைவாக இருக்கிது (இப்ப ஊரும் பழுதாய் போயிட்டுது எண்டு யாரோ சொன்னார்கள்). உண்மையில சிறப்பான முறையில வெளிநாடுகளில வாழுற தம்பதிகள் இருக்கிறீனம்தான். ஆனால் ஒப்பீட்டளவில குடும்பங்களுக்க பிடுங்குப்பாடுதான் அதிகளவில இருக்கிது. இந்தகாலத்தில நீண்டகால உறவுகளை, உண்மையான அன்பை, ஆரோக்கியமான வாழ்க்கையை ஒருவரும் எதிர்பார்க்கிறதாக காண இல்லை.

எல்லாம் வியாபாரமயம். வெளிப்பூச்சுக்கள், படிப்புக்கள், $$, என்ன கார் வச்சு இருக்கிறீனம், எப்பிடி வகை வகையான உடுப்பு போடுறீனம்.. இந்த அடிப்படையிலதான் உறவுகள் கட்டி எழுப்பப்படுகிது. ஆண்களும் அப்பிடித்தான். பெண்களும் அப்பிடித்தான். மனச்சாட்சி, நேர்மை, நம்பிக்கை இதுகள் ஒண்டும் இல்லாமல் சுயநலத்தை மையப்படுத்தி உருவாகும் உறவுகள் - திருமண பந்தங்கள் வாழ்க்கைக்கு எப்படியான அர்த்தத்தை காண்பிக்கும்? என்னமோ நடக்கிது. ஒண்டுமா விளங்க இல்லை.

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கிழமையும் வெளிநாடுகளில எங்கையாவது ஒரு ஹோலுக்க தடல்புடலா ஆடம்பரமா எங்கட ஆக்களிண்ட கலியாணங்கள் நடக்கிது. அங்க ஆட்டம் என்ன பாட்டு என்ன எல்லாம் சொல்லி வேலை இல்லை. பிறகு திருமண வரவேற்பு எண்டு கலியாணம் முடிஞ்ச கையோட அடுத்த கிழமை திரும்பவும் ஹோல் எடுத்து அதுக்க பெரிய கொண்டாட்டங்கள். உதுக்கு எல்லாம் ஆகிற செலவு எவ்வளவு தெரியுமோ? சுமார் ஐநூறு பேரை கொண்டாட்டத்துக்கு கூப்பிட்டால் ஓரளவு சிறப்பாக ஆடுவதற்கு இஞ்ச கனடாவில சுமார் $25,000 காசு தேவைப்படும். அத்தோட 200 பேருக்கு வரவேற்பும் வச்சால் செலவை சுமார் $35,000 சொச்சம் எதிர்பார்க்கலாம். பிறகு புதுகலியாண தம்பதியினர் வாழ்க்கை துவங்கிறது எண்டால் வீடு, கார் எண்டு செலவுகள்...

இப்போ திருமணத்தை பெரிதாக நடத்துவது , பிறந்த நாள் கொண்டாட்டம் , 60 ம் கலியாணம் , சாமத்திய சடங்கிற்க்கு ஊரில் இருந்து வாழை இலை , தாமரை இலை எடுத்து அதில் ஆட்டிறைச்சி போட்டு விருந்து வைப்பது போன்றவை , சிலருக்கு அந்தஸ்தை காட்டுவதற்காக செய்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகின்றது . இப்படிப் பட்டவர்களை உசுப்பேத்திவிடுவதற்கு அவர்களின் நண்பர்கள் , உறவினர்களும் காரணம் . பிறகென்ன ஆடம்பரமாக கொண்டாட்டம் செய்ய வங்கியில் கடன் வாங்குவது . பிறகு வட்டியுடன் வருடக்கணக்கில் காசை கட்டும் போது குடும்பத்துக்குள் பிரச்சினை தோன்றாமல் இருக்குமா ? மற்றவர்களைப்பார்த்து வாழாமல் , என்னால் எது முடியுமோ ? என்று அதன் படி வாழ்ந்தால் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் .

  • தொடங்கியவர்

திருமணம் கொண்டாடப் படுறதிலையும் பல சிக்கலுகள் இருக்கிது. ஆண்பகுதி விரும்பாவிட்டாலும், பெண்பகுதியிண்ட அழுத்தம் காரணமாக இல்லாட்டிக்கு பெண்பகுதி விரும்பாவிட்டாலும் ஆண்பகுதியிண்ட அழுத்தம் காரணமாக கடன்வாங்கியாவது ஆட்டம் போடவேண்டிய தேவை இருக்கிது. இஞ்ச கலியாணம் கட்டுற ஆக்களவிட கலியாணம் பெருத்த எடுப்பில கொண்டாடப்பட வேணும் எண்டு வெளியில இருந்து வாற அழுத்தம் அதிகம்.

என்னட்டையே வேலை செய்த இடத்தில, படிச்ச இடத்தில என்னுடன் பழகினவங்கள் தங்களுக்கு கலியாணவீட்டுக்கு அழைப்பிதழ் தரவேண்டும் எண்டு கட்டளை. நான் உதுகளைப்பற்றி இன்னமும் தீவிரமா யோசிக்க இல்லை. மற்றது, கலியாணம் எண்டு செய்தால் நாலைஞ்சு பேருக்கு மாத்திரம் சொன்னால், மிச்ச ஆக்களுக்கு சொல்லாட்டிக்கு பிறகு சனம் கோவா போட்டிடும். பிறகு அதால கெட்டபெயர். அப்பிடி பார்த்தால் எப்பிடியும் ஆகக்குறைஞ்சது இரண்டு பகுதியாலையும் ஒரு ஐநூறு பேராவது வந்திடும்.

இந்தக்காலத்தில கலியாணவீட்டுக்கு போற இடத்தில காசு - அன்பளிப்பு குடுக்கவேண்டிய தேவை இருக்கிது. இஞ்ச சனம் பொக்கற்றுக்க எல்லாம் மட்டு மட்டாத்தான் வாழ்கைய ஓட்டுறது. பிறகு அந்தக்காசையும் - அன்பளிப்பையும் கடன் அட்டையில இழுத்துவிடுறது.

இப்பிடி பார்க்கப்போனால் கையில அம்பதாயிரம் - $50,000 காசு இல்லாமல் கலியாணம் கட்டிற விளையாட்டில இறங்கினால் நீங்கள் சொன்னமாதிரி கடனில கூத்து ஆடிப்போட்டு பிறகு ரெண்டுபேரும் பிணக்குப்பட்டுக்கொண்டு இருக்கவேணும். கலியாணத்துக்கு செலவளிக்கிற காசை எங்கையாவது நல்ல முதலீட்டில போட்டால் இல்லாட்டிக்கு வீட்டை வாங்கினால் அது பிரயோசனப்படும். ஆனால் வாழ்க்கை எண்டால் ஒரு முறை ஆட்டம் போடாவிட்டாலும் ஒரு அர்த்தம் இல்லாமல் போயிடுமோ எண்டு பயம் வேற.

ஆனால் ஊர் எண்டால் நிலமை வேற... ஆடம்பரமாக பலருக்கு அழைப்பு குடுத்து கலியாணத்தை சிறப்பாக செய்யலாம். ஆனால் கலியாணம் முடிய தம்பதியினர் ஒழுங்காக பிரச்சனை இல்லாமல் திரும்பி வருவீனமோ எண்டுறதுதான் பிரச்சனை. மற்றது இஞ்ச இருக்கிற ஆட்களை திருப்திப்படுத்த ஏலாது.

இதுகூட பிரச்சனை இல்லை. முக்கியமான பிரச்சனை என்ன எண்டால் உவையள் கலியாணம் கட்டிப்போட்டு வாழ்க்கையில மகிழ்ச்சி இல்லாமல், நிம்மதி இல்லாமல் பிரச்சனைப்பட்டுக் கொண்டு இருக்கிறதுதான். மனச்சாட்சி, நம்பிக்கை, நேர்மை இல்லாவிட்டால் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைச்சு இருக்காது. நல்ல அனுபவமும் கிடைக்காது. அவன் அவளை கள்ளனாக பார்க்க, அவள் அவனை கள்ளனாக பார்க்க.. இப்பிடியே ஆக்களுக்க முறுகுப்பட்டு சீரழியவேண்டியதுதான். இந்த சீரழிவு இஞ்ச தொடர்ந்துகொண்டு இருக்கிது.

1. சந்தோசமான குடும்ப உறவுக்கும், ஆடம்பரமாக செலவு செய்து நடாத்தும் திருமண வைபவத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஒருவரை ஒருவர் மதித்தல் தான் சந்தோசத்தின் அடிப்படை. ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் மதிக்கும் போது எழுவது தான் உண்மையான காதல். எம்மவர் மத்தியில் இது எவ்வளவு தூரம் உணரப் பட்டுள்ளது என்றும் எத்தனை பேர் 50 வயதுக்கு மேலும் தம் துணை மீது காதலுடன் இருக்கின்றார்கள் என்றும் கணித்து பாருங்கள். உண்மை விளங்கும்

2. நாம் எப்போது மன பொருத்தம் பார்த்து திருமணம் செய்தோம் (விதி விலக்குகள் ஏராளம்). சாதகம் பார்து, சாதி பார்த்து, யோனி பொருந்தம் பார்த்து, சீதனம் எவ்வளவு என்று பார்த்து, சுற்றம் பார்த்து செய்யும் போது, எந்த இடத்தில் மனப் பொருத்தமும் Compatibility யும் பார்த்தோம்?

3. 'கடன் பட்டார் நெஞ்சம் போல' என்று கம்பரே அந்த காலத்தில் மோசமான, துயரமான மனநிலையை சொல்லியிருக்கார். தலைக்கு மேல் கடன் பட்ட பின் எவ்வாறு நிம்மதி கிடைக்கும்? எத்தகைய சிறந்த குடும்பமும், கடன் தொல்லையால் அதன் நிம்மதி இழக்கும். கனடாவில் மற்றவர்களுடன் போட்டி போட்டு எல்லாம் வாங்கி, பின் கடன் தலைக்கு மேல் ஏறி நிம்மதி இழப்பவர்கள் ஏராளம். அடுத்த தலைமுறை இந்த தவறை செய்யாது என்பதற்கு சில மாற்றங்களை அவதானிக்க கூடியதாக இருப்பது மனதுக்கு சந்தோசமாக இருக்கு

4. நான் கனடாவிற்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றது. கிட்டடியில் ஒரு கொண்டோ (Condominium )வாங்க முயன்றேன். என் உழைப்பிற்கும் வருமானத்திற்கும் குறைந்தளவு பணத்தில் அதனைத்தான் வாங்க முடியும். ஆனால் 'பெரிய வீடு வாங்கலாம் தானே' என்று அறிவுரை சொன்ன பெரியோர்கள் எக்கச்சக்கம் ("தான் பெற்ற துரயம் பெறுக வையகம்" என்று நினைத்தார்கள் போல)

Edited by NIZHALI

நான் கனடாவிற்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றது. கிட்டடியில் ஒரு கொண்டோ வாங்க முயன்றேன். என் உழைப்பிற்கும் வருமானத்திற்கும் குறைந்தளவு பணத்தில் அதனைத்தான் வாங்க முடியும். ஆனால் 'பெரிய வீடு வாங்கலாம் தானே' என்று அறிவுரை சொன்ன பெரியோர்கள் எக்கச்சக்கம் ("தான் பெற்ற துரயம் பெறுக வையகம்" என்று நினைத்தார்கள் போல)

ஏன் ஏற்கனவே :icon_mrgreen: சின்ன வீடோ :o வைச்சிருக்கிறியள்.

:( பி.கு: நான் இருக்கிற வீட்டைப் பற்றித் தான் கேட்கிறன். பிறகு நீங்கள் ஏதும் தப்புத் தப்பாய் விளங்கி விட வேண்டாம். :(

ஏன் ஏற்கனவே :icon_mrgreen: சின்ன வீடோ :o வைச்சிருக்கிறியள்.

:( பி.கு: நான் இருக்கிற வீட்டைப் பற்றித் தான் கேட்கிறன். பிறகு நீங்கள் ஏதும் தப்புத் தப்பாய் விளங்கி விட வேண்டாம். :(

ஐயகோ... என்ற 'பெரிய வீடு' நான் எழுதுகின்ற எல்லாத்தையும் வாசிக்கிறது.. இதற்கு நான் உண்மையான பதிலை சொன்னால் இப்ப கிடைக்கிற சாப்பாடும் கிடைக்காமல் போயிடும் (கேக்கிறதையும் கேட்டு போட்டு, அதில அடைப்புக் குறி குறிப்பு வேற) :D

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயகோ... என்ற 'பெரிய வீடு' நான் எழுதுகின்ற எல்லாத்தையும் வாசிக்கிறது.. இதற்கு நான் உண்மையான பதிலை சொன்னால் இப்ப கிடைக்கிற சாபாடும் கிடைக்காமல் போயிடும் (கேக்கிறதையும் கேட்டு போட்டு, அதில வேற அடைப்புக் குறி குறிப்பு வேற) :o

இப்படியா மனைவிக்கு பயம் சரி விடுங்கோ எல்லோரும் இப்படித்தான்

  • தொடங்கியவர்

நிழலி, நீங்கள் சொன்ன சில கருத்துக்கள் ஏற்புடையவைதான். ஆனால் எங்க பிரச்சனை இருக்கிது தெரியுமா?

இந்தகாலத்தில காதலிக்கிறதை ஏதோ கூடாத செயலாகவும், காதல் செய்பவர்களை தீண்டத் தகாதவர்களாகவும் பார்க்கிற நிலமை ஒருபக்கத்தால தொடர்ந்துகொண்டு அல்லோ இருக்கிது. இப்பிடியான நிலமையில மனப்பொருத்தம் எப்பிடி அமையும்? அப்பா, அம்மா பேசிச்செய்யுற கலியாணத்தில மனப்பொருத்ததுகு எங்க இடம் இருக்கப்போகிது? இடம் இருந்தாலும் இரண்டு திருடர்களும் கடைசிவரை எல்லாத்தையும் மறைக்கத்தானே பார்ப்பார்கள்? மற்றது..

சாதி, சமயம், அந்தஸ்து, குறிப்பு எண்டு பார்க்காது மனச்சாட்சியுடன், நேர்மையுடன் திருமண விசயங்களை அணுகினால் அப்படியான மனநிலையில இருக்கிற பெண்ணை, ஆணை ஏதோ குறைபாடு உள்ள ஆக்களாக அல்லோ சனம் பார்க்கிது. கொஞ்சம் இறங்கிப்போனால் கிடைக்கிற மரியாதையே இல்லாமல் அல்லோ போகிது. இவருக்கு இல்லாட்டிக்கு இவவுக்கு வேற ஏதோ பிரச்சனை போல அதாலதான் இப்பிடி சாதி, சமயம், அஸ்தஸ்து, குறிப்பு எண்டு பார்க்காது அலுவல் பார்க்கிறீனம் எண்டு அல்லோ பேச்சு வரும்?

மற்றது, நான் மேல செலவுகளை நல்லா குறைச்சு சொல்லிப்போட்டன். போக்குவரத்து (குடும்பம் - கலியாணநாள்), ஆடை (மாப்பிளை பொம்பிளை மிச்சம் குடும்பம்), அலங்காரம் (மிச்சம் மேக் அப்புகள்), நகை (மற்றும் தாலி), இதர கைச்செலவுகள் எண்டு பார்த்தால் உண்மையில ஆகக்குறைஞ்சது $50,000 வேணும் கனடாவில ஆக்கள ஹோலுக்கு கூப்பிட்டு பலர் முன்னிலையில கலியாணம் கட்டுறதுக்கு. ஆனால் என்னதான் இருந்தாலும் சனம் கடன்பட்டாவது கொண்டாட்டம் போட்டுக்கொண்டுதான் இருக்கிதுகள்.

கடைசியில புருசன், பெஞ்சாதி நிம்மதியா மகிழ்ச்சியுடன் வாழுறீனமா? பலர் வீடுகளில அவையள் கதைக்கிறதே நீ, நான், ஆ.. ஊ எண்டு மிருக பாசையிலதான். கலியாணம் கட்டின கொஞ்சநாளில தூசணமும் இதில சேர்ந்துகொள்ளும்.

காதலிக்குறவங்களை எந்தக் காலத்திலுமே கூடாத செய்கையாளர்களாகவோ அல்லது தீண்டத்தகாதவர்களாகவோ எவரும் பார்க்கவில்லை. குறிப்பாக உறவினர்கள். அவர்கள் அச்சத்துடன் பார்த்தார்கள் என்பதுதான் உண்மை. அதாவது அந்தக் காதலின் தன்மை எப்படியானது என்றதுதான் முக்கியமானது.

ஏனெனில் காதலில் பலவகை உண்டு. ஆனால் தொடாமல் காதலிப்போர் எத்தனைபேர்? காமத்தின் அடிப்படையில் உண்டாகாத காதல் எவ்வளவு வீதம்? காதலா காமமா என்பதுதான் அச்சத்தின் முக்கிய காரணம்.

பெரும்பாலானவர்கள் காதலில் சினிமாவை அமுல்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். இது எவ்வளவுதூரம் நிலைக்கும்?

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது பழமொழி. அனுபவ மொழியும் கூட. மோகம் முப்பது நாள்.. ஆசை அறுபது நாள் என்பது முதுமொழி. இதுவும் அனுபவ மொழிதான்.

காதரலர்களானால் என்ன..பெற்றோர் பார்த்து திருமணமானவர்களானாலென்ன.. இந்த மொழிகள் அவர்கள் விடயத்தில் எவ்வளவுதூரம் உண்மை என்பதைக் கவனித்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், திருமணச் சடங்கு.. தாலி.. மோதிரம் போன்றவை.. அதிகப் பழக்கத்தால் ஏற்பட்ட புளிப்புத்தன்மையை திசைதிருப்பி, வாழ்க்கை என்ற ஒரு கடமையுணர்வுக்கு அவர்களைத் தள்ளுகிறது என்பதுதான் உண்மை. நாளடைவில் அதுவே பிரிக்க முடியாத பந்தமாக மாறுகிறது. இதன் நம்பகத்தன்மை எவ்வளவு தூரம் என்றால்.. அதை ஒப்பீட்டளவில்மட்டுமே கூறலாம். அதாவது.. காமத்தினடிப்படையில் எழும் காதலுக்கும் பார்க்க மேலானது என்று கூறலாம்.

ஏனெனில்.. திருமணத்தின் பின் ஏற்படும் அனுபவமானது அவர்களை குறிப்பிட்டு காலம் இணைய வைப்பதன் மூலம்.. பந்தத்துக்கு இட:டுச் செல்கிறது. ஆனால் காதலானது வெறும் உடலளவில் ஏற்படும்போது, திருமணத்திற்குப் பிறகு அங்கே அவர்கள் என்ன ஈர்ப்பைப் பெறப்போகிறார்கள்? அதனால் அப்படியான காதல் திருமணம்வரைக்குமாவது நிற்குமா என்பதுதான் அச்சத்தின் காரணம்?

உடல் சாராத உண்மையான காதல் என்று யாராவது கூறலாம்.. எங்காவது விதிவிலக்காக ஒன்றிரண்டு இருக்கலாம்.. அப்படி இருக்கா, என்ன? :):o

  • தொடங்கியவர்

ஹாஹா... சோழியன் மாமா. நல்ல காலம் நான் நினைச்சன் உத எழுதினது நெடுக்காலபோவான் ஆக்கும் எண்டு, பிறகுதான் வடிவாய் பார்த்தால் உங்கட படம் இருக்கிது. சரி அதவிடுங்கோ.

நான் மேல சொன்ன கருத்தாடலை ஆரம்பிச்ச நோக்கமே மம்மி டாடி பேசி செய்து புளுத்துப்போன திருமணபந்தங்களை அவதானிச்ச காரணத்திண்ட அடிப்படையிலதான். எண்ட அவதானிப்பில அமைஞ்சது இப்பிடி நீங்கள் சொன்னமாதிரி தாலி, மோதிரம் எண்டு அம்மா, அப்பாவிண்ட வழியில போன ஆக்களிண்ட கதைதான்.

அப்ப வடியாவாய் அதையும் சொல்லுங்கோ. ஏன் இப்பிடி எல்லாம் சீரழிஞ்சுபோகிது? எல்லாம் பாத்து, பேசி, வியாராரம் - டீல் அந்தமாதிரி செய்யப்பட்டபிறகு ஆட்டம் எல்லாம் முடிஞ்ச உடன நாளாந்த சாதாரண வாழ்வில் இப்பிடியான தம்பதிகளாக மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்க ஏலாமல் இருக்கிது இஞ்ச கனடாவில. அது ஏன்?

மற்றது, அம்மா அப்பா பேசிற கலியாணத்திலதான் காதலிச்சு கலியாணம் செய்யுறத விட காமம் மேலோங்கி நிக்கும். பூசைக்கு கூட்டிக்கொண்டு வந்த கிடாயும், மறியும் மாதிரி ரெண்டு திருடர்களும் உடம்பை முறுக்கிக்கொண்டு மம்மி டாடிக்கு பின்னால நிக்கேக்க அதிலதான் காமம் மேலோங்கி நிற்க சந்தர்ப்பம் ஏற்படுகிது. காதலிக்கிறவங்கள் உப்பிடி உவையள் மாதிரி உடம்பை முறுக்கிக்கொண்டு நிப்பீனம் எண்டு சொல்ல ஏலாது. அவர்கள் மனம் பக்குவப்பட்டு இருக்கும். ஆனால் அம்மா, அப்பா விரலை காட்டி செய்யுற கலியாணத்தில அப்பிடி இல்லை.

நீங்கள் உங்கட காலத்து கதை சொல்லுறீங்கள். ஊரில, உங்கட காலத்தில உதுகள் உண்மையா இருக்கலாம். ஆனால் வெளிநாட்டு சீவியத்தில, வெளிநாட்டு வாழ்க்கையில இதுகள் எல்லாம் பொய்ச்சு போட்டிது. நடைமுறையில இதுகள் தோல்வியில போகிது.

பலர் காதலுக்கு பின் நிற்கிறதுக்கு, இல்லாட்டிக்கு காதலை ஆமோதிக்காமல் இருக்கிறதுக்கான காரணம் எப்பிடியான பயம் தெரியுமோ? Business deal ஐ சரியாக close பண்ண ஏலாமல் இருக்கிறதாலதான். அம்மா, அப்பா கலியாணம் எண்டால் அதை வியாபாரரீதியாக அணுகி அலுவல் பார்க்க வசதியாக இருக்கும். சுயநல செய்கைகளுக்கு அது இலகு. ஆனால் காதல் எண்டால் உந்த வியாபார விளையாடு சரிவராது. அதுக்கு பக்குவம், அன்பு, நம்பிக்கை, நேர்மை தேவை.

காதலிக்கிற பலருக்கு நம்பிக்கை, மனச்சாட்சி, நேர்மை இதுகள் இல்லாட்டிக்கு அது அவையிண்ட பிழை. அது காதலிண்ட பிழை இல்லை. அப்படியானவர்களுக்கு காதல் சரிவராது. அதுக்காக காதல் கலியாணத்தை கிண்டல் பண்ணுறது சரியாக தெரிய இல்லை. நீங்கள் சொன்னமாதிரி தமிழ் சினிமா காதலை கேலிக்கூத்தாக்கிவிட்டது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் வழிய ஒரு பழக்கம் இருக்கு. அதாவது காதலிக்கிறவனெல்லாம் ஏதோ உடல் சுகத்துக்கு ஆசைப்படுற மாதிரியும் அம்மா அப்பா பாத்துக் கட்டிவைக்கிற மாப்பிளை பொம்பிளைமார் எல்லாரும் நல்ல பிள்ளையள் எண்ட மாதிரியும் பிரசங்கம் பண்ணுவினம்.

உடம்பப் பாத்து அதுக்காக மட்டுமே காதலிக்கிற கேசுகள் கனக்க இருக்குதான். அதுக்காக பேசிக் கட்டுற கேசுகள்தான் ரொம்ப ஒழுக்கம் எண்டு காதுபடவே கதைக்கிறது ரொம்ப ஓவர்.

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வெளிநாடுகளில எல்லாம் கப்பலில வேலை செஞ்சிட்டு ஊருக்கு வந்து தன்ர அம்மாவின்ர விருப்பத்துக்கு கட்டினவர். அதுக்கு முன்னால ஒரு காதல் அவருக்கு இருந்தும் அதை அம்மாவுக்காக உதறித் தள்ளினவர் எண்டும் தானே சொல்லிக் கொண்டார். நான்கூட யோசிச்சன்.. ஆகா அம்மா பாசமெண்டால் இதுவல்லோ எண்டு. கிட்டடியில அவரே சொன்னார், தான் ஒவ்வொரு முறை கப்பலில ஏறி வெளிநாடுகளில இறங்கைக்குள்ளயும் அஜால் குஜால் வேலை செய்வாராம். ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு விட்டுட்டாராம். மனுசிக்கு இது தெரியாதாம். ஆனால் இவ‌ருக்கு இங்க‌ எக்க‌ச்ச‌க்க‌ ம‌ரியாதை. ஏனெண்டால் தாய் சொல்லைத் த‌ட்டாத‌ த‌ன‌ய‌னாம். :o

இப்பிடி தாய் தகப்ப கட்டி வைச்ச பல கேசுகளைப் பாத்திருக்கிற‌ன். அதில நிறையப் பேர் கல்யாணத்துக்கு முன்ன ஆசையைத் தணிச்சிட்டு பிறகு அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளையாட்டம் வேற கலியாணம் கட்டினவை. :)

என்னைப் பொறுத்த‌ வ‌ரைக்கும் வெளிநாட்டு வாழ்க்கையில வீண் ப‌க‌ட்டுக்கு இட‌ம் குடுக்க‌ப் ப‌டாது. உங்கள் வருமானத்துக்கேற்ப வீடு வாங்கலாம் விடலாம். வசதிக் குறைவாக இருந்தாலும் வ‌ணிக‌ ரீதியாக இலாபம் கிடைக்குமானால் வீடு வாங்கி விற்கலாம். ஆனால் மற்ற ஆக்களுக்கு ஷோ காட்டுறதுக்காக வீடு வாங்கிறதைப் பற்றி என்னத்தைச் சொல்லுறது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பொருளாதார பலமே தம்பதிகளின் ஒற்றுமையில் குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் முறையில் கூட சுய பொறுப்புணர்வு முறைக்கே (Internal Responsibility System)முக்கியத்துவம் தரப்படுகிறது. அதாவது ஒருவர் தான் எடுக்கும் முடிவுக்கு அவரே பொறுப்பு.

காதல் கல்யாணம் தோல்வியில் முடிந்தால் அதற்குக் காதலர்களே பொறுப்பு. அதனால் வேறு யாருக்கும் பாதகம் இல்லை. ஆனால் பேசிக் கட்டும் திருமணத்தில் பலசமயங்களில் பெற்றோர் மூக்கை நுழைத்து சம்பந்தப்பட்டவர்களின் விருப்பத்துக்கு மாறாக கட்டி வச்சிடுவினம். பிறகு அவையளுக்குள்ள பிணக்குப்பாடு வந்தால் மாப்பிள்ளை குழந்தைப்பிள்ளை மாதிரி மூக்கைச் சிந்திக்கொண்டு அம்மாவிட்ட வருவார். பொம்பிளையும் தன்ர வீட்டில கொம்பிளைன் பண்ணுவா. இதெல்லாம் தேவையா? இதையெல்லாம் கண்ணால கண்டுட்டுத்தான் எழுதுறன். பிரச்சினை முத்திப் போச்செண்டால் மாப்பிளையின்ர அம்மாக்காரி சொல்லுவா.. அவன் ஆம்பிளை.. ஆயிரம் கல்யாணம் கட்டுவான் எண்டு..! இதென்ன மாட்டில விடுற விசயமே..! :o

நான் இங்கே முக்கியமாகக் கூற வந்த விடயம் 'கவர்ச்சி'. திருமணத்துக்கு முதல் பழகும்போது.. கவர்ச்சி ஒரு குறிப்பிட்ட காலத்தால் மறைந்து போகிறது. ஆனால் பேசிச் செய்யும் திருமணத்தில், திருமணத்தின் பின்புதானே கவர்ச்சி தோற்றமாகிறது. அதைத்தான் மேலே சுட்டிக் காட்டினேன்.

ஆனால் முரளி அவர்கள் திருமணமானவர்களின் வாழ்க்கை சீரழிவதைப்பற்றி குறிப்பிட்டதால் அதைப்பற்றியும் சிறிது ஆராயலாம்.

தாயகத்திலே ஒரு ஊரில்.. ஒரு வீதியிலுள்ளவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள். அதனால் இவர்கள் கவனிக்கிறார்கள் என்பதற்காக.. தம்பதிகளென்ன.. இளைஞர்களென்ன.. சிறுவர்கள் என்ன தவறு விட யோசிப்பார்கள்.. தவறுவிட்டால் உறவுகளிடையே தனித்து வாழ நேரிடும் என்ற அச்சநிலை அங்கே உருவாவதால்.. குடும்பங்களிடையே பிரிவு ஏற்பட சாத்தியங்கள் குறைவாகின்றது.

ஆனால், வெளிநாடுகளில் தமிழர்கள் நெருங்கி வாழ்ந்தாலும் உறவினர்கள் நெருங்கி வாழும் நிலை குறைவு. அத்துடன் பொருளாதார தங்கி வாழும் சூழலும் குறைவு. அதற்கும் மேலாக உறவு என்ற மரியாதை நிலை குறைவு. இந்த மரியாதை நிலை அற்றுப் போவதால்... ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஏனைய ஒரு நபரால் தூண்டப்படுவதும் சாத்தியமாகிறது. இதனால் முறைகெட்ட உறவுகளும் குடும்ப சீரழிவுகளும் உருவாகின்றன.

இந்த சீரழிவுகள் மேனாட்டவர்களால் ஒரு பொருட்டாக எடுக்கப்படுவதில்லை. ஆனால் தாயக பழக்க வழக்கங்களை கைவிட முடியாத மனநிலையிலுள்ளவர்களால் தாங்க முடியாமல் உள்ளது. அதுவும் நெடுங்காலம் வாழாது. காலப்போக்கில்.. நாமும் புகலிட நாடுகளில் ஏனைய இனங்களைப்போல சோடி மாற்றலை சாதாரணமாக்க பழகிவிடுவோம்.

மற்றும்படி.. காதல் அது இது என்று பெரிதாக அலட்டிக் கொள்வதெல்லாம் தாயத்திலோ தமிழகத்திலோ இடம்பெறலாம். புகலஈிட நாடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்களா? அது காதல்.. குறிப்பிட்ட காலத்தால் அவர்கள் வேறு வேறு ஆட்களை விரும்புகிறார்களா.. அதுவும் காதல்.. இப்படித்தான் சொல்லிக் கொள்ளுவோம். :):o

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலே ஒரு ஊரில்.. ஒரு வீதியிலுள்ளவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள். அதனால் இவர்கள் கவனிக்கிறார்கள் என்பதற்காக.. தம்பதிகளென்ன.. இளைஞர்களென்ன.. சிறுவர்கள் என்ன தவறு விட யோசிப்பார்கள்.. தவறுவிட்டால் உறவுகளிடையே தனித்து வாழ நேரிடும் என்ற அச்சநிலை அங்கே உருவாவதால்.. குடும்பங்களிடையே பிரிவு ஏற்பட சாத்தியங்கள் குறைவாகின்றது.

சோழியன் அண்ணா..

மேலே நீங்கள் சொன்ன கருத்துதான் என்ர கருத்தா பல காலம் இருந்தது. போகப் போக நான் கேள்விப்பட்ட பார்த்த பல சங்கதிகள் எங்கட ஆக்களின்ர பல நடவடிக்கைகள் எதை முன்னிறுத்தி இருந்திருக்கு எண்டதை எனக்கு விளங்கப்படுத்திச்சுது.

எங்கட ஊரில கனக்க காதல் பிரிபட்டிருக்குது. இது 25 வருசத்துக்கு முந்தின கதைகள். அப்ப பிரச்சினைகள் ஊரில பெரிசா இல்லை. பிரிக்கப்படுறதுக்கு காரணங்கள் பலது. சாதிப் பிரச்சினை. அந்தஸ்து பிரச்சினை. சில சந்தர்ப்பங்களில ஈகோ பிரச்சினை.. இப்பிடி பல. பல சந்தர்ப்பங்களில முதிர்ச்சியுடன் கூடிய மச்சான் மச்சாள் காதலே கூட தூக்கி எறியப்பட்டிருக்கு.

ஊரில எல்லாருக்கும் இந்த வகை காதல்கள் தெரிஞ்சிருக்கு. அதை உடைச்சு தாய்தகப்பன்மார் வேற கல்யாணம் கட்டிக் குடுக்கக்கிள்ளையும் புதுப் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் தெரிஞ்சே இருந்திருக்கு. இதையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு (சம்பந்தப்பட்டவர்களிடமிருந்

  • தொடங்கியவர்

சோழியன் மாமா, நீங்கள் சொன்ன பல விசயங்களுக்கு என்னால அனுபவ ரீதியாக பதில் சொல்ல முடியாது. ஏன் எண்டால் எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. எண்டாலும் தர்க்கரீதியாக நீங்கள் சொன்ன பலவிசயங்களை மறுக்கமுடியும்.

முதலாவதாக நீங்கள் சொன்ன கவர்ச்சி சம்மந்தமான விசயம் தவறானது. திருமணத்தின் பின்பா கவர்ச்சி தோன்றுகின்றது? அப்ப திருமணம் செய்யமுன்னுக்கு என்ன சாமியாரா, சாமி அம்மாவா இருந்திச்சீனமா? காதலை கவர்ச்சி எண்டு சொன்னால் ஆண், பெண் உறவும் கவர்ச்சிதானே? பெடி, பெட்டைகள் திருமணம் கட்ட முனைவதே இந்த போகங்களை அனுபவிக்கதானே? இது எப்படி திருமணத்தின் பின்தான் நிரந்தரமான கவர்ச்சியாக இருக்கமுடியும்? அப்படி இஞ்ச இப்ப கனடாவில இருந்தால் இப்படி எல்லாம் சீரழிய மாட்டார்களே! காதலின்போது ஏற்படுகின்ற கவர்ச்சி தற்காலிகமானது எண்டு நீங்கள் எதைவைத்து சொல்லுறீங்கள்? எத்தினயோபேர் வெளிநாடுகளில காதலித்து பிறகு திருமணம் செய்து வெற்றிகரமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறீனம். மனப்பக்குவம் இல்லாத, சுயசிந்தனை இல்லாதவர்கள் செய்யுற சேட்டைகளை நீங்கள் காதலுக்குரிய வரைவிலக்கணத்தில நகர்த்தப்பார்க்கிறீங்கள். இது தவறானது.

இரண்டாவது, நீங்கள் மனிசநாகரீகத்தில முன்னோக்கி போறவிசயங்களை முன்னோக்கி போகாமல் பின்னோக்கி போறது நல்லம் எண்டுறமாதிரி சொல்லுறீங்கள். தொழில்நுட்பம், விஞ்ஞானம் எல்லாம் நகர்ந்துவிட்ட - முன்னேறிவிட்ட இந்தக்காலத்தில இந்தக்காலத்துக்கு ஏற்றமாதிரி நடைமுறை அம்சங்களை பழக்கவழக்கங்களை உருவாக்கவேணும். இப்ப குழந்தை வளர்ந்துகொண்டு போகிது. அஞ்சு வயசில போட்ட உடுப்பை எப்பிடி நீங்கள் இருபத்து ஐஞ்சு வயசில அதே பிள்ளைக்கு போடுவீங்கள்? மனிதநாகரீகமும் அப்பிடித்தான் அப்ப இருந்த சட்டையை இப்ப எடுத்துபோட்டால் அது அளவு இல்லாமலும் பொருத்தம் இல்லாமலும் இருக்கும்.

மூண்டாவது, காதல் பற்றிய பார்வை. சரி நீங்களே சொல்லுங்கோ. நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறீங்கள் எண்டு வையுங்கோ. சினிமாக்காதல் இல்லை. இதயசுத்தியுடனான உண்மையான காதல். ஆனால் அது கலியாணம் மட்டும் நகரவில்லை. இல்லாட்டிக்கு இடையில முறியுது எண்டு வையுங்கோ ஏதோ ஒரு காரணத்தால. அப்பிடி எண்டால் நீங்கள் செய்யவேண்டிய சரியான நடவடிக்கை என்ன? காதல் பொய், இந்த வாழ்க்கை பொய் எண்டு சொல்லிக்கொண்டு சாமியாரா போறதா? இல்லாட்டிக்கு காதல் கூடாதது எண்டு பிரச்சாரம் செய்யுறதா? இல்லாட்டிக்கு உங்கட தேடலை தொடர்வதா? ஒருமுறைதான் காதலிக்கவேணும். அது தோல்வியில முடிஞ்சால் சாகவேணும் இல்லாட்டிக்கு அதுக்கு பிறகு காதல்பற்றி நினைக்கக்கூடாது இப்படியா தமிழ் கலாச்சாரம் சொல்லிது? ஒருத்தன்/ஒருத்தி இதயசுத்தியுடன் நேர்மையுடன் அன்பிற்காக ஏங்கும்போது அது எங்கையாவது எக்கச்சக்கமாக அவனை/அவளை மாட்டிவிடுறது, தோல்வியில முடியுறது இயல்பான ஒருநிலை. அதற்காக அது காதல் இல்லை அல்லாட்டிக்கு அதுக்கு பிறகு ஏற்படுறது காதல் இல்லை எண்டு சொல்லஏலாது.

உங்களுக்கு தாகம் வந்தால் தண்ணியை தேடிபோறீங்கள். அது கானல் நீராக இருந்தால் தாகம் தணியப்போவதில்லை. தேடல் தொடரும் எப்பமட்டும் எண்டால் அந்த தாகம் தீர்க்கப்படும்வரை. காதலை இப்படிக்கூட பார்க்கலாம். பிழையான ஒருத்தரில அன்பை தேடி கடைசியில அவமானப்படுவது உங்கள் தவறு அல்ல. காதல் இயல்பான ஒரு உணர்வு. சந்தர்ப்ப, சூழ்நிலைகள் இரண்டு உள்ளங்கள் இணைவதற்கு முட்டுக்கட்டை போடலாம். ஆனால் உங்களை தாகத்தை தீர்க்கக்கூடிய, உங்களில நிரந்தர அன்பு செலுத்தக்கூடிய இன்னொரு உயிர் உலகத்தில எங்கையாவது இருக்கக்கூடும். அது அப்பா, அம்மா தேடி தருவதாக இருக்கமுடியாது. தேடலில வெற்றி பெறுவது உங்கட பொறுப்பு.

நான் அம்மா, அப்பா பார்த்து செய்துதருகின்ற திருமணம் கூடாதது இல்லாட்டிக்கு அப்பிடி செய்வது கூடாதது எண்டு சொல்ல இல்லை. எப்படியான திருமணமாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி மனச்சாட்சி, நேர்மை, நம்பிக்கை, இதயசுத்தி இவை இல்லை எண்டால் அது காதலாக இருந்தால் என்ன, அம்மா, அப்பா பேசுகின்ற திருமணமாக இருந்தால் என்ன, எப்படியான உறவாக இருந்தாலும் அது நிலைக்கப்போவதில்லை. நீண்ட, நிறைந்த, நிரந்தரமான, மகிழ்வான வாழ்வியல் அனுபவத்தை பெறுவதற்கு மனச்சாட்சி, நேர்மை, நம்பிக்கை, இதயசுத்தி இவை முக்கியம். இது இப்ப இருக்கிற தம்பதியரிட்ட இருக்கிதா எண்டுறதுதான் கேள்விக்குறி. ஏன் எண்டால் வியாபாரரீதியாக வாழ்வை பார்க்கும் நபர்களிடம் நிச்சயம் இந்தத் தன்மை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்று வந்தால்.. ஆடம்பரமென்பது.. எங்கட ஆக்களிட்ட மட்டும் தான் என்று சொல்லுறது.. பார்க்கிறது தவறு.

பிரமாண்டமான ஆடம்பரங்களோடு வெள்ளையளும் திருமணம் செய்யினம். உண்மையில் அவைதான் இந்தப் பிரமாண்டங்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறது. அதற்குள் வர்த்தக நோக்கம் இருப்பது இரண்டாம் பட்சம்.

எம்மவர்களின் பாரம்பரிய திருமண முறை ஆடம்பரத்துக்கு அப்பால்பட்டது. மஞ்சள் கயிறோடு முடிந்த கலியாணங்கள் தான் அதிகம். மோதிரம்.. வைர நெக்கிளஸ்.. மணப்பெண் அலங்காரம்.. மணமகன் அலங்காரம்.. திருமண வரவேற்பு.. வைன்(சம்பைன்) போத்தலை உடைச்சு.. விசிறி... இப்படி.. ஆடம்பரங்களை திருமணச் சடங்குக்க கொண்டு வந்தது மேற்குலக விற்பன்னர்கள். அவர்கள் அச்சடங்கினூடும்.. வர்த்தகத்தை வருவாயைப் பெருக்கிக் கொள்கிறார்கள். சனம் அறியாமல் செலவு செய்கிறது.

எம்மவர்கள் பாரம்பரியத்தை (திருமணச் சடங்களில் பாரம்பரியத்துக்கு முக்கியமளிப்பதால் நாம் விஞ்ஞான உலகில் எதனையும் இழந்துவிடப் போவதில்லை. விஞ்ஞானம் வளர்ந்திட்டு என்பதற்காக சந்திரமண்டலத்திற்குப் போய் தான் கலியாணம் செய்வன் என்று அடம்பிடிக்கக் கூடாது.. அப்படிச் செய்யமாட்டார்கள்.) மதிக்கிறதை தரக்குறைவா நினைச்சு.. மேற்குலக திருமண நாகரிகத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பிரதிபண்ண முடியுமோ.. அதை அதிகம் பிரதிபண்ணுற அளவில தாங்கள் வெள்ளைக்காரனுக்கு நிகரா நிற்கிறம் என்று காட்டிறதா கற்பனை பண்ணிக்கினம். ஆனால் அந்த இடத்தில தங்களுக்கு என்றான பிரத்தியேக சடங்குமுறைகளையும் தொலைச்சுப் போட்டு அடிமைகள் போல.. இன்னொன்றை பிரதிபண்ணும் நிலையை நாகரிக உச்சி என்பதாக எண்ணிக் கொள்வதே இன்று அதிகமாகி வருகிறது.

மேற்குலக வாழ்க்கை முறையில்.. திருமணம்.. காதல் என்பது எந்தளவுக்கு மனிதர்களை திருப்திப்படுத்துது என்றதையும் அது எங்கட சமூகத்தில முன்னர் இருந்த திருமண வாழ்க்கை முறையில் மனிதர்களை திருப்திப்படுத்திய அளவோடு ஒப்பிடும் போது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் ஆராய வேண்டும்.

மேற்குலகில் கூட எவ்வளவோ பலமான நம்பிக்கையோடு தான் ஆணும் பெண்ணும் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் இடையில் பல்வேறு காரணங்கள் புகுந்து அந்த நம்பிக்கையை முறியடித்து காதல் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்துவிடுவதே அதிகமாக உள்ளது. இந்த நிலையில்.. இயற்கையாக மனிதனுக்கு உள்ள பாலியல் வேட்கைக்கு தீனிபோட.. காதல்... என்ற போர்வையில் மனிதர்கள்.. உடல் உரசுவதையே அதிகம் செய்ய விளைகின்றனர். இது மனிதனுக்குரிய சமூக வாழ்க்கைக்குரிய நாகரிகமல்ல. உண்மையில் நெறிப்பிறழ்வுகளால்.. மனதளவில் ஏற்படும் பிறழ்வுகளால் எழும் விரக்தி நிலையில் ஏற்படுவதே இது.

காதலிக்கிறன் என்ற போர்வையில் சிலர் தங்களுக்கு வசதியான மாப்பிள்ளை அல்லது பொம்பிளை தேடுறது.. அப்படி சரிவரல்ல என்றால் விட்டிட்டு இன்னொன்றோட ஓடலாம்.. அல்லது இன்னொன்றை தெரியலாம் என்று வாழ்வதும் அதிகரித்து வருகிறது. இது சமூக வாழ்க்கையின் நல்ல அடிப்படையாகத் தெரியவில்லை. அது சுயநலத்தின் சுயவாழ்க்கை பற்றிய அதீத அக்கறையில் எழுவது. அப்படியானவர்களால் நிச்சயம்.. அன்பாக குடும்பமான சமூக வாழ்வை பரிசளிக்க முடியும் என்பது தவறானது.

மேற்குலக குடும்பங்களில் யாரிடம் அதிக அமைதியும் அன்பும்.. மகிழ்ச்சியும் இருக்கிறது. வயதான தம்பதிகளிடம் தான் அதிகம் (ஆனால் எமது வயதான தம்பதிகளிடம் இந்த நிலை வெகு குறைவு). அவர்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழக் காரணம்.. அவர்களிடம் உடற்கவர்ச்சி தீர்ந்த நிலையில் உளக்கவர்ச்சி.. ஒருவரை ஒருவர் பராமரிப்பது.. கருசணை செய்வது.. தங்கி இருப்பது என்பது அதிகமாக உளத்தால் நெருக்கமும் அதிகரிக்கிறது. அவர்களிடமே தான் அதிகமாக குடும்ப மகிழ்ச்சி இருக்கிறது.

ஆனால் இன்று இளமைப்பருவத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள்.. நிம்மதியற்ற குடும்ப வாழ்வையே பலரும் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியிலும் எம் முன்னோர் போன்று அமைதியான அன்பான நீடித்த குடும்ப வாழ்வை ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் வாழ்பவர்கள் உள்ளனர். அதேவேளை மனமொவ்வாத.. உடலொவ்வாத சோடிகள் தற்காலிக இனக்கவர்ச்சிக்கு.. அல்லது பொருளாதாரக் கவர்ச்சிக்கு உள்ளாகி ஊருக்காக.. அல்லது தற்காலிக மகிழ்ச்சிக்காக வாழுதல் என்ற போலி நிலைதான் இன்று மேற்குலகில் அதிகம்.

மனமொவ்வாத.. உடலொவ்வாத இரண்டு பேர்.. காதலின் பெயராலோ.. செய்த தவறின் பெயராலோ.. பெற்றோரின் பெயராலோ.. இணைந்து அமைதியான அன்பான ஒற்றுமையான சமூகத்தனமான குடும்ப வாழ்வை.. நீடித்த வாழ்வை அளிக்க முடியாது. எம்மவர்கள் இவ்வாறு வாழவே அதிகம் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அங்கு நிம்மதியும் இல்லை.. விரும்பிய வாழ்வும் இல்லை. அவ்வாறான ஒரு நிலையில்.. அவர்கள் பிரிந்து கொள்வதற்குரிய தேர்வுச் சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு வரையறை இருக்க வேண்டும். தொடர்ந்து ஒரே தவறைச் செய்து எவ்வகையிலும் ஒவ்வாத ஒருவரை தெரிவு செய்வதும் பின்னர் கைவிடுவதுமாக இருப்பது மனநிலைப் பிரச்சனையாகவே நோக்க வேண்டும். அவ்வாறனவர்கள் தமக்குரிய சரியான ஆள் கிடைக்கும் வரை பொறுத்திருந்து அடுத்தவரின் வாழ்க்கையை சீரழிப்பதை தவிர்ப்பது நன்று. இன்று எம்மவர் சமூகத்திலும் இளைய சமூகத்தில் பலர் இவ்வாறே வாழ்கின்றனர். இதை அவர்கள் நவீன உலகின் முற்போக்கியம் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

ஆனால்.. மேற்குறிப்பிட்ட வாழ்க்கை முறையால்.. மனிதனின் சமூக வாழ்வு பலவீனமடைந்து வருவதை சமூக ஆய்வுகள் எடுத்துச் சொல்கின்றன.

மேற்குலக நாடுகள்.. விவாகரத்துக்கும்.. தனிப் பெற்றோருக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் பெற்றோர் பிரிவால் உளப்பாதிப்புக்கு உள்ளாகும் பிள்ளைகளைப் பராமரிக்கவும்.. பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் செய்யும் வன்முறை மற்றும் போதைப்பொருள் பழக்கம்... என்பவற்றைக் கட்டுப்படுத்தவும் மில்லியன் கணக்கான வரிப்பணத்தைச் செலவு செய்து வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.. சமூகத் தெரிவற்ற.. சுயநலத்தனமான.. உடற்கவர்ச்சிக்கு.. பொருளாதாரக் கவர்ச்சிக்கு.. முக்கியமளிக்கும் ஆண் - பெண் உறவுநிலையே.

அன்பும்.. அணுசரணையும்.. தங்கி இருப்பும்.. புரிந்துணர்வும்.. விட்டுக்கொடுப்பும்.. ஒருங்கிணைவும்.. இன்று இளைய சமூகத்திடம் அருகிவரும் பண்புகளாகி விட்டதால் திருமணம் என்பதும்.. ஊருக்காக ஆடம்பரமாக செய்யப்படும் ஒரு சடங்காகி இருக்கிறதே தவிர இரண்டு மனங்களின் உறுதியான ஒருங்கிணைவுக்கான சந்தர்ப்பம் என்ற நிலையை அது கடந்துவிட்டு அதிக காலமாகிவிட்டது எனலாம். இன்றைய திருமணங்கள்.. பட்டம் படிப்பு பதவி பணம் பகட்டு என்ற இந்த 5 "ப" களையும் மையப்படுத்தியே அமைகின்றன. இவையே ஆண் - பெண் இணைப்புக்கான காரணிகளாகவும் விளங்குகின்றன. இவ்வாறான ஒரு இணைவில்.. எவ்வாறு நீடித்த ஒருங்கிணைவு இருக்கும். நிச்சயம் அது தற்காலிகமானதாகவே இருக்கும். அங்கு காதலும் சரி.. சோடியும் சரி தற்காலிகமானதே. அதை விஞ்ஞானத்தின் பெயரால் சரியானது என்று தீர்ப்பளிக்காதீர்கள். விஞ்ஞானம்.. அமைதியான.. அன்பான.. புரிந்துணர்வுள்ள இணைகளின் ஒற்றுமையான நீடித்த வாழ்வில் தான்.. மனிதனின் ஆயுளே அதிகரிப்பதாகச் சொல்கிறது. :o

Happy Marriage-a Best Stress Buster

People who live a happy married life beat stress better than those live single, says a study that shows happy marriage as a best stress buster.

Popular perception is that single people have a carefree lifestyle. But the latest research shows that being in a loving relationship makes it easier to cope with the stresses and strains of working life, reported online edition of Daily Mail.

Psychologist Dr Roxane Gervais monitored the stress levels of more than 400 nurses working in Yorkshire hospitals. She found that those who were married or in a steady relationship, were least affected by the strains of the job.

It is thought that married people benefit from simply being able to talk through their day with someone after work. Such support may be particularly valuable in occupations such as nursing, in which emotions have to be suppressed during working hours, the study says.

The break-up of a marriage, however, has the opposite effect, with women who divorce being 50 percent more likely to develop heart disease in later life than those who stay married.

Stressed-out parents who work long hours are making their children unhappy. Fathers' stress levels are a particularly powerful influence, the study by the Institute of Education in London found.

Source-IANS

http://www.bio-medicine.org/medicine-news/...Buster-19361-1/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

டங்குவார், குலை அடிக்கப்பட்டது பற்றி சொல்லி இருந்தீங்கள். இது அடிக்கப்பட்டது பெண்களுக்கு மட்டுமா இல்லாட்டிக்கு ஆண்களுக்கும் சேர்த்தா? நான் உங்கட இந்தகருத்துக்கு வேண்டும் எண்டால் கனடாவில இருக்கிற இரண்டு பழம்பெரும் தமிழ் இலக்கியவாதிகளிட்ட கருத்து கேட்டு அதை இஞ்ச இணைக்கமுடியும். இண்டைக்கு அதுக்கு நேரம் இல்லை நாளைக்கு முடியுமானால் இணைக்கிறன்.

மற்றது நெடுக்காலபோவான் நீங்கள் காதல், சுயநலம் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கிறீங்கள். இதுக்கு சுருக்கமான பதில்:

காதலை ஹார்மோங்களின் சேட்டை எண்டுற அடிப்படையில கருத்து எழுதினது நீங்கள்தான். அப்பிடிப்பார்த்தால் முதலாவது மனுச வாழ்க்கையே ஹார்மோன்களின் சேட்டைதான். ஒருவனை ஆண் எண்டும், ஒருத்தியை பெண் எண்டும் வேறுபடுத்துவதே ஹார்மோன்கள்தான். சாமியாராக இருந்தால் என்ன, இல்வாழ்வில இருப்பவனாக இருந்தால் என்ன குழந்தையாக இருந்தால் என்ன, கிழவன் ஆக இருந்தால் என்ன சகல மனுசரிண்ட ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால ஹார்மோன்கள் இருக்கிது.

எங்களுக்கு ஏற்படுற பயம், கோவம், தாபங்கள் எண்டு ஒவ்வொரு உணர்வுக்கும் பின்னால ஹார்மோன்கள் இருக்கிது. இப்ப நீங்கள் நான் எழுதின கருத்தை வாசிச்சுபோட்டு அதுக்கு பதில் கருத்து எழுதுறீங்கள் எண்டால் - அந்த செய்கையை தூண்டுவது - அந்த செய்கைக்கு பின்னால ஹார்மோன்கள் இருக்கிது. இந்த ஹார்மோன்களிண்ட சேட்டை வாழ்க்கையில இறக்கும்வரை தொடரும். ஒருவனில முறுக்கிக்கொண்டு வீரம் வருவதற்கு பின்னாலையும் ஹார்மோன்களிண்ட சேட்டை இருக்கிது. ஆனால் நீங்கள் காதலை மட்டும் இப்பிடி தூக்கிப்பிடித்து கிண்டல் பண்ணி ஹார்மோனியம் வாசிக்கிறது உங்களுக்கு விஞ்ஞானத்தை சரியாக விளங்கிக்கொள்ள தெரியவில்லை அல்லது கையாள தெரிய இல்லை எண்டுறதுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிது.

உங்களுக்கு Maslow's hierarchy of needs எண்டு உளவியலில இருக்கிற பிரபலமான கொள்கை பற்றி தெரியுமா? பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு துறைகளில பல்கலைக்கழகங்களில பயன்படுத்தப்படுகின்ற இந்த கொள்கையிண்ட அடிப்படையில பார்த்தால் காதல் மற்றும் உறவுகள் மனித தேவைகளிண்ட ஆறுவிதமான படிகளில மூன்றாவது படியில இருக்கிது. அதாவது தனிமனித தேவைகள். சாப்பாடு, உடை, உறையுள், பிறகு பாதுகாப்பு இவற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது. உங்களால சாப்பிடாமல் உடுக்காமல், உறைவிடம் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் Homelesss ஆக நடுத்தெருவில நிக்கமுடியுமா?

சுயநலம் எண்டால் என்ன எண்டே உங்களால சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. மனுசனிண்ட அடிப்படை தேவைகளை சுயநலம் எண்டு பட்டியல் போட்டு கொச்சைப்படுத்தி இருக்கிறீங்கள். நான் சொன்ன சுயநலம் வேறு. நீங்கள் பிழையாக விளங்கிகொண்டுள்ள சுயநலம் வேறு. தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது வேறு. தனக்கு மட்டும்தான் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேணும் எண்டு நினைப்பது வேறு. இந்த இரண்டாவது வகை - 'தனக்கு மட்டும்' - எண்டு நினைப்பது கூடாதது. இதைத்தான் சுயநலம் எண்டு சொல்லிறது. இதுகள் பற்றி விளக்கமாக எழுத எனக்கு இப்ப நேரம் இல்லை. நீங்களே வாசிச்சி விளங்கிகொள்ளுங்கோ.

maslow.gif

வாசிக்க: http://en.wikipedia.org/wiki/Maslow%27s_hierarchy_of_needs

முரளி

டங்குவார் குறிப்பிட்டது "குழை" அடிப்பது பற்றி. நீங்கள் அதை தவறாக "குலை" அடிப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இரண்டிற்கும் அர்த்தங்கள் வேறானவை.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி

டங்குவார் குறிப்பிட்டது "குழை" அடிப்பது பற்றி. நீங்கள் அதை தவறாக "குலை" அடிப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இரண்டிற்கும் அர்த்தங்கள் வேறானவை.

வசம்பு , அந்த அர்த்தங்களை விளக்கமாக எங்களுக்கும் சொல்லுறது . :o

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார், குலை அடிக்கப்பட்டது பற்றி சொல்லி இருந்தீங்கள். இது அடிக்கப்பட்டது பெண்களுக்கு மட்டுமா இல்லாட்டிக்கு ஆண்களுக்கும் சேர்த்தா? நான் உங்கட இந்தகருத்துக்கு வேண்டும் எண்டால் கனடாவில இருக்கிற இரண்டு பழம்பெரும் தமிழ் இலக்கியவாதிகளிட்ட கருத்து கேட்டு அதை இஞ்ச இணைக்கமுடியும். இண்டைக்கு அதுக்கு நேரம் இல்லை நாளைக்கு முடியுமானால் இணைக்கிறன்.

எங்கட ஆக்கள் குழையடிக்கிறதில ஆண் பெண் பேதம் பாக்கிறதில்லை. :(

நான் சொன்னதில, ஒரு மச்சான் மச்சாள் காதல். ரெண்டு பேருக்கும் அப்ப 25 வயசுக்கு மேலை. பெண்ணின்ர பகுதிக்கு கல்யாணம் செய்து வைக்க சம்மதம். ஆனால் மாப்பிள்ளை பகுதிக்கு இல்லை. ஏனெண்டால் பொருத்தம் பாக்கிறதுக்கு பெண் வீட்டில இருந்து வரக்குள்ள பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்திட்டினமாம். அது பிழையான சம்பிரதாயமாம். அதனால அவையளுக்கு கல்யாணம் கட்டி வச்சால் அவமானமாம். இதச் சொல்லியே மாப்பிளையைக் குழையடிச்சு வெருட்டி வேற இடத்தில கட்டி வச்சிட்டினம். மேலோட்டமாக சம்பிரதாயத்தை ஒரு காரணமாக சொன்னாலும் உண்மையில அந்த வீட்டில இன்னுமொரு ஆண் சகோதரர் வீட்டைவிட்டுப் போய் காதல் கல்யாணம் பண்ணினதால வந்த காண்டிலதான் இதை முறிச்சுப் போட்டினம் எண்டு சம்பந்தப்பட்டவரே சொல்லக் கேட்டன்.

இதமாதிரி, இன்னொரு விவகாரத்தில, மாப்பிளை இன்னொரு பெண்ணுடன் டாவடித்தது ஊரில சந்து பொந்துல எல்லாம் தெரியும். மாப்பிளையின்ர அம்மாவுக்கு இது பிடிக்கல்ல. ஊரில உளவுப்படையெல்லாம் வச்சு வேவு பார்த்தவை. பிறகு மாப்பிளைக்கு ஒருவழியாக் குழையடிச்சு வேற கல்யாணம் செஞ்சு வச்சவை. காதல் பிரிப்புக்கு காரணம் அந்தஸ்து பிரச்சினை. அதாவது சீதனம், இனாம் சரிவராது எண்டு. ஆக பணப்பொருத்தம் பாத்து மாட்டில விட்டவை. பிறகு புதுத் தம்பதியை வெருட்டி ஒண்டா வச்சிருந்தவை. இதுதான் அந்தக் கல்யாணத்தின்ர வெற்றிக்கு காரணம். :)

நான் சொல்லுறதெல்லாம் எங்கட ஊர்க்காரரின்ர மண்டைப் பிரச்சினையோ தெரியாது. எதுக்கும் நீங்கள் சொன்ன பழம்பெரும் இலக்கியவாதிகளின்ர கருத்தையும் கேட்டு இன்க இணையுங்கோ. :(

இதமாதிரி பெண்ணுக்கு குழையடிச்ச உதாரணங்களும் இருக்கு. அதைச் சொல்ல விரும்பல்ல. :o

  • கருத்துக்கள உறவுகள்

அவ ஆப்பிள் மாதிரிடா என்று காதலிக்கும்போது கவிதை எழுதித் திரியும் ஆண்களும், அவன் ஆரஞ்ச் மாதிரிடி சாஃப்டான ஆளு என தோழியருடன் சிணுங்கித் திரியும் பெண்களும் திருமணத்தில் இணைந்தால் இப்படித் தான் இருக்கும் !!

image002.jpg:o

  • தொடங்கியவர்

டங்குவார், வசம்பு

அது குலையோ, குழையோ, என்ன இழவோ தமிழரிண்ட ரவூடீசத்தில இதுவும் ஒண்டு எண்டுறத இதை வாசிக்கும்ப்போது அறியக்கூடியதாக இருக்கிது. தமிழன் எவ்வளவு பிற்போக்கானவன், அநாகரீகமானவன் எண்டுறதுக்கு எடுத்துக்காட்டாக பல விசயங்கள் இருக்கிது. பிறகு இயக்கம் வந்ததோட பல விசயங்கள் மாறிப்போட்டிது. பெண் அடிமைத்தனம், பெண்விடுதலை எண்டு ஆக்கள் பிறகு கொதிச்சு எழுந்திச்சீனம். சரி உதுகள விடுங்கோ.

எல்லாரும் வெள்ளைக்காரனை அவனது பழக்கவழக்கம் பண்பாட்டை கூக்காட்டி சிரிக்கீறீங்கள். ஆனால் ஏதோ நீங்கள் அந்தமாதிரி புளுகிக்கொள்ளும்படியான வளர்ச்சியோட, அறிவோட வாழ்ந்த தமிழரால புளுகுமூட்டை கதைகளைதான் சொல்ல முடிஞ்சிது. இப்ப நானும் நீங்களும் இணையத்தில எழுதி விளையாடுறதுக்கு, பிளேனில போறதுக்கு, திரையில படம் பார்க்கிறதுக்கு, மருத்துவ வசதிகளை பெற்று சுகமாக வாழுறதுக்கு - ஆயுள் அதிகரிச்சு இருக்கிறதுக்கு... இப்பிடி அடுக்கிக்கொண்டே போகலாம். வெள்ளைக்காரங்கள் தான் காரணம். உங்கட பார்வைப்படி கேவலமான நாகரீகம் நடத்தைகள் கொண்ட ஒரு இனத்தால எப்படி இது எல்லாம் சாத்தியம் ஆச்சிது? நம்மவரால முடிஞ்சது ஆக கற்பனையில புட்பகவிமானம் ஓடினது, புருடாக்கள் விட்டது மாத்திரம்தான்.

இங்கு பிரச்சனை அம்மா, அப்பா பார்க்கிற கலியாணத்துக்கு அச்சாப்பிள்ளையாட்டம் தலையாட்டிக்கொண்டு போறது அல்ல. ஏன் தம்பதியினர் சீரழியினம் என்பது பற்றினது. எல்லாம் வியாபாரமயமாகீட்டிது. அப்பிள், ஆரேஞ்சுக்கு பின் குத்தி விளையாடி இருக்கிறமாதிரி.. பெடி, பெட்டிகளும் கழுத்தில விற்பனைக்கு எண்டு மட்டை மாட்டிக்கொண்டு அம்மா, அப்பாவோட கலியாணச் சந்தையில விரலை சூப்பிக்கொண்டு நிக்கிறீனம். அதப்பார்க்க உங்களுக்கு சிரிப்பாய் இல்லையோ?

நெடுக்காலபோவான் குறிப்பிட்ட 'ப' விசயம் ஏறிப்போய் இருக்கிறது அதுமாதிரி நான் குறிப்பிட்ட மனச்சாட்சி, நேர்மை, இதயசுத்தி இதுகள் இறங்கிப்போய் இருக்கிறது இதுதான் பிரச்சனை. காதலிச்சு செய்யுறதோ, இல்லாட்டிக்கு மம்மி டாடி வழியில போறதோ அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாப்பு எங்கடை இனத்தை இப்படி இழக்காரமாய்ச்சொல்லிப்போட

  • கருத்துக்கள உறவுகள்

முரளி,

முன்னொரு காலத்தில வெள்ளைக்காரனைப் பாத்து சிரிச்ச ஆள்தான் நானும். எங்கட கலாச்சாரம்போல எதுவும் இல்லை எண்டு இறுமாப்போடயும் திரிஞ்சன். ஆனால் போகப் போக சில விசயங்களில எங்கட ஆக்களின்ர செயல்பாடுகளில எனக்கு சலிப்பு தட்டீட்டுது.

வெள்ளைக்காரன் 16, 18 வயதுக்கு மேல தன்ர பாட்டுக்கு சோடியைப் பிடிச்சு தானே வாழ்க்கையைக் கொண்டு போறான். முடிவெடுக்கிறதும் அவன். அதனால வாற நன்மை தீமைக்கும் அவனே பொறுப்பு எடுக்கிறான்.

எங்கட ஆக்களின்ர வேலை என்னவெண்டால் ஆண் பெண் புரிந்துணர்வுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் பணம், சாதி அந்தஸ்து வறட்டு கௌரவம் இவையளுக்கு முக்கியத்துவம் குடுக்கிறது. கேட்காத சோடிகளை சமூகத்தில இருந்து ஒதுக்கி வைக்கிறது. இதுக்குப் பயந்தே கனபேர் ஆசைக்கு வெளில ஒண்டு சம்பிரதாயத்துக்கு ஒண்டு எண்டு வாழ்க்கையைக் கொண்டு போயினம். அடுத்தவன் முடிவு எடுக்க வேண்டிய விசயத்தில இன்னொருவர் முடிவெடுக்கிறதால வாற வினை இது.

கல்யாண வாழ்க்கை இனிக்க வேணும் எண்டால் முதலில தம்பதிகளுக்கு இடையில புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர ஈர்ப்பு அவசியம். ஈர்ப்பு எண்டுறது பார்த்த உடன வரவேணும். பணம் படிப்பு வேலை இதையெல்லாம் பார்த்த பின்னால வாறது சுயநல ஈர்ப்பு. அதே மாதிரி புரிந்துணர்வு சில காலம் பழகிய பின்பே வரும்.

புரிந்துணர்வு இல்லாமல் ஈர்ப்பை மட்டும் நோக்கமாகக் கொண்ட தாம்பத்தியம் வெறும் காம இச்சை. ஈர்ப்பு இல்லாமல் புரிந்துணர்வைக் கொண்ட தாம்பத்தியம் வெறும் இயந்திரத்தனம். ஈர்ப்பும் இல்லாமல் புரிந்துணர்வும் இல்லாமல் செய்வது விபச்சாரம்.

எனக்கு இதில என்ன விளங்கேல்ல எண்டால், ஆளை ஆள் தெரியாமல் பேசிக் கல்யாணம் கட்டி வைக்கினம். பத்து மாதத்தில அவையள் பிள்ளையும் பெறுகினம். எங்கட கலாச்சாரத்தில பெண் ஒழுக்கம், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எண்டு எதெல்லாமோ சொல்லினம். பிறகு பெரிசா அறியாத ஆள் மூலம் பத்து மாதத்தில பிள்ளையும் பெறுகினம். ஒண்டுமா விளங்கேல்ல. இது ஏதொ குருட்டு சேர்க்கை (Blind Date) போல இருக்கு. :o:unsure::(

கூறிய கருத்தை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு எழுதுங்க முரளி! இங்கே நான் கவர்ச்சி, மனப்பயம் இரண்டையும்பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இவை இரண்டும் மட்டுமே காரணங்களல்ல எனினும் இவற்றை முக்கிய அடிப்படைக் காரணங்களாக குறிப்பிட்டுள்ளேன். கவர்ச்சி என்பது மனித இயல்போடு கூடிய அகக் காரணம். மனப்பயம் என்பது பண்பாடு, கலாச்சாரம், சூழல் என்பவற்றால் ஏற்படும் புறக் காரணம்.

ஒரு குழந்தையானது ஒரு பொம்மையை பார்த்தது கவர்ச்சியால் அதை நாடுகிறது. சிலநாட்கள் அதனுடன் விளையாடுகிறது. அதன் பிறகு அதை ஆராய முற்படுகிறது. அந்த ஆராய்ச்சியின் பயனான அக்குழந்தையானது அப் பொம்மைக்கு வர்ணம் தீட்டி மேலும் அழகாக்கலாம்.. அல்லது அக்கு வேறு ஆணி வேறாக அப் பொம்மையை உடைத்துப் போடலாம். அதன் பிறகு அதற்கு வேறொரு பொருளின் மீது கவர்ச்சி ஏற்படுகிறது. அப்போது இந்தப் பொம்மை தேவையற்றதாகிவிடுகிறது. இது கவர்ச்சியால் வந்தது.

பொம்மையை குழந்தையிடம் கொடுக்கும் பெற்றோர்.. பொம்மையை கவனமாக வைத்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் கண்டிப்போம் என்று எச்சரிக்கை செய்து கொடுக்கும்போது, அந்தக் குழந்தையானது தனது சக்திக்கு உட்பட்டவரையில் அப்பொம்மையை பத்திரமாக பாதுகாக்க முற்படும். இது மனப்பயம்.

கவர்ச்சி இல்லாமல் ஒரு மனிதன் திருமணத்திற்கு உடன்பட மாட்டான். உறவுகளின் கட்டாயம் என்பது மேலெழுந்த காரணமாக இருந்தாலும், ஆசை இல்லாதவன் திருமணத்திற்கே முன்வரமாட்டான்.

ஆசையுடன் திருமண பந்தத்துள் நுழைபவர்கள் 'ஆராய்தல்' என்ற கட்டத்தை அடையும் கால இடைவெளியில்.. அவர்களுக்கு ஏனைய உறவுகளின் பழக்கங்கள்.. அவர்களுடனான பாசப் பரிமாற்றங்கள்... பிறகு அவர்களது வாரிசுகள்.. என உறவுச் சங்கிலிக் கோர்வைகளானது அதிகரிக்கும்போது.. அந்த பிணைப்புகளால் அவர்கள் மனதளவில் பக்குவமாகிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த மனப்பக்குவம் என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகவே நிகழ்கிறது. ஆனால் இதை அவர்கள் வெளிப்படுத்தும் தன்மையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். சிலர் வெளியே உணர்ச்சியைக் கொட்டுவார்கள். சிலர் மனதிற்குள்ளேயே எல்லாவற்றையும் அடக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள்.

உணர்வில்லாதவன் மனிதனல்ல.

இதனால்தான் தாயகத்திலே குடும்ப சிதைவுகள் குறைவு என்றேன் ஏனெனில்.. ஒரு பெண்ணானவள் புகுந்த வீடு செல்லும்போது.. அவள் மனைவியாக மட்டும் போகவில்லை. 'அண்ணி!' என அழைக்க ஒருவர்.. 'மாமி' என அழைக்க ஒருவர்.. 'சித்தி' என அழைக்க ஒருவர்.. அதேபோலத்தான் ஆண்மகனும் 'அத்தான்'.. 'சித்தப்பா..' 'மாமா...' என நெருக்கமாக அழைக்கப்படும்போது அவர்கள் அவர்களையும் அறியாமலேயே பண்படுகிறார்கள்.. பொறுப்பானவர்களாகிறார்கள்.. அதனால் சிறு குறைகளை அசட்டைசெய்யும் மனப்பக்குவத்தைப் பெறுகிறார்கள்.

ஆனால் புகலிட நாடுகளில்.. 'என்ன.. அவர் பேசினவரோ.. நீ சும்மா கேட்டுக் கொண்டிருந்தனியோ.. திருப்பி நாலு கேள்வி கேளாதையன்..' இப்படி தொலைபேசியில் ஒரு ஆலோசனை.

'உன்னை ஆள் கார் பழகேலையோ.. நீயும் பேசாமை விட்டூட்டு இருக்கிறியோ..' இப்படி ஒரு கேள்வி.

'பொலிசிலை சொல்லிப்போட்டு பேசாமை பிறிம்பா இரன்.. பேந்தும் ஏன் உதுக்கை பிச்சுப் பிடுங்கிக்கொண்டிருக்கிறாய

Edited by sOliyAn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.