Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவையும் இராணுவத்தினரையும் வாழ்த்தி யாழ். மீனவர் ஊர்வலம்

Featured Replies

வீரகேசரி இணையம் - யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்கள் இன்று ஊர்வலமொன்றை நடத்தியுள்ளனர். பூநகரி மற்றும் ஏ-32 பாதையை இராணுவத்தினர் கைப்பற்றியமைக்காக அவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் வாழ்த்துத் தெரிவித்தும், குடாக்கடலில் தம்மை சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் மீனவர்கள் இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ். குருநகர் சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவாந்துறை வரை சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் மஹிந்தவையும், இராணுவத்தினரையும் வாழ்த்திக் கோஷமெழுப்பினர்.

அம்மணமாய் மீன்பிடிக்க விட்டதை மறந்து விட்டார்கள் போல தெரியுது.

விரும்பியா போகினம்? நீங்கள் அங்க இருந்தா நீங்களும் ஏதாவது ஊர்வலத்தில போயே ஆகவேணும்.

முதலில் ஆட்டோ ஓட்டுனர்கள், இப்ப மீனவர்கள், இனி எந்த சங்கம் போகப்போகுது?

(உங்களுக்கு முத்திரை வரப்போகுது கவனமாய் இருங்கோ) :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுபயத்தினாலோயோ இல்ல ஆமிக்காரன் வெருட்டினதிலேயோ போன மாதிரிக்கிடக்கேல நீங்கள் சொல்லுவதை என்னால் நம்ப முடியாமல் கிடக்கு ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களில் சிலர் என்னைப்பொறுத்தவரை புலிகளுக்கு சார்பானவர்களல்ல எதிர்மறையானவர்களும் இருக்கிறார்கள் அதை கன்னுடாகவும் சிலருடைய பேச்சு மூலமாகவும் நேரில் பார்த்தனான். அவர்களுடைய வேலைதான் இவை என்று நினைக்கிறேன்

உண்மையில் பெரும்பான்மையானவர்கள் முழுமையான மனதுடன் கலந்துகொண்டு இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. தமிழ்நாட்டில் புலி எதிர்ப்பு பேசாமல் இருந்தால் அவன் காங்கிரசுகாரான் இல்லை என்று அடுத்தவர்கள் சொல்லிவிடுவார்கள் என்று பயந்தே பல காங்கிரசு நபர்கள் அறிக்கை பூச்சாண்டி விடுவதை போல இது நடக்கவைக்கபடுகிறது. அதுவுமின்றி இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சார முறை ஆனால் இதுஇல் ஏதோ "இந்திய வாசனை" வீசுவதாய் அறிய முடிகிறது. இப்படி தரந்தாழ்ந்த வேலையெல்லாம் இங்கேதான் உள்ளது :P

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியோ விரும்பாமலோ நிர்பந்திக்க படுகிறார்கள் என நினைக்கிறேன். b

துப்பாக்கி முனையின் கீழ் எதனையும் நடத்தி காட்டலாம். என் முகத்திற்கு நேராக துப்பாக்கி நீட்டி ஊர்வலத்திற்கு அழைத்தால், முதல் ஆளாக நான் தான் போய் நிற்பேன்.

ஊர்வலம் போய் இடம் பார்த்து சரியான இடத்தில சாத்தப்போறாங்களோ யார் கண்டது? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரக் கணக்கில் மக்கள் கூடியிருக்கிறார்கள்.

http://www.defence.lk/new.asp?fname=20081121_10

குடாக்கடலில் தம்மை சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிகோரும் ஊர்வலம் என்று மக்களை ஏமாற்றி கூட்டிவந்தார்களோ?

பலர் யாழ்பாணத்து சனங்களிண்ட மனநிலை தெரியாமல் கற்பனை உலகத்தில வாழ்ந்துகொண்டு இருக்கிறீனம். ஆமி யாழ்ப்பாணத்தை பிடிச்சு பதின்மூண்டு வருசமாச்சு. இந்த பதின்மூண்டு வருசகாலத்தில ஒவ்வொருத்தனும் எப்படி எப்படி மாறி இருப்பாங்களெண்டே தெரியாது. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில ஒரு பயம் இருந்திச்சிது. இப்ப நிச்சயம் அந்தப்பயம் இருக்காது. மற்றது..

இந்தகாலத்தில நல்லாப் பழகிறவங்களே நாலைஞ்சு நாளையில காணாமல் போய் மனம் மாறீடுறாங்கள். ஒரு வீட்டில கூட தகப்பனை நாலைஞ்சு நாளைக்கு காணாவிட்டால் பிள்ளை தானும் தண்டபாடும். மிகவும் நெருக்கமான உறவுகளே தொடர்ந்து உறவுகள் நெருகத்துடன் பேணப்படாத நிலையில விரிசலடைஞ்சு போகிது. இப்படியான யதார்த்த நிலமைகளில யாழ்ப்பாணத்து சனம் பதின்மூண்டு வருசத்துக்கு முன்னம் இருந்தது போல இப்பவும் இருக்கும் எண்டு கற்பனை செய்துகொண்டு இருக்கிறது எப்படி சரியாக இருக்கும் எண்டு விளங்க இல்லை.

***

ஒரு தெரிஞ்ச ஒருத்தர் யாழ்ப்பாணத்துக்கு போட்டு வந்தவர். அவர் சொன்னார் வீட்டுக்கு வீடு எல்லாத்திலையும் சனத்துக்க போட்டியாம். பக்கத்துவீட்டுக்காரன் ஒண்டு வாங்கினால் தாங்களும் வாங்கிறது. வீட்டுக்கு வீடு போட்டிக்கு ஓடுறதுக்கு இருக்கிறமாதிரி மோட்டர் சைக்கிள்கள். எல்லாத்திலையும் ஒருவருக்க ஒருவர் போட்டி. தங்களுக்க போட்டி போட்டு வளர்ந்த ஒரு சமூகத்தில மனநிலை மாற்றங்கள் விரைவில ஏற்படுறது இலகுவானது.

யாழ்ப்பாணத்து மீனவர்கள் பட்ட, படுகின்ற துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. அவர்களும் தமக்கு ஒரு வழிபிறக்கும் எண்டு உப்பிடி ஊர்வலமாக போய் இருக்கிறதில ஆச்சரியப்படுறதுக்கு ஒண்டும் இல்லை. நாங்கள் கனடாவுக்கும், யூகேயுக்கும், சுவிசுக்கும், பிரான்சுக்கும், அவுஸ்திரேலியாக்கும் எண்டு தப்பி வந்து பாதுகாப்புடன், சொகுசாக வாழ்ந்துகொண்டு அங்க அடுத்தநேரம் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பலவிதமான நெருக்கடிகள் மத்தியில வாழ்கின்ற சனத்துக்கு அறிவுரை சொல்ல இல்லாட்டிக்கு கோபப்பட என்ன இருக்கிது?

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்து மீனவர்கள் பட்ட, படுகின்ற துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. அவர்களும் தமக்கு ஒரு வழிபிறக்கும் எண்டு உப்பிடி ஊர்வலமாக போய் இருக்கிறதில ஆச்சரியப்படுறதுக்கு ஒண்டும் இல்லை. நாங்கள் கனடாவுக்கும், யூகேயுக்கும், சுவிசுக்கும், பிரான்சுக்கும், அவுஸ்திரேலியாக்கும் எண்டு தப்பி வந்து பாதுகாப்புடன், சொகுசாக வாழ்ந்துகொண்டு அங்க அடுத்தநேரம் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பலவிதமான நெருக்கடிகள் மத்தியில வாழ்கின்ற சனத்துக்கு அறிவுரை சொல்ல இல்லாட்டிக்கு கோபப்பட என்ன இருக்கிது?

முரளி சரியாச் சொல்லியிருக்கிறீர் இந்தச் சனத்தில பிழையில்லைத்தான் அவர்கள் தங்களுக்கு ஒரு வழிபிறக்கும் என்டு ஒரு நினைப்பிலத்தான் இதில பங்குபற்றியிருக்கலாம்

வீரகேசரி மீனவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால் பேரணியின் தொடக்கத்தில் கொண்டுவரப்படும் பதாகையில் படையினருக்கும், மகிந்தவிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பதாகையின் அடியில் யாழ். மாவட்ட பே(ய்)க்கரி உரிமையாளர் சங்கம் எண்டு எழுதப்பட்டிருக்கிறது.

முன்னே சிங்களக் கூலிகள். பின்னே மீனவர்கள். தமது உரிமைக்குரலை(மீன் பிடி அனுமதி) கொடுக்க வந்தவர்கள்.(அல்லது ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்கள்)

பூனகரி வெற்றி ஊர்வலம் : ஒருவருக்கு 1,000 ரூபா வழங்கிய ஈ.பி.டி.பி

கிளிநொச்சி, பூனகரி சிறீலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா படையினரால் ஊர்வலம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சிறீலங்கா படையினரும், துணைப்படை ஈ.பி.டி.பி குழுவினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பி குழுவினரால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு கலந்துகொள்ளத் தவறினால் புலி ஆதரவாளர்கள் என நீங்கள் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என ஈ.பி.டி.பி குழுவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து செய்வதறியாத முச்சக்கர ஊர்தி செலுத்துனர்கள் படையினர், மற்றும் ஈ.பி.டி.பி குழுவினரின் கட்டாயத்திற்கு அடிபணியும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களின் நாளாந்த அழைப்பு வீணாக்கப்பட்ட போதிலும், அச்சம் காரணமாக அவர்கள் அதனைத் தெரிவிக்காது தவிர்த்திருந்தனர்.

இதனையடுத்து கலந்துகொண்டவர்களுக்கு தலா 1,000 ரூபா ஈ.பி.டி.பி குழுவினரால் வழங்கப்பட்டதுடன், படையினரால் உணவுப் பொதியும் கொடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்திருக்கின்றனர்.

இந்த ஊர்வலத்தை நிழற்படம் பிடித்த சிறீலங்கா படையினர், தமது படை நடவடிக்கையின் வெற்றிக்கு யாழ் மக்களில் சிலர் ஆதரவளிப்பது போன்ற பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

பூநகரி பிடித்தால் அந்த வழியால் வழிபிறக்கும் என்ற நினைப்பு முட்டாள் தானம். சனங்கள் மனம் மாற்றத்திற்குள்ளாவது உண்மைதான். ஆனால் இந்தளவிற்கு அடிப்படையின்றி மாற்றத்திற்குள்ளாவது ஏமாற்றமே.

யாழ்ப்பாணத்தவர்களிடம் போட்டியென்பது இப்போது ஏற்பட்டதல்ல. ஒவ்வொரு விடயத்திலும் அங்கு போட்டிதான். இது உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காக வற்புறுத்தலின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஊர்வலமேதான்.

வீதிக்கு வீதி நிற்கும் இராணுவத்தினர் ஒருவரைக் கூட இங்கு காண முடியவில்லை. அப்படியென்றால் இராணுவத்தினர் அகன்று நிற்க மக்களை மாத்திரம் படம் பிடித்து பிரசாரப் படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள சிலர் யாழ்ப்பாண மக்கள் போராட்டத்தையும் போராளிகளையும் விட்டு விலகி இராணுவத்தின் தமிழ் மக்களின் இதயத்தை வெல்லும் நிகழ்ச்சித்திட்டதால் வெல்லப்பட்டு விட்டார்கள் என்கின்றனர்.

இன்னொரு தரப்பினரோ புலிகள் கட்டாயப்படுத்தி கூட்டம் நடத்தினது போல இவர்களும் நடத்துகின்றனர் என்கின்றனர்.

நான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் வாழ்ந்தவன். இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியிலும் வாழந்தவன்.

எப்போதுமே விடுதலைப்புலிகள் வற்புறுத்தி இப்படியான போராட்டங்களுக்கு அழைத்ததில்லை. விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி மக்கள் போராடப் போனதாக அரசு சொல்வது அல்லது ஈபிடிபி போன்ற கும்பல்கள் சொல்வது போன்று இங்கும் ஒரு தரப்பு நடுநிலைக் கருத்து என்ற போர்வையில்.. சொல்கின்றனர்.

ஒரு பொதுமகனாக எனக்கு அப்படி ஒரு நிலை இருந்ததில்லை.

இந்த ஊர்வலம் மட்டுமல்ல.. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஹர்த்தால்.. பூநகரி பிடிப்பட்டதும் டக்கிளஸ் தேவானந்தா விட்ட அறிக்கைகள்.. தமிழக மக்களின் எழுச்சியை அடக்க சிறீலங்கா அரசு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்த பிள்ளையான் - கருணா கூட்டம் எல்லாமே மக்களின் (பெரும்பாலான) விருப்புக்கு எதிரானவை என்பதை தெளிவாக உணரக்கூடியதாக இருந்தும் இங்குள்ள சிலர் மக்கள் ஒட்டுமொத்தமாக மாறிப் போய் இராணுவத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் என்று அரசு சொல்வது போல சொல்ல விளைகின்றனர்.

அப்போ இராணுவத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கும் மக்களை ஏன் இராணுவம் சோதனை என்ற பெயரில் துன்புறுத்த வேண்டும். பாதுகாப்பு வலயங்களை நிறுவி அவர்கள் விரும்பும் இடத்தில் வாழ்வதை தடுக்க வேண்டும். சுட்டுக் கொல்ல வேண்டும். கைது செய்ய வேண்டும். கடற்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க வேண்டும். அணிதிரண்டு இராணுவத்தின் பின்னால் நிற்கும் மக்களை இராணுவம் இன்னும் நம்பவில்லை என்பதாலா..???! அல்லது மக்கள் இராணுவத்தை நம்பவில்லை என்ற உண்மை தெரிந்ததாலா..??!

ஊர்வலத்தில் பெண்கள்.. குழந்தைகள் கிடையாது. இளைஞர்கள்.. ஆண்கள் தான் அதிகம். இதில் எத்தனை பேர் சிவில் உடையில் இருக்கும் சிறீலங்கா சிங்களச் சிப்பாய்கள்.. மற்றும் காவல்துறையினர்.. மற்றும் அவர்கள் சார்ந்தோர்.. எத்தனை பேர் ஈபிடிபி குழுவினர்.. எத்தனைபேர் இவர்களுக்கு வால்பிடிப்போர்.. எத்தனைபேர்... இவர்களை உண்மையில் ஆதரிப்போர்.. எத்தனை பேர் அச்சுறுத்தலுக்கு பயந்து வந்தவர்கள்.. எத்தனை பேர் உண்மையாகவே விடிவு வந்திட்டு என்று வந்தவர்கள்.. எத்தனை பேர் வராமல் விட்டவர்கள் என்பதையும் கருத்தில் கொண்டு... மக்களின் உணர்வுகளை சரிவர இனங்காட்டிக் கொள்ள வேண்டும்.

இதே யாழ்ப்பாண மக்கள் தான் 2005 இல் பொங்கு தமிழில் அணிதிரண்டு.. பொங்கு தமிழராய்.. பொங்கி எழுந்தனர் என்பதையும்.. அது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் 10 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் ஏற்பட்ட எழுச்சி என்பதையும் சிலர் சுலபமாக மறந்துவிட்டுள்ளனர்.

வன்னியில் இன்று மக்கள் அணிதிரண்டு.. உணவுக்காக ஊர்வலம் நடத்தியதில் ஒரு கருத்தைத் தானும் எழுத முன்வராதவர்கள்.. இங்கு வந்து அரசின் பிரச்சாரத்துக்கு சாமரம் வீசுவதன் நோக்கம் தான் நடுநிலை.. யதார்த்தத்தைப் பேசுதல்..???! என்பதா.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27542

(Civilians in Vanni protest against Colombo's use of humanitarian supplies as tool of war)

எல்லாரும் தமக்கு தெரிந்த வியாக்கியானங்களால் மக்களை அளவிடினமே தவிர மக்களின் உண்மையான போராட்ட உணர்வை இவர்கள் புரிய வாய்ப்பில்லை. காரணம்.. இவர்கள் கோவிலுக்கு புக்கை பொங்கிப் படைச்சிட்டு... வெளிநாட்டுக்கு வந்து... அம்மாள் ஆச்சியின் அருளால்.. அகதி அடைக்கலம் வாங்கிவிட்டவர்கள். இவர்கள் இங்கிருந்து கொண்டு.. இப்படித்தான் நடுநிலை என்று நியாயம் புரிப்பார்கள். அதற்கு அரச பிரச்சார ஊடகத்தையே துணைக்கிழுப்பர். உண்மையில் அவர்கள் அல்ல இராணுவத்தின் பின்னால் நிற்பவர்கள். இவர்களே நிற்கத்துடிக்கின்றனர். அதற்கான நியாயங்களையும் இவர்கள் தமக்குள் ஏற்படுத்தி விட்டுள்ளனர் என்பதை இங்கு பகரப்பட்ட இவர்களின் கருத்துக்களில் தொனிப்பதைக் காணலாம்.

ஒரு சிங்களவன்.. புலிகளை ஆதரித்து.. ஒரு கருத்து எழுதான். ஆனால்.. தமிழர்கள் எருமைகள் போல.. சூடுபட்டும்.. உணராத கூட்டமாக.. இன்னும்.. இந்த உலகில்.. கேவலம்..! :o:unsure:

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்காலபோவான் யாழ்ப்பாணத்தில இருந்ததா சொல்லுறீங்கள். பாஸ், பங்கர் நடைமுறைகள் எல்லாத்தையும் அவ்வளவு வேகமாக மறந்தாச்சோ?

புலிகள் யாழ்பாணத்தில 13 வருசங்களில 1982 துவக்கம் 1995 வரை காலத்தில ஒரு மாற்றத்தை சனங்களுக்க ஏற்படுத்தினார்கள் எண்டால் அதே புலிகள் இல்லாத நிலையில 1995 துவக்கம் 2008 வரை இன்னொரு 13 வருச காலங்களை கடந்துவிட்ட நிலையில சனங்கள் மனதில மாற்றங்கள் வராது எண்டு எப்பிடி சொல்லுறீங்கள்?

இதை சனமாக விரும்பி ஏற்றுக்கொண்ட மாற்றங்களாக சொல்லவில்லை. அதிகாரம், வலுக்கட்டாயங்கள் மத்தியில நீண்ட காலநோக்கில ஏற்படக்கூடிய மாற்றங்கள். இண்டைக்கு கிழக்கு, மன்னார் எல்லாம் இராணுவவசம். அங்கையும் இப்பிடித்தான் நீண்ட காலநோக்கில மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் முனைவார்கள்.

புலிகள் கட்டுப்பாட்டில இருக்கிற மக்கள் எதேச்சையாக தங்கட சுயசிந்தனையில இயங்கிறதாயும், அரசகட்டுப்பாட்டில இருக்கிற மக்கள் அரசின் சிந்தனையில இயங்கிறதாயும் சொல்லுறீங்கள். இரண்டுபக்கமுமே அதிகாரத்தின் அடிபணிவிலதான் மக்கள் இயங்குகின்றார்கள். சிங்கள சித்தாந்தங்கள் தென்பகுதியில உருவாக்கப்படுகிது எண்டால் தமிழரின் சித்தாங்கள், கொள்கைகள் புலிகள் - தலைமையில இருந்து உருவாகிது.

யார் வசம் அதிகாரம் இருக்கின்றதோ அவர்வசம் மக்கள் அடிபணிந்து இருக்கவேண்டியதுதான். ஓரளவு படித்தவர்கள், வசதியுள்ளவர்கள் தப்பிவிடுவார்கள். வசதி இல்லாதவர்கள் மாட்டுப்படவேண்டியதுதான். புலிகள் கட்டுப்பாட்டு காலத்தில யாழ் பல்கலைக்கழகத்துக்க எத்தனைவிதமான பிரச்சனைகள் இருந்திச்சிது எண்டு உங்களுக்கு தெரியுமா? யாழ்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில இருந்ததால் எல்லாவற்றையும் அவர்கள் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்காலபோவான் யாழ்ப்பாணத்தில இருந்ததா சொல்லுறீங்கள். பாஸ், பங்கர் நடைமுறைகள் எல்லாத்தையும் அவ்வளவு வேகமாக மறந்தாச்சோ?

புலிகள் யாழ்பாணத்தில 13 வருசங்களில 1982 துவக்கம் 1995 வரை காலத்தில ஒரு மாற்றத்தை சனங்களுக்க ஏற்படுத்தினார்கள் எண்டால் அதே புலிகள் இல்லாத நிலையில 1995 துவக்கம் 2008 வரை இன்னொரு 13 வருச காலங்களை கடந்துவிட்ட நிலையில சனங்கள் மனதில மாற்றங்கள் வராது எண்டு எப்பிடி சொல்லுறீங்கள்?

இதை சனமாக விரும்பி ஏற்றுக்கொண்ட மாற்றங்களாக சொல்லவில்லை. அதிகாரம், வலுக்கட்டாயங்கள் மத்தியில நீண்ட காலநோக்கில ஏற்படக்கூடிய மாற்றங்கள். இண்டைக்கு கிழக்கு, மன்னார் எல்லாம் இராணுவவசம். அங்கையும் இப்பிடித்தான் நீண்ட காலநோக்கில மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் முனைவார்கள்.

புலிகள் கட்டுப்பாட்டில இருக்கிற மக்கள் எதேச்சையாக தங்கட சுயசிந்தனையில இயங்கிறதாயும், அரசகட்டுப்பாட்டில இருக்கிற மக்கள் அரசின் சிந்தனையில இயங்கிறதாயும் சொல்லுறீங்கள். இரண்டுபக்கமுமே அதிகாரத்தின் அடிபணிவிலதான் மக்கள் இயங்குகின்றார்கள். சிங்கள சித்தாந்தங்கள் தென்பகுதியில உருவாக்கப்படுகிது எண்டால் தமிழரின் சித்தாங்கள், கொள்கைகள் புலிகள் - தலைமையில இருந்து உருவாகிது.

யார் வசம் அதிகாரம் இருக்கின்றதோ அவர்வசம் மக்கள் அடிபணிந்து இருக்கவேண்டியதுதான். ஓரளவு படித்தவர்கள், வசதியுள்ளவர்கள் தப்பிவிடுவார்கள். வசதி இல்லாதவர்கள் மாட்டுப்படவேண்டியதுதான். புலிகள் கட்டுப்பாட்டு காலத்தில யாழ் பல்கலைக்கழகத்துக்க எத்தனைவிதமான பிரச்சனைகள் இருந்திச்சிது எண்டு உங்களுக்கு தெரியுமா? யாழ்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில இருந்ததால் எல்லாவற்றையும் அவர்கள் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்கள்.

நீங்கள் தவறாக அர்த்தப்படுத்துகிறீர்கள்.

விடுதலைப்புலிகள் சாமானியர்களை பங்கருக்குள் போடுவது இல்லை. போடப்பட்டவர்களில் பலர்.. குற்றச் செயல்களுக்குரியவர்கள். மற்றும் வியாபார நோக்கம் கருதி செயற்பட்டுக் கொண்டு உளவுத்தகவல்களை பரிமாறியோரே அதிகம். சாமானிய மக்கள் எவரும் பங்கருக்குள் செல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை பங்கரைக் கண்டது கூட இல்லை.

சிங்கள அரசுக்கு வரிப்பணம் கட்டியவர்கள்.. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் எந்த வரியும் கட்டாது வாழ்ந்தனர். வியாபாரிகளிடம் குறிப்பிட்ட (10%) வரி கேட்டனர். அதுவும் நிர்வாகத்துக்கும்.. போராட்டத்துக்காகவுமே. அதைத் தருவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றியோரும்.. அரசிடம் போய் கூப்பாடு போட்டோரும்.. பங்கருக்க போயினர். அவர்கள் போக வேண்டியவர்கள் தான். சிங்களவனுக்கு வரிகட்ட முன் நின்றவர்கள்.. தமிழனுக்கு கொடுக்க மறுத்தவர்கள் அதிகம். சிங்கள அரசு வரிப்பணம் கட்டவில்லை என்று பிடித்த அடைத்தால்.. வட்டியும் முதலுமாகக் கட்டுபவர்கள்.. சொந்த மக்களுக்கு ஆகும் செலவைக் கவனிக்க வரி கொடுப்பதை.. கப்பம் என்று சிங்களவனிடம் போய் ஊதிவைத்தவர்கள்.. பங்கருக்க அல்ல. மண்டையில போட்டிருக்க வேண்டியவர்கள். போராளிகள் அப்படிச் செய்யவில்லை. பங்கரோடு விட்டுவிட்டார்கள்.

ஒரு தேசத்தின் குடியகழ்வு.. குடிவரவரைக் கட்டுப்படுத்தாமல்.. போராட்டத்தையோ அரசையோ நடத்த முடியாது. பாஸ் நடைமுறை என்பது அடக்குமுறையல்ல. அப்படி என்றால் உலகில் எல்லைகள் வகுத்து விசாக்கள் வழங்கி மக்களின் சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதையும் அடக்குமுறையாகவே காட்ட வேண்டும்.

அதுமட்டுமன்றி சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படையே.. பாஸ் நடைமுறையை இன்னும் வைத்திருக்கிறது. அதற்கு என்ன தேவை இருக்கிறது..??!

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த மக்களுக்கு விடுதலைப்புலிகள் பாஸ்கட்டுப்பாடு போடவில்லை. நான் மாணவனாக வெளியேறக் கேட்டபோது எந்தச் சுணக்கமும் இன்றி என்னோடு என் பெற்றோரையும் கூட்டிச் செல்ல அனுமதி தந்தனர். ஆறு மாதத்தில் பிணை இறுக்கப்படும் வகையில். விடுதலைப்புலிகளின் நிர்வாக முறைமைகளை சீர்குலைக்க முனைந்தவர்களாலேயே அதிகம் கட்டுப்பாடுகள் போட வேண்டியும் வந்தது. அதில் அநேகர் போராட்டத்தைக் காட்டி.. மேற்குலக நாடுகளில் அசைலம் அடிக்கிற ஆசையில் புறப்பட்டவர்களே.. என்பதையும் நாம் மறக்கப் போவதில்லை. :unsure:

விடுதலைப்புலிகளின் 13 கால ஆட்சியல்ல போராட்ட விதையை மக்களுக்குள் விதைத்தது. சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலித்து வந்தமையே விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் உருவாக்க வழிசமைத்தது. அப்படியான மக்கள் ஆக்கிரமிப்பாளனின் உள்நோக்கம் கருதாது.. 13 ஆண்டுகளுக்குள்.. அதுவும் திறந்தவெளிச் சிறையில் வாழும் மக்கள்.. அதுவும் புதைகுழிகள்.. கைதுகள்.. கொலைகள்.. அச்சுறுத்தல்கள்.. பாதுகாப்பு வலயங்கள்.. சோதனைச்சாவடிகள்.. சோதனைகள்.. இம்சைகள்.. ஊரடங்குச் சட்டங்கள்.. என்று வாழும் மக்கள்.. இராணுவத்துக்கு விசுவாசிகளாகி விடுவார்கள் என்பது.. உங்களைப் பொறுத்து மாறுவதாக இருக்கலாம்.

விடுதலைப்புலிகளின் 13 ஆண்டு கால ஆட்சியில்.. பாதுகாப்பு வலயம் இருந்ததா.. சோதனைச் சாவடி இருந்ததா.. அப்பாவி மக்கள் கைதுகள் இருந்ததா.. ஊரடங்குச் சட்டம் இருந்ததா.. கடலுக்குப் போக.. புலிகள் தடை போட்டனரா.

நிர்வாக நடைமுறைகளுக்காக 2% - 5% வரி அறவிட்டார்கள். அதைக் கூட.. புறுபுறுத்துத்தான் கொடுத்தவை. ஆனால் இன்று இராணுவமும்.. துரோகக்கும்பல்களும் கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் போது என்ன செய்கிறார்கள்.

மக்கள் 13 அல்ல.. 200 ஆண்டுகள்.. சிங்கள ஆக்கிரமிப்பாளனின் கீழ் வாழினும்.. தமது அடிமை நிலையை உணரத்தவறமாட்டார்கள். அந்தளவுக்கு சிங்கள இனவாதம் வீறு கொண்டு நிற்கிறது.

அதை அகதியாக ஓடி வெளிநாடுகளில்.. வெள்ளைக்காரனுக்கு.. கழுவிப் பிழைப்பவர்கள்.. சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழலாம். ஆனால்.. சொந்தமண்ணில்.. வாழ்பவர்கள்.. அப்படி சாதாரணமாக எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: வானம்பாடி இங்கு இணைத்துவரும் செய்திகள் எல்லாமே ஒன்றில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் தளத்திலிருந்து வந்தவை அல்லது வீரகேசரி என்கிற இந்திய முதலாளித்துவப் பத்திரிக்கையிலிருந்து வருபவை. இவை ரெண்டிலுமே தமிழர் நலன் சார்ந்த செய்திகள் வருவதற்கு எந்த நியாயமுமே இல்லை என்பது தமிழர்களாகிய எவரும் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்கும்போது இவர் தொடர்ந்தும் இந்தச் செய்திகளை இணைப்பதன் பின்ணணி என்னவென்பதை நாம் அறிவோம்.

மன்னாரில் தொடங்கிய சிங்கள ஆக்கிரமிப்பைப் பற்றி இதுவரை வாயே திறக்காத இந்த நபர், ஏன் பூநகரி என்று வந்தவுடன் படங்களுடன் செய்தி இணைக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேபோல துரோகிகளும், சமூக விரோதிகளும் நடத்திய ஆர்ப்பாட்டத்தை முற்றுமுழுதான யாழ் சமூகத்தின் புலிகள் மீதான எதிர்ப்பு என்ற ரீதியிலும் இவர் கருத்துருவாக்கப் பாடுபடுவதையும் காணலாம்.

இந்த இரு நிகழ்வுகளுமே சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்புப் போருக்கான பிரச்சாரத்திற்கு மிகவும் தேவைப்பட்டவை என்பதும், சர்வதேசத்தின் முன்னால் தனது "மனிதாபிமானத்துக்கான போர்" வெற்றியளித்து வருவதாகவும் காட்ட சிங்கள அரசினால் பெரிதும் வேண்டப்பட்டவை என்பதும் கண்கூடு.

இவர் எழுதும் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் இங்கு பேசுவோர் இருக்கிறார்கள். நடுநிலமை என்ற பெயரில் இவர்கள் எழுதும் கருத்துக்கள் பொய்ப் பித்தலாட்டம் நிறைந்தவை. தமது புலியெதிர்ப்பு, அல்லது புலிக்காய்ச்சல் வக்கிரங்களை நடுநிலமை என்கிற போர்வைக்குள் இருந்து இவர்கள் கச்சிதமாக செய்துவருவதாக இவர்கள் நினைத்துக்கொண்டாலும் அவர்களுக்குத் தெரியாமலேயே தங்களைத் தாங்களே அவ்வப்போது கருத்துக்களில் காட்டிக்கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் இங்கு ஒரு புலியெதிர்ப்புத் திரியை யாராவது ஒருவர் பற்ற வைத்தால்ப் போதும், மிகுதியை தாங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான். அதற்கு உதவியாக இங்கு வந்து கருத்து இணைத்தவர் திருவாளர் வானம்பாடி.

ஒருவர் அரச பிரச்சாரத்தை இங்கு முன்னெடுக்க, அதை தனது புலியெதிர்ப்பு முகமூடிக்குள் இருந்துகொண்டு யதார்த்தமாக்கப் பாடுபடுகிறார் இன்னொருத்தர்.

இவர்களுக்குத் தேவையானதெல்லாம், மக்களும் புலிகளும் வேறு, இன்று அரசு செய்வது தமிழர்களுக்கான விடுதலையே, தமிழர்களினதும் சிங்களவர்களினதும் இவ்வளவு துன்பங்களுக்கும் காரணம் விடுதலைப் புலிகளே, புலிகளின் ஒவ்வொரு வீழ்ச்சியும் தமிழரின் வெற்றியாகக் கருதப்படுகிறது என்று பிரச்சாரப் படுத்துவது.

இவர்களது பித்தலாட்டங்களுக்குத் தொடர்ந்தும் நாம் காது கொடுக்கப் போகிறோமா, அல்லது கருத்து எழுதப்போகிறோமா என்று தீர்மானிக்க வேண்டியது எமது பொறுப்பு. அதை விரைவிலேயே செய்ய வேண்டும் !

சரி பழசை கிளறவில்லை. இப்ப நீங்கள் சொன்னதுகளுக்கு நான் திரும்பவும் பதில்சொல்லி பழைய குப்பைய கிளறி வேலை இல்லை. நாங்கள் இஞ்ச என்னத்த கதைச்சு என்னத்த செய்யுறது. நடக்கிறது நடக்கும். நான் நடுவுநிலமை மண்ணாங்கட்டி எண்டு ஒண்டும் எழுத இல்லை. யதார்த்தமாக நடந்தவை, நடப்பன எவை எண்டு எனது கருத்தை சொன்னன்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

இவர்களது பித்தலாட்டங்களுக்குத் தொடர்ந்தும் நாம் காது கொடுக்கப் போகிறோமா, அல்லது கருத்து எழுதப்போகிறோமா என்று தீர்மானிக்க வேண்டியது எமது பொறுப்பு. அதை விரைவிலேயே செய்ய வேண்டும் !

அப்ப இப்ப வானம்பாடிக்கு மண்டையில போடலாம் எண்டு சொல்லுறீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இப்ப வானம்பாடிக்கு மண்டையில போடலாம் எண்டு சொல்லுறீங்களோ?

மண்டையில போட வேண்டிய கனக்க.. தப்பவிடப்பட்டதாலதான் இவ்வளவு பிரச்சனையே. அதால அழிந்த உயிர்கள் பல.

சி ஐ ஏ.. தனது நாட்டுக்காக எத்தனை பேரை மண்டையில போட்டிருக்கும். அமெரிக்கர்கள் உட்பட. அதை கதைசா எழுதி.. இங்கிலீசில.. வாசிப்பினம்.. அது பெருமை.

சொந்த மண்ணை.. போராட்டத்தை.. நசுக்க துணை போனவனை/வளை.. மண்டையில போடுறது.. என்னைப் பொறுத்தவரை தவறே இல்லை... தகுந்த எச்சரிக்கைகள்.. திருந்தச் சந்தர்ப்பம் அளித்தும் திருந்தவில்லை என்றால்.. போட்டுத்தள்ள வேண்டியதே போராட்டத்தையும்.. மக்களின் பேரழிவையும் தடுத்துக் காப்பாற்றும்.

எத்தனையோ உயிர்களின் அர்ப்பணிப்பில வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டத்தை... ஒரு சுயநலப்பிசாசுகளாக அலையும் ஒரு கூட்டத்துக்காக தாரை வார்க்க முடியாது.

ஜே வி பியை ஒடுக்க.. இந்திரா அம்மையாரும் சிறிமாவோ அம்மையாருக்கு மண்டையில போடக் கற்றுக் கொடுத்தார். பின்னர் பிரேமதாசாவும் உடுகம்பொல.. ஜானகபெரேரைவை வைத்துப் போட்டுத்தள்ளினார்.

அதேபோல் தமிழர்களும் போட்டுத்தள்ளப்பட்டனர். துரதிஸ்டவசமாக தமிழர்களே தமிழர்களைப் போட வேண்டிய நிலையை சில சுயநலத்தமிழர்கள் உருவாக்கி விட்டிருந்தனர்.

உண்மை என்று.. நீங்கள் தவறாக விளங்கி வைத்திருப்பதை எல்லாம் உண்மையாகக் காட்ட முனையக் கூடாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புதிதாய் பிறந்துள்ள மனிதவுரிமை வாதி பழைய மாப்பு புதிய முரளி வாழ்க .வாழ்க. வாழ்க.உலகை உய்விக்க வந்துள்ள மீட்பர் வாழ்க . :unsure::o

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

ஏன் இதுக்கை சாந்தி அக்காவை கூப்புடுறிங்கள் வவுனியன் அண்ணா வாளோடு வர முன்னம் ஒடு தப்புங்கள்.

***

யாழில் புதிதாய் பிறந்துள்ள மனிதவுரிமை வாதி பழைய மாப்பு புதிய முரளி வாழ்க .வாழ்க. வாழ்க.உலகை உய்விக்க வந்துள்ள மீட்பர் வாழ்க . :unsure::o

ஏதோ சொல்லுங்கோ சாத்திரி அண்ணை. எனது கருத்தைதான் நான் சொல்லமுடியும். மீனவர் "மகிந்தவை வாழ்த்தி ஆரம்பிச்ச ஊர்வலம்" எண்டு துவங்கின கருத்தாடல் இப்ப என்னை வாழ்த்திறதில முடியுது போல இருக்கிது.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், அப்ப நீங்களே மண்டையில போடுறவேலைய இஞ்ச பொறுபெடுத்து செய்யுங்கோ.

சி ஐ ஏ போல அல்லது ரஷ்சிய கேஜிபி போல.. அல்லது மொசாட் போல ஒன்றை நானும் வைச்சிருந்தா.. புளுட்டோனியம் வைத்தே உங்க கனபேரைப் போட்டுத்தள்ளி இருப்பன். ரஷ்சியன் காரன் நாட்டைக் காட்டிக் கொடுத்தவனை லண்டனுக்க வைச்சுப் போட்டித் தள்ளியும்.. பிரிட்டன் வாய் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இருக்கிறது.

பலமிருந்தா.. நான் செய்யத் தேவையில்ல.. பாதிக்கப்பட்ட மக்களே செய்வார்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

name='முரளி' d

***

ஏதோ சொல்லுங்கோ சாத்திரி அண்ணை. எனது கருத்தைதான் நான் சொல்லமுடியும். மீனவர் "மகிந்தவை வாழ்த்தி ஆரம்பிச்ச ஊர்வலம்" எண்டு துவங்கின கருத்தாடல் இப்ப என்னை வாழ்த்திறதில முடியுது போல இருக்கிது.

இப்ப யாராவது உங்கடை கருத்தை சொல்லவேண்டாம் எண்டு சொன்னவையா?? வாழ்த்திறது கூட பிடிக்கேல்லையா?? சரி அப்ப மாற்றுக்கருத்து மாணிக்கம் எண்டொரு பட்டத்தை தரலாமென யோசிக்கிறன் அதுக்கும் வந்து பேசக்கூடாது.

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்

அதாலதான் நெடுக்காலபோவான் பயங்கரவாதம் - பயங்கரவாதிகள் எண்டு முத்திரை குத்தப்பட்டது. அப்ப மக்கள் போராட்டம் எண்டுறத மண்டையில போடுற போராட்டம் எண்டு பெயரை மாத்தலாம். கருத்துக்களை சரியான முறையில எதிர்கொள்ளமுடியாத வேளைகளில எம்மவர்களுக்கு தெரிஞ்ச ஒரே ஒரு பதில் இதுதான். நீங்களே இப்பிடி தமிழருக்கு மண்டையில போடலாம் எண்டு ஆதரிச்சு கருத்து சொல்லேக்க, சிங்களவன் செய்த, செய்கின்ற வேலைகள் பற்றி எப்படி நியாயம் கேட்கமுடியும்? மற்றப்பக்கம் த.பு.க தடை செய்யலாமா இல்லையா எண்டு விளக்கம் போகிது. இஞ்சால மண்டையில போடலாமா இல்லையா எண்டு நாங்கள் நிக்கிறம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானது மண்டையில போடுறதா இல்லாட்டிக்கு வாழ்க்கையா எண்டு காலம்தான் பதில் சொல்லவேணும்.

இப்ப யாராவது உங்கடை கருத்தை சொல்லவேண்டாம் எண்டு சொன்னவையா?? வாழ்த்திறது கூட பிடிக்கேல்லையா?? சரி அப்ப மாற்றுக்கருத்து மாணிக்கம் எண்டொரு பட்டத்தை தரலாமென யோசிக்கிறன் அதுக்கும் வந்து பேசக்கூடாது.

பட்டம் ஒண்டும் தேவை இல்லை சாத்திரி அண்ணை. மாப்பு/முரளி எண்டு கூப்பிட்டாலே போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.