Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்துக்கால கூடிச்சேர்ந்து கும்மாளம் அடிக்கிறது எப்பிடிஎண்டு அறிஞ்சுகொள்ளுங்கோ

Featured Replies

வணக்கம், இண்டைக்கு எங்கட ஆக்களிண்ட ஒரு வலைத்தளத்துக்கு போய் அங்க நடக்கிற அரட்டையை பார்வையாளராக இருந்து Screen Shots எடுத்து இருக்கிறன். உங்களுக்கு இதில எழுதப்படுறதுகள் ஏதும் விளங்கிதோ எண்டு வாசிச்சு சொல்லுங்கோ. இஞ்ச இருக்கிற யாராச்சும் அங்கையும்போய் அரட்டை அடிச்சு இருந்தால் மன்னிச்சு கொள்ளுங்கோ.

நான் Screen Shots எடுக்கேக்க வேகமா அரட்டை அடிக்கப்பட்டதால சம்பாசணைகள் இடைக்கிடை வெட்டுப்பட்டு போச்சிது. நிறையப்பேர் ஒரே நேரத்தில ஒரு மலசலகூடத்துக்க இருந்து கடலைபோடுறதால கிடுகிடு எண்டு சம்பாசணை வேகமாக போகிது.

IMG4930-1228677004.jpg

IMG4930-1228677030.jpg

IMG4930-1228677056.jpg

IMG4930-1228677074.jpg

IMG4930-1228677090.jpg

IMG4930-1228677103.jpg

IMG4930-1228677118.jpg

IMG4930-1228677132.jpg

IMG4930-1228677147.jpg

IMG4930-1228677161.jpg

பி/கு: யாழுக்கையும் கருத்தாடல் தளத்தில இதுதானே கொஞ்சம் நாகரீகமான முறையில நடக்கிது எண்டு என்னை கேட்கக்கூடாது. தவிர, யாழ் ஆக்களிண்ட எம்.எஸ்.என் மெசஞ்ரர், ஸ்கைப் அரட்டைகளும் இருக்கிது. அதுகளையும் Screen Shots எடுத்து இஞ்ச போடச்சொல்லி கேட்ககூடாது :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில இருந்த IRC, mIRC chat இலையும் இப்படித்தான் நடந்தது.. பொழுதுபோக்க வேண்டாமா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்
:wub: இப்படியாவது தமிழ் அழியாமல் இருக்கட்டும் . :blink:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க தமிழ் வளர்க தமிழ் முரளி இதுக்காக மினக்கெட்டு ஸ்கிறீன்சொட் எல்லாம் எடுத்து விளங்கப்படுத்திறீங்கள் ரொம்ப நன்றி.

சமூகச் சாளரம் பகுதியில் முரளி செய்யும் பணி :wub: அளப்பரியது. வாழ்த்துக்கள். :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமூகச் சாளரம் பகுதியில் முரளி செய்யும் பணி :wub: அளப்பரியது. வாழ்த்துக்கள். :blink:

அச்சாக் குஞ்சு

  • கருத்துக்கள உறவுகள்

அடடா............நல்ல காலம் நான் மாட்டுபடேல....

இதுக்கு தான் காதலா.கொம் ல மெயினுக்கு நான் வாரேல்ல... :wub::blink::unsure:

சீ.................... என்ன படு கேவலமா இருக்கு. இதை பார்த்தால் காதலா.கொம் மாதிரி இருக்கு.

GK யார் முரளியா?

Edited by mathuka

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: இப்படியாவது தமிழ் அழியாமல் இருக்கட்டும் . :blink:

அழிஞ்சே போச்சு இதுக்குள்ள எங்க தமிழை வாழவைக்கிறது :wub::blink: தமிழ்சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.................இப்படித்தான் இணையத்துல கூடிச்சேர்ந்து கும்மாள அடிக்கிறது.

முரளியின் சேவை...........................

நன்றி யாழ்கள நோக்கத்தை நன்றாக நிறைவேற்றி எம்மினத்தை சரியான வழியில் விழிப்புணர்வு செய்வதற்கு...அதுவும் நம் ஈழத்தில் எம்மக்களின் இக்கட்டான நிலையில்...

நன்றாக பொழுது போக்குங்கள்.... :unsure::blink::wub:

  • தொடங்கியவர்

அட அட பலருக்கு ரோசம், கோவம் வந்திட்டிது போல இருக்கிது. சமூகத்தில நடக்கிற விசயங்களை சமூகச்சாளரத்திலதான் போடமுடியும். யாழ்க்களத்திண்ட நோக்கம் என்ன ஊர்ப்புதினம் பகுதியில எல்லாரும் கூடி ஆவேசமா தும்பு பறக்க பேசுறதா? ஒவ்வொருத்தரும் தங்கட கையெழுத்தில வீரவசனங்களை காவுறதா?

எங்களைச்சுற்றி என்ன நடக்கிது எண்டு உண்மையை அறிய ஒருவருக்கும் நாதி இல்லை. பொய்யான கற்பனை உலகத்தில இருந்து புறுபுறுத்துக்கொண்டு இருக்கிறீங்கள். நான் நடக்காத ஒரு விசயத்தை படம்பிடிச்சு காட்ட இல்லை. நேற்று குறிப்பிட்ட ஒரு வலைத்தளத்துக்குபோய் அங்கு அரட்டை அடிப்பவர்கள் என்ன கதைக்கின்றார்கள் என்பதை Screen Shots எடுத்து இணைச்சு இஞ்ச இருக்கிறன்.

தீக்கோழி தலையை மண்ணுக்க புதைக்கிறதால வெளியில நடந்துகொண்டு இருக்கிற விசயங்கள் பொய்யாகிவிடமுடியாது. வெளிநாட்டில இருக்கிற எங்கட ஆக்களுக்கையே எத்தனையோ ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிது. ஆனால்.. நாங்கள் கிளிநொச்சிக்கு இன்னும் எத்தின மணித்தியாலத்தில ஆர்மி போகும், இயக்கம் இனி எந்தப்பக்கத்தால தாக்குதல் நடத்தும், இயக்கத்திண்ட அடுத்தவிமானத்தாக்குதல் எங்க எப்பிடி நடக்கும், தமிழகத்திண்ட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எண்டு ஆராய்ச்சி செய்தும், அறிவுரை சொல்லிகொண்டும் இருக்கிறம்.

முதலில உங்கட அருமந்த கண்ணுகளை திறவுங்கோ. மிச்சம் பிறகு ரோசம், கோவம் அதுக்கு பின்னால வரட்டும்..

அது!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி யாழ்கள நோக்கத்தை நன்றாக நிறைவேற்றி எம்மினத்தை சரியான வழியில் விழிப்புணர்வு செய்வதற்கு...அதுவும் நம் ஈழத்தில் எம்மக்களின் இக்கட்டான நிலையில்...

நன்றாக பொழுது போக்குங்கள்.... :lol: :lol: :lol:

சரி உங்களைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோவன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது!!!!!

சோழியண்ணன்.. ஏனிந்த... ம்ம்ம்!

ஆனா ஒன்று சொல்லிக்கிறன் கேளுங்கோ.. புலம்பெயர்ந்த நம்மவர்களின் பெண் வாரிசுகள் பலர் தவறான பாதையில் விரைவாக பயணிக்க உந்த இணையம்.. பலமாகப் பயன்படுகிறது. அதேபோல் ஆண்வாரிசுகளும்.. சளைக்காமல்.. பயணிக்கிறார்கள்.

உதில கனபேர்.. பெண்கள் பெயரில் உலவும் ஆண்கள். அவர்களை ஆண்கள் என்பதிலும்.. அவர்களுக்குரிய நல்ல பதத்தை பாவிக்கலாம்.. நாகரிகமாக இருக்காது என்பதால் தவிர்க்கிறேன்.

ஆனால் இவர்களை இப்படி யாழுக்கு இவ்வாறான வடிவில் கொண்டு வருவதால் திருத்த முடியும் என்பது கனவு. அந்தந்த நேரத்தில் அவைக்கு அது சரியாகப் படும். பின்னர் உணர்ந்து திருந்திடுவார்கள்.. அல்லது திருந்த வைக்கப்படுவார்கள்..!

நான் இணைய வரலாற்றில் உப்படியான சற்றிங்குக்கு போய்.. மிணக்கடுறதில்ல. ஒரு சிலரோடு எம் எஸ் என்னில கடலை போட்டிருக்கிறன். அதுவும் அவையா என்னை அட் பண்ணின படியா. நானா யாரையும் அட் பண்ணுறதில்ல..!

எல்லாம் எங்க மனசில இருக்கிற உறுதியில தான் இருக்குது. நாங்க ஒவ்வொருவரும் எங்களளவில சரியா இருந்திட்டம் என்றால்.. ஏன் அங்க இப்படி கதை வரப்போகுது..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

வணக்கம்,

இந்த கருத்தாடலை நான் இஞ்ச ஆரம்பிச்சதன் நோக்கம் யாரையும் திருத்தி எடுக்கவேணும் இல்லாட்டிக்கு யாருக்காவது அறிவுரை சொல்லவேணும் எண்டுறதுக்காக அல்ல. குறிப்பிட்ட ஒருவருக்கு விரலை நீட்டி நீ தான் குற்றவாளி எண்டு சொல்லிறது அல்ல இதன் நோக்கம். நாங்கள் எங்களுக்க எத்தனைவிதமான பிரச்சனைகள், உளவியல் நெருக்கடிகள், சிக்கல்கள் இருக்கிது எண்டுறத அறிஞ்சுகொள்ள வேணும்.

நான் காதலா.கொம் வலைத்தளத்தை அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில பார்வையிட்டு இருக்கிறன். அதை ஆரம்பிச்சவருக்கு பெயர் சேகர் எண்டு நினைக்கிறன். சரியா தெரிய இல்லை. நான் முன்பு அங்க போய் சினிமா பாடல்கள் கேட்கிறது. பல புதிய சினிமா பாடல்களை அங்குபோய் கேட்ககூடியதாக இருந்திச்சிது. பிறகு சுமார் நான்கு ஐந்து வருடங்களாக காதலா.கொம் தளத்துக்கு போக இல்லை. பிறகு காதலா.கொம் பற்றி ஒரு தகவல் ஒன்றை ஒருவ சொன்னதால அந்ததளம் இப்ப எப்பிடி இருக்கிது எண்டு பார்க்க முந்தாநாள் போய் இருந்தன். அங்கு அரட்டை அடிப்பவர்கள் என்ன கதைத்தார்கள் என்பதை சில நிமிடங்கள் பதிவு செய்து இங்கு இணைச்சு இருக்கிறன்.

முதலில இங்கு நாங்கள் காதலா.கொம் தளத்தை குற்றவாளிகள் எண்டு சொல்லமுடியாது. இல்லாட்டிக்கு இங்கு அரட்டையில் பங்குபற்றியவர்களை குற்றவாளிகள் எண்டு சொல்லமுடியாது. சும்மா ஐயோ ஐயோ எண்டு சொல்லி அருவருக்கிறதில பிரயோசனம் இல்லை. மற்றவனை கூடாதவன் எண்டு சொல்லி நாங்கள் நல்லவர்கள் எண்டு இனம் காட்ட ஏலாது. இது ஒருவரிண்ட பிரச்சனை இல்லை. ஒருவரை குற்றம் சொல்லிறதுக்கு.

நாங்கள் பிரச்சனை ஒன்றை கண்டால் ஒருவரை இனம்கண்டு குற்றவாளி/துரோகி பட்டம் கொடுத்து மகிழறத நிப்பாட்டிப்போட்டு அந்த பிரச்சனையிண்ட பின்னணி, மூல காரணங்கள், தாக்கங்கள் பற்றி கொஞ்சமாவது ஆராயவேணும். இணையம் எண்டுறது புதுவிசயம். இது எங்கட வாழ்வில நேரடியான ஆதிக்கம் செய்யத்துவங்கிஇன்னமும் பத்துவருசம் கூட ஆக இல்லை. எல்லாமே புதுவிசயங்கள். ஒருவருக்கும் இதுபற்றி முன்கூட்டிய அனுபவங்கள் இல்லை. வலைத்தளங்கள், கட்டுப்பாடுகள், நடைமுறைகள், சமூகப்பிரச்சனைகள் இதுகள் பற்றி எல்லாம் ஓரளவுக்காவது சரியான தெளிவு ஏற்படுறதுக்கு இன்னும் ஐம்பது, நூறு வருடங்கள் எடுக்கலாம். இந்தவகையில முதலில பிரச்சனைகளை அலசி ஆராயவேண்டிய தேவை இருக்கிது.

இப்ப உதாரணமாக யாழ் இணையத்தை, அதிண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் மோகன் ஏதோ ஒரு ஆர்வத்தில தற்செயலாக ஆரம்பிச்சு அது இப்ப எங்கட ஆக்கள் நிறையப்பேர் தமது நேரத்தை செலவளிக்கிற ஒரு வலைத்தளமாக வந்திட்டிது. மோகன் சில நிருவாக ஒழுங்குகளை செய்தாலும், யாழ் இணையம் உண்மையில மோகனிண்ட கட்டுப்பாட்டில, தொலைநோக்கிண்ட அடிப்படையில விரிவடைஞ்சு செல்லும் எண்டு சொல்லமுடியாது. ஏன் எண்டால் இது ஒரு புதுவிசயம். ஒருவருக்குமே இதன் ஆழம் தெரியாது.

எங்கட பிரச்சனைகள் எண்டு பார்த்தால், முதலில நாங்கள் பலர் தாயகத்தில இருந்து வெளிக்கிட்டு வெளிநாடுகளுக்க வந்து இருக்கிறம், வாழுறம். இதுவே ஒரு புதுவிசயம். ஏன் எண்டால் இதுபற்றிய முன்கூட்டிய அறிவு எங்கட சமுதாயத்துக்கு இல்லை. இரண்டாவது வந்த இடத்திலையும் கூட பலப்பல புது விசயங்கள், நவீன தொழிநுட்பங்கள், வளர்ச்சிகள்... இப்படி பல.

தினமும் புதிய புதிய மென்பொருட்கள், உத்திகள், Web Applications எல்லாம் வந்துகொண்டு இருக்கிது. இதுகள் பற்றி ஒருவருக்கும் முன்கூட்டிய அறிவோ அனுபவமோ இல்லை. இதுகளை எங்கட சமூகத்தில பிரயோகிக்கிறதால வரக்கூடிய நன்மைகள், தீமைகள், பின்விளைவுகள் பற்றி ஒருவருக்குமே தெரியாது. நாளைக்கு Facebook, msn messenger, google, youtube மாதிரி எல்லாம் தமிழிலையும் வந்திச்சிது எண்டால்... எங்கட ஆக்கள் தமிழில இப்படியான சேவைகளை தந்தால் அதனால வரக்கூடிய பின்விளைவுகள், பாதிப்புக்கள் பற்றி ஒருவருக்குமே ஒண்டும் தெரியாது. எல்லாம் Beta Version...

எண்டபடியால நாங்கள் இதுகள் பற்றி எங்களுக்க கலந்துரையாடல்கள் செய்வதுமூலம் Grass Root Level இல சிந்தனைகளை பகிர்வதன்மூலம் மெல்ல, மெல்ல எங்கட இருப்புக்களை இப்படியான விசயங்கள் மூலம் வரக்கூடிய தீமைகளில இருந்து எப்படி பாதுகாக்கலாம் எண்டு ஒரு நடைமுறை அறிவை பெற்றுக்கொள்ளலாம்.

மேல அரட்டை அடிச்சவர்களை குற்றம் சாட்டி, இல்லாட்டிக்கு காதலா.கொம் மேல கோவம் கொண்டு ஒருபயனும் இல்லை. ஒவ்வொருத்தரும் எத்தனைவிதமான மன அழுத்தங்கள், பிரச்சனைகளில இருக்கிறீனம் எண்டு தெரியாது. மற்றது, இஞ்ச அரட்டை அடிச்ச ஆக்களில எத்தினபேருக்கு தமிழ் தெரியுமோவும் தெரியாது. என்னுடோட இஞ்ச படிச்ச நிறைய தமிழ் பெடிகளுக்கே தமிழ் வாசிக்க தெரியாது. கதைக்கமட்டும்தான் தெரியும்.

இதுகளை குறுகிய நோக்கில பார்த்து குற்றச்சாட்டுக்கள் சொல்லாமல்.. எங்கட தலைகளை எப்படி பாதுகாக்கலாம் எண்டும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கோ. திறந்த பொது அரட்டை இடங்களிலையே இப்பிடி அரட்டை அடிச்சு இருந்தார்கள் எண்டால் தனிப்பட்ட அரட்டை பரிமாறலில எப்படியான சம்பாசணை நடந்து இருக்கும்... இவர்கள் யாரோவாக இருப்பார்கள்.. எண்டபடியால் பேசிவிட்டு போனால் காணும் எண்டு பார்த்தால் போதுமோ? இவையள் உங்கட தம்பி, தங்கைகள், அக்கா, அண்ணாமாராக, நண்பர்களாக, உறவினர்களாக இருக்கலாம். எல்லாத்திலையும் நல்ல விசயங்கள் இருக்கிது. கூடாதவிசயங்களும் இருக்கிது. நல்லது மட்டும் எங்களுக்க கிடைக்கவும், கூடாதவற்றில இருந்து தப்பிக்கொள்ளும் வகையில சிந்திப்பம்.

கத்தியை காய்கறி வெட்டவும் பாவிக்கலாம். விரலை வெட்டவும் பாவிக்கலாம். மற்றவனை குத்தவும் பாவிக்கலாம். கருவிகளை, நெம்புகோல்களை, சேவைகளை சரியான முறையில பிரயோகிச்சால் எல்லாரும் அதன்மூலம் பலவிதமான நன்மைகளை பெறலாம்.

  • தொடங்கியவர்

சரி அப்ப சமூகச்சாரளத்தில எதைப்பற்றி கதைகலாம் எண்டு சொல்லுறீங்கள்? நாங்கள் வாழ்கின்ற ஒவ்வொரு ஊர்களிலயும் ஊறுகாய் போத்தல் எத்தின ரூவாவுக்கு போகுது எண்டு கேட்டு ஒரு கருத்தாடல் செய்யலாமா? இல்லாட்டிக்கு இண்டைக்கு மெய்யெனப்படுவது பகுதியில ஆரம்பிக்கப்பட்டது மாதிரி முருகப்பெருமான் ஆணா இல்லாட்டிக்கு பெண்ணா எண்டு ஒரு கருத்தாடல் ஆரம்பிக்கலாமா? இல்லாட்டிக்கு கறுப்பி அக்கா நான் 100,000 கருத்து எழுதீட்டன் எண்டு ஊரைக்கூப்பிட்டு ஒரு ஒப்ப்பாரி கருத்தாடல் ஆரம்பிக்கலாமா?

சரி அப்ப நான் கொஞ்ச நாளைக்கு யாழில எழுதாமல் பார்வையாளராக இருக்கிறன். நீங்கள் சமூகச்சாரளத்திலயும்,மற்றும் இதரபகுதிகளிலையும் நாலைஞ்சு கருத்தாடல்களை ஆரம்பிச்சு கருத்துப்பரிமாற்றம் செய்து காட்டுங்கோ எப்பிடி எண்டு நானும் உங்களிட்ட கேட்டு படிக்கிறன். மிச்ச ஆக்களும் உங்களிட்ட இருக்கிற விசேட அம்சங்களை, ஆற்றல்களை தெரிஞ்சு அறிஞ்சு அவையுண்ட அறிவையும் பெருக்கிக்கொள்ளலாம்.

நானும் இஞ்ச இருந்துதான் எல்லாம் கருத்துக்கள் ஒவ்வொரு பாணியில எழுத கற்றுக்கொண்டது கடந்த இரண்டு வருடங்களாக. உங்களுக்கு யாழில இதுகள பார்க்க ஏதோ புதினமாய், குழப்பமாய் இருந்தால் நீங்கள் விலகி பார்வையாளராக இருக்கலாம். இல்லாட்டிக்கு சுயமாக நீங்கள் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கலாம். இல்லாட்டி யாழ் பற்றி ஒரு விமர்சன தளத்தை - சுத்துமாத்துக்கள் தளம் மாதிரி ஒண்டை ஆரம்பிக்கலாம். இஞ்ச என்னோட மல்லுக்கட்டி நீங்கள் சாதிக்கப்போவது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாட்டிக்கு இண்டைக்கு மெய்யெனப்படுவது பகுதியில ஆரம்பிக்கப்பட்டது மாதிரி முருகப்பெருமான் ஆணா இல்லாட்டிக்கு பெண்ணா எண்டு ஒரு கருத்தாடல் ஆரம்பிக்கலாமா?

நான் நினைக்கவில்லை இந்தத் தலைப்புக்கு உள்ள potential validity முருகன் ஆணா பெண்ணா என்ற கேள்வியுடன் தொடரப்பட்ட தலைப்புக்கு இருக்குமென்று. ஏனென்றால் அங்கு தூசணம் இல்லை.

நல்லூர் வீதியில் கச்சான் விக்கிற மனுசியும் தான் தூசணம் பேசுது.. கனடாவில அப்பக்கட வைச்சிருக்கிற சின்னாட பொடியும் தான் கலுசான் கழன்று விழ.. தாவித்தாவி Wh..t the.. F*** பேசிட்டுது திரியுது. உதுகளை சமூகம் என்று காட்டிக் கொண்டு.. திருத்த முனைந்தால்.. திருந்தும்..??! :rolleyes:

மேலே நான் இட்ட தலைப்பு இரண்டு ஓவியங்கள்.. இரு வேறு நாகரிகத்தில் எவ்வாறு ஒருமித்தனவாகின.. அல்லது அவ்வாறு தோற்றமளிக்கின்றன என்றுதான் அமைகிறது. அந்தத் தலைப்போடு வழங்கப்பட்ட இணைப்பில் மேற்படி ஓவியம் பெறப்பட்ட இடம் தரப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆக்கம்.. பறவை பாம்பு என்று மிருக வழிபாடு பற்றியும் பேசுகிறது... முருகனும் மயிலோடும் அதனோட பாம்போடும்.. இருக்கும் ஓவியங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறோம்.இதற்கான கருத்துருவாக்கம்.. எங்கு எப்போது உதித்தது.. எங்கு இச்சிந்தனைகள் ஒருமித்தன.. எது முன்னையது எது பின்னையது என்பதன் மெய்யைத் தேடுவதையே நோக்காகக் கொண்டிருக்கிறது தலைப்பு.

கண்ட காவாலி.. கலுசடையல் இணையச் சந்தியில.. அடிக்கிற அரட்டையில.. தமிழ் வழக்கொழிகிறது என்று எவனாவது கவலைப்பட்டால்.. ஊரில கள்ளுக்கொட்டிலில பேசிற தூசணத்தாலையும் தமிழ் வழக்கொழிகிறது என்றெல்லோ கவலைப்பட்டிருக்க வேணும்..!

ஆட்டுக்குள்ள மாட்டைக் கலந்து உங்கள் பார்வைக்குரிய வகையில் இரண்டு தலைப்பையும் ஒன்றாக்க நினைக்காதீர்கள்..! எனது பதிவுக்கு ஏன் அப்படித் தலைப்பிட்டேன் என்பதை என்னிடமே கேட்டுக் கொள்ளலாம். நான் விளக்கப் படுத்த தயாராகவே இருக்கிறேன்..!

சாடை மாடை பேசுறது.. எனக்குப் பிடிக்கிறதில்ல..! ஒழிச்சு மறைச்சுப் பேசிட்டு அப்புறம்.. கரவு சந்தேகம் என்று பழிமுடிச்சு திட்டித் திரியுறதும் எனக்குப் பிடிக்கிறதில்ல..! எதையும் நேர கேட்டுக்கிறது நல்லது.. முற்போக்கானது. :wub::huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களம் எண்டால் பலதும்பத்தும் இருக்கத்தான் செய்யும்.

இதுக்குப்போய் என்ரை பெரிசு உன்ரை பெரிசு எண்டு எண்டு என்னத்துக்கப்பா சண்டை புடிக்கோணும்?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிந்தனையிருக்கும் அதன் படிதான் அவையின்ரை எழுத்துக்களும் இருக்கும் ஒருவரின்ரை எழுத்து நடை இல்லாட்டி அவர் சொல்லவந்த விசயம் விளங்காமல் போறதாலையும் இஞ்சை இப்ப கன பிரச்சனையள் வருகுது

சாதியையும் மதத்தையும் வைச்சு வருசாவருசம் சண்டை புடிக்கிறதுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுறதுக்கும் விரும்பின பாட்டு கேக்கிறத்துக்குந்தான் யாழ்களம் சரிவரும் போலை கிடக்கு

இல்லாட்டி சாத்திரி எனக்கு சொன்ன மாதிரி ஆறுமுகநாவலர் மாதிரி எழுதவும் திருஞானசம்பந்தர் மாதிரி தேவாரம் பாடுறதுக்குத்தான் சரியான இடம் இதுவெண்டால் ஒண்டும் செய்யேலாது

ம்..ம்...ம்....ம்..... கும் அதுவும் சரிவராது ஏனெண்டால் எங்கடை சாமியளை பத்தி கதைச்சால் திருவாளர் சபேசன் கொம்பனி வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு முன் வரிசைக்கு வந்துடுவினம்

என்ன செய்யலாம்??????????..... ஆ..... ஈழவிடுதலையை பத்தி கதை கவிதை எழுதுவோமா? அட அதுக்கும் ஒரு வில்லன் இருக்கிறானப்பா :rolleyes:

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவன், விளக்கத்துக்கு நன்றி! மேல ஒருத்தர் காவல்நிலையத்தில கேள்வி கேட்கிறமாதிரி ஏதோ கேட்டு இருந்தார். அவருக்கு விளங்கக்கூடிய பாசையில சொல்லேக்க உங்கட கருத்தாடல் பற்றியும் கதைக்கவேண்டி வந்திட்டிது. முருகப்பெருமானும் அம்மனத்தோட எங்கையோ நிண்டவராம் சிவபெருமானோட கோவிச்சுக்கொண்டு. அதன் தொடர்ச்சியாகத்தான் சாமிகளே அம்மனத்தோட நிக்கேக்க எங்கட சமுதாயமும் அந்தவழி போகிது.

இது சமூகச்சாளரம் ஒரு சம்பவத்தை படம் பிடிச்சு காட்டி இருக்கிது. எல்லாருக்கும் அதில எழுதப்பட்டவற்றை பார்த்து ஐயோ.. அருவருக்கிது... தூ. எண்டு எல்லாம் சொல்லமுடியுது ஒழிய பிரச்சனைகளை பல கோணங்களில அணுகி அதை ஆராய தெரிய இல்லை. இங்கு சம்மந்தப்பட்டவர்கள் உங்களை மாதிரி, எங்களை மாதிரி சாதாரண ஆக்கள். அவர்கள் எமது முகம் அறியாத உறவுகளாக இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில ஒரு குடும்பமாக சமூகத்தில அடங்கிற ஆக்கள்.

இங்கு மேல ஒரு உதாரணம் காட்டப்பட்டு இருக்கிது. இதை பலருக்கு விளங்கிக்கொள்ள முடிய இல்லை. இதே விசயத்தை ஆனந்தவிகடன், குமுதம், இல்லாட்டி தட்ஸ்தமிழ் எண்டு யாராச்சும் கிளூகிளுப்பாக பறக்க பறக்க சொல்லி இருந்தால் ஆ எண்டு வாயில இலையான் பூற திறந்துவச்சுக்கொண்டு கேட்டு இருப்பீனம் மூச்சு பேச்சு இல்லாமல். ஆனால்... அதே விசயங்களை நாம கதைச்சால்... ஐயோவாம்.. வாந்தி வருகிதாம்... தாங்கள் ஏதோ ஒண்டும் தெரியாத அச்சா பாப்பாக்களாம். இத யாழுக்க கொண்டுவந்து யாழில தரம் குறைஞ்சு போச்சிதாம். இதை கேட்க சிரிக்கிறதா அழுகிறதா எண்டு தெரிய இல்லை.

யாழில நாகரீமாக எழுதப்படுற பல விசயங்களை அங்கு அநாகரிகமாக எழுதி இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில சிந்தனைகள் ஒரேமாதிரியானவைதான். அவற்றின் பின்னால் இருக்கின்ற அடிப்படை உணர்வுகள் ஒரே மாதிரியானவைதான். இஞ்ச இருக்கிற ஆக்கள் தாங்கள் யோக்கியவான்கள் எண்டு கற்பனை செய்துகொண்டு இருக்கிறத முதலில நிப்பாட்டுங்கோ. ஒரு விசயத்தை சரியாக அணுகத்தெரியாதுவிட்டால் பொத்திக்கொண்டு இருக்கலாம்.

ஒரு பெண்ணை ஒரு வைத்தியர் வியாதியை ஒன்றை தீர்பதற்காக இல்லாட்டிக்கு உடம்பை பரிசோதிப்பதற்க்காக அவளை நிர்வாணமாக்கி சோதனை செய்கின்றார் எண்டால் வைத்தியரின் மனதில் இருப்பது தூய்மையான சேவை. பெண்ணிண்ட உடலை பார்த்து ரசிக்கமாட்டார். ஒரு குழந்தை மலம் கழிச்சுபோட்டுது எண்டால் அந்த குழந்தையிண்ட தாய், தகப்பன் அந்த குழந்தையை வெறுக்காது... உடனடியாக கழுவி சுத்தம் செய்துவிடுவார்கள்.

இஞ்ச மேல நான் இணைச்ச அரட்டையில எழுதினவர்களை உங்கட உறவுகளாக நினைச்சால் உங்களுக்கு அருவருப்பு வராது. பிரச்சனைகளை எப்படி அணுகலாம்... கையாளலாம் எண்டு கொஞ்சமாவது பொறுப்புணர்வோட யோசிச்சு இருப்பீங்கள். கருத்து பகிர்ந்து இருப்பீங்கள். ஆனால்.. ஆ ஊ கூம் தூ எண்டு நிக்கிறீங்கள் எண்டால் அதன் அர்த்தம் உண்மையில இந்த சமூகச்சாரளம் எண்டுற கருத்தாடல் தளத்திண்ட நோக்கம் என்ன எண்டு தெரியாதவராக இருக்கலாம். இல்லாட்டிக்கு என்னை மோப்பம் பிடிச்சு எனக்குப்பின்னால சுத்திச்சுத்தி திரிஞ்சு என்னை பிழைபிடிப்பவராக இல்லாட்டிக்கு என்னை மட்டம் தட்டுபவராக இருக்கலாம்.

நான் ஏற்கனவே மேல விரிவாக ஒரு பந்தியில விளக்கங்கள் சொல்லி இருக்கிறன். சிந்தனைகளை பகிர்ந்து இருக்கிறன். இதுக்கு மேல தாம் தக்க தை எண்டு சொன்னால்.. நானும் இங்கு மேல உள்ள அரட்டையில உள்ளதைவிட அநாகரிகமான முறையில கதைக்கவேண்டி வரும். சிந்திக்கத் தெரியாதவர்கள்... கண்டவன்.. போறவன்... வாறவன்.. எல்லாரும் யாழில கீமானில எழுதப்பழகிபோட்டு ரெண்டு வசனத்தில கருத்து எழுத வெளிக்கிட்டால் யாழ் களம் கேவலமாக போகவேண்டியதுதான்.

ஊர்ப்புதினம்தான் இப்படி ஆ ஊ எண்டு கத்துற இடமாக இருக்கிது எண்டால்.. கடைசியில சமூகச்சாரளத்தையும் ரெண்டு வசனத்தில மெசஞ்சர் செய்தி அனுப்புற பகுதியாக மாற்றி கேவலப்படுத்தி போடாதிங்கோ. சிந்திக்ககூடியவர்கள் இங்கு சிந்தித்து கருத்து எழுதுங்கள். கோசம் போடுபவர்கள் ஊர்ப்புதினம் பகுதிக்குபோய் உங்கட வித்தைகளை காட்டுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ட காவாலி.. கலுசடையல் இணையச் சந்தியில.. அடிக்கிற அரட்டையில.. தமிழ் வழக்கொழிகிறது என்று எவனாவது கவலைப்பட்டால்.. ஊரில கள்ளுக்கொட்டிலில பேசிற தூசணத்தாலையும் தமிழ் வழக்கொழிகிறது என்றெல்லோ கவலைப்பட்டிருக்க வேணும்..!

இங்கே கள்ளுக்கொட்டிலை இழிவாக முன்னுதாரணம் வைக்க முனைந்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அத்துடன் இதனால் பல பின் விளைவுகளையும் நீங்கள் சந்திக்கவேண்டிவருமெனவும் எச்சரிக்கின்றேன்.

ஐயோ இந்த அநியாயத்தை கேட்க யாருமேயில்லையா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கள்ளுக்கொட்டிலை இழிவாக முன்னுதாரணம் வைக்க முனைந்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அத்துடன் இதனால் பல பின் விளைவுகளையும் நீங்கள் சந்திக்கவேண்டிவருமெனவும் எச்சரிக்கின்றேன்.

ஐயோ இந்த அநியாயத்தை கேட்க யாருமேயில்லையா? :lol:

நான் இருக்கிறன் குமாரசாமியண்ணை ,

ஆரப்பா ...... கள்ளுக்கொட்டிலை இதுக்குள்ளை இழுத்தது .

குசா. அண்ணை , எங்கை என்ரை பிளா ?

அதுகுள்ளையும் கொஞ்சம் விடுங்கோ .....

அடிச்சிட்டு நாலு கேள்வி கேட்பம் . <_<

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கள்ளுக்கொட்டிலை இழிவாக முன்னுதாரணம் வைக்க முனைந்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அத்துடன் இதனால் பல பின் விளைவுகளையும் நீங்கள் சந்திக்கவேண்டிவருமெனவும் எச்சரிக்கின்றேன்.

ஐயோ இந்த அநியாயத்தை கேட்க யாருமேயில்லையா? <_<

கு.சா உதை சும்மா விடக்கூடாது.நெடுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரைக்கும் புறக்கனிப்போம் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த புறக்கனிக்க போறிங்க?

கள்ளு கொட்டிலையா? <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த புறக்கனிக்க போறிங்க?

கள்ளு கொட்டிலையா? <_<:lol:

இப்ப எல்லாம் கள்ளு.. கொட்டிலில விக்கிரதில்ல.. புலம்பெயர்ந்த நாடுகளிலேயே கடையில விற்குது. அன்று ஒரு தமிழ் கடைக்கு ஒரு வயதானவங்க ஏதோ சமையல் பொருள் வாங்கி வரச் சொல்லி வாங்கப் போனன். அங்க கள்ளு குளிரூட்டிக்க வைச்சிருந்து விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

ஊரில சாராயக் கடைக்கு.. கள்ளுக் கொட்டிலுக்கு நாகரிகமான தமிழ் பொம்பிளையள் போறதில்ல. சிறுபிள்ளைகளையும் விடுறதில்ல. ஏன்னா கள்ளுக் குடிகாரங்க தலை கால் புரியாம குடிச்சிட்டு.. தப்பா பேசுவாங்க.. நடந்து கொள்வாங்க என்று. எங்க அம்மம்மா சொல்லுவாங்க இப்படியான ஊர்ப்புதினங்கள். ஆனால் நான் வளர்ந்து பார்க்கிறன்.. இப்ப எல்லாம் பொம்பிளையள் தான் சும்மா இருக்கிற ஆம்பிளையளையும் இழுத்துக் கொண்டு பப்பு.. கிளப்பு என்று அரையும்குறையுமா உடுத்துக் கொண்டு போகினம்..!

கள்ளுக்கடை தமிழுக்காக.. நாங்கள் வருத்தப்பட்டால்.. பள்ளிக்கூடத் தமிழ் வளருமோ..??! அதுபோலத்தான் இணையம் என்ற பெருவீதியில்.. உதுகள் கள்ளுக்கடை.. அல்லது.. பப்பு.. அல்லது கிளப்பு போன்ற இடங்கள். அங்க போற ஆம்பிளையளும் ஒரு மாதிரி.. பொண்டுகளும் ஒரு மாதிரி..! அதுகளை எல்லாம் சொல்லித் திருத்தேலும் என்றால் பெற்றோர்.. நண்பர்களே திரித்தி இருப்பரே. அதுகள் தாங்களே கெட்டுத்தான் திருந்துவம்.. என்கின்ற பேர்வழிகள். அதுகளை பாவிக்கிறவங்க பாவிச்சுப் பிழைச்சுக்கிறாங்க..!

கவலைதான்.. ஆனால் இவர்களுக்காகக் கவலைப்பட்டும் பயனில்லை..! அவர்கள் சொல்வழி கேட்கமாட்டம் என்ற எண்ணமுள்ளவர்கள். தாம் செய்வதே சரி என்று நினைத்து மமதை எனும் ஒரு வகை போதையில் வாழ்பவர்கள். :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.