Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி நோக்கிய நான்கு முனை முன்நகர்வு முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 போ் காயம்; 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு

Featured Replies

  • தொடங்கியவர்

யாழ். கிளாலியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். 160 பேர் காயமடைந்துள்ளனர் என சிறிலங்கா படைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) கிளிநொச்சி நோக்கிய நான்கு முனை முன்நகர்வு முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 போ் காயம்; 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு

ஜசெவ்வாய்க்கிழமைஇ 16 டிசெம்பர் 2008இ 10:18 பி.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

கிளிநொச்சி நோக்கிய நான்கு முனைகளிலான சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியுமாக நான்கு முனைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

செறிவான பல்குழல் வெடிகணைஇ ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி முன்நகர்வுகளை முறியடித்தனர்.

இதில் 100-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

படையினரின் 10 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளைஇ கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வினை முறியடித்த விடுதலைப் புலிகள் 40-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொன்று 120-க்கும் அதிகமானோரை காயப்படுத்தி படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SLA suffers third debacle in Ki'linochchi, 100 killed, 250 wounded - Puleedevan

[TamilNet, Tuesday, 16 December 2008, 16:51 GMT]

The Liberation Tigers of Tamileelam (LTTE) on Tuesday repulsed a major push by the Sri Lanka Army, killing at least 100 SLA soldiers and causing injuries to more than 250, said S. Puleedevan, the director of LTTE's Peace Secretariat, quoting Tiger commanders who were in charge of the Tiger defensive fronts in Ki'linochchi district. "According to the emerging details, a multi-front push towards Ki'linochchi from Malayaa'lapuram, Kugnchupparanthan, Mu'rika'ndi and Pulikku'lam, was repulsed by the LTTE defensive formations that have seized weapons and recovered at least 10 corpses of the Sri Lanka Army," Mr. Puleedevan told TamilNet citing the military officials of the LTTE.

"This is the third debacle of the SLA in Ki'linochchi district within the past few weeks," Puleedvan added.

Heavy fighting raged from 5:00 a.m. till the evening when the move was thwarted.

Two AK-LMGs, one PK-LMG and six T-56 assault rifles were among the weapons seized by the Tigers so far in the clearing mission which was going on, he said.

The Tigers were making arrangements to hand over the 18 dead bodies, 10 from Ki'linochchi and 8 from Ki'laali, through the ICRC, Puleedevan saidhttp://www.tamilnet.com/art.html?catid=13&artid=27754

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27754

நடப்பவை நல்லவையாக இருக்க நாம் என்றும் எமது மானமறத்தமிழன் வழி சென்று எமது தேசியத்திற்க்கு வழிசமைப்போம்!!! அத்தோடு என்று தான் இந்த போராட்டத்தை எமது மக்களின் அவளத்தை தேசத்தின் தலைமைகளும் உலகத்தின் ஆதிக்க சத்திகளும் புரிந்து கொள்ளுமோ தெரியாது இருப்பினும் நாம் எமது போராட்டத்தை கைவிடளாகாது இன்னும் இன்னும் எத்தனை சுமை வரினும் நாம் தான் எமது மக்களுக்கும் எமது தலைமைக்கும் எமது காவளர்களுக்கும் துணையாக உதவிகள் ஒத்தாசைகள் உறுதுணைகள் கொடுத்து வாழ வைக்க வேண்டும் "தமிழா சிந்தித்து பார் உனக்கு என்று எமது சந்ததிக்கென்று நாடு ஒன்று உண்டா???????"

Edited by Inathant

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். கிளாலி களமுனை

http://vakthaa.tv/play.php?vid=2718

சிங்களப் படைகளின் இந்த வல்வளைப்பு முயற்சிகளிற்கு எதிராக திரமுடன் காளமாடி வீரச்சாவை அணைத்துக் கொண்ட வேங்கைளிற்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தின் இழப்பை யோசிக்கும் பட்சத்தில் எங்கட அண்ணைமாரின்ற செயற்திறனும் போர்திறனும் அங்கும் ஏற்பட்ட இழப்புகளையும் நாங்கள் யோசிச்சுப்பார்க்க வேணும்.

காலநிலையும் கைகொடுக்கா நிலையில் களத்தில் உறுதியுடன் மட்டுமே தங்கள் பணியைச் செவ்வனே செய்து நிற்கும் எங்கள் வீரப்புலிகளுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிலாலில 40 பலி

கிளிநொச்சி 100 பலி .. 140 சிங்கள குன்டற்களுக்கு tata காட்டியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நோக்கிய பாரிய நான்கு முனை நகர்வு முறியடிப்பு - 140 படையினர் பலி, 370 பேர் படுகாயம்;, 18 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் புலிகள் வசம்

கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்கா மேற்கொண்ட இன்னொரு முயற்சியும் விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முன்னேற முனைந்து ஏராளமான படையினரைப் பறிகொடுத்து பெரும் இழப்புக்களைச் சந்தித்த சிறிலங்கா, இன்று கிளிநொச்சி நோக்கி நான்கு முனைகளின் ஊடாக மேற்கொண்ட முன்நகர்வும் கிளாலியில் இருந்து மேற்கொண்ட முன்நகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 140ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 370ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 18 உடலங்களும், பெருமளவு ஆயுத தளவாடங்களும் புலிகள் வசமாகியுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது, குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியுமாக நான்கு முனைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி முன்நகர்வுகளை முறியடித்தனர். இதில் 100-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட பெருமளவிலான ஆயுத தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்று விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளனர். இதன்போது 2 ஏ.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளும், ஒரு பி.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத தளவாடங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வினை முறியடித்த விடுதலைப் புலிகள் 40ற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொன்று 120க்கும் அதிகமானோரை காயப்படுத்தி படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆரம்பித்த முன்னகர்வு முயற்சி காலை 10.30 மணிவரை சுமார் ஒன்பது மணிநேரங்கள் கிளாலியில் நீடித்ததாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகளின் 53வது டிவிசன் கொமாண்டோ படையணியின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையணியே முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கியுள்ளது.

முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருக்கு பின்தள பீரங்கி, பல்குழல் சூட்டாதரவு வழங்கப்பட்டதுடன், டாங்கிகளும் முன்னேறும் படையினருடன் களமிறக்கப்பட்டிருந்தன.

இந்த முன்னகர்வு முறியடிப்பின்போது சிறீலங்கா படையினரின் சடலங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டில் அடுத்து வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவார்களென யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த தாக்குதல் தொடங்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண இராணுவ தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனக் கூறியிருந்தார்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

புலியொரு காலமும் பணியாது -எந்த

படைவந்த போதிலும் சலியாது

திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்

அலையாதிடுமோ கிடையாது -எங்கள்

நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை

எம்மை ஆளவென்று சதிபோடும்

முள்ளை மலரென்று கதைபேசும் -சில

மந்திகள் கொடிதாவும்

கொட்டிலுக்கு கூரையில்லை

கொண்டுவந்த தேதுமில்லை

கட்டுதற்கு ஆடையில்லை

மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை

வாவா... -இனி

குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்

பறிப்போம் திடமாய் நடைபோடு

மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி

மலந்திடும் கூத்தாடு

நாம் பிறந்த ஊருமில்லை

நட்டுவந்த தேதுமில்லை

ஆதரவுக்காருமில்லை

ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்

வாவா... -இனி

சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்

களத்தில் கயவரது தேரோட்டம்

மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி

மறுபடி கொடியேற்றும்

பள்ளியில்லை தேதியில்லை

சொல்லியள யாருமில்லை

உள்ளமின்றி மிச்சம் இல்லை

உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு

வாவா... -எங்கள்

ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நோக்கிய நான்கு முனை முன்நகர்வை வெற்றிகரமாக முறியடித்து ,

பல சிங்கள ராணுவத்தினரை களத்தில் இருந்து அப்புறப்படுத்திய வீரவேங்கைகளுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் ஜய்யா சொன்னது சரி தான்...

இது ஆரம்பம்.. வெற்றி செய்தியின்........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=48290

வாழ்க தமிழ் வெள்க ஈழம்...

Edited by kuddipaiyan26

களமாடி விதையாகிப்போன என்னுயிரிளும் மேலான வேங்கைகளுக்கும் தலைவனுக்கும் அவர்களை வழி சமைத்திட்ட தலைவன்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! உங்கள் வீரம் அறிய எதிரி அடிபணிய தமிழன் வீரம் உலகறிய வீரத்தாய் மார் மகிழ வாழ்த்துகிறேன்! அன்புடன்! நன்றியுடன்!

நம் இனம் வாழ தமை வதைக்கும் வீரவேங்கைகளுக்கு தலைவணங்குகிறேன்.

தலைவனின் காலத்தில் தமிழீழம் அமைத்திட காவியங்களாகும் வேங்கைகளே நன்றி.

வீர வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

புலியொரு காலமும் பணியாது -எந்த

பட்டினிக்கு வட்டியில்லை

வாவா... -இனி

குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

ஓருயிர்தான் யாவருக்கும்

வாவா... -இனி

சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

போரெடுத்து வெல்வதற்கு

வாவா... -எங்கள்

ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா

குட்டிப்பையனின் கவிதை வரிகள் அழகு

  • கருத்துக்கள உறவுகள்

வீர வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

குட்டிப்பையனின் கவிதை வரிகள் அழகு

மன்னிக்கவும் அண்ணா

அது கவிதை இல்லை.. அது ஒரு பாட்டு..சிட்டு பாடின பாட்டு... :D

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடேசன் ஜய்யா சொன்னது சரி தான்...

இது ஆரம்பம்.. வெற்றி செய்தியின்........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=48290

வாழ்க தமிழ் வெள்க ஈழம்...

அது "வெல்க" குட்டித்தம்பி, எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கோ..

புலி ஒருகாலமும் பணியாது' என்றபாட்டிலும்..**அலையாறிடுமோ கிடையாது என்றும்,.மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி

மலர்ந்திடும் கூத்தாடு என்று வரவேண்டும் '(ர்) ஐ விட்டுப்போட்டீங்கள்..

சொல்லியழ யாருமில்லை ..

எழுத்துப்பிழைகளை நீக்கி இடவும். நன்றி.

ஓய்வின்றி வரும் எதிரியை தீரத்துடன் எதிர்கொள்ளும் வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியின் மண் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி களத்தில் விதையாகிப் போன எங்கள் வேங்கைகளுக்கு எனது வீர வணக்கங்கள்.

இளங்கவி

களமாடும் வேங்கைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

அது "வெல்க" குட்டித்தம்பி, எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கோ..

குட்டித்தம்பி பிழை விடமாட்டார் பாருங்கோ.. :D

களமாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் மரணித்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்

தமிழர்கள் பன்மடங்கு கூடுதல் உதவிகள் செய்து வெற்றிக்காக உழைக்க வேண்டிய தருணம் இது.

தாயக உணர்வுடன் தாயகத்துள் இடம்பெயர் மக்களின் உணர்வுகள்,

நாம் என்றென்றும் கடமை பட்டுள்ளோம்!

தாயகத்தை நெஞ்சில் சுமந்து, தம் உயிரை விலையாக்கி, எமக்கொன்றொரு தேசம் வேண்டி, உலர் உணவுடன் தேகம் தாங்கி, களமாடும் வேங்கைகளுக்கு சமைத்த உணவாவது எம்மால் தர முடியாதா?

சிந்திப்போம், செயற்படுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்கி மோதலில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்திருக்கிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 !

SLA death toll reaches 130 in Ki'linochchi, 300 wounded - LTTE

[TamilNet, Wednesday, 17 December 2008, 02:08 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) officials on Wednesday said that 130 Sri Lanka Army (SLA) soldiers were killed in the multi-front offensive push by the SLA in Ki'linochchi on Tuesday. More than 300 soldiers were wounded in the heavy battle that raged throughout the day till 4:00 p.m. on Tuesday on four main localities and along a wide stretch of the Ki'linochchi frontiers. LTTE's director of peace secretariat S. Puleedevan on Tuesday said the major push, which was thwarted by the Tigers on Tuesday was the third debacle of the SLA in recent days in Ki'linochchi frontiers.

The Tigers have seized several weapons in the clearing mission that followed.

At least 10 dead bodies of the SLA soldiers were recovered by the Tigers on Tuesday.

The SLA has launched the multi-front push towards Ki'linochchi through Malayaa'lapuram, Kugnchupparanthan, Mu'rika'ndi and Pulikku'lam.

The SLA has also sustained heavy casualties in Jaffna front at Ki'laali where it launched an offensive push in the early hours of Tuesday amid heavy rain. At least 8 bodies were recovered on Tuesday, the Tigers said. However, there were more dead bodies lying between the LTTE and SLA defence lines, according to the latest updates from Ki'laalli front.

நன்றி தமிழ்நெட்.

தமிழர்கள் பன்மடங்கு கூடுதல் உதவிகள் செய்து வெற்றிக்காக உழைக்க வேண்டிய தருணம் இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.