Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதர்களை மனிதர்களாக மதித்தல்

Featured Replies

தலைப்பை பார்த்து நான் தத்துவம் கூற போவதாக நினைத்தால் நிச்சயமாக இல்லை. இங்கு களத்தில் கருத்தாடும் சிலர், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் சக மனிதர்களை விழிக்க கையாளும் சொற்கள் பல முறை மனத்தை உறுத்தி இருக்கிறன. இது தொடர்பாக பழைய களத்திலும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன்.

தங்களை (தனி நபர்/ சமூகம்/ இனம்/ தோற்றம்) பற்றிய தற்பெருமை???? மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம்??? இவற்றில் எது காரணமாக இருக்க வேண்டும் என சரியாக சொல்ல தெரியவில்லை. மற்றைய சக மனிதர்களை தாழ்வு நவிற்சியான சொற்களை பாவித்து ஒரு பக்கம் விழித்து கொண்டு இன்னொரு பக்கம் நான் மற்றவர்களின் மதத்தை மதிக்கிறேன், உணர்வை மதிக்கிறேன், இன்னும் என்னேன்ன உரிமை மதிப்பை சொல்ல முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லி மதிப்பாளர்களாக கட்டி கருத்துகளை எழுதுவதோ / சொல்லுவதோ என்ன பயனை தரும்?

மற்றையவர்களை (இனம்/ மதம்/ எதுவாக இருக்கட்டும்) சக மனிதனாக மதித்து சரியான, மரியாதையான சொற்பதங்களை கொண்டு விழிக்க தெரியாதவர்கள் ஐயோ சிங்கள்வர்கள் எங்களை தாழ்வாக/ பக்க சார்பாக நடத்துகிறான் என்று சொன்னால் என்ன சொல்வது???

உதாரணமாக யாழ் களத்தில் ஒரு சிலர் / வெளியே சமூகத்தில் பலர் பாவிக்கும் சொற்பிரயோகங்கள்

ஆபிரிக்க வம்சாவளியினர் - காப்பிலி/ காப்புலி -

கறுப்பர்கள் என்று சொல்வதே அவர்களை அவமதிக்கும் சொல் என கருதி- ஆபிரிக்க அமெரிக்கார்/ ஆபிரிக்க கனேடிய....... பொன்ற சொற்கள் பவனைக்கு வந்திருக்கும் நேரம் எம்மில் சிலர் அவர்களை தரக்குறைவாக காப்பிலி என்பதும் ஒரு கிண்டல் நிறைந்த பதம் கொண்டு அழைப்பது சரியா????

அடுத்தது

சீனர்களை - சப்பை என்பது.....

இப்படி மரியாதை குறைவாக ஏனையவர்களை அழைத்து கொண்டு உரிமை காப்பாளர்களாக வேசம் போட்டு நீட்டி முழக்கி என்ன பயன்????/

Edited by KULAKADDAN

இதெல்லாம் நடக்கிற விசயமா குளக்காட்டன். ஏதோ இவ்வளவுக்காவது மதிப்பு கிடைக்கிது எண்டு சந்தோசப்பட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான். நாங்கள் மற்றவங்களை கறுவல் எண்டு கூப்பிடுறது சரி. ஆனால் வெள்ளைகள் எங்களையும் கறுவல் எண்டுதானே கூப்பிடுறாங்கள்?

  • தொடங்கியவர்

முரளி கறுப்பர் என்ற பதமே மதிப்பு குறைவாக படுவதாக கருதி தான் ஏனைய சொற்களை பாவனைக்கு கொண்டுவர/ கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் நாம் கறுப்பு என்ற பததையா சொல்கிறோம், அதிலும் மதிப்பு குறைவான சொற்களை அல்லவா பவிக்க முற்படுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்விதான். ஆனால் அடிமனங்களில் பதிந்து போய் இருக்கும்.. இன வெறி.. சாதி வெறி.. மத வெறி.. நிற வெறி.. வர்க்க வெறி.. பண வெறி.. என்பவை இவ்வாறான சில சட்டங்களால் மாற்றப்பட்டு விடுமா..??!

கறுப்பன் என்று சொல்வதை தாக்கிக் கொள்ள முடியவில்லை எங்கிறோம்.. குருடு.. செவிடு.. சொத்தி.. கூழ்முட்டை.. கேண... மரமண்டை.. இப்படிப் பல.. இவையும் கீழ் நிலை மனிதப் பழிப்புகள் தானே.. இவ்ற்றை நாமும்.. நமது சமூகப் படைப்புக்களும் (சினிமா).. சொல்லவில்லையா..??!

ஏன் நாம்.. கறுப்பு என்ற நிலைக்கு சிந்திக்கப் போறம். அடிமட்டத்தில உள்ளதுகளைப் பற்றி சிந்திக்காம..??! சிந்திப்பது தவறல்ல. ஓரிருவருக்குள் மட்டும் அது வட்டமடித்து விடுவதால் அடிமன மாற்றங்கள் ஏற்பட்டு விடாது என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

முகம் கிழித்து இன்னொன்று

- நிர்வாணி -

புரட்சி

விடியல்

தேடல்

வர்க்கம்

சாதி

நான் அதிகம் பாவித்த வார்த்தைகள்

நண்பர்கள் அதிகம் கூடினால்

வாக்குவாதம்

இது சம்பந்தமாகவே இருக்கும்

முற்போக்குவாதி

சிந்தனையாளன்

வாசிப்பவன்

ஆராய்ந்து பேசுபவன்

இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி

சொன்ன வார்த்தைகள்

மேதாவி என்ற போர்வைக்குள்

ஒளிந்துகொள்ள யாருக்குப்

பிடிக்காது ?

பின்னிரா வேளையில்

எவளோ ஒரு இளம் பெண்

நடந்து செல்ல

அவள் ”அதுவாகத்தானிருக்கும்”

எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது

முகமூடி கிழிந்து முகம் தொங்ய

உனக்காக

பொய்முகத்தோடு

கவிதை

புனைபெயர்

கூட்டத்தில் கத்தல்

எதுவுமே இனி சாத்தியமில்லை

எனக்கு

http://www.vaarppu.com/php/printer.php?id=49&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னைப்பொறுத்த மட்டில் ஒரு கோட்டுக்கு பக்கத்தில் சின்ன கோட்டைப்போட்டுவிட்டால் முன்னையது பெரிதாக தோற்றமளிக்கும்.அதாவது தாங்கள் சுயமாக மேல் நிலைக்கு வர முடியாதவர்கள் மற்றவர்களை தாழ்த்துவதன் மூலம் தங்களை உயர்வானதாக காட்ட முற்படும் ஒரு மோசமான செய்கை .

யாழ்க் களத்திலையே ஒருவரால் தனி மடலில் யாழ்க் கள உறவுகளை 'தெருநாய்.. கூட்டம். பரதேசிகள் ' என்று விழித்து எழுத முடிகிறது.

இது எத்தகைய மனப் பிறழ்வான மனதில் இருந்து பிறந்து இருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்திலையே ஒருவரால் தனி மடலில் யாழ்க் கள உறவுகளை 'தெருநாய்.. கூட்டம். பரதேசிகள் ' என்று விழித்து எழுத முடிகிறது.

இது எத்தகைய மனப் பிறழ்வான மனதில் இருந்து பிறந்து இருக்க முடியும்?

மறப்போம் மறுபடியும் பிறப்போம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மறப்போம் மறுபடியும் பிறப்போம். :rolleyes:

நேரில் மெளனிப்போம். வி்சைப் பலகைகளில் விரல்களை மடிப்போம். பிரச்சனை தீர்ந்திடும் சாத்திரி. :D

இப்படியே அடுத்தவனும் தன்னைத் திட்டினதை எடுத்துவிட்டா.. பிரச்சனைகள் தீராது. தொடரும்..! :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேரில் மெளனிப்போம். வி்சைப் பலகைகளில் விரல்களை மடிப்போம். பிரச்சனை தீர்ந்திடும் சாத்திரி. :o

இப்படியே அடுத்தவனும் தன்னைத் திட்டினதை எடுத்துவிட்டா.. பிரச்சனைகள் தீராது. தொடரும்..! :rolleyes:

அதனால்தான் மறப்போம் மறுபடியும் பிறப்போம் என்று எழுதினேன் நெடுக்கு..சிரங்கை சொறியும் பொழுது இன்பமாகத்தான் இருக்கும் வலி பின்னர்தானே தெரியும் :huh::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வடக்கினை விட்டுவிட்டீர்கள்?? இருந்தாலும் தமிழில் காரணப்பெயர் என்பது மிக முக்கியம். சீனர்களின் மூக்குச் சிறிதாக இருப்பதால் தான், சப்பை என்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்திலையே ஒருவரால் தனி மடலில் யாழ்க் கள உறவுகளை 'தெருநாய்.. கூட்டம். பரதேசிகள் ' என்று விழித்து எழுத முடிகிறது.
இது எத்தகைய மனப் பிறழ்வான மனதில் இருந்து பிறந்து இருக்க முடியும்?[/codebox]

உழனநடிழஒஸஜஉழனநடிழஒஸஜஙரழவ

ந யெஅநஸ்ரீ'யெசயவாயச' pழளவஸ்ரீ'474465' னயவநஸ்ரீ'துயn 1 2009இ 11:09 யுஆ'ஸயாழ்க் களத்திலையே ஒருவரால் தனி மடலில் யாழ்க் கள உறவுகளை 'தெருநாய்.. கூட்டம். பரதேசிகள் ' என்று விழித்து எழுத முடிகிறது.

இது எத்தகைய மனப் பிறழ்வான மனதில் இருந்து பிறந்து இருக்க முடியும்?ஜஃஙரழவநஸஜஃஉழனநடிழஒஸ

இது மட்டுமல்ல குறுகிய மனப்பான்மையோடு தாங்கள் ஒழிந்திருந்துகொண்டு இவர்கள் பிறரின் பெயரையும் மாற்றி எழுதிச் சேற்றைவார முயற்சிப்பது உட்பட அனைத்துக் காழ்ப்புணர்வுகளையும் காட்டுகிறார்கள். அத்தகைய பண்பாடற்ற தன்மைகள் மாறி அவர்களும் பண்பாடுள்ளவர்களாக மாற இந்தப் புத்தாண்டில் வாழ்த்துவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Edited by karu

  • 4 years later...

தலைப்பை பார்த்து நான் தத்துவம் கூற போவதாக நினைத்தால் நிச்சயமாக இல்லை. இங்கு களத்தில் கருத்தாடும் சிலர், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் சக மனிதர்களை விழிக்க கையாளும் சொற்கள் பல முறை மனத்தை உறுத்தி இருக்கிறன. இது தொடர்பாக பழைய களத்திலும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன்.

தங்களை (தனி நபர்/ சமூகம்/ இனம்/ தோற்றம்) பற்றிய தற்பெருமை???? மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம்??? இவற்றில் எது காரணமாக இருக்க வேண்டும் என சரியாக சொல்ல தெரியவில்லை. மற்றைய சக மனிதர்களை தாழ்வு நவிற்சியான சொற்களை பாவித்து ஒரு பக்கம் விழித்து கொண்டு இன்னொரு பக்கம் நான் மற்றவர்களின் மதத்தை மதிக்கிறேன், உணர்வை மதிக்கிறேன், இன்னும் என்னேன்ன உரிமை மதிப்பை சொல்ல முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லி மதிப்பாளர்களாக கட்டி கருத்துகளை எழுதுவதோ / சொல்லுவதோ என்ன பயனை தரும்?

மற்றையவர்களை (இனம்/ மதம்/ எதுவாக இருக்கட்டும்) சக மனிதனாக மதித்து சரியான, மரியாதையான சொற்பதங்களை கொண்டு விழிக்க தெரியாதவர்கள் ஐயோ சிங்கள்வர்கள் எங்களை தாழ்வாக/ பக்க சார்பாக நடத்துகிறான் என்று சொன்னால் என்ன சொல்வது???

உதாரணமாக யாழ் களத்தில் ஒரு சிலர் / வெளியே சமூகத்தில் பலர் பாவிக்கும் சொற்பிரயோகங்கள்

ஆபிரிக்க வம்சாவளியினர் - காப்பிலி/ காப்புலி -

கறுப்பர்கள் என்று சொல்வதே அவர்களை அவமதிக்கும் சொல் என கருதி- ஆபிரிக்க அமெரிக்கார்/ ஆபிரிக்க கனேடிய....... பொன்ற சொற்கள் பவனைக்கு வந்திருக்கும் நேரம் எம்மில் சிலர் அவர்களை தரக்குறைவாக காப்பிலி என்பதும் ஒரு கிண்டல் நிறைந்த பதம் கொண்டு அழைப்பது சரியா????

அடுத்தது

சீனர்களை - சப்பை என்பது.....

இப்படி மரியாதை குறைவாக ஏனையவர்களை அழைத்து கொண்டு உரிமை காப்பாளர்களாக வேசம் போட்டு நீட்டி முழக்கி என்ன பயன்????/

வணக்கம்  பாருங்கோ 

நான் நினைக்கின்றேன் புலம்பெயர் ஈழச்சொந்தங்கள் பலகாலங்கள் தமிழீழத்தை விட்டு 
வெளியே வசித்துவருபவர்கள்.யாழ்ப்பாணத்தில் இன்றும் சாதிய அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன.கோயில்களுக்கிடையே போட்டி,குழுக்களுக்கிடையே போட்டி ,சீதன முறைமை பேசப்படுதல் என்பன தொடர்கின்றன.முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்பேசும்  மக்கள் அனைவரும் சிறந்த நிர்வாக கட்டமைப்புக்களால் வழிநடத்தப்பட்டு வந்தனர் அங்கு வாழ்ந்த மக்களும் அதனை ஏற்று வாழப் பழகினர் .இதனால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே வாழ்ந்தவர்கள் கூட அதனைக்கடைப்பிடிக்க கற்றுக்கொண்டனர்.ஆனால் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பலர் விகிதாசாரப்படி 70 வீதமானோர் ஆரம்பத்தில் விடுதலைப்போரை விரும்பாதவர்களாகவே காணப்பட்டனர். இவர்களை புலம்பெயர் கட்டமைப்புக்கள்,தமிழ் அமைப்புக்கள் எவ்வாறு கையாண்டன என்ற கேள்வியே இங்கு மேலோங்கி நிற்கின்றது.இன்றும்கூட குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வாழும் இளையோர்கள் பலர்  தவறாகவே கையாளப்பட்டு வருகிறார்கள்.அவர்கள் தங்கள் காதுகளில் கடுக்கன்  அணிவதும்,தலைமுடிக்கு வண்ணப்பூச்சுக்கள் பூசுவதும், புகை பிடிப்பதும்  உருவெடுத்து யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து அங்குள்ள இளையோரும் இதனைப் பின்பற்றி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இதனை  நோக்குவோமாயின் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்  உட்பட ஏன்  பாட்டாளி வர்க்க சிங்களச்சமூக மக்களும் கூட விடுதலைப்புலிகளின்   தேவையை உணரத்தொடங்கியுள்ளனர்.
          "கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்"
 
நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.