Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் பளை பிரதேசத்தை கைப்பற்றியுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் இருந்து முன்னேறிவரும் 53வது மற்றும் 55வது படையினர் பளை நகரை அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளதாக ஒரு இராணுவ சார்பு இணையம் தெரிவித்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை உண்மை அறிந்தவர்கள் அறியதரவும். அதில் மேலும் உள்ளதாவது நேற்றையதினம் முகமாலை, கிளாலி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முன்னரங்குகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய படையினர் முகமாலையில் இருந்து 5.5கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை நகரை இன்று பிற்பகல் 3:30 மணியளவில் அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

பரந்தனை விடேக்குள்ளையே இது நடக்கும் என்பது தெரிஞ்சதுதானே..!

பரந்தன் கைப்பற்றப்படுவதற்கு முன்பாக அல்லது கைப்பற்றப்படுவதற்கு ஒரு சில போராளிகளைத் தவிர விடுதலைப் புலிகளின் விடுதலைப் புலிகளின் படையணிகள் முழுமையாக கிளாலி - முகமாலை - நாகர்கோவில் முன்னரங்கிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் சிறிலங்கா படையினர் நேற்றே ஆனையிறவைக் கைப்பற்றிவிட்டனர்.

கிளாலி - முகமாலை - நாகர்கோவில் முன்னரங்கிலிருந்த புலிகளின் ஆளணி வளமும் சூட்டு வலுவும் தற்போது வன்னிக்குள் முழுமையாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி என்னென்னவோ எல்லாம் நடக்கலாம். (குறுக்கண்ணை: எல்லாரையும் பொப்கோன் வாங்கி வைச்சிருக்கச் சொல்லவும்)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்தாயிரம் இராணுவம் பொசுக்கொன்று புகையுமா மின்னல் அண்ணா?

ஒரு பத்தாயிரம் இராணுவம் பொசுக்கொன்று புகையுமா மின்னல் அண்ணா?

:rolleyes:

கடசியில மின்னலுக்கும் தட்டிப்போட்டுது. பேசாமல் குளாயளுக்கு பெயின்ர் அடிக்க விட்டிருக்கலாம்.

ஐயோ மின்னலு.....

பத்து ரிவிக்கள், பத்து சக பத்து வானொலிகள், பத்து தர பத்து இனையத்தளங்களில் வாங்கு வாங்கென்று எங்கடை ஆய்வாலர்கள்(இங்குளூடிங் நம்ம குறுக்ஸ் :rolleyes: ) வாங்கித்தான் .........

சனத்தைக் குழப்பாதையுங்கோ!! நடக்கிறதை பாப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையிலுள்ள புலிகளின் முன்னரங்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாகவும், சிறு பகுதி ஒன்றில் இன்னும் சண்டை நடந்து வருவதாகவும் ராணுவ இணையத்தளம் கூறுகிறது.பளை நோகி நகர்வதாகக் கூறப்படவில்லை, ஆனால் முரசுமோட்டையைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்பட்டிருக்கு.

முகமாலையும், ஆனையிறவும் சிங்கள ராணுவத்தின் வசமாகும் என்பது பரந்தன் வீழ்ச்சியோடு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதே இடங்களைக் கைப்பற்றுவதற்கும், தக்கவைக்கவும் வீரமரணமடைந்த ஆயிரக்கணக்கான எமது சகோதரங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாக ஆனையிறவைக் கைப்பற்ற நடந்த இரு வேறு சமர்களிலும் கொல்லப்பட்ட் மாவீரர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியிருக்கும். அவ்வாறே கிளிநொச்சி மீட்புச் சமரில் கொல்லப்பட்ட 400 போராளிகள், முகமாலையைத் தக்கவைக்க உயிர் நீத்த நூற்றுக்கணக்கான போராளிகள் என்று நீண்டு செல்லும் பட்டியல்...ஆனால் இப்போது ராணுவம் எந்த இழப்புமில்லாமல் இவற்றை எல்லாம் கைப்பற்றப் போகிறது என்னும்போது இதயத்தில் வலி தாங்க முடியவில்லை.

நடப்பவை எப்படியிருந்தாலும் மாவீரர்களின் தியாகங்கள் வீணாகிவிடக் கூடாது. எமக்குத் தேவை அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

. இதே இடங்களைக் கைப்பற்றுவதற்கும், தக்கவைக்கவும் வீரமரணமடைந்த ஆயிரக்கணக்கான எமது சகோதரங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாக ஆனையிறவைக் கைப்பற்ற நடந்த இரு வேறு சமர்களிலும் கொல்லப்பட்ட் மாவீரர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியிருக்கும். அவ்வாறே கிளிநொச்சி மீட்புச் சமரில் கொல்லப்பட்ட 400 போராளிகள், முகமாலையைத் தக்கவைக்க உயிர் நீத்த நூற்றுக்கணக்கான போராளிகள் என்று நீண்டு செல்லும் பட்டியல்...ஆனால் இப்போது ராணுவம் எந்த இழப்புமில்லாமல் இவற்றை எல்லாம் கைப்பற்றப் போகிறது என்னும்போது இதயத்தில் வலி தாங்க முடியவில்லை.

நடப்பவை எப்படியிருந்தாலும் மாவீரர்களின் தியாகங்கள் வீணாகிவிடக் கூடாது. எமக்குத் தேவை அவ்வளவுதான்.

anyiravu.jpg

Edited by kuddipaiyan26

எமக்குத்தேவை நாடு நகரமல்ல

55 மற்றும் 53 படைப்பிரிவுகளின் படையினர் பளை பிரதேசத்தை கைப்பற்றியுள்ளனர் - கெகெலிய ரம்புக்வல்ல

- அத தெரண

  • கருத்துக்கள உறவுகள்

****ஆக்கிரமித்துள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

பளை இராணுவத்தினரால் மீட்பு

வீரகேசரி இணையம் 1/8/2009 10:13:35 AM - பளை பகுதியை இராணுவத்தினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.யாழ் முன்னரங்க பகுதியில் இயங்கும் இராணுவத்தின் 53ஆவது படையணியினர் பளை பகுதியை கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு நாட்டு உதவியோட வந்து பளை என்ன ஆனையிறவ பிடிச்சா கூட ஆச்சரிய படுறதுக்கு ஒண்டும் இல்லை

இதேல்லாம் ஒரு வெற்றியா . கேவளம்

ஏழு நாட்டு உதவியோட வந்து பளை என்ன ஆனையிறவ பிடிச்சா கூட ஆச்சரிய படுறதுக்கு ஒண்டும் இல்லை

இதேல்லாம் ஒரு வெற்றியா . கேவளம்

ஏன் முதலே வேற நாட்டில உதவி எடுக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டிருந்ததா? இது என்ன தமிழ்படமா கடைசியில அடியாக்கள் எல்லாம் வட்டமா சுற்றி நிற்க ஒண்டிக்கு ஒண்டி அடிபட?

சரி அவங்களுக்கு கேவலம்? எங்களுக்கு?

*** நான் அதை சொல்ல வில்ல சிங்களம் ஏதோ தன்ர சொந்த பலத்தில நின்டு இந்த இடங்களை பிடிச்ச மாரி எல்லோ அறிக்கை விடினம்..

ஒரு தனுக்கு ஏழு பேர கூட்டி கொன்டு போய் அடிச்சு போட்டு ஊர் ஊர்ர சொல்லி திரியிறவன் வீரன் இல்லை..வீரனுக்கு அழகு இன்னோரு வீரனோட தனிய நின்டு மோதுறது... அவன் தான்யா உண்மையான வீரன் And ஆம்பிளை...அதை விட்டுட்டு .. வேர நாட்டு காரன்ட காலில விழுந்து கும்பிட்டு ஆயுதங்களை வேண்டி போட்டு இங்கலா கொன்டு வந்து அப்பாவியள் மேல போட்டுட்டு வீரம் பேசுரவன் எல்லாம் ஆம்பிளையா. சிசி நினைச்சு பாக்க ரொம்ப கேவளம்மா இருக்கு

சிங்களம் தன்ர சொந்த பலத்தோட வரனும் தமிழன் எப்பவோ சாமாதி கட்டி இருப்பான் அவைக்கு

10 நாளுக்கு ஒருக்க பாகிஸ்தானில இருந்து ஒரு ஆயுத கப்பல் வருமாம்.. கிழமைக்கு ஒருக்க இந்தியாவில இருந்து ஆயுத கப்பல் வருமாம்... கிபிர் தாவி கொன்டு போய் போடுர குண்டு ஈச்ரஎல் இருந்து வரும்மாம்..

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இதில சாணக்கியனைத் திட்டினால் போல ஆமி பளைக்கு வரல்ல என்று அர்த்தமாகிடுமா..??!

இத்தனை போராளிகளையும் போர் கலங்களையும் பாவித்து.. இழப்புகளை சந்திச்சு.. போராடினவங்க.. சண்டை எதுவுமின்றி.. விட்டுட்டு வாறாங்க என்றால்.. அதற்கான அர்த்தம் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..!

பரந்தன் சரி.. கிளிநொச்சி சரி.. ஆனையிறவு சரி.. சண்டை இன்றிப் போயின. திடீர் என்று களத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம்.. எல்லோரையும் குழப்பத்தில் தான் ஆழ்த்தி இருக்கிறது.

இது உண்மையில் இராணுவத்தின் வெற்றியல்ல. விட்டுக்கொடுத்ததை... அவை.. பிடிக்கினம். இந்த விட்டுக் கொடுப்புக்கான காரணம் தான் புரியல்ல.

மக்களை பெரிய எதிர்பார்ப்புக்க வச்சிருந்ததும் அவையே. இதோ வெற்றிச்செய்திகள் வந்து குவியப் போகின்றன என்று சொன்னவையே இன்று.. மக்கள் எதிர்பார்க்காத வகையில் படை விலக்கலை செய்கிறார்கள்.

ஆனால் அமெரிக்கா ஒரு அறிக்கை விட்டிருக்குது கிளிநொச்சி வீழ்ச்சி 25 வருட யுத்தத்தில் புதிய திருப்புமுனை என்று. எனக்கு ஒன்று விளங்கேல்ல 1998 இதையே சிங்கள இராணுவம் இழக்கேக்க.. அப்ப வராத திருப்புமுனை.. இப்ப எப்படி..??! இதையே 1988 இல் இந்திய இராணுவம் பிடிக்கேக்க வராத திருப்புமுனை இப்ப எப்படி..??!

ஆக எதிரிகள்.. சில விசயங்களை ஊதிப் பெருப்பிச்சு.. மக்களின் போராட்டம் மீதான நம்பிக்கையை சிறுக சிறுக தகர்க்க முனைகிறார்கள். அதற்கு நாம் இலக்காகக் கூடாது. பிடிச்சவன் விடுறான். அவனுக்குத்தான் தெரியும்.. அதன் வலியும்.. தேவையும். நாம் ஏன் குத்தி முறியனும். நமக்குத்தானே.. இன்னும் கடமைகள் இருக்கின்றனவே செய்ய..! :icon_idea:

*** நான் அதை சொல்ல வில்ல சிங்களம் ஏதோ தன்ர சொந்த பலத்தில நின்டு இந்த இடங்களை பிடிச்ச மாரி எல்லோ அறிக்கை விடினம்..

ஒரு தனுக்கு ஏழு பேர கூட்டி கொன்டு போய் அடிச்சு போட்டு ஊர் ஊர்ர சொல்லி திரியிறவன் வீரன் இல்லை..வீரனுக்கு அழகு இன்னோரு வீரனோட தனிய நின்டு மோதுறது... அவன் தான்யா உண்மையான வீரன் And ஆம்பிளை...அதை விட்டுட்டு .. வேர நாட்டு காரன்ட காலில விழுந்து கும்பிட்டு ஆயுதங்களை வேண்டி போட்டு இங்கலா கொன்டு வந்து அப்பாவியள் மேல போட்டுட்டு வீரம் பேசுரவன் எல்லாம் ஆம்பிளையா. சிசி நினைச்சு பாக்க ரொம்ப கேவளம்மா இருக்கு

சிங்களம் தன்ர சொந்த பலத்தோட வரனும் தமிழன் எப்பவோ சாமாதி கட்டி இருப்பான் அவைக்கு

10 நாளுக்கு ஒருக்க பாகிஸ்தானில இருந்து ஒரு ஆயுத கப்பல் வருமாம்.. கிழமைக்கு ஒருக்க இந்தியாவில இருந்து ஆயுத கப்பல் வருமாம்... கிபிர் தாவி கொன்டு போய் போடுர குண்டு ஈச்ரஎல் இருந்து வரும்மாம்..

மற்றவனிட்டை உதவி பெறுகிற தந்திரமும் ஒரு பலம் தான்.

அதேபோல் எதிரிகளை சம்பாதிக்கிறது ஒரு பலவீனம்.

உங்கடை பதில்கள் 1 மாத்திரம் தெளிவு படுத்துகிறது. தேசியவிடுதலைப் போராட்டம் ஒரு சினிமாவாக விளங்கப்பட்டிருக்கு. உங்கள் குடும்பத்தில் 2 போராடுவதாக கூட சொல்லியிருக்கிறீர்கள் களத்தில். அப்படி ஒருவர் இப்படி எழுதுவது கவலைக்குரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.