Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி

Featured Replies

இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி

இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணாகும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இராணுவத்தினரக்கு உதவிசெய்ததாகச் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி, கிழக்கிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இராணுவத்தினருக்கு மறைமுகமான உதவிகளைச் செய்துவந்ததால் கிழக்கை மீட்க முன்னரே அப்பகுதி மக்களின் நம்பிக்கையை தாம் வென்றுவிட்டதாகக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் 20 கிலோமீற்றர் தூரத்தை மாத்திரமே இராணுவத்தினர் போராடி மீட்டதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, எஞ்சிய 89 கிலோமீற்றர் தூரத்தை இராணுவத்தினர் இலகுவில் மீட்டதாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னர் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பகல் கனவு எனக் கூறப்பட்டபோதும், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் இராணுவத்தினர் போராடி வருவதாகக் கூறினார்.

http://www.swissmurasam.net/

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி

இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணாகும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.swissmurasam.net/

கழுதை கெட்டாக் குட்டிச் சுவரெண்டு சொல்லுறது, இந்தத் துரோகிகளுக்கு சரியப் பொருந்துது. அப்ப அடுத்த அரசுத் தலைவர் ஐயா சரத் பொன்சேகாதான் போல கிடக்குது. ஏனெண்டா படிப்படியா அறிக்கையில முன்னேறி, ஒட்மொத்த வெற்றி.... , அதாவது ஒட்மொத்த தமிழின அழிப்பிற்குத் தானே ஏகபோக உரிமையாளரென்று சொல்லுறது ரனிலோட சேர்ந்து பக்சயாக்களுக்கும் வைக்கிற ஆப்பு. இதையே நாளைக்கு ஹேஹ்கிலயும் வந்து சொல்லுவாரோ?

இதை கேட்டா முரளி ரொம்ப கவலைப்படுவான்... என்ன செய்ய ராசிக்கின் நிலமை வராமல் பாத்து கொள்ளு மக்கா...!!

இனி படையினருக்கு கருணா கருவேப்பிலை எண்டதை ஐயன் இதைவிட தெளிவா சொல்ல முடியாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்ப்பார்தேன், என்னும் இருக்கு. கைது செய்து சிறைவாசம் கொடுக்கவே தயங்காது சிங்களம். அப்போது புரியும் தமிழனை விலைக்கு விட்டுவிட்டோமே என்று. அதுவரை உன் உயிர் உன்னுடனாகவே இருக்கும் என்பது அந்த காலனுக்கே தெரியாது.

கருணா என்ற முரளி க்கு இது தன் நடக்கும் என்று நான் அறிந்த விடயம்.

பயன் படுதிய பின் வீசி எறியப்பட்ட விளக்கு மறானான் இந்த முரளி

இது உவருக்கு மட்டு மில்ல கண்டியல்ளோ

இப்ப செர்து நின்டு குத்தாடுறவைக்கும் வரும்

கருணா என்ற முரளி க்கு இது தன் நடக்கும் என்று நான் அறிந்த விடயம்.

பயன் படுதிய பின் வீசி எறியப்பட்ட விளக்கு மறானான் இந்த முரளி

இது உவருக்கு மட்டு மில்ல கண்டியல்ளோ

இப்ப செர்து நின்டு குத்தாடுறவைக்கும் வரும்

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கருணா 6000 பேரோட பெரும் படையா நிற்கிறார் என்று முன்னம் விட்ட அறிக்கைகள் பொய்யா சரத். ஆக 200 பேரோடதான் நின்றவரே..! உண்மை ஒரு நாள் வெளிவரத்தான் செய்யும். அது இவ்வளவு விரைவா வருமென்று நினைக்கல்ல..! :icon_idea:

ஒட்டுக்குழுகளுக்கு சரத் நல்ல உதாரணம். அவை எப்படித்தான் மாங்கு மாங்கென்று மாரடிச்சாலும்.. புலி இருக்கும் வரைதான் செல்வாக்கும்.. செல்லப்பிள்ளைத் தனமும் இருக்கும். புலி வீக்கானா.. அவைபாடும்.. வயிறு காயும் என்பதைத்தான்.. சரத் நாசூக்காச் சொல்லி இருக்கிறார். மிதவாதி சங்கரி கும்மானுக்கு கொண்டாட்டம் தான்..! இலவு காத்த கிளியாக இருந்து இப்ப வடக்கின் முதலமைச்சராகப் போகிறார்.. சங்கரி கும்மான்..! :lol::D

Edited by nedukkalapoovan

:icon_idea:

வின்னர் படம் வெற்றிக்கு வடிவேலு காரணம் இல்லை எண்டு சுந்தர்.C சொன்னது போல இருக்குதா வேலு....??

எதிர்ப்பார்தேன், என்னும் இருக்கு. கைது செய்து சிறைவாசம் கொடுக்கவே தயங்காது சிங்களம். அப்போது புரியும் தமிழனை விலைக்கு விட்டுவிட்டோமே என்று. அதுவரை உன் உயிர் உன்னுடனாகவே இருக்கும் என்பது அந்த காலனுக்கே தெரியாது.

:D

அப்ப கருணா 6000 பேரோட பெரும் படையா நிற்கிறார் என்று முன்னம் விட்ட அறிக்கைகள் பொய்யா சரத். ஆக 200 பேரோடதான் நின்றவரே..! உண்மை ஒரு நாள் வெளிவரத்தான் செய்யும். அது இவ்வளவு விரைவா வருமென்று நினைக்கல்ல..! :D

ஒட்டுக்குழுகளுக்கு சரத் நல்ல உதாரணம். அவை எப்படித்தான் மாங்கு மாங்கென்று மாரடிச்சாலும்.. புலி இருக்கும் வரைதான் செல்வாக்கும்.. செல்லப்பிள்ளைத் தனமும் இருக்கும். புலி வீக்கானா.. அவைபாடும்.. வயிறு காயும் என்பதைத்தான்.. சரத் நாசூக்காச் சொல்லி இருக்கிறார். மிதவாதி சங்கரி கும்மானுக்கு கொண்டாட்டம் தான்..! இலவு காத்த கிளியாக இருந்து இப்ப வடக்கின் முதலமைச்சராகப் போகிறார்.. சங்கரி கும்மான்..! :lol::D

:(:( கருணா :icon_idea:

வின்னர் படம் வெற்றிக்கு வடிவேலு காரணம் இல்லை எண்டு சுந்தர்.C சொன்னது போல இருக்குதா வேலு....??

:lol::D

என்னை ரொம்ப நல்லவன் என்று சொல்லிப்புட்டாங்களே என்று யாரோ சொல்றது காதிலை விழுகிறது

கருனாவுக்கே இந்த லட்டுண்ணா.... அப்ப நம்ப அம்பி பிள்ளையார ககி!?

கொஞ்ச நாளா ஆளைக்கானவில்லை... பேச்சு மூச்சுமில்லை... இன்னும் உயிரோட வைச்சிருக்காங்களோ என்னமோ?...

  • தொடங்கியவர்

கருனாவுக்கே இந்த லட்டுண்ணா.... அப்ப நம்ப அம்பி பிள்ளையார ககி!?

கொஞ்ச நாளா ஆளைக்கானவில்லை... பேச்சு மூச்சுமில்லை... இன்னும் உயிரோட வைச்சிருக்காங்களோ என்னமோ?...

பிரித்தாளும் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத இவர்களைப் போன்றவர்கள் எப்படித் தமிழர் தலைமைத்தவத்தைப் பெற முடியும். அல்வா, லட்டு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன வகையென்று புரியவில்லை. நம்ம ஊரில் வாலாட்டும் ஜென்மங்களுக்கு நல்ல உணவைக் கொடுப்பதில்லை. ஆனாலும் அதுகள் கிடைப்பதற்கு ஏற்ப நன்றியுடனிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரு மாகணங்களில் கட்டியாண்டு கொண்டிருந்த நாம் ஒரு மாவட்டத்திற்குள் சுருங்கிப்போகக் காரணம் என்னவென்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி யோசிக்கும் போது எனக்குள் சில கேள்விகள் எழுந்தன, அவை பலருக்குப் பிடிக்காமல்ப் போகலாம், சிலருக்காவது பிடிக்கலாம்......

1) இந்தியாவை அளவுக்கதிகமாகப் பகைத்துக் கொண்டது.....

இதேகளத்தில் நானும் பலருடன் பலமுறை வாதாடியிருக்கிறேன். இந்தியாவை எதிர்க்காது விட்டிருந்தாலும் இதேதான் நடந்திருக்கும் என்று. ஆனால் இப்போது அது தவறு என்று எண்ணத் தோன்றுகிறது. எம்மை விட்டு விலகியிருந்த இந்தியாவை சிங்களவனை நோக்கித் தள்ளி விட்டது நாம்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது எப்படியென்று நான் சொல்ல வரவில்லை.

2) எதிரியின் பலம், எமது பலம் தெரியாமல் அவசரப்பட்டது.....

புலிகள் ரணிலுடன் பேச்சுவார்த்தையில் இருக்கும்போது நானும் சேர்ந்து அவர்களை விமர்சித்து இருக்கிறேன். பேசாமல் சண்டையைத் தொடங்கி அடிச்சுப் பிடிச்சுப் போட்டு பிரகடணப்படுத்திறத விட்டுப்போட்டு சமாதாணம் பேசிக்கொண்டிருக்கிறாங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.ஏனென்றால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) இந்தியாவை அளவுக்கதிகமாகப் பகைத்துக் கொண்டது.....

2) எதிரியின் பலம், எமது பலம் தெரியாமல் அவசரப்பட்டது.....

3) சர்வதேசத்தின் முன்னால் நாம் இரக்கமற்றவர்கள், பயங்கரவாதிகள் என்ற பெயரை இல்லாமல்ப் போக எதுவும் செய்யாதது....

4)ஆரம்பத்தில் இடங்கள் பறிபோகத் தொடங்கிய பின்னும், நாம் விட்டு விட்டு விலகி...ஜயசிக்குறுவைப் போல ரெண்டு நாளில் பிடிக்கலாம் என்று எமக்கு நாமே கதை சொல்லிக்கொண்டது.........

5) எமது தாலைவர்கள் சிலர் அவ்வப்போது விடுத்த அறிக்கைகள், சவால்கள்...

"ராணுவம் மடுவுக்கு வந்தால், நாம் மதவாச்சியில் போய் நிப்போம்", "கிளிநொச்சியைப் பிடிப்பதென்பது அவர்களின் கனவு", "கிளிநொச்சியினுள் நுழையும் பகைவன் உயிருடன் திரும்ப மாட்டான்" என்று அவ்வப்போது கூறிக்கொண்டது.

6)கருணா என்கிற முரளிதரன் பிரிந்தது.....

இனிக்கடவுள்தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும் ! இதை விட எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை !!

ஓர் அடைவை அவர் அதை அனுபவிக்கும் கால அளவை வைத்தே அவ் அடைவு வெற்றியா தோல்வியா என்று கூறமுடியும். உங்களுக்கு நீங்களே முடிவுகளை எடுத்துக்கொண்டு தலைவரையோ அல்லது விடுதலை புலிகள் செய்தவை செய்கின்றவை செய்யப்போபவை பற்றி பிழை சரி என கதைக்க உங்களுக்கு என்ன அருகதை உள்ளது.உங்களை போல் குறுகிய கால சிந்தனைகளோடு அவர்களால் நடக்கமுடியாது.உங்களுக்கு தமிழனுக்கு உரிமை வேண்டும் தமிழன் தலை நிமிர வேண்டும் எப்பவும் வெற்றி செய்தியே வேண்டும் என்றால் நீங்கள் ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கி உங்கள் எண்ணப்படி போராடுங்கள் யாரும் ஏதுவும் சொல்லமாட்டர்கள். முடிந்தால் மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு நோக்கத்தோடு இருங்கள் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் கலவரமடைய செய்யாதீர்கள்.

  • தொடங்கியவர்

ஓர் அடைவை அவர் அதை அனுபவிக்கும் கால அளவை வைத்தே அவ் அடைவு வெற்றியா தோல்வியா என்று கூறமுடியும். உங்களுக்கு நீங்களே முடிவுகளை எடுத்துக்கொண்டு தலைவரையோ அல்லது விடுதலை புலிகள் செய்தவை செய்கின்றவை செய்யப்போபவை பற்றி பிழை சரி என கதைக்க உங்களுக்கு என்ன அருகதை உள்ளது.உங்களை போல் குறுகிய கால சிந்தனைகளோடு அவர்களால் நடக்கமுடியாது.உங்களுக்கு தமிழனுக்கு உரிமை வேண்டும் தமிழன் தலை நிமிர வேண்டும் எப்பவும் வெற்றி செய்தியே வேண்டும் என்றால் நீங்கள் ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கி உங்கள் எண்ணப்படி போராடுங்கள் யாரும் ஏதுவும் சொல்லமாட்டர்கள். முடிந்தால் மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு நோக்கத்தோடு இருங்கள் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் கலவரமடைய செய்யாதீர்கள்.

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுப்பண்ணா.

....

Edited by சாணக்கியன்

இரகுநாதனின் சிந்தனை மாற்றம் யதார்தமானது. மக்களில் உண்மையான அக்கறையுடன் எந்தவித கவர்சிக்குள்ளும் சிக்காமல் சிந்திக்கும் போது தோன்றுவது.

பல காலங்களுக்கு முன்னரே இவற்றில் சிலவற்றை சிலர் இங்கே வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்டனர். அதாவது சமாதானகாலத்தில் நானும் யுத்தத்தை ஆதரித்த போது "சமாதானம்" என்பவர் "இது இறுதிச்சந்தர்ப்பம தவறவிடக்கூடாது", "இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும்;", "ஒத்தகுரலி;ல் சமாதானம் வேண்டும் என்று குக்குரல் இடுங்கோ" என்றெல்லாம் கெஞ்சினார். அவரை பரிகசித்த எல்லோரும் அவர் ஒரு கூலி என்று விமர்சித்து துரத்தினர்.

பின்னர் குறுக்காலபோவானும் (இவையெல்லாம் இடம்பெற முன்னரே) புலிகளின் பலம் குறித்த மிகைப்படுத்தல்களை கண்டித்து குட்டு வாங்கினார்.

சிங்களப்பகுதிகளில் ராணுவஇலக்குகள் மீதான தாக்குதல்கள் பொதுமக்கள் இலக்குளாக மாறியபோது நான் அதை கண்டித்தேன். அதற்கு என்னுடைய சுநலமே காரணம் என்று பரிகசித்தனர். அதிகம் ஏன் ரகுநாதனே கொல்லப்பட்ட மக்கள் தொகை காணது என்று வருத்தப்பட்டுக் கொண்டார். போதாக்குறைக்கு அமரர் தமிழ் செல்வனும் "இனி தெற்கில் தான் யுத்தம் என்று கூறி" தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டார்.

யுத்தத்தில் இருந்து விலகி ஊரில் இருந்த சாதாரண சிங்கள மக்களையும் மற்றும் 3 கட்சிகளாக (சி.சு.க, ஐ.தே.க, ம.வி.மு) பிளவு பட்டிருந்த சிங்களவர்களையும் ஒன்று சேர்த்த பெருமை நம்மையே சாரும்.

இன்று ஒவ்வொரு பேருந்து தரிப்பிடத்திலும் மஞ்சள் நிற மேற்சட்டையில் "பொதுமக்கள் பாதுகாப்பு குழு" என்ற வாசகத்துடன் நிற்கும் சுமார் 50 வயது தொடங்கி 65 வயதான முதியவர்களான முன்னாள் அரச சேவகர்களை உசுபேத்திவிட்ட பெருமையும் எங்களையே சாரும்!

இங்கு சிங்கள களயாதார்த்தத்தை தெரிவிக்க முயன்ற போது, தலைக் கேறிய புலிப்போதை தணிந்துவிடும் என்று சிலர் குறைபட்டுக் கொண்டார்கள்!

வெளிநாடுகளில் மக்கள் அவலங்களை கூறி இரஞ்சுவதை விடுத்து இராணுவ வெற்றிகள், இராணுவச் சமநிலை, நிழல் நிர்வாகம் என்று அவர்களை முகஞ்சுளிக்க வைத்தார்கள். இன்று அவர்கள் அமைதியாக கைகட்டி வேடிக்கைபார்ப்பதற்கு காரணம் யார்?

இங்கு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் அவலங்களை மட்டும் ஆவணப்படுத்தும் ஒரு செயற்பாட்டை முன்மொழிந்து ஆரம்பித்தோம் வெறும் 5 பேர் பங்கு கொண்டார்கள். இப்போதுதான் அது போன்ற பல ஆவணப்படுத்தல்கள் மின்னஞ்சலில் உலாவுகின்றன.

சிலர் மீண்டும் 4 ஆம் கட்ட ஈழப்போர் அதன் பின் 3 ஆம் கட்ட சமாதானம் அல்லது ஒரு படி மேலாக நேராகவே தமிழீழம் என்று போரின் வீச்சுக்கு அப்பால் இருந்து கனவு காண்கின்றனர்.

நிச்சயம் எங்களுக்கு புதிய மாற்றம் அவசியம்! அது என்ன என்று எனக்கும் தெரியாது, ஆனால் அது குறித்து பல வழிகளில் நாம் சிந்திக்க வேண்டும்!

Edited by சாணக்கியன்

ஒரு இடத்தில் 100 பேர் வாழ்ந்தால் 10 பேரை தானே கொலை செய்கின்றார்கள் மிகுதி 90 பேரும் வாழ்கின்றார்கள் தானே பிறகு எதற்கு போராட்டம் என்று கேட்பது போல் உள்ளது.இதற்கு தகுந்த விளக்கம் ஈழத்தழிழருக்கு மன்னிக்க வேண்டும் இலங்கை தமிழருக்கு பதில் சொல்ல வேண்டும் புலிகள்.பின்வாங்கும் போது தலைவரிடமும் போராளிகளிடமும் குற்றத்தை சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யும் எம் தமிழ் எழுத தெரிந்த மற்றும் தமிழ் எழுத வாசிக்க தெரிந்ந உறவுகளுக்கு தலைவர் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதனின் கருத்தும் வரவேற்கப்படுகிறது. அதற்கு சாணக்கியன் அண்ணா அளித்த கொள்கை விளக்கமும் வரவேற்கப்படுகிறது.

எனக்கு ஒரு சந்தேகம்.. இராணுவ வெற்றிகளை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்ததால் தான் சர்வதேசம் மெளனமாக இருந்து தமிழினப் படுகொலையை கண்டும் காணாதது போலவும் இருப்பதாக சாணக்கியன் அண்ணா சொல்லி இருக்கிறார். நல்ல சாணக்கியமான பார்வைதான்.

ஆனால் இதே சர்வதேசம்.. ஏன்.. புலிகள் தோன்ற முன்னரே நிகழ்ந்த இன அழிப்புச் செயற்பாடுகளை இட்டும்.. மெளனம் காக்கிறது.. செல்வநாயகம் ஐயா.. சொன்னவற்றை.. 1977/8 இல தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதை.. நடைமுறைப்படுத்த முன் வருகுதில்ல..???!

புலிகளை விடுவம்.. அவைட பயங்கரவாதத்தை விடுவம்..???! மிதவாதியான சங்கரி கும்மான்.. சன நாய் அகவாதிகளான டக்கிளசு.. சித்தார்த்தன்.. சந்திரகாந்தன்.. முரளிதரன்.. போன்றவர்களோடு.. ஆறுமுகம் தொண்டமான்.. போன்றவையும்.. கேட்கிறதையும் சர்வதேசம் வேண்டிக் கொடுக்கலாமே.. அதற்கும் மெளனம் சாதிப்பதேன்..!

மத்தியில் கூட்டாச்சி.. மாநிலத்தில் சுயாட்சி என்றவை.. இப்ப மாகாண சபை தேர்தலில நிக்கிறதுக்கு.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடியுங்கோ என்றினம். நேற்றுத்தான் ஈ பி ஆர் எல் எவ் என்று ஒரு இயக்கம் தொடங்கி.. அதில இளைஞர்களை குருதி மழையில நனைச்சுப் போட்டு.. தான் மட்டும் இந்தியாவுக்கு தப்பியோடி.. அங்க இருந்து மீண்டு வந்து.. பிறகு.. ஈபிடிபி என்று ஒன்றை ஆரம்பிச்சு.. இன்று.. தமிழீழம் என்ற உச்சரிப்பையே கைவிட்ட கணக்கா.. புலிகளையும் பார்க்கினம்..??! :D

கிழக்கு மீட்கப்பட்டு... விடியல் கண்டு.. ஒரு வருடம் போயிட்டுது. மலையம்.. பூத்துக் குலுங்கி.. இத்தனை வருடம் போட்டுது.. வடக்கில வசந்தமும் வரப்போகுது.. ஆனால் இன்னும் தமிழர்கள்.. ஓட்டை வீட்டிலும்.. லயத்திலும்.. நாள் கூலிக்கு குளறுவதாயும்.. ஏன் வாழ வேண்டி இருக்குது..???! ஏன் உரிமைக்குப் பிச்சை எடுக்க வேண்டி இருக்குது..??!

சர்வதேசமா.. இதற்கு தீர்வு தரப்போகுது..??!

சர்வதேசம் பெற்றுக் கொடுத்த பலஸ்தீன தேசத்தில என்ன நடக்குது...???! ஏன் பலஸ்தீன மக்களுக்கு அந்த உரிமையை அனுபவிக்க முடியல்ல..??! வெறும் கமாஸ் தானா..??! கமாஸும் மக்களால் ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட அமைப்புத்தானே..??! அதை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பிடிக்க என்றதுக்காக பலஸ்தீன மக்களுக்கும் பிடிக்கக் கூடாது என்பது என்ன.. சர்வதேச விதிமுறையா..???!

சேர்பியாவை.. ரஷ்சியாவை பலவீனப்படுத்த.. அல்பேனிய மக்களை பயன்படுத்தி.. கொசவோவை உருவாக்கலாம்.. ஜோர்ஜியாவைப் பலவீனப்படுத்த.. அதைப் பிரிக்கலாம்.. அவுஸ்திரேலிய பிராந்தியத்தில்.. அமைதிக்கு.. என்று சொல்லி.. இந்தோனிசியாவை.. கிழக்கு திமோர் என்று பிரிக்கலாம்.. ஆனால்.. ஆச்சேயை பிரிக்கப்படாது. இது சர்வதேச விதிமுறை..??!

யார் சர்வதேசம்..??! அமெரிக்காவும், நேட்டேவும் அடங்கும் இராணுவ வலிமை மிக்க நாடுகளும்... கடன் வழங்கும் நாடுகளுமா..???! அப்போ அவர்கள் நிர்ணயித்ததுதான் மக்களின் சுதந்திரமா..??! அதற்குள் நின்றுதான் உலகம் வாழனுமா..???!

சர்வதேசத்தின்ர அங்கீகாரம் இன்றி.. நாடுகள் உருவானதே இல்லையா. இதே அமெரிக்காவும் நேட்டோவும் தோற்ற கள முனைகள் இல்லையா..???!

இழப்புக்கள் இன்றி எங்காவது.. போராட்டம் நடந்திருக்கா..??! ஏன் சிறீலங்கா இராணுவம் கூட.. இழந்ததைத்தானே பிடிக்கிறது. மாற்றான் அவனுக்கே அந்தளவு உறுதி இருக்கும் போது.. ஏன் தமிழர்களுக்கு தங்களின் சொந்த பூமியில் இழந்ததை மீட்கும் உறுதி வரல்ல. மாறாக சர்வதேசத்தின் பாதத்தில் சரணடைந்து விட்டால் எல்லாம் கிடைத்திடும் என்று கனவு காண்கிறார்கள்..??! :D :D

தமிழர்களுக்கு தங்களின் பலத்தில்.. ஒற்றுமையில்.. நம்பிக்கையில்லை. கொள்கைக்காக.. தன்னை அர்ப்பணிக்கத் துணிவில்லை. இதுதான்.. தமிழர்களுக்கு விடிவு வராததற்குக் காரணமே அன்றி.. சர்வதேசம் தமிழர்களை நாடி வராததற்குக் காரணமே அன்றி.. விடுதலைப்புலிகளோ.. கள முனைப் பின்னடைவுகளோ.. அல்ல. இதற்கு சங்கரி கும்மானும் காரணம்.. டக்கிளசும் காரணம்.. சித்தார்த்தனும் காரணம்.. முரளிதரனும் காரணம்.. கருணாநிதியும் காரணம்.. ஜெயலலிதாவும் காரணம்..!

சர்வதேசம் ஒன்றும்.. தங்கத்தட்டில் வைத்து.. உரிமை வழங்கப் போறதில்லை. எமது பலத்தைக் கொண்டுதான் அவர்களின் தீர்மானங்கள் அமைகின்றன. கிளிநொச்சி.. கையில் இருக்கும் போது புலிகளை வெல்ல முடியாது.. அவர்களுடன் பேச வேண்டும் என்ற அமெரிக்கா.. அது கைவிட்டுப் போனதும்.. புலிகளோடு பேச வேண்டிய அவசியமில்லை.. சிறீலங்கா அரசின் அணுகுமுறையை நாம் விமர்சிக்க மாட்டோம் என்று நழுவிக் கொள்கிறது..! இது எதனால்..???!

ஒன்றை.. தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பலமான இனம் என்பது.. அதன் ஒற்றுமை.. கட்டுக்கோப்பு.. இலட்சிய உறுதி.. சவால்களை சந்தித்து முறியடிக்கும் இயல்பில் தான் இருக்கிறது. நாம் சவால்களுக்கு வளைந்து கொடுக்கும் இனமாகின்.. எமது அடிமை வாழ்வை கடவுளாலும்.. விடுவிக்க முடியாது. அதற்காக புலிகளைக் குறைகூறிப் பயனில்லை.

நான் நன்கு அறிவேன்.. 1995 இல் இராணுவம் யாழ் நகரைக் கைப்பற்ற தாக்குதல் நடத்த பல மாதங்கள் முன்னரே.. யாழ் நகரில் போராளிகளால் பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலை எதிர்காலத்தில் உருவாகலாம்.. எனவே புலிகளின் கரங்களை வலுப்படுத்துங்கள் என்று. இன்று அந்தப் பதாதைகளில் காண்பிக்கப்பட்ட திறந்த வெளி சிறை யாழில் இருக்கிறது. தலைவர் அன்று இனங்காட்டியது.. இன்று நடைமுறையில்.. ஆனால் நாம் என்ன செய்தோம்.. அவற்றை வெறும் பதாதைகளாகப் பார்த்தோமே தவிர சொல்லப்பட்ட செய்தியை.. தலைவர் மக்களுக்கு காவி வந்த செய்தியை விளங்கிக் கொண்டு தலைவருக்கு உதவ முன்வரல்ல. அதற்கு தலைவர் தான் என்ன செய்ய முடியும்..??!

(வலுக்கட்டாயமாகக் கேட்டால்.. பிள்ளைகளை பிடிச்சுக் கொண்டு போறாங்கள் என்பீங்கள்.. பலம் காணாது என்று விட்டால்.. விட்டிட்டு ஓடுறாங்கள் என்பீங்கள். அப்ப.. தேவையான பலத்தை ஒருமித்து வழங்குங்களன். தலைவர் வென்று காட்டிராரோ இல்லையோ என்று பார்ப்பம்..!)

இன்றும் அதேதான் நிலை..! தலைவர் ஒன்றும் இலக்கியங்களில் வரும் அவதார புருசர் அல்ல. அவரும் சாதாரண ஒரு போராளியே. அவரின் இயலுமைக்குள் தான் அவராலும் செயற்பட முடியும். அவரின் இயலுமையை அதிகரிக்க வேண்டியது மக்கள் எம் பொறுப்பு. அது பல்வேறு மட்டங்களூடு செய்யப்பட வேண்டியவை. சர்வதேசம் நோக்கிய பிரச்சாரங்கள் மட்டும் எமக்கு விடிவை வேண்டித் தராது. அப்படி வேண்டித்தரும் என்றிருப்பின்.. 1983 இனக்கலவரத்தின் பின்.. அது தானாக நடந்திருக்க வேண்டும். நடந்ததா..???! இல்லையே. அன்றும் இதே சர்வதேசம் எமது அழிவை கைகட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இன்றும் அதையேதான் செய்கிறது. ஆனால் தமிழர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதில் மட்டும் ஏன் அக்கறை செய்கிறது..??!

1983 இனக் கலவரத்தின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன்.. ஜே ஆர் ஜெயவர்த்தனாவுக்கு சொன்ன ஆலோசனை.. தமிழர்களை அழித்தால் தான் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்பது. அன்று பயங்கரவாதிகளாக இருந்தது.. புலிகள் மட்டுமல்ல. ரெலோ.. புளோட்.. ஈபிஆர் எல் எவ்..ரெலா.. ஈரோஸ்.. என்று பல அமைப்புக்கள். அமெரிக்கா அன்றிலிருந்து இன்று வரை கொள்கை மாற்றம் செய்யவில்லை. ஆனால் நாம்.. அவர்களின் சன நாய் அகப் பிச்சைக்கு அடிமையாகி எமது மக்களின் உரிமைகளைக் காட்டிக் கொடுத்தும்.. விட்டுக் கொடுத்தும்.. அரசியல் செய்யப் புறப்பட்டது. யாரின் பலவீனம்..???!

சர்வதேசத்தை.. நம்பி எமது உரிமைகளை பெற முடியாது. சர்வதேசம் எம்மை நம்ப நாம் செயற்படும் அதேவேளை.. அவர்கள் எம்மை நாடக் கூடிய பலத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை மாற்றான் செய்து தரமாட்டான். இதையே பலஸ்தீன மக்களின் பலஸ்தீன தேசத்தின் உருவாக்கமும்.. கொசவோ தேசத்தின் உருவாக்கமும்.. ஈராக்கில்.. குர்திஸ் இன மக்களின் போராட்டமும்.. எமக்கு கற்றுத் தரும் பாடம்..!

ஒரு இடத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டின்.. அதற்கான படைப்பலத்தை.. கணக்கிட்டுப் பாருங்கள். அதை நாம் வழங்கினோமா.. தலைவருக்கு என்பதை சிந்தியுங்கள்.நாங்கள் கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும் ஓட தீவிரம் காட்டினமா.. தேசம் விடிய வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளித்தமா..??! ஏன் குற்றச்சாட்டுக்களை மட்டும் தலைவரின் தலையில் போடுகிறீர்கள்.

1998 இல் 1,20000 ஆக இருந்த சிங்களப் படை இன்று மக்கள் படையோடு சேர்த்து 2,70000 க்கும் மேல் இருக்கிறது. இவர்களை வெறும் 5000 போராளிகள் எவ்வாறு எதிர்கொள்வது..??! இந்த நிலையை உருவாக்கியது யார்.. தலைவரா நாமா..??! :D :D :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் மக்கள் அவலங்களை கூறி இரஞ்சுவதை விடுத்து இராணுவ வெற்றிகள், இராணுவச் சமநிலை, நிழல் நிர்வாகம் என்று அவர்களை முகஞ்சுளிக்க வைத்தார்கள். இன்று அவர்கள் அமைதியாக கைகட்டி வேடிக்கைபார்ப்பதற்கு காரணம் யார்?

சாணக்கியன் இரஞ்சுவது இழிவு அது இழவிலேயே முடியும். இப்போ என்ன பெரிதாக நடந்துவிட்டது. 90 ல் சைக்கிளில் வவுனியாவில் இருந்து சைக்கிளுக்குள் சைக்கிள் போல்ஸ்சுகளை கடத்தியபட பின் கரியரில் என் பிரயாண பயண செலவுகளை சரிசெய்யும் பொருள்களுடன் சென்றவன் சொல்லுகிறேன். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசு பஸ்சில் 90 க்கு முன்னம் வந்தால் ஆனையிறவில் ஒரு இறக்கம் சோதனை. அதன் பின்பு பரந்தன் சந்தி, அதன் பின்பு கிளிநொச்சி, முருகண்டி, கொக்காவில், ஓமந்தை, வவுனியா இப்படியே இராணவ முகாம்கள் சூழ்ந்த நிலையில் இருந்த இராணுவ முகாம்கள் 1992 ல் வெறீச்சொடி, தமிழர்கள் சுகமாக சைக்கிளிலேயே யாழ்ப்பாணம் செல்லும் ஒரு சூழ்நிலைய தமிழீழ விடுதலைப்புலிகல் தம் மாவீரர்களின் பெரும் காணிக்கையினூடு பெற்று ஈழத்தமிழர்களுக்கு வழங்கியிருந்தார்கள். வழிகளில் எந்தவிதமான புலிகளின் சென்றிகளும் அப்போது இருக்கவில்லை. ஒரு இரவு பனம்கள்ளு வினை நாம் அருந்தும் இடத்தில் நான் எம்மிடம் கொண்டு வந்த அதுதாண்டா கோல்ட் ஓல்ட் அரக்கின் போத்தலை துறந்தோம். போச்சுடா செய்தி எம்மவர்களுக்கு. பனங்கள்ளும் உடலுக்கு கூடாது, சிங்களவனின் சாரயமும் கூடாது என்று தெரிந்திருந்தும் சிங்களவனின் சாரயத்தினை தமிழீழத்திலா பாவிக்கிறாய் என்று எம்மிடையே இருந்த எம்மைப்போல குடிக்கு அடிமையாகிய தமிழ்மக்கள் கொதித்தெழுந்தார்கள். அப்போது எமக்கு 20 வயது ஆகவே இயக்க பாணியில் சந்தினை ஒரு மாதிரி அமத்திவிட்டாலும் தலவல் புறாபோல செய்தியினை கொன்டு சென்றது உரியவர்களிடம். அப்போது தான் நாம் கிளிநொச்சியில் நாம் முதல் முதலாக ஆயுத புலிகளை பார்த்தது. உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமைகொடுத்த காலம் அது.

இன்று 18 வருடங்கள் கடந்து மீண்டுமொரு 96 ல் வந்து நிற்கின்றோம் என்று ஒரு காலக்கணக்கில் எடுத்தாலும். புலிகளின் தலைவரிடமும், தளபதிகளிடமும் பல முன்னேற்றங்கள், தாக்குதல் அனுபவங்கள்,நவீன ஆயுதங்கள் வந்துள்ளன. தாக்குதல் வியூகங்களும் உள்ளன. போராளிகளின் உயிர் இழப்புகளும் தவிர்க்கப்பட்டு உள்வாங்கப்பட்டிருக்கிறார்க

எல்லாத்துக்கும் ஒரு சாட்டு வேண்டும் நெடுக்கு... காரணம் இல்லாமல் கட்டை கூட வேகாது... ஆகவே சர்வதேசம் புலிகள் மீது தடை போட்டதுக்கு ஒரு சட்டை எங்களவர் சொல்லி திருப்தி படுத்தி கொள்கின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் ஒரு சாட்டு வேண்டும் நெடுக்கு... காரணம் இல்லாமல் கட்டை கூட வேகாது... ஆகவே சர்வதேசம் புலிகள் மீது தடை போட்டதுக்கு ஒரு சட்டை எங்களவர் சொல்லி திருப்தி படுத்தி கொள்கின்றனர்...

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. புலிகளை குற்றம்சுமத்தி தங்களை அவர்கள் நியாயப்படுத்தி வாழப் பழகிவிட்டார்கள். எல்லாம் புலிதான் செய்தது.. எல்லாத்துக்கும் புலிதான் காரணம். என்பது அவர்களின் பிழைப்பு. ஆனால் தங்கட சொகுசு வாழ்க்கைக்கும் புலிதான் காரணம் என்றால்.. அதை ஏற்று கொள்ள பலர் தயங்குகிறார்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய எல்லோருக்கும் நன்றி. நான் இங்கு கூறியது நாங்கள்(தமிழர்கள் எல்லாரும்)தவறவிட்ட சந்தர்ப்பங்களைத்தான். புலிகளைக் குறை கூறுவது நோக்கமாக இருந்திருந்தால் நான் இவ்வளவுகாலமும் அவர்களை ஆதரித்தும் இனியும் ஆதரித்துக் கொண்டும் இருந்திருக்க மாட்டேன். எமது அனைவரினது தேவையும் விருப்பமும் புலிகள் வெல்ல வேண்டுமென்பதுதான்.

சர்வதேச நாடுகள் பலவற்றில் நாம் தடை செய்யப்படுவதற்குக் காரணமாக அவர்கள் எதை முன்வைக்கிறார்கள் என்று நாம் சிந்திப்பதில்லை. தெற்கில் பொதுமக்கள் இலக்குகள் என்று சொல்லப்பட்டவை மீது புலிகள் நடத்தியதாக சிங்களம் கூறிய தாக்குதல்களைத்தான் அவர்கள் முன்வைக்கிறார்கள். அந்நாடுகளில் தடைசெய்யப்பட்டதால் தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதும், மக்களுக்காகச் சேர்க்கப்பட்ட பணமும் கைய்யகப்படுத்தப்பட்டதும் நாம் அறியாதது அல்ல. அப்படியிருக்கும் போது சர்வ்தேசத்தின் அபிமானம் யாருக்கு வேணும் என்று சவால் விடுவது என்னத்தைக் கொண்டுவரப்போகிறது.

இன்று நிகழும் பின்வாங்கல்கள் பற்றி மக்களுக்கு அறியத்தரவேண்டிய கடப்பாடு புலிகளுக்கு இருக்கு.இவ்வளவு காலமும் சிறுகச் சிறுக சேமித்து வந்த ஆயுத தளபாடங்களும், படைக் கருவிகளும் பாதுகாப்பாக இருப்பதற்கு எமக்கென்று ஒரு நிரந்தரத் தளம் வேண்டும். அதுதான் எமது போராட்டத்தை மீளவும் முன்னுக்கு இழுத்துக் கொண்டுவரும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு புலிகளுக்கு இருக்கிறது.

புலிகளால்த்தான் எனக்கு சொகுசு வாழ்க்கை வந்தது என்று நீங்கள் நம்பினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியில்லை என்று உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய தேவையும் எனக்கில்லை.

புலிகள் பின்வாங்குவதற்கான காரணம் தெரியாமல் தான் நான் இதை எழுதுகிறேன். நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. எனது எதிர்பார்ப்புகள் எல்லாம் உடைந்து விழும்போது என்னால் இப்படித்தான் காரணங்களைக் காண முடிகிறது. அது சரியாக இருக்க வேண்டும் என்ற நியதியில்லை.உங்க பலருக்கு அது பிழையாகவே இருக்கலாம்.

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், நாங்கள் தமிழர்களும், புலிகளும் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தான். அதற்குத் தேவையானதைச் செய்துவருபவர்கள் தான். புலிகளுக்குப் பின்னடவு வரும்போது எதுவுமே சொல்லத் தெரியாது கணணிக்கு முன்னால் மணிக்கணக்கில் வெறித்துக்கொண்டிருப்பதுதான

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொழும்பில் குண்டு வைத்ததால் தான் சர்வதேசம் புலிகளை தடை செய்தது என்பது ஏற்று கொள்ள முடியாது.இலங்கை அரசு பொது மக்களை கொல்லும் போது சர்வதேசம் பார்த்து கொண்டு தானே இருந்தது.செஞ்சோலை படுகொலை,நவாலி தேவாலய படுகொலை முதலியவற்றை கண்டும் காணத மாதிரி தானே இருந்தது. குறைந்த பட்சம் கிரிஸ்தவ அமைப்புகள் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.சர்வதேசம் எப்போதும் தனது சுய லாபங்களை முன் வைத்தே திட்டங்களை தீட்டும்.புலிகள் என்றால் மக்கள் மக்கள் என்றால் புலிகள் என்றால் புலிகள் தாங்கள் பின் வாங்குவதற்கான காரணத்தை மக்களுக்கு கூற வேண்டும்.அது நீண்ட கால,இராஜ தந்திர நோக்கங்களை கொண்டிருந்தால் அதை பற்றீ கூற தேவையில்லை ஆனால் உண்மையில் ஆளணீ பற்றாக்குறை,பணப் பற்றாக்குறை போன்றவற்றீனால் தான் பின் வாங்குகீறார்கள் என்றால் மக்கள் என்னும் கூட உதவுவார்கள்.அத்துடன் அவர்களை நம்பிய மக்களை தெளீவாக வைத்திருக்க உதவும்.அது போரியலை பாதிக்கும் என்ரு கூற முடியாது.கிளீநொச்சி,ஆனையிறவு போன்றவற்றை சண்டை பிடிக்காமல் விட்டுயிருக்கிறார்கள்.நிச்ச

புலிகளின் பலம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஓரு விடயம். இதுவரை காலமும் புலிகள் ஈட்டிய வெற்றிகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் ரகசியம் பேணலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். ஆகவே.. தற்போதைய பின்வாங்கல்களுக்கான காரணமும் அவர்களுக்கே.. முக்கியமாக தலைவருக்கே தெரிந்த ஒன்று. இவ்வேளையில் அவர்கள் மீது நாங்கள் கொண்ட நம்பிக்கை தான் முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே அந்த காரணம் என்னவாக இருந்தாலும் ஒருநாள் அது தெரியவரும். அதுவரை நாம் எமது ஆதரவையும் பங்களிப்பையும் தொடர்ந்து செய்யவேண்டும். அத்தோடு நின்றுவிடாது ஏனையவர்களையும் பங்களிக்கத்துண்டும் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும். போராட்டத்தனுடனிருக்கும் நாங்கள் தான் விலகியிருக்கும் மக்களை போராட்டத்தின்பால் ஒன்றிணைத்து அவர்களையும் பங்காளர்களாக மாற்றவேண்டும். அதுவே எம்முன் இருக்கும் முக்கிய பணியாக எனது அறிவுக்கு படுகிறது.

புலிகள் இப்பொழுது பலமாக இருக்கிறார்களோ இல்லையோ.. புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு பலமாக இருக்கவேண்டும். அவர்களின் செயற்பாடுகளுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. அது புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் செயற்பாட்டாளர்களாவதிலேயே தங்கியிருக்கின்றது! உணர்ந்து செயற்படுவோமாக!

Edited by eelamlover

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.