Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய - ஈழப் போர் "2"

Featured Replies

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்பு நடைபெற்ற போர்களை "ஈழப் போர்" 1, 2, 3 என்று வகைப்படுத்துவார்கள். 80களின் தொடக்கத்தில் ஆரம்பித்து 87 வரை நடைபெற்ற போரை "ஈழப் போர் 1" என்றும் 90ஆம் ஆண்டில் இருந்த 95ஆம் ஆண்டு வரை நடந்த போரை "ஈழப் போர் 2" என்றும், 1995ஆம் ஆண்டில் இருந்து 2002 வரை நடந்த போரை "ஈழப் போர் 3" என்றும் அழைப்பார்கள்.

இடையிலே 1987ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 1990இன் ஆரம்பம் வரை இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்று சொல்வார்கள்.

சிறிலங்காப் படைகளுடன் நடத்துகின்ற போரை "ஈழப் போர் 1,2,3" என்றும் இந்தியப் படைகளுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுவதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழுது நடக்கின்ற போரை "ஈழப் போர் 4" என்று அழைக்கின்றார்கள்.

இந்த இடத்திலே "இந்திய- ஈழப் போர்" ஆரம்பமான பொழுது நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். அன்றைய காலகட்டத்தில் படையினர் தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் பேசுவதை சிறிய வானொலிப் பெட்டிகளில் அலைவரிசைகளை மாற்றி கேட்கக் கூடியதாக இருந்தது. முக்கியமாக உலங்கு வானூர்த்தியில் இருந்து தாக்குதல் நடத்தும் படையினர் பேசுவதை, தாக்குதல் நடத்தப்படும் பகுதியில் உள்ளவர்களால் வானொலியில் தெளிவான முறையில் கேட்க முடிந்தது.

(இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்து இது போன்ற குறைகள் சரி செய்யப்பட்டு விட்டன. இதை தமிழ் மக்களின் துரதிர்ஸ்டம் என்றும் சொல்லலாம்.)

அப்பொழுது "இந்திய - ஈழப் போர்" ஆரம்பித்து ஓரிரு நாட்கள் ஆகியிருந்தன. யாழ் குடாவை ஆக்கிரமிப்பதற்கு இந்தியப் படையினர் தமது படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியருந்தார்கள். அப்பொழுது ஒரு உலங்குவானூர்த்தி வட்டமிட்டபடி தமிழர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. அதே நேரம் கீழே ஒரு வீட்டில் சில இளைஞர்கள் வானொலியில் அலைவரிசையை மாற்றி வானோடிகள் பேசவதை ஒட்டுக் கேட்டு அதை பதிவு செய்வதற்கு தயாரானார்கள். குண்டுச் சத்தங்களுக்கு நடுவிலும் வானோடிகள் பேசுவது தெளிவாகக் கேட்டது. அப்பொழுது அந்த வானோடிகள் பேசியதைக் கேட்ட அந்த இளைஞர்கள் சற்றுத் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

வானோடிகள் சிங்களத்தில் பேசினர்கள். அதோ அந்தக் கோவிலைத் தாக்கு! அந்த வீட்டின் மீது குண்டு போடுவோமா? ஆம்! இரண்டு குண்டுகளை போடுவோம்..... இப்படி அந்த வானோடிகள் சுத்தமான சிங்களத்தில் பேசினார்கள். தரையில் தாக்குதலை நடத்தியபடி நகர்ந்து கொண்டிருந்து இந்தியப் படையினரோடு ஆங்கிலத்திலும், தமக்குள் சிங்களத்திலும் பேசியபடி வானோடிகள் தமிழர்களின் வீடுகளில் குண்டுகளை வீசிக் கொண்டிருந்தார்கள்.

அதுவரை சிங்களப் படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இந்தியப் படையினர் மட்டுமே விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களையும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக இந்திய அரசு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க, இந்தியப் படைகளும் சிறிலங்காப் படைகளும் இணைந்துதான் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்திருக்கின்றன என்ற உண்மையை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியது.

இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு ரகசியமான முறையில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது. சிங்களப் படையினரும் இந்தியப் படையினரும் இணைந்து தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ள செய்தியை "லண்டன் டெய்லிமெய்ல்" என்னும் பத்திரிகை 20.10.1987 அன்று இந்தப் பதிவை ஆதாரமாகக் கொண்டு வெளியிட்டது.

சிங்களப் படைகளும் இந்தியப் படைகளும் இணைந்து தமிழர்கள் மீது போர் தொடுத்திருந்தாலும், இந்தப் போரை நாம் "இந்திய - ஈழப் போர்" என்றே அழைக்கின்றோம். இந்தப் போரில் சிறிலங்காப் படைகள் கலந்து கொண்டாலும், போரை வழிநடத்தியது இந்தியா என்பதுதான் இதற்குக் காரணம்.

இன்றைக்கு நடக்கின்ற போரை வழிநடத்துவது யார்? பல நாடுகளுக்கு இன்றைய போரில் பங்கிருக்கின்றது என்பது உண்மைதான். உலகின் பல வல்லரசுகள் இந்தப் போரில் சிறிலங்காப் படைகளுக்கு ஆதரவாக நிற்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால் இந்தப் போரில் முக்கிய பங்கெடுத்து, போரை வழிநடத்துகின்ற இடத்தில் இருப்பது இந்தியாவேதான். இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆகவே இன்றைக்கு நடக்கின்ற போரை "ஈழப் போர் 4" என்று அழைப்பது சரியானதாக இருக்க முடியாது. இந்திய - ஈழப் போர் 2தான் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தரையிலும், வானிலும், கடலிலுமாக இந்திய அதிகார மையம் தமிழ் மக்களுக்கு எதிரான இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றது. சிங்களப் படைகளுக்கு திட்டங்கள் தீட்டிக் கொடுத்து, களமுனைகளுக்கு நேரில் சென்று வழி நடத்தி, ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து, ரகசியமான முறையில் தமது படையினரையும் சண்டைகளில் ஈடுபடுத்தி, நவீன வானூர்த்திகளை செலுத்துவதற்கும் குண்டு வீசுவதற்கும் பயிற்சிகள் கொடுத்து, தாமும் நேரடியாக குண்டுகளையும் வீசி, கடலிலும் காவல் இருந்து இந்தியா இந்தப் போரை நடத்தி வருகின்றது.

"ஈழப் போர் 3" நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது தற்பொழுது போன்று வன்னியின் பெரும் பகுதி சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கின்ற அதே கட்சிகள் அன்றைக்கும் தமிழ்நாட்டில் இருந்தன. ஆனால் இந்தியாவிடம் "இலங்கையில் நடக்கின்ற போரை நிறுத்துங்கள்" என்று யாரும் கோரிக்கை விடவில்லை.

இன்றைக்கு தமிழீழத்தில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் "போரை நிறுத்துங்கள்" என்று இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் கேட்பதற்கு அர்த்தம் இருக்கின்றது. இந்தியா நினைத்தால் நாளைக்கே போர் நின்று விடும் என்று சொல்வதிலும் மிகப் பெரிய அர்த்தம் இருக்கின்றது. வலிந்த போரை வழிநடத்திக் கொண்டிருக்கும் இந்தியாதான் போரை நிறுத்த வேண்டும். இந்தியா இந்தப் போரை நிறுத்தினால் நாளைக்கே ஈழத்தில் போர் முடிவுக்கு வந்து விடும்.

இந்தியா இப் போரை நடத்துவதாற்தான் விடுதலைப் புலிகளும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பகை நிலையை மாற்றி நட்பை உருவாக்குவதற்கான அழைப்பை இந்தியாவை நோக்கி விடுக்கின்றார்கள். ஆனால் இந்த அழைப்பை புறந்தள்ளி விட்டு இந்தியா தமிழ் மக்கள் மீதான போரை நடத்தி வருகின்றது.

கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படையினர் நுழைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறிலங்காப் படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். இப்பொழுது புலிகள் திருப்பித் தாக்கினால், சிறிலங்காப் படைகள் அனுராதபுரம் வரை திரும்பிப் பார்க்கமால் ஓடும் என்று நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் தீடிரென்று சிறிலங்காப் படைகள் புத்துணர்ச்சி பெற்றன. பாரிய சூட்டு வலுவோடும், ஆளணி வளத்தோடும் முன்நகரத் தொடங்கின. சேடம் இழுக்கும் நிலையில் நின்ற சிங்களப் படைகளை மீண்டும் தூக்கி நிறுத்தியது இந்தப் போரை வழிநடத்திக் கொண்டிருக்கும் இந்தியாதான் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் போரில் இப்படி சிறிலங்காப் படைகள் பலவீனம் அடையும் போதெல்லம், அதற்கு முண்டு கொடுத்து கைதூக்கி விட்டபடி இந்தப் போரை இந்திய அதிகார மையம் நடத்தி வருகின்றது.

விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் அழித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இல்லாது செய்வதற்காக இந்தியா 1987இல் முதலாவது இந்திய - ஈழ யுத்தத்தை நடத்தியது. தற்பொழுது நடக்கின்ற இரண்டாவது இந்திய - ஈழ யுத்தமும் அதற்காகவே நடைபெறுகின்றது.

இதன் அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை கைது செய்தால் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவும், ஒப்படைப்போம் என்று சிறிலங்காவும் சொல்கின்றன. இலங்கைக் குடிமகன் ஒருவரை வேறொரு நாட்டிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் எதையும் சிறிலங்கா கொண்டிருக்கவில்லை. இதை விட தேசியத் தலைவர் பிரபாகரன் மீது சிறிலங்காவின் நீதிமன்றங்களிலும் பல வழக்குகள் உள்ளன. ஆனால் இவைகளை மீறி தேசியத் தலைவரை ஒப்படைப்பதற்கு சிறிலங்கா தயாராகவே இருக்கின்றது.

சிறிலங்காவிற்கு வேறு வழியில்லை. தற்போதைய போரை இந்தியாவே நடத்தி வருவதால், இந்தியா கேட்பதை சிறிலங்கா கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

இந்தியாவின் வழிநடத்தலில் நடக்கின்ற இந்தப் போரில் எதிரி தமிழர் தாயகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விட்டான். விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பின்வாங்கியபடி இருக்கின்றார்கள். எப்படி இந்திய ஈழப் போர் 1இல் தற்காப்புத் தாக்குதலை நடத்தியபடி பின்நகர்ந்தார்களோ, அப்படியே தற்பொழுது நடைபெறும் இந்திய ஈழப் போர் 2இலும் விடுதலைப் புலிகள் பின்னகர்கின்றார்கள்.

இந்த இக்கட்டான நிலையில் இருந்து விடுதலைப் புலிகள் எப்படி மீளப் போகின்றார்கள்? படைரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் தமிழ் மக்கள் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள்? இந்தியா தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த இரண்டாவது போரை நிறுத்துவதற்கு தமிழ் நாட்டுத் தமிழர்கள் எவ்வகையான பங்களிப்பை வழங்கப் போகின்றார்கள்?

தொடரும்.....

வி.சபேசன் (10.01.08)

தொடருங்கள் சபேசன் ..........

இந்தப்போர் இந்தியாவின் இரண்டாவது போர் என்பதற்கு பதிலாக மூன்றாவது என்றால் இன்னும் பொருந்தும்.

1) இந்திய அமைதிப்படை எனும் பெயரில்

2) மாத்தையா எனும் துரோகியை உருவாக்கி

3) தற்போதைய போர்

. இரண்டாவதின் பரிமானங்கள் ஓர் நாள் வெளிவரும். அப்போது ...........

இன்று நடைபெறும் போரில் இந்திய உயர் இராணுவ அதிகாரிகள் வழி நடத்துகிறார்கள் என்பதற்கு மேல் இந்திய விமானப்படையின் விமானிகளே போர் விமானங்களை இயக்குகின்றார்கள். அதற்கு மேல் இந்திய கடற்படை சொல்லித்தெரிய வேண்டியதில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேசன் புதிய தகவல் ஒன்றை அறியத்தந்தமைக்கு!

1987 இலங்கை - இந்திய உடன்படிக்கை முத்தரப்பு சம்பந்தப்பட்டிருப்பினும் உண்மையில் அந்த உடன்படிக்கை இரண்டு அரசுகளுக்கிடையே மட்டுமே கைசாத்திடப்பட்டிருந்தது, மூன்றாம் தரப்பான தமிழர் தரப்புக்கு வெறும் கனவான் உறிதிமொழி மட்டுமே மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் திரு இராஜீவ் காந்தி அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.

ஒப்பந்த விதிமுறைகளை மீறி 17 விடுதலைப்புலிகளை சிங்கள படை கைது செய்து பலாலியில் சிறை வைத்திருந்த போது இந்திய படைகள் இலங்கைப்படைகளோடு இணைந்து தமிழர் தலைவர் பிரபாகரனை கொல்வதற்கு வடமராட்சி வல்வெட்டித்துறையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது.அதில் 2 இந்திய ஜவான்களும் 3 சிறீலங்காப்படையினரும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்ணுற்ற மக்கள் முதற் தடவையாக இந்திய தரப்பின் நடுனிலமை தொடர்பாக அதிர்ச்சியுற்றனர் இலங்கை இந்தியரசுகள் ஏற்கனவே புலிகளை அழிப்பது பின்னர் இரு நாடுகளின் நலன்களைப்பேணுவதெபதை எழுதாத உடன்படிக்கையாகக்கொண்டுவிட்

கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படையினர் நுழைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறிலங்காப் படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். இப்பொழுது புலிகள் திருப்பித் தாக்கினால், சிறிலங்காப் படைகள் அனுராதபுரம் வரை திரும்பிப் பார்க்கமால் ஓடும் என்று நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் தீடிரென்று சிறிலங்காப் படைகள் புத்துணர்ச்சி பெற்றன.

:blink::wub::wub:

தயவு வெய்து இனியாவது உந்தக் கூத்துகளை நிறுத்திற வழியை விட்டு யதாhத்தை எமுதுங்ககோ !

  • கருத்துக்கள உறவுகள்

தரையிலும், வானிலும், கடலிலுமாக இந்திய அதிகார மையம் தமிழ் மக்களுக்கு எதிரான இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றது. சிங்களப் படைகளுக்கு திட்டங்கள் தீட்டிக் கொடுத்து, களமுனைகளுக்கு நேரில் சென்று வழி நடத்தி, ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து, ரகசியமான முறையில் தமது படையினரையும் சண்டைகளில் ஈடுபடுத்தி, நவீன வானூர்த்திகளை செலுத்துவதற்கும் குண்டு வீசுவதற்கும் பயிற்சிகள் கொடுத்து, தாமும் நேரடியாக குண்டுகளையும் வீசி, கடலிலும் காவல் இருந்து இந்தியா இந்தப் போரை நடத்தி வருகின்றது.

......................

.........................

இந்தியா இப் போரை நடத்துவதாற்தான் விடுதலைப் புலிகளும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பகை நிலையை மாற்றி நட்பை உருவாக்குவதற்கான அழைப்பை இந்தியாவை நோக்கி விடுக்கின்றார்கள். ஆனால் இந்த அழைப்பை புறந்தள்ளி விட்டு இந்தியா தமிழ் மக்கள் மீதான போரை நடத்தி வருகின்றது.

........................

வி.சபேசன் (10.01.08)

கியூபாவை பிடல் காஸ்ரோவும் சேகுவராவும் புரட்சியின் மூலம் கைப்பற்றிய பின், அங்கிருந்து விரட்டப்பட்ட அமெரிக்க சார்பு அரசிற்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம் வந்திறங்கலாம் என எதிர்பார்த்தார்கள். அமெரிக்க இராணுவத்தை எதிர்கொள்ளும் சக்தி கியூபாவின் புரட்சி அரசுக்கு இருக்கவில்லை. ஆகவே இந்த நிலையை கையாள சேகுவரா ஒரு தந்தரத்தை கையாண்டார்.

அமெரிக்கா சோவியத் யூனியனை தாக்ககூடியதாக அணுஆயுத ஏவுகணைகளை அண்மையில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தி வைத்திருந்தது. சோவியத் யூனியனுக்கு அணுஆயூதங்களை நிறுத்திவைக்க இவ்வாறாக அமெரிக்காவுக்கு அண்மையில் இடம் கிடைக்கவில்லை. சேகுவரா, கியூபாவில் இந்த அணுஆயூதங்களை நிறுத்தி வைக்குமாறு சோவியத்யூனியனுக்கு அழைப்பு விடுத்தார். சோவியத்யூனியனும் அணுஆயுதங்களை கப்பலுடன் அனுப்பிவைத்தது.

இவ்வாறாக ஒரு சிறிய நாடான கியூபாவில் இடம்பெற்ற புரட்சியை, மூன்றாம் உலகப்போர், அதுவும் அணுவாயூத போராக உருவாகும் நிலையை சேகுவரா உருவாக்கினார். அமெரிக்காவின் கவனம் கியூபாவின் புரட்சியிலிருந்து விலகி, சோவியத்துடன் அணுவாயூத சமபலத்தை பேணுவதில் செறிந்தது. இதனால்தான் இன்றும் கியூபா அமெரிக்க எதிர்ப்பு நாடாக இருந்தும், பலமிக்க அமெரிக்காவுக்கு பக்கத்தில் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறது.

இந்தியாவுக்கு இணையாக, இராணுவ பொருளாதார ஆதிக்கத்துக்கு இந்து சமுத்திரத்தில் போட்டியிடும் நாடு சீனா. இந்தியா உதவாத போதெல்லாம் சிறிலங்கா இதனால்தான் சீன உதவியை பெற முடிந்தது.

சீனாவின் முதியவர்கள் புத்தசமயத்தவர் ஆனாலும் இன்று சீனாவிற்கு எதிரான தாய்வினிலேயே புத்தமதத்தை நம்புவர்கள் இருக்கிறார்கள். மக்கள் சீனா மதநம்பிக்கையற்ற நாடு. இன்னும் சொல்லப்போனால் மதம் ஒரு நஞ்சு என்று சொல்லித்தான் திபெத்தை சீனா ஆக்கிரமித்து புத்தநாடாக திபெத்தை ஆண்டுவந்த தலாய்லாமாவை சீனா பதவி இறக்கியது. சீனப்புரட்சியின்போது புத்தமத நிலையங்கள் அழிக்கப்பட்டு பிக்குகள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இன்று சீன புத்தமதம் உல்லாச பயணிகளின் காட்சிபொருளாகவே பெருமளவில் பயன்படுகிறது. ஆகவே சிறிலங்காவிற்கு சீனா புத்தமதம் காரணமாக உதவுகிறது என்ற எண்ணம் சரியானதாக இருக்க முடியாது.

சீனா ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ உரிமையுடன் உள்ள, இந்தியாவிலும் பார்க்க பலமிக்க செல்வாக்கான நாடு. சிறிலங்கா இந்திய ஆதிக்கத்துக்கு உட்பட்டு இனியும் சீனாவுக்கு உதவும் நிலையில் இல்லை. தமிழீழ மக்களுக்கோ இந்தியாதான் பரமஎதிரியாக உள்ளது. சிறிலங்காவினால் சீன உதவியை இந்தியாவுக்கு எதிராக பெறமுடிந்தது என்றால், ஏன் தமிழீழ மக்களால் சீனாவை அணுக முடியவில்லை? சிங்களவருக்கும் தமிழரைப் போலவே சீன மொழி தெரியாது. ஆனால் அவர்களுக்கு, இந்தியா தமிழருக்கு உதவுவதாக காட்டி, சீனாவிடம் உதவி கேட்க தெரிந்திருக்கிறது. இந்த நிலையில், தமிழீழ மக்கள் கியூபாவின் சேகுவராவை போல சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான சிந்தனை யூட், ஆனால் சீனா எப்பொழுதும் கையில காசு வாயில தோசை என்ற மாதிரியே நடந்துகொள்கிறது,வர்த்தக நோக்கே அவர்களது அடிப்படை.

பனிப்போர் காலத்தில் உலகவலுச்சமனிலை என்பது ஒரே சிராக இருந்திருப்பதாகக் கூறுவார்கள் அமெரிக்கா-இரஸ்யா,வடகொரியா - தென்கொரியா,ஈராக் -ஈரான்,இந்தியா - பாகிஸ்தான் என்று உதாரணங்கள் உண்டு ஆனால் இந்தியா சீனாவுடன் இராணுவச்சமனிலை பற்றி இந்தியா எண்ணுவது சின்னப்பிள்ளைத்தனமானது,ஆனால

சபேசன்

உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் standard இற்கு பொருத்தமான script. நிராஜ் டேவிட் பொறாமைப்படாட்டி சரி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - ஈழப் போர் 1 முடிந்து 20 வருடங்கள் கழித்து நடைபெறும் இராண்டாவது போரில் தோற்காமல் இருக்கத் தேவையானவற்றை எல்லாம் செய்து முடித்திருப்பார்கள். இன்னும் 20 வருடங்களின் பின்னர் கேணல் ஹரிகரன், இராமன் போன்றவர்கள் எப்படி தாங்கள் இராண்டாவது இந்திய - ஈழப் போரை சிங்கள இராணுவத்தைக் கொண்டு நடாத்தி வெற்றி பெற்றார்கள் என்று கட்டுரைகள் எழுதக்கூடும்..

இந்திய - ஈழப் போர் 1 முடிந்து 20 வருடங்கள் கழித்து நடைபெறும் இராண்டாவது போரில் தோற்காமல் இருக்கத் தேவையானவற்றை எல்லாம் செய்து முடித்திருப்பார்கள். இன்னும் 20 வருடங்களின் பின்னர் கேணல் ஹரிகரன், இராமன் போன்றவர்கள் எப்படி தாங்கள் இராண்டாவது இந்திய - ஈழப் போரை சிங்கள இராணுவத்தைக் கொண்டு நடாத்தி வெற்றி பெற்றார்கள் என்று கட்டுரைகள் எழுதக்கூடும்..

எல்லாரும் புலிகளை ரொம்ப்ப ந(வ)ல்லவர்கள் என்று சொல்லி சொல்லி உசுப்பேத்தி ரனகளப்படுத்தி விட்டார்கள்......

விடுதலைப்புலிகள் இதுவரை சார்புநிலை எடுக்காதிருக்கும் வண்ணம் தம்மை வைத்திருப்பது இந்தியாவின் நலனைத் தம்முடன் இணைந்து செயற்படுத்துவதற்காகத்தான். அந்த நிலைமை மாறும் போது இந்தியா சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பமும் வரலாம். இந்தியா என்ன நோக்கத்திற்காக தமிழர் தரப்பினை எதிர்க்கின்றதோ, அந்த நோக்கம் விடுதலைப்புலிகளால் மட்டுமே சிதறடிக்கப்பட முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.