Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயா அருட்பிரகாசத்திற்கு (M.I.A.) ஆஸ்கார் பரிந்துரை

Featured Replies

ஜெயபாலான் அவர்களே இன்னும் எத்தினை காலாம் தான் இந்தப் பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டு இருக்கப்போகிறீர்கள்?

அருளர் ஆரம்கால அரசியற் செயற்பாட்டளாராக இருக்கலாம், ஆனால் அவரும் தனது அரசியற் தெளிவின்மையையை உங்களைப் போலவே பல இடங்களில் காட்டி உள்ளார்.சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்த்தலில் தன்னை ஒரு வேட்பாளாராக்க வேண்டும் என்னும் நோக்கில் செயற்பட்டார்.அதற்க்குப் புலிகல் ஆதரவு தர ஏண்டும் என்னும் நோக்கில் செயற்பட்டவர்.இதை தன்னை முன்னிறுதும் முயற்சியாகவே அவர் செய்தார்.

உங்களைப் போன்றவர்களுகு உங்கள் சுய தம்ப்பட்டம் அங்கீகாரம் என்பவை முக்கியமாந்தாக இருக்கிறது.எங்கே ஒரு கதிரை எங்கே ஒரு அங்கீகாராம் கிடைக்காத என்னும் அரசியலை விட்டு விட்டு மக்களின் போராட்டம் மக்களின் அரசியல் என்று செயற்படுங்கள் மக்களின் அங்கீககரம் கிடைக்கும்,இல்லாது போனால் இந்திய அரசின் ரோவின் அல்லது சிறிலங்கா புலனாய்வுப்பிரிவின் கைப்பவைகளாகச் சீரழியும் அரசியலையே செய்ய வேண்டி இருக்கும்.

ஈரோசில் தமிழ்த் தேசியச் சார்புடைய்வர்கள் புலிகளுடன் இணைய இந்திய சார்புடையவர்கள் ரோவின் கைப்பாவிகளாக தனித்து இயங்கினர்.இதில் அருளர் அங்கும் இல்லாமால் இங்கும் இல்லாமால் ஊசலாட்டமான ஒரு அரசியற் செயற்பாட்டளாரக இருந்தார் என்றே நினைக்கிறேன்.

லண்டனில் குடும்பி ரவி, நித்தி, கொன்கோங் குகன் போன்றவர்கள் ரோவின் சந்திரன்,பிவி ராமான் முன்னாள் தளபதி கரிகரன் போன்றோருடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ளனர்.இதில் அருளர் என்ன செய்கிறார் அரசியல் ரீதியாக தற்போது எங்கு நிற்கிரார் என்று தெரியவில்லை?

  • Replies 61
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நான் சொல்கிற பரிமானம் வேறு. நீங்க சொல்வது வெறொன்று. இது உங்களுக்கான இடமல்லவா. இங்கு எனக்கு என்ன வேலை? எனக்கு இங்கு இப்படி மினகெட நேரமுமில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். பை பை

Edited by poet

சும்மா எடுத்துக்கு எல்லாம் கோவிக்காமல் நான் சொல்வதில் எதாவது தவறு என்று இருந்தால் எடுத்துச் சொலுங்கள். நான் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

இங்கே நீங்கள் நாங்கள் என்று எந்தப் பிரிவினையும் இல்லை.இல்லாத ஒன்றை இருப்பதாகாப் பாவனைப்படுத் தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய பாலன் சகோதர யுத்தத்தில் ஈரோஸ் எங்கு எப்படி பாதிக்கப்பட்டது என்பதனை விளக்குவீர்களா?? ஈரோசிற்குள் இரந்த பிரச்சனையே பாதிப்பேர் றோவிற்கு வால் பிடிக்கவேண்டும் என்றதும் மீதிப்பேர் சுயமாக போராட்டத்தினை தொடவேண்டுமென்கிற பிரச்சனையே தவிர வேறு பிரச்சனையில்லை. அதில் றோவிற்கு வால்பிடித்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து வெறும் எழுத்துக்களினால் மட்டுமே ஈழப்போராட்டத்தினை நடாத்தியவர்கள்தான். அந்த நேரத்தில்தான் பாலகுமார் சரியானதொரு முடிவை எடுத்தார்.நீங்களும் அறளை பேந்துபோன கருணாநிதி மாதிரி சகோதர யுத்தத்தினை இழுக்கவேண்டாம்.முடிந்தால் பொறுமையாய் பதில் தாருங்கள் இல்லாட்டி தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி, உங்க கருத்து எதுவோ அதை நீங்க சொல்லுங்க. பயனுள்ளதை எடுத்துக்கிறன். அல்லது தாண்டிப் போய்கிண்ணே இருக்கிறன். எனக்கு எதை எப்படி எழுதுவது என்று பாடம் நடத்தாதீங்க. நான் யாழில் எழுதுவதற்காக சிந்திக்கிறவனல்ல. சொல்ல வேண்டிய எல்லா இடங்களிலும் தொடற்ச்சியா சொல்லுகிற விடயங்களில் மிக மிகச் சிலதை மட்டுமே உங்கள் போன்றோரின் வெறுப்பை தாங்கிக்கொண்டு இன்னும் யாழில் எழுத முனைகிறேன். நான் எதைச் சொன்னாலும் வரலாற்றுக்கும் அடுத்த தலைமுறைக்கு பொறுப்பாகத்தான் சொல்கிறேன். யாழில் எபோதவது ஒருமுறைதேனே எழுதிறன். இதுகூட பிடிக்கலையென்றால் 'டோய் இனி அத்தி பூத்தாப்போலதன்னும் நீ யாழில் எழுததே" என்று மட்டும் சொல்லலாமல்ல போயிருவமல்ல.

ஐயா கவிஞரே ,

நீங்கள் எரிக்சொல்கைமுக்கு அடுத்த கையெல்லோ ? நீங்களெல்லாம் எங்கடை கருத்தைக் கேட்க வேண்டிய துர்ப்பாக்கியம் என்ன செய்வது ? (கழுதைகள் நாங்கள் ஞானிகளுக்கு உபதேசமோ கேட்கவே கடுப்புத்தான்) நீங்க எங்கை வேணும்னாலும் போய்க்கிண்ணு இருங்க. அதப்பத்தியெல்லாம் நாம அலட்டிக்கிறதா இல்லிங்க சார். உங்களுக்குப் பாடம் நடத்த நானென்னங்க வாதியாருங்களா ? நீங்கள் யாழில் எழுத சிந்திக்கிற ஆளில்லிங்க அதுக்கும் மேலாக எழுதுங்க பிரச்சனையில்ல.

அதெப்பிடிங்க எங்க போன்றவங்களின்ரை வெறுப்பைத்தாங்கிட்டிருக்கீ

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

புண்படுவதா? நானா? உங்கள் பேச்சைக் கேட்டா? என்ன ஜோக் அடிக்கிரீங்களா? .பல தடவை துப்பாக்கிகள் அழுத்தப்பட்ட் ட நெற்றி அம்மு இது. நெற்றிக் கணனைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கிற பரம்பரை அம்மு என் பரம்பரை.

அது சரி தான். ஜெயபாலான கொக்கா ?புண்படுவாதா ? (பண்பட்டவரல்லவா நீங்கள்) அதுதான என்ரை பேச்சைக் கேட்டா ?

ஐயா யோக்கடிக்கிறனுங்களா ? சொல்லவேயில்லை.

அட துப்பாக்கிகளெல்லாம் உங்கள் நெற்றிக்கண்ணில பட்டிருக்கு அதெல்லாம் எங்களுக்கும் தெரியாமப் போச்சு. உங்கள் நெற்றியை அழுத்திய துப்பாக்கிகள் போன இடம் ? அதையெல்லாம் இனித் தேடி அதைவிட்டு விடுவோம்)

நாங்கள் மாயா அருளரைப் பற்றிக் கதைக்க இதற்குள் சம்பந்தப்படாதவற்றையெல்லாம் கொண்டு வந்து இயக்கமோதல் இயங்காத மோதல் பற்றியெல்லாம் கதையளந்தது நீங்கள். உங்கள் கருத்துக்குக் கருத்திட்டால் வெறுப்பேறும் உங்கள் இயல்பை எம்மால் மாற்ற முடியாது. (ஏதோ தன்வாயால் கெடும் என்று எங்கடை ஆச்சி சொல்லுவா. காரணமில்லாமல் அதுதான் ஞாபகம் வருது)

குற்றம் குற்றமே என்கிற உங்கள் பரம்பரையையெல்லாம் இங்கை யார் அழைத்தது ? நீங்களாகவே கேள்வியும் தந்து பதிலும் தந்து ?

ஐயா உந்தப்பரம்பரை சொல்லியே தமிழனை இதுவரை கொண்டு வந்துவிட்டவர்களின் வழியில் வந்தவரல்லவா நீங்கள். உங்கள் பரம்பரை சொல்லியே காலத்தை ஓட்டுங்கள். அதுதான் உங்கள் வழியிலான பரப்புரை. இதுவே தமிழின விடிவுக்கான பாதையும்.

கருத்துக்களத்தில் பரம்பரை வம்சாவழி எதுவும் இதுவரை வரவில்லை. இன்றிலிருந்து அதையும் களம் உள்வாங்கிக் கொள்கிறது.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நான் சொல்கிற பரிமானம் வேறு. நீங்க சொல்வது வெறொன்று. இது உங்களுக்கான இடமல்லவா. இங்கு எனக்கு என்ன வேலை? எனக்கு இங்கு இப்படி மினகெட நேரமுமில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். பை பை

இங்கு உங்கள் பரிமாணம் என நீங்கள் சுட்டுவது உங்களால் பதில் சொல்ல முடியாமை எனப்பொருள்படுகிறது. கருத்துக்களம் கருத்தாட விரும்பும் அனைவருக்குமான இடம். உங்கள் இடம் இயமமலை. அங்கிருப்போரெல்லாம் இந்தச்சாமான்யர்களுடன் கதைப்பதா ? கூடாது.

சென்றுவருக.

ஜெயபாலன் என்பவர் யார்? எழுத்தாளரா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரத்தில்தான் பாலகுமார் சரியானதொரு முடிவை எடுத்தார்.நீங்களும் அறளை பேந்துபோன கருணாநிதி மாதிரி சகோதர யுத்தத்தினை இழுக்கவேண்டாம்.முடிந்தால் பொறுமையாய் பதில் தாருங்கள் இல்லாட்டி தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். நன்றி

பாலகுமாரன் அவர்கள் எடுத்த சரியான முடிவுதான் அவரை சரியான இடத்தில் சேர்த்தது. ஈரோஸ் என்ற இயக்கத்தின் வேராக இருந்த பாலகுமாரனை சந்தித்தது பற்றி அல்லது பாலகுமாரனிடம் யார் கூட்டிபர்போனார் என்றது பற்றியும் ஏதாவது அரிய தகவல்கள் வரலாம். காத்திருங்கள் சாத்திரி.

கருணாநிதி கூடப் பறவாயில்லை. 60வது பிறந்தநாளில் சேர்ந்த தங்கத்தைப் பங்குபிரிக்கப் போனதில் வந்த கடுப்பில் சகோதர யுத்தம் பற்றி பினாத்தினார். இந்தக் கவிஞர் அதற்கும் ஏதாவது காரணம் வைத்திருப்பார். ஏனெனில் தமிழீழம் தற்போது ஜெயபாலன் என்ற கவிஞனின் கையிலல்லவா தொங்கிக்கொண்டிருக்கிறது. இவர் தனது இரகசிய சேவைகளிலிருந்து தமிழீழுத்தை நிச்சயம் பெற்றுத்தருவார் என்பதை நம்புவோமாக. :lol:

பொறுமையாய் பதில் தரமுடியாது. ஏலுமெண்டா சண்டைதான் செய்வார். கவிஞரின் குணம் போர்க்குணம். அதைத்தான் நம் கவிஞர் செய்கிறார். முடிஞ்சா மோதிப்பாரும் சாத்திரி. :unsure:

ஜெயபாலன் என்பவர் யார்? எழுத்தாளரா?

ஜெயபாலன் அண்ணா ஈழத்து கவிஞர்களில் மிக முக்கியமானவர். அற்புதமான கவிதைகளை எழுதி முதல் 10 சிறந்த ஈழத்து கவிஞர்களில் ஒருவராக உலகில் உள்ள பெரும்பான்மை தமிழ் இலக்கியவாதிகளாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர். இவரது ஏகலைவன் நான்

ஆனால் இந்தகைய அருமையான கவிஞரின் அரசியலுக்கும் அவரின் கவிதைகளில் உள்ள தெளிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்று வரை புலிகளால் முஸ்லிம்கள் துரத்தப் பட்ட விடயத்தினையும் , சகோதர யுத்தம் பற்றிய விமர்சனத்தினை முக்கிய பிரச்சாரமாகவும் செய்து கொண்டு, இந்தியா வந்து தங்க தாம்பாளத்தில் வைத்து தமிழ் ஈழத்தினை தரும் என்று (இப்போதைய நம்பிக்கை இந்திய கம்யூனிஸ்டுகள் ) இன்றும் கூட கனவு காணும் ஒருவர்

போன கிழமை திண்ணையில் கூட ஒரு சின்ன விவாதம் ஒன்றை இவருடன் செய்யும் போது, இடையில் கோபித்து கொண்டு தலைமறைவான 'கருத்துகளை மதிக்கும்' பரந்த மனப் பான்மையான கவிஞர்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நான் சொல்கிற பரிமானம் வேறு. நீங்க சொல்வது வெறொன்று. இது உங்களுக்கான இடமல்லவா. இங்கு எனக்கு என்ன வேலை? எனக்கு இங்கு இப்படி மினகெட நேரமுமில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். பை பை

இக்கருத்து தவறு.

உங்களின் நியாயமான கருத்துக்கள் இங்கு வெளியிடப்பட முடியும்.

சகோதர யுத்தம் என்ற ஒன்றே இல்லை. காரணம்... எல்லோரும் தமிழீழம் என்ற இலட்சியத்துக்காகவே போராடப் புறப்பட்டனர். அவர்களை இலட்சிய உறுதி மிக்க ஒரு தலைவனின் கீழ் இயக்கக் கேட்டது தவறா..??! அதை எதிர்த்து.. எதிரிகளுடன் இணைந்து போராட்டத்தை மக்களின் விருப்புக்களை காட்டிக் கொடுத்து அழித்தது சரியா..??!

அன்றிலிருந்து இன்று வரை விடுதலைப்புலிகளின் தலைமையை விட எவரும் தாம் வகுத்த கொள்கையில் இன்றும் உறுதியாக நின்றதில்லை. இன்று விடுதலைப்புலிகள் இவ்வளவு இக்கட்டுக்களையும் சுமக்க அதே துரோகிகளின் எச்சங்கள் தான் காரணம். மக்களின் இத்தனை அழிவுக்கும் காரணம்.. போராட்டமல்ல. போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து எதிரிகளை பலப்படுத்தியவர்களே..!

இதுவே தமிழர்களின் சாபக்கேடு. இன்று கூட அப்பாவி மக்களின் மரணங்களுக்கு புலிகளை காரணம் காட்டும் அந்தத் துரோகிகள்.. தாம் பலியிட்டு.. எதிரிகளிடம் சரணடைந்து மக்களை அழித்தது பற்றி எப்போதும் நியாயம் பேசுவதில்லை பார்ப்பதும் இல்லை.

இதில் நான் உங்களை துரோகி என்றவில்லை. எமது மக்களின் அபிலாசையான தமிழீழத்தை உச்சரித்து.. அதைப் பின்னர் கைவிட்டு.. தமிழீழத் தேசிய தலைமையின் கீழ் ஒன்றிணைந்து போராட வக்கின்றி. எதிரிக்கு விலைபோன அனைவரையும் என்னைப் பொறுத்தவரை துரோகிகள் என்றே இனங்காண்பேன். அவர்கள் மக்களின் துரோகிகள். :unsure:

Edited by nedukkalapoovan

  • 2 months later...

இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழின் ஊடகவியலாளர் கவிதா முரளிதரனுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில் இருந்து மாயா தொடர்பான ஒரு கேள்விக்கான நடேசன் அண்ணாவின் பதில்

தமிழ் மக்களை சிறிலங்கா இன அழிப்புக்கு உட்பட்டுத்துவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பொப் பாடகி எம்.ஐ.ஏ. வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

அவர் எமது மண்ணின் குழந்தை, உலகு எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களில் மிகவும் திறமையுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவர். அவர் தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். அவரின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் வலுவான காரணிகளில் ஒன்று.

சிறிலங்கா அரசின் வலிமை மிக்க எல்லா பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றன. இருந்த போதும் மனிதநேயம் கொண்ட அவரின் இதயம் தான் தமிழ் மக்கள் படும் துன்பம் தொடர்பாக அவரை பயமின்றி பேசவைத்துள்ளது என்றார் பா.நடேசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.