Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் அடுத்த மூவ்!-அமெரிக்க ஆயுதம்...--விகடன்

Featured Replies

புலிகளின் அடுத்த மூவ்!-அமெரிக்க ஆயுதம்...--விகடன்

போர் தரும் வேதனையைவிட, 'தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!' என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் 'வந்தார்... சென்றார்' என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள்.

காவுகொண்ட கறுப்புத் திங்கள்!

'முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!' என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக் கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள்.

இந்த நேரத்தில், 'புலிகளின் சிறப்புத் தற்கொலைப் படையணி, சாதாரண மக்களாக மாறி ராணுவ இலக்கு களின் மீது கடுமையான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போகிறார்கள்!' என்றொரு வதந்தி ராணுவத்தின் உளவுப்பிரிவுக்கு வர... அதுவே, பொதுமக்களுக்கு எமனாக அமைந்துவிட்டது.

உடனே தமிழ் மக்களின் மீது அரக்கத்தனமான தாக்கு தலில் இறங்கிவிட்டது ராணுவம். 'மக்கள் பாதுகாப்பு வளையங்களாக' அறிவிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு, விசுவமேடு, உடையார்கட்டு, வன்னிபுலம் போன்ற பகுதிகளின் மீது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் பாது காப்பு வளையங்களில் கூட்டம் கூட்டமாக சொந்தபந்தங்களுடன் தங்கியிருந்த அப்பாவி மக்கள் மீது நாலாபுறத்திலிருந்தும் கிளஸ்டர் குண்டுகளும் ஷெல் வீச்சுக்களும் தொடர்ந் திருக்கின்றன. காலை 9.40-க்குத் தொடங்கி 10.30 வரைக்கும் நடந்த இந்தக் கோரத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாக, மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில், 'புலிகளின் சிறப்புத் தற்கொலைப் படையணி, சாதாரண மக்களாக மாறி ராணுவ இலக்கு களின் மீது கடுமையான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போகிறார்கள்!' என்றொரு வதந்தி ராணுவத்தின் உளவுப்பிரிவுக்கு வர... அதுவே, பொதுமக்களுக்கு எமனாக அமைந்துவிட்டது.
[/codebox]

ஆஹா சிங்கள சிறீலங்காப் படையினர் மிகவும் நல்லவர்கள். இப்பிடியொரு செய்தி கிடைத்திராவிட்டால் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்திருக்கவே மாட்டார்கள் என்பதுபோல இருக்கிறது தாமரைக்கண்ணனின் இந்த வார்த்தைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் யதார்த்தத்துடன் எழுதுங்கள். இது என்ன சினிமாவா நடக்கிது ?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆயுதங்கள் புலிகளுக்குக் கிடைக்கப் போகிறது என்ற பூச்சாண்டியைக் கிளப்பியிருக்கிறார் தாமரைக் கண்ணன். இதன் உள் நோக்கம் என்னவென்பது எல்லோருக்கும் புரியும். இவரென்ன இந்து ராம், துக்ளக் சோ போன்றவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவரா.

தமிழக மக்களிடம் எமக்காக உருவாகிவரும் அனுதாப அலையைத் திசை திருப்புவதோடு திருமாவளவன் போன்ற தமிழகத் தலைவர்களையும் சந்திக்கு இழுத்து இக்கட்டில் மாட்டுவதற்குக் கல்லெறிகிறார். ஒரு கல்லில் இருமாங்காய்கள் கிடக்கும் என்ற நப்பாசை அவருக்கு.

இத்தகைய பத்திரிகையாளர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இல்லாததiயும் பொல்லாததiயும் கதையாய்க் கட்டி ஆதரவாளர்களைப் போல நடித்து கவிழ்த்துவிடுவார்கள்.

நஞ்சைத் தேனோடு கலந்து தருவதில் இவர்கள் வல்லவர்கள்.

இவர்களுக்கு புத்தகம் விற்கவேணும்.. ஐரோப்பாவில் விகடன் பத்திரிகைள் அமோக விற்பனை!!

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பத்திரிகையாளர் தன்பாட்டுக்கத் தேசியத் தலைவரை அவமரியாதை செய்யும் விதத்தில் நாசூக்காக சில விசயங்களையும் எழுதியிருக்கிறார்.

விகடனின் இந்தப் பொறுப்பற்ற செய்தியைக் களத்திலிருந்து எடுத்துவிட்டால் விகடன் சொல்வதே உண்மையாகிவிடும்.

இச்செய்தியை விமர்சித்து இதன் போலித்தன்மையை உலகமறியச் செய்யவேண்டும்.

ஆகவே செய்தியை யாழில்போட்டு விமர்சித்து தாமரைக்கண்ணன் போன்றவர்களின் முகமூடியைக் கிழிப்பதே சரியான நடவடிக்கையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டையை குழப்புவதில் தாமரைகண்ணு கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. சில அம்புலி மாமா கதைகளை கலந்து விட்டுள்ளார். வாசகர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். (செய்தியை உள்வாங்குவதில்)

யார் இந்த தாமரைக் கண்ணன்?

இவர் றோவின் கதை வசனகர்த்தாகவாகத் தான் இருக்க வேண்டும்!

இவரின் கட்டுரை முழுவதும் திறமையாக விசம் தடவி இருக்கிறார்!

நேருக்கு நேர் மோதும் எதிரியை விட பருகும் பாலில் விசத்தை கலந்து கொல்ல நினைக்கும் நண்பன் ஆபத்தானவன்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

புனை கதைகளை. புனை கதைகளால் தான் முறியடிக்க முடியும், புரிந்து கொண்டால் சரி.

Edited by Valvai Mainthan

புனைகதைகளை. புனைகதைகளால்தான் முறியடிக்க முடியும், புரிந்து கொண்டால் சரி.

தாமரைக்கண்ணனின் செதியாளர் முல்லைத்திவில் தலைவருக்கு பக்கத்தில் தான் இருக்கிறார் போல!!!!!!!!!!!!!!! :icon_idea::rolleyes:<_<

"கலாநிதி மாறனின் அடுத்த படத்துக்கு இவர்தான் கதை வசனம்" :D:D

  • கருத்துக்கள உறவுகள்

விகடன்; சமீப காலமாக தடம் மாறுவது நன்றாகவே தெரிகிறது.யூனியர் விகடனில் துரோகி கருணாவின் அட்டைப் படத்துடன் கூடிய பேட்டி மேலும் இந்தக் கட்டுரையில் சி.ஐ.ஏ இற்கும் புலிகளுக்கும் திருமாவளவனுக்கும் தொடர்பு படுத்தும் முயற்சி என்பன றோவுக்கும் விகடனுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்க வைக்கிறது.இவ்வளவு காலமும் ஆதரவாய் எழுதியது வஞ்சகப் புகழ்ச்சியா?

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த தாமரைக் கண்ணன்?

இந்த தாமரைகண்ணன் என்பவர் அதிமுக அல்லது திமுக எம் எல் ஏ இல்லையா? இல்லாவிடின் அவர் வேறு ஆளா? யாரவது இந்தியர்கள் ஊர்ஜிதப்படுத்தவும்.எனக்கு சரியாக தெரியாது தவறு என்றால் மன்னிக்கவும்

அமரிக்க ஆயுதக்கப்ல் ஒன்று சுண்டிக்குளப்பகுதியல் ஓரு பாரிய தொகுதி ஆயுகங்கள் இறக்கிவிட்டு இப்போதான் இந்தியா தூத்துக்குடியில் வந்து நிக்காமே? விகடன் றிப்பொர்ரர் தன்னுடைய பூதக்கண்ணாடியால் பார்த்தவரம்(ராமேஸ்வரத்தில் நின்று)....

Edited by notpoet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.