Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டு வெடித்ததும் வந்தன கண்டனங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் வீசி பள்ளிகள் வைத்தியசாலைகள் என்று பொதுமக்கள் காணப்பட்ட இடமெல்லாம் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்றுவிட்டு அவற்றை புலிகளின் இலக்காக பிரச்சாரம் செய்து வந்த இராணுவத்தைக் கண்டிக்க வழியில்லாதவர்கள்.. இன்று இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் பிரகாரம்.. அது வெளியிட்ட காணொளிப்படங்களின் பிரகாரமும் விடுதலைப்புலிகள் மீது கண்டனங்களை அமெரிக்கா என்ற வல்லாதிக்க சக்தியும் அதற்கு வால் பிடிக்கும் ஐநாவும் விட்டுள்ளன.

வன்னியில் இன்று இராணுவத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இராணுவம் பொதுமக்கள் மீது கைக்குண்டுகளை வீசித் தாக்கிவிட்டு.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் பலி என்று கதை விட்டுள்ளது.

இராணுவம் வெளியிட்ட காணொளியில் பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பது காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவிட்ட அறிக்கையில் 15 படையினர் கொல்லப்பட்டது சொல்லப்படுகிறது. அக்காணொளியில் கொல்லப்பட்ட.. அல்லது காயப்பட்ட இராணுவத்தினர் காணப்படவில்லை. அச்சம்பவம் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால் இராணுவம் பதில் தாக்குதல் நடத்தி மக்களை கொன்றுவிட்டு.. பழியை புலிகள் மீது சுமத்தி.. தனது இனப்படுகொலையை மறைக்க பிரச்சாரம் செய்து வருகிறது.

புதுக்குடியிருப்பில் எறிகணை வீழ்ந்து வெடித்தால் அது எங்கிருந்து வருகின்றது என்பதை அறிய முடியாதவர்களுக்கு.. இன்றைய குண்டுவெடிப்பின் அனைத்து விடயங்களும் உடனடியாக விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டு.. புலிகள் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

வன்னிப் பகுதியில் இருந்து வரும் மக்களை கிளிநொச்சியில் வைத்துப் பராமரிக்காமல்.. ஏன்.. வவுனியாவுக்கு அனுப்ப வேண்டும். அதுமட்டுமன்றி.. வன்னியில் இருந்து வரும் மக்களை அவர்களின் அரசாங்க அதிபர்களிடம் ஒப்படைப்பதுதானே நடக்க வேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை. இவற்றையெல்லாம் கேட்க நாதியற்ற சர்வதேசம்.. இராணுவம் விட்ட ஒரு அறிக்கையின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் வெளியிட்டுள்ளனர். ஆனால் வன்னியில் கிளஸ்ரர் குண்டு வீசப்பட்ட போதும்.. ஆட்லறிகள் வீசப்பட்ட போதும் கண்டிக்க எவரும் முன்வரவில்லை.

ஏ9 பாதையை மூடி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை தடுக்க இராணுவம் செயற்பட்ட போது.. அதை திறக்க எவரும் குரல் கொடுக்கவில்லை. இன்று கூட பாதை திறந்து யாழ்ப்பாண மக்களின் சுதந்திர பயணத்துக்கு அனுமதியில்லை. அதைக் கேட்க எவரும் இல்லை.

பொதுமக்கள் மீது தாமே தாக்குதலை நடத்திவிட்டு இராணுவம் செய்யும் பொய் பிரச்சாரத்தை தூக்கிக் கொண்டு அலைவோர்.. இராணுவம் மக்களை தாக்கி அச்சுறுத்தி இடம்பெயர வைப்பதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்க மறுக்கின்றனர்..???! ஆக இராணுவத்திற்கு மக்களை கொல்லலாம்.. அச்சுறுத்தலாம்.. பாதையை மூடலாம்.. எல்லாத்திற்கும் அனுமதியுண்டு. புலிகள் மட்டும்.. மனிதாபிமானம் மிக்க இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது ஆயுதத்தை விட்டு.. சரணடைய வேண்டும்.

முதலில் அமெரிக்காவும்.. இதர நாடுகளும் ஆயுதத்தை ஒப்படைத்து விட்டு.. ஈராக்.. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறட்டும். அவர்களின் வன்முறைவாத ஜனநாயக அமுலாக்கம்.. உலகில் மக்களால் வெறுக்கப்படும் நிலையே தோன்றிவிட்டுள்ளது. அதன் காரணமாகவே மக்கள் தம்மைத் தாமே அழித்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். பாரபட்சமான அணுகுமுறைகளை ஒட்டுமொத்த மனித சமூகமும் கைவிட்டால் அன்றி இவ்வுலகில் அமைதி வராது. ஆயுதங்களால் நிகழும் சாவும் ஓயாது.

--------------

இச்செய்தி தொடர்பான இன்னொரு ஆக்கம்..

Tragedy of civilians as international mechanism backs out

[TamilNet, Monday, 09 February 2009, 12:33 GMT]

Eight died and forty injured among fleeing civilians, reportedly caused by a human bomb according to news released by Sri Lankan military Monday. 15 military personnel also died and 24 injured in an 'IDP rescue centre' north of Visuvamadu, the military said. There were children among the dead as seen in the video released by the Sri Lankan military. The US Embassy in Colombo was quick to condemn the LTTE, based entirely on the Sri Lankan military version of the story.

What exactly happened is difficult to be asserted since no independent source is available in the war frontier to verify the claims or the sequence of the tragedy.

There are reports that nearly 4000 civilians were forcibly chased towards the side of the military by a unit of SLA which came near the side of the safety zone.

Everyone including the civilian side, international humanitarian agencies, international media and several countries, except only the Colombo government, have been demanding all these times for an International Rescue Mission and independent monitoring agencies.

However, no power in this earth is being able to materialise that.

"Such a tragedy of the already suffering civilians could have been averted easily by the presence of an effective International Rescue Mission," said a Colombo based NGO official.

For nearly three weeks now, when the Sri Lanka Army has been deliberately firing artillery at civilian targets and at hospitals, using cluster shells and killing even patients to the full knowledge of the ICRC, the international agencies didn't know 'from where the shells were coming'.

There were no comments or condemnation from the US Embassy either for the virtual genocide that was going on and is continuing to this hour.

Edited by nedukkalapoovan

புலிகள் ஏன் அறிக்கை விடாமல் இருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உலக நாடுகள் முழுவதும் பல எட்டப்பன்கள் இருக்கின்ரானுகள் இவனுகள் இருக்கும் வரைக்கும் நீதி நேர்மை என்பதை எதிர்ப்பார்க்க முடியாது

வன்னியில் எத்தனை பேரவலங்கள் நடந்தேறுகின்றன ஆனால் அதை கேட்க நாதியில்லை இந்த உலகத்தில்

என்ன உலகமடா.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஏன் அறிக்கை விடாமல் இருக்கின்றார்கள்?

புலிகள் இதுவரை விட்ட அறிக்கைகளை எவர் மதித்து.. சிறீலங்கா அரசை கண்டித்து.. தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தினர். எவரும் இல்லையே..??! இதை மறுத்தால் மட்டும் விட்ட அறிக்கையை வாபஸ்ஸா வாங்கப் போகின்றனர்.

புலிகளை இது தொடர்பில்.. அதைச் செய்.. இதைச் செய் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்தளவுக்கு புலிகளையும் வன்னி மக்களையும் இந்த உலகம் இழக்காரப்படுத்திவிட்டது..! :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இதுவரை விட்ட அறிக்கைகளை எவர் மதித்து.. சிறீலங்கா அரசை கண்டித்து.. தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தினர். எவரும் இல்லையே..??! இதை மறுத்தால் மட்டும் விட்ட அறிக்கையை வாபஸ்ஸா வாங்கப் போகின்றனர்.

புலிகளை இது தொடர்பில்.. அதைச் செய்.. இதைச் செய் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்தளவுக்கு புலிகளையும் வன்னி மக்களையும் இந்த உலகம் இழக்காரப்படுத்திவிட்டது..! :lol::)

பலஸ்தீனில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த்திய போது மற்ற முஸ்லீம் நாடுகளில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் அதை நிமிடத்திற்க்கு ஒரு முறை என்பதை விட அதையே ஒளிபரப்பி கொண்டிருந்தது காரணம் அதை உல க நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆனால் நமக்கு தொலைவில் உள்ள நம்ம தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களோ இவற்றுக்கு மாறாகவும் அங்கு எதுவுமே நடக்க வில்லை போலும் காட்டி கொள்கின்றது இப்படியிருக்க ஈழ தமிழர்களின் பிரச்சினை படும் வேதனை எப்படி தெரியப்போகின்றது அந்த ******........... :)

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டது இராணுவத்தினர். அதனை திசை திருப்ப அப்பாவி மக்களை கொன்று தற்கொலை தாக்குதலில் மக்களின் கொல்லப்பட்டதாக முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க மகிந்த அரசு பகீரதப்பிராயத்தனம் எடுத்துள்ளது.சில நாடுகள் கண்டித்தும் உள்ளன. கொத்தணி குண்டுகள் வன்னியில் போட்ட போது இந்நாடுகள் கண்டு கொள்ளாதது அதிசயத்திலும் அதியசயம் தான். இவர்களின் இரட்டை வேடங்களுக்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டது இராணுவத்தினர். அதனை திசை திருப்ப அப்பாவி மக்களை கொன்று தற்கொலை தாக்குதலில் மக்களின் கொல்லப்பட்டதாக முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க மகிந்த அரசு பகீரதப்பிராயத்தனம் எடுத்துள்ளது.சில நாடுகள் கண்டித்தும் உள்ளன. கொத்தணி குண்டுகள் வன்னியில் போட்ட போது இந்நாடுகள் கண்டு கொள்ளாதது அதிசயத்திலும் அதியசயம் தான். இவர்களின் இரட்டை வேடங்களுக்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

ஏற்கின்றார்களோ இல்லையோ... இது பற்றி உங்களின் வருத்தங்களையும் கண்டணங்களையும் அவர்களுக்கு அனுப்புங்கள். நாம் அமைதியாக எமக்குள் திட்டினால், அவர்களின் செயற்பாடு மாறப் போவதில்லை. ஆனால் சுட்டிக் காட்டும்போது தான் தம்மை மற்றவர்கள் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குப் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவனாக இருந்தும் தீவிரவாதிப் பட்டம் வாங்குவதை விட உண்மையான தீவிரவாதியாக மாறிவிடுவது சாலச் சிறந்தது.

புலிகளை இது தொடர்பில்.. அதைச் செய்.. இதைச் செய் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்தளவுக்கு புலிகளையும் வன்னி மக்களையும் இந்த உலகம் இழக்காரப்படுத்திவிட்டது..! :) :)

சரியாக சொன்னீர்.. இவர்களுக்கு எந்த அருகதை இருக்கிறது....

Calling on the LTTE to separate its forces from civilians under its control, the United Nations in Sri Lanka condemned today’s suicide attack on a registration centre for displaced people fleeing the conflict zone

இந்த பதிவு நிலையத்தில் எத்தனை சிவில் அதிகாரிகள் நின்றனர்... இந்த இடத்திற்கு செஞ்சிலுவைச் சங்கம் ஏன் அழைக்கப்படவில்லை....காட்டுக்க

Edited by Yaalpaanathan

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கின்றார்களோ இல்லையோ... இது பற்றி உங்களின் வருத்தங்களையும் கண்டணங்களையும் அவர்களுக்கு அனுப்புங்கள். நாம் அமைதியாக எமக்குள் திட்டினால், அவர்களின் செயற்பாடு மாறப் போவதில்லை. ஆனால் சுட்டிக் காட்டும்போது தான் தம்மை மற்றவர்கள் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குப் புரியும்.

Contact Us

U. S. Embassy

210 Galle Road,

Colombo 03,

Sri Lanka

Phone: +94(11)249-8500

Commercial Affairs:

Phone: +94 (11) 249-8500

E-mail: commercialcolombo@state.gov

Commercial Attaché: Kami Witmer

(do not contact with passport/visa issues)

Consular Affairs:

Phone: +94(11) 249-8500

E-mail: consularcolombo@state.gov

For more details: http://srilanka.usembassy.gov/visa_services.html

--------------------------------------------------------------------------------

The American Center

44, Galle Road,

Colombo 3,

Sri Lanka

Tel: +94(11)249-8100

Fax: +94(11)244-9070

E-mail: amcentersl@state.gov

Counselor for Press and Cultural Affairs: Jeffrey J. Anderson

Public Affairs:

Phone: +94 (11) 249-8100

Fax: +94 (11) 244-9070

Cultural Affairs:

Phone: +94 (11) 249-8163

Fax: +94 (11) 244-9070

Press Affairs:

Phone: +94 (11) 249-8157

Fax: +94 (11) 244-9070

American Information Resource Center

Tel: +94(11)249-8133

Fax: +94(11)249-8101

(do not contact with passport/visa issues)

யாழ்க் கள உறவுகளே ,

மேலே உள்ள முகவரிகளுக்கு நாம் காணும் காட்சிகளை டீவீடீ யில் பதிந்து தபால் மூலமாக எல்லோரும் அனுப்ப வேண்டும். இதனூடாகத்தான் அந்த விறைத்த தலையர்களுக்கு புரியவைக்கலாம். புரியாவிடினும் தமக்குள்ளாவது வெட்கப்படுவார்கள் தாமும் இந்தச் சிறீலங்காவின் ஊதுகழலாகிவிட்டோமே என்று. வெறுமனே ஈ மெயில் எழுதுவதைவிட இதுபோன்று , இந்த அறிக்கையச் சுட்டி, அதனையும் இணைத்து ஏனைய தூதுவராலயங்களுக்கும் அனுப்புகின்ற நடவடிக்கையை நாமனைவரும் உடனே செய்வோமாயின் பயனுடையதாயிருக்கும். எமக்குள் கண்டித்து எதாவது நடக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கின்றார்களோ இல்லையோ... இது பற்றி உங்களின் வருத்தங்களையும் கண்டணங்களையும் அவர்களுக்கு அனுப்புங்கள். நாம் அமைதியாக எமக்குள் திட்டினால், அவர்களின் செயற்பாடு மாறப் போவதில்லை. ஆனால் சுட்டிக் காட்டும்போது தான் தம்மை மற்றவர்கள் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குப் புரியும்.

நான் இது தொடர்பில் பிபிசிக்கு நீண்ட மடல் ஒன்று எழுதி அனுப்பினேன். அதை அவர்கள்.. மிக இலகுவாக புறக்கணித்துவிட்டார்கள். இதுதான் அவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகம் சா.. சன நாய் அகம்.

அதன் சாரத்தை டெயிலிமிரரிலும் போட்டேன். சிங்களவன்.. மருந்துக்கும் அனுமதிக்கமாட்டான் என்று தெரிந்துதான் போட்டேன். அப்படியே செய்தான். இதுதான் அவங்களின் சன நாய் அகம். இப்படிப்பட்ட உலகில் நாம் அணுங்கும் ஓசைகள்.. கேட்கப் போவதில்லை. பெரிய வெடியோசைகள் தான்.. இவர்களின் காதை செவிடாக்கி திறக்க வைக்கும்..!

எதற்கும் முயற்சியுங்கள் எனக்கு இவற்றில் இப்போ நம்பிக்கையில்லை..! :) :) :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் இது தொடர்பில் பிபிசிக்கு நீண்ட மடல் ஒன்று எழுதி அனுப்பினேன். அதை அவர்கள்.. மிக இலகுவாக புறக்கணித்துவிட்டார்கள். இதுதான் அவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகம் சா.. சன நாய் அகம்.

அதன் சாரத்தை டெயிலிமிரரிலும் போட்டேன். சிங்களவன்.. மருந்துக்கும் அனுமதிக்கமாட்டான் என்று தெரிந்துதான் போட்டேன். அப்படியே செய்தான். இதுதான் அவங்களின் சன நாய் அகம். இப்படிப்பட்ட உலகில் நாம் அணுங்கும் ஓசைகள்.. கேட்கப் போவதில்லை. பெரிய வெடியோசைகள் தான்.. இவர்களின் காதை செவிடாக்கி திறக்க வைக்கும்..!

எதற்கும் முயற்சியுங்கள் எனக்கு இவற்றில் இப்போ நம்பிக்கையில்லை..! :) :) :lol:

நெடுக்கு.. மின்னஞ்சல் எவ்வளவு தூரம் வேலை செய்கிறது என்பது தெரியவில்லை. நான் தொலை நகலைத்தான் பாவிக்கிறேன்..! காகிதத்தை அவ்வளவு எளிதில் எறிந்து விட மாட்டார்கள்..

அதேபோல ஒருவருக்கு எழுதும்போது அவரை சிக்கலில் மாட்டிவிடக்கூடிய இன்னொருவருக்கும் அதே சமயத்தில் பிரதி பண்ணுதல் அவசியம்..! உதாரணத்துக்கு கனேடிய பிரதமர் ஹார்ப்பருக்கு மடல் அனுப்பும்போது, எதிர்க்கட்சிகளுக்கும் பிரதி போடவேண்டும். இது உங்கள் மடலிலும் காண்பிக்கப் பட வேண்டும்.

அதுபோல இந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில், ஓ பிளேக்குக்கு பதில அனுப்பாமல், ஒபாமாவுக்கு அனுப்பிவிட்டு, ஓபிளேக்குக்கு பிரதி பண்ணிவிடலாம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு.. மின்னஞ்சல் எவ்வளவு தூரம் வேலை செய்கிறது என்பது தெரியவில்லை. நான் தொலை நகலைத்தான் பாவிக்கிறேன்..! காகிதத்தை அவ்வளவு எளிதில் எறிந்து விட மாட்டார்கள்..

அதேபோல ஒருவருக்கு எழுதும்போது அவரை சிக்கலில் மாட்டிவிடக்கூடிய இன்னொருவருக்கும் அதே சமயத்தில் பிரதி பண்ணுதல் அவசியம்..! உதாரணத்துக்கு கனேடிய பிரதமர் ஹார்ப்பருக்கு மடல் அனுப்பும்போது, எதிர்க்கட்சிகளுக்கும் பிரதி போடவேண்டும். இது உங்கள் மடலிலும் காண்பிக்கப் பட வேண்டும்.

அதுபோல இந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில், ஓ பிளேக்குக்கு பதில அனுப்பாமல், ஒபாமாவுக்கு அனுப்பிவிட்டு, ஓபிளேக்குக்கு பிரதி பண்ணிவிடலாம்..!

நீங்கள் சொல்வதே சரி டங்கு அண்ணை, அது பாதுகாப்பானதும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதே சரி டங்கு அண்ணை, அது பாதுகாப்பானதும் கூட.

இன்னுமொரு விடயம் நம்பகத்தன்மை.. நாங்கள் சிங்களவனுக்குப் பயந்து பயந்து எங்கள் பற்றிய தரவுகளை மறைத்தவாறே மடல்களை அனுப்புகிறோம். கையெழுத்தும் போடமுடியாது மின்னஞ்சலில். அதற்குரிய மதிப்பு என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அதை அவ‌ர்க‌ள் சுல‌ப‌மாக‌த் தூக்கி எறிந்துவிட‌ முடியும். ஆனால் சிங்க‌ள‌வ‌னைப் பார்த்தீர்க‌ள் என்றால் அவ‌ன் தைரிய‌மாக‌ த‌ன் பெய‌ருட‌ன்தான் எல்லாமே எழுதுகிறான். அத‌னால் வெற்றிக்குரிய‌ சாத்திய‌க்கூறும் அவ‌னுக்கு அதிக‌ம்.

நான் இப்போதெல்லாம் என்னுடைய முழுத் தகவலோடுதான் தொலைநகலில் முக்கியமான மடல்களை அனுப்புகிறேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டும் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால் அங்கெல்லாம் accountability இல்லை. ஆகவே கையெழுத்துப் போட்டும் ஒரு பிரயோசனமும் இல்லை.

சில‌ உற‌வுக‌ளுக்கு இவ‌ற்றைச் செய்ய‌ முடியாத நிலை இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் மின்ன‌ஞ்ச‌லில் செய்வ‌துதான் பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் 28 மக்களைச் சாக்காட்ட புலிகளுக்கு மனித வெடிகுண்டு அவசியமாவென சிந்திக்கக் கூடத் தெரியாத ஊடகங்களா? அல்லது தெரிந்தே செய்கிறார்களா?

மகிந்த இப்போ ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பான். அதாவது என்ன தான் தமிழர்கள் இனப்படுகொலை என்று கத்தினாலும் பலூனில் ஊசி குத்துவது போல் இப்படி ஒரு சின்ன பழியை புலிகள் மீது போட்டு விட்டால் தான் நியாயமானவன் எனக் காட்டமுடியும்.

நல்லாத்தான் படித்துவைத்திருக்கிறான் உலகத்தை....

இந்த உலகம் நீதி தரும் என்று எதிர்பார்க்கும் நாங்கள் தான் ஏமாளிகள்.

ஒரு கொடிய அரசின் பரப்புரையில் உலகம் எடுபடுவதிலோ.... அவர்கள் பலம் ஓங்கிய இடத்துக்கே ஒத்தடம் கொடுப்பார்கள் என்ற உண்மையையோ நாம் மறக்ககூடாது எங்கள் ஒற்றுமையும் விடாமுயற்சிகளும்.. தொடர் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் கண்டனகடிதங்கள் கோரிக்கைகள் குறையாமல் தொடரவேண்டும்.அதிகரிக்கவேண்ட

இந்த வயசு போன நேர்த்தில இஞ்ச கிடந்து படுற கஸ்டம் எங்களுக்கெல்லோ தெரியும், உந்த ஆமிக்காரங்கள் தான் வந்து எல்லாரும் வெளியால வாங்கோ எண்டு கூப்பிட்டு பேசிக்கொண்டு நிக்கேக்க குண்டெறிஞ்சவங்கள். அத எங்கட பிள்ளையளிண்ட தலையில போடுறாங்கள். நாங்கள் இஞ்ச கொண்டுவரப்படேக்க ஒட்டுத்துணியோட மட்டுமே வந்தனாங்கள். அந்த துணியையும் 108 தடவை கிண்டி கிளறி அதுக்க பத்து குண்டு கண்டுபிடிப்பானை வச்சு, ஊசி கிடந்து கத்தினாக்கூட எல்லாம் கவுட்டுக்கொட்டி பார்த்துதான் விட்டவங்கள் இந்த முகாமுக்கை. அதுக்குள்ள குண்டு கொண்டுவந்து எப்படித்தம்பி வெடிக்க வைக்கிறது. அங்கு நிவாரணப் பனிக்காக்ச் சென்றுவந்த ஒருவரிடம் ஒரு வயோதிபர் தெரிவித்த கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட மக்கள் அனைவரும் குண்டுத்தாக்குதலில் அல்லாமல் துப்பாகிப் பிரயோகத்திலேயே கொல்லப்பட்டதாக அறிய வருகிறது. சிங்கள ராணுவ இணையத்தளத்தில் காட்டப்பட்ட ஒளிப்படத் தொகுப்பில் கொல்லப்பட்டவர்களின் உடலில் துப்பாகிச் சன்னங்கல் பாய்ந்த அடையாளம் இருப்பதாகவும், அப்புகைப்படங்களில் ராணுவத்தினரின் எந்த உடல்களோ அல்லது காயப்பட்ட ரானுவத்தினரோ இல்லாமல் வெறும் பொதுமக்களே காணப்படுவது இந்த இரு வேறு தாக்குதல் சம்பவங்களும் வெவ்வேறு நேரத்தில் நடத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இத்தகவல்களை தமிழ்நெட் இணையம் வழங்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் தமிழரை அழிக்க வேண்டும் அதுதான் அவர்களுடைய குறிக்கோள் தாழ்ந்தாலும் ஏசும் உயர்ந்தாலும் ஏசும் உலகமையா இனியும் அவர்களின் ஆதரவை பார்த்தால் எங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள்

நல்லவனாக இருந்தும் தீவிரவாதிப் பட்டம் வாங்குவதை விட உண்மையான தீவிரவாதியாக மாறிவிடுவது சாலச் சிறந்தது.

அதுதான் இவங்களுக்கு சரி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொறுப்பான அரசு மருத்துவமனையை இராணுவ இலக்கு என்று வெளிப்படையாய் சொல்லிப்போட்டு குண்டு வீசித்தாக்கினால் ஏனென்று கேட்க வக்கில்லாத சர்வதேசம் அவர்களால் சர்வதேநத்தால்)பயங்கரவாதிகளா

நன்றாக நடிக்கிறார்கள்.. உலகமும் நடிக்கிறது.. இனி ஒருவனையும் நம்பி பிரயோசனம் இல்லை..

எப்படியும் மக்களை அழிப்பது என்றே தீர்மானித்துள்ளார்கள்..

உலகம் எங்கு என்று இலங்கைக்கு முட்டுகொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளது..

பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கூட்டமாக அழித்துக்கொண்டு இருக்கும் கொலையரசை இதுவரை கண்டிக்காமல் உதவிகள் செய்து ஆயுதங்களை கொடுத்து இனப்படுகொலைகளை ஆதரிக்கும் உலகம் எமக்கு நீதி வழங்கப்போவதில்லை..

எதற்கு வெளிக்கிட்டார்களோ அதனையே செய்வதே ஒரு வழி....

மக்களை எப்போதும் பாதுகாக்கப்போவதில்லை.. பூரண விடுதலையே காலத்தின் தீர்ப்பு.. உலகத்தின் மீது இருந்க சிறிது நம்பிக்கையும் போய்விட்டது.. பொய் வேசங்கள்.. கலைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை வெளிக்கொணர ஊடக சுதந்திரத்திற்காகவும் நாம் தான் குரல் எழுப்ப வேண்டிய சூழ் நிலையில் உள்ளோம்,போர் நடை பெறும் பகுதிகளில் ஊடகவியலாளர் செல்ல முடியாத நிலை நிலவுகின்றது அதற்குத்தடையை சிங்களம் ஏற்படுத்தியுள்ளது,உலக நாடுகளிற்கு போரின் உண்மைத்தன்மை ஓரளவு தெரியும் . அமெரிக்கப்படைகள் வியட்னாமில் ஏற்படுத்திய அழிவுகளை பல அமெரிக்கப்பத்திரிகைகளே வெளிக்கொணர்ந்தன, கொரிய யுத்தத்தில் உயிருக்கு அஞ்சிய சிறுமியின் புகைப்படம் உலகின் மனசாட்சியைத்தட்டி எழுப்பியது மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அது இன்னமும் உள்ளது.போரின் கோரத்தை அப்படம் சுட்டிக்காட்டுகிறது என்கின்ற உலகுத்துக்கு அதை விட பல மடங்கு போரின் கோரம் எமது மண்ணில் தாண்டவமாடுவதை காட்டுவதற்கு ஒரு சுதந்திர ஊடகத்தின் துணை அவசியமாகிறது.கொளும்பில் தடுத்துவைத்திருக்கும் சர்வதேசப்பத்திரிகையாளர்களை வன்னிக்கு செல்ல அனுமதிக்க சிங்கள அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க சர்வதேசத்தில் தமிழரால் ஒருங்க்கமைக்கப்படும் போராட்டங்களில் ஊடக சுதந்திரம் வலியுறுத்தப்பட வேண்டும்.

பொதுவாகவே பத்திரிகைத்துறையின் உயரிய பரிசான "புலிட்டர்" பரிசு பல பத்திரிகையாளரின் வாழ்வியல் இலட்சியமாகக் கொண்டிருப்பர் அதற்காகவே உயிரையே கொடுக்கவும் தயாராக இருப்பர்,அவர்களைப்போன்றவர்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.