Jump to content

நானென்னடி பிசாசா?

Recommended Posts

பதியப்பட்டது

நானென்னடி பிசாசா?

என்ர மூச்சுக் காத்தை உடம்பை விட்டு வெளியாலயும், வெளிக்காத்தை உடம்புக்கு உள்ளயும் எடுக்க முடியாம, ஒருவழியா திணறிக் குளறி? அட சத்தியமா நான் குளறினன் சத்தம் வரவே இல்லை.

ஊப்ஸ்...... ஒருவேளை நான் செத்துப் போட்டனோ? பாழ்படுவார் அடிச்ச செல்லில காயந்தானே பட்டன். அதுவும் இந்தக் காலில கொஞ்சம் இரத்தம் ஓடுது. இதுக்குப் போய் நான் செத்துப் போவனே?..

ஆ…… ஐயோ இதென்ன என்ர கால் முழங்காலுக்குக் கீழ அரைச்ச இறைச்சிமாதிரிக் கிடக்கு

“ஐயோ என்ர கால் போட்டுது.. ஐயோ என்ர கால் போட்டுது. ஆராவது என்னைத் தூக்குங்கோடா. அடுத்த செல்லுகளை கட்டையில போவாங்கள் குத்த முன்ன என்னைத் தூக்கிக் கொண்டு போங்கோடா.. எனக்கும் பெண்டு பிள்ளைகள் இருக்கடா….”

“அடேய் அடேய் மொல்ல மொல்ல ஐயோ நோகுதடா.. ஏதாவது சீலையைப் போட்டு கட்டுங்கோடா ரெத்தம் ஓடாம துடையிலயும் கட்டுங்கோடா இல்லையெண்டா நான் ரெத்தம் ஓடியே செத்துப்போடுவன்ரா… அட குறுக்காலபோவான்கள் மனுசனுக்கு உடுக்கத்துணிகூட இல்லாமச் சாகடிக்கிறாங்கள் இந்தாடா என்ர சாரத்தைப் பிச்சுக் கட்டுப் போடுங்கோடா.. அட கோவணமும் வேண்டாம் முதல்ல என்ர உசிரக் காப்பாத்துங்கோடா என்ர புள்ளகுட்டியள் எல்லாம் கண்ணுக்க வந்து நிக்குதுகளடா.. ஐயோ நானில்லாட்டா அதுகள் என்ன செய்யுங்கள்.”

“அட அங்க மேலால பேய்கள் வந்திட்டாங்கள் எங்கயாச்சும் கிடங்கு கிடந்தா தூக்கி விடுங்கடா…. அடேய் அடேய் என்னை விட்டுட்டு எங்கயடா ஓடுறீங்க? கீபீர் அடிச்சவங்களைத் தூக்க முன்னம் என்னை ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போங்கோடா..”

“என்னடா ஆசுப்பத்திரிக்கும் செல் அடிச்சுப் போட்டாங்களோ?.... ஐயோ உதெல்லாம் அழிக்க ஆரடா உவங்களுக்குக் காசு குடுக்கிறாங்கள்? கட்டையில போறவங்கள் நல்லா இருப்பாங்களா அவங்களெல்லாம்?

ஐயோ,… ஐயோ எனக்கு கண்ணெல்லாம் இருட்டுதடா இருட்டுத…. மூச்… திணறுது..”

“என்ன ஏன் இப்பிடிக் கத்திக் கொண்டு கிடக்கிறியள்?”

ஏன்ர வீட்டுக்காரி ஏளனமாப் பாத்து கேட்டுக் கொண்டிருந்தா. எனக்கு உடம்பெல்லாம் நடுங்க, வேத்து வழிஞ்சு கொண்டிருக்க, பயத்தோட சுத்தவரப் பாத்தன். இப்ப என்ர மனுசிக்குக் கொஞ்சம் என்னைப் பாத்து இரக்கம் வந்திட்டுது போல கிட்ட வந்து என்னப்பா ஏதாவது பேய்க்கனவு கண்டனீங்களோ? எண்டா…

எனக்கு நடுக்கம் குறையேல்லை… சும்மா சொல்லக் கூடாது என்ர மனுசிக்கு என்னில நல்ல பாசம் பாருங்கோ.. ஒரு பிளேன் ரீ போட்டுக் கொண்டு வந்து தந்து இதைக் குடியுங்க எல்லாம் சரியாயிடும் எண்டவா “இதோட சிலோன் ரீ முடிஞ்சுது. இனி வாங்கி வந்தாத்தான் தேத்தண்ணி இல்லையெண்டா நீர்தான் காய்வீர் எங்களுக்குப் பிரெஞ்சு வனிலா குடிப்பம். உமக்குத்தான் கஸ்டம்” எண்டு சொல்லிப் போட்டுப் போட்டா… விழிபிதுங்கத் தலையாட்டிப் போட்டு கனவில கத்திக் களைச்ச வாய்க்கு பிளேன் ரீயை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினன்…. “சீ. த்தூ…தூ ஏண்டி இவளே…. ரெத்தத்தைக் குடிக்கத் தார.. நானென்னடி பிசாசா?

என்ர வீட்டுக்காரிக்கு என்ர வாயில இருந்து கிடைச்ச மருவாதையையையும், கோபத்தையும் கேட்டு வினோதமா என்னைப் பாத்தா… பிறகு நைசா நழுவினவா ரெலிபோனை எடுத்துக் கொண்டு மீண்டும் என்னை விசித்திரமாப் பாத்தா.

Posted

ஐயோ ஆதிவாசி பார்த்து உங்க மனுசி வேற எங்கையாவது உங்களை அனுப்பி வக்க போறார்.. நீங்கள் நல்லதானே இருக்குறிங்கள்.. என்ன ஆதிவாசி அது சிலோன் டீ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானென்னடி பிசாசா?

என்ர மூச்சுக் காத்தை உடம்பை விட்டு வெளியாலயும், வெளிக்காத்தை உடம்புக்கு உள்ளயும் எடுக்க முடியாம, ஒருவழியா திணறிக் குளறி? அட சத்தியமா நான் குளறினன் சத்தம் வரவே இல்லை.

ஊப்ஸ்...... ஒருவேளை நான் செத்துப் போட்டனோ? பாழ்படுவார் அடிச்ச செல்லில காயந்தானே பட்டன். அதுவும் இந்தக் காலில கொஞ்சம் இரத்தம் ஓடுது. இதுக்குப் போய் நான் செத்துப் போவனே?..

ஆ…… ஐயோ இதென்ன என்ர கால் முழங்காலுக்குக் கீழ அரைச்ச இறைச்சிமாதிரிக் கிடக்கு

“ஐயோ என்ர கால் போட்டுது.. ஐயோ என்ர கால் போட்டுது. ஆராவது என்னைத் தூக்குங்கோடா. அடுத்த செல்லுகளை கட்டையில போவாங்கள் குத்த முன்ன என்னைத் தூக்கிக் கொண்டு போங்கோடா.. எனக்கும் பெண்டு பிள்ளைகள் இருக்கடா….”

“அடேய் அடேய் மொல்ல மொல்ல ஐயோ நோகுதடா.. ஏதாவது சீலையைப் போட்டு கட்டுங்கோடா ரெத்தம் ஓடாம துடையிலயும் கட்டுங்கோடா இல்லையெண்டா நான் ரெத்தம் ஓடியே செத்துப்போடுவன்ரா… அட குறுக்காலபோவான்கள் மனுசனுக்கு உடுக்கத்துணிகூட இல்லாமச் சாகடிக்கிறாங்கள் இந்தாடா என்ர சாரத்தைப் பிச்சுக் கட்டுப் போடுங்கோடா.. அட கோவணமும் வேண்டாம் முதல்ல என்ர உசிரக் காப்பாத்துங்கோடா என்ர புள்ளகுட்டியள் எல்லாம் கண்ணுக்க வந்து நிக்குதுகளடா.. ஐயோ நானில்லாட்டா அதுகள் என்ன செய்யுங்கள்.”

“அட அங்க மேலால பேய்கள் வந்திட்டாங்கள் எங்கயாச்சும் கிடங்கு கிடந்தா தூக்கி விடுங்கடா…. அடேய் அடேய் என்னை விட்டுட்டு எங்கயடா ஓடுறீங்க? கீபீர் அடிச்சவங்களைத் தூக்க முன்னம் என்னை ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போங்கோடா..”

“என்னடா ஆசுப்பத்திரிக்கும் செல் அடிச்சுப் போட்டாங்களோ?.... ஐயோ உதெல்லாம் அழிக்க ஆரடா உவங்களுக்குக் காசு குடுக்கிறாங்கள்? கட்டையில போறவங்கள் நல்லா இருப்பாங்களா அவங்களெல்லாம்?

ஐயோ,… ஐயோ எனக்கு கண்ணெல்லாம் இருட்டுதடா இருட்டுத…. மூச்… திணறுது..”

-----

-----

ஆதி வாசி ,

நீங்கள் பிசாசு அல்ல , சாதாரண தமிழ் மகன் .

அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்களே ..... இவைகள் .

இதற்கு பிளேன் ரீ சரிவராது .

சிலவேளை , பிளேன் அடி தான் சரிவரும்.

Posted

ஐயோ ஆதிவாசி பார்த்து உங்க மனுசி வேற எங்கையாவது உங்களை அனுப்பி வக்க போறார்.. நீங்கள் நல்லதானே இருக்குறிங்கள்.. என்ன ஆதிவாசி அது சிலோன் டீ

உதைத் தெரியாதோ சுஜி உதுதான் எங்கட மகிந்தருந்த.......

ஆதி வாசி ,

நீங்கள் பிசாசு அல்ல , சாதாரண தமிழ் மகன் .

அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்களே ..... இவைகள் .

இதற்கு பிளேன் ரீ சரிவராது .

சிலவேளை , பிளேன் அடி தான் சரிவரும்.

உன்னான தமிழ்ச்சிறியா! ஆதிக்கு கனவில பட்ட அவஸ்தை இருக்கே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதியார் .............வல்ல சீவன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதிக்கு இலங்கை பிளேன் ரீ குடிக்காமல் இருக்கேலாதோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதி! சிலோன் ரீ குடித்து சிலோனுக்கு விட்டமீன் ஏத்துறதவிட மல்லித் தண்ணி அல்லது மாந்த் (manth) க்கு மாறுவதுதானே!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பக்கத்துல இருந்தால் ஏதாவது அரைச்சாவது கொடுக்கலாம் இந்த தேநீருக்கு பதிலாக குடிச்சிற்று கனவே வராமல் படுக்க :blink::D

Posted

ஆண்டாவா எல்லாருக்கும் இப்படி கனவு வர வேனும்.

ஏன் உங்களுக்கு டீ குடிக்க வேணுமா சஜீவன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதிவாசி கதை நல்லாயிருக்குது.

கனவுதானே வாழ்க்கை

"நினைவினாற் றான் நல்காதவரை கனவினால்

காண்டலினால்தான் உண்டென் உயிர்"

-திருக்குறள்-

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.