Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?

Featured Replies

மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம் போல் தோன்றுகிறது :o

தலைவன் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் :)

ஒன்றை செய்துவிட்டு துன்பியல் என்று நெழிந்தோம்.

அதை இல்லை என்றே மறுத்திருக்கலாம்.

அதையே செய்யவில்லை.

தொடர்ந்துமா?

தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ள

சிலர் தூபமிடுகிறாகள் முனிவர்ஜீ.

இவர்கள் நாளையை பற்றி நினைப்பதேயில்லை.

எமது கருத்துகளும் தலைமைகளுக்கு முன்வைக்கப்பட்டிருந்தால்

அவர்கள் கொஞ்சமாவது யோசித்திருப்பார்கள்?

எல்லாம் அங்கு நடக்கும். அவங்களுக்கு தெரியும் என்று மேளம் தட்டிப் போட்டு

கையிலிருந்த கயிறை தூக்கி எறிஞ்சுட்டு

தப்புறதுக்கு புல்லாவது கிடைக்காதா என அலையிற பரிதாபம் இன்று.

இதை இப்ப சொல்லாதவங்க

இனி சொன்னா என்ன

சொல்லாட்டித்தான் என்ன?

எல்லாம் மண் விழுந்து போகட்டும்.

சண்ணும் - கலைஞர் டீவியும்தானே தமிழீழம் பெற்று தரப் போகுது?

ஏன் இப்படி சீப்பாக வேணுமோ?

வேதனையாக இருக்கிறது?

  • Replies 146
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களுடன் முட்டி மோதுவதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருந்தோம்[வசம்பு ,நான் ,தலைவன் ,நிலாமதி இன்னும் சிலர்] ஆனால் நம்மவர்கள் கேட்பதாயில்லை எல்லா ஊடகங்களும் நமக்கு சார்ப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பது சுத்தபைத்தியகாரத்தனம்

இன்று சண்டீவி தயாரிக்கும் படத்தை புறக்கணிக்கவேண்டும் ஏன் இப்படி அவர்கள் என்னவோ நமக்காகவே படத்தை எடுத்தது போல் புறக்கணிங்கள் என்பது நீங்கள் விரும்பினால் பாருங்கள் இல்லாவிட்டால் ஒதுங்குங்கள் அவர்கள் யாரையும் கட்டாயபடுத்தவில்லை நம்ம ஈழமக்களுக்கு தெரியும் பார்ப்பதா வேண்டாமா என்று படம் ஓடாவிட்டால் நாளை அந்த படத்தை வாங்கியோர் நினைத்து கொள்வார் இப்படியான [இந்த நிறுவனம் தயாரித்த] படங்களை திரையிடக்கூடாது என்று .......இதை சொல்லி தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

இப்படியான செய்திகள் அந்த ஊடக நிறுவன அமைப்புக்கு சென்றையும் போது அதன் பக்க விளைவுகள் இன்னும் அதிகமாகும்

முதலில் இலங்கை பொருட்களை வாங்குவதை மறுங்கள். ஒரு திரைப்படத்தை ஒரு நிறுவனம் தயாரத்தாலும் அந்த திரைப்படம் ஆயிரக்கணக்கான தென்னிந்திய சினிமா துறை ஊளியர்களை பாதிக்கும். நமக்காக தெருவில் இறங்கிய பல தொழிலாளர்களை இது பாதிக்கும். சன் நிறுவனத்துடன் கோபித்து என்ன பலன்? உலக ஊடகங்கள் பெரும்பாலனவை நம் விடயத்தல் அரச செய்திகளை அப்படியே ஒப்பிக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில் சன் பரவாயில்லை ஒரு கொஞ்சமாவது காட்டுது. அது மட்டுமல்லாது நாம் இப்படியே எல்லாரையும் பறக்கணித்து எதிரிகளை சம்பாதிப்பதை விட செய்ய வேண்டியதை வடிவாக செய்தால் போதும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில தியேட்டரில பார்த்ததோட சரி இங்க இதுவரைக்கும் தியேட்டர் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கினதில்ல :)

  • தொடங்கியவர்

மேற்குலக நாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறை பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்தை அனைவரும் கொண்டுள்ளோம்.

ஆனால் சன் நிறுவனம் போன்று இரண்டகம் செய்யும் தமிழ் ஊடகங்களுக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமா? இல்லையா?

சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதும், சன் நிறுவனத்தைப் புறக்கணிப்பதும் ஒன்று அன்று. இரண்டிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

சன் நிறுவனத்துடனோ, கலைஞர், திமுக போன்றவர்களுடனோ எம்முடைய கோபம் நிரந்தரமானது அன்று. நாளையே நாம் அவர்களுடன் கொஞ்சிக் குலாவும் நேரம் வரலாம்.

ஆனால் அவர்கள் இன்றைய நிலைப்பாடு எமக்கு பெரும் கோபத்தையும், வேதனையையும் தருகின்றது என்பதை ஆணித்தரமாக தமிழ்நாட்டிற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம்.

எங்களுடைய எதிர்ப்பை சொல்லியே ஆக வேண்டும்.

சன் நிறுவனத்தின் திரைப்படம் ஒன்றை புறக்கணிப்பது ஒரு அடையாள எதிர்ப்பு.

ஒரு சிறிய நட்டம் ஏற்பட்டாலும், முதலாளிகள் அதை விரும்பமாட்டார்கள். உயிர்ப்பலிகளோடு பெரும் மோதல்கள் நடந்த பின்பும் லாப நோக்கில் மாறன் குடும்பமும் கலைஞர் குடும்பமும் இணைந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவர்கள் சோவோ, சுப்ரமண்யசாமியோ அல்ல.

வெறும் முதலாளிகள்.

நாம் ஒரே ஒரு முறை அவர்களுக்கு ஒரு இழப்பை ஏற்படுத்தினாற் போதும். தமது நிலைப்பாட்டை மாற்றுவது பற்றி நிச்சயமாகச் சிந்திப்பார்கள்.

சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்பது பற்றிப் பேசிய போதும், தமிழ் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று சிலர் சொன்னார்கள். அதே கதையை சன் நிறுவனப் புறக்கணிப்புக்கும் சொல்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்.

சிறிலங்காப் பொருட்களை புறக்கணித்து, தமிழ்நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், அங்கே உள்ள முதலாளிகளை எங்களின் செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டு வருவது பற்றித்தான் நான் சிந்திக்கின்றேன்.

தமிழ்நாட்டு அரசியலை முதலாளிகள் தீர்மானிக்கின்றார்கள். அந்த முதலாளிகளுக்கு ஒரு சந்தையை நாம் திறந்து கொடுத்து, அதன் மூலம் நாம் பேரம் பேசக் கூடிய நிலைக்கு வர வேண்டும்.

சன் நிறுவனத்திற்கும் ஒரு சந்தையை திறந்து கொடுத்து விட்டோம். ஆனால் எம்மால் அவர்கள் மீது எந்த ஒரு செல்வாக்கையும் செலுத்த முடியவில்லை. அவர்கள் விரும்பிய போக்கில் எம்மை வழி நடத்த இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை மாற்ற வேண்டும். சன் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து அவர்களின் இன்றைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

வியாபாரத்தில் "நட்டம் வரும்" என்று மிரட்டுவதன் மூலம் மட்டுமே முதலாளிகளை பணிய வைக்க முடியும்.

ஆனால், சன் நிறுவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு உங்களுக்கு ஏதாவது சிறந்த வழிகள் தெரிந்தால், அதையும் சொல்லுங்கள். அது பற்றியும் பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில தியேட்டரில பார்த்ததோட சரி இங்க இதுவரைக்கும் தியேட்டர் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கினதில்ல :o

பனிக்கு கொஞ்சம் சூடாக இருக்கட்டும் என்று பல வருடங்களுக்கு முன் ஒரே ஒருமுறை மட்டும் தியேட்டருக்குள் ஒதுங்கினேன் .

அதுவும் என் கனவுக்கன்னி நடித்த படம் அது . :)

இப்படியான புறக்கணிப்பை தாயகத்திலிருந்து

அதன் முக்கியஸ்தர்கள் அறிவிக்கட்டும்.

நிச்சயம் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.

நான் வாழும் நாட்டில ஒரு கடைக்காரரிடம்

சிறீலங்காவிலிருந்து வரும் பொருட்களை விக்கிறதை நிறுத்துங்களேன் அண்ணன் என்றேன்.

என்னிடம் ஏன் அண்ண சொல்றியள்

கொண்டு வந்து போடுறவையிட்ட சொல்லுங்களேன் .

அவங்க ஆக்கள்தானே கொண்டு வந்து போடுறதெண்டு

நக்கலா சிரிக்கிறார்.

மூஞ்சு பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டு.

முன்ன எல்லாக் கடைகளையும் எடுக்க கொஞ்சம் பேர் திரிஞ்சினம் அண்ண.

பிறகு திறந்த கடைகளையும் வித்து போட்டினம்.

எங்கட கடைகளாவது இருக்கிறதால சாமானும் வாங்கிறியள்

நிதியும் வாங்குறியள்.

இப்ப எங்களையும் பிச்சை எடுக்க வச்சிட்டு

ஆருக்கிட்டு நிதி வாங்கிறது என்றார்.

பேச முடியவில்லை.

முன்ன எல்லாரும் தியைட்டருக்கு போனவை.

இப்ப DVDயில என்ன Home Cinemaவில அந்த மாதிரி

அகண்ட திரையில சனம் பாக்குது.

அன்றைக்கும் இன்றைக்கும்

எத்தனை தியெட்டரில படம் ஓடுது?

கொஞ்சம் பேர் விசிலடிக்க

பெட்ட பெடியன்கள் பார்க்க

ரொமாண்ஸ் நக்கல்விட சில இளசுகளும்

பல பெரிசுகளும் தியைட்டருக்கு போகுது.

அதோட சரி.

விக்காத பொருளுக்கு தடை விதிச்சு விளம்பரம் தேடிக் குடுக்கிற மாதிரி

்இது இன்னொரு கூத்து.

படமே ஓடுறதில்லை.

அதை தடை செய்றதா பீத்தி

நமக்கு இருக்கிற ஆதரவையும் கெடுக்கிற சாணக்கியம் :)

ஆனால் சன் நிறுவனம் போன்று இரண்டகம் செய்யும் தமிழ் ஊடகங்களுக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமா? இல்லையா?

சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதும், சன் நிறுவனத்தைப் புறக்கணிப்பதும் ஒன்று அன்று. இரண்டிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

சன் நிறுவனத்துடனோ, கலைஞர், திமுக போன்றவர்களுடனோ எம்முடைய கோபம் நிரந்தரமானது அன்று. நாளையே நாம் அவர்களுடன் கொஞ்சிக் குலாவும் நேரம் வரலாம்.

ஆனால் அவர்கள் இன்றைய நிலைப்பாடு எமக்கு பெரும் கோபத்தையும், வேதனையையும் தருகின்றது என்பதை ஆணித்தரமாக தமிழ்நாட்டிற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம்.

எங்களுடைய எதிர்ப்பை சொல்லியே ஆக வேண்டும்.

சன் நிறுவனத்தின் திரைப்படம் ஒன்றை புறக்கணிப்பது ஒரு அடையாள எதிர்ப்பு.

ஒரு சிறிய நட்டம் ஏற்பட்டாலும், முதலாளிகள் அதை விரும்பமாட்டார்கள். உயிர்ப்பலிகளோடு பெரும் மோதல்கள் நடந்த பின்பும் லாப நோக்கில் மாறன் குடும்பமும் கலைஞர் குடும்பமும் இணைந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆனால், சன் நிறுவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு உங்களுக்கு ஏதாவது சிறந்த வழிகள் தெரிந்தால், அதையும் சொல்லுங்கள். அது பற்றியும் பேசலாம்.

வன்னியல சிறீலங்கா இராணுவம்தான் மோதுவதாக தகவல்.

இப்பதான் தெரியுது சண்காரர் அங்க களத்தில நிக்கினம் எண்டு :lol:

எதிரியென்றால் எதிரி . நண்பனென்றால் நண்பன்.

பிறகென்ன கொஞ்சல் குலவல்.

சிறந்த வழி

நீங்க இப்ப பேசாமல் இருந்தாலே போதும். :o

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணா நம் மக்களுக்கு தெரியாததா என்ன நம்மளோடு இருந்த நோர்வே காரனே நமக்கு குழியடிக்கும் போது[எரிக்சொகெய்யும்,ஜப்பான் காரன் அகாசி ஆகியோர் ] ஏன் தற்பொழுது இந்த சண் டீவி,கலி[லை]ஞர் போன்ற தொலைகாட்சிகள் இப்படி செய்கின்ரன இவை அனைத்தும் நம் எதிகள் யார் நண்பர்கள் யார் என்பதை பறை சாற்றுகின்றன இப்போதே தெரிகிறதே ஆதலால் நாம் எல்லோரும் எடுக்கும் முடிவுகள் சரிதான் அது அந்த மக்களுக்கும் தெரியும் அல்லாவா இதை பெரிதுபடுத்தி எரியும் அடுப்பில் எண்ணெய்யை ஊத்தல் ஆகாது

அவர்களின் குடும்ப ஆட்சி இருக்கும் போது அனைத்தையும் தாங்கித்தான் ஆகவேண்டும் காலம் ஒரு நாள் மாறும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வார்கள் அதை ஈழ தமிழர்கள் மன்னிப்பார்களா அல்லது மறந்து ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்கு தெரியாத ஒன்று :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் நம்பும்படி

சொல்லும் திறனிருந்தால்

சொல்லிலே உண்மை இல்லை

உள்ளதை உள்ளபடி

சொல்லும் மனிதனிடம்

உணர்ந்திடும் திறமையில்லை

உண்மையும் நம்பவைக்கும்

திறனும் அமைந்திருந்தால்

உலகம் அதை ஏற்பதில்லை

அது இருந்தால் இது இல்லை

இது இருந்தால் அது இல்லை

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்

அவனுக்கிங்கே இடமில்லை

Edited by pepsi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்படம் எல்லாம் ஒரு ஜுஜுபி! அடுத்துவருவம் (உவங்கள் தயாரிக்கிற, மற்ரும் பெரியவர் நடிக்கிற) படத்தை வேணுமெண்டால் ஒட்டு மொத்தமா (பாட்டில்லிருந்து படம்வரை) தவிருங்கோ..அடிச்சாலும் பொக்கெற்ரோட சேர்ந்து தோலும் கிளியிறமாதிரி அடிக்கோணும், சும்மா கீறிப்போட்டு விடக்கூடாது.

சிலபேற்ற மாற்றுக்கருத்துகளை நான் ஏற்க மறுக்கிறேன்...

தமிழ் நாட்டில் ஒரு மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஊடகம், உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு நீதிகிடைக்காவிடினும் அதை சுட்டிக்காட்டவேண்டும், தலையங்கமாக்கவேண்டும்.

அரசியலுக்காக இயங்கும் ஊடகங்களுக்கும் நேர்மையான ஊடகங்களுக்கும்மிடையில் வித்தியாசம் காண உலகத்தமிழ் மக்களுக்கு பகுத்தறிவு உண்டு. தயவுசெய்து தமிழனின் பகுத்தறிவை கேலி செய்யாதீர்.

எங்களின் ஆதரவும் வர்த்தகமும் உனக்கு வேணுமெண்டால், எங்கள் அபிப்பிராயத்தை நீ கேட்டே ஆகவேண்டும்.

நடந்துகொண்டிருப்பது எமதின அழிவு...இத்தருணத்தில் உன் கடமை செய்யப்படாவிட்டால் எப்போ?

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி திரைப்படத்தை புறக்கணித்தால் போல்த்தான் இருக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரை இன்னும் விட்டு வைப்பதாக இருக்கின்றீர்கள். யப்பானைப் புறக்கணிப்போம் என்றீர்கள். பலர் யப்பான் காரை ஓடவே பயப்படுகின்றார்கள். அதுவும் 90 ஆண்டு தயாரித்த கார்களைக் கூட..

எதிரியானவன் தன்னுடைய முழுப்பலத்தையும் பாவித்து தமிழ்மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் போருக்காக அவன் எதையும் விட்டு வைத்திருக்கவில்லை. அப்படியான சூழ்நிலையில் இப்படியான சின்னச் சின்ன வேலைகளுக்கு நேரத்தை மினக்கெடுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.

ஏகனைப் புறக்கணித்தீர்கள். அதனால் யாருக்கு நட்டம் என்று பார்த்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது ஐங்கரன் தான். வேறு யாருமே துண்டைப் போடவே இல்லை.

இத்தனை மக்கள் அவலங்கள் நடந்தபோதும், அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், நான் கடவுளுக்கு சபேசன் விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தார். ஏன் அதையும் ஒரு காரணம் சொல்லிப் புறக்கணிக்கவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரை இன்னும் விட்டு வைப்பதாக இருக்கின்றீர்கள். யப்பானைப் புறக்கணிப்போம் என்றீர்கள். பலர் யப்பான் காரை ஓடவே பயப்படுகின்றார்கள். அதுவும் 90 ஆண்டு தயாரித்த கார்களைக் கூட..

எதிரியானவன் தன்னுடைய முழுப்பலத்தையும் பாவித்து தமிழ்மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் போருக்காக அவன் எதையும் விட்டு வைத்திருக்கவில்லை. அப்படியான சூழ்நிலையில் இப்படியான சின்னச் சின்ன வேலைகளுக்கு நேரத்தை மினக்கெடுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.

ஏகனைப் புறக்கணித்தீர்கள். அதனால் யாருக்கு நட்டம் என்று பார்த்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது ஐங்கரன் தான். வேறு யாருமே துண்டைப் போடவே இல்லை.

இத்தனை மக்கள் அவலங்கள் நடந்தபோதும், அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், நான் கடவுளுக்கு சபேசன் விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தார். ஏன் அதையும் ஒரு காரணம் சொல்லிப் புறக்கணிக்கவில்லை??

இது எல்லாம் எங்க சொல்ல முடியுது :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதில கஸ்ரப்படாமல் இதை செம்மையா செய்ய ஒரே வழி.. பல இலவச இனையத்தளங்களில் டிவிடி தரத்துடன் தரவேற்றம் செய்துவிட்டு அதன் லிங்குகளை அனைத்து தமிழ் இணையத்தளத்திலும் குடுத்துவிடுங்கள், ஒருதரம் தமிழ் படத்தை பார்த்தவன் மீண்டுமொருமுறை படத்தை பார்க்க தியேட்டர் வரை போகமாட்டான்.... அப்படி போனால் அவன் தெலுங்கன் எண்டு அர்த்தம்... :rolleyes:

அகதி அந்தஸ்த்து : குடியுரிமைகளைக் கூட துறப்போம்.

வாறீங்களா சபேசன்?

இன்னும் யார் தயார்?

என்ன தலைவன் சும்மா பகிடிக்குத்தானே கேட்கிறீங்கள்?

அப்ப அயன் படம் வர முன்னம் நிறைய பேருக்கு இப்ப படம் வருகுது எண்டது தெரிய படித்தி போட்டியள் எண்டு பாத்தால் .... சண் நிறுவனத்தாலை மிகுந்த பொருட் செலவிலை வந்த படம் இதுதான் எண்டு இன்னும் ஒரு விளம்பரம் ஓடி இருக்கிறதை பாக்கேக்கை புல் அரிக்குது...

(புறக்கணிப்புக்கு இங்கை ஆதரவை வழங்கி போட்டு வெளியாலை போய் படத்தை கட்டாயம் பாக்க வேணும் போல ஆர்வமா கிடக்குது... அப்பதான் நான் தேசீய வாதி )

அது சரி ஆந்திராவிலை காங்கிரஸ் கட்ச்சிக்கு திரிசா பிரச்சாரம் செய்ய போறாவாம் அவவின் படங்களை புறக்கணிக்க கூடாதோ...??

அவவை வைச்சு எடுத்து வாற படங்களை ஐங்கரன் முன்னமே வாங்காமல் பண்ண மாட்டியளோ.... ??? அது சரி ஐங்கரன் தமிழன் ஒருவனுக்கு சொந்தமான நிறுவனம் தானே எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன....

  • தொடங்கியவர்

சிலர் என்னை எதிர்த்து கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளரை இலக்கு வைத்து அவருடைய பொருளை எதிர்ப்பது அந்தப் பொருளுக்கு விளம்பரமாக அமையாது. சிறிலங்காவின் பெர்ருளாதாரத்தை இலக்காக கொண்டு சிறிலங்காப் பொருட்களை புறக்கணியுங்கள் என்பது அந்தப் பொருட்களுக்கான விளம்பரமா? நெக்ரோவை குடியாதீர்கள் என்று சொன்னதன் பிற்பாடு, அதைக் குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்களா?

ஆனால் சில திரைப்படங்களுக்கான எதிர்ப்பு, அதற்கு விளம்பரமாக அமைந்ததும் உண்டு. உதாரணம் "பயர்"

லெஸ்பியன் உறவைச் சித்தரிக்கும் படம் என்பதால், அதை இந்துத்துவவாதிகள் எதிர்க்க முற்பட்டு, அந்தப் படத்திற்கு பெரும் விளம்பரத்தை செய்தார்கள்.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். படத்தில் உள்ள ஒரு விடயத்திற்காக, அந்தப் படத்தை எதிர்க்க முற்பட்டால், அது விளம்பரமாக அமைந்து விடும்.

உதாரணமாக

அயன் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் வருகின்றது என்று சொன்னால், அப்படி என்னதான் சொல்லியுள்ளார்கள் என்ற ஆவலில் பலர் போய்ப் பார்ப்பார்கள்.

அல்லது

தமன்னா மேலாடை இன்றி நடித்து தமிழ் கலாச்சாரத்தை(?) கெடுத்து விட்டார் என்று சொல்லி எதிர்த்தாலும், பலர் போய்ப் பார்ப்பார்கள்.

அதாவது ஒரு படத்தில் சொல்லப்படுகின்ற விடயம், வருகின்ற காட்சிகள் போன்றவைகளை வைத்து திரைப்படங்களை எதிர்க்கின்ற பொழுது அவைகள் அந்தப் படத்திற்கு விளம்பரமாக அமைந்து விடுகின்றன.

எனக்கு "அயன்" படத்தின் கதையும் தெரியாது, அதில் வரும் காட்சிகள் பற்றியும் தெரியாது.

எமக்கு எதிராக செயற்படும் சன் நிறுவனம் எம்மிடம் விற்க முற்படும் ஒரு பொருளை இங்கே எதிர்க்கின்றோம். அது இன்றைக்கு அயனாக இருக்கின்றது. நாளை வேறாகவும் இருக்கலாம்.

இந்த எதிர்ப்பு ஒரு போதும் விளம்பரமாக அமையாது. இது தயா போன்றவர்களுக்கு புரியாது என்று நான் நம்பவில்லை.

ஆகவே நண்பர்களே!

சன் நிறுவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமா? இல்லையா?

வர்த்தக நிறுவனமாகிய சன் நிறுவனத்தின் பொருட்களை (தொலைக்காட்சி, திரைப்படங்கள்) புறக்கணிப்பதன் ஊடாக எமது எதிர்ப்பை தெரிவிப்பதை விட சிறந்த வழிகள் உண்டா?

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவியுங்கள்

ஒன்றும் இல்லை

Edited by notpoet

தாயகத்தில் மக்கள் அவலப்படுகிறார்கள், நாங்கள் கேளிக்கை படம் ஒண்றை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்து கொண்டு இருக்கிறோம்...

இந்தளவு அவலத்திலையும் துன்பத்தையும் நினைக்காமல் கேளிக்கை படம் பார்க்க ஒருவன் தியட்டருக்கு போவானாக இருந்தால் அவன் எந்த கோரிக்கையையும் ஏற்று போகாமல் இருக்க போவதில்லை... அவனுக்காக மினக்கெடும் சபேசனை பார்க்க பாவமாகவே இருக்கிறது...

இங்கை எனது கோரிக்கை தேவை இல்லாது மக்களின் மனதை கேளிக்கை பக்கம் திருப்ப வேண்டாம் என்பதே... அதோடு புலம்பெயர்ந்த மக்கள் இந்த அவல சூழலில் கேளிக்கை பக்கமாக தான் இருக்கிறார்கள்.. அந்த கேளிக்கைகளில் ஒரு படத்தை புறக்கணியுங்கள் எண்று கேட்ப்பது இந்த மக்களை அவமதிக்கும் செயல்...

அதை விடுத்து வணங்கா மண் கப்பலுக்கும் பொருள், பணம் கொடுக்கும் செயல்களுக்கும் பிரச்சாரம் செய்து பொழுதை போக்குவது நல்லது...

அஜித்தின் ஏகன் புறக்கணிப்பை பற்றி லக்கிலுக்கின் பதிவு ஒண்றில் இப்படி எழுதி இருக்கிறார்... ( எனக்கு அதில் முழுமையான உடன்பாடு...)

http://www.luckylookonline.com/2008/11/blog-post.html

அஜித்தின் பேட்டியை வாசித்து உடனே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள். இவர்களுக்கும் தமிழ்நாட்டு விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமில்லை. அஜித்தின் படத்தை இந்த ஸ்டேட்மெண்டால் புறக்கணிக்கிறார்களாம். அஜித்தின் படங்கள் தொடர்ந்து த்ராபையாக வருகிறது, புறக்கணிக்கிறோம் என்று சொன்னாலாவது நியாயம். போராட்டம் பற்றிய அறிவில்லை என்று ஒத்துக்கொண்டவரின் நேர்மையை பாராட்டுவதை விட்டு விட்டு அவர் படத்தை புறக்கணிப்பது அநியாயம் அல்லவா? தேவையில்லாமல் மட்டமான படமான ஏகனுக்கு சென்சேஷனல் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். இதனால் இன்று நடக்கும் உண்ணாவிரதத்துக்கு கறுப்பு சட்டையோடு வந்து 'நானும் தமிழன் தான்' என்று பறைசாற்றியிருக்கிறார் அஜித்குமார். என்ன கொடுமை?

தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த போராட்டத்தையும், உணர்வையும் கொச்சைப்படுத்துவதல்ல நமது நோக்கம். வீரன் வேலுத்தம்பி, கேப்டன் பிரபாகரன் என்றெல்லாம் படத்துக்கு பெயர் வைத்து தங்கள் உணர்வை இதே திரையுலகம் வெளிப்படுத்திய காலமும் உண்டு. பாரதிராஜா, சீமான், அமீர், மகேந்திரன், ராம.நாராயணன், பாலுமகேந்திரா போன்ற ஏராளமான திரையுலகினரின் உணர்வுகளை சந்தேகம் கொண்டால் நம் நாக்கும் அழுகிவிடும்.

Edited by தயா

சீனா எம்மை அழிக்க ஆயுதம் தருவதாலும் ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை படுகொலைகளை பற்றி பேசுவதை தடுத்தமையாலும் நான் இன்றில் இருந்து சீன பெண்களை...சீ சீ... சீன பொருட்களை புறக்கணிக்க யோசித்து இருக்கிறன். ஏனெனில்

> எனக்கு இராஜீய உறவுகளை வளர்ப்பது என்பதே என்ன என்று தெரியாது

> உலகின் எந்த ஒரு குட்டான் குட்டி நாடுகள் அல்லது இனக் குழுமத்தின் ஆதரவைக் கூட எடுக்க தெரியாது

>எம்மை எதிர்ப்பவர் அனைவரையும் எதிர்த்தே பழக்கப் பட்டு போனதால்

> எந்த சர்வதேச உதவியும் இன்றி என் வீட்டின் உறுப்பினர்கள் உதவியினால் மாத்திரமே என் வீட்டில் பால் பொங்க எல்லாக் காலத்திலும் முடியும் என்ற வைராக்கியம் இருப்பதால்

>நான் தமிழன் என்பதால் (றோயல் family)

அயன் படத்தை பார்ப்பேன்.. இணையத்தில :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எம்மை அழிக்க ஆயுதம் தருவதாலும் ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை படுகொலைகளை பற்றி பேசுவதை தடுத்தமையாலும் நான் இன்றில் இருந்து சீன பெண்களை...சீ சீ... சீன பொருட்களை புறக்கணிக்க யோசித்து இருக்கிறன். ஏனெனில்

> எனக்கு இராஜீய உறவுகளை வளர்ப்பது என்பதே என்ன என்று தெரியாது

> உலகின் எந்த ஒரு குட்டான் குட்டி நாடுகள் அல்லது இனக் குழுமத்தின் ஆதரவைக் கூட எடுக்க தெரியாது

>எம்மை எதிர்ப்பவர் அனைவரையும் எதிர்த்தே பழக்கப் பட்டு போனதால்

> எந்த சர்வதேச உதவியும் இன்றி என் வீட்டின் உறுப்பினர்கள் உதவியினால் மாத்திரமே என் வீட்டில் பால் பொங்க எல்லாக் காலத்திலும் முடியும் என்ற வைராக்கியம் இருப்பதால்

>நான் தமிழன் என்பதால் (றோயல் family)

உண்மை தான்.

எங்கள் எதிரி சிங்கள அரசு மட்டும் தான் என்பதைப் பலர் மறந்து போகின்றார்கள்

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

ஏகன் படப் புறக்கணிப்போடு இதை ஒப்பிடுவது தவறானது.

அயன் படப் புறக்கணிப்பு பற்றிய விவாதம் சூர்யாவையோ, தமிழ் திரையுலகத்தையோ இலக்காகக் கொண்டது அன்று.

எமக்கு எதிரான பரப்புரைகளுக்கு துணைபோகும் ஊடகம் ஒன்றிற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு செயற்பாடாக, அதனுடைய விற்பனைப் பொருள் ஒன்றைப் புறக்கணிப்பது பற்றியே இங்கே நான் பேசுகிறேன்.

சன் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் எங்கள் பிரச்சினை பற்றி அவர்கள் எழுதுவதை படித்தாலே ரத்தம் கொதிநிலைக்கு போறதுண்டு. பிறகு இவர் எங்கட இலங்கை அமைச்சர் 'இந்தியாதான் யுத்தத்தை நடத்துது" என்று சொன்னபிறகு எனக்கு விளங்கிட்டுது... ஏன் தினகரன் முதலான சில பத்திரிகைகள் இப்படி விஷத்தை கக்கினம் என்று.!! எல்லாம் 'றோ" செயல். இதற்கு விலைபோகாத நக்கீரன் போன்ற இதழ்களுக்கு தலைவணங்கவேணும்!

பணமுதலைகள் மேலும் கொழுக்க பணத்தை கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கட்டும். ஒவ்வொருவரும் தானே உணர்ந்தால் படம்பார்க்க தியேட்டருக்கு போகமாட்டினம். ஆனா இஞ்ச ரிலீஸ் பண்ணுறது ஐங்கரனாம்.. சன் நிறுவனத்துக்கு நிறைய பணம் குடுத்துத்தான் அயனை வாங்கி இருப்பினம்! ஓகே அவர்களும் பாவம்தானே! படத்தை விரும்பிறவை பார்க்கட்டுமே. என்ன வந்திச்சு! ( அடப்பாவிளா நான் ஐங்கரனிடம் இருந்து வாங்கி படம் விநியோகம் பண்ணுறன் எண்டு நினைச்சிடாதீங்கோ :rolleyes: )

மற்றது முக்கியமான விசயம் இப்படியான விசயங்கள் எழுதேக்கை வேற பெயரில சபேசன் எழுதுவது உத்தமம். ஏனென்டா உங்கள் எதிர்ப்பாளர்கள் உங்கள் மூலமா கருத்தை பார்க்காமல் கருத்தை கருத்தா பார்த்து கருத்து வைப்பினம். என்ன நான் சொல்லுற கருத்து சரியா?

ஐயோ நிழலி நான் உங்களை சொல்லவில்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சன் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் எங்கள் பிரச்சினை பற்றி அவர்கள் எழுதுவதை படித்தாலே ரத்தம் கொதிநிலைக்கு போறதுண்டு. பிறகு இவர் எங்கட இலங்கை அமைச்சர் 'இந்தியாதான்

மற்றது முக்கியமான விசயம் இப்படியான விசயங்கள் எழுதேக்கை வேற பெயரில சபேசன் எழுதுவது உத்தமம். ஏனென்டா உங்கள் எதிர்ப்பாளர்கள் உங்கள் மூலமா கருத்தை பார்க்காமல் கருத்தை கருத்தா பார்த்து கருத்து வைப்பினம். என்ன நான் சொல்லுற கருத்து சரியா?

ஐயோ நிழலி நான் உங்களை சொல்லவில்லை :rolleyes:

:):rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.