Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கும் ஒரு கேள்வி எழுகின்றது...

Featured Replies

தமிழ் மக்கள் உலகம் பூராகவும் எழுச்சியோடு போராடி வருகிறார்கள்... உடனடியாக நல்ல வகையில் பதில்கள் கிடைக்கிறதோ இல்லையோ பலரும் பலதேசியங்களும் திரும்பி பார்க்கும் ஒரு ஒற்றுமையான இனமாக தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள்... இப்படியான ஒரு ஒற்றுமை எங்களை பலப்படுத்துவதோடு சர்வதேசத்தின் கவனத்தை நன்கு எங்கள் மீது திருப்பி விடும் என்பதில் சந்தேகம் இல்லை...

சில துரோக சக்திகள் இந்த ஒற்றுமை மீது சேறு பூசும் நடவடிக்கைகள் பலவற்றை செய்திகளை திரித்து செய்து வருகிறது..

2 லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் உள்ள லண்டன் நகரில் சுழற்ச்சி முறையின் நான்காவது நாளாக மக்கள் தங்களது கோபங்களை சிங்கள அடக்கு முறை கொலைவெறிக்கு எதிராக வெளிப்படுத்தி வருகின்றனர்...

இப்போது எனது கேள்வி என்ன எண்றால் சிங்கள நாட்டின் கொழும்பில் இருக்கும் 10 லட்ச்சம் தமிழர்கள் ஏன் இப்படியான எந்த போராட்டத்தையும் நடத்துவது இல்லை...??? இல்லை இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் , வவுனியா , மன்னார் போண்ற பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த படாமைக்கு என்ன காரணம்...???

சிங்களவர்கள் பலரும் கொழும்பிலும், பல சிங்கள மாவட்டங்களில் தங்களின் அடிப்படை பிரச்சினைக்காக அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்.... அப்படியான அடிப்படை பிரச்சினைகள் கூடவா அந்த தமிழ் மக்களுக்கு இல்லை...???

அந்த சிங்கள நாட்டின் கட்டுக்குள் வாழும் தமிழ் மக்கள் அவலங்களுக்கு உள்ளாகாமல் சிங்களவர்கள் தங்களை நலமாக காக்கிறார்கள் எண்று நினைப்பதினாலா...??? (அப்படித்தான் சில துரோக தமிழர்கள் செய்தி பரப்புகிறார்கள்)

[இந்த கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது எண்று நினைத்து உங்களின் தாள்மையான கருத்துக்களை வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.. பலருக்கும் உங்களின் விளக்கங்கள் ஒரு உண்மையான சிங்கள முகத்தை காட்டுமானால் மகிழ்ச்சி... அது துரோகிகளையும் தோலுரிக்க உதவுவதோடு இன்னும் பல கேள்விகளை அவர்களை நோக்கி மற்றவர்களை கேட்க தூண்டும்]

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எனது கேள்வி என்ன எண்றால் சிங்கள நாட்டின் கொழும்பில் இருக்கும் 10 லட்ச்சம் தமிழர்கள் ஏன் இப்படியான எந்த போராட்டத்தையும் நடத்துவது இல்லை...??? இல்லை இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் , வவுனியா , மன்னார் போண்ற பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த படாமைக்கு என்ன காரணம்...???

இந்த கேள்விக்கு பதில் நிறைய இருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

[இந்த கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது எண்று நினைத்து............

..அந்த சிங்கள நாடின் கட்டுக்குள் .............

உங்கள் கேள்வியிலேயே ,உங்கள் தரவிலே ,பதில் இருக்கிறது ...........

.உங்களுக்கு பதில் தெரியும் எங்களை சொல்ல வைக்கிறீர்கள். கட்டுக்குள் வைத்திருக்கும் போது......

கட்டுபடுத்தபட்டு ......வைத்திருக்கும் போது .........எப்படி முடியும் .

சுட்டும் .....வெள்ளை வானும் வந்திடுமே .

.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா இதுகூடத் தெரியல்லையா?

புலம் பெயர் நாடுகளில் எமது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கின்றது நாங்கள் வெளிப்படுத்துகின்றோம்.

ஆனால் ஸ்ரீலங்காவில் சும்மா இருக்கிற தமிழருக்கே வெள்ளை வானும், பரலோகமும்.... யாராவது ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களின் கதி?....

அந்த இறுக்கமான நிலையிலுள்ள மக்கள் எதுவும் வெளிப்படையாகச் செய்யவில்லை என்று அவர்களை நாம் குறைகூறுவது தகாது. அவர்களும் எத்தனையோ விஷயங்களை மறைமுகமாகச் செய்தவண்ணமே இருக்கின்றனர்.

தயவுசெய்து அவர்களை குறை கூற வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப்போராட்டங்களை பற்றிக் கதைப்பவர்கள் நாளை உயிரோடு நடமாடுவதே பெரிய விசயம். முன்னைய காலங்களில் பார்த்தீர்களேயானால் அது2002 ம் ஆண்டு உடன்படிக்கையிலிருந்து பல்வேறு போராட்டங்களை எமது மக்கள் நடத்தியதை நீங்கள் மறந்து விட்டீர்கள் போல் உள்ளது ஆனால் இன்று நிலமைவேறு அவ்வாறு செய்தால் ஆள்காலி

ஆனால் ஒண்று இந்த அடக்குமுறைகளை மீறி எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கயேளயானால் நிலமை வேறு அவ்வாறு நடக்கவேண்டும் அதுதான் எனது அவா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோர முகம் கொண்டவர்கள், இனவாதத்தை கக்குபவர்கள் மத்தியில் ஊர்வலம் ஒன்று செய்யப்பட்டால் மிக வரவேற்க தக்கது. மகிந்த அரசை விமர்சிப்பவர்கள் புலி முத்திரை குத்தப்படுவார்கள் .அதன் பின்னர் என்ன நடக்கும் என்ற பீதி நிலை உள்ள நிலையில் எமது மக்கள் வீதிக்கு வருவார்கள் என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்

தயா இந்த கேள்வி எனது மனதிலும் இன்று எழுந்தது.....

பயம் தான் கரணம்....புலம் பெயர்வாழ்மக்கள் போராட்டத்தில் இடுபடும் பொழுது அவர்களின் உயிர்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பு இல்லை...ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் இடுபடும் வேலையில் உயிர்கள் பறிக்கபடும்....இந்த உண்மையை சர்வதேசத்திற்க்கும் புரியபடுத்த வேண்டும்.

ம்ம்ம் இலங்கையில் மட்டும் அல்ல. இந்தியாவிலும் ஈழதமிழனால் எதுவும் செயமுடியாது...காரணம் பேச்சு சுதந்திரம் இருந்தும்...ஈழத்தை பற்றி பேசினால்...தலைவரையும் பற்றி பேசவேண்டி வரும்... அப்படி பேசினால்..

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிவிட்டார்கள் என்று மறியலில் வைத்து விடுவார்கள்...என்ன வித்தியாசம் என்றால். இந்தியாவில் உயிர் இருக்கும்... ஆனால் இலங்கையில் உயிர் இருக்காது...

இப்படிக்கு ஒரு அகதி...

கொழும்பில் நேற்று பகலில் ஒரு தமிழருடைய வீட்டுக்கு சிங்களவர்கள் கல் எறிந்து வாசலில் இருந்த வண்டியின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்கள் பின் புலிகள் தோற்று விட்டார்கள் என்று கத்தியிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு இருந்தால் இலங்கையிலேயே முதல் போராட்டம் ஆரம்பித்திருக்கும். ஆனால் அது முடியாததால் தான் புலம்பெயர்ந்து உள்ள மக்களை சார்ந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு இருந்தால் இலங்கையிலேயே முதல் போராட்டம் ஆரம்பித்திருக்கும். ஆனால் அது முடியாததால் தான் புலம்பெயர்ந்து உள்ள மக்களை சார்ந்துள்ளது.

ஏற்கனவே சமாதான காலத்தில் போரட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் video படம் எடுக்கப்பட்டதும் பின்னர் நடந்ததும் தெரியும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

தயா.......

பல பதில்கள் தரமுடியும் என்னால் தற்போது அவ்விடயம் முக்கியமானதாக படவில்லை........ தற்போதைய களநிலைதான் யாவருக்கும் அதி முக்கியம்........ ஆனால் ஒன்றை சொல்கிறேன்..... இராணுவ கட்டுப்பாட்டுள் வாழ்ந்து கொண்டு பரப்புரைகள், சில எதிர்கால நடவடிக்கைகள் மேற்கௌ;வது எவ்வளவு கடினம் என்று எமக்குதான் தெரியும்.....

  • தொடங்கியவர்

Then most of you know ' all the Tamils in srilanka is in danger.. Then please rise your voice for all the Tamils who in Tamil Eelam and srilanka ...

And brake the properganda of the srilankan gov..

(sorry I couldn't write in tamil )

Edited by தயா

எனக்கு தெரியவில்லை....

முந்தி ஊரில பொங்குதமிழ் நடத்திக்கொண்டு திரிஞ்சாக்களை கேட்டுபாருங்கோ.... :)

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடத்துக்கும் , வேலைக்கும் போறவனே ...... அன்று வீட்டிற்கு திரும்ப முடியுமா என்னும் நிலையில் அவர்கள் வாழும் போது ..........

அவர்களை குற்றம் சொல்லமுடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.