Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் ஈழத்தமிழ் பா(வே)சம்.

Featured Replies

இன்று இந்திய தேர்தல் தொடர்பான செய்திகளை பார்ப்பதற்காக தற்ஸ் தமிழ் இணையத்தளத்திற்கு சென்றேன்.அங்கே போர் நிறுத்தம் முடிந்தது-அதிகாலை முதல் ராணுவம் வெறித் தாக்குதல்-நூற்றுக்கணக்கில் தமிழர்கள் பலி? என்ற தலைப்பில் செய்தி இணைத்திருந்தார்கள்.

இந்த செய்திக்கு சிலர் தங்கள் கருத்துக்களை எழுதி இருந்தார்கள்.இதை பார்த்ததும் ஒரு கணம் இதயமே உறைந்து விட்டது.அழுகையை என்னால் அடக்க முடியவில்லை.

இன்னும் இந்தியா எமக்கு உதவும் என்றிருப்பவர்கள் இனியாவது விழி திறவுங்களேன்.

இது தான் அந்தக் கருத்துகள்.

பதிவு செய்தது: 16 யுpச 2009 8:54 யஅஈழத்திலே தமிழர்களை கொல்வதை கேட்டால் எனக்கு பஞ்சாமிர்தம் சாபிடுறது போல சந்தோசம். இவங்க யாரையும் உயிரோட தப்ப விட கூடாது. ராஜீவை கொன்னவங்களுக்கு இந்த தண்டனை பத்தாது. ஈழத்திலே இருக்கிற எல்லாத்தமிழர்களையும் பிடித்து அவர்கள் மேல் கொத்து குண்டு மாரி பொழிய வேண்டும். பரதேசிகள் செத்து அழிய வேண்டும்.

மற்றவர்

பதிவு செய்தவர்: காங்கிரஸ் தொண்டன் பதிவு செய்தது: 16 யுpச 2009 8:52 யஅஎல்லாரையும் கொன்னு போட்டிடுங்கப்பா. இவங்கட தொல்லை தாங்க முடியல்லை சிங்களவண்ட நாட்டில போய இருந்து கொண்டு ஏம்பா அவங்களுக்கு தொல்லை குடுக்குறே. அண்ணே ராஜபக்ச இவங்க எல்லாரையும் கொன்னு போட்டுடுங்க. நாங்க வேண்டிய குண்டுகளையும் ஆட்களையும் ஏற்கனவே கொடுத்திட்டோம். பத்தலைன்னா இன்னும் வேண்டியளவு தாறம். சும்மா விட்டுடாதீங்க இவங்களை. அப்படியே சுத்தப்படுத்திடுங்க. ராஜீவை கொன்னவங்களுக்கு இந்த தண்டனை பத்தாது.

இவர்கள் எங்களை இவ்வளவு கேவலமாக வெறுப்பதற்கு என்ன காரணம்? ஈழத்தமிழர் மீது இவர்களுக்கு இவ்வாறான வெறி வருவதற்கு யார் காரணம்?

ஒரு சாதாரண விலங்கோ பறவையோ எமது கண் முன்னே உயிருக்காகப் போராடும் போது அதை காப்பாற்ற மனித மனம் துடிக்கும். இங்கே கூப்பிடு தொலைவில் நாங்கள் உங்கள் தொப்பிள் கொடி உறவுகள் நாங்கள் துடியாய் துடிக்கிறோமே? ஏன் உங்களுக்கு எங்கள் மீது இரக்கம் வர வில்லை? எங்கள் அழிவை வேடிக்கை பார்ப்பதற்கும்

எங்கள் அழு குரல்களை கேட்டு நீங்கள் ரசிப்பதற்கும் என்ன தீங்கு செய்தோம் நாங்கள் உங்களுக்கு? எம்மீது ஏனிந்த வெறுப்பு உங்களுக்கு?

சக மனிதன் தவிக்கும் போது அவனுக்கு தன்னாலான உதவியை செய்வது அவனை கை தூக்கி விடுவது சாதாரண மனித இயல்பு. அந்த மனிதத்துவம் கூட இல்லாத மிருகங்களா எம் தொப்புள் கொடி உறவுகளான நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நிலா ,

கோபப்படாதீர்கள் , அங்கு எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக கருத்து எழுதுபவர்கள் பலர் றோ , இலங்கை அரசால் ( தூதரகம் ) நியமிக்கப்பட்ட கைக்கூலிகள் .

அதை தழிழ்நாட்டு மக்கள் தான் எழுதினார்கள் என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?நம்மட ஒட்டுண்ணிகளை மறந்துவிடாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை பேசவும் எழுதவும் வாசிக்கவும் கூடியவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல நண்பரே. தமிழனை அடித்து நொறுக்க வேண்டுமென்று அன்னைத் தமிழாலேயே மிருகத்தனமான துவேசத்துடன் கூறப்பட்ட வார்த்தைகளை நான் என் காதாலேயே கேட்டிருக்கிறேன்..

இவையெல்லாம் எங்களுக்கு மிகச்சாதாரணமான விடயங்கள்.

என்ன செய்வது நாம் வெகுகாலத்திற்கு முன்பே பலதவறு களைவிட்டு விட்டோம் , அதாவது பல இனங்களோடு கலந்துறவாடிவிட்டோம். அதுகூடத் தவறில்லை, எமது மொழியைப் பேசிக்கொண்டே வேற்றினங்கள் உருவாக வழிசமைத்துவிட்டோம். இன்று தமிழ் நாட்டில்கூட பலர் தமிழைப் பேசிக்கொண்டு தமிழர் விரோத உணர்வோடு வாழ்கிறார்கள்.

காங்கிரஸ்காரனையெல்லாம் தமிழன் என எண்ணி நமது தொப்பூழ்க் கொடி உறவுகளை வெறுத்து விடக்கூடாது.

Edited by karu

சக மனிதன் தவிக்கும் போது அவனுக்கு தன்னாலான உதவியை செய்வது அவனை கை தூக்கி விடுவது சாதாரண மனித இயல்பு. அந்த மனிதத்துவம் கூட இல்லாத மிருகங்களா எம் தொப்புள் கொடி உறவுகளான நீங்கள்?

அன்புள்ள தமிழ்நிலா.... அதே செய்திக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு கருத்தை கவனிக்கவும்...

பதிவு செய்தவர்: lakshmi

பதிவு செய்தது: 15 Apr 2009 4:44 pm

what is the solution? cant able to digest i felt like to cry

ஈழ விடயங்களை ஏதோ ஒரு வகையினூடாக அறியப் பெற்றுக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான எங்கள் தமிழர்களின் நிலை இதுதான்...

ஈழம் தொடர்பான செய்திகளை மக்களுக்கு இருட்டடிப்பு செய்வதில் ஊடகங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன... sun, vijay, times now, ndtv, cnn ibn, etc.. etc... இவர்கள் தங்கள் இலாபங்களுக்காக மட்டுமே இயங்குபவர்கள்... பணங்களுக்கு முன் இவர்களுக்கு வீழும் பிணங்கள் பெரிதல்ல...

புலிகள் பற்றி சரியான புரிந்துணர்வில்லாதவர்கள் இருக்கிறோம்... ஈழ வரலாறு பற்றி முழுமையான அறிவில்லாதவர்கள் இருக்கிறோம்... பிரச்சனை புரிந்தும் தெருவில் இறங்கி போராட திராணி இல்லாதவர்கள் இருக்கிறோம்... யாராவது இப்பிரச்சனையை தீர்க்கட்டும் நம்மாலென்ன முடியும் என்னும் துணிவில்லாதவர்கள் இருக்கிறோம்... இன்னும் காந்தி கதை பேசும் பொதுப்புத்தி உள்ளவர்கள் இருக்கிறோம்... வாயிற்க்கும் வயிற்றிற்க்கும் பெரும்பாடு பட்டுகொண்டிருக்கும் வேளையில் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாதவர்கள் இருக்கிறோம்...

இருந்த போதும் நம் இனம் சாகட்டும் என்று எந்த தமிழனும் எண்ண மாட்டான்...

விரக்தியின் காரணமாக இப்படி யாரோவொருவர் எதிர் மறையாக எழுதியிருக்கலாம்.... இல்லை யாராவது ஒட்டுண்ணிகள் எழுதியிருக்கலாம்...

இல்லை இவ்வாறு உண்மையிலேயே எண்ணுகிறவன் இருந்தால் அவன் தமிழ் அப்பனுக்கு பிறந்திருக்க மாட்டான் என்பது மட்டு உறுதி.... அவனைப்பெற்றது உண்மையான தமிழ் தாயாக இருந்தால் இந்நெரம் அவள் தன் கருப்பையையும் அவனுக்கு பாலூட்டிய மார்பையும் வெறுத்து மனம்வெம்பிக்கொண்டிருப்பாள்..

Edited by அன்புசிவம்

ஆதரவு தர மறுக்கும் எவரையும்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

முட்டாள்தனமே அழிவின் முதல்படி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இந்திய தேர்தல் தொடர்பான செய்திகளை பார்ப்பதற்காக தற்ஸ் தமிழ் இணையத்தளத்திற்கு சென்றேன்.அங்கே போர் நிறுத்தம் முடிந்தது-அதிகாலை முதல் ராணுவம் வெறித் தாக்குதல்-நூற்றுக்கணக்கில் தமிழர்கள் பலி? என்ற தலைப்பில் செய்தி இணைத்திருந்தார்கள்.

இந்த செய்திக்கு சிலர் தங்கள் கருத்துக்களை எழுதி இருந்தார்கள்.இதை பார்த்ததும் ஒரு கணம் இதயமே உறைந்து விட்டது.அழுகையை என்னால் அடக்க முடியவில்லை.

இன்னும் இந்தியா எமக்கு உதவும் என்றிருப்பவர்கள் இனியாவது விழி திறவுங்களேன்.

இது தான் அந்தக் கருத்துகள்.

பதிவு செய்தது: 16 யுpச 2009 8:54 யஅஈழத்திலே தமிழர்களை கொல்வதை கேட்டால் எனக்கு பஞ்சாமிர்தம் சாபிடுறது போல சந்தோசம். இவங்க யாரையும் உயிரோட தப்ப விட கூடாது. ராஜீவை கொன்னவங்களுக்கு இந்த தண்டனை பத்தாது. ஈழத்திலே இருக்கிற எல்லாத்தமிழர்களையும் பிடித்து அவர்கள் மேல் கொத்து குண்டு மாரி பொழிய வேண்டும். பரதேசிகள் செத்து அழிய வேண்டும்.

மற்றவர்

பதிவு செய்தவர்: காங்கிரஸ் தொண்டன் பதிவு செய்தது: 16 யுpச 2009 8:52 யஅஎல்லாரையும் கொன்னு போட்டிடுங்கப்பா. இவங்கட தொல்லை தாங்க முடியல்லை சிங்களவண்ட நாட்டில போய இருந்து கொண்டு ஏம்பா அவங்களுக்கு தொல்லை குடுக்குறே. அண்ணே ராஜபக்ச இவங்க எல்லாரையும் கொன்னு போட்டுடுங்க. நாங்க வேண்டிய குண்டுகளையும் ஆட்களையும் ஏற்கனவே கொடுத்திட்டோம். பத்தலைன்னா இன்னும் வேண்டியளவு தாறம். சும்மா விட்டுடாதீங்க இவங்களை. அப்படியே சுத்தப்படுத்திடுங்க. ராஜீவை கொன்னவங்களுக்கு இந்த தண்டனை பத்தாது.

இவர்கள் எங்களை இவ்வளவு கேவலமாக வெறுப்பதற்கு என்ன காரணம்? ஈழத்தமிழர் மீது இவர்களுக்கு இவ்வாறான வெறி வருவதற்கு யார் காரணம்?

ஒரு சாதாரண விலங்கோ பறவையோ எமது கண் முன்னே உயிருக்காகப் போராடும் போது அதை காப்பாற்ற மனித மனம் துடிக்கும். இங்கே கூப்பிடு தொலைவில் நாங்கள் உங்கள் தொப்பிள் கொடி உறவுகள் நாங்கள் துடியாய் துடிக்கிறோமே? ஏன் உங்களுக்கு எங்கள் மீது இரக்கம் வர வில்லை? எங்கள் அழிவை வேடிக்கை பார்ப்பதற்கும்

எங்கள் அழு குரல்களை கேட்டு நீங்கள் ரசிப்பதற்கும் என்ன தீங்கு செய்தோம் நாங்கள் உங்களுக்கு? எம்மீது ஏனிந்த வெறுப்பு உங்களுக்கு?

சக மனிதன் தவிக்கும் போது அவனுக்கு தன்னாலான உதவியை செய்வது அவனை கை தூக்கி விடுவது சாதாரண மனித இயல்பு. அந்த மனிதத்துவம் கூட இல்லாத மிருகங்களா எம் தொப்புள் கொடி உறவுகளான நீங்கள்?

சகோதரி தமிழ்நிலா,

யாரோ எழுதினார்கள் என்பாதால் எப்படி நீங்கள் ஓட்டுமொத்த தமிழக மக்களை தவறாக நினைக்க முடியும்?

எழுதியவர்கள் தமிழ்ர்கள் தான் என்று எப்படி சொல்லுகிறீர்கள்?

நானும் தமிழக உறவுதான்.

எதோ கயவர்கள் சொன்ன கருத்தை முன்வைக்கும் முன்பு தயவு செய்து யோசிக்க வேண்டும்.

தமிழக மக்களூக்கு ஈழத்து தமிழர்கள் என்றுமே உறவு தான்.

தயவு செய்து பொதுப்படையாக சாட வேண்டாம்,மனது வலிக்கிறது என் அன்பு சகோதரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்கும் இன படுகொலைகளை கண்டு தினமும் ரத்த கண்ணிர் வடிக்கும் கோடான கோடி தமிழ்ர்களிள் நானும் ஒருவன்.

முதலில் நான் தமிழன்.

(இந்தியன் என்று சொல்லிக்கொள்ள அவமானப்படும் தமிழன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நிலா... சில காங்கிரஸ் கயவர்கள் எழுதிய கருத்தைக் கொண்டு ஒட்டு மொத்த தமிழக தமிழர்களும் அப்படித்தான் என நினைக்காதீர்கள்... அது ஈழ உறவுகளுக்காக தீக்குளித்து மாண்ட முத்துகுமரனையும் உள்ளடக்கும்... லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் கூட ஈழப் பிரச்சினை இத் தேர்தலில் எதிரொளிக்கும் என்றே கூறியிருக்கிறது... தமிழக உறவாக நான் உங்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான்... தமிழக தமிழர்களின் உள்ளத்தினுள் நீறு பூத்த நெருப்பாக ஈழ உறவுகளுக்கான ஆதரவு கனன்று கொண்டே தான் இருக்கிறது... இன்றைய சூழ் நிலையில் தமிழக அரசியல்வியாதிகளின் சுயனலத்தின் காரணமாக ... எங்கள் உணர்வுகளை ஒருங்கிணைத்து வெளிக்காட்ட இயலாமல் கையறு நிலையிலேயே உள்ளோம்...

தமிழ்த் தாய்க்குப் பிறக்காத சிலர் எழுதிய கருத்துக்களையெல்லாம்... கவனத்தில் கொண்டு கவலைப் பட்டுக் கொண்டிருக்காதீர்கள்... உரக்கச் சொல்வோம்... தமிழரின் தாகம் ... தமிழீழத் தாயகம்...

thatstamil இணையத்துக்கு செல்வதை தவிருங்கள்....

logo.gif

Macafee இணையப்பாதுகாப்பு கருவி சிவப்பு எச்சரிக்கை வழங்குகின்றது....

http://www.siteadvisor.com/exploit.html?do....0&pip=true

இப்படி...

thatstamil.oneindia.in may cause a breach of browser security.

Why were you redirected to this page? When we tested, this site attempted to make unauthorized changes to our test PC by exploiting a browser security vulnerability. This is a serious security threat which could lead to an infection of your PC.

மேலதிக விபரங்களுக்கு..

http://www.siteadvisor.com/sites/thatstamil.oneindia.in

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்தது: 16 யுpச 2009 8:54 யஅஈழத்திலே தமிழர்களை கொல்வதை கேட்டால் எனக்கு பஞ்சாமிர்தம் சாபிடுறது போல சந்தோசம். இவங்க யாரையும் உயிரோட தப்ப விட கூடாது. ராஜீவை கொன்னவங்களுக்கு இந்த தண்டனை பத்தாது. ஈழத்திலே இருக்கிற எல்லாத்தமிழர்களையும் பிடித்து அவர்கள் மேல் கொத்து குண்டு மாரி பொழிய வேண்டும். பரதேசிகள் செத்து அழிய வேண்டும்.

மற்றவர்

பதிவு செய்தவர்: காங்கிரஸ் தொண்டன் பதிவு செய்தது: 16 யுpச 2009 8:52 யஅஎல்லாரையும் கொன்னு போட்டிடுங்கப்பா. இவங்கட தொல்லை தாங்க முடியல்லை சிங்களவண்ட நாட்டில போய இருந்து கொண்டு ஏம்பா அவங்களுக்கு தொல்லை குடுக்குறே. அண்ணே ராஜபக்ச இவங்க எல்லாரையும் கொன்னு போட்டுடுங்க. நாங்க வேண்டிய குண்டுகளையும் ஆட்களையும் ஏற்கனவே கொடுத்திட்டோம். பத்தலைன்னா இன்னும் வேண்டியளவு தாறம். சும்மா விட்டுடாதீங்க இவங்களை. அப்படியே சுத்தப்படுத்திடுங்க. ராஜீவை கொன்னவங்களுக்கு இந்த தண்டனை பத்தாது.

தமிழ்நிலா,

எழுத்துநடையைக் கவனித்தால் எங்கட புல்லுருவிகள் போலத்தான் இருக்கு..! தமிழகத்தை குறை சொல்லாதீர்கள்..!

தமிழ்நிலா... உண்மையில...... ஒரு எதிர்வினைப்பரப்புரைஞரோ.... :)

  • கருத்துக்கள உறவுகள்

இடைவிடா துயரத்திலும் காட்டிகொடுப்புகளுடனும் துரோகங்களுடனும் பல வருடங்களாக உரிமைக்காக போராடிவரும் ஈழத்தமிழர்கள் சந்தேகப்படுவது இயல்பு. ஆனால் தமிழகத் தமிழர்களின் எழுச்சியை சிதைக்கும் நோக்குடன் சில தீய சக்திகள் எழுதும் செயலுக்கும், செய்திகளின் இருட்டடிப்புகளையும் கண்டு துவண்டுவிட வேண்டாம். அனைத்து தமிழகத் தமிழர்களும் உணர்வுபூர்வமாக, சத்தியமாக தங்கள் உறவுகள்படும் வேதனையை பொறுக்காமல் மனம் குமுறிக்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை. எங்கள் தலைகள் தறுதலைகள். ஈழத்தவருக்கு வாய்த்ததுபோல் ஒரு உண்மை தலைவன் எம்மிடமில்லை, அதுவே இங்குள்ள இழிநிலைக்கும் அடிமைப் புத்திக்கும் காரணம்.

முன்னேறிச் சென்று சுதந்திரம் வெல்லுங்கள்... காலம் கைகூடிவருகிறது..

Edited by ராஜவன்னியன்

இதை எழுதியது நிச்சயம் இலங்கைத்தமிழன்தான்.. (ஈழத் தமிழன் அல்ல) .

மகிந்தவின் காலை நக்கிக்கொண்டிருக்கும் சில எச்சில்பொறுக்கி பன்னாடை இலங்கைத் தமிழர்கள் இப்படி கேடுகெட்ட வேலை பார்க்க சம்பளம் வாங்குகிறார்கள்! நிச்சயமாக ஈழத்தமிழனோ, தமிழ்நாட்டுத் தமிழனோ இதை எழுதியிருக்க மாட்டார்கள்.

யஅஈழத்திலே தமிழர்களை கொல்வதை கேட்டால் எனக்கு பஞ்சாமிர்தம் சாபிடுறது போல சந்தோசம். இவங்க யாரையும் உயிரோட தப்ப விட கூடாது. ராஜீவை கொன்னவங்களுக்கு இந்த தண்டனை பத்தாது. ஈழத்திலே இருக்கிற எல்லாத்தமிழர்களையும் பிடித்து அவர்கள் மேல் கொத்து குண்டு மாரி பொழிய வேண்டும். பரதேசிகள் செத்து அழிய வேண்டும்.

'பத்தாது" என்று தமிழக தமிழர்கள் எழுதுவதில்லை! 'போதாது" என்றுதான் எழுதுவார்கள்.

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

நான் , தற்ஸ் தமிழ் பார்க்க போறது ச்சும்மா இதுக்காகத்தான் .......

நயன்தாராவைச் சிறைப்படுத்திய பக்தர்கள்!

பத்மஸ்ரீ..விவேக்குக்கு உற்சாக வரவேற்பு!

'நான் ஜாலிக்காகத் தான் போனேன்!'

ஸ்டிரெச்சரில் வந்து ஓட்டு போட்ட ஜூனியர் ரஜினி படம் - ரசிகர்களுக்குத் தடை!

'லட்சுமி ராய் வர்றாக...'!

நாளை நமதே - விமர்சனம் 10 கோடி கேட்டார் சிரஞ்சீவி!

கவிதா நடிகை பூஜாவின் காதலர் சரண்டர்!

படுத்தபடி பிரச்சாரம் செய்யும் 'ஜுனியர்'!

விஜய்..யாருக்கும் ஆதரவு இல்லையாம்!

ஷ்ரியா-ஆர்யாவின் 'சிக்கு புக்கு' 'நான்' ருக்மணி!

கோவாவில் ஜூலியானா ஃபைன்!

ஸ்னேகா படத்துக்கு யு.எஸ். விருது தள்ளிப் போன மரியாதை!

சாதியை சொல்லி ஓட்டு -ராஜசேகர் கைது!

தேர்தல் பிரச்சாரத்தில் லட்சுமி ராய்!

வீடு... வாடகை.. மிரட்டல்! - விவேக் சோகம்!

25000 திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் '

பிரம்மதேவா'-பாய்ந்தது சென்சார் கத்திரி

:D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதியது யாராகவும் இருக்கட்டும்... அவன் துரோகி.. ஒட்டுண்ணியாக இருந்தால் என்ன.. தமிழக ஓட்டுப் பொறுக்கியாக இருந்தால் என்ன.....

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொப்பூள் கொடி உறவை... கேள்விக்கு உள்ளாக்கி ... அதை சிதைக்கும் நோக்குடன் எழுதப்பட்ட பதிவு அது.... இப்படிப் பட்ட விஷயத்தை யார் செய்வார்கள் என்பதை யாழ் கள உறவுகள் தீர்மானிக்கட்டும்...

பி கு: விவாதக் களங்களில் மட்டுறுத்துனர்கள் உள்ளது போல... தட்ஸ்தமிழில் இல்லை... இந்த ஒரு விஷயத்தையே தமிழின விரோதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே ஒரு கருணா இங்கே பல கருணாக்கள்.

ஓரிரு புல்லுரிவி நாய்களை வைத்து ஒட்டு மொத்த தமிழக தமிழர்களையும்

அப்படி எண்ணி விடாதீர்கள்.

தலைப்பை பார்த்ததும் தமிழக தறுதலை(வர்)களை பற்றிதான் இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால்

அனைவரையும் குறை கூறியது கொஞ்சம் வலிக்கிறது.

(இனிமேல் என்னால் கருத்துகளத்தில் கலந்து கொள்ள முடியாது

தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் தனது அன்லிமிடெட் ஜி பி ஆர் ஸ் சேவையை வாபஸ் பெற்றுவிட்டது.

இதில் என்ன சதி என்று தெரியவில்லை. அனைவரும் இதைதான் உபயோகித்தோம் .

யாழ் நண்பர்களை விட்டு பிரிந்தாலும் .என் தமிழ் இனத்துகு அங்கே விடுதளை கிடைத்து விட்டது என்ற செய்தியை எதிர் நோக்கி காத்திருப்பேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் நீக்கப்பட்டு இப்படியான கருத்துக்கள் அதிகம் இருப்பதை நானும் கண்ணுற்றேன் அதனால் அந்த இணையத்தளத்திற்கு நான் செல்வதில்லை தமிழ் நிலா நீங்கள் இப்பதானே பார்க்கிறீங்கள் அந்த கருத்து எங்கிருந்து உங்களால் எழுத பட்டிருக்கு என்று ஊகிக்க முடியுமா

தமிழ் நாட்டு உள்ள உறவுகள் அனைவரும் ஈழ தமிழர்கள் மீது என்றும் பாசமாக உள்ளார்கள் ஒரு சில கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்களை தவிர . சில பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களுக்கு சென்று பாருங்கள் அங்கு எப்படி எமக்காக உருகியிருப்பார்கள் என்று

அன்பு ஜெயா அவர்களே நீங்கள் எதற்க்காக விலகி செல்லவேண்டும் நாங்கள் எத்தனை பேரை பார்த்திருப்போம் இதெல்லாம் பெரிது படுத்த வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

------

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொப்பூள் கொடி உறவை... கேள்விக்கு உள்ளாக்கி ... அதை சிதைக்கும் நோக்குடன் எழுதப்பட்ட பதிவு அது.... இப்படிப் பட்ட விஷயத்தை யார் செய்வார்கள் என்பதை யாழ் கள உறவுகள் தீர்மானிக்கட்டும்...

பி கு: விவாதக் களங்களில் மட்டுறுத்துனர்கள் உள்ளது போல... தட்ஸ்தமிழில் இல்லை... இந்த ஒரு விஷயத்தையே தமிழின விரோதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்....

தாய்த் தமிழகத்திலிருந்து உரத்த குரல் கொடுத்த புலேந்திரனுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

thatstamil இணையத்துக்கு செல்வதை தவிருங்கள்....

logo.gif

Macafee இணையப்பாதுகாப்பு கருவி சிவப்பு எச்சரிக்கை வழங்குகின்றது....

http://www.siteadvisor.com/exploit.html?do....0&pip=true

இப்படி...

thatstamil.oneindia.in may cause a breach of browser security.

Why were you redirected to this page? When we tested, this site attempted to make unauthorized changes to our test PC by exploiting a browser security vulnerability. This is a serious security threat which could lead to an infection of your PC.

மேலதிக விபரங்களுக்கு..

http://www.siteadvisor.com/sites/thatstamil.oneindia.in

எனது நண்பர் ஒருவரின் கம்பியுட்டருக்கு ஒரு தமிழ் புளாக்கில் இருந்தே வைரஸ் வந்தது. எனது அன்ரைவைரஸ் புரோக்கிராமும் தற்ஸ்தமிழுக்கு செல்லும்போது எச்சரிக்கை தருகின்றது. இவர்கள் பிழைப்பிற்காக பல ஆயிரம் விளம்பரங்களை அனுப்புகிறார்கள். அதுவே அவர்களுடைய பிழைப்பு என்று தெரிந்து பல வைரஸ் பரப்புவர்கள் அவர்களிடம் காசு கொடுத்து அவர்கள் மூலம் பரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த கருத்தை இங்கே முன்வைத்தவர் இன்னமும் இந்த பக்கம் வரவில்லை.

எனக்கு இப்போது ஒரு புதிய சந்தேகம் வந்துள்ளது. அங்கே வைத்த கருத்துக்கும் இங்கே வைத்த கருத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ?

  • தொடங்கியவர்

நேற்று நான் எழுதிய செய்திக்கு கருத்துக்கள் கண்டனங்கள் தெரிவித்த அன்னைத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

நான் இங்கே தமிழக உறவுகளை வெறுப்பதற்காகவோ அல்லது எமது தமிழக சொந்தங்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதற்காகவோ கருத்தொழுத வில்லை.

பண்டார வன்னியனிற்கு ஒரு காக்கை வன்னியன்.வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கொரு எட்டப்பன் எம் தேசியத்தலைவனுக்கொரு (பல) கருணா போன்ற துரோகிகள் நாமறியாதவர்களல்லர்.

தாய்த் தமிழகத்திலிருந்து யாழ் களத்துடன் இணைந்திருக்கும் என் உறவுகளே.என்னையும் ஒட்டுண்ணிகளோடு ஒப்பிட்டு கருத்தொழுதிய என் சொந்தங்களே! உங்களிடம் சில வினாக்களை தருகிறேன் இதற்கு உங்களின் பதில் என்ன?

2000ம் ஆண்டு எம் தலைவன் பல தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றியின் விளிம்பில் வந்து நின்றானே?ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு! வெற்றியின் எல்லையில் நின்ற போது எங்களின் முதுகில் குத்தியதே உங்கள் நாடு?

சமாதானம் பேசவைத்தே எங்களின் தன்னிகரில்லா தளபதிகள் எத்தனை பேரை எங்களிடமிருந்து பிரித்தது உங்கள் நாடு?

எத்தனை அப்பாவி தமிழர்களை கொன்று தீர்த்தது உங்கள் நாடு?

சமாதானம் பேசு சமாதானம் பேசு என்று சொல்லியே எங்களுக்கெதிராக பல சதிகள் செய்து எங்களின் ஏக பிரதிநிதிகளை உலகத்திற்கு பயங்கரவாதிகளாகக் காட்டி ஈழத்தமிழனின் ஏக பிரதிநிதிகளை உலக அரங்கிலே தடை செய்ய வைத்ததே உங்களின் காந்தி தேசம்!

உலகமெல்லாம் பறந்து எமக்கான நீதி வேண்டி நின்ற எங்களின் சமாதானப் புறாவை நீங்கள் ஏவிய அம்பு கிழித்துக் குதறியதே?

இவ்வளவும் நடந்ததற்கு யார் காரணம்? இவ்வளவும் நடந்ததற்கு யார் பெறுப்பு?

இன்று எங்கள் மண்ணிலே இரத்த ஆறு ஓட யார் காரணம்?

கோபம் வரக்கூடாதா எங்களுக்கு?

நீங்கள் வோட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த உங்களின் அரசு தானே காரணம்.

நீங்களே சொல்லுங்கள் உங்களின் மண்ணிலே எமக்காக இதய சுத்தியோடு குரல் கொடுக்க ஓரிருவரைத் தவிர எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்?

இந்திய அரசியலில் ஏன் இவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை?

எங்களின் பிணக்குவியல்களின் மேல் நின்று அரசியல் செய்பவர்கள் எத்தனை பேர் உங்கள் நாட்டிலே?

எங்களின் தாய் வீடு என்றல்லவா நம்பினோம் உங்களை? எமக்கொன்றென்றால் எம்மை கை தூக்கிவிட ஓடோடி வருவீர்களென்றல்லவா நம்பியிருந்தோம்.தடைகளை தகர்த்து ஏன் வரமுடியவில்லை உங்களால்? ஈழத்தமிழன் இன்று கேட்க யாருமற்ற செல்லாக்காசாகிப்போனதாலா?

தானாடாவிட்டாலும் தன் தசையாடும் தமிழகமே என்னத்தை சாதிக்க முடிந்தது உன்னால்? எத்தனை ஆர்ப்பாட்டங்கள்? எத்தனை தீக்குளிப்புக்கள்? இருந்தும் கண்டது என்ன?

நேற்று எமக்காய் குரல் கொடுத்த உங்கள் தலைவர்கள் இன்று எம்மைக் கொல்பவரோடு கூட்டணி போடுகிறார்கள்? கேட்டால் தேர்தல்க் கூட்டணி என்கிறார்கள்!

நீங்கள் எங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்தும் இந்தியா எம் அன்னை பூமி இந்தியாவை நாங்கள் பகைக்க விரும்பவில்லை இந்தியாவோடு நெருங்கியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று சொல்லும் எம் தலைவன் எங்கே? நீங்கள் எங்கே?.

என் அன்புச் சொந்தங்தளே பொறுத்தது போதும் இனியாவது ஒரே குடையின் கீழ் ஓன்று சேருங்கள்.உன்மையாக எந்தக் கட்சி ஈழத்தமிழனுக்காக பாடு படுகிறது என்பதை அறிந்து தேர்தலில் வாக்களியுங்கள்.காலம் உணர்ந்து உங்களின் வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்யுங்கள். இந்தியவின் தேர்தல் வரலாற்றை மாற்றிப் போடுங்கள். தமிழகத் தமிழன் ஈழத்தமிழனோடு கை கோர்த்து விட்டான் போராடுவதற்கு என்பதை உரத்துச் செல்லுங்கள் இனி வரப்போகும் மத்திய அரசிற்கும் உலகத்திற்கும்.

அன்புடன்

தமிழ்நிலா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.