Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் ஏன் காத்திருக்கிறார்கள்?

Featured Replies

இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே!

ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்களில் மறைமுகமாகவும் ஒரு இனப்படுகொலையையே நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சற்று மட்டுப்படுத்துவதற்கோ எந்தவொரு சர்வதேச நாடும் முன்வரவில்லை. எதிர்மாறாக, பலநாடுகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லிக்கொண்டு மகிந்த அரசு நடத்தும் கொலைவெறிப் போருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றதோடு தோளோடு தோள் கொடுப்பதாய் ஆயுத,பண,படைபல உதவிகளை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தட்டிக் கேட்க வேண்டிய நாடுகள்கூட தமிழரை தனியாய் தவிக்கவிட்டுவிட்டன. ஒரு இனமே அழிவின் விளிம்பில் நிற்கின்றது. துக்கம் விசாரிக்கக்கூட ஒரு துணையில்லை.

இவற்றிற்கிடையில் ஒரேயொரு ஆறுதல் தமிழக மக்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்களின் பேரெழுச்சிமிக்க ஆதரவுதான் தமிழகத்தில் முத்துக்குமாரின் தியாகத்துடன் அது இன்னும் அதிகமாகி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஏன் சாதரண மக்கள்கூட பேரெழுச்சியுடன் ஈழத்தமிழர்களுக்காக தங்களின் ஆதரவுக்குரலை மிக வீரியத்துடன் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த எழுச்சிகளுக்கெல்லாம் தான்தோன்றித்தனமாக நடந்துவரும் இலங்கையரசு அடிபணியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆயினும் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஏழுகோடி தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இருக்கிறார்கள் என உணர்த்துவதற்கு வேண்டுமானால் அவை உதவலாம். மொத்தத்தில், புலம் பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் என அனைவரும் எழுச்சி பெற்று ஒரே குரலில், வன்னியில் அவலப்படும் மக்களுக்காகவும், தமிழகத் தீர்வுக்காகவும் குரல்வளை வலிக்க குரலெழுப்பியும் அது யார் செவியிலும் விழவில்லை. அது அனைத்துத் தமிழர்க்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தினைக் கொடுத்திருந்தது.

எழுச்சிக் கோரிக்கைளை எழுப்பி எழுப்பி களைத்துப்போய் அந்த எழுச்சிக் குரல்களின் இயலாமை இன்று தமிழர் மனதில் ஒரு வெறியாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. சிங்கள அரசின் வெற்றிப் பரப்புரைகளினால் தமிழர் படை தோற்றுப் போய்விடும் என்றொரு மாயத் தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழன் தோற்றுப் போகக்கூடாது; தமிழன் தோற்றுப் போனால் தமிழனின் எதிர்கால வரலாறு "அடிமை வரலாறு" ஆகவே எழுதப்படும்;

எனவே இது நடக்காமல் தடுக்க தமிழர்களின் காவலர்களான புலி மறவர்களின் பின்னால் அணி திரள்வது: தமிழர்களுக்காக போராடும் புலிகளை சர்வதேச ரீதியிலும் பலப்படுத்துவது மற்றும் சகலவழிகளிலும் அவர்களுக்கு உதவுவது, என்னவானாலும் பரவாயில்லை... இதுவொன்றுதான் தமிழன் வெற்றிபெற ஒரேவழி. இதற்காக தன்மானமிக்க தமிழனாய் இயன்றவரை போராடவேண்டும். அவ்வாறு செய்தால் நானும் ஒரு விடுதலைப் போராளிதான் என்ற எண்ணமும் என் தேசத்திற்காக அதன் விடுதலைக்காக எதையாவது செய்தாக வேண்டும் என்ற வெறியும் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் மனதினுள்ளும் உருவாகிவிட்டது.

இப்பொழுது அனைத்துத் தமிழரினதும் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் அவர்கள் மத்தியில் எழும் சந்தேகங்களும் பலவழிகளில் அறியப்படும் போர்ச் செய்திகளும் அனைவரையும் ரொம்பவே குழப்பிவிட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது இறுதிப்போர். இறுதிப்போரில் தமிழன் தனியாய் நின்று போராடிக் கொண்டிருக்கின்றான். இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தால்தான் தமிழனுக்கு வாழ்வும் வரலாறும். இல்லையேல்... "அகதி" என்ற பெயரோடு "அடிமை" என்ற பெயரையும் தமிழன் தனதாக்க நேரிடும்.

உலகமே சிங்கள அரசின் பக்கமாக அணிதிரண்டு நிற்க, தமிழர்படை தனித்து தன்மானத்தோடு, உறுதியோடும். தீரத்தோடும் எதிர்த்து நிற்கின்றது. வாழ்வா? அல்லது சாவா? என்ற நிலைப்பாட்டுடனான இ;ந்த இறுதியுத்தத்தின் யாதார்த்த நிலைமைகள் என்ன? அதன் பரிமாணங்கள் என்ன? என சற்று ஆராயலாம்.

'இப்போரானது வன்னி நிலப்பரப்புக்குள் மட்டுமே நடக்கிறது" என யார் கூறினாலும், அது அவர்களின் அறியாமையே! இப்போரானது இன்று பல பரிமாணங்களில் உலகமெங்கும் வியாபித்து நிற்கின்றது. "தமிழீழப் போராளிகள்" இப்போது புலிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனும், புலம் பெயர்தேசங்களிலுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தமிழீழப் போராளியாக உருவாகி நிற்கின்றான். சர்வதேசத்தின் காதுகிழியக் கத்திக் கொண்டிருந்தவன், இன்று அதன் கழுத்தைப் பிடித்துக் கேட்கும் தூரத்திற்கு வந்துவிட்டான்.

சர்வதேசம் நமக்கு நீதித்தீர்வினை தந்தாகவேண்டும்! என்ற நிலைமையை உருவாக்க முனைந்துகொண்டிருக்கிறான். உருவாக்கியே ஆகவேண்டும். இதுதான் இன்றைய நிலைமையில்,போராளியாக உருமாறி நிற்கின்ற ஒவ்வொரு தமிழனினதும் கடமை. இது இவர்களின் கடமையென்றால், ஈழத்தில் புலிகள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது.

"தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பின் கடந்தகால வரலாறுகள்... அவர்களின் திறமையையும், விவேகத்துடன் கூடிய வீரத்தினையும், மன உறுதியையும் கொள்கை தவறாத உளவுரத்தையும் நன்கே பறைசாற்றும். புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து முழு உலகமுமே அதிர்ச்சியில் உறைந்துபோய் வியந்துநிற்கின்றது. அந்த வழியில் இறுதியாக கொடுத்த அதிர்ச்சி மருந்துதான், அண்மையில் கொழும்பில் நடாத்திக் காட்டப்பட்ட வான் கரும்புலித்தாக்குதல், வான்கரும்புலிகள் விடுதலைப்புலிகளின் பலத்தினை ஒருபடியல்ல பலபடிகள் மேலே உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்னும்பல அதிர்ச்சிகள் காத்துக்கிடக்கின்றன. இவற்றையும் மீறி புலிகள் பலமிழந்து விட்டார்களா? என கேள்வி எழுப்புவர்களும் இருக்கிறார்கள.; அவர்கள் நினைப்பதுபோல உண்மையிலேயே புலிகள் பலமிழந்து விட்டார்களா? (!) என பார்ப்பின்… இன்று புதுக்குடியிருப்பு வாசல்வரை வந்து நிற்கின்றது சிங்கள இராணுவம். இராணுவ நடவடிக்கை கிழக்கில் ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது புதுக்குடியிருப்புவரை புலிகள் நிலத்தினை மட்டும்தான் இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய போராளிகளையும் ஆயுததளபாடங்களையும் அதிக இழப்புக்களின்றி நாம் திட்டமிட்டபடி பாதுகாப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். புலிகளின்

பலம் அப்படியே பேணப்பட்டது மட்டுமன்றி ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்டு தற்பொழுது மிகவும் செறிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் பரந்து விரிந்து கிடந்த புலிகளின் பலங்கள் இப்போது இறுதிப்போர் நடக்கப்போகும் இடத்தில் செறிவாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே உண்மை.

இந்நிலையில் புலிகளின் பின்வாங்கல் கிளிநொச்சியுடன் நின்றுவிடும் என்றுதான் அநேகர் நினைத்திருந்தனர். ஆனாலும் அதற்கு எதிர்மாறாக புலிகள் தங்களின் கோட்டையான முல்லைத்தீவு வரையும் இராணுவத்தினை முன்னேற அனுமதித்தது... அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இராணுவ ஆய்வாளர்கள் கூட தங்கள் தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டனர். 'ஏன் புலிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?;" என்பது அனைவரிற்கும் புரியாத புதிராகவே இற்றைவரை உள்ளது.

விடுதலைப்புலிகள் முற்றிலும் வித்தியாசமானவர்கள்... அவர்களின் திட்டமிடல் மற்றும் போர்த்தந்திரங்கள் வித்தியாசமானதாக இருக்கும்... யாரும் இலகுவாய் ஊகிக்கக்கூடிய விடயங்களை அவர்கள் செய்யமாட்டார்கள்... எதிர்பார்க்காத ஒன்றினை எதிர்பாராத தருணத்தில் செய்வார்கள்... அது அவர்களின் தனிப்பாணி. இது புலிகளை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.

புலிகள் ஏன் காத்திருக்கிறார்கள்? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்த்திருக்கும் தருணம் எது? எப்பொழுது அவர்களின் முழு அளவிலான பதில்த்தாக்குதல் ஆரம்பமாகும்? அவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இன்று இக்கேள்விகளுக்கான விடைகளைத்தான் அனைத்துத் தமிழர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...

இன்று உலக நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கை அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு நிற்கின்றன. புலிகள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என புராணம் பாடிக்கொண்டு நிற்கின்றன. ஐ.நா சபை கூட இதற்கு விதிவிலக்கல்ல இன்னும் சில நாடுகளுக்கு புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து வியந்துபோய், இது தொடர்ந்தால் என்னவாகும் என்ற பயம் உருவாகிவிட்டது. எதிர்காலத் தமிழீழ தனியரசு பற்றி நினைப்பே, அவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது போலும்! அதனைத் தடுப்பதற்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி புலிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டலாம,; அதன்மூலம் தமிழீழம் என்கிற தனிநாடு உருவாவதை தவிர்க்கலாம் என்ற கனவில் இலங்கை அரசிற்கு சகல வழிகளிலும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் புலிகள் தனித்தே நிற்கின்றார்கள். அவர்களுக்கான ஒரேயொரு ஆதரவு உலகம் பூராவும் பரவிவாழும் தமிழ் மக்கள்தான் மட்டும்தான். ஆதலால்தான் புலிகள் தங்களது முதற்கட்ட காய்நகர்த்தல் நடவடிக்கையாக 'உலகத்தமிழ் மக்களைக்கொண்டு சர்வதேசம் நோக்கிய வேண்டுகோள்" என்ற ரீதியான காய்நகர்த்தலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள

இந்து எப்ப எழுதப்பட்டது?....

சென்ற மாதம் என்று நினைக்கிறேன்.

சென்றமாசமா? வாற மாசத்துக்கு போராட சனத்தை துரத்திப்பிடிக்கவே இந்தமாசம் காணாது.

இதில சென்றமாச கட்டுரையை திரும்பவும் இணைப்பானேன்.

நளுக்கு நாள் நிலமை இறிகிக்கொண்டே போகுது.

புலிகள் எதிர் நடவடிக்கை எடுப்பதாக இருந்தா இபோதே எடுத்திருக்க மாட்டார்களா?

இவ்வளவு சனத்தைம் பறிகொடுத்த பின்னர் ஆரைவைச்சு போர் செய்வது. நான் இதைச்சொல்வது நம்பிக்கையீனத்தில் இல்லை அதீத நம்பிக்கை கூடாது....

தானாக மாறாது வலி நாம்தான் மாற்றவேண்டும்.

Edited by Sooravali

யதார்த்தத்தை எம்மில் பலர் என்னும் ஏற்க மறுக்கிறார்கள் என்பதை தான் இந்த கட்டுரை காட்டுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எங்கே இருக்கிறார்கள்? முக்காப்பரப்பு காணிக்குள் இருந்து கொண்டு என்னத்தை செய்வது?

இரு பெரிய தலைகள் சரணடைந்தை புலிகள் மறைமுகமாக ஒத்துக்கொண்ட போதிலும்(ஆதாராம் பிபிசி தமிழோசை 22ம் திகதி) புலம்பெயர் ஊடகங்கள் கைது என கூறுகின்றனர்.

இவ்வளவு மக்கள் கொல்லப்பட மூல காரணம் யார்? கடைசியில் மிஞ்சியது என்ன? நம்மை நாமே மூளைச்சலவை செய்துகொண்டோமா? அவர்களின் சாவில் எமக்கும் பங்கு இருக்கிறது.

Edited by Thiyaham

இவ்வெற்றிகள் இன்னும் தொடரும் என்பது உலகத் தமிழரின் கைகளிலேயே தங்கியுள்ளது
.

பந்து இப்ப உலகத்தமிழனின் பக்கம் நிக்குதோ?புலி அடிக்கட்டும் நாங்கள் பொங்கி எழுவோம் என்று திருப்பி அந்தப்பக்கம் தட்டி போட்டு இருக்கப்போறான்கள் புலத்தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எங்கே இருக்கிறார்கள்? முக்காப்பரப்பு காணிக்குள் இருந்து கொண்டு என்னத்தை செய்வது?

இரு பெரிய தலைகள் சரணடைந்தை புலிகள் மறைமுகமாக ஒத்துக்கொண்ட போதிலும்(ஆதாராம் பிபிசி தமிழோசை 22ம் திகதி) புலம்பெயர் ஊடகங்கள் கைது என கூறுகின்றனர்.

இவ்வளவு மக்கள் கொல்லப்பட மூல காரணம் யார்? கடைசியில் மிஞ்சியது என்ன? நம்மை நாமே மூளைச்சலவை செய்துகொண்டோமா? அவர்களின் சாவில் எமக்கும் பங்கு இருக்கிறது.

உம்மை யார் மூளைச்சலவை செய்தது? உதை சொல்லத்தான் ஓடோடி வந்தீரோ? புலத்தில இருக்கிற ஏதோ ஒரு வகையில் போராட்டத்தை நடாத்துகின்ற 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் மூளையை சலவை செய்தது எந்த வோசிங்க் மெசினால்?? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மை யார் மூளைச்சலவை செய்தது? உதை சொல்லத்தான் ஓடோடி வந்தீரோ? புலத்தில இருக்கிற ஏதோ ஒரு வகையில் போராட்டத்தை நடாத்துகின்ற 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் மூளையை சலவை செய்தது எந்த வோசிங்க் மெசினால்?? :D

உண்மையை ஏற்க மறுக்கும் உங்களால் இப்படி தான் பேச முடியும்.

புதுக்குடியிருப்பு விழமுதல் இப்படியான கட்டுரைகளை படிக்கும் பொழுது ஒரு நம்பிக்கை இருந்தது,இனிமேலும் இக்கட்டுரைகளை வாசித்து என்னை நானே ஏமாற்ற முடியவில்லை.

புலிகள் அடிப்பார்கள் ,பிடிப்பார்கள்,கடிப்பார்கள் என்று கட்டுரைகளை எழுதுவதை தவிர்த்து சகலமும் நடந்தபிறகு ,எழுதினால் நல்லம்.

புலிகள் அடித்த பிறகு எழுதுன்கோ .புலி அடி எப்படி எழுமா?எழும் என்றால் பண்ணி பார்?இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று தலயங்கம் போட்டு எழுதுங்கோ .இப்போதைக்கு அமுக்கி வாசியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மக்கள் கொல்லப்பட மூல காரணம் யார்? கடைசியில் மிஞ்சியது என்ன? நம்மை நாமே மூளைச்சலவை செய்துகொண்டோமா? அவர்களின் சாவில் எமக்கும் பங்கு இருக்கிறது.

எல்லாம் அறிந்தவர் போல் இருக்கிறீர்கள். நீங்களே இதற்கான பதிலையும் சொல்லி விடுங்களேன் ?!

தமிழனின் உண்மையான குணாதிசயங்கள் இங்கு நன்றாகவே வெளிப்படுகிறது . ஒன்று மட்டும் உண்மை அப்படி உண்மையிலேயே புலிகள் அளிக்கப்பட்டால் நம் தமிழ் இனத்துக்கு உதவ அல்லது போராட வருங்காலத்தில் எவனும் முன்வர மாட்டான். ஏனெனில் அவனுக்கு தெரியும் . தமிழர்கள் என்றுமே ஒன்று சேர்வது இல்லை . உள்ளுக்குள் அடித்து கொள்பவர்கள் அதிகம் . தோல்வியில் தோள் கொடுக்க மாட்டார்கள் . தோல்வி பெறும்போது உள்ளுக்குள் தூற்றுபவர்களும் துரோகிகளும் அதிகமாவார்கள் என இப்போது நடக்கும் செய்திகள் நாளைய வரலாறாகி தமிழனுக்கு தமிழனே கூட போராடாது தடுக்கும் அபாயம் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது 7000 பொதுமக்கள் பலியிடப்பட்ட பின்னரும், 14000 பேர் படுகாயமடைந்த பின்னரும் கூட தமிழர்கள் என்று தம்மைச் சொல்லிகொள்பவர்கள் இதைப் புலிகளால் ஏற்படுத்தப்படுத்தப்பட்டதென

புலிகள் எங்கே இருக்கிறார்கள்? முக்காப்பரப்பு காணிக்குள் இருந்து கொண்டு என்னத்தை செய்வது?

இவ்வளவு மக்கள் கொல்லப்பட மூல காரணம் யார்? கடைசியில் மிஞ்சியது என்ன? நம்மை நாமே மூளைச்சலவை செய்துகொண்டோமா? அவர்களின் சாவில் எமக்கும் பங்கு இருக்கிறது.

இன்றைய சிக்கல்களுக்கு மாற்றுக்கருத்து என்னும் பெயரால் தமிழர்களுக்கு குழிபறித்து,

சிங்களமும் இந்தியாவும் வீசிக் கொண்டிருக்கும் எழும்புத்துண்டுகளுக்காக இன்னமும் வாலாட்டி கொண்டிருக்கும் பல நாய்களும் காரணம்!

அந்த நாய்களுக்கும் தாம் தமிழருக்கு பறித்த குழி எத்தகையது என்பது நன்றாகவே தெரியும்.

ஆனாலும் அந்த நாய்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர் விடுதலை போராட்டத்தை பார்த்து குரைக்க தவறுவதில்லை.

எழும்புத்துண்டுகளுக்காக குரைத்து பழகியவை பற்றி குறை பேசி எம் தகுதியை நாமே குறைத்து கொள்ள வேண்டியதில்லை!

ஈழத்தமிழர் விடுதலை வேள்வியை அணையாது காக்கவும் எதிர்கால தமிழர் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழவும்

தேவைப்பட்டால் தம்மையே ஆகுதியாக்க புலம்பெயர் இளைஞர் நாம் தாயாராக இருப்போம் என்பது

உலகில் பலருக்கும் இன்று புரிய தொடங்கி விட்ட போதிலும், உள்ளிருந்தே கொல்லும் நோய் போல எமக்குள் இருக்கும்

கேடுகெட்ட சில புல்லுருவிகளுக்கு மட்டும் இன்னும் புரியவில்லை.

Edited by vettri-vel

வணக்கம் உறவுகளே!

இந்த ஆக்கம் 10.03.2009 அன்று என்னால் எழுதப்பட்டு பல இணையத்தளங்களிலும் 14.03.2009 அன்று ஐரோப்பிய ஈழமுரசு பத்திரிகையிலும் பிரசுரமாயிருந்தது.

தமிழ் உணர்வுள்ள எழுத்தாளர்கள் என்கின்ற வகையில் நமது ஆக்கங்கள் மக்களிற்கு தன்னம்பிக்கை ஊட்டுவனவாகவே அமைய எழுதுதல் வேண்டும்.அந்த வகையிலேயே அவ்வாக்கம் எழுதப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து எழுதப்பட்ட பல ஆக்கங்களும் அவ்வகையிலேயே என்னால் எழுதப்பட்டன. இனிமேலும் எழுதப்படும்.

நண்பர் கிளிநொச்சி புலி!

இதை ஏற்கனவே பெரும்பாலானோர் வாசித்திருப்பார்கள். இன்றைய நிலைக்கு அதில் சொல்லப்பட்டிருந்த விடயங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றும். ஆனால் மிக விரைவில் அவை நடந்தேறும். காலமாற்றங்கள் களங்களை மாற்றும்.

பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை தொடர்ந்து போராடுவோம்.

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏற்கனவே பெரும்பாலானோர் வாசித்திருப்பார்கள். இன்றைய நிலைக்கு அதில் சொல்லப்பட்டிருந்த விடயங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றும். ஆனால் மிக விரைவில் அவை நடந்தேறும். காலமாற்றங்கள் களங்களை மாற்றும்.

பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை தொடர்ந்து போராடுவோம்

எல்லோரினதும் ஆசையும் அதுதான் ,அதுவரை பொறுத்திருப்போம்

'இப்போரானது வன்னி நிலப்பரப்புக்குள் மட்டுமே நடக்கிறது" என யார் கூறினாலும், அது அவர்களின் அறியாமையே! இப்போரானது இன்று பல பரிமாணங்களில் உலகமெங்கும் வியாபித்து நிற்கின்றது. "தமிழீழப் போராளிகள்" இப்போது புலிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனும், புலம் பெயர்தேசங்களிலுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தமிழீழப் போராளியாக உருவாகி நிற்கின்றான். சர்வதேசத்தின் காதுகிழியக் கத்திக் கொண்டிருந்தவன், இன்று அதன் கழுத்தைப் பிடித்துக் கேட்கும் தூரத்திற்கு வந்துவிட்டான்.

சர்வதேசம் நமக்கு நீதித்தீர்வினை தந்தாகவேண்டும்! என்ற நிலைமையை உருவாக்க முனைந்துகொண்டிருக்கிறான். உருவாக்கியே ஆகவேண்டும். இதுதான் இன்றைய நிலைமையில்,போராளியாக உருமாறி நிற்கின்ற ஒவ்வொரு தமிழனினதும் கடமை.

மிகச் சரியாக சொல்லியிருக்கின்றீர்கள் இரகுநாதன். என்ன சொன்னாலும் அவர்கள் மாறப்போவதில்லை.

நம் உறவுகளின் இவ்வளவு இழப்புக்களை பார்த்தபின்னும், இப்படி பேசுபவர்கள் தங்களை தமிழர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பது கேவலமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை ஏற்க மறுக்கும் உங்களால் இப்படி தான் பேச முடியும்.

உண்மையை ஏற்க மறுப்பவர்களால் இதை மட்டும்தான் பேச முடியும்.

ஆனால் உங்களால் மடடுமே பலதையும் மாற்றி மாற்றி பேச முடியும்?

உங்களுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? எல்லா உண்மைகளையும் அப்படியே அவிழ்த்து விடுவீர்கள் நாவாலே.

  • தொடங்கியவர்

பருத்த்தியன் அண்ணா உங்களது கட்டுரைகளை நான் தவறாது வாசித்து வருபவன் அந்த வகையிலே இந்த கட்டுரையில் எதிர்கால கழ நிலவறம் பற்றி தத்வரூபமாக வெளிக்கொனர்ந்து இருந்திர்கள் இது பெரும்பாலோராள் ஏற்றுக்கௌ;ளக்கூடிய ஒரு உன்மை என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் ஒரு சிலர். தமிழிழ விடுதலைப்புலிகள் ஏன் இன்ணும் அமைதியாக இருக்குறார்கள் என்ற கேள்வியை யாழ் கலத்திலே எழுப்பி இருந்தார்கள் ஆகவே அவர்களுக்கான பதில் உங்களின் இந்த கட்டுரையிலே உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த கட்டுரையை மீன்டும் யாழ் கலத்திலே இனைக்க நேர்ந்தது. என்பதை உங்களுக்கும் நேயர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் நன்றி.

பருத்த்தியன் அண்ணா உங்களது கட்டுரைகளை நான் தவறாது வாசித்து வருபவன் அந்த வகையிலே இந்த கட்டுரையில் எதிர்கால கழ நிலவறம் பற்றி தத்வரூபமாக வெளிக்கொனர்ந்து இருந்திர்கள் இது பெரும்பாலோராள் ஏற்றுக்கௌ;ளக்கூடிய ஒரு உன்மை என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் ஒரு சிலர். தமிழிழ விடுதலைப்புலிகள் ஏன் இன்ணும் அமைதியாக இருக்குறார்கள் என்ற கேள்வியை யாழ் கலத்திலே எழுப்பி இருந்தார்கள் ஆகவே அவர்களுக்கான பதில் உங்களின் இந்த கட்டுரையிலே உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த கட்டுரையை மீன்டும் யாழ் கலத்திலே இனைக்க நேர்ந்தது. என்பதை உங்களுக்கும் நேயர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் நன்றி.

புரிகின்றது.

உங்களது தனித்தன்மையான கருத்துக்கள் மூலமும் தெளிவுபடுத்துங்கள். விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உள்ள உங்களுக்கு விளக்கப்படுத்தும் ஆற்றலும் இருக்கும் என முழுமையாக நம்புகின்றேன் கிளி புலி! (நட்புடன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மை யார் மூளைச்சலவை செய்தது? உதை சொல்லத்தான் ஓடோடி வந்தீரோ? புலத்தில இருக்கிற ஏதோ ஒரு வகையில் போராட்டத்தை நடாத்துகின்ற 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் மூளையை சலவை செய்தது எந்த வோசிங்க் மெசினால்?? :unsure:

உங்க கருத்தை வழிமொழிகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எங்கே இருக்கிறார்கள்? முக்காப்பரப்பு காணிக்குள் இருந்து கொண்டு என்னத்தை செய்வது?

இரு பெரிய தலைகள் சரணடைந்தை புலிகள் மறைமுகமாக ஒத்துக்கொண்ட போதிலும்(ஆதாராம் பிபிசி தமிழோசை 22ம் திகதி) புலம்பெயர் ஊடகங்கள் கைது என கூறுகின்றனர்.

இவ்வளவு மக்கள் கொல்லப்பட மூல காரணம் யார்? கடைசியில் மிஞ்சியது என்ன? நம்மை நாமே மூளைச்சலவை செய்துகொண்டோமா? அவர்களின் சாவில் எமக்கும் பங்கு இருக்கிறது.

தமிழீழ போராட்டத்தின் மீது மாற்றுக்கருத்து கொண்டவர்கள் அதை நடத்தும் தலைவன் வந்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் :lol::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.