Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு எங்களால் என்ன கேட்கப்பட்டது அல்லது எதிர்பார்க்கப்பட்டது என்பதே புரியவில்லை...! முன்னைய முரண்பாடுகளோடு உங்கள் பார்வையை வைத்துக் கொண்டு இதைப் பார்ப்பதால் தான்..நீங்கள் முரண்படுகிறீர்கள்..! நீங்கள் நிகழ்ச்சிக்குப் போனீர்கள் அவதானித்தீர்கள்...சொன்னதைக் கேட்டீர்கள்...ஓக்கே...! உங்களைப் போல நிகழ்ச்சி அனுபவத்தோடு எல்லா வாசகனும் இல்லை... முதலில் அப்பால் தமிழில் போய் அல்லது உராய்வுத் தளத்தில் போய் ஒட்டுமொத்தமாக வாசிங்கள்... நுனி முதல் அடிவரை...அப்புறம் இங்கு வந்து சொல்லுங்கள்..வாசகர்களுக்குள் நெருடல் வருமா இல்லையா என்று...! சும்மா உங்களுக்கு தெரிந்தவர்..என்பதற்காக நீங்களே உலகம் என்று எண்ணாதீர்கள்...உங்களை விட பரந்தது உலகம்...அதன் பார்வைகள் வேறுபடும்..அவற்றையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்..தமிழர்கள

  • Replies 318
  • Views 42.8k
  • Created
  • Last Reply

எனது மனதில் பட்டதை சொன்னென் குருவிகளே. அதற்கு யாரிடம் இருந்தும் பதிலை எதிர் பார்த்து கருத்து வைக்கவில்லை.

கும்பம் தாயகத்திலும் அனைத்து நிகழ்வுகளிலும் வைக்கப்படுகிறது. ஏன் எமது பாடசாலைக் காலத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழித்தினம் கொண்டாடினோம், இன்னும் என்னென்னவோ கோண்டாடி இருக்கிறோம். அங்கு எல்லரும் மேலைத்தெய உடைகளுடன் தான் சென்றும் இருக்கிறொம். அங்கு வராத பிரச்சனை இங்கு மேலைத்தேயத்தில் உடைப்பிரச்சனை ஏன் வந்தது என்று தான் கேட்டேன்.

சமாளிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

மற்றையது யாருக்கும் எதிராக கருத்தாட வெண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கு பட்டதை , எழுதவேணும் என்று தோன்றுவதை எழுதுகிறேன் அந்தளவே.

கவிதை பற்றிய எனது கருத்தை ,அதை வாசித்த பின்பே வைக்க முடியும்.

குறிப்பாக நாங்கள் முன்வைத்த அவதானிப்புக்களுக்கு வசி மற்றும் மதன் தங்கள் விளக்கங்களைத் தந்தார்கள்...அதில் குறிப்பிடத்தக்க அளவு நியாயப் பார்வை இருந்து...! அதை எவரும் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது...! ஆனால் வேறு சிலர் தங்கள் சுய முரண்பாடுகளோடு வைக்கும் கருத்துகளே பெறப்பட்ட தெளிவைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது..! மற்றும் படி உங்கள் பதிலும் வசியின் பதிலும் கிட்டத்தட்ட ஒரே வகையினதே குளக்காட்டான்...! நன்றி உங்கள் புரிந்துணர்வுக்கு..! :P :idea:

நுட்பமான வாசகர், கொழுவி சொன்ன அற்புதமான படைப்பாளி என்பதன் முழு அர்த்தமும் இப்போது விளங்குது,கொழுவி சரியாத் தான் சொல்லி இருக்கிறா. :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது

பாத்தீங்களா எனது கருத்தை நான் சொன்னன் சின்சக் என்றீங்க?? இதன் அர்த்தம் என்னவோ? எனது கருத்தை வைக்க எனக்கு சுதந்திரம் இருக்காக்கும். யாருக்கும் சின்சக் போட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை ஸ்ராலின் அவர்களே. நிகழ்ச்சி பற்றிய படங்கள் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன அவற்றை வைத்து விமர்சிக்கின்றார்கள். :idea:

நுட்பமான வாசகர், கொழுவி சொன்ன அற்புதமான படைப்பாளி என்பதன் முழு அர்த்தமும் இப்போது விளங்குது,கொழுவி சரியாத் தான் சொல்லி இருக்கிறா. :):lol:

நிச்சயமாக உங்களை விட எங்களை விட ஏன் கலைஞனை விட பல நூற்றுக்கணக்கில் நுட்பப்பார்வையிலான வாசகர்கள் இருக்கிறார்கள்..! படைப்பு கலைஞனுக்கானதல்ல... வாசகனுக்கானது...சமூகத்துக்கா

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கருத்தாடும் அனைவரும் தயவு செய்து கவனிக்கவும் நான் நெருடல் என்று கூறியது எனக்கு கிடைத்த தகவல்களின்படி இiளுஞனின் புத்தகங்கள் சாமி முன் அய்யரின் புசைக்குட்படுத்தபட்டதென்று

பின்னர் படங்களை பார்த்தபோது அதில் அய்யர் மற்றும் புசைநடந்திருக்குமா என்று எண்ண கூடியமாதிரியிருந்தது பின்னர் மதனும் இளைஞனும் சpல விளக்கங்களை தந்தனர்.

அய்யர் ஒரு விருந்தினராக தான் வந்தார் அதை விட மண்டபத்தில் வேறு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு பண்ண பட்டிருந்தது வேறு சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லையென்று ஆகவே நான் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளாத படியாலும் மேலும் விவாதிக்காமல் மன்னிப்பு கோட்டு விட்டு விட்டேன்.

ஆனால் விமர்சனங்கள் என்பது ஒரு கலைஞனுக்கு முக்கியம் அதுவும் வளர்ந்து வரும் கலைஞனுக்கு மிக முக்கியம்.விமர்சனத்தை எற்று கொள்ளும் பக்குவம் அவனை புடம் போடும்

ஆனால் இங்கு குருவியின விமர்சனத்திற்கு சிலர் உடனே கோப பட்டு வார்த்தை(எழுத்து பிரயோகங்கள்) ஒருவர் விமர்சனம் செய்யும் உரிமையை மறுக்கிற மாதிரியுள்ளது.ஒரு படைப்பாளியின் படைப்புகள் எப்படியானவையோ அவற்றை போலவே அவனும் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன் நான்

இல்லாவிட்டால் அவன் வெறும் எழுத்து வியாபாரி. என்னை பொறுத்தவரை விற்பனைக்காகமட்டும் எழுதுபன் எழுத்தாளன் அல்ல விபச்சாரி அவனது குறிக்கோள் பணம் மட்டுமே .

ஒரு கலைஞனுக்கு மிகவும் தேவையானவர்கள் ஆக்கமான விமர்சகர்களே தவிர அவன் செய்வதற்கெல்லாம் சரியென்று ஆமா போடும் ஜால்ராக்கள் அல்ல அது கலைஞனுக்கு கௌரவத்தை கொடுப்பதற்கு பதிலாக கர்வத்தையே கொடுக்கும் இது ஆபத்தானது

]

ஏதாவது உளவியல் ரீதியான தாழ்மை உணர்வோ ? :idea:

ஆமாம் சார்... 5ம் கிளாஸோட ஸ்கூல் விட்டமா...அதுதான் தாழ்வுமனப்பான்மை...எப்படிக் கண்டுபிடிச்சியள்..! :wink: :P :)

கண்டுபிடிப்பல்ல ,கேள்வி, :arrow: :?: உங்கள் பதில்களில் இருந்து எழுந்தது. :wink:

கண்டுபிடிப்பல்ல ,கேள்வி, :arrow: :?: உங்கள் பதில்களில் இருந்து எழுந்தது. :wink:

சரியான கிளவர் நீங்கள்...கீப் இற் அப்...! :lol::lol::lol:

நன்றி வணக்கம்...! :wink: :P

சரியான கிளவர் நீங்கள்...கீப் இற் அப்...! :):lol::lol:

நன்றி வணக்கம்...! :wink: :P

அப்படி என்ன சொல்லுறீங்க,எழுதினது விளங்கேல்ல? :wink:

நன்றி,வணக்கம். :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கூட இன்னமும் கவிதைகளைப் படித்து தமது கருத்துக்களை வைக்க முன்வரவில்லை. இதற்குள் விமர்சகர்கள், வித்தகர்கள் என்று நினைப்பு வேறு. வளரும் கலைஞனை உற்சாகப்படுத்த அவனது ஆக்கங்களை விமர்சியுங்கள். கவிதைப் புத்தகத்தை வாங்கவும் காசில்லை என்பது போல் தெரிகின்றாது. அதில் என்ன உள்ளது என்று ஆராயமல் கண்டதையும் கேட்டதையும் வைத்து என்னத்தை விமர்சித்துக் கிழிக்கிறீர்கள்.

யாழ் களம் கள்ளுக்கொட்டில் என்று யாரோ எழுதியதை உண்மையாக்குவது போலுள்ளது இங்குள்ள கருத்துக்கள். :twisted:

இளைஞ்ஞனின் உராய்வு நூலினை நோர்வேயில் எங்கு பெற்றுக்கொள்ளலாம்? மதன் முடிந்தால் அறியத்தாருங்கள்.

நோர்வேயில் அங்குள்ள ஒருவர் மூலம் பெற்று கொள்ள முடியும் இளைஞன் அறியத்தருவார்.

  • தொடங்கியவர்

நெருடல் என்ன?

கும்பமா?

குத்துவிளக்கா?

குருக்களா?

இசையா?

நடனமா?

இளைஞனின் உடையா?

பெரியார்

------

பெரியார் வழியில் பிசகல் நடந்திருப்பதாக கூறுவது எதனால்?

இங்கே பெரியார் எங்கு வந்தார்?

இளைஞன் பெரியாரை நேசிப்பதால், இளைஞனை பெரியாராகவோ அல்லது பெரியாரை பின்பற்றுபவனாகவோ கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!! இளைஞன் பொதுவுடமை பற்றிப் பேசினால், இளைஞனை கார்ல் மார்க்ஸ் ஆக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

நிகழ்வு ஒழுங்கமைப்பு

--------------

நிகழ்வு ஒழுங்கமைப்பு இளைஞனால் மேற்கொள்ளப்படவில்லை.உலகத் தமிழ்க் கலையகமும், அப்பால் தமிழுமே நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குசெய்தன. உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக நிகழ்வை ஒருங்கமைத்தவர் திரு எஸ்.கே.இராஜன் (ஐ.பி.சி). அதேபோல் உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக நிகழ்வை ஒழுங்கமைத்தவர் திரு. கந்தையா இராஜமனோகரன் (இலண்டன்). அப்பால் தமிழ் சார்பாக நிகழ்வை ஒழுங்கமைப்பில் பங்கேற்றவர் கவிஞர் கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்). நூலாசிரியன் இளைஞன் (யேர்மனி).

உலகத் தமிழ்க் கலையகம் சார்பாக இலண்டனில் நிகழ்வை ஒழுங்கமைத்த திரு கந்தையா இராஜமனோகரன் ஒரு தமிழ், சைவப் பற்றாளர் என்பது அவரை அறிந்த பலருக்குத் தெரியும். தமிழ் இலக்கிய நிகழ்வுகள் பலதும் இவர்கள் மூலம் நடத்தப்பட்டிருக்கிறது. இலக்கியத்திற்கு உரிய இடத்தை அளிப்பவர்கள் - அந்த வகையில் இளைஞனின் படைப்பும் அவர்கள் மூலம் வெளியிடப்பட்டது. (சாந்தி அக்காவின் முதல் கவிதை நூலும் இவர்கள் மூலம்தான் இதே மண்டபத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

நிகழ்வு அரங்கு மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது (நூல் வெளியீட்டை மையமாகக் கொண்டு). கண்காட்சி, நூல் வெளியீடு, கலை நிகழ்வு. ஆரம்பத்தில் நிகழ்ச்சி நிரலில் கலைநிகழ்வு இருக்கவில்லை என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். அதற்கு பதிலாக குறும்பட நிகழ்வே இருந்தது. ஆனால் கோவிலில் குறும்படம் திரையிடுவதில் சில சிக்கல்கள் எழுந்தன. அதனாலேயே அந்நிகழ்வு கலைநிகழ்வாக கடைசிநேரத்தில் மாற்றப்பட்டது. கலைநிகழ்வை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை திரு. கந்தையா இராஜமனோகரன் எடுத்துக் கொண்டார். அவர் இசை மற்றும் நடன நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினார். எனது மூன்று கவிதைகள் மெட்டமைத்து பாடப்பட்டன (அதில் ஒன்று ஏற்கனவே இறுவட்டில் வந்த பாடல்). இரண்டு நடனங்கள் இடம்பெற்றன. இரண்டும் பரதநாட்டிய வகை.

நிகழ்வு அரங்கின் வாசலில் கும்பம் வைக்கப்பட்டது. குத்துவிளக்கு வைக்கப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்விற்கு இடம் தந்தவர்கள் என்பதால் அவர்களை கெளரவிக்கும் பொருட்டு வாழ்த்துரை நிகழ்த்த குருக்கள் அழைக்கப்பட்டார் (நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களால்).

கோவில் குருக்கள் தன்னை அடையாளப்படுத்தும் உடையில் வந்தார்.

திரு. கந்தையா இராஜமனோகரன் வேட்டி சட்டையுடன் வந்தார்.

இளைஞன் தனதுடையில் வந்தான்.

இவ்வளவும் நடந்தது. இங்கே இளைஞனின் கருத்துக்கும் (கவிதைகள் உட்பட) செயலுக்கும் என்ன முரண்? விளங்கவில்லை?

பரதக் கலை தமிழர் கலையா என்பதில் முரண்பாடுள்ள கருத்துக்கள் இருக்கலாம். தேவதாசிகள் நடனமாக இருக்கட்டும். தமிழர் நடனக் கலையின் வளர்ச்சியடைந்த வடிவமாகக் கூட இருக்கட்டும். கலையை கலையாகத் தான் இளைஞன் பார்க்கிறான். அவற்றில் அந்த இளைஞர்களின் திறமைகளைத்தான் இளைஞன் பார்க்கிறான். அடுத்தவர் கலைகளாயிருந்தாலும் அதனை கலையாக ஏற்றுக்கொண்டு இரசிப்பதில் இளைஞனிற்கு தடையில்லை. எமது தனித்துவத்தை பாதிக்கிறபோது, நம்மீது ஆதிக்கத்தை செலுத்துகிறபோது இளைஞன் அதை ஏற்பதில்லை.

திரு. கந்தையா இராஜமனோகரன் அணிந்தது கூட தமிழர் உடையா என்பதில் மாற்றுக்கருத்துக்களும் உண்டு. அதை விடுவோம். இளைஞன் அணிந்தது மேலைத்தேய உடைதான். (இளைஞன் நுல் வெளியீட்டு நிகழ்வில் மட்டும் தமிழனாக பாவனை செய்யவேண்டியதில்லை. இளைஞன் இயல்பாக எதனை அணிவானோ அதனைத் தான் நிகழ்விறகும் அணிந்தான். இதுதான் இளைஞனின் பண்பு - இது இளைஞனை அறிந்தவர்களுக்குத் தெரியும்.) இதனால் இளைஞனின் கருத்துக்கும் செயலுக்கும் என்ன முரண்பாடு என்பது தான் தெரியவில்லை.

இப்படித்தான் செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தையும், மூடநம்பிக்கைகளையும் இளைஞன் விரும்புவதில்லை. இப்படியும் செய்யலாம் என்கிற புதுமையைத்தான் இளைஞன் விரும்புகிறான். மங்கள விளக்கேற்றியதில் எந்த முட்டாள்தனமும் எனக்குத் தெரியவில்லை. ஒளியேற்றி நிகழ்வைத் தொடக்குவதில் நிறைவான கருத்து வெளிப்படுகிறது. ஆனால், மங்கள விளக்கேற்றனால் தான் நிகழ்வு நடைபெறுமென்றில்லை - மங்கள விளக்கேற்றாமலும் நிகழ்வை நடாத்தலாம் - அப்படி நடத்தினாலும் நிகழ்வு நடக்கும், நிறைவு பெறும். இளைஞன் இப்படித்தான்.

கோயில் குருக்களை எவரும் மதம் சார்ந்து அழைக்கவில்லை. இடத்தை இலவசமாகத் தந்தவர்கள் என்றமுறையிலேயே அழைக்கப்பட்டார். மதங்களையும் கடவுளையும் அவற்றினூடான மூடத்தையும் தான் இளைஞன் வெறுக்கிறான் - புறக்கணிக்கிறான் - ஒதுக்குகிறான். மனிதர்களை அல்ல!!!

நீங்கள் சைவக் குருக்கள் - நான் கடவுளையும் மதத்தையும் ஏற்பதில்லை - எனவே என் நிகழ்வுக்கு வராதீர்கள் - அது தீட்டு - என்று மனிதர்களை புறக்கணிக்கச் சொல்கிறீர்கள்? அப்படியானால் இளைஞனிடம் உள்ள மானுட நேயத்தை எங்கே குழிதோண்டிப் புதைப்பது?

பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் - எதிராளியாகக் கூட இருக்கலாம் - ஆனால் இங்கே இலக்கியம் என்ற ஒன்றில் தான் ஒன்றித்தோம். இதேபோலத்தான் நிகழ்விற்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ஊடகங்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

ஓரளவு ஊகிக்க முடிகிறது: இளைஞன் பெரியாரின் கருத்துக்கள் சிலவற்றை வெளிப்படுத்துவதால், பெரியாரையே இளைஞனுக்குள் பார்க்க விளைகிறீர்கள். இளைஞன் இளைஞனாகவே இருக்கிறான், இருப்பான். எவரையும் இளைஞன் பின்பற்றுவதில்லை. பெரியாரையும் இளைஞனும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.பிள

இளைஞன் தமிழன். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறான். தமிழனாகவே இருப்பான். அதற்காக இளைஞன் தமிழனாக பாவனை செய்வதை விரும்புவதில்லை. இளைஞன் இயல்பாக இருப்பதைத்தான் விரும்புகிறான்.

எமது தனித்துவத்தை பாதிக்கிறபோது, நம்மீது ஆதிக்கத்தை செலுத்துகிறபோது இளைஞன் அதை ஏற்பதில்லை.

நன்றி இளைஞன்...! உங்கள் கருத்துக்களுக்கு..!

இளைஞன் தமிழன் என்று எழுதினால் தான் தெரிகிறது...மற்றும்படி தெரியவில்லை...! கூடி இருந்தவர்களும் மேடையில் ஆடியவர்களும் பாடியவர்களும் தான் சில அடையாளங்களை தமிழர் என்பதற்கு தந்ததாகத் தெரிந்ததால் தான் என்னவோ...நெருடல்கள் வெளிப்பட்டன போலும்..! தமிழ் தெரிந்த ஆங்கிலேயன்...தமிழன்...! இது ஒன்றும் போதும் புதிய உலகம் பற்றி அறிவதற்கு...! :wink: :P :idea:

குருவி அண்ணா Hospitalrooster39vt.gif போகிறார் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nool783qo.jpg

புலனாய்வு தகவலிபடி மேற்குறிபிட்ட படத்துக்குரியவர்கள் இவர்களாக இருக்கவேண்டும்.. ? அடையாளத்துக்கு உரியவரை தெரிஞ்சும் அதை வெளியே சொல்லி வாங்கி கட்டிக்க புலனாய் தயாராக இல்லையாம்.. எஸ்கேப்.... :wink: :P :P

இளைஞன் அண்ணாவின் உராய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதையிட்டு மகிழ்ச்சி... :lol::lol::D

டன் அங்கிள் உங்கட புலனாய்வு சரியில்லை..முக்கிய புள்ளியின் தலையைப் போடலை நீங்க :twisted: :wink: :wink:

அப்ப என்ன தமாஷாவா கேட்கிறம்? :evil:

லண்டனில் புத்தகங்கள் கேட்போருக்காக அவற்றின் ஒரு பகுதியை என்னிடம் தந்திருந்தார் இளைஞன். அந்த சமயம் நீங்கள் கனடாவில் கேட்டதும் தபால் மூலம் அனுப்பி வைக்கவே, வேணுமானல் சொல்லுங்கள் கனடாவிற்கும் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். அதன் பின்பு உங்களிடமிருந்து பதில் எதையும் காணவில்லை. தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறேன்.

இலங்கைக்கு திங்கட்கிழமைதான் புத்தகம் வருமாம். திங்கட்கிழமை வரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டியதாகிட்டுது :lol:

  • தொடங்கியவர்

திருத்தம்

உராய்வு: கவிதை நூல்

ஐரோப்பிய நாடுகள்: 5 €

அனுப்பி வைப்பதற்கான தபால் செலவு தனியே.

யேர்மனிக்குள் அனுப்பி வைப்பதற்கான செலவு:

புத்தகமாக அனுப்புவதற்கு: 85 cents

கடிதமாக அனுப்புவதற்கு: 1.44 €

***ஏனைய நாடுகளுக்கு தபால் செலவு மாறுபடும்.

இலங்கை: 150 ரூபாய்

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

இளைஞனை கார்ல் மார்க்ஸ் ஆக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.  

இளைஞனின் புதிய உலகம் எது? இளைஞனின் கருத்துக்கள் என்ன? என்பதை உள்வாங்காமல் - மேலோட்டமாக இளைஞனின் கருத்துக்களைப் பார்த்து - இளைஞனை பெரியாராக உள்வாங்கியதால் வந்த கருத்தாகவே இவற்றைப் பார்க்கிறேன்.]

_________________

ஆகா ஓகோ...

என்ன சுயபுராணமா??

பிஸ்னஸ நல்லாத்ான் போகுது போல.. :-) :-) :-)

இளைஞனின் படைப்பை நாம் பார்த்திருக்கிறோம்.

அது இவ்வளவு தூரம் கடினமான படைப்பா என்று எனக்குத் தெரியவில்லை.

நம்மோடு வாழும் ஒருவரது படைப்பு வெளி வந்திருப்பததில் மகிழ்ச்சி..............வாழ்த்துக்களு

ஓம் ஓம் பாராட்டக்கூடிய விடயம்தான்..!!

முன்னேறிவருபர்களுக்கு விமர்சனம் முக்கியம்..!!

அது சொல்கிற விதத்தை பொறுத்து இருக்கு..!!

"நெகரிவ்" விமர்சனம் கூட ஒரு விளம்பரம் தானே???

நல்ல ஆக்கங்களுக்கு பாராட்டுக்கள் அவசியம் அல்ல..!! தானா வந்து சேரும் ஆனால் திருத்தங்கள் அவசியம்..!!

பாராட்டுகள் தட்டி குடுக்கும் என்கிறதைவிட..

எதிர்வினையான விமர்சனங்கள்.. தட்டிக்குடுக்கும்...

நான் கூறியதில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்

நம்முடைய கலைஞர்கள்

உலக அளவில் வளர்ந்து புகழ் பரப்புவதற்கு

உங்களைப் போன்றவர்கள்தான் காரணம்

நான் கூறியதில் தவறேதும் இருந்தால் மன்னிக்க வேண்டாம்...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.