Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!

Featured Replies

அன்பர்களே . எது எப்படியாயினும் மேலும் சில உண்மைகளை நான் கூற விழைகிறேன்.

1. ஈழ ஆதரவு நிலை அம்மா எடுத்து இருக்காவிட்டாலும் அவர்தான் வெற்றி பெற்று இருப்பார் . ஏனெனில் ஏற்கனவே அங்கே பாமக, மதிமுக இரண்டும் உள்ளது மேலும் மின்சார பிரச்னை அதிகமாக பாய்கின்றது

2. நான் பல முறை சொல்லிவிட்டேன் . இன்றும் சொல்கிறேன் . அம்மா என்றுமே புலிகளை ஆதரித்தது இல்லை . இன்றும் ஆதரிக்க வில்லை . அதை தெளிவாக புரிந்துகொள்ளவும்.

3. ராணுவத்தை அனுப்பி ஈழம் அமைப்பேன் என கூறுகிறார் தவிர புலிகளை ஆதரித்து ஈழம் அமைப்பேன் என கூறவில்லை.

4. நாளை வென்றால் கூட புலிகளை இவர் ஆதரிக்க மாட்டார் . இவரின் கொள்கைப்படி ஈழ எதிர்ப்பு வேறு , புலி எதிர்ப்பு வேறு . இவரின் புலி எதிர்ப்பை ஈழ எதிர்ப்பாக திரித்து விட வேண்டாம் .

5. வென்றபின் ராணுவத்தை அனுப்பி மிச்சம் உள்ள புலிகளை முதலில் அழிப்பேன். பின்னர் ஈழம் அமைப்பேன் என்று கூட கூறுவார். கேட்டுத்தான் ஆக வேண்டும் . வேறு வழியில்லை.

6. பிறரை போல உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு மாட்டிக்கொள்ளாமல் தெளிவாகவே இருக்கிறார் . இந்திய இறையாண்மை போன்று எழும்பும் கேள்விகளுக்கு கூட உடனே அம்புபோல பதில் வருகிறது .

7. இப்போது இவர் வார்த்தை மாற வாய்ப்புகள் இல்லவே இல்லை . மத்தியில் கூட்டணி அமைக்க வேண்டும் . கலைஞரை கவிழ்க்க வேண்டும் . மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் . உள்ளாட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் . திமுக வை அளிக்க வேண்டும் . பின் ஈழ விவகாரத்தில் பாமக, மதிமுக வுக்கு உள்ள செல்வாக்கை உடைக்க வேண்டும் . சந்தடி சாக்கில் விஜயகாந்த் வளர கூடாது . இன்னும் நிறைய வேலை இவருக்கு உள்ளது . இதற்கு உள்ள ஒரே வழி ஈழ பிரச்னையை விடாது கெட்டியாக பிடிப்பது தான்.

8. ரவிசங்கர் கொடுத்த சிடி பார்த்து மனம் திருந்தினார் . ஆம் இருக்கலாம் . ஒரு நாள் துக்ளக் சோவை அவரிடம் விடுங்கள் . மறுநாள் ஈழத்தில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள் என்று கூட அறிக்கை விடுவார் . யார் சொல்லியும் கேட்காதோர் சிலர் சொல்லி கேட்பது வழக்கமே .

9. மிக முக்கியமான விஷயம் . இப்படி அம்மாவை பற்றி குழப்பி திமுக வென்று விட்டால் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு கிடைத்த வெற்றி என கூறிக்கொண்டு நேரடியாகவே நம் உறவுகளை குண்டு போட்டு கொல்வார்கள் இதாலிய காங்கிரஸ். நினைவிருக்கட்டும் .

10. ஈழ பிரச்னை தேர்தலில் எதிரொலிக்காது என ஏற்கனவே கலைஞர் கூறியுள்ளார் . இந்த சமயத்தில் அம்மா வெல்லவில்லைஎன்றால் ஈழ விஷயம் பின்னர் தமிழக அரசியலில் பத்தோடு ஒன்றாகி விடும் . ஜாக்கிரதை

துரோகிகளை நம்பினோம் , கயவர்களை நம்பினோம் , பிற இனத்தவர்களை நம்பினோம் , உலகத்தை நம்பினோம் , இந்தியாவை நம்பினோம் , இரோப்பிய நாடுகளை நம்பினோம் , இன்னும் ஒரு முறை இவரையும் நம்புவோம் . வேறு வழியில்லை .

  • Replies 65
  • Views 8.9k
  • Created
  • Last Reply

ஜெய ஜெயா சரணம் . ஜெயா ஏமாற்றிவிட்டால் குட்டி கரணம்

ஆளுக்கு ஆள் ஒவ்வொரு கருத்தை பேசச்செய்து தமிழக மக்களை குழப்பியடிப்பதன் மூலம் ஒருமுகமாக தமிழகத்தின் வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக திரும்பி விடாது சிதறடித்து அதில் குளிர்காயலாம் என்ற கடைசி நேர சதிச்செயலில் காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக இறங்கி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் போட்டி இடும் 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைவது என்பது தேசிய ரீதியிலும் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகி விடும். அப்படியான ஒரு படுதோல்வி, மானிலங்கள் சார்ந்த பிரச்சினையை அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து அணுகத் தெரியாது இந்திய ஒருமைப்பாட்டுக்கு காங்கிரஸ் பெரும் கேடு விளைவிப்பதாக இந்திய மக்கள் பலரையும் எண்ண வைத்துவிடும் என்று காங்கிரஸின் சில தலைவர்கள் இப்போதே தமக்குள் புகைய ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது.

அப்படியான அவமானகரமான தோல்வியை தடுப்பதற்காக, பலரையும் பல்வேறு விதமாக எதிரும் புதிருமாக அறிக்கைகள் விட வைத்து தமிழக மக்களை குழப்பியும், சிறு கட்சிகளுக்கு தாமே பணம் கொடுத்து வேட்பாளர்களை நிறுத்த வைத்து அவர்கள் மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கவும் காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக சதி செய்வதாக தெரிய வருகிறது!

Edited by vettri-vel

இந்த 50 கருத்துகளையும் ஆழமாக சிந்தித்ததன் பின் எனது வாக்கை (இருந்தால்) இரட்டை இலை சின்னத்திற்கே அளிக்கிறேன்!

வினவு அடிப்படையில் நிறுவ முற்படும் கருத்து நிலைகள்:

1. கருத்து நிலை 1: தமிழகத்தில் ஈழ ஆதரவு பெரியளவில் இல்லை என்பதை

என் கேள்வி:

முத்துகுமாரனிலிருந்து 16 பேர் வரை தீக்குளித்ததும், எந்த அரசியல் கலப்பும் இல்லாத பெண்கள் 11 நாள்வரை தம்மை ஒறுத்து உண்ணாவிரதம் இருந்ததும், சட்ட கல்லூடி மாணவர்கள் போராடியதும் 'சும்மா' காரணத்திற்காகவே அன்றி ஈழ ஆதரவிற்காக அல்ல என்றா சொல்கின்றீர்கள் வினவு?

கருத்து நிலை 2: ஜெயா வென்றால் அது ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் அல்ல. just for விலைவாசி உயர்வு போன்ற எந்த தேர்தலிலும் வழமையாக செல்வாக்கு செலுத்தும் காரணிகளினால் தான்.

என் கேள்வி:

ஈழ விவகாரம் தொடர்பான விடயங்கள் தவிர கலைஞர் ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கிய பிரச்சனை எது என்று கருதுகின்றீர்கள் வினவு? அவர் தன் குடும்பத்திற்காக பொருளையும் பதவிகளையும் பெற்றுக் கொடுத்தமையையா? ஜெயா அன்புச் சகோதரியின் குடும்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினையும் பார்க்கும் போது தமிழக மக்கள் இதனை பெரிய விடயமாக கருதுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? விலைவாசி உயர்வு என்ற பிரச்சனையை படித்த சமூகம் ஒரு சர்வதேச பிரச்சனையாகவே கருதும். அப்படி படித்த மக்கள் தவிர்ந்த மற்றவர்களுக்குத் தான் ஒரு ரூபாய் அரிசி, வேலையற்றவர்களுக்கான உதவிதொகை, இலவச பொருட்கள் என்று கலைஞர் செய்து கொடுத்து சமரசம் செய்துள்ளார். அத்துடன் தமிழக ஊடகப் பலமும் அவருக்குத்தான் அதிகம். அப்படி இருக்கையில் ஜெயா வெற்றி பெறுவாராயின் என்ன காரணம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் வினவு?

ஆளாளுக்கு கட்சி ஆரம்பிக்க வேண்டியது பிறகு பெட்டியை வாங்கிட்டு பிரச்சாரம் செய்ய வெளிக்கிடுவது. போங்கையா வேறுவேலை இருந்தா பாருங்கள்.

  • தொடங்கியவர்

வினவு அடிப்படையில் நிறுவ முற்படும் கருத்து நிலைகள்:

1. கருத்து நிலை 1: தமிழகத்தில் ஈழ ஆதரவு பெரியளவில் இல்லை என்பதை

என் கேள்வி:

முத்துகுமாரனிலிருந்து 16 பேர் வரை தீக்குளித்ததும், எந்த அரசியல் கலப்பும் இல்லாத பெண்கள் 11 நாள்வரை தம்மை ஒறுத்து உண்ணாவிரதம் இருந்ததும், சட்ட கல்லூடி மாணவர்கள் போராடியதும் 'சும்மா' காரணத்திற்காகவே அன்றி ஈழ ஆதரவிற்காக அல்ல என்றா சொல்கின்றீர்கள் வினவு?

கருத்து நிலை 2: ஜெயா வென்றால் அது ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் அல்ல. just for விலைவாசி உயர்வு போன்ற எந்த தேர்தலிலும் வழமையாக செல்வாக்கு செலுத்தும் காரணிகளினால் தான்.

என் கேள்வி:

ஈழ விவகாரம் தொடர்பான விடயங்கள் தவிர கலைஞர் ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கிய பிரச்சனை எது என்று கருதுகின்றீர்கள் வினவு? அவர் தன் குடும்பத்திற்காக பொருளையும் பதவிகளையும் பெற்றுக் கொடுத்தமையையா? ஜெயா அன்புச் சகோதரியின் குடும்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினையும் பார்க்கும் போது தமிழக மக்கள் இதனை பெரிய விடயமாக கருதுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? விலைவாசி உயர்வு என்ற பிரச்சனையை படித்த சமூகம் ஒரு சர்வதேச பிரச்சனையாகவே கருதும். அப்படி படித்த மக்கள் தவிர்ந்த மற்றவர்களுக்குத் தான் ஒரு ரூபாய் அரிசி, வேலையற்றவர்களுக்கான உதவிதொகை, இலவச பொருட்கள் என்று கலைஞர் செய்து கொடுத்து சமரசம் செய்துள்ளார். அத்துடன் தமிழக ஊடகப் பலமும் அவருக்குத்தான் அதிகம். அப்படி இருக்கையில் ஜெயா வெற்றி பெறுவாராயின் என்ன காரணம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் வினவு?

தமிழகத்தில் முத்துக்குமரன் துவங்கி பலர் தீக்குளித்ததும், பரவலான கல்லூரிகளில் மாணவர்களும், வழக்கறிஞர்களும் கூட ஈழத்திற்காக போராடியதும் உண்மைதான். எனினும் இந்த மக்கள் எழுச்சி தி.மு.க அரசால் திட்டமிட்டு அடக்கப்பட்டபோது அ.தி.மு.க உட்பட எல்லாக் கட்சிகளும் போராடும் இந்த பிரிவினருக்காக குரல் கொடுக்கவில்லை என்பதை இங்கே நினைவு கூர்க. ஏனெனில் மக்களிடையே இப்படிப்பட்ட எழுச்சி உருவாவதை எந்தக் கட்சியும் விரும்பவில்லை. அப்படி உருவானால் தங்களது பிழைப்பு போய்விடும் என்பதுதான் இவர்களது அச்சம். எனவே மக்களிடையே உருவான தன்னெழுச்சியான எழுச்சி என்பது பற்றிக்கொள்ள எந்த ஆதரவும் இன்றி விரைவிலயே நலிந்துபோனது. இதனால்தான் ஈழப்பிரச்சினை தமிழக மக்களிடையே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பாரதூரமான பிரச்சினையாக மாறவில்லை. இதன் பொருள் ஈழத்தின் துயரம் குறித்து தமிழக மக்கள் பாராமுகமாக இருக்கிறார்கள் என்பதல்ல. ஈழத்திற்காக எழும் உணர்ச்சி தமிழக ஒட்டுக்கட்சிகளால் தணிக்கப்படுவதே இதன் மூலம்

அடுத்து தேர்தல் முடிவுகளை ஏனைய மக்கள் பிரச்சினைகள் மாற்றிவிடுமா என்றால் அப்படி ஒரு பாரிய அலையொன்றும் இங்கு இல்லை. மேலும் தமது வாழ்க்கைப் பிரச்சினைகளை இந்த எம்பிக்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற மயக்கமெல்லாம் மக்களிடம் இல்லை. தேர்தல் என்பது ஒரு திருவிழாவைப் போல ஊடகங்களால் கட்டியமைக்கப்படுகிறது. வாக்களிப்பது என்பதில் கண நேர பிரச்சினைகள், விரக்தி, அப்புறம் கட்சிகள் கொடுக்கும் பணம் எல்லாம் சேர்ந்துதான் தீர்மானிக்கின்றன. திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் மக்களை பணம் கொடுத்து ஊழல்படுத்தி வாக்களிக்க வைப்பது ஒரு ட்ரெண்டாகவே அரசியல் உலகில் ஏற்கப்பட்டிருக்கிறது. மற்றபடி கருணாநிதியின் குடும்ப ஆட்சி, ஜெயாவின் ஊழல் சொத்து எல்லாம் மக்களுக்கு பழகிப்போன ஒன்று.இவர்களுக்கு மாற்றாக அரசியல் உலகில் யாரும் நம்பிக்கையளிக்கும்படி தோன்றவில்லை என்பதால் மக்களும்மாறி மாறி இரு கழகங்களுக்கும் வாக்களிப்பதுதான் இந்த தேர்தலின் இயக்கம். எனவே தி.மு.கவோ,அ.தி.மு.கவோ யார் வெற்றி பெற்றாலும் அது கொள்கைக்காக, மக்கள் நலனுக்காக பெற்ற வெற்றி அல்ல. மக்களும் அந்த நம்பிக்கையில் வெற்றி பெற வைப்பதில்லை.

  • தொடங்கியவர்

49 - o பற்றி வினவு என்ன நினைக்கிறீர்கள்?. புதிதாக உள்ளது .

">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய காலகட்டத்தில் ஜெயலலிதா அம்மையாரை பற்றயும் அவரது பிரகடனங்கள் பற்றயும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது ,தற்போதைய அவரின் பிரகடனத்தை பற்றி நான் கதைக்க விரும்பவில்லை ஆனால் அவரின் முன்னைய செயற்ப்பாடுகள் ஈழத்துக்கு ஈழத்து மக்களுக்கு ஈழத்து போராளிகளுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ஆனால் அன்றைய நிலையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆதரவு சூழ்நிலை காணப்படவில்லை அத்தோடு அம்மா அவர்கள் தனது அரசியலையும் கவனத்தில் கொள்ளவேண்டும் ஆகவேதான் அவை வெளிப்படுத்தப்படவில்லை ஆனால் இவை எவ்வளவு உண்மை என்று நிச்சயமாக கூறமுடியும் பல காரணங்களால் இன்னும் விளக்கமாக கூறமுடியவில்லை. ஆனால் இவை எல்லாம் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்களால் வெளிக்கொண்டுவரப்படும் அதுவரையும் காத்திருங்கள்.தற்போது கூட ஈழத்துக்கு அம்மா என்ன இதுவரையும் செய்தார் என்று சொல்லி வாக்கு கேட்கமுடியும் ஆனால் அதை அவர் விரும்பவில்லை போல் இருக்கின்றது அதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கல்லாம் அதாவது தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி தேர்தலை எவ்வளவு பாதிக்கும் என்று யாராலும் உறுதியாக கூறமுடியாது ஆகவே அவர் தான் ஈழத்துக்கு ஆதரவானவர் என்று வெளிக்காட்டிய பின்பும் வெற்றி பெறவில்லை என்றால் அடுத்துவரும் தேர்தல்களில் அது எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பாக போகலாம் ஆகவே அவரின் முன்னெச்சரிக்கையான செயற்பாடு நன்று. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் குறிப்பிடப்படவேன்டியர் இருவர் ஒருவர் நெடுமாறன் ஐயா இவர் வெளிப்படையாக எல்லாவற்ரையும் செய்பவர் அடுத்து ஜெயா அம்மையார் இவர் எல்லாவற்ரையும் மறைமுகமாக செய்பவர்

வினவு அவர்களே உங்களது இந்த கட்டுரையில் சிலவற்றுக்கு விளக்கம் கொடுக்கமுடியும் ஆனால் நான் ஜெயலலிதாவின் ஆதரவாளனோ அல்லது கருணாநிதியின் ஆதரவாளனோ அல்ல ஒரு ஈழ தமிழன் மட்டுமே. பல காரணங்கள் என்னை தடுக்கின்றன பல வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் வெளிவரும் போது நீங்களும் அறிவீர்களாக.

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

பலமுறை எழுதிவிட்டோம், ஈழத்தில் சிங்கள இனவெறி அரசு நடத்தும் படுகொலைப்போர் ,இந்திய அரசின் அதாவது இந்திய முதலாளிகளின் நலனுக்காக இந்திய ஆளும் வர்க்கங்களின் உதவியுடன் நடைபெறுகிறது என்பதை ஈழ ஆதரவாளர்கள் புரிந்து கொள்வதில்லை. இதை சோனியா, கருணாநிதி போன்ற தனிநபர்கள் நடத்துவதாக எண்ணுவது அறியாமை. சோனியா இடத்தில் அத்வானி இருந்தாலும் கருணாநிதி இடத்தில் ஜெயா இருந்தாலும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளிக்கும் உதவி மாறப்போவதில்லை.

தமிழர்களுக்கு எதிர்காலத்தில் இந்திய அரசு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்ப்பது வீணான வேலையா ?

இந்திய ஆளும் வர்க்கம் அல்லது இந்திய முதலாளிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட ஈழத்தமிழராகிய நாம் என்ன செய்ய வேண்டும் ?

அல்லது தமிழகத்தமிழரால் இவர்களின் போக்கை மாற்றக்கூடிய வழிகள் ஏதாவது உள்ளதா ? வினவு .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கு எதிர்காலத்தில் இந்திய அரசு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்ப்பது வீணான வேலையா ?

இந்திய ஆளும் வர்க்கம் அல்லது இந்திய முதலாளிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட ஈழத்தமிழராகிய நாம் என்ன செய்ய வேண்டும் ?

அல்லது தமிழகத்தமிழரால் இவர்களின் போக்கை மாற்றக்கூடிய வழிகள் ஏதாவது உள்ளதா ? வினவு .

ஈழத்திற்கு இந்தியா என்றுமே நண்பனாக இருந்ததில்லை, எதிரியாகத்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். இதை ஈழத்தமிழ் மக்கள புரிந்து கொள்ளவேண்டும், சமீபத்தில் நேபாளத்தில் தோழர் பிரசண்டா ராஜினாமா செய்த போது அங்கு இந்திய அரசு செய்யும் சதி பற்றியும் அதற்கு பணியப்போவதில்லை, மக்கள் ஆதரவுடன் முறியடிப்போம் எனவும் பேசினார். இந்த விழிப்புணர்வு நமக்கும் வரவேண்டும். இந்திய அரசின் துரோகத்தை நிறுத்தவேண்டுமெனில் இலங்கையில் உள்ள இந்திய முதலாளிகளின் வணிகம், சுரண்டலை ஈழத்து மக்கள் எதிர்த்து போராடவேண்டும். சொத்தில் கைவைத்தால்தான் முதலாளி திருந்துவான். அதேபோல தமிழகத்தில் உள்ள மக்கள் இந்தியா சிங்கள இலங்கைக்கு ஆசைப்பட்டால் தமிழகத்தை இழக்கவேண்டி வரும் என்பதை செய்து காட்டவேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இந்திய தூதரகம், இந்திய முதலாளிகளின் மையங்களை குறி வைத்து போராடவேண்டும். இவை மூன்றும் வெற்றிகரமாக நடக்கும் பட்சத்தில் இந்தியாவின் மேலாதிக்க நலனுக்காக பலியிடப்படும் ஈழத்தை நாம் காப்பாற்ற முடியும். ஆனால் இந்தப்புரிதல் புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும், தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு அமைப்புகளுக்கும் இல்லை. இவர்கள் அனைவரும் ஏதாவது லாபி செய்து இந்திய அரசை மாற்றலாமென்றோ, அல்லது பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் என்றோ, அல்லது தனி ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்று ஆதரவுடன் நடக்கும் என்ற நம்பிக்கையையோ கொண்டிருக்கிறார்கள். இந்த கண்ணோட்டம் மாறாத வரை ஈழப்போராட்டம் முன்னுக்கு வருவது கடினம்.

தமிழகத்தில் தேர்தல் ஓட்டுக்கள் ஒவ்வொன்றும் இம்முறை இரத்தக்கறை படிந்தது. துயரம் மிகுதியானது. உடல்கள் சிதறி பரிதவித்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களின் உயிர்காப்பது குறித்த இறுதி நம்பிக்கையானது. வழமை போல் சைக்கிள் வேட்டி சேலை தொலைக்காட்சி போன்ற பொருட்களை கொடுத்து வாக்குகளை கவரும் நிலையில் இருந்து இந்த முறை தேர்தல் விலகி நிற்கின்றது. இவற்றுக்கு பதிலாக ஈழத் தமிழர்களின் உயிரும் உரிமையும் காப்பாற்றப்படும் என்று நம்பிக்கை வழங்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் ஈழத்தமிழரின் பிரச்சனைகள் அரசியல் சுயநலன்களுக்காக பாவிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் இந்த வாக்குறுதிகள் குறித்து மக்கள் குழப்பமான நிலையில் உள்ளனர். இப்போது ஈழத்தில் நடந்தேறும் மனிதப்பேரவலத்தை அரசியல் சுயநலன்களுக்காக வாக்குகளை பெறுவதற்கான ஒரு கருவியாக பாவிக்கப்படுமேயானால் அதை விட கொடுமையான ஒரு ஈவிரக்கமற்ற செயல் உலகில் எதுவும் இருக்காது. கோடிக்காணக்கான மக்களின் கண்ணீர் ததும்பும் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஈவிரக்கமற்ற செயலாகவே வரலாற்றில் பதியப்படும்.

ஈழத்தில் நடக்கும் இன அழிப்பு போரானது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலமாக உள்ளது. தமிழினம் தனது வரலாற்றுத் தடத்தில் இவ்வாறானதொரு கொடிய துயரத்தை சந்தித்தாக எங்கும் எழுதப்படவில்லை. ஓவ்வொரு உயிரும் பறிக்கப்படும் போது மாந்த நேயம்மிக்க தமிழ் நெஞ்சங்கள் துன்பத்தில் துவள்கின்றது. அடக்கமுடியாத வேதனையின் வெளிப்பாடகா உலக வீதிகளில் எல்லாம் போராட்டம் செய்கின்றனர். பல உறவுகள் தீக்குளித்து இந்த வேதனையை வெளிப்படுத்தி படுகொலையை நிறுத்த கோரி மடிந்து போயினர். பல நாடுகளில் உண்ணாவிரதங்கள் மனிதச் சங்கிலிகள் என அழிந்து கொண்டிருக்கும் தனது உறவுகளை பாதுகாக்க தமிழர்கள் படாதபாடு படுகின்றனர்.

இந்த இன அழிப்பில் இந்திய அதிகாரவர்க்கத்தின் பங்கு பாரிய அளவில் இருப்பது மிக வெளிப்படையானது. இதை இலங்கை அரசு தன்வாயாலும் இந்திய பிரதிநிதிகளும் ஒத்துக்கொண்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் இந்திய நாடாளமன்ற தேர்தலை மக்கள் எல்லாவற்றுக்கும் மேலான உச்ச கவனயீர்பாக இனத்தை காக்கும் பொருட்டு தமது வாக்குகளை பயன்படுத்த உள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்காக ஈழத்தை அமைப்போம் என்று மக்களிடம் அ தி மு க கட்சியால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி என்பது வேட்டி சேலை சைக்கிள் தொலைக்காட்சி போன்றதைப் போலன்று மாய்ந்துகொண்டிருக்கும் உயிர்களை முன்வைத்து சிதறி சின்னாபின்னமாகி கிடக்கும் பிணங்களுக்கு மேலாக கொடுக்கப்படும் உறுதிமொழி ஆகும். தேர்தலின் பின்னால் இந்த உறுதிமொழிகள் தூக்கி வீசப்பட்டு மக்களின் உணர்வுகள் காலில் போட்டு மிதிபடுமானால் அது ராஜபக்ச கொன்று போட்ட தமிழர்களது பிணங்களை உண்டதுக்கு ஒப்பானது.

எதற்கும் ஒரு எல்லை உண்டு. ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து அரசியல் நடத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த தேர்தலும் அதன் வாக்குறுதிகளும் அந்த எல்லையில் நிற்கின்றது. இதற்குமேல் உயிர்களோடு விழையாட முடியாது. முதுகில் குத்த முடியாது. வஞ்சகம் செய்ய முடியாது. உயிர்கள் தினம் தினம் பறிக்கப்படுகின்றது. பல லட்சம் மக்கள் வீடுவாசல் இழந்து தவிக்கின்றனர். புட்டிணியால் மடிகின்றன். சாகப்போறவனின் கடைசி நொடிகளை சுயநலமாக பயன்படுத்த முடியாது. அவ்வாறான குணம் விலங்குகளுக்கும் கிடையாது. எல்லைதாண்டிய துரோகம் நயவஞ்சகம் மனிதகுல வரலாற்றில் எழுதப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஈழத்தை அமைப்போம் என்ற வாக்குறுதியை தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் வழங்கி வரும் அ தி மு க தலைவி செல்வி ஜெயலலிதா இவற்றை நிச்சயம் உணர்ந்தே உறுதி மொழிகளை வழங்குகின்றார் என்று மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு பாதகமாக அவர் நடந்து கொள்ள மாட்டார் என்று பொதுவான மனிதநேயத்தின் பால் நம்பவேண்டியுள்ளது. எல்லை தாண்டிய அரங்கேறும் அவலத்தின் பால் நம்பவேண்டியுள்ளது. இருந்தபோதும் சாதிய மத வர்க்க ஒடுக்குமுறைகளின் உச்சமாக விளங்கும் இந்திய அதிகாரவர்க்கத்திடம் மனிதநேயத்தை எதிர்பார்ப்பது மனித சிந்தனைக்கு முரணானது என்ற உண்மையை யாரும் நிராகரிக்க முடியாது.

இந்த தேர்தலில் எப்படி இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான கூட்டணிக்கே எங்கள் வாக்கு!

காங்கிரஸ் கட்சி தலை கீழாக நின்றாலும் 16 இடங்களிலும் படுதோல்வி அடையும்!

இந்த தேர்தலில் எப்படி இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான கூட்டணிக்கே எங்கள் வாக்கு!

காங்கிரஸ் கட்சி தலை கீழாக நின்றாலும் 16 இடங்களிலும் படுதோல்வி அடையும்!

இல்லை இந்த தேர்தல் முடிவுகள் தமிழக , மத்திய அரசுகளில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும். இப்போ ஈழப்போராட்டம் புலிகளின் கைகளில் இருந்து அனைத்துலக தமிழ்மக்களிடம் சென்று விட்டது. தொடர்ந்து பயங்கரவாதம் என்று பேய்காட்ட முடியாது

வினவு நீங்கள் பிரச்சினையை தமிழ் நாட்டுக்குள் மட்டுமே பார்க்கிறீர்கள்.... நாங்கள் தமிழர்கள் எட்டு கோடி பேரும் தமிழ் ஈழத்தை அங்கீகரிப்பதன் மூலம் சிங்களவருக்கும் சர்வதேச நாடுகளுக்கும் சொல்லும் செய்தியாக பார்க்கின்றோம்...

ஆறு அரை க்கோடி தமிழ் வாக்காளர்கள் எட்டு கோடி மக்களின் சார்பாக எதை சொல்கிறார்கள் என்பது புதிய உலக ஒழுங்கில் மாற்றத்தை கொண்டு வரும் என்பது மறுக்க முடியாத உண்மை... இரண்டு கோடி சிங்களவர்களை அருக்கில் இருக்கும் எட்டு கோடி தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை சட்ட பூர்வமாக உலகுக்கு சொல்லும் செய்தி.. இது ஈழத்தமிழர் போக்கில் பெரிய மாற்றத்தை நிச்சயமாக கொண்டுவரும்... அதோடு எட்டு கோடி தமிழர்கள் ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்பது பொய் பிரச்சாரங்களால் தினவெடுத்து போய் உள்ள சிங்களவரிக்கு நிச்சயம் கலக்கத்தை கொடுக்கும்....

சிறிய உதாரணமாக மூண்று லட்ச்சம் சிங்கள சிப்பாய்கள் தமிழ் ஈழத்தை சிதைப்பதுக்காக சிங்கள அரசி நிறுவி வைத்து செயற்படுகிறது... இதேவேளை சீமான் அண்ணா போண்றவர்கள் சொல்லும் 15 லட்ச்சம் தமிழ் இளைஞர்கள் தமிழீழம் மீட்க்க வர தயாராக இருக்கிறார்கள் எனும் கூற்று சிங்களவருக்கு பொய் என்பது போல ஒரு தோற்றம் இப்போது உள்ளது... ஆனால் அது தேர்தலின் பின்னர் உண்மை என்பதை உணர வைக்கும்... ( 15 லட்ச்சம் பேர் தமிழீழம் வந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் ஈழம் இல்லை எனும் உண்மையை காலம் விரைவில் உணர்த்தும்) இதுவே சிங்களத்துக்கு மிண்டு கொடுக்கும் நாடுகள் ( இந்திய மத்திய அரசு உட்பட) உலகும் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தை தோற்றுவிக்கும்... இப்படி பல ஆரசியல் லாபங்களை அள்ளி த்தரக்கூடியது தனி ஈழ கோரிக்கைக்கு மக்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்பது....

மற்றும் படி ஜெயா ஈழத்துக்காக உடனடியாக எதையும் செய்ய வேண்டியதில்லை என்பதுதான் உண்மை... இண்றைக்கு வரைக்கும் ஜெயா எதையும் ஈழத்தவருக்காக செய்ய வில்லை என்பது முற்றிலும் உண்மையானதும் அல்ல...

இப்போது தேவையானது புலிகள் தான் தோண்றிகளாக போராட வில்லை.. ஈழம் எனும் கோரிக்கைக்கு உலக தமிழினம் முழுவதும் கொடுக்கும் ஒத்துளைப்பால் என்பதை உலகுக்கு உணர்த்துவதே...

அங்கீகாரத்தை நாங்கள் எல்லாரும் சேர்ந்து வெளிப்படுத்தி உலகின் அங்கீகாரத்தை கேட்ப்போம்... இஸ்ரேலியர்கள் போல தமிழர்களும் ஒரு தேசம் அமைக்க திடமாக உள்ளார்கள் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டிய கட்டாய காலம் இது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவினதோ அல்லது வேறு எந்த நாட்டினதோ ஆதரவை நம்பி ஈழமக்கள் போராட்டத்தைத் துவக்கவில்லை.மாறாக எமது சொந்த மக்களின் பலத்தை நம்பியே தலைவர் போராட்டத்தை நடத்துகிறார்.மாறாக மற்றைய நாடுகளின் தார்மீக ஆதரவு தேவை.அதாவது தமிழ்ஈழத்துக்கான அங்கீகாரம். அந்த அங்கீகாரத்திற்கு தமிழீழ மக்கள் 1977 இல் கொடுத்து விட்டார்கள்.சர்வ தேச நாடுகளின் அங்கீகாரத்திற்கான தொடக்கப் புள்ளியை இடும் வாய்ப்பு எமது தொப்புள் கொடி உறவுகளான 6 கோடி தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.அதை எமது உறவுகள் உலகிற்கு உரத்துச் சொல்லுவார்கள் என்பது எமது நம்பிக்கை.அது உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் கோரிக்கையாகும்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு ஜெயலலிதா தெரிந்தோ தெரியாமலோ காரணமாகப் போகிறார்.வெற்றி பெற்றவுடன் ஜெயலலிதா மாறிவிடுவார் என்று சொல்லி வரலாற்று வெற்றியை மறுப்பது மடமையாகும்.

சரியான கொள்கை தவறானவரால் மேற்கொள்ளப் பட்டு விட்டது என்று சொல்லி மக்கள் தம் கடமையைச் செய்வார்கள்.தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கொள்கையைக் கைவி;ட்ட போதும் தமிழீழ மக்கள் அதை முன்னெடுத்துச் செல்ல வில்லையா?

எனவே தமிழக உறவுகளே! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை அழித்து தமிழீழத்தின் தேவையை உலகுக்கு உரத்துச் சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.