Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையோர் போராட்டங்களும்..இழிபிறப்புக்களும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று எமது இளையோர் போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றது.. எம்மக்கள் மீதான இன அழிப்பினைக்கண்டு கொதித்தெழுந்த இளையோர்களின் போராட்டமானது உண்ணாவிரதம் .ஊர்வலங்கள் .ஆர்ப்பாட்டங்கள். என்றும்.தனியாக இனஅழி்பிற்கெதிரன போராட்டமாக மட்டுமல்லாது ஜரோப்பா .கனடா .அமெரிக்கா என்று சீரற்ற காலநிலைகளையும் எதிர்த்து மழையிலும் கொட்டும் பனியிலும் இரவு பகலாக தொர்ந்து போராடிவருகிறார்கள்..முதலில் அவர்களிற்காய் தலைநிமிர்ந்து மனப்பூர்வமாய் ஒரு மரியாதை வணக்கத்தினை செலுத்தி விட்டு தொடர்கிறேன்...

சிறிது காலங்களிற்கு முன்னர்.. கழண்டு விழும்கழுசாண்..காதிலே கடுக்கன்..கலர்அடித்த தலை. கழுத்தில் கம்பி வழையங்கள்....காதிலே எந்தநேரமும் கைத்தொலைபேசியோ அல்லது ஜ போனோ கிணு கிணுக்க கையை காலை ஆட்டியபடி திரிந்த இவர்களைப்பார்த்து...நாங்கள் சொன்னதெல்லாம்..உருப்படாததுக

ள்..இதுகள் தமிழையோ கலாச்சாரத்தையோ காப்பாத்தாதுகள்..இனி எல்லாஞ்சரி அழிஞ்சுபோச்சுது.. அங்காலை சிங்களவன் அழிக்கிறான் இஞ்சை இதுகள் அழிக்கிதுகள்..என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ..எமது இனத்தின் இருப்பின் இறுதிப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க புலம்பெயர் தேசமெங்கும் புயலெனப்புகுந்த இளையவர்களைப்பார்த்து புறணிபாடியவர்களெல்லாம் வாயடைத்து நாக்கைப்புடுங்கலாமா?? மூக்கைப்புடுங்கலாமா என்று முழிபிதுங்கிநிற்க..

உலகின் அனைத்து இன மக்களிற்கும் அதன் அரசுகளிற்கு எங்கள் போராட்டத்தின் தேவையும் நோக்கமும் பிரச்சனைகளும் அவர்களிற்கேயுரிய மொழிகளிலும்..வழிகளிலும் போய்ச்சேர்ந்ததுமட்டுமல்ல..இ

துவரை காலமும் எங்கள் போராட்டங்களின் நியாயங்களையும் எங்கள் அவலங்களையும் எவ்வளதூரம் முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு மூடிமறைத்து ஆணியடித்து வைத்திருந்த சர்வதேச ஊடகங்களும் தங்கள் பின்பக்க தூசிகளை தட்டியவாறே மெல்ல எழுந்து முன்பக்க செய்திகளில் போடத்தொடங்கினார்கள்..இந்த உலகின் ஒரு முலையில் சிறிலங்கா என்கிற குட்டித்தீவில் ஈழம் என்கிற இன்னொரு குறுகிய சேத்தில் வாழும் இனத்தின்மீது இதுவரைகாலமும் நடாத்தப்பட்டுவந்த அழிப்புக்களும் அனியாயங்களும் ஒரு குறுகிய காலத்திலேயே உலகெங்கும் ஒலிக்கவைத்துக்கொண்டிருக்க

ஆம் உறவே நீங்கள் சொல்வது முற்று முழுக்க உண்மையிலும் உண்மை.....

எங்களின் இளையோர் போராட்டத்தில் குதித்திராவிட்டால் தற்போது உயிரோடு

இவ்வளவு உறவுகள் இருக்கமாட்டார்கள்......

அது மட்டுமல்லாமல் எங்களின் இந்த இன அழிப்பு உலகத்தின் கண்களை முhடி

மறைத்திருக்கும்.......

நீங்கள் எழுதியது போல் இவ்வளவு நாழும் 4 சுவர்களுக்குள் தான் ஆட்டம்

பாட்டம் கொத்து றொட்டி எலிபன் சோடா எண்டு எங்கட போராட்டம் போய்க் கொண்டிருந்தது

ஆனால் தற்போது எங்களின் இளையோர்கள் உலகத்தின் முhலை முடக்கு எல்லாம் கொண்டு

போட்டாங்கள்............. எங்கள் தலைவனே அவர்களிடம் பொறுப்பு கொடுத்த பின்

புலத்தில தங்கட பதவியும் சட்டை பையும் வெறுமையாக போகிறதே என்பதால்

மட்டும் தேவையற்ர குற்ரச்சாட்டுக்களை எங்களின் இளையோர் மேல் கூறுபவர்கள்

கூறிக்கொண்டிருக்கட்டும் மற்ரவர்கள் மனச்சாட்சியின் படி நடந்து கொள்ளட்டும்.......

குறிப்பு

பிரான்ஷ் நாட்டில் எங்களின் மக்கள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்திய பின் தான்

ஊடகங்கள் எல்லாம் (இன்று வரை)முன் உரிமை கொடுத்து செய்திகளை வெளியிட்டனவாம்

அது மட்டுமல்லாமல்

அந்த நாட்டு மக்களே சொன்னார்களாம் இப்படி நீங்கள் செய்திராவிட்டால் உங்கள் நாட்டு பிரச்சினை எங்களுக்கு தெரிந்திரக்க வாய்ப்பே இல்லை என்று ........

இனியாவது சுயநலத்திற்காக சங்க தலைவர்களாக இருந்து கொண்டு கருத்து சொல்லுறவை

கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் எல்லாவற்ரிற்கும் நன்மையே தவிர தீமை கடுகளவும் இல்லை.......

இல்லவே இல்லை......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பாக சுவிஸ். கனடா..ஜெர்மனி.இங்கிலாந்து .ஆகிய நாடுகளில் வாழும் தேசியத்து பூசாரிகளே கவனியுங்கள்...புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இன்னமும் நீங்கள் போடும் கோட்டினுள் நின்றுதான் கும்புடுபோடவேண்டும் என்கிற வறட்டு பிடிவாதத்தில் நின்றுகொண்டிருந்தால் வன்னியில் கடைசித் தமிழனின் மூச்சும் காற்றில் கரைந்துவிடும்..மாறிக்கொள்ளு

ங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்..

- இது மிக மிக உண்மை!!! நன்றாக சொன்னீர்கள்!!!

நண்பர்களே இங்கு பெயர்களுக்காகத்தான் பலர் தேசியம் பேசுகின்றார்கள் இக்கட்டான கால கட்டத்தில் இளைஞர்களை ஒதுக்கி வைப்பதில் *** நாட்டு தமிழர் பேரவைதான் முன்னணி வகிக்கின்றதாக ஒரு நண்பர் சொன்னார்..தங்கள் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில்தான் அவர்கள் இளைஞர்களுக்கு குழி பறிப்பதாக சொல்கின்றார்கள். அதற்காக அவர்கள் ஒரு அவசர உண்ணாவிரதத்தை அலங்கோலமாக நடாத்தி அதை வெற்றி பெற்றதாக காண்பித்து தம்மபட்டம் அடித்துக்கொண்டார்களாம்.

இன்று அங்கு வெற்றிகரமாக தமிழ் பரீட்சை வேறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதாம். இந்த சுயநலவாதிகளை சந்திக்கு கொண்டுவரவேண்டியது தமிழர்கள் கடைமை. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பரீட்சையை நிறுத்தியபின் அங்கு மட்டும் நடாத்த வேண்டிய தேவையுள்ளதா?

இலண்டனில் தங்கள் படிப்பையே உதறிவிட்டு வீதியில் இறங்கி போராடும்போது தமிழ் பரீட்சை அவசியமா?

இங்க இந்த நேரத்திலும் பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிக்கிறதில மும்மரமாய்

இருக்கிறவை ஆர் எண்டால் இஞ்சயே அதாவது வாடை வீட்டை தங்கட

வீடாய் நினைச்சு மற்ரவனின்ட பணத்தில சொகுசு வாழ்க்கை வாழுறவை தான்.....

இன்றய சுhழலில நின்மதியாய் நித்திரை கொள்ள முடியவில்லை

உணவு கூட உண்ண முடிய வில்லை அப்படி இருக்கும் போது தமிழ்

சோதினை

வைக்கினம் எண்டால் உண்மையில இவைதான் மொழி பற்றுள்ளவை

எண்டதை புரிந்து கொள்ள வேண்டும்??????

அது மட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகளை போலிகளுக்கு பின்னால

உணர்வே இல்லாமல் பரீட்சை எழுத அனுப்புற பெற்ரோர் சங்க தலைவர்களை விட

உணர்வானவர்கள்????????

இப்படியான கேடு கெட்டதுகள் இருந்ததால தான் எங்கட இனம் இன்னும்

செத்துக் கொண்டிருக்குதுகள்............

இந்த நிலையை கட்டாயமாக எங்கள் இளையோர் மாற்றி அமைப்பார்கள்

நம்பிக்கையுடன் தெளிந்த மனதுடன் அவர்களுக்கு துணையாக பின் தொடர்வோம்

சில பேருடன் கதைக்கும் போது சொல்லுவார்கள்

தாங்கள் இங்க எல்லா வசதியுடனும் சொந்தங்களுடனும் வாழுகினமாம்

நாடு தங்களுக்கு தேவை இல்லையாம் எண்டு அப்ப ஏன் பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிக்கிறியள் எண்டு கேட்டால் பரந்து பரதேசிகளாக வாழும் தங்கட ஏனைய உறவுகளோடை கதைக்கவாம்......

100% உண்மை :)

அனுபவத்திருகின்றோம் இனியும் சந்திக்கவும் போகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

100% உண்மை :)

அனுபவத்திருகின்றோம் இனியும் சந்திக்கவும் போகின்றோம்

உலகின் பல நாடுகளின் பெரிய நகர்களில் - லண்டன், நியூயார்க், டோரண்டோ, ஜெனிவா, ஓஸ்லோ என்றெல்லாம் தமிழர்கள் தங்கள் இன ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் இச்செயல்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும். வெளிநாடுகளில் பிறந்த இந்தத் தமிழ் இளைஞர்கள் எதிர்காலங்களில் புதிய தமிழுண்மை ஒன்றைக் கண்டடைவார்கள். இவர்களில் ஃப்ரெஞ்சு, ஜெர்மன், போலிஷ், ருஷ்ய மொழி போன்ற பலவித மொழிகள் பேசும் இளைஞர்களும் இளம்பெண்களும் சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் ஈழத்தை - அவர்களின் உறவினர்கள், வாழும் அல்லது சாகும் ஈழத்தை - பார்த்திருக்கக் கூட இயலாது. எனினும் இவர்கள் புதுவிதமாக, எதிர்காலத்தில் தமிழ்மனதின் மூலம் சிந்திப்பார்கள். அவர்களின் மனதில் தமிழ்சினிமாவின் - அதன் அடையாளங்களின் பாதிப்பு இருக்குமா, இருக்காதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இருக்காவிட்டாலும் ‘தமிழ்’ என்ற சொல் ஒரு புது உணர்வை அவர்களின் மனதில் எழுப்பும்.

அந்த நேரத்தில் இந்தியாவில் கீழ்மூலையிலும் அதே தமிழை, சற்று வேறுவிதமாகப் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற ஓர்மை எழும். அந்தத் தமிழர்களுக்கும் ஓர் நீண்ட பரம்பரை - கலையிலும் இலக்கியத்திலும் இருந்தது என்று ஞாபகம் வரும். சில இளைஞர்களும், இளம்பெண்களும் அது தங்களுடையது என்ற அந்த ஓர்மை வழிப் பயணப்படுவார்கள். ஒரு காலத்தில் தங்கள் உறவினர்கள் ரத்தம் சிந்திய இடங்களை எல்லாம் வந்து பார்ப்பார்கள். தங்கள் உறவுகள் விமானங்களால் தாக்கிக் கொல்லப்படுமுன், விரட்டப்படுமுன், பதுங்குகுழிகளில் அவர்கள் கண்ட கனவு எதுவாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து பல ஆண்டுகளுக்கப்புறம் வரும்போது ஒருவேளை காற்றில் அழுகுரல் இல்லாமல் இருக்கலாம்; பனைமரங்கள் அசையும்போது சிங்கள சேனைகளின் நிழலோ அவை என்று பயப்படாத சூழ்நிலை இருக்கலாம்; காலம் மிகவும் மாறிப்போயிருக்கலாம். ஆனால் அவர்கள் மறக்கமாட்டார்கள். மறக்கமுடியாத ஒரு நினைவும் மூளையும் அவர்தம் உடல்களுக்குள் இருக்கும்.

அந்த ஞாபகத்தின் பல்வேறு இழைகளோடும் எழும் சக்தியின் பெயர்தான் ‘தமிழ்-உண்மை.’

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து இவற்றை பெரிதுபடுத்தும் நேரமல்ல இப்போது

தயவுசெய்து உங்கள் கடமைகளை மட்டும் செய்யுங்கள்

25 வருட பொதுவாழ்க்கையின் அனுபவத்தில் சொல்கின்றேன்

இதுவும் வந்துபோகும் என்பதை நினையுங்கள்

எல்லாம் எமைக்கடந்து செல்லவேண்டியதே

எனவே அதுவும் எமைக்கடந்து செல்லும்

இது தவிர்க்கமுடியாதது...........

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை! உண்மை!!உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை!!! நான் நினைத்துக் கொண்டிருந்ததை சாத்திரியார் எழுதி வட்டார். சாத்திரியார் உண்மையிலேயே சாத்திரியார் தான்.இனி புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் போராட்டத்தின் அமைப்பு வேலைகளின் தலைமத்துவத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு நாங்கள் அவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்.அவர்களிடம் போட்டி இருக்காது பொறாமை இருக்காது பிடிக்காதவர்களை ஒதுக்கி வைக்கும் எண்ணம் இருக்காது ஆனால் வேகம் இருக்கும் விவேகம் இருக்கும் விளக்கம் அளிக்கும் மொழிப் புலமை இருக்கும்.சட்ட நுணுக்கங்கள் தெரியும். இப்பொழுதுதான் விடுதலைப் போராட்டம் சர்வதேசப் பரிமாணத்தைத் தொட்டு நிற்கிறது.இதைத் தெரிந்தே தலைவர் கடந்த வருட மாவீரர் உரையில் இளைஞர்களுக்கான அழைப்பை விடுத்திருந்தார்.இப்பொழுது எங்கள் நிலம் சுருங்கி இருக்கிறது.ஆனால் களம் விரிந்திருக்கிறது.களம் விரிய விரிய நிலமும் விரியும்.விடுதலை நெருங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப சரியான கருத்து தற்காலத்து விசமிகளுக்கு வைத்த ஆப்பு

உண்மை! உண்மை!!உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை!!! நான் நினைத்துக் கொண்டிருந்ததை சாத்திரியார் எழுதி வட்டார். சாத்திரியார் உண்மையிலேயே சாத்திரியார் தான்.இனி புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் போராட்டத்தின் அமைப்பு வேலைகளின் தலைமத்துவத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு நாங்கள் அவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்.அவர்களிடம் போட்டி இருக்காது பொறாமை இருக்காது பிடிக்காதவர்களை ஒதுக்கி வைக்கும் எண்ணம் இருக்காது ஆனால் வேகம் இருக்கும் விவேகம் இருக்கும் விளக்கம் அளிக்கும் மொழிப் புலமை இருக்கும்.சட்ட நுணுக்கங்கள் தெரியும். இப்பொழுதுதான் விடுதலைப் போராட்டம் சர்வதேசப் பரிமாணத்தைத் தொட்டு நிற்கிறது.இதைத் தெரிந்தே தலைவர் கடந்த வருட மாவீரர் உரையில் இளைஞர்களுக்கான அழைப்பை விடுத்திருந்தார்.இப்பொழுது எங்கள் நிலம் சுருங்கி இருக்கிறது.ஆனால் களம் விரிந்திருக்கிறது.களம் விரிய விரிய நிலமும் விரியும்.விடுதலை நெருங்கும்.

இதுவே இன்றைய புலத்தில் விரிந்திருக்கும் நமது களத்தின் வெற்றிபாதைக்கு காரணம் :)

சீரற்ற காலநிலைகள் கூட இவர்களைச்சீண்டிவிடாது.. ஆனால் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் சிறீலங்கா அரசின் நேரடியான அழுத்தங்கள்.. இரண்டகக்குழுக்களின் சதிகள் பொய்யான பரப்புரைகள் .. இவை எல்லாவற்றிற்கும் மேலாக.. ஆனால் முக்கியமானதும் பாரியதுமான பிரச்சனை என்னவெனில் ..இதுவரை காலமும் போராட்டங்களை நடத்தியவர்களும் புலம்பெயர் தேசங்களின் தமிழ்த்தேசியத்தின் ஒட்டுமொத்த காவலர்கள் தாங்களே என்று கூறித்திரியும் ஒரு கும்பல்தான் இலங்கையரைவிட மிக மோசமான செயல்களையும் அழுத்தங்களையும் அவப்பெயர்களையும் இந்த இளையோர்மீது திணித்து வருகின்றனர்.

நன்றிகள் சாஸ்திரி! வெள்ளம் வரும் முன் அணை கட்டி இருக்க வேண்டும். தவற விட்டு விட்டோம். இக்கும்பல்கள் கடந்த காலங்களில் நடத்திய கூத்துக்களை கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்து விட்டோம். கேட்பார்கள் இல்லாமல் போன இவர்களின் பார்வையில் சிக்கியவர்கள் எல்லோரையும் துரோகிகள் என்றார்கள். யாராவது நல்லவைகள் செய்ய முனைந்தால் தடுத்தார்கள், அவர்களை துரத்தினார்கள். என்னனென்ன செய்ய முடியுமோ அவைகளை இக்கும்பல் செய்து கொண்டே இருந்தது. இதனை அனைத்துலக தொடர்பகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய எம்மக்களின் இழிநிலையிலும் தங்களது கதிரைகளுக்காக கேவலங்களை செய்து வரும் இக்கூட்டங்கள் து****ள் பட்டம் கட்டி தண்டிக்கப்பட வேண்டும்.

இதனை நாம் செய்ய தவறுவோமாயின், நாலை மக்களே இவர்களை தண்டிப்பார்கள்.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் இதுவரை கனடா கந்தசாமி கோவில் மண்டபத்திற்குள்ளும், சில ஒதுக்குப்புறமாகவிருந்த விளையாட்டு மைதானத்திற்குள்ளும் கனேடிய ஊடகங்களிற்குத் தெரியப்படுத்தாமலும், பிற இன மக்களின் கண்களிற்கு தெரியமுடியதாத வகையிலம் நடைபெற்று வந்த """மாபெரும் பேரொழுச்சி""" நிகழ்வுளை வன்னியில் பேரவலம் ஏற்படத் தொடங்க இந்தப் போராட்டங்களை வீதிகளிற்கும் ரொறன்ரோவின் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகர மத்திக்கும் கனேடியத் தலைநகர் ஒட்டாவாவிற்கும் எடுத்துச் சென்று பல்லாயிரக்கணக்கான கனேடியர்களிற்கு எமது மக்களின் அவலத்தை எடுத்துரைத்தது மாத்திரமல்ல கனேடிய ஊடகங்களின் கண்களையும் திறக்க வைத்தவர்கள் இந்த இளையோர்கள்.

தமது கல்வி, வேலை வீடு உறவுகள் என எல்லாவற்றையும் மறந்துவிட்டு பல இளையோர் குளர் மழை எண்டு எதனையும் கண்கெடுக்காது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தனர். இந்தப் போராட்டங்களை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தமது பரீட்சைகளிற்குக்கூடச் செல்லவில்லை.

அமெரிக்க துணைத்தூதரத்திற்கு முன்னால் நடைபெற்ற வீதி மறிப்பு மற்றும் அங்கு இரவு பகலாகத் தொடர்ந்த கவனயீர்ப்பு நிகழ்வே கனேடிய ஊடகங்களின் கண்களை எமது பக்கம்நோக்கித் திருப்ப வைத்தது. காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வீதிமறிப்பு போராட்டத்தை தடுத்தபோதும் வீதியோரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை தொடர்ச்சியாக கனேடிய ஊடகங்கள் பதிவு செய்தும் வந்தன.

இதனைப் பொறுக்க முடியாத தேசியத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் குத்தகைக்கு எடுத்து வழிநடத்தும் பெரியவர்கள், மீண்டும் இந்த எழுச்சி நிகழ்வுகளை கனடா கந்தசாமி கோவிலின் மூடிய மண்டபத்திற்குள் எடுத்துச் சென்று ரிவிஐ, தமிழ் வண், சிரிஆர் சிஎம்ஆர் வானொலிகளின் நேரஞ்சலுடன் மிகப்பாரிய பேரெழுச்சி நிகழ்வாக மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இதனொரு கட்டமாக அமெரிக்கத் துணைத்தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வை இளையோரின் கையிலிருந்து பிடுங்கி குயின்ஸ் பார்க்கிற்குள் மாற்றி பிற இனத்தவர்கள் யாரினதும் கண்களில் படமுடியதவாறு சிறந்தவொரு கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அங்கே ஒரு பெரியவர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகிறார். யாருக்குமே தெரியாது, ஊடகங்களின் கவனத்தைப் பெறாது அவரின் தியாகம் வீணடிக்கப்படுகிறது. இப்படியொரு போராட்டம் நடைபெறுகிறது என்பதை கனேடிய அரசின் கவனத்திற்காவது இதனை ஏற்பாடு செய்தவர்கள் கொண்டுசெல்வார்களா என்பது கேள்விக்குறியே!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மின்னல்

மக்கள் புரட்சியும், மாணவர் புரட்சியையும் இனியொரு காரணம் காட்டி தவிர்க்கமுற்படுபவர்களை இனம் காணுங்கள். யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது.

Edited by valvaizagara

இன்றும் நாம் எதுக்கு போனாலும் நாட்டில இருந்து வந்தது தம்பி அது வேணாம் என இது வேணாம் என சொல்பவர்கள் இருகின்றார்கள்.அவற்றை நாம் ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டு விடுவோம்.

Edited by ஈழவன்85

அவர்களின் வேலைப்பழுவை விட இளையோராகிய எமக்குத்தான் வேலைப்பழு அதிகம் முழு நேர படிப்பு முழு நேரவேலை என நாமும் நேரத்துக்காக அங்கலாய்த்தே வருகின்றோம்.இதனிடையே போராட்ட வேலைகளை நமக்குள் பிரித்து செய்து வருகின்றோம்.

என்னதான் சிக்கல்கள் வந்தாலும் இளையோராகிய நாம் எமது இறுதி குறிக்கோளான தமிழீழம் நோக்கி புலத்தில் எமது போராட்ட களத்தை விரிவாக்குவோம் இது உறுதி.வெளியில் சொல்லப்பட முடியாத பல இடையூறுகளை இங்கே தவிர்த்திருகின்றேன்.அவை நமக்கு தேவையில்லாதவை !!!!

அவர்களின் வேலைப்பழுவை விட இளையோராகிய எமக்குத்தான் வேலைப்பழு அதிகம் முழு நேர படிப்பு முழு நேரவேலை என நாமும் நேரத்துக்காக அங்கலாய்த்தே வருகின்றோம்.இதனிடையே போராட்ட வேலைகளை நமக்குள் பிரித்து செய்து வருகின்றோம்.

என்னதான் சிக்கல்கள் வந்தாலும் இளையோராகிய நாம் எமது இறுதி குறிக்கோளான தமிழீழம் நோக்கி புலத்தில் எமது போராட்ட களத்தை விரிவாக்குவோம் இது உறுதி.வெளியில் சொல்லப்பட முடியாத பல இடையூறுகளை இங்கே தவிர்த்திருகின்றேன்.அவை நமக்கு தேவையில்லாதவை !!!!

மன்னிக்க வேண்டும் நான் எழுதியதை எடிட் செய்ய வெளிக்கிட்டு நான் எழுதியவை அழிந்து போய்விட்டன இடைவெளியில் சேமித்து வைத்து மறு பிரசுரம் செய்ததுக்கு நன்றிகள் :wub:

சாத்திரியார் 100% சரி. இளையோரே நீங்கள் பயணிக்கும் பாதை சரியானதே. நீங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. புலம் பெயர்ந்த நாமும், எம் நாடும் உங்கள் பின் நிற்கிறோம். உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும், தமிழிழம் மலரும். புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் கூத்துகள் யாவும் அறியவேண்டியவர்கள் அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனவே நாம் எம்பங்கை செவ்வனே செய்வோம்.

மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். சீக்கிறம் மலரும் தமிழ் ஈழத்தில் யாவரும் சந்திப்போம்,

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் இளையோரை தலையில் தூக்கி வைச்சுக் கொண்டாடுறீங்க.. இல்ல.. காலில போட்டு மிதிக்கிறீங்க. அவர்கள் பற்றிய உண்மையான நியாயமான மதிப்பீடுகளைச் செய்வதில்லை. இளையோர் சார்பான சில போராட்டங்களில் பங்கு பற்றி இருக்கிறேன். சில விரும்பத்தகாத செயற்பாடுகளில்.. சில இளையவர்கள் செயற்பட்டு.. பல இளையவர்களின் முயற்சிகளைக் கேலிக் கூத்தாக்கும் நிகழ்வுகளும் நடந்தேறின. குறிப்பாக லண்டன் உண்ணாவிரத மேடைக்கு அப்பால்.. ஒரு கூட்டம் கட்டிப்பிடிக்கிறதிலும்.. கொஞ்சுப் படுறதிலும்.. செலவழித்த நேரங்கள் அதிகம். இவர்களை ஒத்த ஒருத்தன் உண்ணாது நோன்பிருக்கிறான்.. இவர்கள் சிலரோ.. அதை சாட்டுவைத்துக் கூடிவிட்டு... செய்கின்ற செயல்கள்... அருவருக்கத்தக்கதாக இருந்தன. இருந்தாலும் அது மொத்த இளையோர் எண்ணிக்கையில் ஒரு சிறிய சதவீதமே. அவர்களும் உணர்வு பூர்வமாக இணைய வேண்டும்.. பொதுப்போராட்டங்களில்..!

இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல. எங்கட ஆக்கள் திருந்தப் போறதே இல்லை..! ஒன்றை ஒன்று பார்த்து குரைச்சிக்கிட்டே இருக்குங்கள்.. மாறி மாறி...! :):wub:

Edited by nedukkalapoovan

ஐநாவை அதிர வைத்த இளையோரே!!!!!!!

குறுகிய காலத்தில் அமெரிக்கா சென்று வந்த இளையோரே!!!!!

உலகத்தின் கண்ளை திறக்க வைத்த இளையோரே!!!!!!

அகிம்சைக்கு உயிர் கொடுத்த வீர மறவர்களே!!!!!!!

ஊடகங்களை தமிழர் பக்கம் திருப்பிய இளையோரே!!!!!

மண்ணின் விடுதலையம் மக்களின் பாதுகாப்பு மட்டும்

உங்கள் தாரக மந்திரமாக கொண்டு அகிம்சை வழியில்

சளைக்காது போராடும் இளையோரே!!!!!!!!!

தலைவனும் தலைவன் வழி வந்த

உணர்வுள்ள அத்தனை தமிழனும் உங்கள்

பின்னால் நிற்கும் போது கதிரைக்கும் பதவிக்கும்

மட்டும் இனத்தை நேசிக்கும் இந்த புல்லுரிவிகளின்

மாற்றுக் கருத்துக்களும்........ மிரட்டல்களும் ஒன்றும் செய்து விடப் போவதில்லை......

பல முறை நீங்கள் உறுதியானவர்கள்.......

கடமை உணர்வு உள்ளவர்கள் என நிருhபித்து விட்டீர்கள்..........

நிருhபித்துக் கொண்டிருக்கிறீர்கள்...............

உங்கள் பின்னால் நாங்கள்

இன்னும் உற்சாகத்தோடும் உற்வேகத்தோடும்

உங்கள் பணி தொடரட்டும்!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.மாணவர் அமைப்பில் உள்ள பல மாணவர்கள் உண்மையான அர்ப்பணிப்புடன் செயப்பட்டாலும் சில மாணவர் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை.மக்கள் எல்லாரும் கோசம் போட்டுக் கொண்டு இருக்க இவர்கள் உண்ணாவிரத மேடைக்கு பக்கத்தில் இருந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள்.தங்கள் சகோதரர்கள் உண்ணாமல் இருக்குறார்கள் என்பதை பற்றி இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை அவர்களை பார்க்க நிற்பவர்கள் கூட[சில பேர்]எந்த நேரம் பார்த்தாலும் வாயில் சுவிங்கத்தை போட்டு சப்பிக் கொண்டு நிற்பார்கள்.வீதி முற்றுகையின் போதும் கூட அவர்கள் வீதிக்கு இறங்க மாட்டார்கள் சில மாணவர்கள் தான் வீதிக்கு இறங்கி காவல்துறையிடம் அடி வாங்கினார்கள் மற்றைய மாணவர்கள் எல்லாரும் உண்ணாவிரதம் இருப்பதற்காக போடப்பட்ட கூடாரத்தில் இருந்து கொண்டார்கள் அது மட்டும் இல்லாமல் உள்ளுக்குள் இருக்கும் மக்களையை எல்லாம் வீதிக்கு போக சொன்னார்கள் அப்போது ஒரு அண்ணா சொன்னார் நீங்கள் மட்டும் ஏன் உள்ளுக்குள் இருக்குறீர்கள் என அப்போது அந்த மாணவி சொன்னா நாங்கள் மீடியா தாங்கள் வெளியால் வர முடியாது என எனக்கு புரியவில்லை மாணவர் அமைப்பில் எத்தனை பேர் மீடியாவில் உள்ளார்கள் என அது மட்டும் இல்லாமல் காலை வேலையில் ஆட்கள் குறைவாக இருந்தால் ஜபிசி வானொலியில் இதே மாணவர்கள் மக்களை கூவி கூவி வாங்கோ வாங்கோ என கெஞ்சி அழைப்பார்கள் ஆனால் மக்கள் போனவுடன் சில மாணவர்கள் அதே மக்களை மிகவும் கேவலமாக நடத்தினர் இதை வீதி முற்றுகையின் போது என் கண்ணால் நான் கண்டது.ஒரு நடுத்தர வயது உடையவர் அவ்வளவு நேரமும் வீதியில் இருந்து விட்டு அப்போது தான் உள்ளே வந்தார் அப்போது அதே தாங்கள் மீடியாவை சேர்ந்தவர்கள் எனச் சொல்லும் இரு மாணவிகள் வந்து சொன்னார்கள் நிற்கிறது எண்டால் வெளியால் போய் நில்லுங்கள் அல்லது வீட்டை போங்கள் என அந்த மாணவி மிகவும் மரியாதையில்லாமல் தங்களிலும் பார்க்க வயதானவர்களை பார்த்து சொன்னது இப்படிபட்டவர்களும் மாணவர் அமைப்பில் இருக்குறார்கள்.பெண்கள் மட்டும் இல்லாமல் சில ஆண்களும்[அமைப்பை சேர்ந்தவர்கள்] தாங்களும் உள்ளூக்குள் இருந்து கொண்டு அங்கு இருக்கும் பெண்களை எல்லாம் காவல்துறைக்கு பக்கத்தில் போய் நிண்டால் அவர்களை[பெண்களை] அடிக்க மாட்டார்கள் என சொன்னார்கள் ஆனால் கடைசியில் கூட அடி வாங்கியது பெண்கள் தான்.அவர்கள்[அமைப்பை சேர்ந்த வர்] வீதிக்கு வர மாட்டார்கள் அத்தோடு வீதியிலும் வந்து இருக்க மாட்டார்கள் ஆனால் மக்கள் மட்டும் தொடர்ந்து மணித்தியாலக கணக்காக வீதியில் இருக்க வேண்டும்.வீதி முற்றுகை என்றால் மாணவர்களும் மக்களோடு சேர்ந்து வீதியில் இருக்க வேண்டும் என்பதே கருத்து.3 லட்சத்திற்கு மேல் இருக்கும் மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட சில மக்களே தொடர்ந்து வந்து மாணவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் ஆகவே அந்த மக்களை அதை செய் இதை செய் என அதிகாரம் காட்டாமல் மாணவர்கள் அவர்களோடு ஒத்து அவர்களோடு சேர்ந்து தாங்களும் செய்ய வேண்டும் மக்களை மட்டும் செய்ய சொல்லி உத்தரவு போடக் கூடாது.

இதை மாணவர் அமைப்பை குற்றம் சாட்டுவதற்காக நான் எழுதவில்லை அவர்களால் தான் போராட்டம் இந்தளவிற்கு வந்தது ஆனால் அவர்களும் தங்கள் பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் தான் நான் கண்டதை,கேட்டதை எழுதினேன்.அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் அவர்களுக்காக போகவில்லை வன்னியில் உள்ள மக்களுக்காகத் தான் செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் அவர்களுக்காக போகவில்லை வன்னியில் உள்ள மக்களுக்காகத் தான் செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது உண்மையாயிருந்தால் ஏன் இந்த நீண்ட பகிரங்க முறைப்பாடு? வன்னி மக்களுக்காக ஒவ்வொருவரும் போனால் மற்றவன் வீதிக்கு இறங்குகிறானா/ளா அல்லது ஏன் இறங்கவில்லை என்ற தகவல் சேகரிப்பு ஏன்? நான் நினைக்கிறேன் இந்த மாதிரி மேய்க்கிற ஆக்களைக் கண்டால் அவர்களிடமே முறைப்பாடு செய்யலாம் நேரடியாக.அது உடனடி விளைவுகளைத் தரும். தனிப்பட்ட அவமானங்கள் புண்படுத்தல்கள் பல உறவுகளால் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படலாம் தான். ஆனால் கை கால் போகிற, கணவன்/மனைவி/பிள்ளைகளை இழக்கும் வன்னி மக்களின் வேதனைகளோடு ஒப்பிடும் போது இந்தத் தனிப் பட்ட வேதனைகள் பெரியவையா என்பது தான் கேள்வி. தவறாயிருந்தால் மன்னிக்கவும். தாழ்மையான கருத்து மட்டுமே!

மாணவர்கள் யார்? பொதுமக்கள் யார்? எல்லோரும் ஈழத்தமிழர்களே! நிமிடத்துக்கு நிமிடம் அகோரமான முறையில் செத்து மடியும் எம்மினத்துக்காக ஒன்றினைவோம்!!

"உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்." -தேசியத்தலைவர்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.