Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பில் இருந்து யாரும் விலகலாம், சேரலாம் ஆனால் கூட்டமைப்புதான் தமிழரின் ஏகபோக அரசியல் கட்சி :):icon_idea::(:D :D

Edited by சித்தன்

  • Replies 185
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் இருந்து யாரும் விலகலாம், சேரலாம் ஆனால் கூட்டமைப்புதான் தமிழரின் ஏகபோக அரசியல் கட்சி :):icon_idea::(:D :D

அதுதான் உண்மை

அது ஈழத்தமிழனனின் ஏகோபித்த குரலாக கட்டி எழுப்பப்பட்டது

அதை யாரும் குலைக்கவோ

உடைக்கவோ

உரிமை கொண்டாடவோ முடியாது

அது எப்படி? அதனை யார் முன்னெடுப்பது ? ஏன் நாம் இப்படி நிற்கிறோம்? எமக்கென ஒரு தேசம் வேண்டாமா?

அது தேவை என்பதால்தான் அவதானம் தேவை

மிகவும் கஷ்டப்பட்டு பிரித்துள்ளீர்கள்.

இதிலிருந்து, தங்களின் நோக்கம் தெளிவாகவே புரிகின்றது.

யாழ் உறவுகளே!

நம்மைப் பிரிப்பவர்களும், நம் உரிமைகளைப் பறிப்பவர்களும் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள்.

சதிவலைகளுக்குள் தாங்கள் விழுந்தது மட்டுமல்லாமல், நம் அனைவரையும் இழுத்து வீழ்த்துவதற்கு அலைகின்றார்கள்.

அவதானம்! எச்சரிக்கை!

மிகவும் கஸ்டப்பட்டு கண்டுபிடிக்க இல்லை. கருத்துக்களை மேலோட்டமாகப் பார்த்தபோதே விளங்கியது. :) மேலும்.. எனது நோக்கத்தைத்தான் தாங்கள்தான் மிகவும் கஸ்டப்பட்டு கண்டுபிடித்து இருக்கின்றீர்கள் போல இருக்கின்றது. தாங்கள் சொல்வது முழுவதும் உண்மை. அவதானமாக இருங்கள். முடியுமானால் இதை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

டக்ளஸ் தனித்து நின்று அந்தச் செயற்பாட்டைச் செய்கின்றாரா என்றால் அதுவுமில்லை. சிறிலங்கா அரசோடு தான் நின்று செய்கின்றது. அது போல புளோட்காரர் வவுனியாவில் இடம்பெயர்ந்து வந்த பெண்களைப் பலவந்தப்படுத்துவதாகச் செய்திகள் வருகின்றது. 16 வயதுச் சிறுமி ஒருத்தி சமீபத்தில் கொல்லப்பட்டிருந்தார்.

இப்படியான நாசங்கெட்ட பிறப்புக்களைத் தலைமையாகக் கொண்டு என்ன புடுங்கப் போகின்றோம்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து புறநிலையரசு, புண்ணாக்கு, ஆயுதம் தூக்கிப் புடுங்குவோம் என்று சவால் விடுவதும், பிற்பாடு ஒன்றுமே தெரியாத மாதிரி ஓடி முடங்குவதும் தெரியாத ஒன்றல்ல.

சமீபத்தில் தமிழ்க்கூட்டமைப்பு தமிழர் பலத்தை ஒரே சக்தியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த நாய்கள் வரல்ல... இந்த நாய்களுக்குப் பதவி முக்கியம்.

விடுதலைப் புலிகளின் செய்தி என்னவென்று அறியாமல் எச் செயலும் செய்திட முடியாது. முடிவெடுப்பது அங்குள்ள உறவுகளாக இருக்கலாம். அவர்கள் 3ம் ஆட்களல்ல, அவர்களுக்குப் பொருத்தமான முடிவைக் கொடுக்க வேண்டியதும் எங்களின் பொறுப்பு!

ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள்... தமிழர்கள் தங்களது பேரம் பேசும் பலத்தை இழந்து விட்டார்கள்... யாரையும் எங்களுக்கு உதவ வேண்டியது இல்லை எண்று சொல்லக்கூடிய நிலையிலும் தமிழர்கள் இல்லை...

எங்களுக்கு துரோகம் செய்யாதவர்கள் யாருமே இல்லை எண்று சொன்னால் ஏற்று கொள்வீர்களோ தெரியவில்லை... டக்கிளஸ் , சித்தார்த்தனை தாண்டி தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்தவர்கள் பட்டியல் உள்ளது அதில் உங்களதும் எனதும் பெயர் கூட இருக்கிறது...

தமிழரின் வீழ்ச்சிக்கு காரணங்களை ஆராயுங்கள்... 37 வருடமாக தனது இளமையை தமிழருக்காக விடுதலை வாங்கி தர துடித்த தலைவருக்கு எவ்வளவு தூரம் ஒட்டு மொத்த தமிழரும் துணை நிண்றார்கள் எண்று பார்த்தீர்கள் வெறும் 10% மான தமிழர்கள் கூட இல்லை எனும் உண்மை புரியும்... மிகுதி 90% மானவர்களும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகிறார்கள்... இவகர்களில் அனேகர் வெறும் ஆதரவாளர்களாகவே இருந்து விட்டார்கள்... அதில் முதலாவது ஆளாக நான், அடுதவராக உங்களது பெயரும் கூட உண்டு..

விடுதலை என்பது யாரும் யாருக்கும் பெற்று தருவதில்லை அதை நாங்கள்தான் எடுத்து கொள்ள வேண்டும்... அதை செய்ய தவறி விட்டு இண்று பழியை போடுவதுக்கு ஆள் தேடுவது சிறந்த செயல் அல்ல...

டக்கிளஸ் முதல் வேறு யாரும் எங்களுக்கு தலைவராக வர விடுங்கள் என்பது கோரிக்கை இல்லை... அவர்களை எங்களின் எதிரிகளாகவே இருக்க தூண்டாதீர்கள் என்பது மட்டும் தான்...

இண்று விழுந்து கிடக்கும் வன்னி மக்களை எழுந்து உக்காருவதுக்கு வளி வகைகளை செய்யுங்கள் என்பது மட்டும் தான் வேண்டுவது... அதை யார் செய்தாலும் பறவாய் இல்லை... மகிந்த கூடவும்தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தில் கருத்து எழுவதா விடுவதா என்று எனக்குள் இருந்து குழப்பத்தை நீக்கிவிட்டு எனது கருத்தைப் பகிர்கிறேன். டக்ளசின் கரத்தை பற்றிக் கொள்வதற்கு பலர் தயாராய் இருப்பதனால் எனது கருத்தை பதிய வேண்டிய அவசியமிருக்கிறது.

தமிழின வரலாற்றில் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் டக்ளஸ் பழையனவற்றை மறந்து விட்டு எல்லோரும் இணைந்து செயற்படுவோம் எனக்குறிப்பிட்டிருந்தால், அதனை உண்மையில் வரவேற்றிருப்பேன். ஆனால், பல்லாயிரம் உறவுகளை காவுகொண்ட இந்தப்போரில் சிங்கள அரசாங்;கத்துடன் தோள் நின்ற அமைச்சர் தேவானந்தா எல்லாம் முடிந்து போய்விட்டது எனக்கருதப்பட்ட நாளிலிருந்து மூன்று வாரங்களுக்கிடையில் புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அதுவும் வடக்கின் முதலமைச்சர் பதவி தனக்கு கிட்டாது என நன்கு அறிந்த பின்னர், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியை கலைத்துவிட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சேருமாறு நெருக்குவாரம் அதிகரிக்க தொடங்கியதும், வேறு வழியில்லாமல் உங்களை நோக்கி வருகிறார். எல்லாமே பிழைத்துப் போனால் அவரது தோழர் தவராசாவைப் போல் இங்குதான் தஞ்சம் கோர வேண்டும் எனத் தெரிந்துகொண்டு இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது என்பதை விளங்கிக் கொண்டீர்களானால் போதும்.

டக்ளஸ் தனது நேர்மையை, தமிழ் மக்களர் ஒற்றுiயில் அவர் வைத்துள்ள நம்பிக்கையை நிரூபிக்க விரும்பினால், இன்னும் ஒன்றும் குறைந்து போகவில்லை, வரும் மாநகரசபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்;டமைப்புடன் இணைந்து போட்டியிடட்டும். நான் அறிந்தவரை அவ்விதம் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தயாரகவிருக்கிறது.

அண்மையில் மகிந்த இராஜபக்சவினை கொழும்பில் சந்தித்த ஒரு முன்னணி தமிழ் தினசரியின் ஆசிரியர், அவரிடம் டக்ளஸ் வடமாகாண முதலமைச்சராக வருவதை விரும்புகிறீர்களா என வினவியிருந்தார். "இல்லை நான் இன்னொரு பிரபாகரன் உருவாவதை விரும்பவில்லை" என்பது பதிலாக வந்ததாம்.

விடுதலைப்புலிகள் பலமாகவிருந்தபோது அவர்களுக்கு எதிரான ஐனநாயக சக்தியாக காண்பிக்கப்பட்ட டக்ளசை சிங்களம் உதறித்தள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மே மாதம் காலச்சுவடு இதழில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதனை யாழ்பாணத்திலிருந்து ஒருவர் அநாமதேயமாக எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததைத்தருகி

M17 அண்ணை டக்கிள்ஸ் துரோகி எண்டுறீயள் 100% நீங்கள் சொல்லுறதை ஒத்து கொள்ள வேணும்.. ஒத்துக்கொள்கிறன்..

இப்ப ஒரு கேள்வி எழுகிறதே அப்ப தமிழ் மக்களுக்காக உண்மையில் துரோகம் செய்யாது உழைத்தவர்கள் யார்( தேசிய தலைவரும் மாவீரர்களையும் போராளிகளையும் தவிர ) ...????

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் புலிகளை தவிர தமிழர்கள் எல்லாருமே துரோகிகள்தான்.... எல்லாரும் ஏதோ ஒரு வகையில் துரோகம் செய்தவர்கள்தான்.... டக்கிளஸ் அதிகமான துரோகம் செய்தவர்... அவ்வளவுதான்...

மாவீரர்களே எங்களை மன்னித்து விடுங்கள். இனி நீங்கள் பயங்கரவாதிகள்.

இனி எங்கள் தலைவர் டக்ளஸ்

எங்கள் கொடி வீணைக்கொடி

நீங்கள் பயங்கரவாதிகள்.

30 வருடம் போராடி என்ன சாதித்தீர்கள்?. கொழும்பும் புகையிரதமும் தெரியாத நாங்கள் உங்கள் துன்பங்களையும் சோகங்களையும் விற்று வெளிநாடு வந்து உல்லாசமாய் இருப்பதை தவிர.

துரோகியுடனா சேர்வது என்கிறீர்கள். உங்களை விடவா.

இறுதிக்கட்டம் என்று பணம் வாங்கினீர்கள். சாகும் போது தந்துவிட்டாவது போயிருக்க வேண்டாமா. வட்டியுடன் திருப்பித் தருவீர்கள் ஏன் எனில் நீங்கள் எப்பொழுதும் வெல்லும் குதிரை என்று தானே பணம் கட்டினோம். கடைசியில் நீங்கள் அழிந்தது மட்டுமல்லாமல் ?

ஊரில் ஐந்துக்கும் பத்திற்கும் லாட்டரி அடித்த நாங்கள் உங்கள் போராட்டத்தின் பயனாய் லட்சக்கணக்கில் உழைப்பதற்காக நாங்கள் போட்ட தர்மப்பணம் என்றா நினைத்தீர்கள் அதை . எமது முதலீடல்லவா அது.

இப்பொழுது டக்ளஸ் தான் வெற்றிக்குதிரை. எமது அரசியல் பத்திரிகை வியாபாரம் ஓகோவென்று நடக்க நாங்கள் டக்ளஸிற்கு கு........... கழுவ தயாராகிவிட்டோம். எங்களுக்கு ஐந்து பத்து கிடைக்குமென்றால் கோத்தபாயவிற்கு கழுவவும் நாம் தயார்.

இழவு விழுந்து ஒரு மாதமும் ஆகவில்லை. அதற்குள்ளாகவா என்று கேட்கறீர்கள். சாவு வீட்டில் பிணத்தை வைத்துக்கொண்டு பங்கு பிரிக்கும் உயர் தமிழ்சாதி அல்லவா நாம்.

அதற்காக நாம் தொடர்ந்தும் டக்ளஸற்குத்தான் கழுவுவோம் என்றில்லை. முன்பும் நீங்கள் காட்டுக்குள் இருந்தபோது நாங்கள் ஆமிக்கு கழுவவில்லையா. பின்னர் நீங்கள் வந்தபோது உண்மையான உங்களது விசுவாசிகளை எட்டத்தில் வைக்க விட்டு உங்களுடன் திரியவில்லையா.

மீண்டும் உங்கள் இயக்கம் வலுப்பெறட்டும். நாங்கள் தான் உங்கள் தீவிர ஆதரவாளர்.

அதுவரை நீங்கள் பயங்கரவாதிகள்.

நன்றி.

தமிழரின் தாகம் டக்ளஸிற்கு சேவகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள்... தமிழர்கள் தங்களது பேரம் பேசும் பலத்தை இழந்து விட்டார்கள்... யாரையும் எங்களுக்கு உதவ வேண்டியது இல்லை எண்று சொல்லக்கூடிய நிலையிலும் தமிழர்கள் இல்லை...

எங்களுக்கு துரோகம் செய்யாதவர்கள் யாருமே இல்லை எண்று சொன்னால் ஏற்று கொள்வீர்களோ தெரியவில்லை... டக்கிளஸ் , சித்தார்த்தனை தாண்டி தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்தவர்கள் பட்டியல் உள்ளது அதில் உங்களதும் எனதும் பெயர் கூட இருக்கிறது...

தமிழரின் வீழ்ச்சிக்கு காரணங்களை ஆராயுங்கள்... 37 வருடமாக தனது இளமையை தமிழருக்காக விடுதலை வாங்கி தர துடித்த தலைவருக்கு எவ்வளவு தூரம் ஒட்டு மொத்த தமிழரும் துணை நிண்றார்கள் எண்று பார்த்தீர்கள் வெறும் 10% மான தமிழர்கள் கூட இல்லை எனும் உண்மை புரியும்... மிகுதி 90% மானவர்களும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகிறார்கள்... இவகர்களில் அனேகர் வெறும் ஆதரவாளர்களாகவே இருந்து விட்டார்கள்... அதில் முதலாவது ஆளாக நான், அடுதவராக உங்களது பெயரும் கூட உண்டு..

விடுதலை என்பது யாரும் யாருக்கும் பெற்று தருவதில்லை அதை நாங்கள்தான் எடுத்து கொள்ள வேண்டும்... அதை செய்ய தவறி விட்டு இண்று பழியை போடுவதுக்கு ஆள் தேடுவது சிறந்த செயல் அல்ல...

டக்கிளஸ் முதல் வேறு யாரும் எங்களுக்கு தலைவராக வர விடுங்கள் என்பது கோரிக்கை இல்லை... அவர்களை எங்களின் எதிரிகளாகவே இருக்க தூண்டாதீர்கள் என்பது மட்டும் தான்...

இண்று விழுந்து கிடக்கும் வன்னி மக்களை எழுந்து உக்காருவதுக்கு வளி வகைகளை செய்யுங்கள் என்பது மட்டும் தான் வேண்டுவது... அதை யார் செய்தாலும் பறவாய் இல்லை... மகிந்த கூடவும்தான்...

சரி. பொதுவாகவே ஒரு விடயம் தெரியும். மகிந்த உற்பட்ட அனைவருக்குமே...தமிழர்களில் ஏற்படும் கிளர்ச்சியை அடக்க சில மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது. அதற்காக ஒரு 3 வேளை சாப்பிட்ட ஒருவனுக்கு, சாப்பாடே கிடைக்காமல் செய்து விட்டு, பிறகு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தால் அதுவே போதுமென்ற நிலைக்கு அவனை எப்படி மாற்றம் செய்ய முடியுமோ, அவ்வாறான நிலையைத் தான் உங்களின் பதிலும் தருகின்றது.

ஏன் இது வரை காலமும், மற்றய எந்தத் தமிழ் அமைப்புக்களும் இருந்திடாத அளவு கருணாவும், டக்ளசும் அரச பினாமிகளாக இருந்தவர்கள்.. அப்படிப்பட்டவர்களை தமிழ்மக்களுக்கு ஆதரவான சிந்தனை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த இப்படி ஒரு நாடகத்தை ஏற்படுத்தச் செய்து, திசை மாறச் செய்ய மகிந்த அரசு முயற்சிக்காது என்பது என்ன நிச்சயம்..

இன்றைக்கு டக்ளஸ் மீதான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தச் செய்து விட்டு, பிற்பாடு அவரைப் பின்பற்றுகின்றவர்களுக்குப் பிழையான வழி கிடைக்க வைக்கப்படும். அது பின்னடைவுகளால் தளர்ந்து போய்விட்ட எம் விடுதலைப் போராட்டத்தின் ஒளியை நீக்கச் செய்கின்ற வழியாகும்.

இன்றைக்கு எம் விடுதலைப் போராட்டத்தைச் சிங்கள தேசம் சிதறடித்ததும், எம் தலைமையை அழி்க்கவும் ஒரு நயவஞ்சக வழியைப் பயன்படுத்தியது. எம் போராளிகள் மக்களை விட்டு விட்டு விலத்திச் செல்லாமல் இருக்க, மக்களைக் கொல்லுதல் என்ற வழியைப் பாவித்தது. இதனால் எம் தலைமையால் அம் மக்களை பாதுகாக்கின்ற செயற்பாட்டைச் செய்ய வேண்டிய பலவந்தமான நிலையைச் சிங்கள தேசம் திணித்தது.

இதனால் தான் எம், தளபதிகள், தலைவர், போராளிகள் எவராலும் மக்களை விட்டு விட்டு, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, போராடும் சக்தியைப் பாதுகாக்க முடியாமல் போனது.

அதே போன்றதொரு நிலையைத் தான் இப்போது சிங்கள தேசம் 3 லட்சம் மக்களை வைத்துப் புலம்பெயர் மக்களோடு போர் புரிகின்றது. அதற்கு அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவையை, அந்த மக்களை அழுத்துவதன் மூலமான திட்டத்தின் ஊடாக முன்னேடுகின்றது.

அது புலம்பெயர் மக்கள் கொண்டிருக்கின்ற தமிழீழக் கொள்கையைச் சிதறடிக்கப் பாவிக்க முனைகின்றது. இந்த வலைக்குள் பலர் விழுந்திருப்பதைத் தான் கருத்துக்கள் உணர்த்துகின்றன.

அந்த 3 லட்சம் மக்களை மீட்பதற்காக......எது வரை குனியலாம் என முடிவெடுத்திருக்கின்றீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

முகாமில இருக்கிற சனங்களே இவன்ர உதவி வேணாம் என்று சொல்லுதுகள். தாங்கள் செல்லடி பட்டுச் செத்திருக்கலாம் என்றுதுகள்.. இவங்கட ஆக்கினை தாங்க ஏலாம. ஆனால் புலம்பெயர்ந்த சிலருக்கு.. டக்கிளசின்.. பிட்சா கடையில வேலை வேணுமாம் பெற்றுக் கொடுங்கோ. தினமுரசுக்கு விற்பனை வேணுமாம் விற்றுக் கொடுக்கட்டும். சொந்த தாயையே விற்கத் துணிந்ததுகள்.. டக்கிளசை கட்டிப் பிடிக்காம இருக்குங்களா.

டக்கிளஸ்.. உதவியும் தேவையில்ல. அவன் உபத்திரபம் செய்யாமல் போய் சேர்ந்தான் என்றால் நல்லா இருக்கும். அதை யாராவது அண்ணாமார் செய்யுங்கோ பிளீஸ். இவங்களை எல்லாம் விட்டு வைச்சதுதான் தமிழன் செய்த முதற் தவறு. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்திகளுக்கும் விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தால் போல் நேற்றைய அறிக்கை அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன். நாங்கள் மிகவும் மின்னல் வேகத்தில் எல்லாம் நடைபெற வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் அதே வேகத்தின் காரணமாக எமது தவறுகளை திருத்தும் சந்தர்பபங்களை தவற விடுகின்றோம். என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.

இறுதியாகச் சொல்லுங்கள், தமிழீழம் வேண்டுமா? வேண்டமா??

9 வருடம் சேவை ஆற்றி விட்டு ஒரு நாள் என்ர அம்மாவின் அழுகை கடித்தையும், அக்காவின் அழுகையையும் கண்டு எல்லாத்தையும் விட்டு போட்டு வந்த ஆள் நான்... இந்த வகையிலை நானும் என் நாட்டுக்கு துரோகம் செய்த ஆள்தான்... போராட்டம் தொடங்கின காலம் தொட்டு இண்று வரைக்கும் போராட்டம் போதும் எண்டு விலகி போனவர்கள் தொகை 40 000 எட்டும் எண்று ஒரு தளபதி சொல்லி கவலைப்பட்டதாக கேள்விப்படேன்... இப்படி தேசியத்தின் பணத்தில் பயிற்ச்சிகளை பெற்றவர்கள் ஒருபக்கம் போராட்ட பக்கமே போகாமல் வீரம் மட்டும் பேசியவர்கள் ஒரு பக்கம் எண்று துரோகத்தாலையே கட்டப்பட்டது எங்கட இனம்...

எல்லாத்தையும் தேசியத்தலைவர் பார்த்து கொள்வார் நாங்கள் பெரியார் கொள்கையை வழர்ப்பம், கோயிலை கட்டுவம், யாருக்காவது துரோக பட்டம் கட்டுவம் எண்டு இருந்தவை தான் அதிகம்..

எனக்கு தமிழீழம் வேணுமா இல்லையா எண்டதை விட மக்கள் உயிர் வாழ்வது அவசியமா இல்லை வறட்டு கௌரவத்தால் எல்லாரையும் நடை பிணமாக்க போகின்றோமா எண்று கேட்பது பறவாய் இல்லாமல் இருக்கும்...

அதை விட நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒண்று இருக்கிறது... போதுமான தமிழர்கள் புலிகளாக தாங்களாக முன்வந்து போராட முன்வரவில்லை, புலிகளாக இணையாத தமிழர்கள் ( வன்னிமக்கள் செய்யத அளவுக்கு கூட) , போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் அளவுக்கு போராட முன் வரவில்லை... போதுமான நிதியை புலிகளுக்கு வழங்க இல்லை... புலம்பேயர்ந்தவர்கள் கூட போதுமான ஆதரவை கொடுக்க இல்லை...

அப்படி எல்லாம் புலிகளுக்கு மக்களின் பெயரால் நிகழ்ந்து இருந்தால் " டங்கிளஸ்" எனும் துரோகியோ மற்றய துரோகிகளோ உருவாகி இருக்க சந்தர்ப்பமே இல்லையே...

முதலில் எங்களின் குறைகளை களைய முன் வாருங்கள் பிறகு மற்றவர்களையும் துரோகிகளையும் பார்க்கலாம்...

100% தமிழ் மக்களும் விடுதலை வேண்டும் எண்று கேட்க்க வேண்டும் எண்று இல்லை குறைந்தது 65 % மாவது வேண்டாமா...??? அப்படி முழு ஈடுபாட்டோடு வியட்நாமியர்கள் போல போராடிய மக்கள் தொகை என்ன...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குத் தெரிந்தது இரண்டே இரண்டுதான்..! ஒன்று கட்டிப்பிடித்து உம்மா குடுப்பது.. இல்லையென்றால் காறி உமிழ்வது.. :D

டக்கியின் இந்த அறிக்கையைப் பொறுத்தவரையில், எல்லாரும் ப‌ழசை மறந்திட்டு ஒன்றுபடுவம் வாங்கோ எண்டிறார்..! நல்ல விசயம் தானே..! நாங்கள் இதுக்கு அவருக்கு சொல்ல வேண்டிய பதில், ஓம் செய்யலாமே.. அதுக்கு முதலாவதா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயல்ப்படுங்கோ பிறகு அடுத்த கட்டத்தை யோசிப்பம் எண்டு..! சித்து விளையாட்டில இறங்கிறவன் விட்டிட்டு ஓட மாட்டானா? :D

இப்பிடி செய்யக்குள்ள ஏதாவது ஒண்டு ரெண்டு நன்மை அவனால் கிடைச்சாலும் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்..! அரசியல் ரீதியா சிங்களவனிட்டையும் டக்கியை வச்சு காய் நகர்த்தலாம்தானே.. வந்தால் மலை.. போனால் ***..! ஆனால் காய் இதுக்கு உடன்படாது என்பது என் தனிப்பட்ட கருத்து..!

  • கருத்துக்கள உறவுகள்

புலிஎதிர்ப்பால் வாழ்ந்தவர்கள் இனி வாழமுடியாத ஒரு நிலையை புலிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களை சிருஸ்டித்த கடவுள்கள் இவர்களது காவல் தெய்வங்கள் எல்லாம் இப்போ புலி இல்லை என்று சொல்லிவிட்டார்கள் கடவுளார்களே சொல்லிவிட்டார்கள் இவாள் மனுசாள் இனி எப்படி புலிஎதிர்ப்பு அரசியலால் வயிறுவளர்ப்பது? அதுதான் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க வெளிக்கிட்டார் தொப்பனார். இப்போதும் இவர்களுக்கு முகாம்களில் வாழும் மக்களை கண்ணுக்கு தெரியவில்லை புலம்பெயர் மக்களைத்தான் தெரிகிள்றது...... இஞ்சதானே சுரண்டலாம்.

அவர் மறப்போம் மன்னிப்போம் என்றுவிட்டாராம். நாங்கள் அறிவை பயன்படுத்தி அவருடன் கூடி அரசியல் செய்யவேண்டுமாம். கேடு கெட்ட நாய்களே........ எமது அக்காக்ளை எமது கண்முன்னே ஆமியுடன் கூட்டி கொடுத்து கொம்மாளமிட்டு கற்பளிக்க கல்எடுத்து கூட எறியமுடியாத வயதில் இருந்து வீணே அழுதொகொண்டு பார்த்துகொண்டிருந்த எங்களுக்கு நீங்கள் எழுதி கொண்டிருக்கின்றீர்கள் என்பதையும் எண்ணிவிட்டு எழுதுங்கள்.

இலங்கையின் எந்நிலையும் என் வாழ்வை பாதிக்காது என்பதனால் இதை சொல்லவில்லை....... நீங்கள்தான் ஏதோ மக்களுக்காக வேண்டுபவர்போல் நாடகமாடதீர்..

நற்சிந்தனையே நல்ல பலனை தரும். வேட்டை நரிகளுடன் மக்களை கூட்டிவிடுவதிலும் விட சிங்களவனிடம் விடவது சால சிறந்தது. தமிழ் வாழவிட்டாலும் மக்கள் வாழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட கிண்ட தறுதலைகளும் இப்ப தலைவனாக பார்க்கிறாங்கள் :D

ஒரு கப்பல் காரன் என்ன செய்வானாம் தனது நிறுவனம் நஸ்ரத்தில் இயங்கும் போது அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அந்த கப்பலில் சரக்குகள் ஏற்றி[சரக்குகள் ஏற்றாமல் ] கொண்டு சென்று நடுக்கடலில் ஏதாவது விபரீதத்தை ஏற்படுத்தி கப்பல் மூழ்கி விட்டது காப்புறுதி கொடுங்கள் சரக்குகளின் பெறுமதி இவ்வளவு என்று சொல்லி காப்புறுதி நிறுவனங்களிடமும் காசு பெற்றுக்கொண்டு தனது வேலையை பார்த்து கொள்ளுவான் ஆனால் யாருக்கு நஸ்ரம் அந்த கப்பல் காரனை நம்பியிருந்த பல சிறு வணிக நிறுவனங்களுக்குத்தான்

யாழின் சின்னமும் இப்ப வீணையாயிற்று போல :D:D

இந்த டக்கிளசு பன்னி ஒரு அறிக்கை விட்டிருக்கு.. அதையும் ஆராஞ்சு கருத்து சொல்லுறம் நாங்கள்..

டக்கிளசுக்கு வந்த வாழ்வை பாருடா... கேக்கிறவன் கேணையா இருந்தா எரும மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குத் தெரிந்தது இரண்டே இரண்டுதான்..! ஒன்று கட்டிப்பிடித்து உம்மா குடுப்பது.. இல்லையென்றால் காறி உமிழ்வது.. :D

டக்கியின் இந்த அறிக்கையைப் பொறுத்தவரையில், எல்லாரும் ப‌ழசை மறந்திட்டு ஒன்றுபடுவம் வாங்கோ எண்டிறார்..! நல்ல விசயம் தானே..! நாங்கள் இதுக்கு அவருக்கு சொல்ல வேண்டிய பதில், ஓம் செய்யலாமே.. அதுக்கு முதலாவதா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயல்ப்படுங்கோ பிறகு அடுத்த கட்டத்தை யோசிப்பம் எண்டு..! சித்து விளையாட்டில இறங்கிறவன் விட்டிட்டு ஓட மாட்டானா? :D

இப்பிடி செய்யக்குள்ள ஏதாவது ஒண்டு ரெண்டு நன்மை அவனால் கிடைச்சாலும் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்..! அரசியல் ரீதியா சிங்களவனிட்டையும் டக்கியை வச்சு காய் நகர்த்தலாம்தானே.. வந்தால் மலை.. போனால் ***..! ஆனால் காய் இதுக்கு உடன்படாது என்பது என் தனிப்பட்ட கருத்து..!

என்ன மாதிரிக் காய் நகர்த்தப் போறிங்கள்... புலத்தமிழரின் அறிக்கைக் காய் நகர்த்தலில் பெற்ற வெற்றியையும் சொல்லுங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரிக் காய் நகர்த்தப் போறிங்கள்... புலத்தமிழரின் அறிக்கைக் காய் நகர்த்தலில் பெற்ற வெற்றியையும் சொல்லுங்கள்??

தூயவன்.. இதுவரை நடந்தவற்றின் நன்மை தீமைகளை ஆராய நான் முன்வரவில்லை..! அதற்கான தகுதியும் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால்..டக்கியின் இந்த அறிக்கையை இரண்டு விதமாக அணுகலாம்.. ஒன்று உணர்வுரீதியாக.. இரண்டாவது அரசியல்ரீதியாக..!

தமிழர் போரட்டம் அதிகப்படியாக உணர்வுரீதியில் (புலம்பெயர் தமிழரிடத்தில்) இயங்கியதே எனக்கு ஒரு குறையாகப் படுகிறது. இனிமேலும் மேற்கொண்டு உணர்வுரீதியில் அணுகப்போகிறோமா அல்லது அரசியல் ரீதியில் செய்யப்போகிறோமா..!? எமக்குள் மட்டுமே பேசிக்கொள்வதற்கு உணர்வுகள் போதும். மூன்றாமவனிடம் கொண்டு செல்ல அரசியலே தேவை..! எமது உணர்வுகள் அவனுக்குப் புரியாது..!

நமக்கும் அடுத்தவன் உணர்வுகள் பெரிதும் புரிவதில்லைதானே.. உதாரணமாக கனேடியர்கள் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் சண்டையிட்டது பல வெள்ளைகளுக்கு உணர்வுரீதியானது..! ஆனால் அவற்றை நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா..! அது போன்றதே எமது பிரச்சினையும்..!

உலகத் தமிழர்களுக்கான ஒரு குரல் அமைய வேண்டியது அவசியம்..! அதற்கான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நம்புகிறேன்..! அப்படி ஒரு அமைப்பு உருவாகும் பட்சத்தில் அவர்கள் இவற்றை அரசியல் ரீதியாக கையாள்வதே சரியான வழியாக இருக்க முடியும்..! அதற்கான காலம் உருவாவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் முடிந்தால் செயலில் காட்டட்டுமே . இவ்வளவு பெரிய அறிக்கை வெலிங்டன் சந்தியில் ஒட்டிய பெரிய போஸ்டர்களை தான் ஞாபகப்படுத்துகிறது. தனக்கு இருக்கும் பதவி மூலம் 3 லட்சம் மக்களுக்கு மறுவாழ்வு அளித்து சரணடைந்த போராளிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கட்டும். ஒன்றும் செய்யாமல் மன்னிப்போம் மறப்போம் என்று யாரும் அறிக்கை விடலாம் தானே.

ஆக்கபூர்வமான

அத்தியாவசிய

அதிலும்

மறுக்காமல் செய்யமுடியுமான கேள்வி...

ஆசை....

பார்ப்போம்

அவற்ரை ஆக்கள் பலர் இருக்கினம் யாழ். இணையத்தில்

தயவு செய்து இதை கொண்டுபோக மறக்காதீர்கள்

நல்லாயிருப்பியள் வாழ்க்கையில்..........

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் தேசியத்தலைவர் பார்த்து கொள்வார் நாங்கள் பெரியார் கொள்கையை வழர்ப்பம், கோயிலை கட்டுவம், யாருக்காவது துரோக பட்டம் கட்டுவம் எண்டு இருந்தவை தான் அதிகம்..

எனக்கு தமிழீழம் வேணுமா இல்லையா எண்டதை விட மக்கள் உயிர் வாழ்வது அவசியமா இல்லை வறட்டு கௌரவத்தால் எல்லாரையும் நடை பிணமாக்க போகின்றோமா எண்று கேட்பது பறவாய் இல்லாமல் இருக்கும்...

அதை விட நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒண்று இருக்கிறது... போதுமான தமிழர்கள் புலிகளாக தாங்களாக முன்வந்து போராட முன்வரவில்லை, புலிகளாக இணையாத தமிழர்கள் ( வன்னிமக்கள் செய்யத அளவுக்கு கூட) , போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் அளவுக்கு போராட முன் வரவில்லை... போதுமான நிதியை புலிகளுக்கு வழங்க இல்லை... புலம்பேயர்ந்தவர்கள் கூட போதுமான ஆதரவை கொடுக்க இல்லை...

அப்படி எல்லாம் புலிகளுக்கு மக்களின் பெயரால் நிகழ்ந்து இருந்தால் " டங்கிளஸ்" எனும் துரோகியோ மற்றய துரோகிகளோ உருவாகி இருக்க சந்தர்ப்பமே இல்லையே...

முதலில் எங்களின் குறைகளை களைய முன் வாருங்கள் பிறகு மற்றவர்களையும் துரோகிகளையும் பார்க்கலாம்...

100% தமிழ் மக்களும் விடுதலை வேண்டும் எண்று கேட்க்க வேண்டும் எண்று இல்லை குறைந்தது 65 % மாவது வேண்டாமா...??? அப்படி முழு ஈடுபாட்டோடு வியட்நாமியர்கள் போல போராடிய மக்கள் தொகை என்ன...??

மாட்டை அடிச்சு நாயைக் காவல் வைத்த மாதிரி, அல்லவா உங்கள் கதை போகின்றது. டக்ளசைப் பின்பற்றி இருக்கின்ற எல்லாமே அழிஞ்சு போய் விடும் என்று தான் சொல்லவாறது. அதைப் புரியாமல் ஏன் பழங்கதை கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

இயக்கமே, துரோகி என்ற வார்த்தைகளைப் பல ஆண்டுகளாகப் பாவிப்பதில்லை. ஒட்டுக்குழு என்று தான் பாவித்து வந்தது. மகிந்தவுடன் சேர்ந்து நிற்கின்ற ஒருவனால், எப்படி என்ன செய்து விட முடியும்??? அது தான் கேள்வியே தவிர, துரோகிப்பட்டம் சூட்டுவது என் வேலையல்ல

தமிழீழம் தேவையா இல்லையா என்பதற்கு உங்களுக்குத் தெளிவான பதிலைத் தரமுடியவில்லை... இழப்புக்கள் வரும் என்று தெரியாமல் போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. என் உறவுகள் பலர்( 50 பேர் வரும்) இப்போதும் வவுனியா முகாமில் தான் உள்ளனர். ஆனால் அதற்காக எவ்வித திர்வுமின்றி இதே கோலத்தில் இருந்து விட முடியுமா??

தமிழீழம் தேவையென்றால் சிங்கள பேரினவாதத்தை வலிக்க வைக்காமல் நாம் வெல்லப் போவதில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தனை பேர் இங்க வைச்ச கருத்துக்களை 'டக்கி" வாசிப்பனோ?!!!...

உறவாடிக்கெடுத்தவனை எப்போதும் ஒருபோதும் எதுக்காகவும் நம்ப ஏலாது!.

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டை அடிச்சு நாயைக் காவல் வைத்த மாதிரி, அல்லவா உங்கள் கதை போகின்றது. டக்ளசைப் பின்பற்றி இருக்கின்ற எல்லாமே அழிஞ்சு போய் விடும் என்று தான் சொல்லவாறது. அதைப் புரியாமல் ஏன் பழங்கதை கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

இயக்கமே, துரோகி என்ற வார்த்தைகளைப் பல ஆண்டுகளாகப் பாவிப்பதில்லை. ஒட்டுக்குழு என்று தான் பாவித்து வந்தது. மகிந்தவுடன் சேர்ந்து நிற்கின்ற ஒருவனால், எப்படி என்ன செய்து விட முடியும்??? அது தான் கேள்வியே தவிர, துரோகிப்பட்டம் சூட்டுவது என் வேலையல்ல

தமிழீழம் தேவையா இல்லையா என்பதற்கு உங்களுக்குத் தெளிவான பதிலைத் தரமுடியவில்லை... இழப்புக்கள் வரும் என்று தெரியாமல் போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. என் உறவுகள் பலர்( 50 பேர் வரும்) இப்போதும் வவுனியா முகாமில் தான் உள்ளனர். ஆனால் அதற்காக எவ்வித திர்வுமின்றி இதே கோலத்தில் இருந்து விட முடியுமா??

தமிழீழம் தேவையென்றால் சிங்கள பேரினவாதத்தை வலிக்க வைக்காமல் நாம் வெல்லப் போவதில்லை...

தூயவன் நன்றி

தொடருங்கள்

தெம்பாக இருக்கிறது

ஈரேறு ஜென்மம் எடுத்தாலும் எம்மக்களுக்காக உழைக்கும் அன்பின் டக்கலசு அவர்கட்கு,

தங்கள் அழைப்பை பார்த்தவுடன், தாய் சேயைப் பார்த்து அழைக்கும் உணர்வுடன் ஒரு அங்கலாய்ப்பு. தாங்கள் கடந்த காலங்களில், சேய்களுக்கு செய்தவை மறக்கக் கூடியவைகளல்ல என்றாலும் தங்களின் அழைப்பை முற்று முழுதாக நிராகரிக்க தற்போது முற்படவில்லை.

தங்களது கடந்தகால தமிழ் மக்களுக்கான ஜனநாயக செயற்பாட்டிற்கு பலியான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்??. தங்களின் கடந்த கால ஜனநாயக செயற்பாட்டில் யாழ் குடாவில் மட்டும் கொல்லப்பட்டு, காணாமல் போய், கடத்தப்பட்டோர் எத்தனை பேர்??? குறிப்பாக தீவுப்பகுதிகள் உட்பட யாழ்குடாவில் கடந்த காலங்களில் தங்களது ஜனநாயக செயற்பாட்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்கள் எத்தனை பேர்??? தங்களது ஜனநாயக செயற்பாட்டடிற்கு கொல்லப்பட்ட அப்பாவி ஊடகவியலாளர்கள் எத்தனை பேர்???? ...... இப்படியானவைகள்தான் தங்களது முக்கிய ஜனநாயக செயற்பாடாக கடந்த காலங்களில் இருந்ததை யாரும் மறக்க முடியாது/மறுக்கவும் முடியாது!!!

யுத்த நிறுத்தம் ஏற்பட்டு இன்று யுத்தம் முடிவுற்ற வரை யாழ்குடாவில் மட்டும் தங்களால் 2000 அப்பாவி இளையர்கள் படுகொலை செய்யப்ப்ட்டோ, காணாமல் போயோ, கடத்தப்பட்டதை சர்வதேச மன்னிப்புச்சபையுடம் கூட ஆதாரங்கள் உள்ளன. இக்காலகட்டத்தில் சிறிலங்காவின் புலனாய்வுபிரிவு எனும் பெயரில் யாழ்குடாவிலும், கொழும்பிலும் வலம் வந்த எம்மக்களுக்கு செய்த சேவைகளை மறக்கவா முடியும்!!!!

மற்றும் புலிகள் செய்ததெல்லாம் சரி என்றும் வாதிட வரவில்லை. புலிகளின் தவறான கணிப்புகளும். தவறான தீர்மானங்களும், உலக ஓட்டத்துக்கு ஏற்ப மாறாமை போன்ற பல பல காரணிகள் எம்மக்களின் இன்றைய இழிவுநிலைக்கு வழி கோலியது என்பதில் சந்தேகமில்லை.

இவைகள் இருக்க, ஆனால் தங்களை மக்களுக்காக உழைக்கும் மகாத்மா ஆக காட்ட முற்பட்டிருக்கிறீர்கள். ஜீரணிக்க முடியவில்லை. நீங்கள் எம்மக்களுக்கு செய்ததை விட சிங்களம் செய்த அனைத்துக்கும் ஒத்து ஊதினீர்கள் அல்லவா!!

போகட்டும், எம்மக்கள் இன்று இழிவு நிலைக்கு சென்று விட்டார்கள். இவற்றை எல்லாம் தொடர்ந்து கதைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது.

உண்மையிலேயே மக்களின் விடுதலை மீதுள்ள அக்கறையில் இவ்வழைப்பை விட்டிருப்பீர்களாயின் வரவேற்கத்தக்கது.

நீங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகள் அனைத்துக்கும் பகிரங்க மன்னிப்பு கோருங்கள். அதை விடுத்து இன்றைய சூழ்நிலையில் அகதி முகாங்களில் இழிவுறும் எமக்களின் உயிர் வாழ்வை உங்கள் அரசியல் நலனுக்காக "தவிச்ச முயல் அடிக்கும்" வேலைகளில் இறங்காதீர்கள்.

கடந்தகால பிழைகளை உணர்ந்து, தவறுகளை திருத்து, தமிழ் மக்களுக்கான பொது வேலைத்திட்டத்தில் இணையுங்கள். இதனையே புலம்பெயர் சமூகம் தங்களிடம் எதிர்பார்க்கிறது.

Edited by Nellaiyan

மாட்டை அடிச்சு நாயைக் காவல் வைத்த மாதிரி, அல்லவா உங்கள் கதை போகின்றது. டக்ளசைப் பின்பற்றி இருக்கின்ற எல்லாமே அழிஞ்சு போய் விடும் என்று தான் சொல்லவாறது. அதைப் புரியாமல் ஏன் பழங்கதை கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

இயக்கமே, துரோகி என்ற வார்த்தைகளைப் பல ஆண்டுகளாகப் பாவிப்பதில்லை. ஒட்டுக்குழு என்று தான் பாவித்து வந்தது. மகிந்தவுடன் சேர்ந்து நிற்கின்ற ஒருவனால், எப்படி என்ன செய்து விட முடியும்??? அது தான் கேள்வியே தவிர, துரோகிப்பட்டம் சூட்டுவது என் வேலையல்ல

தமிழீழம் தேவையா இல்லையா என்பதற்கு உங்களுக்குத் தெளிவான பதிலைத் தரமுடியவில்லை... இழப்புக்கள் வரும் என்று தெரியாமல் போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. என் உறவுகள் பலர்( 50 பேர் வரும்) இப்போதும் வவுனியா முகாமில் தான் உள்ளனர். ஆனால் அதற்காக எவ்வித திர்வுமின்றி இதே கோலத்தில் இருந்து விட முடியுமா??

தமிழீழம் தேவையென்றால் சிங்கள பேரினவாதத்தை வலிக்க வைக்காமல் நாம் வெல்லப் போவதில்லை...

எங்கட தமிழ் கூட்டங்களின் பிரச்சினையே உதுதான்.... முதலிலை உங்கட தமிழ் சனத்துக்கை இருக்கும் இன முரண்பாட்டை தீர்க்க முன் வாருங்கள்.... உங்களுக்கு எதிரி சிங்களவன் இல்லை நீங்கள்தான்... பிறகு சிங்களவனுக்கு வலிக்க வைக்கலாம்...

37 வருசமாக ஒரு உன்னதமான தலைவர் முன்னிண்று போராடியும் அவருக்கு கொடுக்க வேண்டிய தார்மீக ஆதரவை குடுக்க இல்லை தமிழ் மக்கள்... அதனாலை இண்டைக்கு பாரிய பின்னடைவை சந்திச்சு நிக்குது எங்கட ஆயுதப்போர்... இதுக்கும் மேலையும் எங்கட மக்களை நம்பி ஒரு மாங்காய் மடையந்தான் இலங்கை அரசுக்கு எதிராய் ஆயுதம் தூக்கி போராடுவான்...

என்ன கேவலம் எண்டால் ஒரு துரோகி இன்னொரு துரோகியான டக்கிளசை பாத்து, அவன் துரோகி எண்டு சொல்லுறதுதான்... என்னை விட அவன் அதிகமாக துரோகம் செய்து போட்டான் எண்டு விளக்கம் எல்லாம் வேற செய்யுறீயள்...

நீங்கள் எல்லாம் எப்ப நிஜ உலகுக்கு வந்து எப்ப தமிழ் சனம் பலமாக அரசியல் ரீதியாகவும் ஒற்றுமையாகவும் எதையாவது வெண்று எடுக்கிறது ... ???

தமிழீழம் தேவையா எண்டு என்னை பார்த்து கேட்டீர்கள்.. அது உங்களுக்கு தேவையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்... அதுக்காக நீங்கள் செய்த தியாகங்களையும் சொல்ல முடியுமா...??? இல்லை தேசிய தலைவர் போல யாராவது போராடி எடுத்து தருவார்கள் நாங்கள் காசு குடுத்து போட்டு கொடி பிடிச்சால் போதும் எண்டு இருக்கிறீர்களோ...???

உங்களுக்காக இன்னொருவரை போராட அனுப்ப போகின்றோம் எனும் கதைகளை இனிமேலும் நாங்கள் கேக்க வேணுமா...???

Edited by தயா

முகாமில இருக்கிற சனங்களே இவன்ர உதவி வேணாம் என்று சொல்லுதுகள். தாங்கள் செல்லடி பட்டுச் செத்திருக்கலாம் என்றுதுகள்.. இவங்கட ஆக்கினை தாங்க ஏலாம.

உங்களுக்கு உப்பிடி யார் சொன்னது? எத்தினைபேர் உங்களை தொடர்புகொண்டு இப்பிடி சொல்லிச்சீனம்? மக்கள் அவலம் தொடர்பாக கதைக்கும்போது இனியும் ஊகங்களின் அடிப்படையில் கைவந்தபாட்டுக்கு எழுத இயலாது. மக்கள் அப்படிச் சொல்லிறீனம், மக்கள் இப்பிடிச் சொல்லிறீனம் எண்டு நாங்களே இஞ்ச இருந்துகொண்டு அவர்கள் சார்பாக கதைக்க ஏலுமோ?

கடலில மூழ்கிக்கொண்டு இருக்கிறவன்... உயிரைக்காப்பாற்ற மிதந்துவருகிற எதையும் பற்றிப்பிடிப்பான். அது மரக்கட்டையாக இருந்தாலும் பரவாயில்லை... மலக்கட்டையாக இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு முக்கியம் தனது உயிர் காப்பாற்றப்படல்.. இந்தவகையில நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.