Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்திய வகுத்துள்ள புதிய உபாயம்: புதுடில்லியில் இரகசியப் பேச்சுக்கள்

Featured Replies

ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பைப் பயன்படுத்தியே தனது மறைமுக வேலைத் திட்டம் ஒன்றை இந்தியா தற்போது வகுத்துவருவதாக தெரியவந்திருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாகத்தான் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் தமிழர்களை உடனடியாக மீளக்குடியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ள இந்தியா, கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்தியப் படையைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் பிரிவையும் அவசரமாக அனுப்பிவைப்பதற்கு முன்வந்திருக்கின்றது.

இலங்கையில் தற்போது ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நம்பகரமான கட்சிகளோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்களோ எதுவும் இல்லை என்று கருதியே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை பயன்படுத்துவதற்கு இந்தியா தற்போது திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் இருந்து செயற்பட்டுவந்த பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு முக்கிய பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் நட்புச் சக்தியாகக் காட்டக்கூடிய கட்சிகள் எதுவும் இலங்கையில் இதுவரையில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விநாயகமூர்த்தி முரளிதரன் விலத்தப்பட்ட காலப்பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்துடன் கிழக்கு மாகாணத்துக்கு வந்திருந்தனர்.

இணைந்து பணியாற்றுவது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவையடுத்து ஈ.என்.டி.எல்.எப். அமைப்பினர் வெளியேறிச் சென்றுவிட்டனர்.

'றோ' வகுத்திருந்த திட்டம் ஒன்றின் அடிப்படையிலேயே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த சிலர் இரகசியமாக கிழக்கு மாகாணத்துக்கு வந்து விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு முனைந்ததாகக் கூறப்படுகின்றது.

அதேவேளையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவை தனது செல்வாக்குக்குள் கொண்டுவருவதற்காக 'றோ' மேற்கொண்ட முயற்சிகளும் பெருமளவுக்கு வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகின்றது.

வடக்கு - கிழக்கில் தற்போது செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரையில் அவை அனைத்தும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடனேயே செயற்படுகின்றன.

இந்நிலையில் 'றோ' வின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது தமது இருப்பையே கேள்விக்குறியாகிவிடும் என இந்த அமைப்புக்கள் கருதுகின்றன. அதனால்தான் இந்தியாவின் கைகளில் விழாமல் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதற்கே அவை முன்னுரிமை கொடுக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கு 'றோ' தீர்மானித்திருப்பதாகத் தெரிகின்றது.

ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் தலைவர் பரந்தனைச் சேர்ந்தவர். அத்துடன், இந்தியப் படையினர் வடக்கு - கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இந்த அமைப்பு கிளிநொச்சியை மையப்படுத்தியே தனது செயற்பாடுகளை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் அப்போது அமைந்திருந்தன.

மீண்டும் கிளிநொச்சியை மையப்படுத்தி ஈ.என்.டி.எல்.எப் கட்சி செயற்படும் விதமாக 20 ஆயிரம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பது இந்தப் பின்னணியில்தான். இதற்காகத்தான் அவசர அவசரமாக இந்தியப் படை முதற்கட்டமாக கண்ணிவெடிகளை அகற்றப் போகிறது. இதற்காக இந்தியப் படை கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த 500 பேர் கிளிநொச்சிக்கு அனுப்பப்படவிருக்கின்றனர்.

இந்த முயற்சியை நோக்கமாகக் கொண்டு ஈ.என்.டி.எல்.எப் உறுப்பினர்களை மீள ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டில் மீண்டும் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக

தெரிந்த முடிவுதான் இது. நெடுக்கால்போவோனின் கேள்விக்கு ஒரு விடை கிடைத்திருக்கிறது உத்தியோகபூர்வமாக.

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்த முடிவுதான் இது. நெடுக்கால்போவோனின் கேள்விக்கு ஒரு விடை கிடைத்திருக்கிறது உத்தியோகபூர்வமாக.

மிக விரைவில்.. ஓட்டுமடம் சந்தியில்.. பெண்களின் அழுகுரல் கேட்கும். அப்போ.. புலி வீரர்கள் நினைச்சாலும் வரமாட்டார்கள்..! முன்னராவது வந்து போனார்கள்.. ஒடுங்கிக் கிடந்தம். எனி.. முற்றாக அழிக்கப்பட்ட பின் எமக்கென்ன.... சுதந்திரத்தைத் தவிர..!

இந்திய சினிமா பாணியில்.. ஒரு நிழல் ரவுடிகள் சன நாய் அகத்தை.. அரசை நிறுவ நினைக்கிறது இந்திய.. எயிட்ஸ்.. நாய்க் கூட்டம்..! :D

தமிழன் தமிழனால் அழிவதைக் கண்கூடாகக் காண்பீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப் பெருமாளையும் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கினம் என்று ஒரு தகவல்..

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப் பெருமாளையும் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கினம் என்று ஒரு தகவல்..

அவரில்லாத இந்தியத் தலையீடா.

கிலாரி அம்மையாரும் சொல்லி இருக்காவே.. இந்தியா தூர நின்று விடுப்புப் பார்க்காம.. சீனா நுழைய முதல் நுழையிறதை அமெரிக்கா வரவேற்கும் என்று..! ஆக சிங்களவன் நல்லா பூந்து விளையாடுறான்.. நாங்கள்.. எலும்புக்கு அலையும் நாய்கள் என்பதை எல்லா வல்லாதிக்க சக்திகளும் நல்லா படிச்சு வைச்சிருக்காங்கள். அதுதான்... புலிகளை அடிச்சு தங்கட ஆதிக்கத்தை நிலை நாட்டி இருக்கிறாங்க.

விடுதலைப்புலிகள் போராடியது சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல.. வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் என்பது இப்போதுதான் கிலாரியின் கூற்றில் இருந்து தெரிகிறது..! எமது போராளிகள் மீதும் மக்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களும்.. மறைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களும்.. நீண்ட திட்டமிடலின் ஒரு பகுதியாகவே நடந்தேறி இருக்கிறது. சிறீலங்காவை இந்தியாவை நோக்கி பணிய வைக்கவே மேற்குலகம் மனித உரிமைகள் பற்றி உச்சரிச்சது. இப்போ...???!.. கிலாரி வாயாலேயே வெளவால் கணக்கா கக்க வைத்துவிட்டது சீனா..!

இருந்தாலும் ஒரு நாள் அமெரிக்கா இந்தியாவுக்கும் ஆப்படிக்கும். சீனாவை விட இந்தியா பலவீனமான சக்தி என்பதை.. அமெரிக்கா நன்கறியும். அதுதான் இத்தனை அரவணைப்பு..! ஆக வெள்ளைக்காரன் எங்களை மேய்க்கிறான் அவனே எங்களின் விடுதலைக்கும் தடை போடுறான் என்பது மட்டும் வெளிச்சம்..! :D

Edited by nedukkalapoovan

இன்று எதிர்நோக்க வேண்டிய பாரிய பிரச்சனையே இதுதான். எந்தவகைப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் தனக்கு அடிமைச்சேவகம் செய்பவர்களிடமே இந்தியா நன்மதிப்பு என்ற எலும்புத் துண்டை வைத்து, வளைத்துப் பிடித்திருக்கிறது.

இவைகளிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதே பெரிய பிரச்சனை. மீண்டும் ஆயுதங்களோடு குழுக்களை உலாவவிடுவதில் தமிழருக்கு அவஸ்தை, இந்தியாவிற்கு ஆனந்தம்.

அனைவரும் நம்பிக்கையிழந்து ,துவண்டு கிடக்கும்போது......

எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்!

மிக விரைவில்.. ஓட்டுமடம் சந்தியில்.. பெண்களின் அழுகுரல் கேட்கும். அப்போ.. புலி வீரர்கள் நினைச்சாலும் வரமாட்டார்கள்..! முன்னராவது வந்து போனார்கள்.. ஒடுங்கிக் கிடந்தம். எனி.. முற்றாக அழிக்கப்பட்ட பின் எமக்கென்ன.... சுதந்திரத்தைத் தவிர..!

இந்திய சினிமா பாணியில்.. ஒரு நிழல் ரவுடிகள் சன நாய் அகத்தை.. அரசை நிறுவ நினைக்கிறது இந்திய.. எயிட்ஸ்.. நாய்க் கூட்டம்..! :D

தமிழன் தமிழனால் அழிவதைக் கண்கூடாகக் காண்பீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்..! :lol:

தமிழனுக்குள் இருக்கும் கழைகளை பற்றி பேச , மற்றவர்கள் பேசுவதை எதிர்த்து பேச கூட . எங்கட புனிதம் தடுக்கும் போது எந்த விதமான புரிதலை உங்களால் ஊட்டி விட முடியும்...??

பத்மநாதன் அண்ணா கூட இந்தியாவுடன் நேரடியாக பேசுவேன் எண்று INDIA TODAY க்கு பேட்டி குடுக்கிறாரே...?? ஒரு வேளை அவர் கூட துரோகியோ...?? :lol:

அனைவரும் நம்பிக்கையிழந்து ,துவண்டு கிடக்கும்போது......

எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்!

குடுகுடுப்பை காறர் போல நீங்க வேறை கிளம்பாதீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்குள் இருக்கும் கழைகளை பற்றி பேச , மற்றவர்கள் பேசுவதை எதிர்த்து பேச கூட . எங்கட புனிதம் தடுக்கும் போது எந்த விதமான புரிதலை உங்களால் ஊட்டி விட முடியும்...??

பத்மநாதன் அண்ணா கூட இந்தியாவுடன் நேரடியாக பேசுவேன் எண்று INDIA TODAY க்கு பேட்டி குடுக்கிறாரே...?? ஒரு வேளை அவர் கூட துரோகியோ...?? :D

குடுகுடுப்பை காறர் போல நீங்க வேறை கிளம்பாதீங்கள்...

நான் நினைக்கிறேன்.. நீங்கள் முழுதான புரிதலை இழந்துவிட்டீர்கள் என்று.

பத்மநாதன் அண்ணாவோ.. உருத்திரகுமார் அண்ணாவோ.. தேசிய தலைவர் இன்றி வந்தவர்கள் அல்ல.

கடந்த மாவீரர் தின உரையில் தேசிய தலைவரே இந்தியா எமது நட்பு நாடு என்று தான் அறிவித்தார்.

வன்னியில் இந்தியப் படைகள் என்று கருத்துக்கள் செய்திகள் வந்த போது நடேசன் அண்ணா அதை ஏற்பது போல எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவில்லை.

2000ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை புலிகள் சுற்றி வளைத்த போது இந்தியத் தலையீட்டால் போர் ஓய்வுக்கு வந்து சிங்கள இராணுவம் சுவாசம் இழுத்தது.. அன்ரன் அண்ணா சொல்லித்தான் பலருக்கும் தெரியும்.

இந்தியாவை 1987 இலும் தான் நாம் பகை நாடாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்தியா எம்மைப் பகைத்தது. இன்றும் அதைத்தான் செய்கிறது.

இந்தியாவோடு பேசுவது.. என்பது வேறு. இந்திய நலனுக்காக உழைப்பது என்பது வேறு.

1987 இல் இந்திய நலனுக்காக உழைத்தவர்களை நீங்கள் உங்களின் அரசியல் வாரிசு ஆக்கவல்ல... தலைவர் இந்தியா எமது நட்பு நாடு என்று சொன்னார். இந்தியா எமது நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டால் நாம் இந்தியாவோடு நட்புப் பாராட்டுவோம்.. அதன் நலனில் அக்கறை காட்டுவோம் என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஆனால் நாம் எப்படிப் போனால் என்ன.. இந்திய நலன் காக்க உதவுவோம் என்ற குழுக்களை நீங்கள் அரசியல் கட்சிகளாக இனங்காட்ட குடுகுடுப்பை கொண்டலைவதுதான் ஏனென்று புரியவில்லை.

வரதராஜப் பெருமாள்.. இந்திய நலனுக்காக உழைத்தார்.. இந்தியா சொல்வதையே செய்தார். இறுதியில் சொந்த மக்களை காட்டிக் கொடுத்துவிட்டு.. அவர் போய் இந்தியாவில் சரணாகதியடைந்தார். இதையல்ல தேசிய தலைவர்.. பத்மநாதன் போன்றவர்கள் தொனித்தது.

இந்திய நலனில் எமக்கு அக்கறை இருக்கிறது. இந்தியா எம்மோடு சேர்ந்து எமது நலன் காக்கப் பணியாற்றின் இந்திய நலனை பாதுகாக்க நாமும் பணியாற்றுவோம் என்பதுதான் தேசிய தலைவரின் எதிர்பார்ப்பு. அதுவே 1987 முதல் 2008 வரை அவரின் நிலைப்பாடு...! அவர் எமது உரிமைகளை நலன்களை விட்டுக்கொடுத்து இந்திய நலனை பாதுகாக்க முற்பட்டிருப்பின்.. இன்று அவரும் ஒரிசாவோ.. ராஜஸ்தானிலோ.. டெல்லியிலோ.. சென்னையிலோ பெரும் மாளிகையில் கறுப்புப் பூனைகள் பாதுகாப்பளிக்க வாழ்ந்து கொண்டிருப்பார்..! பயங்கரவாதி ஆக்கப்பட்டிருக்கமாட்டார்.

கருத்தெழுத முதல் சிந்தியுங்கள். வேறுபாடுகளை உணருங்கள். நான் சொல்லத் தேவையில்லை. அவசரத்தில் என்ன எழுதிறன் என்று புரியாமல் எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது. அல்லது முரண்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது. இதற்கு மேல் இது தொடர்பில் உங்களோடு முரண்பட்டு எனக்கு எதுவும் ஆகப்போவதில்லை. அநாவசியமான எழுத்துக்களை தவிர்க்க முற்படுகின்றேன். :lol:

Edited by nedukkalapoovan

நான் நினைக்கிறேன்.. நீங்கள் முழுதான புரிதலை இழந்துவிட்டீர்கள் என்று.

பத்மநாதன் அண்ணாவோ.. உருத்திரகுமார் அண்ணாவோ.. தேசிய தலைவர் இன்றி வந்தவர்கள் அல்ல.

கடந்த மாவீரர் தின உரையில் தேசிய தலைவரே இந்தியா எமது நட்பு நாடு என்று தான் அறிவித்தார்.

வன்னியில் இந்தியப் படைகள் என்று கருத்துக்கள் செய்திகள் வந்த போது நடேசன் அண்ணா அதை ஏற்பது போல எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவில்லை.

2000ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை புலிகள் சுற்றி வளைத்த போது இந்தியத் தலையீட்டால் போர் ஓய்வுக்கு வந்து சிங்கள இராணுவம் சுவாசம் இழுத்தது.. அன்ரன் அண்ணா சொல்லித்தான் பலருக்கும் தெரியும்.

இந்தியாவை 1987 இலும் தான் நாம் பகை நாடாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்தியா எம்மைப் பகைத்தது. இன்றும் அதைத்தான் செய்கிறது

இந்தியாவோடு பேசுவது.. என்பது வேறு. இந்திய நலனுக்காக உழைப்பது என்பது வேறு..

இப்போது நீங்கள் கேட்டதை நான் உங்களை நோக்கி கேட்க்க தூண்டுகிறது... நீங்கள் எல்லாம் சுய உனர்வோடுதான் கருத்தாடுகிறீர்களா....???

இந்தியாவுக்கு ஆதரவாக அமிர்தலிங்கம் செயற்பட்டார் எண்றால் அவர் இந்திய நடவடிக்கையில் ஒரு அங்கம்... ஆக இந்தியா உங்களுக்கு உதவ வேண்டும் ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் துரோகிகள்... அதாவது இந்தியாவின் கையுக்குள் இருக்கும் ஈழத்தவர்கள் துரோகிகள்...

அவர்கள் செய்த எல்லா நடடிக்கைகளுக்கும் இதியாவின் கைவேலை இருக்கிறது எண்றாலும் இந்தியாவை மன்னித்து ஏற்பீர்கள், ஆனால் இந்தியாவுக்காக வேலை செய்தவர்கலை இல்லை...

நல்ல கருத்து இது...

1987 இல் இந்திய நலனுக்காக உழைத்தவர்களை நீங்கள் உங்களின் அரசியல் வாரிசு ஆக்கவல்ல... தலைவர் இந்தியா எமது நட்பு நாடு என்று சொன்னார். இந்தியா எமது நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டால் நாம் இந்தியாவோடு நட்புப் பாராட்டுவோம்.. அதன் நலனில் அக்கறை காட்டுவோம் என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஆனால் நாம் எப்படிப் போனால் என்ன.. இந்திய நலன் காக்க உதவுவோம் என்ற குழுக்களை நீங்கள் அரசியல் கட்சிகளாக இனங்காட்ட குடுகுடுப்பை கொண்டலைவதுதான் ஏனென்று புரியவில்லை.

தமிழருக்கு நடந்த முழு அழிவிற்க்கும் இந்தியா காரணம்... இல்லை எண்று மறுக்கிறீர்களா...??? அப்படி இருந்து இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டுகிறீர்கள்... இல்லை எண்றா மறுக்க போகிறீர்கள்....

இதோடு பத்மநாதன் அண்ணா சொல்ல இன்னும் ஒரு விடயத்தையும் உங்களுக்கு ( நினைவு படுத்த இல்லை) தெரியாத விடயம் ஒண்று உள்ளது.. அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.... இவ்வளவுகாலமும் நடந்த எல்லாவிதமான கசப்புணர்வுகளையும் மறந்து அனைத்து தமிழர்களின் அமைப்புக்களையும் ஒண்றிணைக்க விரும்புகிறேன் என்பதே அது...

வரதராஜப் பெருமாள்.. இந்திய நலனுக்காக உழைத்தார்.. இந்தியா சொல்வதையே செய்தார். இறுதியில் சொந்த மக்களை காட்டிக் கொடுத்துவிட்டு.. அவர் போய் இந்தியாவில் சரணாகதியடைந்தார். இதையல்ல தேசிய தலைவர்.. பத்மநாதன் போன்றவர்கள் தொனித்தது.

இந்திய நலனில் எமக்கு அக்கறை இருக்கிறது. இந்தியா எம்மோடு சேர்ந்து எமது நலன் காக்கப் பணியாற்றின் இந்திய நலனை பாதுகாக்க நாமும் பணியாற்றுவோம் என்பதுதான் தேசிய தலைவரின் எதிர்பார்ப்பு. அதுவே 1987 முதல் 2008 வரை அவரின் நிலைப்பாடு...! அவர் எமது உரிமைகளை நலன்களை விட்டுக்கொடுத்து இந்திய நலனை பாதுகாக்க முற்பட்டிருப்பின்.. இன்று அவரும் ஒரிசாவோ.. ராஜஸ்தானிலோ.. டெல்லியிலோ.. சென்னையிலோ பெரும் மாளிகையில் கறுப்புப் பூனைகள் பாதுகாப்பளிக்க வாழ்ந்து கொண்டிருப்பார்..! பயங்கரவாதி ஆக்கப்பட்டிருக்கமாட்டார்.

கருத்தெழுத முதல் சிந்தியுங்கள். வேறுபாடுகளை உணருங்கள். நான் சொல்லத் தேவையில்லை. அவசரத்தில் என்ன எழுதிறன் என்று புரியாமல் எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது. அல்லது முரண்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது. இதற்கு மேல் இது தொடர்பில் உங்களோடு முரண்பட்டு எனக்கு எதுவும் ஆகப்போவதில்லை. அநாவசியமான எழுத்துக்களை தவிர்க்க முற்படுகின்றேன். :D

உங்களின் கருத்துக்கள் சிரிப்பை மட்டுமே வரவளைக்க உதவும்...

ஆனால் ஒண்று.... நீங்கள் கூட இருக்கும் தமிழருக்கு கொடுக்கும் மரியாதை கூட எவ்வளவு என்பது தெரிகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நீங்கள் கேட்டதை நான் உங்களை நோக்கி கேட்க்க தூண்டுகிறது... நீங்கள் எல்லாம் சுய உனர்வோடுதான் கருத்தாடுகிறீர்களா....???

இந்தியாவுக்கு ஆதரவாக அமிர்தலிங்கம் செயற்பட்டார் எண்றால் அவர் இந்திய நடவடிக்கையில் ஒரு அங்கம்... ஆக இந்தியா உங்களுக்கு உதவ வேண்டும் ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் துரோகிகள்... அதாவது இந்தியாவின் கையுக்குள் இருக்கும் ஈழத்தவர்கள் துரோகிகள்...

அவர்கள் செய்த எல்லா நடடிக்கைகளுக்கும் இதியாவின் கைவேலை இருக்கிறது எண்றாலும் இந்தியாவை மன்னித்து ஏற்பீர்கள், ஆனால் இந்தியாவுக்காக வேலை செய்தவர்கலை இல்லை...

நல்ல கருத்து இது...

அண்ணோய் உங்களுக்கு சொல்வது புரியவில்லை என்று நினைக்கிறேன். அல்லது சொல்வதை விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லை என்றே நினைக்கிறேன்.

மேலே சிலவற்றை தெளிவாகவே... எழுதி இருக்கிறேன். இருந்தாலும் இன்னொரு உதாரணத்தைக் காட்டுகிறேன்.. விளங்குதோ என்று பாருங்கள்.. விளங்காவிட்டால் ஆளை விடுங்கள்.. அமிர்தலிங்கத்தை.. உமாமகேஸ்வரனை அரசியல்வாரிசுகளாக்கி நீங்கள் தமிழீழம் அடைந்தால் நிச்சயம் நான் வரவேற்பேன்..! எதற்கும் கல்லில் நாருரிக்க முற்படுகிறீர்கள்.. செய்யுங்கள்..! :lol::lol:

1987 இல் தேசிய தலைவரும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார்.. அமிர்தலிங்கமும்.. ஏற்றுக் கொண்டார்.. பதம்நாபாவும் ஏற்றுக் கொண்டார். அங்கு தேசிய தலைவருக்கும் மற்றவர்களுக்கும் இருந்த வேறுபாடென்ன.

உங்களைப் பொறுத்தவரை அங்கு எந்த வேறுபாடும் இல்லை. தேசிய தலைவர் தேவையில்லாமல்.. மற்றவர்களோடு முரண்பட்டு காரியத்தைக் கெடுத்தார் என்பதுவா கருத்து.

அந்த ஒப்பந்தத்தை தேசிய தலைவர் ஏற்றுக் கொண்ட வடிவம் வேறு.. அமிர்தலிங்கம் ஏற்றுக் கொண்ட வடிவம் வேறு.

தேசிய தலைவர் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் நடைமுறைச் சாத்தியப்பாட்டோடுதான் அதனை ஏற்றுக் கொள்வது என்றும்.. ஒரு வலுவான தீர்வுக்கு ஓர் ஆரம்ப அடிப்படையாக அதை ஏற்றுக் கொண்டு ஆயுதக் கையளிப்பை செய்ய முன்வந்தார். இதை அவர் சுதுமலையில் அறிவித்தார். அமிர்தலிங்கம்.. கொழும்பில் இருந்து அறிவித்தார்.. தான் முழுமையாக இந்திய - இலங்கை ஒப்பந்ததை ஏற்றுக் கொள்வதாக. பத்மநாபா சென்னையில் இருந்து அறிவித்தார் தாங்களும் இந்திய - இலங்கை ஒப்பந்ததை ஏற்றுக் கொண்டு சிறீலங்கா அறிவித்துள்ள பொதுமன்னிப்பை ஏற்று ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைவதாக.

இங்கு தான் தேசிய தலைவருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. அமிர்தலிங்கம்.. பத்மநாபா.. இந்திய - இலங்கை ஒப்பந்தம் எல்லாம் வழங்கிவிட்டதாகக் கருதி இந்தியாவே தஞ்சம் என்று சரணடைந்து அதன் நலனுக்காகவே உழைக்க ஆரம்பித்தனர். ஆனால் தேசிய தலைவர் அப்படியல்ல. இந்தியாவோடு முரண்படாத போக்கை கடைப்பிடித்துக் கொண்டு..இந்திய - இலங்கை ஒப்பந்தக் குறைபாடுகளை விளங்கிக் கொண்டு அது தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கப் போதாது என்பதை அறிந்து கொண்டு அதன் வழி நகர்ந்து செல்ல முற்பட்டார். இந்தியாவுக்கு அதைப் புரிய வைக்க விளைந்தார். உண்மையில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையான ஒரு தீர்வல்ல. ஒரு நிரந்தரத் தீர்வுக்கான அடிப்படை என்றுதான் கொள்ளப்பட்டது. ஆனால் அமிர்தலிங்கம் போன்றோர் அதை மக்களுக்கு மிகைப்படுத்தி.. இந்தியா நினைத்தது போல அதனை நடைமுறைப்படுத்தி அதனையே இறுதித் தீர்வாகத் திணிக்க முற்பட்டனர். இதுதான் அமிர்தலிங்கம் செய்த துரோகம். மக்களுக்கு உண்மையைச் சொல்லாமல் மறைத்ததுமன்றி மக்களை ஏமாற்றும் வகையில் இந்திய நலனை பாதுகாக்க என்று மட்டும் அவர் முதன்மைப்படுத்திச் செயற்பட்டார். இதையே மற்றவர்களும் செய்தனர்.

இறுதியில் என்னவாயிற்று. வடக்குக் கிழக்கு இணைப்பும் நிரந்தரமாக்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. குடியேற்றங்களும் நின்ற பாடில்லை. பொலிஸ் நிலையங்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டன. இதனை தான் திலீபன் அண்ணா தனது கோரிக்கைகளின் ஊடு வெளிப்படுத்தி உண்ணா நோன்பிருந்தார். அது திலீபன் அண்ணாவின் கோரிக்கையல்ல. தமிழ் மக்கள் கோரியாக இருக்க வேண்டியவை. அதனையே அன்று புலிகள் பிரதிநிதிப்படுத்தினர். ஆனால் அமிர்தலிங்கம்.. திலீபன் அண்ணா உண்ணா நோன்பிருக்க.. எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார். ஏன் அவருக்கு தெரிந்திருக்கவில்லையா.. இலங்கை - இந்திய ஒப்பந்ததிற்கு மாறாக சிங்கள அரசு செயற்படுவது. தெரியும். ஆனால் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க அதை பெரிசு படுத்தவில்லை. மக்களுக்கு மறைக்க முற்பட்டார்.

ஆக அமிர்தலிங்கம்.. சொந்த மக்களின் நலனை விட இந்திய நலனையே முன்னிறுத்தினார். செயற்பட்டார். ஏனெனில் அதனால் அவருக்கு இலாபம் கிடைக்கும்.. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் தேசிய தலைவர் அப்படி இருக்கவில்லை. மக்களை அவர்களின் நீண்ட கால நலனை முன்னிறுத்தினார். இந்தியாவைக் கொண்டு ஒரு வலுவான தீர்வை எட்டிவிட வேண்டும் என்று துடித்தார். ஆனால் மற்றவர்கள் குறுக்கால இழுத்ததால்.. தேசிய தலைவரை இந்தியா.. பலாத்காரத்தால் அடக்கி ஒப்பந்தத்தை திணித்து விட முடிவு கட்டியது. தனது நலனை பாதுகாக்க தேசிய தலைவரை விட மற்றவர்கள் சுலபமாக ஒத்துழைக்கத் தயார் என்பதைக் கண்டு கொண்டது.

அன்று தேசிய தலைவரின் நியாயத்தோடு எல்லோரும் ஒற்றுமையாக நின்றிருப்பின்.. இந்தியா இறங்கி வந்திருக்கும். சிறீலங்காவை நிர்ப்பந்தித்திருக்கும். ஒரு உருப்படியான தீர்வு எட்டப்பட்டிருக்கும். ஏன் செய்யாமல் விட்டனர். ஆளாளுக்கு பதவி ஆசையும்.. சுயநலமும். மக்கள் நலனில் அக்கறையற்ற செயற்பாடும். இதைத்தான் மக்கள் துரோகம் என்று வரையறுக்கிறோம். இந்தியாவோடு தொடர்பை பேணுவது அல்ல துரோகம்..! :D

அதுவே அவர்களை துரோகிகள் ஆக்கியது. இப்போதும் அவர்கள் அதனையே பிரதிபலிக்கின்றனர். 3 இலட்சம் மக்கள் அகதி முகாமில் வாட.. இவர்கள் தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஒட்டுமொத்தமாக எல்லோரும் தேர்தலை பகிஸ்கரிக்க மக்களைக் கோரி இருப்பின்.. சிங்களக் கட்சிகளாலும் தேர்தலை சந்தித்திருக்க முடியாது. தேர்தல் பின்போடப்பட்டிருக்கும். ஆனால் என்ன நடக்கிறது. மக்களின் துன்பத்தில் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். சுயலாபம் ஈட்டத் துடிக்கிறார்கள். இவர்கள் துரோகிகள் அன்றி.. வேறு யார். த தே கூ கூட மற்றவர்கள் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட ஒரு சூழலில் தான் அவர்களை எதிர்த்துப் போட்டி இட முடிவுகட்டியுள்ளது. அது அவர்களைச் சூழ்நிலைக் கைதிகளாக்கியுள்ளது. ஆனால் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மக்களை தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரி இருப்பின்.. இந்தத் தேர்தலை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

இப்படி எத்தனையோ தவறுகளை தெரிந்து கொண்டு செய்பவர்களை நீங்கள் அரசியல் வாரிசுகளாக தமிழ் மக்களுக்குக் காட்ட முனைய வேண்டாம். களத்தில் உள்ள மக்கள் தெளிவாக அறிவார்கள் எவர் உண்மையான மக்கள் அக்கறையுள்ளோர்.. எவர் சுயநல அரசியல்வாதிகள்.. துரோகிகள் என்பதை.

நீங்கள் சந்தியில் சிந்துபாடுவதை விடுத்து.. குழப்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முற்படாமல்.. தெளிவாக இருக்க முயலுங்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழனின் விடுதலைக்கு எதிராகவே எப்பொழுதும் செயல்படும் என்று தெரிந்தும் இறுதிவரை இந்தியா எமது நட்பு நாடு என்று கூறிக் கொண்டிருந்ததன் பின்னணியில் தமிழகத்துடன் நல்லுறவைப் பேணவேண்டிய ஒரு கொள்கை முடிவு இருந்திருக்கலாம்.

தமிழகத்தில் இப்போது உருவாகக்கூடிய பதட்ட நிலையை (சிறிதளவேயாயினும்) தவிர்ப்பதற்கு ஏதாவது ஒரு தீர்வைத் திணித்துவிடவே இந்தியா முனையும். அதன் தற்போதைய‌ செயல்பாடுகள் அதையே காட்டி நிற்கின்றன. ஆனால் சிங்கள பௌத்த இனவாதம் எத்தகைய தீர்வுத்திட்டத்துக்கும் (அது எவ்வளவு கேவலமானதாக இருந்தாலும் கூட) எதிர்ப்புக் குரல் காட்டவே செய்யும்..! மறுபடியும் ரோவின் திருவிளையாடல் கொழும்பில் அரங்கேற்றப்பட்டு எதிர்ப்புகள் அடக்கப்படலாம்.

இன்னொரு பக்கத்தில், ஈழத்துக்கு தமிழகத்தினால் ஏற்பட்டிருக்க வேண்டிய சாதகமான‌நிலை துரதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை. இனிமேலும் தமிழகத்தை அனுசரித்து கொள்கை வகுப்புகள் இருக்குமா என்பது சந்தேகமே..! :D:lol:

இந்தியா எந்த தேசிய இனத்தினதும் விடுதலைக்கு ஆதரவாக நேற்றும் இருந்ததில்லை, இன்றும் இருக்கவில்லை, நாளையும் இருக்கப் போவதில்லை

இந்திய தேசியம் என்பது எண்ணிக்கையில் சிறிய அளவிலான அனைத்து தேசிய இனங்களினதும் குரல்வளையை நெரித்து அடக்கப்பட்டு கட்டமைக்கப் பட்டது. அதன் முதுகெலும்பின் வலுவானது, அடக்கு முறை மூலம் தான் பேணப்படுகின்றது...அப்படி இருக்க அது தமிழ் தேசியத்தையோ தமிழர்களின் விடுதலையோ எந்த காரணம் கொண்டும் ஆதரிக்காது

இந்திய தேசியத்தின் உடைவு தான் தமிழ் மக்களினதும், எம்மைப் போன்ற அனைத்து சிறிய இனக்களினதும் விடுதலைக்கு தெற்காசியாவில் வழிவகுக்கும்.

சிங்களத் தேசிய வாதிகள் இந்தியாவினை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பதால் தான் அவர்கள் எக்காலத்திலும் இந்தியாவை நம்புவது கிடையாது.

ராஜ தந்திர சொற்பிரயோகத்திற்காக வேண்டுமானால், நாம் இந்தியாவுடன் நட்புறவு பேண விரும்புகின்றோம் என சொல்ல முடியும்...ஆனால் யதார்த்ததில் அல்ல

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எதிர்நோக்க வேண்டிய பாரிய பிரச்சனையே இதுதான். எந்தவகைப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் தனக்கு அடிமைச்சேவகம் செய்பவர்களிடமே இந்தியா நன்மதிப்பு என்ற எலும்புத் துண்டை வைத்து, வளைத்துப் பிடித்திருக்கிறது.

இவைகளிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதே பெரிய பிரச்சனை. மீண்டும் ஆயுதங்களோடு குழுக்களை உலாவவிடுவதில் தமிழருக்கு அவஸ்தை, இந்தியாவிற்கு ஆனந்தம்.

ஈழத்தமிழனை முழுதாக அழிக்கு மட்டும் ..... இந்தியா ஓய மாட்டுது போலை . :D

அண்ணோய் உங்களுக்கு சொல்வது புரியவில்லை என்று நினைக்கிறேன். அல்லது சொல்வதை விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லை என்றே நினைக்கிறேன்.

மேலே சிலவற்றை தெளிவாகவே... எழுதி இருக்கிறேன். இருந்தாலும் இன்னொரு உதாரணத்தைக் காட்டுகிறேன்.. விளங்குதோ என்று பாருங்கள்.. விளங்காவிட்டால் ஆளை விடுங்கள்.. அமிர்தலிங்கத்தை.. உமாமகேஸ்வரனை அரசியல்வாரிசுகளாக்கி நீங்கள் தமிழீழம் அடைந்தால் நிச்சயம் நான் வரவேற்பேன்..! எதற்கும் கல்லில் நாருரிக்க முற்படுகிறீர்கள்.. செய்யுங்கள்..! :lol::D

1987 இல் தேசிய தலைவரும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார்.. அமிர்தலிங்கமும்.. ஏற்றுக் கொண்டார்.. பதம்நாபாவும் ஏற்றுக் கொண்டார். அங்கு தேசிய தலைவருக்கும் மற்றவர்களுக்கும் இருந்த வேறுபாடென்ன.

உங்களைப் பொறுத்தவரை அங்கு எந்த வேறுபாடும் இல்லை. தேசிய தலைவர் தேவையில்லாமல்.. மற்றவர்களோடு முரண்பட்டு காரியத்தைக் கெடுத்தார் என்பதுவா கருத்து

பழய பிரச்சினைகளை பேசும் போது தீர்க்கமாக தெரிந்து வைத்து கொண்டு பேசுங்கள்... அதுவும் இந்திய இலங்கை ஒப்பந்த பற்றி பேசும் போது தேசிய தலைவரின் சுதுமலை பிரகடனத்தை அறிந்து கொள்ளாமல் பேசுவது சரியானதும் அல்ல...

அங்கே இவைகள் எல்லாவற்றுக்குமான விடையை தலைவர் சொல்கிறார்... இந்திய இலங்கை ஒப்பந்தம் எந்த வகையிலும் தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஒத்துக்கொள்ள இல்லை எனும் அடிப்படையில் தலைவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கிறார்... அவர் டெல்லியில் வைத்து வற்புறுத்தி கையெழுத்திட வைக்கப்படுகிறார்... அதன் பின்னர் சுது மலையில் தோண்றி தமிழ் மக்களுக்கு மத்தியில் பேசும் போது தனக்கு இந்த ஒப்பந்தம் மீது எந்த விதமான நம்பிக்கையும் இல்லை என்பதையும் சொல்லுகிறார்...

அதோடு அவர் குறிப்பிட்ட விடயம் " போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போடாட்டம் மாறாது " என்பதின் மூலம் தமிழர் சுய நிர்ணயம் கொண்ட தமிழீழம் என்பதுதான் எனது முடிவான எண்ணம் என்பதனையும் சொல்லி வைக்கிறார்...

நீங்கள் சொல்லிய அமிர்தலிங்கமும் , ENDLF ( 3 ஸ்ரார்) குழுவும் அதிகாரம் அற்ற மாகான சபைகளை ஏற்று கொள்ள முன் வந்த போது தேசிய தலைவர் ஏற்றுக்கொள்ள இல்லை... இங்கேயே உங்களின் கருத்தில் பெரிய முரண்பாடு இருக்கிறது...

இந்தியா தனது நலன் சார்ந்து எடுக்கும் எல்லா முடிவுகளும் எப்போதும் தமிழருக்கு ஆதரவாக இருக்க இல்லை இருக்க போவதும் இல்லை... இதில் தனக்கு சாதகமான அரசியல் தலைவர்களை தனக்காக பயன் படுத்தியது... புலிகளுக்கு ஆதரவான மக்களை வதைக்கவும் செய்தது...

இந்தியர்கள் செய்த படுகொலைகளை எல்லாம் எப்படி மறந்து அவர்களுடன் சேர்ந்து பணி செய்ய முயல்கிறீர்கள், அல்லது அனுசரித்து போக முற்படுகிறீர்கள்... ( இதை மறுக்கிறீர்களா..??? ) .... அப்படியானால் உங்களுக்கு தெரிந்து தானே இருக்க வேண்டும் இந்தியா தனக்கு இவ்வளவுக்காலமும் விசுவாசமானவர்களை புறந்தள்ளி விட்டு புதிதாக ஒருவரை கைப்பிடிக்க வர யோசிப்பார்கள் எண்று...!!

ஆனால் புலிகள் இந்திய ஈழப்போரின் பின்னர் இந்திய ஆதரவு கட்ச்சிகளை அனுசரித்து போகவே முற்பட்டனர்... அதன் வெளிப்பாடே தமிழ் தேசிய கூட்டமைப்பு... தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உறுப்பினராக இருப்பவர்கள் இந்திய போர் காலத்தில் செய்த கொடுமைகள் தமிழர்கள் நன்கு அறிந்துதானே இருக்கிறார்கள்... அவர்கள் தமிழர்கள் கொலைகளில் துணை போகாதவர்கள் எண்றா கொள்கிறீர்கள்... அவர்களை எல்லாம் அரசியல் வாதிகளாக கொள்கிறீர்கள் தானே...???

அண்ணை நீங்கள் இந்தியா இதுவரை தமிழருக்கு துரோகமே செய்ய இல்லை... செய்தது எல்லாம் தமிழர் அரசியல் வாதிகள் மட்டும் தான் எனும் வாதங்கள் எவ்வளவுகாலத்துக்கு செய்ய போறியள்...????

இந்தியா வேண்டும், இந்திய சார்பான அரசியல் வாரீசுகள் வேண்டாம் என்பது எப்படி இருக்கிறது தெரியுமா..??

Edited by தயா

நன்றி நெடுக்ஸ்

இந்தியா எந்த தேசிய இனத்தினதும் விடுதலைக்கு ஆதரவாக நேற்றும் இருந்ததில்லை, இன்றும் இருக்கவில்லை, நாளையும் இருக்கப் போவதில்லை

ராஜ தந்திர சொற்பிரயோகத்திற்காக வேண்டுமானால், நாம் இந்தியாவுடன் நட்புறவு பேண விரும்புகின்றோம் என சொல்ல முடியும்...ஆனால் யதார்த்ததில் அல்ல

உண்மை தான்

நம்ப நட நம்பி நடாவாதே ,,,,,,,,,,,,,

--------

கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து இந்தியா கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாததும்; ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதம், பயிற்சி கொடுத்த துரோகமும்; இந்திய தேசியம் என்ற ஒருமை- ஒரு மாயை என்று இங்குள்ள பெரும் பான்மை தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது. இந்தப் பழியிலிருந்து இந்தியா விடுபட முடியுமா?

""இந்தியாவின் கை ரத்தப் பழி சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக் கொள்ள முடியாது. என்றேனும் ஒருநாள், தமிழினத்துக்கு அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கடைசி கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப் பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பாஸ்பரஸ் குண்டுகள், கிளெஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் எண்பதாயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என்றார்.

ஆனால் யுத்தம் முடிந்த பிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா?

அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் செத்தால்கூட பரவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவையெல் லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.

அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த பத்தாயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே-18-ஆம் தேதி சண்டையில் மட்டும் இருபதாயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் தெரியாதவை அல்ல.

லண்டனில் இருந்து வெளிவருகிற "டைம்ஸ்', "கார்டி யன்' பத்திரிகைகள், பாரீஸிலிருந்து வெளிவருகிற "லெமோண்ட்' போன்ற உலக அளவில் மதிக்கப் படும் பத்திரிகைகள் இவற்றையெல்லாம் பதிவு செய்திருக் கின்றன.

இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியிலிருந்து - இலங்கை யின்பின் நின்ற பாவத்திலிருந்து இந்தியா தப்பித்துக் கொள்ள முடியாது. வரலாற்றின்- மனசாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும்.''

-ஜெகத் கஸ்பார்-

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் .......

தயா , நல்ல கருத்தாளர் .

ஆனால் .... அண்மையில் அவர் எழுதிய கருத்துக்கள் , எல்லாம் ஏதோ ..... கோபத்தில் எழுதிய கருத்துக்களாகவே உள்ளது .

இந்தியாவின் கை ரத்தப் பழி சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக் கொள்ள முடியாது. என்றேனும் ஒருநாள், தமிழினத்துக்கு அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் .......

தயா , நல்ல கருத்தாளர் .

ஆனால் .... அண்மையில் அவர் எழுதிய கருத்துக்கள் , எல்லாம் ஏதோ ..... கோபத்தில் எழுதிய கருத்துக்களாகவே உள்ளது .

எம்மவர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது எதையும் காலம் கடந்து உனர்ந்து கொள்வார்கள், அல்லது செயற்படுவார்கள்... அப்போது எல்லாம் தலைக்கு மேலே வெள்ளம் போய் இருக்கும்...

எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது எண்று ஒரு பழ மொழி இருக்கிறது... இதில் எங்களில் எல்லா வலிகளுக்கும் காரணமும் இருக்கிறது... எய்த சிங்களவனையும் , இந்தியரையும் விட்டு போட்டு நீங்கள் எவ்வளவு காலத்துக்குதான் துரோகம் துரோகம் எண்று கத்த போகிறீர்கள்...

நீங்கள் எல்லாம் துரோகம்த்தை தோலுரிக்கும் நேரத்தை செலவு செய்யும் வேலையிலேயே பல துரோகங்கள் தோண்றி கொண்டே இருக்கின்றனவே தவிர குறைந்ததாக இல்லையே...

அப்போ தவறு எங்கே...?? முதலில் எங்களுக்குள் அடி படுவதும் நாங்கள் எங்களுக்குள் குற்றம் சாட்டுவதை யுமே வேலையாக வைத்து கொண்டு இருக்கின்றோம்... இதுதான் தமிழரின் பலவீனம் என்பதை எப்போது உனர்ந்து திருந்த போகின்றோம்...

சிங்களவனை எடுத்து கொள்ளுங்கள்... எல்லா சிங்களவனும் தமிழனை அழிக்கும் ஒடுக்கும் படலத்துக்கு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வரவேற்பு... வன்னி வீழ்ச்சியை கொண்டாடாத சிங்களவன் எண்று உண்டா...???

அப்படி சிங்களவன் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் போது எங்களால் எங்களுக்குள் ஒற்றுமையை கட்டி எழுப்பும் நடவடிக்கைகள் முடியாதவையா...??

துரோகங்கள் பற்றி புலிகள் பேசுவதை கடைசியாக பேசுவதை நீங்கள் எப்போது கேட்டீர்கள் எனும் ஞாபகம் இருக்கிறது...?? தமிழருக்குள் இருக்கும் பிரிவினைகளை பற்றி புலிகள் பேசி நீண்ட காலம்...

நாங்கள் இதனாலேயே பலத்தை இழந்து நிக்கின்றோம்.. எதிரியும் அவன் கூட்டணி நாடுகளும் எங்களை பலவீனப்படுத்தியது என்பதை எம்மவர்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்களோ...??

( எதிராக பேசியவர்கள் எல்லாம் துரோகிகளாக இல்லாமலும், எதிராக ஆயுதம் தூக்கியவர்களை எதிரியாகவும் புலிகள் பாவித்தார்கள் என்பதை சிறிது யோசித்து பார்த்தீர்கள் எண்றால் புரிந்து கொள்ள முடியும்)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

------

------

சிங்களவனை எடுத்து கொள்ளுங்கள்... எல்லா சிங்களவனும் தமிழனை அழிக்கும் ஒடுக்கும் படலத்துக்கு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வரவேற்பு... வன்னி வீழ்ச்சியை கொண்டாடாத சிங்களவன் எண்று உண்டா...???

அப்படி சிங்களவன் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் போது எங்களால் எங்களுக்குள் ஒற்றுமையை கட்டி எழுப்பும் நடவடிக்கைகள் முடியாதவையா...??

-----

-----

முடியாது தயா .....

நாங்கள் தமிழர் . எங்களுக்கு , நாங்களே குழி பறித்து ........ அழிந்து போகும் இனத்தை சேர்ந்த தமிழ் பன்றிக்கூட்டம் என்பது தான் வேதனை . :D

***

இதே சிறிது காலம் முன்னர் இந்திய சதியில் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம் எண்றுதான் தலைப்பையே போட்டு இருந்தேன்...

அர்ந்தம் என்ன எண்றால் இந்தியா , சிறீலங்காவின் நரித்தனத்தை புரிந்து கொள்ள முயல வேண்டும் என்பதுக்காகத்தான்...

எங்களில் பலர்.. தமிழர்களுக்குள் அடி பட நிற்கிரீர்களே அண்றி இந்தளவையும் தூண்டி விட்டு போட்டு வேடிக்கை பார்க்கும்... சிங்களவனையும் , இந்தியனையும் எதிர்க்கும் உங்களின் திறணை கூட்டும் எண்ணமே இல்லாது இருக்கிறீர்களே...

நீங்கள் துரோகம் துரோகம் எண்று பேசுவதால் யாருக்கு என்ன நன்மை வந்து விட போகின்றது...???

தமிழனுக்குள் அடிபட்டு , இந்தியனும் சிங்களவனுக்கும் தேவையான பலத்தையும், நேரத்தையும் நீங்கள் விட்டு வைக்கிறீர்களே இது தான் நீங்கள் தமிழருக்கு செய்யும் நன்மையா எண்று கேட்டால் நான் இந்திய விசுவாசியா....???

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே ஒன்று இப்பிடித்தான் இருக்கும் என்று வரைவிலக்கணம் வைச்சு இருந்தால்... அப்படி நிஜத்தில அது இல்லாமல் இருக்கேக்க குழப்பமாய் இருக்கலாம்.

தயா, தான் முந்தி புலியில இருந்தனான் என்று சொன்னால்.. அவர் தனது கருத்தை சொல்லிறதில மற்ற ஆக்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரிய இல்லை.

முந்தி சாத்திரி அண்ணாவும் தான் புலியில இருந்ததை சொல்லி இருக்கிறார்.

பலர் நீங்கள் புலி ஆதரவாளர்களாக உங்களைக்காட்டி கருத்து எழுத இயலும் எண்டால் தான் ஒரு முன்னாள் போராளி என்று சொல்லி ஒருத்தர் கருத்து எழுதிறதில என்ன பிழை இருக்கிது எண்டு தெரிய இல்லை.

புலிக்கு ஆதரவான கருத்துக்களை மட்டும்தான், அல்லது புலி ஆதரவாளர்களுக்கு ஆதரவான கருத்தை மட்டும்தான் எழுதலாம் என்றால் இதை கருத்துக்களம் என்று சொல்லிறது கஸ்டமானது.

நான் அண்மையிலதான் கண்டுபிடிச்சன், நாங்கள் துரோகி என்று சொல்லிறதுமாதிரி நாங்கள் துரோகி என்று சொல்லுறவங்கள் எங்களை புலிப்பினாமிகள் என்று சொல்லுறாங்கள்.

தலைப்பு இப்பிடி சொல்லிது:

ஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்திய வகுத்துள்ள புதிய உபாயம்: புதுடில்லியில் இரகசியப் பேச்சுக்கள்

ஆளையாள் குத்துப்படாமல் இதைப்பற்றி உங்கடை கருத்துக்களை சொல்லுங்கோ.

என்னைப்பொறுத்தவரை.. இந்தியா எங்களுக்கு எப்பவும் ஒரு கொள்ளிக்கட்டை. இந்தியா எங்களுக்கு அயல் நாடாக இருக்கும்வரை தாயகத்தில எங்கட உறவுகள் ஒருபோதும் நிம்மதியாக வாழ ஏலாது - இந்திய நாட்டில ஏதாவது பெரிய மாற்றங்கள் வரும்வரை.

கெதியில சோவியத் குடியரசுக்கு நடந்தது மாதிரி இந்திய சிறிய சிறிய பகுதிகளாக துண்டுபட்டால்தான் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்போல இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான தயா , விசுகு இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதே ...... தற்போதைய சூழ்நிலையில் நல்லது.

கலைஞன் நான் முன்னாள் போராளி எண்று சொல்வதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை ... இயக்கத்தை விட்டு போட்டு வந்து விட்டேன் எண்று சொல்வது எனக்கு பெருமையானதும் இல்லை...

ஆனாலும் நான் போராளியாக இருந்தேன் எண்று சொல்வதின் காரணம் , போராளியாக இருந்த போது மக்கள் செய்தவைகள், நடந்து கொண்ட முறைகள் எப்படி மனதில் தைத்தன என்பதை சொல்வதுக்காக மட்டுமே... பல விடயங்களை புலிகளை சாட்டி பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்... அவற்றுக்கும் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதே உண்மை...

அனேகமான தமிழர்களுக்கு இருக்கும் ஒரு மனப்பாண்மை என்ன எண்றால்... என்னை விட அவன் அதிகம் செய்தான் எண்று யாராவது சொல்லி விட்டால் அவரை வெறுக்க ஆரம்பிப்பது... (எதையாவது செய்தவனை பார்த்து எதையுமே செய்யாதவர் படும் பொறாமையாக மட்டுமே இது படுகிறது...)

மற்றும் படி நான் எழுதிய கருத்தை எதையாவது தவறு எண்று சுட்டிக்காட்டி , எழுதமல் சும்மா மொட்டையாக எழுதுவது அதைதான் சொல்கிறது...

நிறைய எழுத வேண்டும் எண்று நினைக்கிறனான்... ஆனால் இவர்களுக்காகவா எண்று எண்ணம்தான் வருகிறது....

( என்னோடு நிண்ற மறைந்து போன நண்பர்களுக்காக வேறு எதையாவது செய்யலாம், இவர்கள் எக்கேடாவது கெட்டு கெடுக்கட்டும்... .)

Edited by தயா

....

பல விடயங்களை புலிகளை சாட்டி பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்... அவற்றுக்கும் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதே உண்மை...

அனேகமான தமிழர்களுக்கு இருக்கும் ஒரு மனப்பாண்மை என்ன எண்றால்... என்னை விட அவன் அதிகம் செய்தான் எண்று யாராவது சொல்லி விட்டால் அவரை வெறுக்க ஆரம்பிப்பது... (எதையாவது செய்தவனை பார்த்து எதையுமே செய்யாதவர் படும் பொறாமையாக மட்டுமே இது படுகிறது...)

...

தயா இது முற்றிலும் உண்மையின் மேல் உண்மை... நானும் வாழ்கையில் மட்டுமல்ல யாழிலும் கவனித்து இருக்கிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.