Jump to content

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி: அர்த்தம் அறியாத வயதும்.. அறிந்த வயதும்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட..

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்..

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார்.

மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது..

மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழுந்திடுமோ என்ற பயத்தில் முணுமுணுப்பை கைவிட்டதும் இப்போ மீண்டும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.

சமீபத்தில் இந்தப் பாடலை மீண்டும் தற்செயலாகக் கேட்கப் போக.. அதேன் மாங்கனியை தொட்டிலில் தூங்க விட வேண்டும் என்ற ஆராய்ச்சிக் கேள்வி... மூளையில் வந்து தொலைத்தது. அதை ஏன் ஒரு ஆண் பாட வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

அது இப்போ.. விடையாக வில்லங்கத்தனமான ஒரு பதிலைத் தந்திருக்கிறது. அதனை நேரடியாக இங்கு எழுத முடியாத அளவுக்கு அதற்குள் வில்லங்கத்தனம் ஒளிந்திருக்கிறது என்று நினைக்கும் போது.. அதிர்ச்சியாகவும் இருக்கிறது... வியப்பாகவும் இருக்கிறது.

எவ்வளவு பெரிய ஆபாசத்தை.. வானலைகளில் எந்தக் கத்தரிப்புக்களுக்கும் இடமின்றி கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்களே இந்தச் சினிமாக்காரர்கள்.. என்று எண்ணும் போது அவர்களின் திறமையை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

சினிமாக்காரர்களை விடுவோம்.. அது அவர்களின் தொழில்.. அட தமிழ் சினிமா ரசிகர்களைப் பார்த்தால்.. இவ்வளவு மட்டமான பாடல்களையா கேட்டு ரசித்துக் கொண்டு ஆங்கிலப் பாடல்கள் வெளிப்படையாக சொல்லும் ஆபாசத்துக்கு முகம் சுழிக்கின்றனர் என்று நினைக்கும் போது.. அடப்பாவிப் பசங்களா என்று அங்கலாய்க்கவே முடிகிறது.

இந்தப் பாடலில் இந்த ஒரு வர்ணனையே.. இந்த அளவுக்கு பெண்களை அவர்களின் அங்கங்கள் தொடர்பில் ஆபாசத்தனமாக வர்ணிக்கும் நிலை இருக்கும் போது.. எம்மை அறியாமலே.. இதையா சிறுவயதில் வாயில் முணுமுணுத்துத் திரிந்தோம் என்று நினைக்கும் போது ஒரு வித குற்ற உணர்வே மேலிடுகிறது.

இதற்கு மேல் இந்தப் பாடல்கள் வரிகள் தொடர்பில் என்னால் அதிகம் விபரித்து எழுத முடியாதிருக்கிறது. ஏனெனில்.. எமது சமுதாய கட்டமைப்பில் இது கூரிய கத்தியின் மேல் நடப்பது போன்றது. ஆனால் இந்தச் சமுதாயமா இப்படியான பாடல்களை வரவேற்று ரசித்து வருகிறது என்று எண்ணும் போது.. இவர்களின் போலி முகத்திரைகள் கிழிந்து சுக்கு நூறாகி விழுவதையே என் மனக் கண் காண்கிறது.

இதனை விட வெளிப்படையாகவே ஆபாசத்தை ஆபாசமாக இனங்காட்டும் ஆங்கிலப் பாடல்கள் எவ்வளவோ மேல். இலகுவாக இதுதான் ஆபாசம் என்று இனங்கண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்க்கலாம்.. எடுக்க வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம் அங்கு.

ஆனால் தமிழில் இந்த வகைப் பாடல்களைக் கேட்டு.. குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை தலையாட்டுவதற்கு ஆட்டம் போடுவதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் அல்லவா இருக்கின்றன. அதனை விளங்கிக் கொள்ள இத்தனை ஆண்டுகள் செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

ம்ம்ம்.. அந்த வகையில் இது தமிழ் சினிமாத் துறையின் சாதனை என்று கூடச் சொல்லலாம்.தமிழ் சினிமாவே.. தனி வகைதான்..! வாழ்த்துக்கள் தமிழ் சினிமா ஆபாசத்துறை..!

source: http://kundumani.blogspot.com/

  • Replies 106
  • Created
  • Last Reply
Posted

பெண்களிண்ட மாங்கனிகள் பற்றி அறியத்தந்தீங்கள். எனக்கும் இன்றைக்கு உதை வாசிச்சபிறகுதான் இப்பிடி அர்த்தம் விளங்கிது. இதைமாதிரி.. ஆண்களில இருக்கிற கனிகளைப்பற்றியும் ஏதாவது தமிழ் சினிமா பாடல்கள் வந்து இருந்தால் விளக்கத்துடன் அறியத்தாங்கோ.

அவன் யாரோ கலை ரசனையுடன் தன்ர பெண்டாட்டியை இல்லாட்டிக்கு காதலியை கற்பனை செய்து இருக்கிறான். உங்களுக்கு ஏன் கடுப்பு வருகிது. வேணுமெண்டால் நீங்களும் கலை ரசனையுடன் முயற்சி செய்து பார்க்கிறது...? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவன் யாரோ கலை ரசனையுடன் தன்ர பெண்டாட்டியை இல்லாட்டிக்கு காதலியை கற்பனை செய்து இருக்கிறான். உங்களுக்கு ஏன் கடுப்பு வருகிது. வேணுமெண்டால் நீங்களும் கலை ரசனையுடன் முயற்சி செய்து பார்க்கிறது...? :D

அவரவர் தங்களின் காதலியை.. பொண்டாட்டியை வர்ணிப்பது தவறு என்று மேலே எழுதப்பட்டுள்ள ஆக்கம் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். அந்த வர்ணிப்பு.. சமுதாயத்துக்குச் சொல்லப்படும் பாங்கு.. அது சென்றடையும் மக்கள் குழுமங்கள்.. அவற்றின் வெளிப்படையான நடத்தைகள் என்பன தொடர்பில் தான் ஆக்கம் பேசுகிறது என்று நினைக்கிறேன்.

ஆண்களை இவ்வளவு வர்ணித்து பெண்கள்.. படிப்பார்களா.. என்பது கேள்விக்குறியே..! ஏனெனில்.. தமிழ் சமுதாயத்தில் ஆண் மட்டுமே மோகிக்கக் கூடியவன்.. பெண்.. அப்படிப்பட்டவள் அல்ல என்ற போலித் தோற்றம் காட்டப்பட்டு வருகிறது. அதனால் தான் கள்ளக்காதல்களும்.. கொலைகளும்.. குத்துவெட்டுகளும் அதிகம் என்று நினைக்கிறேன்..!

மனிதன் என்ற அடிப்படையில் இருவருக்கும் பால் இனத்தூண்டல் பொதுவானது. பெண்களும் ஏதோ ஒருவகையில் தூண்டல்களைப் பெறுகின்றனர் என்பதும் உண்மை. ஆனால் அது வெளியில் வர்ணிக்கப்படுவதில்லை. ஆனால் ஆணின் சிந்தனைகள் வர்ணனைகளாக சில சந்தர்ப்பங்களில் ஆணை முழு வக்கிரத்தனமானவனாகக் காட்டக் கூட சிருஷ்டிக்கப்படுகின்றன.

ஆணுக்கும் மெல்லிய மனது இருக்கிறது. அவனுக்கும் மென்மை உணர்வுகள் இருக்கின்றன. பெண்களிடம் மட்டுமா அவை..??! ஆண் என்றால் முரடன் என்பது போன்ற ஒரு தோற்றத்தை எமது சமூகம் கட்டி வளர்த்து வருவது.. இந்தப்பாடலிலும் தொனிக்கிறது..!

வர்ணனைகள் சமுகத்தை அடைந்து அது இன்னொரு தனிமனிதனை அடையும் போது அது தொடர்பான அந்தத் தனிமனிதனின் உணர்வுகளை வெளியிடுவது.. காதலன் காதலியை.. கணவன் மனைவியை வர்ணிப்பது ஒரு எல்லை கடந்து போகும் நிலையில் ஏற்படுத்த வல்ல விளைவுகள் என்னவாக அமையும் என்பதையே நோக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். இது மேற்குலக சமூகத்தில் அவசியமில்லை. அங்கு பாலியல் என்பது.. அது சம்பந்தப்பட்ட உணர்வுகள் என்பது வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.. பகிரப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ரகசியம் என்று காப்பவர்கள்.. இப்படியான வர்ணனைகளின் ரகசியம் காக்கத் தவறியதன் மர்மம் என்ன..??! :lol::icon_idea:<_<

Posted

இந்த அழகான பாடல் வரிகள் ஆபாசம் என்றால், அதை கேட்பவர்கள் வெட்கம் கெட்டவர்கள் என்றால் எம் சங்க இலக்கியங்களில் 90% ஆனவை ஆபாசம் தான். கம்பரும், கபிலரும் சிலாகித்து எழுதிய எத்தனையோ வரிகள் இதே பாடலைப் போழ நேரிடையாக சொல்லாமல் சிலேடையாக சொல்லி இருக்கு. அதேபோல் அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் அம்மனை பெண்ணாக உருவகித்து ஒவ்வொரு அங்கமாக வருணித்துப் பாடிய பாடல்கள் இன்றும் இந்துக் கோயில்களில் பாடப்படுகின்றது.

உலகில் காமத்தை பாடாத இலக்கியங்களோ அல்லது கலையோ இல்லவே இல்லை. அற்புதமான உணர்வு தரும் காமம் என்றுமே அழகியலின் ஒரு அம்சம்தான்

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

இப்பாடலைக் கேட்பவர்களை வெட்கம் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. இந்தப் பாடலில் வர்ணிக்கப்படும் சில விடயத்தை பேசுவது.. ஆபாசம்.. என்று.. பாலியல் பற்றி பேசுவது தப்பு.. என்று பல எழுதாத ரகசிய விதிமுறைகளை அமைத்து அதனால் தமது சமுதாயத்தில் திரைகளை மறைப்புக்களைப் போட்டு வைத்துள்ள மக்கள்.. இப்பாடலில் இதனை ரசிக்கும் போது.. நீங்கள் சொன்னது போல கம்பனின் வர்ணனையை ரசிக்கும் போது.. ஏன் ஆபாசம் என்பதை உணரவில்லை என்பதுதான் கேள்வி.

அதுமட்டுமன்றி ஆங்கிலப் பாடல்கள் மோசமான ஆபாசம் என்று முகஞ்சுழிக்கும் அண்ணாமார்.. அக்காமார் இதனை ரசித்து ருசித்துக் கேட்கும் போது.. அந்த ஆபாசத்தை உணராமல் விட்டதன் மர்மம் என்ன என்றே கேட்கிறேன்.

இந்தப் பாடல் வர்ணனையை காட்சிப்படுத்தினால்.. அதனை.. ஏ வகை அல்லது பி வகை படமாகத்தான் காண்பிக்க முடியும். ஆனால் பாடலில் ஏன் அந்த எந்த வகையும் இன்றி.. இது உலாவ விடப்பட்டிருக்கிறது.. செவிக்கு ஏ வகை பி வகை இல்லை. கண்ணுக்கு மட்டும் தான் அதுவா..??! <_<:icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்காலபோவான் அது எப்படி யாருக்குமே தோன்றாத சிந்தனைகள் உங்களுக்கு மட்டும் தோன்றுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்காலபோவான் அது எப்படி யாருக்குமே தோன்றாத சிந்தனைகள் உங்களுக்கு மட்டும் தோன்றுகிறது?

மற்றவைக்கு தோன்றாமலா இந்தப் பாடலை எழுதி இருக்கினம். அவை மனசுக்க நினைச்சு ரசிச்சு மகிழ்ந்திருப்பினம். ஆனால் எனக்கு இந்த ஆக்கத்தை வைத்து இப்படிக் கேட்கனும் போல தோன்றியது. எதை எதையோ எல்லாம் ஆபாசமுன்னு பேச விடாம தடுக்கிறீங்க.. பிள்ளைகள் செய்தாக் கூடாதுண்ணு சத்தம் போடுறீங்க.. ஆனால் இதுகளை சத்தமா போட்டுக் கேட்கிறீங்க தானே.. ரசிக்கிறீங்க தானே.. எனும் போது.. பிறகேன் மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசி.. தங்களை ஆபாசத்தில் இருந்து விலக்கிக் காட்டுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவான்..??! வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே. ஏன் இப்படி இருக்கிறது எங்கள் சமூகம்.. வெளிப்படையின்றி.. என்பதன் ஆதங்கமே இப்படிக் கேட்க வைத்தது..! <_<:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த அந்த வயது வரும்போது விளங்கக் கூடிய வகையில் தான் எழுதப் பட்டிருக்கிறது.எல்லாம் ஆபாசம் என்று ஒதுங்கி இருந்தால் நீங்களும் இல்லை நானும் இல்லை. மூடி வைத்த விடயம் காத்திருந்து அநுபவிக்கும் போது ஆர்வம் அதிகரிக்கும்.அதனால் ஆசை கூடி அன்பு கூடி இல்லறம் இனிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் இருந்தாலும் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும்.குழந்தைகளும் இளம் வயதில் பெற்றோரின் அரவணைப்பில் வாழக் கூடியதாக இருக்கும். மேலை நாடுகளில் எல்லாம் வெளிப்படையாக இருப்பதால் திருமணத்திற்குப்; பின் ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.கணவன் மனைவிக் கிடையில் என்ன கூச்சம் வேண்டியிருக்கிறது. ஒரு தமிழ் பெண் தன் கணவனிடம்தான் வெளிப்படையாக எதையும் கேட்கலாம். மேற்கு நாட்டுப் பெண்களி;ல் பெரும்பாலானவர்கள் யாரிடமும் கேட்கலாம்.வெட்கம் என்பதும் காதல் உணர்ச்சியைக் கூட்டும் தமிழில் இவ்வளவு நயமாக அழகாக சொல்லியிருக்கிறார்களே என்று தமிழை இரசிப்பதைவிட்டு விட்டு குற்றம் கண்டு பிடிப்பதிலேயே நிற்காதீர்கள். என்ன அழகான உவமை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாதஸ்வரம் ஊதும் வரை என்றால் கலியாணம் முடியும் வரை விருந்துக்கு அவசரப்பட வேண்டாம் பொறுமையாக இருங்கள் எ;று சொல்லப் பட்டிருக்கிறது. நீங்கள் போய் நல்ல விசயத்தை விட்டிட்டு கெட்ட விசயத்தையே பிடிச்சுக் கொண்டு நிண்டடால் பார்க்கிற பார்வையிலேதான் பிழை.

நானும் இந்தப் பாடலின் தமிழை.. வர்ணிப்பை ரசிக்கிறேன். ஆனால் இதே விடயத்தில் ஆங்கிலப்பாடல்களில் தேடித் தேடி ஆபாசத்தை இனங்காட்டி ஒதுக்கி வைக்கும் நம்மவர்கள்.. தமக்கு என்று வரும் போது.. அதில் ஆபாசத்தைக் கடந்து தமிழை.. வர்ணனையை ரசிப்பதாகச் சொல்கின்றனர்..??!

பிள்ளைகள் பாலியலைப் பற்றிப் பேசுவதையே தடுக்கும் நம்மவர்கள்.. இதனை எப்படி அனுமதிக்கின்றனர்.. என்பதுதான் வினாக்குறியே. அந்த தடைகள் அவசியமா எமக்கு..??!

பேசுவதால்.. எதுவும் ஆகப் போவதில்லை. மூடிவைத்தால் தான் ரசிக்க முடியும் என்பதற்காக.. பேசாமல் தடுப்பது ஏன்..??! :icon_idea:

நாதஸ்வரம் ஊதும் வரை என்றால் கலியாணம் முடியும் வரை விருந்துக்கு அவசரப்பட வேண்டாம் பொறுமையாக இருங்கள் எ;று சொல்லப் பட்டிருக்கிறது. நீங்கள் போய் நல்ல விசயத்தை விட்டிட்டு கெட்ட விசயத்தையே பிடிச்சுக் கொண்டு நிண்டடால் பார்க்கிற பார்வையிலேதான் பிழை.

இதில் கெட்ட விடயம் என்ற ஒன்றில்லை. அப்படியாக ஒரு தோற்றப்பாட்டை நம்மவர்களே எழுப்பியும் விட்டுள்ளனர். எனது வினவலே அதுதான்.. ஏன் இந்த இரண்டும் கெட்டான் நிலை. ஒன்றில் வெளிப்படையாக இதுதான் அது என்று சொல்லிவிட்டால் முடிந்தது. இதனை இதற்குப் பிறகுதான் செய்ய வேண்டும் என்றால் முடிஞ்சுது. அதற்கேன் இத்தனை சுத்துமாத்து. மற்றவனை மட்டம்தட்டி.. எங்களை உயர்வாக்காட்டிக் கொள்ள முயற்சிக்கனும்..???! மற்றவர்களைப் போலத்தான் நாங்களும் சராசரி மனிதர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதில் எம்மவருக்கு என்ன தயக்கம்..??! :lol:<_<

Posted

இப்படி பல பாடல்கள் சிலேடையாக தமிழ் சினிமாவில் பாடப்பட்டு இருக்கு. கீழே உள்ள வரிகளைப் பாருங்கள். "பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒருவரம்" எனும் அருமையான பாடலில் உள்ள வரிகள் இவை

"பனி விழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடும் மாறும் கனிமரம்"

என்று தொடங்கி இடையில்..

சேலை மூடும் இளம்சோலை என ஆரம்பித்து ஈற்றில்..

கைகள் இடைதனில் நெளிகையில்

இடைவெளி குறைகையில்

எரியும் விளக்கு சிரித்து

கண்கள் மூடும்

அடுத்த பந்தியில்

காமன் கோயில் சிறைவாசம்

காலை எழுந்தால் பரிகாசம்

என்று அருமையாக போகும் அந்த பாடல். அதே போல் அந்தி மழை பொழிகிறது எனும் பாடலில் பெண் பாடுவது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு

தாவணி விசிறிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனைப் பூசுகின்றேன்

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெண்ணிலா வானில் வரும் வேளையில்

நான் விழித்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில் எதை எதையோ

நினைத்திருந்தேன்

நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்

ஆறுகின்ற பொழுது வரை அனல் போல கொதிப்பதேது ?

*(ஆசை கொண்ட இதயம் அது...)

இந்த பழைய பாட்டில வாற முதல் "நாலு வகை குணம்.........கொதிப்பதேது?" என்ற வரிகளை சேர்ந்துபாடி விட்டு அதற்கு விடையாக *("Haemorrhoids தான்..வேற என்ன?!! <_< !") என்று சொல்லி கேட்கிறவர்களை சிரிக்க வைக்க முழு பாட்டையும் பாட வெளிகிட தான் - கடைசி வரிகளின்

முத்து சிப்பி வாய் திறக்க

மோகம் கொண்டு துடித்திருக்க

கொட்டும் மழை குழி விழுந்து

கொஞ்ச கொஞ்ச என்ன வரும்? :unsure:

(முத்து ஒன்று பிறந்து வரும்!)

என்ற அடிகளை கேட்டால் பிறகு தான் எனேக்கே - சீக்!! :unsure: !!!! என்று போயிட்டு....

(கேக்கிறவனுக்கு விசர் வரும்!! :lol::D என்று அதன் பதிலை மாற்ற வேண்டி போயிற்று!)

ஆனால் ஒன்று, விளக்கம் இல்லாத வயதில இப்படியான பாட்டுகளை வாய் கிழிய பாடுறதில பிழை இல்லை...விளக்கம் வந்தால் பிறகு விளக்கம் தான் இருக்கும், ரசனை அதிகம் இருக்காது... இருந்தாலும் வெளிபடையாக கருத்துகளை உணர்த்துவதற்காக பாட முடியாது... கேட்பவர்களுக்கு விசர் தான் வரும்!!!

அது எல்லாம் போக, உங்கட பதிவுகளில் ஏன் எப்பவும் காதல் பிழை தப்பு என்று?? காதலில் காமமும் தாராளமாய் அடங்கும்.... காமம் இல்லாட்டி அது வெறும் சகோதரத்துவம் (இது ஒரு சொல்லா?!! தெரியேல்லை...ஆனால் பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்) தான். அதை சமுதாயம் ஏற்று கொள்ள வேணும் என்றால் - முதலில் நீங்கள் ஏற்று கொள்ளுங்கள்..... சமுதாயத்தில் நீங்கள் ஒருவர் இல்லையா?! :icon_idea:

மனுசனும் மிருகம் தான் என்று ஏற்று கொள்றியள் தானே (மனுசியும் மிருகம் தான் - அதை சொல்லாட்டி பிழை!). அந்த மிருகத்திற்கு இறுதில இனபெருக்கம் செய்யோணும் என்ற இலக்கு இருந்தாலும், அதிட சூழலுக்கு ஏற்ப காமத்தை உடைல கலையில என்று எலுமானதில எல்லாத்திலையும் புகுத்தி வெளிபடுதுது.. என்ன செய்வது - சிந்தனையில் அதிகம் உள்ளது வெளிப்படத் தானே செய்யும்.....

அதுவும் அந்த சிந்தனையை வெளிபடுத்துபவரின் ஆற்றலையும்/ கேட்பவர் பார்பவரின் ரசனையையும் பொறுத்து தான் இருக்கும்.

இலை மறை காயாய் இருப்பது என்பது அவரவர் விளக்கத்தை பொறுத்தது. அது வயதுக்கு வயது மாறும்....ஆளுக்கு ஆளும் மாறும்...

விளக்கம் உள்ளவர்களும் (பாட்டுகளை விரும்பி பாடுபவர்கள்) எல்லாம் அர்த்தத்தை வெளிப்படுத்த பாடுவது இல்லை...

உதில நீங்கள் மாங்கனி என்று பெண்களின் மார்பை சொல்றாங்கள் என்று புலம்புறியள்- ஆனால் ஆங்கில பாடல்களில் வாற வரிகளை பார்த்திட்டு எங்கட சனம் மிரளுது என்று...

எல்லா ஆங்கில பாடல்களும் இல்லை....ஆனால் சிலது உந்த தமிழ் பாட்டை விட பல மடங்கு (வெள்ளையளுக்கே) காது கூசிற மாதிரியானது உண்டு. :mellow:

எந்த ஒரு கட்டுபாடு வைத்தாலும் எல்லா கலாச்சாரத்திலும் அந்த எல்லைக்கு மேலொரு படி போவது - எல்லா காலத்திலும் இருந்து இருக்கும்....

மாங்கனி என்றதுக்கே பதறியடிச்சா எப்படி!! :D இதெல்லாம் சகஜமப்பா....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதைப்போய் நெடுக்கர் பெரிசாய் தூக்கிப்புடிச்சுக்கொண்டு திரியிறார்.

எதுக்கும் M.G.R ரை காதல் பாட்டுக்களை ஒருக்கால் வரிக்குவரி கவனிச்சுப்பாருங்கோ.

வெள்ளைக்காரன்ரை புளூபிலிம் தோத்துப்போகும்.

"பவளமென விரல் நகமும்

பசுந்தளிர்போல் வளைகரமும்

தேன்கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கோடியோ" :icon_idea:

"மடல் வாழை துடையிருக்க

மச்சமொன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமையெல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்" <_<

இது உலகம் சுற்றும் வாலிபன் படத்திலை நிலவு ஒரு பெண்ணாகி எண்ட பாட்டிலை இருந்து ஒருசில வரிகள்.

இதே மாதிரி வாத்தியின்ரை பாட்டிலை அந்தவிசயங்கள் எக்கச்சக்கம் கண்டியளோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அழகான பாடல் வரிகள் ஆபாசம் என்றால், அதை கேட்பவர்கள் வெட்கம் கெட்டவர்கள் என்றால் எம் சங்க இலக்கியங்களில் 90% ஆனவை ஆபாசம் தான். கம்பரும், கபிலரும் சிலாகித்து எழுதிய எத்தனையோ வரிகள் இதே பாடலைப் போழ நேரிடையாக சொல்லாமல் சிலேடையாக சொல்லி இருக்கு. அதேபோல் அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் அம்மனை பெண்ணாக உருவகித்து ஒவ்வொரு அங்கமாக வருணித்துப் பாடிய பாடல்கள் இன்றும் இந்துக் கோயில்களில் பாடப்படுகின்றது.

உலகில் காமத்தை பாடாத இலக்கியங்களோ அல்லது கலையோ இல்லவே இல்லை. அற்புதமான உணர்வு தரும் காமம் என்றுமே அழகியலின் ஒரு அம்சம்தான்

என்ரை ஊர் அம்மன் கோயில் தேரிலை இருக்கிற சிற்பங்களை இப்ப யோசிச்சு பாக்கேக்கை.......

பின்னுக்கு.....முன்னுக்கு .......நிமித்தி....... கிடத்தி.......நிக்கவிட்டு.... குனிய விட்டு..... :icon_idea:

சும்மா போங்கப்பா எனக்கே வெக்கமாய்கிடக்கு <_<

அதுதான் உந்த எங்கடை பழைய சிற்பங்களை பாக்க வெக்கமாய்க்கிடக்கு எண்டு சொன்னனான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட..

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்..

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார்.

மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது..

-----

நானும் , முன்பு இப்பாடலை கேட்ட போது ....... அதன் இசையையும் , குரலையும் ரசித்து கேட்பேன் .

இப்போ நெடுக்ஸ் இந்தப் பாடலை அக்கு வேறாக , ஆணி வேறாக அதன் கருத்தை அலசி ஆராய்ந்த போது தான் அதில் ஆபாசம் உள்ளதாக உணர்கின்றேன் .

அதுகும் .......

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார்.

இந்த வரிகள் ஆபாசத்தின் உச்சக் கட்டமாக தெரிகின்றது .

அந்தப் பெண் குறிப்பிடும் நாதஸ்வரம் ....... , தவிலுடன் ஊதும் நாதஸ்வரம் இல்லை .

மறைமுகமாக வேறு ஏதோ பொருளையோ , உறுப்பையோ குறிப்பிடுகின்றார் .

எண்டாலும் பாடலை எழுதிய கவிஞனுக்கு (பொற்) கிழி கொடுக்கலாம் . :icon_idea:

பிற்குறிப்பு : ஊதும் , ஊதுதல் என்றால் பெருதாகுதல் , குண்டாகுதல் என்று ........ தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது எல்லாம் போக, உங்கட பதிவுகளில் ஏன் எப்பவும் காதல் பிழை தப்பு என்று?? காதலில் காமமும் தாராளமாய் அடங்கும்.... காமம் இல்லாட்டி அது வெறும் சகோதரத்துவம் (இது ஒரு சொல்லா?!! தெரியேல்லை...ஆனால் பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்) தான். அதை சமுதாயம் ஏற்று கொள்ள வேணும் என்றால் - முதலில் நீங்கள் ஏற்று கொள்ளுங்கள்..... சமுதாயத்தில் நீங்கள் ஒருவர் இல்லையா?! icon_mrgreen.gif

மனுசனும் மிருகம் தான் என்று ஏற்று கொள்றியள் தானே (மனுசியும் மிருகம் தான் - அதை சொல்லாட்டி பிழை!). அந்த மிருகத்திற்கு இறுதில இனபெருக்கம் செய்யோணும் என்ற இலக்கு இருந்தாலும், அதிட சூழலுக்கு ஏற்ப காமத்தை உடைல கலையில என்று எலுமானதில எல்லாத்திலையும் புகுத்தி வெளிபடுதுது.. என்ன செய்வது - சிந்தனையில் அதிகம் உள்ளது வெளிப்படத் தானே செய்யும்.....

மாங்கனி என்றதுக்கே பதறியடிச்சா எப்படி!! <_< இதெல்லாம் சகஜமப்பா....

நான் இதைத் தப்பொன்று நினைச்சிருந்தா இப்பதிவை இட்டுருக்கமாட்டேன்.

காதல் தப்பென்று எவன் சொன்னான். காதல் என்பதன் பெயரால் மனிதர்கள் செய்யும் செயல்களில் தான் தப்புக்கள் இருக்கின்றன. மனிதர்களின் காதலுக்கும் பிற உயிரினங்களின் காதலுக்கும் இடையில் வேறுபாட்டை மனிதன் இயற்றிவிட்டான். மனிதனின் காதல்.. காசு பணம்.. நாடு.. தேசம்.. அழகு அந்தஸ்து.. படிப்புப் பட்டம்.. வேலை.. கார் வீடு விசா.. இப்படிப் பல பார்த்து வரும். பிற உயிரிகளின் காதல் இயற்கையின் இயல்பைத் தொட்டு வரும்..! இதுதான் அந்த வேறுபாடு. நான் வகை இரண்டை மதிக்கிறேன். வகை ஒன்றை வெறுக்கிறேன்.

காமத்தை.. காமமாக இனங்காட்டுதல் தவறல்ல. காதலை காதலாக இனங்காட்டுவதும் தவறல்ல. ஆனால் உள்ளுக்குள் எல்லாவற்றையும் ரசிச்சுக்கொண்டு வெளிக்கு அடுத்தவனை மட்டும் மட்டம்தட்டிக் கொண்டு.. இருப்பவர்களைத் தான் கேட்கிறேன். ஏனிந்தப் பொய் வேசம். காமத்தை நீங்களும் தான் ரசிக்கிறீர்கள். அடுத்தவன் பேசினால்.. ரசிச்சால் தான் தப்பா..???!

ஆங்கிலப் பாடல்களில் வரும் காமம்.. அல்லது ஆபாசம் எல்லை கடந்தது காது கூசும் என்கிறீர்கள். இந்தப் பாடலில் சொல்லப்படும் அர்த்த்தை விடவா அது.. பெரிசு..??! அவர்கள் வெளிப்படையாக காமத்தை காமமாகப் பாடுகிறார்கள். இலகுவாக இனங்கண்டு பிடித்து.. அதை தெர்ந்தெடுக்கிறார்கள்... கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள் விலகிப் போகிறார்கள். ஆனால் இது.. விளக்கம் இன்றி காமத்தை மறைத்து வைத்துப் பாடி.. எல்லோரையும் கவர்ந்திழுத்து.. காமம் என்று அறியாமலே காமத்தில் எல்லோ மூழ்க விடுகிறார்கள்.

கம்பன்.. பாடினான்.. செந்தமிழில்.. இலகுவில் யாருக்கும் புரியாது. வள்ளுவன் பாடினான்.. காமத்துப் பால் என்று முத்திரயிட்டு. ஆனால் சினிமா..???! எம்மவர்கள்.. அதற்கு தரும்.. ஒளிப்பு மறைப்பு.. ஏன் என்பதுதான் கேள்வி.

அதற்காக காமம் என்பது அசிங்கமானது.. அதுவே காதல் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. உண்மையில் காமம்.. காதல் எல்லாம் உணரும் மனதின் தன்மையில் தான் அதன் உண்மைத் தன்மையும் புனிதத்தன்மையும்.. கொண்டிருக்கின்றன. நான் இரண்டையும் ஒரு எல்லைக்கு அப்பால் கொண்டு செல்ல விரும்பவில்லை. எனக்குரிய ரசிக்கக் கூடிய வடிவில் புனிதமாகவே பார்க்க விரும்புகிறேன்.அது என் இயல்பு. அது என் மனதிற்கு அழகு. அதனை நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்களிற்கு இன்னொரு வடிவில் அதைப் பார்ப்பது அழகாக இருக்கலாம்.

ஆனால் என்னையும் தவறாக வழிநடத்தி இருக்கிறது இந்தச் சமூகம். நான் இப்போ தெளிவு பெற்றுவிட்டேன். காமத்தை காமமாக கலையாக புனிதமாகக் கூட எண்ணி ரசிப்பதில் தவறில்லை. காதலை காதலாக ரசிப்பதில் தவறில்லை. ஆனால் காமத்தை காமமாகக் காட்டாமல்.. திணிப்பதுதான் கூடாது. காமத்தை வன்முறையாக்கி மனிதர்களை காயப்படுத்துவதுதான் கூடாது. காமத்தை விரும்பாத இன்னொருவரின் மீது திணிப்பதும்.. கூடாது என்றே நினைக்கிறேன். புரியாத மொழிகளில்.. கற்பனையில்.. காமம்.. அழகுபடுத்தப்படுவது தவறல்ல.. புரியாத மொழிகளூடு அதனைத் திணிப்பது.. வக்கிரத்தனத்தை ஏற்படுத்துவது தவறு. அதனைக் காட்டிலும்.. காமத்தைக் காமமாக இனங்காட்டி மக்களை அதன் பால் சரியான திசையில் வழிநடத்துதல்.. காமத்தையும் மக்கள் முகம் சுழிப்பின்றி.. கட்டுக்கோப்போடு பார்க்க கேட்க பேச.. வழி செய்யும் இல்லையா..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ரை ஊர் அம்மன் கோயில் தேரிலை இருக்கிற சிற்பங்களை இப்ப யோசிச்சு பாக்கேக்கை.......

பின்னுக்கு.....முன்னுக்கு .......நிமித்தி....... கிடத்தி.......நிக்கவிட்டு.... குனிய விட்டு..... :icon_idea:

சும்மா போங்கப்பா எனக்கே வெக்கமாய்கிடக்கு <_<

அதுதான் உந்த எங்கடை பழைய சிற்பங்களை பாக்க வெக்கமாய்க்கிடக்கு எண்டு சொன்னனான் :D

கோவில்கள் காமக் கலைக்கூடங்களும் கூட என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை...! கலையில் காமம் வெளிப்படுத்தப்படும் இடங்களாக கோவில்கள் விளங்குகின்றன. அதன் பின்னணி என்ன என்பதும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை இல்லறத்தின் ஊடு துறவறம் என்பதைச் சொல்லும் சைவ வழியில் போகின்றனவோ அவை. இல்லறத்தில் காமம் ஒரு அம்சம் என்பதால் அதைக் கோவில்கள் பிரதிபலித்து நிற்கின்றன போலும். காமத்தை கலையாக ரசிப்பதில் தவறில்லை. ரசித்துக் கொண்டு.. சீ.. அசிங்கம்.. என்ற போலி வேசங்கள் தான் ஏன் என்று கேட்கிறேன். அதைக் கழற்றி எறியவே கேட்கிறேன்..! கலையை கலையாக ரசிக்க ருசிக்க விடுங்கப்பா..! :lol::mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் , முன்பு இப்பாடலை கேட்ட போது ....... அதன் இசையையும் , குரலையும் ரசித்து கேட்பேன் .

இப்போ நெடுக்ஸ் இந்தப் பாடலை அக்கு வேறாக , ஆணி வேறாக அதன் கருத்தை அலசி ஆராய்ந்த போது தான் அதில் ஆபாசம் உள்ளதாக உணர்கின்றேன் .

அதுகும் .......

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார்.

இந்த வரிகள் ஆபாசத்தின் உச்சக் கட்டமாக தெரிகின்றது .

அந்தப் பெண் குறிப்பிடும் நாதஸ்வரம் ....... , தவிலுடன் ஊதும் நாதஸ்வரம் இல்லை .

மறைமுகமாக வேறு ஏதோ பொருளையோ , உறுப்பையோ குறிப்பிடுகின்றார் .

எண்டாலும் பாடலை எழுதிய கவிஞனுக்கு (பொற்) கிழி கொடுக்கலாம் . :icon_idea:

பிற்குறிப்பு : ஊதும் , ஊதுதல் என்றால் பெருதாகுதல் , குண்டாகுதல் என்று ........ தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது .

சிறியண்ணா.. நீங்கள் சொல்லும் வரை.. நாதஸ்வரம் என்பதை.. ஒரு இசைக்கருவியாகவே பார்த்தேன். சிலேடை புகுந்து விளையாடி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறேன். <_<:lol:

Posted

தமிழ்சிறி, இந்தப்பாடலில், நாதஸ்வரம் என்பது இசைக்கருவி தான் என்பது என் அபிப்பிராயம். அவள் மணமுடிக்கும் வரை பொறுத்துக்கொள்ளும்படி சொல்கிறாள்.

இன்னொரு பாடல்:

மடிமீது தலைவைத்து என்று தொடங்கும். கண்ணதாசன் எழுதியது.

அதில் சில வரிகள்..

வாயின் சிவப்பு விழியிலே

மலர் கண் வெளுப்பு இதழிலே.. என்று வரும்.

இன்னொரு பாடல். ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா... இது வயது வந்தோருக்கானது.

ஆண்: பூரண கும்பம் ஏந்தி நடந்தால் நூலிடை பாவம் வருந்தாதோ

பெண்: காதலன் கைகள் தாங்கி நடந்தால் பாரமும் கொஞ்சம் குறையாதோ...

இது சிறுவயதினருக்கு புரியாது. ஆனால் வயது வந்தோருக்கு புரியும்.

இலைமறைகாயாக கொடுப்பது கவர்ச்சி. கவிஞரின் திறமை. ஆபாசம் அல்ல.

Posted

பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்

சரணத்தில்,

முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

அங்கால எப்பிடியெல்லாமோ போகுது.. வெக்கமா சொல்ல இருக்கு..! நான் இன்னும் வயசுக்கு வரேல்ல..! :icon_idea:<_<

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்சிறி, இந்தப்பாடலில், நாதஸ்வரம் என்பது இசைக்கருவி தான் என்பது என் அபிப்பிராயம். அவள் மணமுடிக்கும் வரை பொறுத்துக்கொள்ளும்படி சொல்கிறாள்.

------

ஈஸ் , எல்லா ஆண்களுமே ........ ஒருவகையில் நாதஸ்வர வித்துவான்கள் தான் , என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்

சரணத்தில்,

முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

அங்கால எப்பிடியெல்லாமோ போகுது.. வெக்கமா சொல்ல இருக்கு..! நான் இன்னும் வயசுக்கு வரேல்ல..! <_<:D

டங்கு நெடுக்ஸ் இப்படி ஒரு திரியைத்திறந்து மஞ்சள் புத்தகம் படிக்காமல் யாரும் அப்பாவிகள் இருந்தால் அந்த குறையை போக்கி எல்லாரும் படித்த பெருமைக்கு சொந்தகாரர் ஆயிட்டார். :mellow::lol::icon_idea:

Posted

டங்கு நெடுக்ஸ் இப்படி ஒரு திரியைத்திறந்து மஞ்சள் புத்தகம் படிக்காமல் யாரும் அப்பாவிகள் இருந்தால் அந்த குறையை போக்கி எல்லாரும் படித்த பெருமைக்கு சொந்தகாரர் ஆயிட்டார். :lol:<_<:icon_idea:

உங்களைப் போன்றவர்கள் பற்றிக் கதைப்பதற்குத் தான் இந்த திரியை திறந்துள்ளார். மஞ்சள் புத்தகத்திற்கும் பாடல்களில் உள்ள காமத்தை சிலேடையாக சொல்வதற்கும் 100% வேறுபாடுகள் உண்டு. மனசுக்குள் ரசித்துக் கொண்டு வெளியே "அச்சோ...ஆபாசம்" என்பவர்களைப் பற்றித் தான் நெடுக்ஸ் கதைக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

[quote name='Ilayapillai' date='Jul 30 2009, 10:27 PM' post='532012'

அது எல்லாம் போக, உங்கட பதிவுகளில் ஏன் எப்பவும் காதல் பிழை தப்பு என்று?? காதலில் காமமும் தாராளமாய் அடங்கும்.... காமம் இல்லாட்டி அது வெறும் சகோதரத்துவம் (இது ஒரு சொல்லா?!! தெரியேல்லை...ஆனால் பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்) தான். அதை சமுதாயம் ஏற்று கொள்ள வேணும் என்றால் - முதலில் நீங்கள் ஏற்று கொள்ளுங்கள்..... சமுதாயத்தில் நீங்கள் ஒருவர் இல்லையா?! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களைப் போன்றவர்கள் பற்றிக் கதைப்பதற்குத் தான் இந்த திரியை திறந்துள்ளார். மஞ்சள் புத்தகத்திற்கும் பாடல்களில் உள்ள காமத்தை சிலேடையாக சொல்வதற்கும் 100% வேறுபாடுகள் உண்டு. மனசுக்குள் ரசித்துக் கொண்டு வெளியே "அச்சோ...ஆபாசம்" என்பவர்களைப் பற்றித் தான் நெடுக்ஸ் கதைக்கின்றார்

நிழலி அண்ணா மஞ்சள் புத்தகத்திற்கும் பாடல்களில் உள்ள காமத்தை சிலேடையாக சொல்வதற்கும் 100% வேறுபாடுகள் உண்டு என்பது எனக்கு தெரியும். நான் மஞ்சள் புத்தகமும் சரி,நீலப் படமும் சரி நிஜமா

பார்த்தேன் பா...யாருக்காகவும் நான் நல்ல பிள்ளை வேசம் போடத்தேவையில்லை. ஆனால் நான் எல்லாருடைய கருத்துக்களினதும் மொத்த வடிவமாக ஓரளவு அப்படி தோணுது. இதை பாருங்க

" முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து"

நிழலி அண்ணா இது சிலேடையா பார்க்க நல்லா இருக்கு ஆழமா பார்த்தால்....

சரி விடுங்கப்பா இதெல்லாம் சகஜம் தானே. :icon_idea:<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
    • ஆம். எனக்குத் தெரிந்த ஒரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  குடும்பத்தை விபு க்களே இந்தியாவிற்கு தங்கள் படகில் கொண்டு சென்று இறக்கியிருந்தனர். சமாதான காலத்தில் அவர்கள் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்து வவுனியாவில் மீளக் குடியமர்ந்தனர். அவர்கள் தற்போது வட அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  அக் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாற்று இயக்கம் ஒன்றின் பெரிய பொறுப்பில் முன்னர் இருந்து பின்னர் பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.  இதே போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவைகளை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும்.  @விசுகுகுஎ ஏன்  -1 போட்டிருக்கிறீர்கள்? காரணத்தை அறியத்தர முடியுமா?   
    • இவரும் பல தடவைகள் பொதுவெளியில் நான் டொக்டர் என்னுடன் நீ எப்படி இது போல் பேசலாம் என த்ன்னுடைய ஒளிவட்ட பேச்சுகளை பேசியுள்ளார் ... 
    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.