Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல....

Featured Replies

யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது

எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....."

யாழ் இணையத்தில் ஏதோவொரு தொய்வுநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆர்வமாக கருத்தெழுதிவந்த பலபேரைக் காணமுடியவில்லை.

ஏன் என்ற கேள்விக்கு, எனக்கு பதில் தெரியாமல், எனது நண்பனொருவனைக் கேட்டேன்...

"ஏன்டா நீ யாழில் இப்ப கருத்தே எழுதிறதில்லை?" என்று.

அதற்கு அவன் சொன்னான்... "யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது

எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." என இழுத்தான். [????????]

எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது.

நண்பர்களே!

நமக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து,

ஒன்றுபடுவோம்!

நம் இன விடுதலைக்காக பாடுபடுவோம்!

தயவு செய்து இதை செய்வீர்களா???

யாழ் களத்திலிருந்து விலகிப் போன எமது தமிழின உணர்வாளர்களை, நண்பர்களை மீள வரவேற்போம்!

ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்!

என்றும் அன்புடன்...

பருத்தியன்

Edited by பருத்தியன்

நாட்டில சண்டை.. வீரசாகசங்கள் இப்ப நடப்பது இல்லை. விரைவில 5ம்கட்ட ஈழப்போர் - Action Movie in Real time - துவங்கினால் மீண்டும் ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு காணலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பருத்தியன் ,

இப்பிடி சொல்லிப்போட்டியள் .

நான் ஏதாவது குற்றம் , குறை செய்து போட்டேனா ......, சொல்லுங்கள் . :icon_idea:

மற்றப்படி உங்கள் கருத்துகளை அமைதியாக வாசிப்பவர்களில் நானும் ஒருவன் . <_<

நான் பலரிடம் தனி மடல் போட்டு "என்ன சத்தத்தை காணோம்" என்று கேட்டேன், அநேகமானோர் மிகவும் மனமுடைந்து போய் பதில் எழுதினர். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு போராட்டம் பின்னடைவை சந்தித்து கொண்டமை பலருக்கு மனவுடைவை கொடுத்துள்ளது. போராட்டத்தின் தற்போதைய நிலையை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை. அதிர்ச்சி, மனவுடைவு, ஆதங்கம், தவிப்பு, இழப்பு என்பனவற்றால் ஒரு Static தன்மையை அடைந்துள்ளனர்

அத்துடன், இந்த இழப்புகளை விட நடக்கும் குத்து வெட்டுகளும், தலைமைப் பதவிக்கான வெட்கம்கெட்ட போட்டிகளும் பலரை மெளனமாக்கியுள்ளது. களத்தில் ஏற்பட்ட படுதோல்வியை விட, இந்த வெட்டுக் குத்துகளால் ஏற்படும் மனவேதனைதான் மிக அதிகம்

இவற்றில் இருந்து மீள ,மீண்டும் எழுதுவதுதான் சிறந்த செயல் என் நம்புகின்றேன். அரசியல் எழுத விருப்பமில்லாவிடினும், ஆகக் குறைந்தது "மாங்கனிகள் தொட்டினிலே தூங்குதடி" பற்றியாவது ஆராச்சி செய்து மனதை லேசாகலாம்

மற்றது,

பருத்தியன் இதனை ஏன் ஊர்புதினம் பகுதியில் இணைத்தீர்கள்? இது உறவோசை பகுதியில் வரவேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ..... இனி நிழலி , சொன்ன மாதிரி மாங்கனி , ரம்புட்டான்கனி போன்ற தலைப்புகளில் அதிக கவனம் செலுத்த உத்தேசித்துள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய செய்தி அதிர வைக்கும் போது, மீண்டும் வருவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி நடப்பதை பற்றி சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம் எல்லாம் முடிந்துவிடவில்லை இன்னமும் நம்பிக்கை எனது மனதில் இருக்கிறது நிச்சயம் நமக்கென்டோர் காலம் வரும் அப்போது ஓடிப்போனவர்கள் எல்லாம் வீராப்பாய் வருவார்கள் { நானும் தான் }

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாள் போக்க விட்டு எல்லாரும் மீண்டும் வருவினம்..

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ..... இனி நிழலி , சொன்ன மாதிரி மாங்கனி , ரம்புட்டான்கனி போன்ற தலைப்புகளில் அதிக கவனம் செலுத்த உத்தேசித்துள்ளேன் .

சந்தடி சாக்கில.. நம்மள ஒரு வாங்கு வாங்கிறீங்க போல.

அரசியல் என்பது திண்ணையில் இருந்து பேசிக் கொண்டிருக்கும் விடயமல்ல. ஒரு நகர்வு பிழைத்தால் அடுத்த நகர்வுக்கான வேலைத்திட்டத்தோடு களத்தில் இறங்க வேண்டிய ஒன்று. நமக்குத்தான் அது முடியாதில்ல. அதை ஒப்புக் கொள்ளவும்.. முடியல்ல.. ஒப்புக்கொள்ளாமலும் இருக்க முடியல்ல. இரண்டும் கெட்டான்.. நிலையில் இருந்து கொண்டு.. எங்கட எங்கட அலுவல்களைக் கவனிக்கப் போயிட்டம். இதுதான் அண்ணோய் உண்மை..!

நான் நினைக்கல்ல.. போராட்டத் தொய்வால வருந்தி இவையள் வரவில்லை என்று. பெரிசா எதிர்பார்த்து அது தமக்கு பாதகமின்றி நினைச்சது போல நடக்கவில்லையே என்ற கவலை இருக்கு. ஆனால் இவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்.. நாற்று நட்டார்களா.. களை பிடிங்கினார்களா.. அல்லது அங்கு கொஞ்சி மகிழும் எம்மினப் பெண்களுக்கு கஸ்தூரி மஞ்சள் அரைத்தார்களா. சீரியல் பார்த்ததும்.. கலியாணம் கட்டி பிள்ளைப் பெத்ததும்.. அசைலம் அடித்ததும். என்று... காலத்தைக் கடத்திய.. இவர்கள். ..போராளிகள்.. மாமனும் மச்சானும் என்பதற்காகவா.. கவலைப்படுகிறார்கள்..???! :icon_idea:<_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சந்தடி சாக்கில.. நம்மள ஒரு வாங்கு வாங்கிறீங்க போல.

அரசியல் என்பது திண்ணையில் இருந்து பேசிக் கொண்டிருக்கும் விடயமல்ல. ஒரு நகர்வு பிழைத்தால் அடுத்த நகர்வுக்கான வேலைத்திட்டத்தோடு களத்தில் இறங்க வேண்டிய ஒன்று. நமக்குத்தான் அது முடியாதில்ல. அதை ஒப்புக் கொள்ளவும்.. முடியல்ல.. ஒப்புக்கொள்ளாமலும் இருக்க முடியல்ல. இரண்டும் கெட்டான்.. நிலையில் இருந்து கொண்டு.. எங்கட எங்கட அலுவல்களைக் கவனிக்கப் போயிட்டம். இதுதான் அண்ணோய் உண்மை..!

நான் நினைக்கல்ல.. போராட்டத் தொய்வால வருந்தி இவையள் வரவில்லை என்று. பெரிசா எதிர்பார்த்து அது தமக்கு பாதகமின்றி நினைச்சது போல நடக்கவில்லையே என்ற கவலை இருக்கு. ஆனால் இவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்.. நாற்று நட்டார்களா.. களை பிடிங்கினார்களா.. அல்லது அங்கு கொஞ்சி மகிழும் எம்மினப் பெண்களுக்கு கஸ்தூரி மஞ்சள் அரைத்தார்களா. சீரியல் பார்த்ததும்.. கலியாணம் கட்டி பிள்ளைப் பெத்ததும்.. அசைலம் அடித்ததும். என்று... காலத்தைக் கடத்திய.. இவர்கள். ..போராளிகள்.. மாமனும் மச்சானும் என்பதற்காகவா.. கவலைப்படுகிறார்கள்..???! :icon_idea::lol:

இது , என்ன கோதாரியாய் கிடக்குது .

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் . உங்களுக்கு காய்ச்சல் வந்தால் எங்களோடை ஏன் ஏறுறீங்கள். :D<_<

  • கருத்துக்கள உறவுகள்

இது , என்ன கோதாரியாய் கிடக்குது .

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் . உங்களுக்கு காய்ச்சல் வந்தால் எங்களோடை ஏன் ஏறுறீங்கள். <_<:icon_idea:

நான் இங்கு எத்தனையோ கட்டுரைகளை இணைத்திருக்கிறேன். ஆனால் ஒரு 10 பேர் கூட கருத்துப் பகிர்ந்தது குறைவு. ஆனால் மாங்கனி.. மண்ணாங்கட்டிக் கனி என்று எழுதினால் 1200 பேர் 24 மணி நேரத்துக்க பார்க்கிறாங்க.. 30 க்கும் மேற்பட்ட பதில்கள் இறுக்கப்பட்டுள்ளன. இப்ப சொல்லுங்க.. காய்ச்சல்.. யாருக்கு என்று..!

ஒரு ஆதங்கமான அரிய பதிவு அது. அதுவும் பேசாப் பொருள் என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருக்கிறது. அதே இடத்தில்.. முலை அது இதென்று எழுதிப் போட்ட பதிவுகள் எத்தனையோ இருக்கின்றன.. போய் பாருங்கள்..! சரி.. அதை ஏன் அண்ணோய் எல்லா இடமும் காவித்திரியுறீங்க..! இப்ப சொல்லுங்க காய்ச்சல் யாருக்கு..??!

ஆனால் இறுதியில் காய்ச்சலும் எனக்கும்.. கடியும் எனக்கு..! முடியல்ல.. நம்மாக்களின்ர நடிப்பை.. தாங்க முடியல்ல. செவாலியர் விருதே கொடுக்கலாம்.. எல்லாத் தமிழர்களையும் கூட்டி வைத்து ஒன்றாக.

உங்களைச் சொல்லேல்ல அண்ணோய்.. தமிழர்கள் எங்கட ஜீன் அப்படி..! கூட இருக்கிறவனை சந்திக்கிழுத்து.. ஒரு நாலு தட்டுத்தட்டி எங்கட வீரத்தைக் காட்டுறதுதான்.. எங்கட இனப்பழக்கம்.. வீரம்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது , என்ன கோதாரியாய் கிடக்குது .

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் . உங்களுக்கு காய்ச்சல் வந்தால் எங்களோடை ஏன் ஏறுறீங்கள். <_<:icon_idea:

தமிழ் சிறி அண்ணா கூஊஊள்

இதுக்கு போய் ஏன் ரென்சன் ஆகிறிங்கள்.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா கூஊஊள்

இதுக்கு போய் ஏன் ரென்சன் ஆகிறிங்கள்.. :lol::unsure:

அது சரி குட்டிப்பையா ....... , :icon_mrgreen:

இதுக்கெல்லாம் ...... ரென்சன் ஆகினால் , வாழ்க்கை என்னாவது ? :):rolleyes:

ரேக் ற் ஈசி. ஓகே ! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி குட்டிப்பையா ....... , :icon_mrgreen:

இதுக்கெல்லாம் ...... ரென்சன் ஆகினால் , வாழ்க்கை என்னாவது ? :lol::rolleyes:

ரேக் ற் ஈசி. ஓகே ! :icon_idea:

சரி சரி

சிரித்து வாழனும் எப்பவும் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் தோற்றதில் இருந்து, சொல்ல இயலாத இழப்புகளை சந்தித்ததில் இருந்து அரசியல், போராட்டம் என்றது சொல்ல போனால் - ஒரு பெரிய சென்சிடிவ் ஆன விடயமாய் போயிற்று...

யாரும் ஏதும் சொல்ல போனால் - தான் தான் தனக்குள் இருக்கும் குற்ற உணர்வில்/ இயலாமையில்/ தோல்விகளை சந்திக்க விரும்பாமையில்/ அடுத்த பக்கத்தை திருப்ப முடியாமையில் - நீ துரோகி நான் துரோகி என்று badge குத்தி விடுரதுக்கேண்டே சனம் பார்த்து கொண்டு இருக்கிறது தான் ஒரே பெரிய காரணம். வெளியாட்கள் இல்லை - அதையும் நாங்களே தான் செய்றம்.

சமூக சாரளத்திலோ, பேசாபொருள்ளிலோ இன்னும் துரோகி paraphanelia இன்னும் விக்க/ வழங்க தொடங்கேல்லை...அதான் எல்லாரும் அங்க மினகடுறம்.

மற்றபடி நாடுநிலமைகள், பிரச்சனையள் பெரும்பாலும் எல்லாரிடமும் தலைக்குள் கருத்தளவில் இருக்கு - கருத்து களத்தில் தான் இல்லை.

நீங்கள் தாராளமாய் விவாதிக்கலாம் பருத்தியன் அண்ணா, நீங்கள் போடுற பதிவுகளை பார்த்திட்டு முன்பு இருந்த உங்கள் நண்பர்கள் பதில் நிச்சயம் போடுவார்கள்.

எங்க உங்கட அடுத்த கட்டுரை? ஆவலுடன் எதிர்பார்கிறேன்.... :icon_mrgreen:

சந்தடி சாக்கில.. நம்மள ஒரு வாங்கு வாங்கிறீங்க போல.

நான் அதனைக் குறிப்பிட்டது உங்களை ஒரு வாங்கு வாங்குவதற்கு அல்ல. அரசியல் பற்றி எழுதி சண்டை பிடித்து இரத்த அழுத்தத்தை கூட்டுவதற்கு பதிலாக, இப்படி பாடல்களை பற்றி எழுதுவது ஆறுதலானது எனும் ரீதியில் எழுதினேன். கூடியவரைக்கும் அரசியல் பற்றி எழுதாமல் இப்படியான அழகியல் ரீதியிலான திரிகளில் நான் மினக்கெடுவது அதனால் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை எழுதி என்ன நடக்கப்போகுது :icon_mrgreen::icon_idea::rolleyes:

அதற்கு அவன் சொன்னான்... "யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது

எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." என இழுத்தான். [????????]

கருத்து மாற்றங்களை ஏற்றுகொள்ள கூடிய பக்குவம் எங்களுக்கு இல்லையா?

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கையெண்டால் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும் இதுக்குப்போய் ................... :icon_mrgreen:

போராட்டத்தின் தற்போதைய நிலையை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை. அதிர்ச்சி, மனவுடைவு, ஆதங்கம், தவிப்பு, இழப்பு என்பனவற்றால் ஒரு Static தன்மையை அடைந்துள்ளனர்

எனக்கு நீங்கள் சொல்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது...

பூநகரியை தாண்டி இராணுவம் வந்த போது தலைவர் மாவீரர் நாள் உரை ஆற்றிய போது சில விடயங்களை தெளிவாக்கினார்...

  1. நாங்கள் பல (20 நாடுகள்.?) நாடுகளை எதிர்த்து போராடுகிறோம், அவர்களின் நலன்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல எண்று ( ஆனால் யாரும் வழமை போல காதில் போட்டு கொள்ள இல்லை)
  2. ஆனாலும் எங்களை நேரடியாக எதிர்ப்பது சிங்களப்படைகள் அவர்களை எதிர்த்து போராட்டத்தை நகர்த்துவது எங்களுக்கு புதிய பிரச்சினை இல்லை ஆகவே போராட்டம் வடிவங்கள் மாறி தொடரும்... புலிகள் தலைமறைவு போராட்ட முறைமைக்கு மாற வேண்டிய அவசியம் வந்து உள்ளதையும் சுட்டி காட்டி இருக்கிறார்...
  3. புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களின் அரசியல் மற்றய கடைமைகளை தொடர்ந்து செய்ய முன் வரவேண்டும் எண்று மாற இருக்கும் ( வேறு வடிவமுமாக ) அரசியல் வளியையும் சுட்டி நிண்றார்... அதோடு செல்வராசா பத்மநாதன் அண்ணாவையும் அறிமுகப்படுத்தி விட்டார்...

இந்த முடிவை எடுக்க முன்னம் 2007 ம் ஆண்டு தமிழ் மக்களின் போராட்ட பங்களிப்பு போதாமையால் வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக போராட முன் வர வேண்டும் எண்று கேட்டு கொண்டார்... அதுக்கான விளக்கத்தை தமிழ்செல்வன் அண்ணாவும் விபரமாக கூறி இருக்கிறாரே... இதன் போது கூட புரியவில்லையா தலைவர் எடுப்பது கடைசி முயற்ச்சி எண்று...???

20 000 அண்மையான போராளிகளையும் கட்டி வைத்த கட்டமைப்பையும் கொண்டு செண்று மறைந்து இருந்து போராட்டத்தை தலைவர் தொடர்ந்து இருக்கலாம் எண்று இலகுவாக சொல்ல முடியும்.... ஆனால் அது சாத்தியமானதா என்பதை சிந்தித்து பார்த்தீர்கள் எண்றால் புரிந்து இருக்கும்....

என்னை கேட்டால் இந்த விடுதலையை எங்களால் 2000 மாம் ஆண்டுக்கு முன்னர் எண்றால் ஆயுதம் மூலம் இலகுவாக பெற்று இருக்க முடியும்... ஆனால் அதுக்கான பங்களிப்பாளர்கள் பற்றாக்குறையால் முடியாது போனது... இப்போது அரசியல் வளியோடு கூடிய ஆயுதம் கொண்டு போராட வேண்டிய நிலை... ஆனால் ஆயுதம் தூக்க சொல்லி எங்களால் யாரையும் கேட்க்க முடியாது... ஆகவே தூக்குபவர்கள் தூக்கட்டும் நாங்கள் சிங்களவனுக்கு எதிராக அரசியல் செய்வோம்....

இதற்க்கு முக்கியமாக தமிழர் தமிழருக்கு எதிராக செய்யும் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து சிங்களவருக்கு எதிராக முழுமையான தமிழர் அரசியல் வெளிப்பட்டால் மட்டுமே விடுதலை சாத்தியமாகலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு முக்கியமாக தமிழர் தமிழருக்கு எதிராக செய்யும் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து சிங்களவருக்கு எதிராக முழுமையான தமிழர் அரசியல் வெளிப்பட்டால் மட்டுமே விடுதலை சாத்தியமாகலாம்...

அட.. நடக்கக்கூடிய விடயமா இது?

  • தொடங்கியவர்

நாட்டில சண்டை.. வீரசாகசங்கள் இப்ப நடப்பது இல்லை. விரைவில 5ம்கட்ட ஈழப்போர் - Action Movie in Real time - துவங்கினால் மீண்டும் ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு காணலாம். :icon_mrgreen:

உண்மைதான் கலைஞன். ஆனால்... நாம் சிந்திய குருதிக்கும், செய்த தியாகங்களுக்கும் மதிப்பளிக்க இன்னும் தன்மானமுள்ள தமிழர்கள் இருக்கின்றார்கள் என்ற நப்பாசையில்தான் இக்கருத்தினை உங்கள்முன்வைத்தேன்.

என்ன பருத்தியன் ,

இப்பிடி சொல்லிப்போட்டியள் .

நான் ஏதாவது குற்றம் , குறை செய்து போட்டேனா ......, சொல்லுங்கள் . :icon_idea:

மற்றப்படி உங்கள் கருத்துகளை அமைதியாக வாசிப்பவர்களில் நானும் ஒருவன் . :rolleyes:

தமிழ்சிறி! என் நீங்கள் எந்தத் தப்பும் பண்ணவில்லை.

நாம் எந்தத் தப்பும் பண்ணக்கூடாது.

உங்களால் முடிந்தவரைக்கும் யாழ் நண்பர்களை ஒன்றிணையுங்கள்.

நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு எத்தனையோ கட்டுரைகளை இணைத்திருக்கிறேன். ஆனால் ஒரு 10 பேர் கூட கருத்துப் பகிர்ந்தது குறைவு. ஆனால் மாங்கனி.. மண்ணாங்கட்டிக் கனி என்று எழுதினால் 1200 பேர் 24 மணி நேரத்துக்க பார்க்கிறாங்க.. 30 க்கும் மேற்பட்ட பதில்கள் இறுக்கப்பட்டுள்ளன. இப்ப சொல்லுங்க.. காய்ச்சல்.. யாருக்கு என்று..!

என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியுள்ளீர்கள். பண்பட்டிருந்தாலும், புண்பட்ட மனதல்லவா அதான் விடலைகளுக்கு இந்தச் சறுக்கல்.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்

நான் பலரிடம் தனி மடல் போட்டு "என்ன சத்தத்தை காணோம்" என்று கேட்டேன், அநேகமானோர் மிகவும் மனமுடைந்து போய் பதில் எழுதினர். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு போராட்டம் பின்னடைவை சந்தித்து கொண்டமை பலருக்கு மனவுடைவை கொடுத்துள்ளது. போராட்டத்தின் தற்போதைய நிலையை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை. அதிர்ச்சி, மனவுடைவு, ஆதங்கம், தவிப்பு, இழப்பு என்பனவற்றால் ஒரு Static தன்மையை அடைந்துள்ளனர்

அத்துடன், இந்த இழப்புகளை விட நடக்கும் குத்து வெட்டுகளும், தலைமைப் பதவிக்கான வெட்கம்கெட்ட போட்டிகளும் பலரை மெளனமாக்கியுள்ளது. களத்தில் ஏற்பட்ட படுதோல்வியை விட, இந்த வெட்டுக் குத்துகளால் ஏற்படும் மனவேதனைதான் மிக அதிகம்

இவற்றில் இருந்து மீள ,மீண்டும் எழுதுவதுதான் சிறந்த செயல் என் நம்புகின்றேன். அரசியல் எழுத விருப்பமில்லாவிடினும், ஆகக் குறைந்தது "மாங்கனிகள் தொட்டினிலே தூங்குதடி" பற்றியாவது ஆராச்சி செய்து மனதை லேசாகலாம்

மற்றது,

பருத்தியன் இதனை ஏன் ஊர்புதினம் பகுதியில் இணைத்தீர்கள்? இது உறவோசை பகுதியில் வரவேண்டியது

நிழலி!

நீங்கள் சொல்வது போல பலபேர் இப்படி மனமுடைந்து இருப்பது உண்மைதான். நமது பின்னடைவுக்குப் பிறகாவது தமிழினம் விழித்தெழும் என்று பார்த்திருந்தபோது தமக்குள்ளேயே பிளவுபட்டுக் கொண்ட விடயம் என்னையும் மனரீதியாக மிகவும் பாதித்தது.

ஆனாலும் மன்னிக்கவும் நிழலி.மாங்கனிகள் பற்றி கருத்துச்சொல்ல எனக்கு மனசில்லை.

எனது கருத்தினை ஏதோ யோசனையில் மாறி ஊர்ப்புதினத்தில் இணைத்துவிட்டேன். இப்பொழுது சரியாக மாற்றப்பட்டுள்ளது. யாழ் நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்.

நன்றி நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.