Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழுகிய தமிழ்மகன்

Featured Replies

அ. கலியாணம் கட்டவேண்டியது.

ஆ. பெண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது, படிக்க போகக்கூடாது என்று கட்டளை போடவேண்டியது, வெருட்டவேண்டியது, புத்தியை மழுங்கடித்து முன்னேற முடியாதவகையில் செய்வது.

இ. பெண்டாட்டியை தன்னிடம் காசுக்கும், இதர தேவைகளிற்கும் நிரந்தரமாக தங்கி நிற்பதற்கு ஏற்றவகையில் கட்டுப்போடுவது.

ஈ. தேவைவரும்போது அவ்வப்போது சேவல் துரத்துவதுபோல்.. பெண்டாட்டியை தனது இச்சைகளை தீர்ப்பதற்கு பனபடுத்தவேண்டியது.

உ. பெண்டாட்டி ஓர் உதவாக்கரை... குடும்பத்துக்கு அமைவான பொண்ணு இல்லை என்று ஆக்களிடம் முறைப்பாடு செய்யவேண்டியது.

ஊ. வெளியாருடன் இனிய மொழியிலும், பெண்டாட்டியுடன் தூசணத்திலும் உரையாடல் செய்வது.

--------------------

மேலே நான் கூறியது சாதாரணமாய் வெளிநாடுகளில் தமிழ் குடும்பங்களில் நடைபெறுகின்ற விசயம். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

இதெல்லாம் பத்தாம்பசலித்தனம்

தற்பொழுதும் இப்படியெல்லாம் தமிழ் குடும்பங்களில் நடக்குமென நான் நினைக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் மனுசி வேலைக்கு போறது விருப்பமில்லை காரணம் வீட்டை பார்க்கமுடியாது என்ட மகளை கவனிக்கமுடியாது வேலைக்கு எதுக்கு போகனும் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக ஒத்துழைப்பு வழங்கத்தனே அது எனக்கு தேவயில்லை நான் உழைப்பது எனது குடும்பத்துக்கு நன்றாக போதும். நான் கலியாணம் கட்டினபிறகு கேட்கவில்லை நீ வேலைக்கு போகக்கூடாது என்று கலியாணம் கட்டுறதுக்கு முதல் சொன்னேன் நீ வேலைக்கு போகனுமா என்று இல்லை என்றா அதன் பிறகே கலியாணம் கட்டினேன்.ஆனால் எனக்கு சம்பளம் வந்த உடனேயே அதில் இருந்து ஒரு பங்கை எடுத்து மனைவிக்கு குடுத்துடுவேன் அந்த பணம் குடும்ப செலவுக்கு அல்ல எனது மனைவியின் தேவைக்கு மட்டுமே.வெளியில் வேலைக்கு போனாலும் அதேயளவு பணமே சம்பளமாக கிடைக்கும்.அந்த காசுகளை சேர்த்து வைத்து நகை வாங்குவா தனக்கு தேவயானது வாங்குவா எனக்கு பிறந்த நாள் வரும்போது ஏதாவது எனக்கு தெரியாமல் வாங்கி தருவா எனக்கு ஏதாவது காசு கஸ்டம் என்றாலும் தருவாள்.என்ன சண்டை எங்களுக்கிடையில வந்தாலும் என்ட காசு நான் போடுற சாப்பாடைத்தான் நீ தின்னுறாய் உன்ர கொப்பர் உனக்கு என்ன தந்தவர் நான் தந்த காசு தானே நீ என்ன உழைக்கிறியா என்ற கதைகள் மட்டும் கதைப்பதுமில்லை கெட்டவார்த்தைகள் உபயோகிப்பதுமில்லை. சந்தோசமாக வாழனும் என்று உண்மையாக நினைத்தால் ஆயிரம் வழி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அ. கலியாணம் கட்டவேண்டியது.

ஆ. பெண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது, படிக்க போகக்கூடாது என்று கட்டளை போடவேண்டியது, வெருட்டவேண்டியது, புத்தியை மழுங்கடித்து முன்னேற முடியாதவகையில் செய்வது.

இ. பெண்டாட்டியை தன்னிடம் காசுக்கும், இதர தேவைகளிற்கும் நிரந்தரமாக தங்கி நிற்பதற்கு ஏற்றவகையில் கட்டுப்போடுவது.

ஈ. தேவைவரும்போது அவ்வப்போது சேவல் துரத்துவதுபோல்.. பெண்டாட்டியை தனது இச்சைகளை தீர்ப்பதற்கு பனபடுத்தவேண்டியது.

உ. பெண்டாட்டி ஓர் உதவாக்கரை... குடும்பத்துக்கு அமைவான பொண்ணு இல்லை என்று ஆக்களிடம் முறைப்பாடு செய்யவேண்டியது.

ஊ. வெளியாருடன் இனிய மொழியிலும், பெண்டாட்டியுடன் தூசணத்திலும் உரையாடல் செய்வது.

--------------------

மேலே நான் கூறியது சாதாரணமாய் வெளிநாடுகளில் தமிழ் குடும்பங்களில் நடைபெறுகின்ற விசயம். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

அதற்கு பிறகு என்ன விவாகரத்து தானே

எந்த வெளிநாட்டில இப்படி நடக்குது,மனிசிக்கு மனுசன் மாரே வேலை தேடிகொடுக்கிறாங்கள் நீங்கள் எந்த காலத்தில இருக்கிறீயள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட தம்பி மாப்பு!

எந்த உலகத்திலையணை இருக்கிறியள்?

போனகிழமையும் என்ரை கூட்டு ஒண்டுக்கு காதாவடியைப்பொத்தி விழுந்த கதையை சொல்லவே?

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணா மாதிரி ஆண்கள் குறைவாகத் தான் இச் சமுதாயத்தில் இருக்குறார்கள்.கலைஞன் சொல்வது மாதிரி ஆன ஆண்கள் தான் இச் சமுதாயத்தில் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.பொதுவாக ஆண்கள் பெண்களை தங்களிலும் பார்க்க படிக்க வைப்பதற்கோ அல்லது தங்களிலும் உயர்ந்த வேலை பார்க்க தடை விதிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அ. கலியாணம் கட்டவேண்டியது.

ஆ. பெண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது, படிக்க போகக்கூடாது என்று கட்டளை போடவேண்டியது, வெருட்டவேண்டியது, புத்தியை மழுங்கடித்து முன்னேற முடியாதவகையில் செய்வது.

இ. பெண்டாட்டியை தன்னிடம் காசுக்கும், இதர தேவைகளிற்கும் நிரந்தரமாக தங்கி நிற்பதற்கு ஏற்றவகையில் கட்டுப்போடுவது.

ஈ. தேவைவரும்போது அவ்வப்போது சேவல் துரத்துவதுபோல்.. பெண்டாட்டியை தனது இச்சைகளை தீர்ப்பதற்கு பனபடுத்தவேண்டியது.

உ. பெண்டாட்டி ஓர் உதவாக்கரை... குடும்பத்துக்கு அமைவான பொண்ணு இல்லை என்று ஆக்களிடம் முறைப்பாடு செய்யவேண்டியது.

ஊ. வெளியாருடன் இனிய மொழியிலும், பெண்டாட்டியுடன் தூசணத்திலும் உரையாடல் செய்வது.

--------------------

இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ள ஆண்கள் கலியாணம் கட்டவே தகுதி இல்லாத சடங்கள் .

கலியாணம் , குடும்பவாழ்க்கை என்பது ஒரு இனிய தேன்கூடு .

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கமும் முக்கியமாக இருப்பது போல் உள்ளது தான் ...... குடும்பத்தில் கணவனும் , மனைவியும் .

அதனை புத்தி சாதிரியத்துடன் கையாளக்கூடிய தைரியமும் , மனோபலனும் உள்ளவன் மட்டுமே கலியாணம் கட்ட ஆசைப்படலாம் .

இது விளையாட்டல்ல ... இருவரின் வாழ்க்கை சம்பந்தப் பட்டது . அதற்கு மேல் ... பிறக்கும் பிள்ளைகள் , சமூகம் , உற்றார் , உறவினர் போன்றோரை மிகவும் பாதிக்கும் விடயம் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்படியான ஆண்களைக் காணவில்லை. ஒருவேளை தினக்குடிகாரர்களைப் பற்றிச் சொல்லுறாரோ..??! அது தமிழர்களில் மட்டுமல்ல எல்லா சமூகத்திலும் பிரச்சனைதான்..! :)

மனைவியோ கணவனோ.. ஒருவரை ஒருவர் மதித்து புரிந்து கொண்டு நடக்க வேண்டும். கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கேவலப்படுத்துவது.. திட்டுவது.. புறக்கணித்து நடப்பது.. மனிதப் பண்பு கூட அல்ல..! எந்த ஒரு மனிதனும் தன்னை புறக்கணிக்க நினைக்கிறவனோடு உறவாட முனைய மாட்டான். அப்படி இருக்கும் போது கணவன் மனைவி.. காதலன் காதலி எவராவது ஒருவர் மற்றவர் முன்னிலையில் அல்லது தனிப்பட்ட முறையில் இவர்களில் ஒருவரை அடுத்தவர் புறக்கணிக்க முற்படின்.. அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. அப்படியாக புறக்கணிக்க (ignore) முற்படுபவர்களை ஒரேயடியா வாழ்க்கையில் இருந்து புறக்கணித்துவிடுவது நன்று..! பல ஏமாற்றங்களை தவிர்க்கும்..!

வாழ்க்கை வாழ்வதற்கே. கட்டிக்கொண்டு மாழ்வதற்கல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

suppannai you are really great anna.very nice keep it up life long. :lol::lol::)

By:Gayini.

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது..! :D

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

-------

Edited by தமிழ் சிறி

பெண்டாட்டியோட ஒழுங்காய் மனுசன்மாதிரி மனிதாபிமானத்துடன் நடக்காவிட்டால் மூன்றாம் நபர்கள் தலையீடு செய்வது தவிர்க்கமுடியாது.

வழமையாக குடும்ப விசயங்களில் மூன்றாம் நபர்கள் மூக்கை நுழைப்பது ஒருவகை.

தனது அவலநிலமையை ஒருபெண் கூறும்போது மூன்றாம் நபர்கள் மூக்கை நுழைக்கப்பட வைப்பது இன்னொருவகை.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு,நான் இருக்கும் .இடத்தில் நடக்கும் இரு குடும்பத்தின் உண்மை நிலை.என்ன என்றால் அந்த குடும்ப தலைவன்கள் :D எப்பவடா எவனாவது எனது குடும்பத்தில் மூக்கை நுளைப்பான் என்று ஏக்கத்துடன் காத்து கிடக்கிறாங்காள்.நீதி பெறுவதற்காக. :D

எனக்கு தெரிந்து எத்தினையோ ஆண்கள் இங்க மனைவி மாரை படிக்க அனுப்புகிறார்கள் அவர்கள் விருப்பம் போலவே வைத்து இருக்கிறார்கள்...

எனக்கு தெரிந்த் அண்ணா ஒருவர் அவருக்கு வயது 36 என்று நினைக்கிறேன் அந்த அக்காவுக்கு 34 கல்யாணம் பண்ணி இரண்டு வருடம் அந்த அக்கா இப்பவும் அவங்க குடும்பத்துக்காக வேலை பண்ணுகிறார்... அந்த அக்கா லண்டன் அண்ணா வேறு நாடு இன்னமும் இந்த அக்கா குடும்பத்துக்காக அக்கா வேலை செய்யுறா அந்த அண்ணாவுதான் படிக்க வைத்தார்... எல்லாமே பண்ணினார்....அந்த அண்ணா மாதிரி சில பேர் இருக்கிறார்கள் என்று நான் அந்த அண்ணாவை பார்த்த பின்புதான் அறிந்தேன்....படிக்க வைத்ததும் அந்த் அண்ணாதான்

வெளி நாட்டில் ஒரு சில வீட்டில் இப்படி நடக்கிறதுக்காக எல்லா வீட்டிலும் இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை... ஒரு சில ஆண்கள் பண்ணும் தப்புக்காக எல்லார் மேலையும் பழிய போட முடியாது..அது மாதிரிதான் பெண்களும்...ஒரு சிலர் தப்பு தப்பாக நடந்தால் எல்லார் மேலையும் பழியை போடுவது சில பேரின் குணம் ஆகி விட்டது

ஒரு சில ஆண்கள், ஒரு சில பெண்கள் பண்ணும் தப்புக்கள் என்று சொல்லமுடியாது. தவிர, ஒரு சிலர் என்பதற்காக.. கொடுமைகளை பார்த்துக்கொண்டு இருக்க இயலாது. நாங்கள் பொத்திக்கொண்டு இருந்தாலும்... வெளிநாடுகளில சுற்றிவர இருக்கிற வேற்றின சமூகம் பொத்திக்கொண்டு இருக்காது. ஏதோ ஒருவகையில் மோப்பம் பிடித்துவிடுவார்கள். முடிவு? காவல்துறையின் வருகையாகக்கூட இருக்கலாம்.

மாப்பு,நான் இருக்கும் .இடத்தில் நடக்கும் இரு குடும்பத்தின் உண்மை நிலை.என்ன என்றால் அந்த குடும்ப தலைவன்கள் :D எப்பவடா எவனாவது எனது குடும்பத்தில் மூக்கை நுளைப்பான் என்று ஏக்கத்துடன் காத்து கிடக்கிறாங்காள்.நீதி பெறுவதற்காக. :D

எப்படியான பிரச்சனை என்று கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள். அவர்கள் கொடுமையை சகிச்சுக்கொண்டு பதுங்கி இருக்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் என்ன என்று விரிவாய் சொன்னால்தா விளங்கிக்கொள்ள முடியும்.

நானும் இப்படியான ஆண்களைக் காணவில்லை. ஒருவேளை தினக்குடிகாரர்களைப் பற்றிச் சொல்லுறாரோ..??! அது தமிழர்களில் மட்டுமல்ல எல்லா சமூகத்திலும் பிரச்சனைதான்..!

ஏற்கனவே கண்டு இருப்பீங்கள். இவர் இப்படிச் செய்வார் என்று இன்னமும் தெரியாமல் இருக்கலாம். குடி நிச்சயம் நிலமையை மோசமாக்கிது என்பது உண்மை.

ஒரு சில ஆண்கள், ஒரு சில பெண்கள் பண்ணும் தப்புக்கள் என்று சொல்லமுடியாது. தவிர, ஒரு சிலர் என்பதற்காக.. கொடுமைகளை பார்த்துக்கொண்டு இருக்க இயலாது. நாங்கள் பொத்திக்கொண்டு இருந்தாலும்... வெளிநாடுகளில சுற்றிவர இருக்கிற வேற்றின சமூகம் பொத்திக்கொண்டு இருக்காது. ஏதோ ஒருவகையில் மோப்பம் பிடித்துவிடுவார்கள். முடிவு? காவல்துறையின் வருகையாகக்கூட இருக்கலாம்.

மாப்பிள்ளை நீங்கள் சொல்லுவது உண்மைதான் வேற்று இனத்தவர் பார்த்துட்டு இருக்க மாட்டார்கள்தான்... ஆனால் சில பெண்கள் எல்லோ போலிஸ் வந்தாலும் என் கணவர் என்னை கொடுமை படுத்த வில்லை என்று சொல்லி விடுவார்கள்...

இப்படி ஒரு சம்பவம் உண்மையிலே லண்டனில் நடந்தது... மனைவியை வெளியில் கூட கண்வர் விட மாட்டார் கொடுமைகள் வேறு அந்த பெண் எல்லாத்தையும் எல்லோ சகித்துக்கொண்டு இருக்கிறார்... போலிஸ் வரும் போது என்னை என் கணவ்ர் கொடுமை படுத்தவில்லை என்று சொல்லி விட்டார்...

கல்லானானும் கணவன் புல்லானாலும் புருசன் எண்டு நினைச்சு அந்த லண்டன் அக்கா அமைதியாய் இருந்து இருக்கிறா போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி,

”ஆண்களில் பலரும் இப்படித்தான் இருக்கின்றார்கள். நானறிந்த பலருக்கு இப்படியான கதை இருக்குது. அதை வைச்சுத்தான் நான் இப்ப கதைகளையே எழுதுறது.

நிகழ்கால நிஜங்கள் இதுதான் முரளி. அதை மறைத்துக்கொண்டு வெளி வேஷம் போடுவதில் எங்கட ஆக்களை மிஞ்ச முடியாது. அன்பு ஆளுமைப்படுத்தாது. அடிமைப்படுத்தாது. நெஞ்சு நிறைய நேசம் இருந்தால் குற்றங்கள் கூட பெரிதாகத்தெரியாது. “நிலவாய் இருக்கும் பெண்களை சூரியனாக மாற்றிவிடுவதே ‘ஆண்களின் சுட்டெரிக்கும் வார்த்தைகள் தான்.

எனக்குத்தெரிந்த ஒரு அண்ணை; ‘இவரோ இப்படி எண்டு கேட்கிற மாதிரி....வீட்டில் மனுசியோட கெட்ட வார்த்தையால திட்டுறது வெளியில் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடிப்பது. அந்த அக்கா பாவம். அவ என்ன சொன்னாலும் சனம் நம்பாது என்ற மாதிரி இவரின்ற நடிப்பு! என்ன செய்யுறது? இன்னும் விதியே எண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறா. வீட்டில் மானம் போயிடுமாம்.

சுப்பண்ணை,

உங்களை மாதிரி எல்லா ஆண்களும் இருந்தால் ‘விவாகரத்து” என்ற பேச்சுக்கே இடமில்லை.

முரளி,

”ஆண்களில் பலரும் இப்படித்தான் இருக்கின்றார்கள். நானறிந்த பலருக்கு இப்படியான கதை இருக்குது. அதை வைச்சுத்தான் நான் இப்ப கதைகளையே எழுதுறது.

உங்களை மாதிரி எல்லா ஆண்களும் இருந்தால் ‘விவாகரத்து” என்ற பேச்சுக்கே இடமில்லை.

டமிழ் ஆண்கள் பலரும் அப்படி எண்று சொல்ல ஏலாது.சிலர் அப்படி எண்று சொல்லாம் ஒரு 20%

விவாகரத்து இல்லாவிடில் வக்கீல்மார்,கோர்ட், எங்க போரது,கதை எழுதுபவர்கள் கதைக்கு எங்க போரது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suppannai you are really great anna.very nice keep it up life long. :D:):D

By:Gayini.

நன்றி தங்கச்சி :D

நீக்கப்பட்டுள்ளது..! :D

என்னாச்சு டங்கு :D ?,ஆனாலும் வாசித்தேன்

-------

மச்சான் உங்களுக்கும் என்ன நடந்தது :D:lol: ,மாங்கனி அடிச்சிட்டுதோ(பேயடிக்கிற‌மா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மிக விரைவில் திருமணம் செய்ய போகின்றேன்... என் மனைவியை வேலைக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பம்..... இது சரியா..?

சரியா பிழையா என்று விருப்பத்தை உங்க மனைவிகிட்ட கேளுங்க. நல்லதொரு வாழ்க்கை அமைய பிரார்த்தனைகள், வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மிக விரைவில் திருமணம் செய்ய போகின்றேன்... என் மனைவியை வேலைக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பம்..... இது சரியா..?

அவங்க விரும்பினால் அனுப்புங்க.

முதலில் இந்தக்கேள்வியை நீங்க 'அவாட்டத்தான் கேட்கோணும்.

அப்பதான் அன்பு வளரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நம்மடை ஆக்கள் பணத்திற்கு ஆலாய்ப் பறக்கிற பறப்பில பொண்டாட்டியை ஒரு வேலையென்ன 10 வேலைக்கே அனுப்ப ரெடியாய் இருக்கிறாங்கள்.. நீங்க என்னடாண்டா 80-90 களில இருந்த பிரச்சனையை இப்ப கதைச்சுக் கொண்டு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.