Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவரது அகதித் தஞ்ச மொழிபெயர்ப்பு அனுபவத்தில் அவர் நூற்றுக்கணக்கான பெடியன்களையும் ஐம்பது அறுபது பெட்டைகளையும் கண்டுவிட்டதால் இந்தப் பெடியனை மட்டும் தனியத்தெரிந்திருக்க ஒரு நியாயப்பாடும் இல்லைத்தான். இருந்தாலும் இவனுக்கும் ஏதாவது ஸ்பெசல் கதைகள் இருந்து அது தனக்கு நினைவிருந்தால் ஆளை அடையாளம் காணுவதொன்றும் கஸ்ரமான காரியமில்லை என்று அவர் நினைத்தார்.

குமாரசூரியருக்குத் தெரியவருகிற ஸ்பெசல் கதைகளில் சில அவரை அடுத்த வார்த்தை பேச முடியாமல் குரலடைக்கச் செய்திருக்கின்றன. சில பல்லைக்காட்டாமல் உள்ளுக்குள் சிரிக்கவும் வைத்திருக்கின்றன. திருகோணமலையில் ஐந்து பள்ளிக்கூடப் பெடியங்களை ஆமி சுட்டதில் செத்தவனுடைய தம்பிக்காரனின் தஞ்ச வழக்கு விசாரணைக்கு குமாரசூரியர்தான் மொழிபெயர்த்தார். அன்றைக்குத் தம்பிக்காரன் அழுது முடித்து கண்ணைத் துடைத்தபிறகும் குமாரசூரியர் தழுதழுத்துக்கொண்டிருந்தார். விசாரிக்கிறவன் எப்பவும்போல விறைச்ச தலையனாக முகத்தை வைச்சுக் கொண்டிருந்தாலும் குமாரசூரியர் சொல்லச் சொல்ல ரைப் அடிக்கிற வெள்ளைக்கார மனிசி பேயறைஞ்சவள் போலத்தான் இருந்தாள். பக்கத்தில இருந்த கரித்தாஸ் பெட்டையும் அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

இரண்டு மூன்று வருசத்துக்கு முதல் ஒரு பெடியனின் முதலாவது விசாரணையில் அவன் தன்னை சிங்கள ஆமி இரும்புச் சங்கிலியால் கட்டி அடித்தது என்றான். சொன்ன எல்லாத்தையும் ரைப் அடிச்சு கையெழுத்து வாங்கி அனுப்பியவனை ஒன்றரை வருசத்துக்குப் பிறகு இரண்டாவது விசாரணைக்கு கூப்பிட்டபோதும் குமாரசூரியர்தான் மொழிபெயர்க்க அழைக்கப்பட்டார். இதுவொரு தெய்வச்செயல் என்றே குமாரசூரியர் மனிசிக்குச் சொன்னார். ஏனென்றால் இம்முறை விசாரணையில் அந்தப்பெடியனை சிங்கள ஆமி கயிற்றால் கட்டி அடித்திருந்தது. இதை அப்படியே மொழிபெயர்த்துச் சொன்னால் என்ன நடக்குமென்று குமாரசூரியருக்கு நல்லாவே தெரியும். வழக்கு நிராகரிக்கப்பட்ட கத்தைத் தாள்களில் ஏதாவது ஒரு பக்கத்தில் இலக்கமிட்டு முதலாவது விசாரணையில் தன்னை இரும்புச் சங்கிலியால் கட்டியதாக கூறிய தஞ்சக் கோரிக்கையாளர் இரண்டாவது விசாரணையில் கயிற்றால் கட்டியதாக கூறியிருப்பதனால் அது உண்மைத்தன்மை இல்லாததாகிறது. ஆகவே இவரது அகதித் தஞ்ச வழக்குக் கோரிக்கையை ஏற்க முடியாது. நபர் முப்பது நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். நல்லவேளையாக பெடியன் தன்னைக் கட்டி அடித்தது சங்கிலியாலா கயிற்றாலா என குழம்பிப்போயிருந்தாலும் குமாரசூரியர் தெளிவாக இருந்தார். அவர் கயிற்றை சங்கிலி ஆக்கினார். அவனது கேஸ் அக்செப்ற் ஆனதா றிஜெக்ட் ஆனதா என குமாரசூரியருக்குத் தெரியாது. றிஜெக்ட் ஆகியிருந்தால் ஒரு காரணம் மட்டும் குறைந்திருக்கும் எனத் தெரியும்.

இன்னொரு அகதித்தஞ்சக் கேஸ் ஒரு கொலைக்கேஸ் ஆகாமல் தடுத்த கதையை அவரால் மறக்கவே முடியாது. அவனுக்கொரு முப்பது முப்பத்தொரு வயதிருக்கும். விசாரணை முழுதும் ஒருமாதிரியான மன அழுத்தத்தோடுதான் இருந்தான். நிறையக்கேள்விகளுக்கு எரிச்சலோடுதான் பதில் சொன்னான். அவற்றை மிகத்தன்மையான முறையில் குமாரசூரியர் மொழிபெயர்த்தார். மூன்று மணிநேரமாக அவனது கதையும் குறுக்கு விசாரணையும் போய்க்கொண்டிருந்தது. அவன் ஒரு இடத்தில் தான் இஞ்சை வந்து மூண்டு மாசம்தான் ஆகுதென்றும் ஊரில மனிசி மூன்று மாசம் பிள்ளைத்தாச்சியா இருக்கிறதா தகவல் வந்திருக்கென்றும் தன்ரை முதல் பிள்ளை பிறக்கும்போது தான் மனிசிக்கு பக்கத்தில இல்லை என்றதை நினைக்க அந்தராமாயும் விரக்தியாயும் வேதனையாயும் இருக்கென்று சொன்னான். அடுத்ததா விசாரணை அதிகாரி கேட்ட கேள்வியில் குமாரசூரியரே திக்குமுக்காடிப்போனார். முன்னால் க்ளாசில் இருந்த தண்ணியைக் குடிச்சிட்டு குரலைச் செருமி அவர் அதை மொழிபெயர்த்தார்.

” நல்லது. நீர் வந்து மூன்று மாசம் என்றும் அவா இப்ப மூன்று மாச கர்ப்பம் என்றும் சொல்லியிருக்கிறீர். அது உம்மடை பிள்ளையா இருக்க சான்ஸ் இருக்கிற அதேநேரம் அது உம்மடை பிள்ளை இல்லாமல் இருக்கவும் சான்ஸ் இருக்கல்லவா. எப்பிடி நீர் அது உம்மடை பிள்ளைதான் என்று உறுதியாச் சொல்லுவீர்.. அது இன்னொராளின்ர…” குமாரசூரியர் மெதுவாக முடிக்கவில்லை. அதுக்குடனை அவன் சடார் என்று எழும்பி கதிரையைத்தூக்கி தலைக்குமேல் ஓங்கி ஒரு வித்தியாசமான குரல் எழுப்பிக் கத்தினான். தன்ரை தலைதான் சிதறப்போகுது என்று தலையைப்பொத்திய குமாரசூரியர் லூர்த்ஸ் மாதாவே காப்பாற்றும் என்று கத்தினார். கரித்தாஸ் பெட்டையும் கீச்சிட்ட குரலில் கத்துவது கேட்டது. பெடியன் தூக்கின கதிரையோடு விசாரணை அதிகாரியை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைக்கவும்தான் குமாரசூரியன் டக்கென்று எழும்பி அவனைப் பின்வளத்தால் கட்டிப்பிடிச்சு ” தம்பி சொன்னாக் கேளும். பிறகு எல்லாம் பிழைச்சுப்போடும். டக்கெண்டு கதிரையைப்போட்டுட்டு என்ன ஏதென்று தெரியாமல் கீழை விழும்.” என்றார். அவனும் என்ன நினைச்சானோ கீழை விழுந்து காலிரண்டையும் நீட்டி மேலை பார்த்து அழத்தொடங்கினான். “எங்கடை கலாசாரத்தில இதுமாதிரியான கேள்விகளை ஒருவனை அவமானப்படுத்திக் கோபப்படுத்தத்தான் கேட்கிறது. ” என்று குமாரசூரியர் விசாரணைக்காரனுக்கு விளங்கப்படுத்தினார். அவன் தோளைக்குலுக்கி உதட்டைக்குவித்து ஊப்ஸ் என்றான். அத்தோடு அந்த கேஸ் இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டது.

குமாரசூரியர் ஒரு வழக்கறிஞர் அல்ல. ஒரு கேஸ் எழுதுபவரும் அல்ல. அவர் வெறும் மொழிபெயர்ப்பாளர். அவரால் வழக்கு விசாரணையில் எதையும் பெரிதாக மாற்றி விட முடியாது. ஆனால் நிறையப்பேர் “ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். எப்பிடியாவது சரியா வர ஏதாவது செய்யுங்கோ” என்று கேட்பார்கள். அவரால் செய்ய முடிந்ததெல்லாம் கயிற்றைச் சங்கிலியாக்கிற வேலைகளும் பின்வளத்தால் கட்டிப்பிடிப்பதும்தான். இதைவிட கொஞ்சம் கூடச் செய்ய முடிவதொன்றிருக்கிறது. யாராவது தங்களது வாக்குமூலத்தில் தொன்னூற்றுமூன்றாம் ஆண்டு யாழ்ப்பாணத்தில இருந்து ஐந்து லட்சம் சனங்களும் வெளியேறின போது என்று சொன்னால் தொன்னூற்று மூன்றை சொல்லாமற் கொள்ளாமல் தொன்னூற்று ஐந்து ஆக்கி விடுவார். விசாரணைக் கேள்விகளை டொச்சில் இருந்து தமிழில் சொல்லும்போது சாட்டோடு சாட்டா முகத்தைச் சரியான கவலையா வைத்திரும் என்றோ நாட்டுக்கு அனுப்பினா நான் கண்டிப்பாகக் கொலைசெய்யப்படுவேன் என்று சொல்லும் என்றோ சொல்லுவார். குமாரசூரியருக்குத் தெரியும். இவை ஒரு மொழிபெயர்ப்பாளன் செய்யக்கூடாத வேலைகள். ஆனால் இருபத்தைஞ்சு முப்பது வருசத்துக்கு முதல் அவரும் அகதித் தஞ்சம் கேட்டு வந்தவர் என்றதால் அவர் இப்படி இரக்கமாயிருந்தார். அப்போதெல்லாம் இன்றைய விசாரணைகளைப்போல நிறையக் கேள்விளும் நிறையப்பதில்களும் நிறையப் பொயின்ற்சுகளும் தேவைப்பட்டிருக்கவில்லை. குமாரசூரியரிடம் இருந்தது ஒரேயொரு பொயின்ற் தான். அல்பிரட் துரையப்பாவைத் துளைத்த குண்டு பாய்ஞ்சு வந்த கோணத்தை வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கட்டையான மனிதனால் சுடப்பட்ட குண்டென்றும் அதனால ஊரில இருக்கிற கட்டையர்களையெல்லாம் பிடிச்சுக் கொண்டு போய் கொல்லுகிறார்கள் என்றும் தான் ஒரு கட்டையனாக இருப்பதால் தன்னையும் கொல்லுவார்கள் என்றும் குமாரசூரியர் சொன்னார். விசாரணை அதிகாரியும் ஒரு கட்டையனாக இருந்ததாலேயோ என்னவோ கேஸ் அக்செப்ட் ஆனது. அந்த வருடம் நூற்றி எண்பது கட்டையர்களுக்கு கேஸ் அக்செப்ட் ஆனது.

0 0 0

“பெயர் சொல்லுங்கோ”

“பிரதீபன்”

“வேறு பெயர்கள் உண்டா?”

பிரதீபன் கொஞ்ச நேரம் முழித்தான். பள்ளிக்கூடத்தில் அவனுக்கு முழியன் என்றொரு பட்டப்பெயர் இருந்தது. அதைச்சொல்லலாமா விடலாமா என்று அவன் யோசித்தான்.

“அதாவது ஏதாவது இயக்கங்களிலோ அமைப்புக்களிலோ இருந்தால் அல்லது வேற ஏதாவது பெயரில நீங்கள் செயற்பட்டிருந்தால் அந்தப் பெயர்களைச் சொல்லவும்” என மொழிபெயர்க்கப்பட்டபோது பிரதீபன் தலையைப் பலமாக ஆட்டி இல்லை என்றான்.

“நீங்கள் வாயாலை சொன்னால்த்தான் அது ஒரு ஆவணமாகும்”

“இல்லை. வீட்டில தீபன் என்று கூப்பிடுவினம். அதை விட வேற பெயர் ஒன்றும் இல்லை”

வந்து சேர்ந்த இடம், வந்த வழி, யார் கூட்டிவந்தது, எவ்வளவு காலம் எடுத்தது, பாஸ்போட் எங்கே, அதற்கு என்ன நடந்தது, வேறேதாவது நாடுகளில் இதற்கு முதல் அகதிதஞ்சம் கோரியிருக்கிறீர்களா, அது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் நேரே சூரிச், ஆபிரிக்காவில இருந்து இத்தாலி இத்தாலியிலிருந்து சூரிச், கூட்டிவந்தது யாரென்று எனக்குத் தெரியாது, ஆபிரிக்காவில் ஒன்றரை வருசமும் இத்தாலியில இரண்டு நாளும் இத்தாலியிலிருந்து சூரிச் வர நாலு மணித்தியாலமும், பாஸ்போட் என்னட்டை இல்லை, அதைக் கூட்டிவந்தவர் வாங்கிட்டார், வேறு எந்த நாட்டிலும் அகதித் தஞ்சம் கோரவில்லை, கோராதபடியால் நிராகரிக்கவும் இல்லையென்று பிரதீபன் வரிசையாகச் சொல்லி முடித்தான்.

நிமிர்ந்து உட்கார்ந்த விசாரணை அதிகாரி பிரதீபனை கண்ணும் கண்ணுமாகப் பார்த்தார். பிரதீபன் சொண்டுகளையொருக்கா ஈரப்படுத்திக் கொண்டான். அவை டக் டக்கென்று உலர்வதுபோலப்பட்டது. அதிகாரி பேசத்தொடங்கினான். “சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியுமாதலால் நீங்கள் உங்களுக்கு அங்கே உயிர்வாழ முடியாத அளவிற்கு என்ன நடந்ததென்பதை மட்டும் சொல்லுங்கள்” என்ற முன்னறிவிப்போது அவன் ஆரம்பித்தான். “நீங்கள் இங்கே அகதித்தஞ்சம் கேட்பதற்கான காரணங்கள் என்ன..?”

தஞ்சம் கோருவதற்கான காரணம் ஒன்று

பிரதீபன் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தேன். ஏ/ எல் முடித்துவிட்டு கம்பசுக்கு ரிசல்ட் காணாதபடியால் இன்னொரு தரம் சோதனை எடுக்கலாம் என்றிருந்தேன். அப்போது இலங்கையில் சமாதானம் வந்தது. புலிகளும் யாழ்ப்பாணம் வந்தார்கள். ஆமியும் புலிகளும் றோட்டுகளில் கை குலுக்கிக் கதைத்தபடியால் நாங்களும் புலிகளோடு கதைத்தோம். எங்கள் ஊர் ஆமிக்காம்புக்கு முன்னால ஒருநாள் விடிய பிரபாகரனின் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்தும் ஆமிக்காரர் சிரிச்சுக் கொண்டு போனதால புலிகளோடு தொடர்பு வைக்கிறது பிரச்சனை இல்லையென்று நான் நம்பினேன். ஏனென்றால் புலிகள் தங்களது நிர்வாக மற்றும் வங்கிப் பிரிவுகளுக்கு உயர்தரம் படித்து முடித்த ஆட்களை வேலைக்குக் கேட்டிருந்தார்கள். வன்னிக்குள்ளை கடைசி நேரங்களில நடந்த சண்டையால அங்கை ஏ/எல் செய்த ஆட்கள் குறைவாயிருந்தார்கள். எனக்கு கிளிநொச்சியில அவையின்ர வங்கிப் பிரிவில வேலை கிடைத்தது. நான் கிழமைக்கொருக்காவோ ரண்டு கிழமைக்கொருக்காவோ யாழ்ப்பாணம் போவேன். முகமாலை ஆமிக்கும் நான் கிளிநொச்சியில வேலை செய்யிறது தெரியும். இப்பிடியாயிருக்கேக்கை திடீரென்று புலிகளின்ரை அரசியல்த்துறைக்காரர் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போயிட்டினம். அதுக்குப்பிறகும் கொஞ்சக்காலம் நான் கிளிநொச்சியில் வேலை செய்தேன். இரண்டாயிரத்து ஐஞ்சாம் ஆண்டு டிசம்பர் மாசக்கடைசியில நான் வேலையை விட்டுட்டு யாழ்ப்பாணம் வந்தேன். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு ஒக்டோபர் மாசம் என்னை ஆமிக்காரர் வீட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டு போனார்கள். புலிகளோடு தொடர்பு, புலிகளின் பணத்தை யாழ்ப்பாணத்துக்குக் கடத்தினது, ஊரில் பிரபாகரனுக்கு கட்அவுட் வைச்சது என்று சொல்லி ஒரு கிழமையாக என்னை சித்திரவதை செய்தார்கள். சித்திரைவதையின்போது ஒருவன் சமாதான காலத்தில் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தாலும் கண்கள் திறந்துதான் இருந்தன என்றான். அவர்கள் பேசியதிலிருந்து என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று நான் யூகித்துக் கொண்டேன். இதற்கிடையில் தெய்வாதீனமாக ஆமிக்குப் பெருந்தொகைப்பணத்தைக் கொடுத்து என்னை என்ர மாமா விடுவித்தார். காசை வாங்கிக்கொண்டு விட்டதால் என்ரை கைதை உறுதிப்படுத்துகிற ஆவணங்களை என்னால் பெறமுடியவில்லை.

தஞ்சம் கோருவதற்கான காரணம் இரண்டு

யாழ்ப்பாணத்தில் எனக்கு உயிராபத்து இருக்கிறது என்பதால் நான் கொழும்புக்கு போக வெளிக்கிட்டேன். கொழும்பில் சென்று சீமா படிப்பதுவும் எனது நோக்கமாயிருந்தது. கொழும்புக்கு வந்த கொஞ்ச நாளில் ஒருநாள் வெள்ளவத்தையில் வைத்து என்னைப் பிடித்துப் போனார்கள். அவர்கள் தங்களை ஈபிடிபி என்று சொன்னார்கள். நான் கிளிநொச்சியில் வேலை செய்தது என்னை ஆமி பிடித்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் கதைத்துக்கொண்டிருந்த போதே என்னைக் கன்னத்தில் அடித்தார்கள். அவர்கள் ஆளாளுக்கு விளையாட்டுத்தனமாக அடித்தார்கள். அடிக்கும்போது சிரித்துச் சிரித்து அடித்தார்கள். அப்பிடி அடிக்கிற நேரம் அவர்களில் ஒருவன் “நீ சிங்களவனுக்கு மட்டும்தான் காசு குடுப்பியா.. எங்களுக்குத் தரமாட்டியோ” என்று கேட்டான். அவன் கேட்டதொகை ஆமிக்குக் குடுத்த அதே தொகையாயிருந்தது. ஆமிதான் செற்றப் செய்து அவைக்குச் சொல்லிக்குடுக்குது என்று நான் நினைக்கிறன். இந்த முறையும் மாமாதான் காசு தந்தவர். பன்ரண்டாவது நாள் அவையளே என்னைக் கூட்டிக்கொண்டு போய் வீட்டை விட்டவை. விடும்போது ஒருவன் சொன்னான். “இவனொரு பொன் முட்டை இடுகிற வாத்து. வாத்தை உடனை அறுக்கக் கூடாது” என்று. அதுக்குப் பக்கத்திலிருந்தவன் பிலத்துச் சிரித்தான். அறுக்கிறது என்பது கொலை செய்யிறதுதான். உங்களுக்கு பொன் முட்டை இடும் வாத்துக் கதை தெரியாவிட்டால் அதையும் நான் சொல்கிறேன். ஒரு ஊரில ஒரு குடியானவனிடம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து இருந்தது……………………………

தஞ்சம் கோருவதற்கான காரணம் மூன்று

யாழ்ப்பாணத்தில் எனக்கு ஆமியால கொலை அச்சுறுத்தல் கொழும்பில எனக்கு ஈபிடிபியால கொலை அச்சுறுத்தல் இவை காரணமாக நான் இலங்கையில் இருக்கமுடியாமல் போனது. இலங்கைக்கு வெளியே எங்காவது போனால்த்தான் எனது உயிரை நான் காப்பாற்றிக் கொள்ளமுடியுமென்பதால் மாமா அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதுவரையும் நான் எங்காவது பாதுகாப்பாகத் தங்கவேண்டியிருந்தது. மட்டக்களப்பில் கருணா குழு.. மலையகத்தில் தங்க வசதியில்லை என்ற காரணங்களால நான் வவுனியாக்கு போனேன். அங்கும் புளொட் பிரச்சனை இருந்ததுதான். மாமா ஏற்பாடுகளைச் செய்யும்வரை ஓரிடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக நான் வவுனியாவிற்கே போனேன். அங்கு இரண்டுமாதங்கள் வரை பிரச்சனையேதும் எனக்கு இருக்கவில்லை. மாமா பாஸ்போட் எடுக்க கொழும்புக்கு உடனடியாக வரும்படி சொன்னார். அதற்கடுத்த நாள் கூமாங்குளத்தில் வைச்சு என்னை ஒரு ஆட்டோவில் வைச்சுத் தூக்கி நாலுபேர் அடியடி எண்டு அடித்தார்கள். அவர்கள் பொல்லுகள் வைத்திருந்தார்கள். முகத்தை மூடிக்கட்டியிருந்தார்கள். அவர்கள் ஏன் அடிக்கிறோம் என்ற காரணத்தையும் சொல்லவில்லை. அவர்கள் யாரென்பதையும் சொல்லவில்லை. அவர்கள் புளட்டாக இருக்கலாம். ஆமி இன்ரலிஜென்ற் ஆக இருக்கலாம். எனக்கு சரியாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆனால் அவர்கள் கொலை வெறியோடு அடித்தார்கள். கடவுள் கிருபையில் அந்த காட்டு வழியால் சனங்கள் அப்போது வந்தார்கள். அவர்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.

எனக்கு வடிவாகத்தெரியும். நான் இலங்கையில் இருந்தால் கொல்லப்படுவேன். அவர்கள் என்னை குறிவைத்து கொலைசெய்ய அலைகிறார்கள். எனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டால் இலங்கைக்குள் நுழைகையிலேயே நான் உயிரிழக்க நேரிடலாம். மனிதாபிமானம் மிக்க இந்த நாடு எனது உயிரைக்காக்க எனது கோரிக்கைக்கு சாதகமான பதிலைத்தரவேண்டும்.

0 0 0

இருபது தாள்களில் பிரதீபனின் வழக்கு டொச்சில் எழுதப்பட்டிருந்தது. “வேறு ஏதாவது சொல்ல இருக்கிறதா” என்றான் விசாரணை அதிகாரி. பிரதீபன் இல்லையெனத் தலையாட்டிவிட்டு “இல்லை” என்றும் சொன்னான். அதிகாரி கத்தைத்தாள்களை ஒன்றாக்கினான். “ஆகவே உமக்கு இலங்கையில் ஆயுததாரிகளான இலங்கை ராணுவம், ஈபிடிபி, கருணாகுழு, புளொட்டோ புலனாய்வுத்துறையோ என்றறிய முடியாத ஒரு குழு இவர்களால உயிராபத்து என்கிறீர். உமது வாக்கு மூலத்தின் அடிப்படையில் புலிகளால் உமக்கு உயிராபத்து இல்லை. நல்லது. இப்போது இந்த தாள்கள் ஒவ்வொன்றிலும் நீர் கையெழுத்து இடவேண்டும்” என நீட்டினான்.

பிரதீபன் நாக்கைக் கடித்து.. ஸ்ஸ் என்றொரு சத்தமிட்டு இரண்டு கைகளாலும் தலையைப்பிடித்துக்கொண்டு “எனக்கு இப்ப நினைவுக்கு வருகுது. வவுனியால என்னை கடத்திக்கொண்டுபோய் அடிச்சதெண்டு சொன்னனான் எல்லோ.. அது ஆரெண்டு விளங்கிட்டுது. அது புலிகள் தான். இதை என்ரை கேசில சேர்க்கவேணும். சேர்க்கலாமோ ” என்று கெஞ்சுமாப்போல கேட்டான். அதிகாரி நெற்றியைச் சுருக்கிக்கொண்டு “எப்பிடித் தெரியும்” என்றார்.

“ஓம்.. எனக்கு அடி மயக்கத்தில சரியா தெரியாட்டியும் அடிச்சுக் கொண்டிருக்கேக்கை அவர்களில் ஒருவருக்கு வோக்கி மெசேச் வந்தது. அவர் அதில கதைச்சு முடிய ஓவர் ஓவர் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றவர். இது எனக்கு கிளியராக் கேட்டது. நான் சுவர் பண்ணிச் சொல்லுவன் அவையள் புலிகள்தான். ”

அவன் கடைசியாச் சொன்னதெல்லாத்தையும் குமாரசூரியர் டொச்சில மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

0 0 0

ரிவியில இப்ப அந்தப்பெடியன் இன்னும் இன்னும் உச்ச ஸ்தாயியில கத்தினான். “ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ். ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..” ஒவ்வொருக்காவும் குதிக்கால்களை உயர்த்தி உயர்த்தி அவன் கத்தினான். கமராக்காரர் அவனை நிறையத்தரம் போகஸ் பண்ணியிருந்தார். ஒவ்வொரு முறையும் அவன் குறையாத வேகத்தோடை இருந்தான். ஆனால் எவ்வளவுதான் தலையைத் தேய்ச்சு யோசிச்சும் குமாரசூரியரால அவனை அடையாளம் காணமுடிய வில்லை.

அப்பவே சொன்னமாதிரி ஸ்பெசலான கதைகளின்றி வழமையான கதைகளையும் கதை மாந்தர்களையும் குமாரசூரியரால் நினைவு வைச்சுக் கொள்ள முடிகிறதில்லை.

http://sajeek.com/archives/447

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1000% உண்மை. :D

IMG6624-1251205493.jpg

உங்களுடைய சமூக தொண்டு புல்லரிக்கவைக்கிறது. நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. சும்மாவா சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதில்ல இப்படி போராட்டத்தின் மீது.. போராளிகள் மீது இட்டுக்கட்டி பொய் சொல்லி காட்டிக் கொடுத்து அசைலம் அடிச்சவை.. ஈபிடிபி புளொட் காரங்கள் போன்ற நேரடியா காட்டிக் கொடுத்துப் பிழைக்கிறவங்கள.. எலும்பு பொறுக்கி.. துரோகி என்றதுதான் வேடிக்கை மேல் வேடிக்கையான சமாச்சாரம்..!

அசைலம் கிடைச்சா போதும். அந்தளவுக்கு தான் ஈழத்தில் இருந்த தமிழர்கள் பலரின் போராட்ட ஆதரவு என்பது இருந்தது. அதுதான் உண்மை.

இயக்கம் இதையெல்லாம் சரியான மதிப்பீடு செய்யாததும்.. அதன் வீழ்ச்சிக்குக் காரணம்..!

ஒவ்வொரு அசைலம் சீக்கரும் கொடுத்த வாக்கு மூலங்கள் போதும் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தையும் பயங்கரவாதமாகச் சித்தரிக்க...! இவற்றையெல்லாம் கொடுத்திட்டு வெற்றுக் கோசம் போட்டு தமிழீழம் அமைப்போம் என்றவையையும் உலகம் அறியும்...! அப்போது உலகமே மெய்சிலிர்த்து நின்றுது..!

என்னைப் பொறுத்தவரை ஈபிடிபி புளொட் ஈபிஆர் எல் எவ் கருணாவைக் காட்டிலும்.. பல மடங்கு துரோகம் செய்தவர்களாக.. அசலைம் சீக்கர்களைக் காட்ட முடியும்..! ஆனால் என்ன.. அவர்கள் பெரும்பான்மையாகி விட்டதால்.. எம்மைத்தான் குற்றவாளிகளாகக் காட்டி தாங்கள் தப்பிக்க முயல்வார்கள்.

எதுஎப்படியோ.. போராட்டமும் போராளிகளும் இலட்சியத்தை வென்றார்களோ இல்லையோ.. போராட்டத்தை காட்டி அசைலம் அடிக்க நினைச்சவை பலர் அதில் வென்றுவிட்டார்கள். வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டும் விட்டார்கள். அதுதான் இப்போ தேறிய இலாபம்.. எமக்கு...!

இவர்களின் அசைலத்துக்காக இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல.. ! 30 ஆயிரம் போராளிகள், 1 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் உயிர்கள்.. பலகோடி உடமைகள்.. பல்லாயிரம் மக்கள், பல நூறு அரசியல் கைதிகள் சிறைகளில் வதைபடுவது.. அதுமட்டுமன்றி ஒட்டுமொத்த மண்ணையும் சிங்களவனுக்கும் அந்நியருக்கும் விட்டுக்கொடுத்தது...! :D :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசால் கூல் :) இப்பிடி பப்ளிக்காச் சொன்னால் கோபம் வரும்தான். எனக்கும் வருகிறது.

சயந்தன் வணக்கம்,

ஓர் படைப்பாளி என்கின்ற வகையில் அருமையாக கதை எழுதி இருக்கின்றீர்கள். படித்து சுவைத்தேன்.

கதையில் சொல்லப்படுகின்ற விடயங்களும் நடைமுறை வாழ்வும் என்கின்ற வகையில் கீழ்வரும் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியுமா?

1. புலிகளை சொல்லி வெளிநாட்டில் அசைலம் அடித்தவர்களின் ஆதரவு தாயகத்திற்கு தேவை இல்லை என்று நினைக்கின்றீர்களா?

2. அசைலம் அடிப்பதற்கு எப்படியான கதை சொல்லுவது சரியானது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

3. அசைலம் அடிப்பதற்கு தகுதியாக எவை இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீங்கள்?

4. புலிகள்மூலம் தனிப்பட தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது பற்றிய உங்கள் கருத்து என்ன?

5. தாயகத்தில் இருந்தபோதும், தற்போது இங்கு வெளிநாட்டில் இருக்கும்போதும் உங்கள் வாழ்க்கையின் பாதுகாப்புத்தன்மைபற்றி எப்படியான வேறுபாடுகளை உணர்ந்துகொள்கின்றீர்கள்?

6. தாயகத்தில் இருந்தபோதும், தற்போது இங்கு வெளிநாட்டில் இருக்கும்போதும் உங்கள் வாழ்க்கையின் தனிமனித சுதந்திரம்பற்றி எப்படியான வேறுபாடுகளை உணர்ந்துகொள்கின்றீர்கள்?

7. காலஓட்டம், சூழ்நிலைகள் மாறுகின்ற சமயத்தில் ஒருவரின் மனப்போக்கு, உணர்வலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களாக நீங்கள் நினைப்பது எவை? இவை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை.. இதொரு கதை.. ஆய்வு அல்ல..

பொதுவாகவே நான் கதைகளில் இவர் செய்யிறது பிழை இவர் செய்யிறது சரி என்றெல்லாம் summary கொடுக்கிறதில்லை. கதையில் இது இவ்வாறு இருந்தது. thats all..

ஒரு உதாரணத்துக்கு ஆபிரிக்காவில் ஒன்றரை வருடங்கள் கழித்து லட்சக்கணக்கில் செலவழித்து வந்த பிரதீபனுக்கு ஒரு சின்னப்புள்ளியில் அதெல்லாம் வீணாகுமென்றால் அவர் புலிகளால் தனக்கு ஆபத்து என்று சொல்லி தப்பினார்.. அதில் தவறில்லை என்று யாரேனும் சொன்னால் அது அவர்களின் பார்வை..

தவிரவும்.. இது ஒரு விசேடமான விடயம் அல்ல என்பதையும்.. கடைசியில் சொல்லியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் வணக்கம்,

ஓர் படைப்பாளி என்கின்ற வகையில் அருமையாக கதை எழுதி இருக்கின்றீர்கள். படித்து சுவைத்தேன்.

கதையில் சொல்லப்படுகின்ற விடயங்களும் நடைமுறை வாழ்வும் என்கின்ற வகையில் கீழ்வரும் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியுமா?

1. புலிகளை சொல்லி வெளிநாட்டில் அசைலம் அடித்தவர்களின் ஆதரவு தாயகத்திற்கு தேவை இல்லை என்று நினைக்கின்றீர்களா? (வெளிநாட்டுக்கு அகதிகளா ஓடுவினம் என்று நம்பி போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை..! போராட்டத்தின் ஆரம்பம் முதல் எல்லோரும் தாயகமே தாகம் என்று போராடி இருப்பின்.. இந்தப் போராட்டம் நீண்டு போயும் இருக்காது.. அகதியாக இவ்வளவு ஆயிரம் பேர்கள் ஒடிவந்து பதுங்க வேண்டியும் ஏற்பட்டிருக்காது. பயங்கரவாதிகள் என்ற முத்திரையிடலுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது. போராட்டம் தீர்க்கமான முடிவை எப்போதோ எட்டி இருக்கும்..!)

2. அசைலம் அடிப்பதற்கு எப்படியான கதை சொல்லுவது சரியானது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? (அசைலம் அடிக்க உண்மையைச் சொல்லுங்கள். அசைலம் ஏன் அடிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில்.. வன்னியில் மக்கள் இப்போது வாழவில்லையா.. அல்லது இவ்வளவு காலமும் வாழவில்லையா..! எல்லாரும் என்ன செத்தா போனாங்க..???! ஏன் அசைலம் அடிக்க வேணும். காணியை வீட்ட நகையை வித்திட்டு களவா ஓடி வரணும். அதற்காகவா போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இல்லையே. பொருளாதார அகதிகள் தாங்கள் ஊரில் இருந்த உண்மையைச் சொல்லி அடிக்க வேண்டியதுதானே. தந்தா இருக்கிறது.. இல்லையன்னா ஐ ஓ எம் மூலம் கிளம்பிறது..! புலியும் போராட்டமும் தானா கிடைச்சுது.. அதற்கு..!)

3. அசைலம் அடிப்பதற்கு தகுதியாக எவை இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீங்கள்?

(புனையப்பட்ட பொய்களுக்கு அப்பால் உண்மையாக அரசியல் ரீதியான அச்சுறுத்தலை எதிர்கொண்டவராக இருந்தல்..! எத்தனை பேர் அப்படியானவங்க என்பதை உங்க மனசைத் தொட்டு கேட்டுக்கொள்ளுங்க.)

4. புலிகள்மூலம் தனிப்பட தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது பற்றிய உங்கள் கருத்து என்ன?

(புலிகளால் மட்டுமல்ல.. கனடாவிலும் பொலீஸால் பாதிக்கப்பட்டவங்க இருக்கிறாங்க. அதற்காக அவர்கள் சிறீலங்காவில் போய் அசைலம் அடிப்பார்க்களா..??! புலிகளால் அரசியல் ரீதியில் பாதிக்கப்பட்டவங்க.. உண்மையைச் சொல்லலாம். அதில் தவறில்லை. பாதிக்கப்படாதவை எதற்குச் சொல்லனும்..!)

5. தாயகத்தில் இருந்தபோதும், தற்போது இங்கு வெளிநாட்டில் இருக்கும்போதும் உங்கள் வாழ்க்கையின் பாதுகாப்புத்தன்மைபற்றி எப்படியான வேறுபாடுகளை உணர்ந்துகொள்கின்றீர்கள்?

(தாயகத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது கூடிய சுதந்திரத்தை உணர்ந்ததாகவே பெரும்பாலனவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அசைலம் என்று வரும் போது மட்டும் மாற்றிச் சொல்கிறார்களே. அதேன் என்று ஒரு தடவை கேட்டுச் சொல்கிறீர்களா..??!

6. தாயகத்தில் இருந்தபோதும், தற்போது இங்கு வெளிநாட்டில் இருக்கும்போதும் உங்கள் வாழ்க்கையின் தனிமனித சுதந்திரம்பற்றி எப்படியான வேறுபாடுகளை உணர்ந்துகொள்கின்றீர்கள்?

(தாயகத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது கூடிய சுதந்திரத்தை உணர்ந்தோம். ஆனால் இன்று அது எங்கும் இல்லை..! அதற்காக எல்லோரும் அசைலம் அடிக்க முடியுமா..??! கொடுப்பார்களா..???! )

7. காலஓட்டம், சூழ்நிலைகள் மாறுகின்ற சமயத்தில் ஒருவரின் மனப்போக்கு, உணர்வலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களாக நீங்கள் நினைப்பது எவை? இவை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

(கால ஓட்டம்.. ஒரு கூட்டத்தின் மனநிலை கருதியல்ல.. போராட்டமும்.. தாயகமும். அது சந்ததி சந்ததிக்கான சொத்து. எட்ட இருந்து.. போராட காசு கொடுத்திட்டு பேர்தே பாட்டி செய்வது போன்றதல்ல போராட்டம். ஒருவன் குருதி சிந்த மற்றவன்.. வைன் சிந்தும் சித்தாந்தமே எம்மை அழித்தது. எமது பாரம்பரிய இருப்பையே இல்லாமல் செய்தது. அந்த மாற்றங்களைப் பற்றி ஏன் சிந்திக்கிறீர்கள் இல்லை..! அசைல வாழ்வை பற்றி மட்டும் எப்படி.. எப்போதிருந்து.. எதனால் சிந்திக்க தலைப்பட்டீர்கள். சிவகுமாரனும்.. பிரபாகரனும் அசைலம் அடித்திருந்தால்.. இன்று நீங்கள் வெளிநாடுகளில் தமிழரின் தாயகத்தை காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி இருக்க முடியுமா..???! அவர்கள் ஏன் கால ஓட்டம்.. சூழ்நிலை என்று அவற்றை பாவிக்கவில்லை. தெரியாது என்றில்லை. தலைவரே சொல்லி இருக்கிறார்.. போராட்ட ஆரம்ப காலத்தில் தன்னோடு போராட புறப்பட்ட சிலரும் போராட்டத்தை ஆரம்பத்திலேயே கைவிட்டு ஜேர்மனிக்கு போன போது தன்னையும் போராட்டத்தை கைவிட்டு தம்முடன் வரச் சொன்னதாக. அப்படி அவர் அன்று செய்திருந்தால்.. இன்று.. இப்படி.. காட்டிக் கொடுத்திட்டு.. கால ஓட்டம்.. சூழ்நிலை என்று பசப்ப எமக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமா..??!)

சயந்தனிடம் கேட்ட கேள்வியாக பார்க்காமல்.. எமது போராட்டத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தி.. பிழைச்சிருக்க்றாங்க என்று உணர்ந்ததை இட்டு இப்பதிலை எழுதி இருக்கிறேன்.

இந்தக் கதையை விட உண்மையாக எம்மவர் வழங்கிய வாக்குமூலங்கள் சார்ந்த ஆவணங்களோடு காலங்கடத்தச் சந்தர்ப்பம் கிடைத்தது என்ற வகையில்.. அங்கு பெறப்பட்ட அனுபவங்களின் குமுறல் என்று கூட எடுக்கலாம்..!

சயந்தன் தன் பதிலையும் சொல்வார் என்று நினைக்கிறேன்..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தகவலுக்காக.. நேரடியாக அறிந்ததால் சொல்கிறேன். சுவிசில் புலிகளுக்குத் தடை கிடையாது. அவ்வாறான ஒரு நிகழலாம் என்ற பேச்சு அடிபட்டது. அப்போது ஒரு அரச அதிகாரி சொன்னதை மொழிபெயர்த்தால் அது இவ்வாறு இருக்கும்.

புலிகள் சுவிசில் எந்தப்பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால் புலிகளை ஒரு பயங்கரவாத ஆட்கள் என்று நிறுவ வேண்டுமெனில் நாம் கஸ்ரப்படத்தேவையில்லை. நம்மிடம் புலிகளைப்பற்றிய வாக்குமூலங்கள் ஆவணமாகவே உள்ளன. அதனை நீங்களே தந்திருக்கிறீர்கள்.

மாப்பிளைக்கொரு கேள்வி.. புலிகள் தொடர்பான வாக்குமூலங்கள் (அது பொய்யோ அல்லது உண்மையோ... எதுவாயினும்) புலிகளை ஏதோ ஒரு வழியில் பாதித்திருக்கும் என்பதை ஏற்கிறீர்களா..

நெடுக்காலபோவான், நீங்கள் என்ன சொல்லவாறீங்கள் என்பது புரிகின்றது.

சயந்தன், புலிகளும் மக்களும் ஒன்று என்று கூறுபவர்களுக்கு மேற்கூரிய ஆவணங்கள் தெளிவான ஓர் பதிலை கொடுக்கும் என்றும் சொல்லலாமோ?

மேலும்..

புலிகளால் தமக்கு ஆபத்து என்று கூறி புலி உறுப்பினர்களே வெளிநாட்டில் அசைலம் அடித்தும் இருக்கலாம் அல்லவா? ஏன் என்றால் கதையின்படி பார்த்தால்.. புலிகளால் ஆபத்து இல்லை என்று சொன்னால்.. அவன் சொல்லுவான் அப்ப நீங்கள் வன்னியில போய் நிம்மதியாய் இருக்கலாமே என்று. அப்படிப்பார்த்தால்... ஒருவருமே அசைலம் அடிச்சு இருக்கமுடியாது. எனவே, வெளிநாட்டில் உள்ள புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அசைலம் அடிச்சது எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே, வெளிநாட்டில் உள்ள புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அசைலம் அடிச்சது எப்படி?

:)

இந்தச் சிரிப்பைத்தவிர பதிலாவும் சொல்லணுமோ :lol:

நம்மிடம் புலிகளைப்பற்றிய வாக்குமூலங்கள் ஆவணமாகவே உள்ளன. அதனை நீங்களே தந்திருக்கிறீர்கள்.

இந்த விடயம் கனடாவை பொறுத்தவரையிலும் உண்மையாக இருக்கும்.

நான் கனடா வந்து பல காலம் இல்லை. அதனால் பல விடயங்கள் தெரியாது. ஆனால் இங்கு நடந்த நிதி சேகரிப்புகள் பற்றி கனடா தழுவிய விசாரணைகள் கனடிய புலனாய்வுப்?? பிரிவால் நடத்தப்பட்டது. அப்போது நானிருக்கும் பிரதேசத்திலும் விசாரணைகள் நடந்ததாக இங்குள்ளவர்கள் கதையோடு கதையாக சொன்னார்கள். அதில் புலிகளுக்கு மிக ஆதரவாக கதைக்கும் ஒரு குடும்பத்தினர் சொன்னார்கள் விசாரணைக்கு வந்த போது தாங்கள் சொன்னோமாம்

"" நீங்கள் இங்க வந்து விசாரிக்கிறீங்கள், எங்களுக்கு அங்கை சொந்த பந்தம் எல்லாம் இருக்கு, நாம் இங்கு பணம் குடுக்காவிட்டால், அங்குள்ளவர்களுக்கு ஆபத்து என்று""

இது அவர்கள் கதையோடு கதையாக சொன்னது. அவர்கள் அந்த விசாரனையாளர்களுக்கு அப்படி சொல்லும் போது அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்றெல்லாம் சிந்தித்திருக்க மாட்டார்கள். தாங்கள் சிக்கலில் இருந்து தப்ப என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லி தப்பிவிட்டார்கள்.

ஆனால் இப்படியான கூற்றுக்கள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்து என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இது உதாரணம் மட்டுமே இன்னும் நிறைய கதைகள் இருக்கலாம்

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசைலம் கொடுத்த நாடுகள் ஒன்றும் மனிதாபிமானத்தால் கொடுக்கவில்லை. இத்தனை லட்சம் மக்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் புலிகள், அரசாங்கம், ஈபிடிபி போன்ற அனைத்து தரப்பினராலும் ஓரே நேரத்தில் பிரச்சனை என்று சொன்னால் அதை எந்த கேனையன் தான் நம்புவான்? அவங்களுக்கும் தங்கள் நாட்டில் சின்னச் சின்ன வேலைகள் செய்ய ஆட்கள் வேண்டும். அதற்காக குடிவரவு சட்டங்களை மாற்றமுடியாது. எனவே நீங்கள் சட்டத்தின்படி அகதி என்று காட்டிவிட்டல் சரி. மற்றும்படி உண்மைத் தகவல்களை அவர்களின் உளவமைப்புக்கள் துல்லியமாக கொடுத்திருக்கும்.

அதற்காக எம் மக்கள் செய்தது சரி என்று வக்காலத்து வாங்கவும் வரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு வந்தவர்கள் சொன்னதெல்லாத்தையும் நம்பி தான் அவர்களுக்கு அகதியாக தங்குமுரிமை கொடுத்தார்கள் என்பதும்....

புலிகளை பற்றி தமிழர்கள் இல்லாததையும் பொல்லாததையும் அள்ளி வைத்து தான் - இயக்கம் வெளிநாடுகளில் தடை செய்ய பட்டது என்பதும்...

முற்று முழுதான அரசியல் உண்மை நிலை அல்ல.

மேலே ஒருவர் சொன்னது போல - அந்தந்த நாடுகளுக்கு ஆட்கள் தேவை, அதற்காக எல்லாரையும் வரவேற்று குடியுரிமை கொடுக்க ஏலாது - அதனால் சிலரை ஏற்று கொள்கிறார்கள். எல்லாரையும் ஏற்று கொள்வது சாத்தியம் அல்ல. அதனால் வடிகட்டுவதற்காக நடைமுறைகளை ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

அது போக, நாடுகள் நடத்திய அரசியல் விளையாட்டில் தான் - புலிகளின் விடுதலை இயக்கம், அதன் வளர்ச்சியால் - தடை செய்ய பட்டதென்பது தான் உண்மை.

"அகதி அந்தஸ்து பெறுவதற்காக புலிகளை பயங்கரவாதிகளாக்கியது எங்கட சனமும் தான்" என்பது வெளிநாட்டுகாரனுக்கு- ஒரு சாட்டாக அமைந்ததே தவிர - எங்கட பிரச்சனையில் அக்கறை காட்டி தான் அவன் "இயக்கத்தை" தடை செய்தான் என்றது இல்லை.

இது தவிர - சிலர் உணரவில்லை போல - இயக்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டில் உள்ள தமிழரின் பங்களிப்பு தேவை பட்டது என்பதை. student விசா, work விசா என்று வந்தவர்களை விட அகதியாக வந்தவர்கள் தான் அதிகம்.

student விசா வில வந்தவர்களை விட அதிகம் உழைக்க கூடிய சாத்தியங்கள் அகதியாக வந்தவர்களுக்கு தான் இருந்திருக்கிறது. புலிகளுக்கு உதவியதில் அவர்களின் பங்களிப்பு தான் மற்றயவர்களை விட அதிகமாக இருந்து இருக்கிறது என்பதும் ஓரளவு உண்மை.

அதற்காக செய்வதெல்லாம் சரி என்று இல்லை. இரு பக்க நியாயங்களையும் உணர்ந்து விவாதிப்பது நல்லது.

ஈழத்தில் நடந்த போரால் நேரடியாக பாதிக்க பட்டவர்கள் போக - அனைவருமே போரால், நாட்டின் பொருளாதாரம் விழுந்ததால் பாதிக்க பட்டவர்கள் தான். இங்கு படிப்பதற்கு என்று காரணம் காட்டி வருபவர்கள் போலவே, அகதியாக வந்தவர்கள் பலர் தங்கள் வாழ்கையை/ குடும்பத்தை/ உறவினரை பொருளாதார ரீதியாக தாங்குவதற்காக வந்து இருக்கிறார்கள். அதில் எப்படி பிழை பிடிக்க முடியும்?

நேர்மையாக இந்த நாட்டில் வந்து தங்குவதால், விசா எடுத்து வருபவர்களை இங்கு உள்ளவர் தலையில் தூக்கி வைத்து ஆட மாட்டார்கள்! காண்பவனுக்கு எல்லாரும் அகதி என்றது ஒரு பக்கம் போக - தமிழன்/ இலங்கையன் என்ற முத்திரை கூட இல்லை - விஷயம் தெரியாத சராசரி வெள்ளைக்காரனுக்கு - நாங்கள் அனைவருமே - இங்கு பிறந்து இருந்தாலும் கூட - பாக்கிகளே (Pakistani)!! :) !!

அதனால் எப்படி வந்து இறங்கினேன் என்று.. இங்கும் "நீயா நானா மேல்?" என்று சண்டை பிடியாம இருங்கப்பா!!!!

அடடா எல்லாரிண்ட தத்துவங்களையும் பார்க்க புல்லரிக்கிது. உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் சர்வதேசம் எல்லாத்தையும் சரியாகவே செய்து இருக்கின்றது, செய்வது வருகின்றது என்று புரிகின்றது.

பலரது கருத்துக்களின் சாரம்சம்:

சிறீ லங்காவில் அரசினாலும் பிரச்சனை இல்லை.

சிறீ லங்காவில் புலிகளினாலும் பிரச்சனை இல்லை.

சிறீ லங்காவில் இதர ஆயுதகுழுக்களினாலும் பிரச்சனை இல்லை.

தமிழர் அங்கு உயிராபத்துக்கள் இன்றி நிம்மதியாக வாழமுடியும்.

எனவே, தமிழ்மக்கள் அசைலத்திற்கு அருகதை அற்றவர்கள். தவிர, சிறீ லங்காவில் இனப்பிரச்சனை.. என்று ஏதும் இல்லை. அங்கு தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் ஒன்றும் இல்லை. எல்லோரும் பாதுகாப்பாக வாழமுடியும்.

எனவே,

புலிகள் இயக்கமும் தேவை இல்லை.

****

தமிழ்மக்கள் வேர்கள் என்றால் புலிகள் மரத்தின் கிளைகள் போன்றவர்கள். நீங்கள் வேர்களை வெட்டினால் கிளைகளும் இல்லாமல் போய்விடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

கோத்தபாய, போகொல்லாகம, மகிந்த எல்லாரும் சரியாத்தான் சொல்லி இருக்கிறாங்கள் போல. சிறீ லங்காவில் தமிழருக்கு தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை என்று ஒன்றும் இல்லை. அங்கு அவர்கள் பாதுகாப்பாக வாழமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா எல்லாரிண்ட தத்துவங்களையும் பார்க்க புல்லரிக்கிது. உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் சர்வதேசம் எல்லாத்தையும் சரியாகவே செய்து இருக்கின்றது, செய்வது வருகின்றது என்று புரிகின்றது.

பலரது கருத்துக்களின் சாரம்சம்:

சிறீ லங்காவில் அரசினாலும் பிரச்சனை இல்லை.

சிறீ லங்காவில் புலிகளினாலும் பிரச்சனை இல்லை.

சிறீ லங்காவில் இதர ஆயுதகுழுக்களினாலும் பிரச்சனை இல்லை.

தமிழர் அங்கு உயிராபத்துக்கள் இன்றி நிம்மதியாக வாழமுடியும்.

எனவே, தமிழ்மக்கள் அசைலத்திற்கு அருகதை அற்றவர்கள். தவிர, சிறீ லங்காவில் இனப்பிரச்சனை.. என்று ஏதும் இல்லை. அங்கு தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் ஒன்றும் இல்லை. எல்லோரும் பாதுகாப்பாக வாழமுடியும்.

எனவே,

புலிகள் இயக்கமும் தேவை இல்லை.

****

தமிழ்மக்கள் வேர்கள் என்றால் புலிகள் மரத்தின் கிளைகள் போன்றவர்கள். நீங்கள் வேர்களை வெட்டினால் கிளைகளும் இல்லாமல் போய்விடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

கோத்தபாய, போகொல்லாகம, மகிந்த எல்லாரும் சரியாத்தான் சொல்லி இருக்கிறாங்கள் போல. சிறீ லங்காவில் தமிழருக்கு தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை என்று ஒன்றும் இல்லை. அங்கு அவர்கள் பாதுகாப்பாக வாழமுடியும்.

எமது விடுதலைப் போராட்டம்.. தமிழர்கள் பொய் சொல்லி அகதி அந்தஸ்து வாங்கி புலிகளை போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்படவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இங்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எமது விடுதலைப் போராட்டம் பற்றிய உளவுத் தகவல்கள் உட்பட பல தகவல்களை வழங்கியவர்களாக அகதி அந்தஸ்துக் கோரியவர்களே அதிகம் நடந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி தமிழர்கள் வன்முறை விரும்பிகள் என்ற ஒரு தோற்றப்பாட்டை மேற்குலக அரங்கில் ஏற்படுத்திய பெருமை புலம்பெயர் தமிழர்களைச் சாரும்..!

இவை ஒரு விடுதலைக்காகப் போராடும் இனத்துக்கு சாதகமான காரணிகள் அல்ல. அதனை சிறீலங்காவும் லாவகமாகப் பயன்படுத்திக் கொண்டதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

உண்மையில் எமது போராட்டம் அகதி அந்தஸ்து வாங்க உருவாக்கப்பட்டதல்ல. தாயக மண்ணை விடுவிக்க உருவாக்கப்பட்டது. போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் கூட வெளிநாடுகளுக்கு போய் வசதியாக வாழக் கூடிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தும்.. தாயக மண்ணை விடுவிக்க வேண்டும் என்று போராடப் புறப்பட்டவர்கள்.

எமது போராட்டத்தின் அர்ப்பணிப்புக்களை அர்த்தமற்ற தாக்கியவர்களில் அகதி அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு எம்மவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களும் அடங்குகின்றன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

எம்மவர்கள் ஆயிரக்கணக்கில் கொழும்பிற்கு குடிபெயர்ந்து வரவும்.. வாழவும் அகதி அந்தஸ்துத்தான் காரணம். அகதி அந்தஸ்துக்காகவே கொழும்பில் வந்து தங்கி வாழ்ந்து வெளிநாட்டுக்கு வர முற்பட்டனர். அகதி அந்தஸ்தால் தான் கொழும்பை நாடி ஓடி வர வேண்டிய கட்டாயம் எம்மவருக்கு ஏற்பட்டது. அல்லது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இறுதில் அதுவே 95% தமிழர்கள் தென்பகுதியில் சகோதரர்களாய் வாழ முடிகிறது 5% தமிழர்களால் முடியாதா என்ற கோரிக்கையை அமெரிக்க மொழிய.. சிறீலங்கா அந்த 5% தமிழர்களையும் புலிகளாக்கி அழித்து வெற்றிக் கொடி ஏற்றி இருக்கிறது.

இதற்கு எம்மவரின் அகதி அந்தஸ்து மோகம்.. முக்கிய காரணி என்பதை இலகுவில் மறைக்கவோ நிராகரிக்கவோ முடியாது. பலர் அகதி அந்தஸ்துக் கோரியோர் என்ற காரணத்திற்காக உண்மைகளை மூடிமறைக்க முடியாது.

ஒருவேளை இந்த அகதி அந்தஸ்து இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளும் ஏதோ ஒரு நாட்டின் உதவியை கட்டாயம் நாடிப் போயிருப்பர். அதன் வழி.. இன்று எமக்கு ஒரு உறுதியான ஆதரவு கிடைத்திருக்கும். இந்த காட்டிக் கொடுப்பாளர்களை நம்பி இறுதியில் புலிகள் தங்கள் ஒட்டுமொத்த பலத்தையும் எதிரியிடமும்.. சர்வதேசத்திடமும் தாரை வார்த்ததை விட வேறெதை சாதிக்க முடிந்தது. அகதிகளுக்கு அகதி அந்தஸ்துக் கொடுத்து.. போராட்டத்தைப் பலவீனப்படுத்தியதை தவிர மேற்குலக நாடுகள் எமது விடுதலைக்காக ஒரு போதும் ஒத்துழைக்க இந்த அகதிகள் எள்ளளவு தானும் செல்வாக்குச் செய்யவில்லை என்பதே உண்மை.. யதார்த்தம்..!

போராட்ட ஆரம்பகாலத்தில்.. அகதி அந்தஸ்து தமிழர்கள் இருக்கவில்லை. எமது போராட்டம்.. தமிழீழ ஆர்வலர்களாக உலகெங்கும் பரந்து வாழ்ந்த மக்களின் தலைவர்களின் ஆதரவைத் திரட்டுவதில் குறியோடு இருந்தது. தமிழகத்திடம் இருந்து கட்டாய ஆதரவு அவசியம் என்ற நிலை உருவானது. தமிழகமும் அள்ளி வழங்கி உதவியது. தமிழர்கள் அகதியாக ஓட வெளிக்கிட்டதில் இருந்து எமது போராட்டம்.. பலவீனப்படும் திசை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதே உண்மை.

தேசிய தலைவரும்.. வெறுமனவே இந்த அகதித் தமிழர்கள் மீது அதீத நம்பிக்கையைக் கட்டி வளர்த்து விட்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதில் இருந்த ஆபத்தை அவர் ஏனோ உணரத்தவறிவிட்டார். இறுதியில் இவர்களை நம்பி அண்ட அயலைப் பகைத்து.. எதிரிக்கு வலுவுள்ள கூட்டணியை அமைத்துக் கொடுத்ததுதான் மிச்சம்..! பலவீனமான அகதித் தமிழர்களை நம்பி பலமான கூட்டணியை எதிரிக்கு தரை வார்த்து.. இறுதியில்.. அழிந்தது போராட்டமே அன்றி அகதித் தமிழர்களின் சொகுசு வாழ்க்கை அல்ல.

இன்று ஊரில் அல்லல் படுவது யார். அகதித் தமிழர்களில் எத்தனை பேர் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்..! உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் அநேகர் வறிய மற்றும் நடுத்தர குடும்ப உறுப்பினர்களே. அவர்களில் வறிய மக்களே அதிகம் இராணுவப் படுகொலைகளுக்கு இலக்காகினர். இன்றும் வதை முகாம்களில் அல்லல்படுபவர்களில் அநேகர் வறிய மக்கள். ஏனெனில் அவர்களால் அந்த ஊரை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடக்கூடிய வசதி இருக்கவில்லை. செல்வந்தர்களும் ஓரளவு பணம் படைத்தவர்களும் போராட்டச் சூழலை தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பிள்ளை குட்டிகளோடு அகதி என்று ஓடி வந்து பொய் சொல்லி பிழைத்துவிட்டனர்.

மாட்டிக் கொண்டது.. போராட்டத்தில் பங்கேற்ற அந்த வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தில் பிந்தங்கிய நிலையில் இருந்த மக்களே. இதுதான் உண்மை..!

உண்மையான நேர்மையான ஒரு ஆய்வை மேற்கொண்டால் இந்த உண்மை தூலாம்பரமாக இன்னும் தெரிய வரும். அதை இலகுவாக இப்போ அவரவர் தங்கள் தங்கள் பெருமைக்காக மறைத்து அகதி அந்தஸ்துக்கு நியாயம் கற்பிக்க விளையலாம்.

எனக்குத் தெரியும்.. எத்தனை பேர் என்னென்ன பொய் சொல்லி பாஸ் எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வந்தாங்க என்பது..???! அங்கு சொன்ன அதே பொய்யை மாற்றிச் சொல்லி அசைலம் அடித்தவர்களே இந்த அகதித் தமிழர்கள்..! ஈனத்தமிழர்கள்..! அதை வரலாற்றில் எனி எப்போதும் மாற்றி எழுத முடியாது..! :)

Edited by nedukkalapoovan

சயந்தனின் மற்றைய கதைகள் போன்று இந்தக் கதையும் ரசிக்கும்படி இருக்கின்றது. வாழ்த்துகள்

என்னுடைய அரசியற் தஞ்சக் கோரிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எதையும் நான் சொல்லவில்லை. சொல்வதற்கும் எதுவும் இருக்கவில்லை. என்னுடைய அரசியற் தஞ்சக் கோரிக்கை சில மாதங்களிலேயே ஏற்கப்பட்டு விட்டது.

என்னிடம் அரசியற் தஞ்சம் ஆலோசனை கேட்டு வந்தவர்களிடமும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய்யான தகவல்களை சொல்லாதீhகள் என்று வலியுறுத்தியிருக்கிறேன். நான் எழுதிக் கொடுத்தவற்றில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டுக்கள் இடம் பெறவே மாட்டாது. என்னுடைய நண்பர்கள் யாரும் விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டி அரசியல் தஞ்சம் கோரவில்லை.

ஒரு நாட்டின் அரசினால் அரசியற்காரணங்களுக்காக ஒருவர் துன்புறுத்தலுக்கு அச்சுறுத்தலுக்கோ உள்ளாக்கப்படுவதன் அடிப்படையிலேயே அரசியற் தஞ்சம் கோரப்படுகிறது. ஒரு தீவிரவாத இயக்கம் துன்புறுத்தினால் அதற்காக அரசியற் தஞ்சம் கோர முடியாது. இதை பலருக்கு விளங்கப்படுத்தி சொல்லியுள்ளேன். என்னால் முடிந்தளவு இதைச் செய்திருக்கிறேன்.

ஆயினும் யேர்மனியிலும் பலர் விடுதலைப் புலிகள் பங்கர் வெட்டச் சொன்னார்கள் என்பதை கட்டாயம் தமது அரசியல் தஞ்சத்திற்கான காரணங்களில் சேர்த்திருப்பார்கள். இதை விட கடுமையான கதைகளும் இருக்கும்.

என்ன செய்வது? நாம் தமிழர்கள். சூழலுக்கு ஏற்றபடி இசைவாக்கம் செய்து சொந்தப் பாதுகாப்பிற்கும் சொந்த முன்னேற்றத்திற்கும் எதையும் செய்யத் தயாரானவர்கள்.

அசைலம் அடிக்கும்போது புலிகளும் ஓர் பகுதியாக குற்றச்சாட்டப்பட்டு இருக்கலாம்மேயொழிய தனியே புலிகளை குற்றம் சாட்டி இருக்கமாட்டாரகள். அசைலம் அடிப்பவர்களின் குற்றச்சாட்டின் பெரும்பகுதி சிறீ லங்கா அரசிற்கும், இதர ஆயுதக்குழுக்களுக்கும் எதிரானதாகவே இருந்து இருக்கும்.

இந்தவகையில் பார்க்கும்போது,

வெளிநாடுகளில் அசைலம் அடிச்ச பல்லாயிரம் தமிழ்மக்கள் சிறீ லங்கா அரசிற்கு எதிராக மிகப்பெரிய ஆவணத்தை வாக்குமூலத்தை கொடுத்து இருக்கின்றார்கள். இந்த சிறீ லங்காவிற்கு எதிரான வாக்குமூலம் 1983இல் இருந்து ஆவணமாக வெளிநாடுகளில் இருக்கும்.

ஆனால்..

உங்களுக்கோ.. அவர்கள் ஒர் பகுதியாக புலிகளுக்கு எதிராக கொடுத்து இருக்கக்கூடிய வாக்குமூலங்களே கண்ணை குத்துகின்றது.

அப்படிப்பார்த்தால் கூட..

ஏன் புலிகள் மக்களுக்கு அசெளகரியங்கள் செய்ய இல்லையா? ஓர் சாதாரண தமிழன் ஊரில் இருந்ததுபோல் அல்லாமல் சுதந்திரமாக இருக்கக்கூடிய நிலமையில் ஓர் வெளிநாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் புலிகளுக்கு விசுவாசமாக இருப்பான் என்று எப்படி நீங்கள் எதிர்பார்ப்பீங்கள்?

ஆனானப்பட்ட.. கரும்புலிகள், மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களே புலிகளுக்கு எதிரான கருத்தை கொண்டு இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இது நான் யாரோ சொல்லி கதைக்கவில்லை. அப்படியானவர்களை நான் நேரில் கண்டு இருக்கின்றேன்.

இப்படியான நிலையில்...

வெளிநாடுகளுக்கு அசைலம் அடிக்கவருபவர்கள் புலிகளை போற்றி ஏதாவது சொல்லுவார்கள் அல்லது அவர்கள்பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பார்கள் என்பது எத்துணை மடமையானது!

நீங்கள் சாதாரண பொதுமக்களை உங்களைப்போல் நாட்டுப்பற்றாளர்களாகவும், தேசியவாதிகளாகவும், போராளிகளாகவும் பார்க்காது சாதாரண மனிதர்களாக பாருங்கள். அப்போது யதார்த்தம் விளங்கக்கூடும்.

உங்கள் கருத்துக்களை பார்க்க இப்படி இருக்கிது:

கடவுள் வரம் குடுத்தாலும்.. பூசாரி வரம் குடுக்க மட்டான்.

ஓர் சாதாரண மனிதன் என்கின்றவகையில் பார்க்கும்போது..

கடல்பீரங்கித் தாக்குதல்கள்..

அகோர ஷெல் அடிகள்...

சுற்றிவளைப்புக்கள், கைதுகள்..

ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள்..

துப்பாக்கிச்சூடுகள்...

கொலைகள், பாலியல் வல்லுறவுக்கள்..

பொம்மர் தாக்குதல்கள்..

கிளைமோர் குண்டுகள்..

மண்டையில் போடுதல்..

பொருளாதார தடைகள்..

இதர இம்சைகள்..

இவற்றின் மத்தியில் ஒருத்தன் வாழவேண்டும் என்று அவனுக்கு என்ன தலைவிதியா? அசைலம் அடிப்பதற்கு இவற்றைவிட வேறு எவ்விதமான இம்சைகளை அனுபவிச்சு இருக்கவேணும் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அசைலம் அடிக்கும்போது புலிகளும் ஓர் பகுதியாக குற்றச்சாட்டப்பட்டு இருக்கலாம்மேயொழிய தனியே புலிகளை குற்றம் சாட்டி இருக்கமாட்டாரகள். அசைலம் அடிப்பவர்களின் குற்றச்சாட்டின் பெரும்பகுதி சிறீ லங்கா அரசிற்கும், இதர ஆயுதக்குழுக்களுக்கும் எதிரானதாகவே இருந்து இருக்கும்.

இந்தவகையில் பார்க்கும்போது,

வெளிநாடுகளில் அசைலம் அடிச்ச பல்லாயிரம் தமிழ்மக்கள் சிறீ லங்கா அரசிற்கு எதிராக மிகப்பெரிய ஆவணத்தை வாக்குமூலத்தை கொடுத்து இருக்கின்றார்கள். இந்த சிறீ லங்காவிற்கு எதிரான வாக்குமூலம் 1983இல் இருந்து ஆவணமாக வெளிநாடுகளில் இருக்கும்.

ஆனால்..

உங்களுக்கோ.. அவர்கள் ஒர் பகுதியாக புலிகளுக்கு எதிராக கொடுத்து இருக்கக்கூடிய வாக்குமூலங்களே கண்ணை குத்துகின்றது.

அப்படிப்பார்த்தால் கூட..

ஏன் புலிகள் மக்களுக்கு அசெளகரியங்கள் செய்ய இல்லையா? ஓர் சாதாரண தமிழன் ஊரில் இருந்ததுபோல் அல்லாமல் சுதந்திரமாக இருக்கக்கூடிய நிலமையில் ஓர் வெளிநாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் புலிகளுக்கு விசுவாசமாக இருப்பான் என்று எப்படி நீங்கள் எதிர்பார்ப்பீங்கள்?

ஆனானப்பட்ட.. கரும்புலிகள், மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களே புலிகளுக்கு எதிரான கருத்தை கொண்டு இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இது நான் யாரோ சொல்லி கதைக்கவில்லை. அப்படியானவர்களை நான் நேரில் கண்டு இருக்கின்றேன்.

இப்படியான நிலையில்...

வெளிநாடுகளுக்கு அசைலம் அடிக்கவருபவர்கள் புலிகளை போற்றி ஏதாவது சொல்லுவார்கள் அல்லது அவர்கள்பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பார்கள் என்பது எத்துணை மடமையானது!

நீங்கள் சாதாரண பொதுமக்களை உங்களைப்போல் நாட்டுப்பற்றாளர்களாகவும், தேசியவாதிகளாகவும், போராளிகளாகவும் பார்க்காது சாதாரண மனிதர்களாக பாருங்கள். அப்போது யதார்த்தம் விளங்கக்கூடும்.

உங்கள் கருத்துக்களை பார்க்க இப்படி இருக்கிது:

கடவுள் வரம் குடுத்தாலும்.. பூசாரி வரம் குடுக்க மட்டான்.

ஓர் சாதாரண மனிதன் என்கின்றவகையில் பார்க்கும்போது..

கடல்பீரங்கித் தாக்குதல்கள்..

அகோர ஷெல் அடிகள்...

சுற்றிவளைப்புக்கள், கைதுகள்..

ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள்..

துப்பாக்கிச்சூடுகள்...

கொலைகள், பாலியல் வல்லுறவுக்கள்..

பொம்மர் தாக்குதல்கள்..

கிளைமோர் குண்டுகள்..

மண்டையில் போடுதல்..

பொருளாதார தடைகள்..

இதர இம்சைகள்..

இவற்றின் மத்தியில் ஒருத்தன் வாழவேண்டும் என்று அவனுக்கு என்ன தலைவிதியா? அசைலம் அடிப்பதற்கு இவற்றைவிட வேறு எவ்விதமான இம்சைகளை அனுபவிச்சு இருக்கவேணும் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

நீங்கள் சிறீலங்கா அரசு மீது செய்யும் பொய்க் குற்றச்சாட்டுக்களை பற்றி அறிய.. அதன் தூதரகத்தை வெளிநாடுகள் அணுகுகின்றன. அதன் தூதரக அதிகாரிகள் போதிய விளக்கங்களை அளிக்கின்றனர். பல தடவைகளில்.. அவர்கள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுதலிக்கும் வகையில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றனர். அதனால் தான் அசைலம் கேட்கிறவர்கள்.. அடிக்கடி குற்றச்சாட்டுக்களையும்.. சம்பவங்களையும் மாற்றி மாற்றி கூறி வருகின்றனர். அப்படித்தான் தமிழ் வழக்கறிஞர்களால் அகதி அஸ்தத்துக் கோருவோர் வழிகாட்டப்படுகின்றனர்.

ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்த வசதிகள் இருக்கவில்லை. ஏற்படுத்திக் கொடுக்கப்படவும் இல்லை..!

அகதி அந்தஸ்துக் கோரியோரில் பெரும்பாலானோர் அதற்கு உரியவர்கள் அல்ல.

ஏன் கனடாவில்..

கத்திக் குத்து..

வாள் வெட்டு..

துப்பாக்கிச் சூடு..

கொள்ளை.. களவு..

கார் விபத்து..

பொம்பிளைப் பிள்ளையள் மீது பாலியல் வல்லுறவு..

போதை வஸ்து..

கனடா பொலீஸின் சைரன் ஓசை..

கள்ளக்காட்...

இப்படி இன்னோரென்ன தலையிடிகளோடு நீங்கள் வாழவில்லையா..???!

உலகில் எங்குதான் இல்லை.. பிரச்சனைகள்..!

நீங்கள் சொன்ன இந்தக் காரணங்கள் என்றால்.. ஆபிரிக்காவில் வாழும் அநேகர் அகதி அந்தஸ்துக்கு உரித்தானவர்கள்..! ஆப்கானிஸ்தானில் வாழும் எல்லோரும் அதற்கு உரித்தானவர்கள். காஷ்மீரில்.. பலஸ்தீனத்தில்.. வாழும் எல்லோரும் அதற்கு உரித்தானவர்கள்..! அவர்கள் எல்லாருக்கும் அழைத்து வைத்து அசைலமா கொடுக்கிறார்கள்..???! :):lol:

Edited by nedukkalapoovan

ஓ அப்படியோ? உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது மலத்தை தானே தொட்டு நுகர்வதில் தமிழனுக்கு அலாதிப்பிரியமாக்கும் :)

எக்ஸ்கியூஸ்மி.. மலம் என்றால் என்னவுங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

தனது மலத்தை தானே தொட்டு நுகர்வதில் தமிழனுக்கு அலாதிப்பிரியமாக்கும் :)

அதையும் மற்றவர்களுக்கு சொல்லி சொல்லி நுகர்வதில்.....

போராட்டம் வெற்றி நடை போடுகையில், புலத்தமிழனின் உழைப்பையும் அவனது பணத்தையும் தேவையான பொழுது பெற்று உங்களால் தான் விடுதலைப் போராட்டம் நவீனமானது என புகழாரம் சூட்டப்பட்டு உச்சி குளிரப்படுத்தி விட்டு, இன்று ஆயுத போராட்டம் படுதோல்வி அடைந்த நிலையில் வாங்கி வைத்த பொப் கோர்னகளும் இளவாலிச்சுப் போன நிலையில், நன்றி கெட்டத் தனமாக போராட்டத்தின் தோல்வியை புலத்தமிழனின் தலையில் கட்டி விடுகின்றனர்.

சயந்தன் கதையாக அதை எழுதி இருக்கிறன் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும்.. பலர் அது கதை இல்லை நிஜம் என்று சொல்லிப்போட்டு.. புலத்தமிழரை காறித்துப்புறீனம்.

சரி பரவாயில்லை..

உப்பிடி சனங்களை திட்டினால் நாளைக்கு அட் லீஸ்ட் ஒரு கொடி பிடிக்கிறதுக்கு யார் முன் வருவான்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.