Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவளுக்குள் ஒரு மனம் ....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்குள் ஒரு மனம் ....

கடிகாரம் மணி ஆறு அடிக்க ...நித்திரையில் நின்று எழுந்த மாதவி , காலைகடனை முடித்து அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட தயாரானாள். ராசா என்றும் ராசமாணிக்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். மகள் மேகலா காலையில் படிக்க எழுப்பி விடும் படி கேட்டிருந்தாள். தேநீரை ஆற்றி இளம் சூடாக எடுத்து கொண்டு மகளை எழுப்பினாள். அவளும் எழுந்து காலைக்கடனை முடித்து தேநீருடன் பாடங்களை படிக்க தொடங்கினாள். மகன் சின்னவன் ஐந்து வயது. மகளுக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க காலை உணவை தயாரித்து முடித்து கணவன் ராசாவை எழுப்பினாள். மணி எழு ஆகி விட்டது . வாசலில் அவன் செல்லும் வண்டி தயாராக நின்றது . .மதிய உணவையும் சிற்றுண்டி களையும் கொடுத்து வண்டி வரை சென்று அனுப்பி வைத்தாள். மேகலாவும் , கண்ணனும் பள்ளிக்கு நடந்து தான் செல்வார்கள். அவள் நினைத்திருந்தால் இதிவிட மேலான வசதியான வாழ்வு வாழ்ந்து இருக்கலாம் ஆனால் பாழும் இதயம் கொண்ட காதலால் தான் இன்றைய வாழ்கை.

கடந்த கால வாழ்வை நோக்கி அவள் மனம் அசை போட தொடங்கியது . அப்போது மாதவி பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள். தினமும் பாடசாலைக்கு போகும் வழியில் ஒரு சிறு கடை அதில் தான் ராசா உட்கார்ந்து வியாபாரம செய்து கொண்டிருப்பான். அழகான் இளஞ்ன் ஆனால் என்றுமே பொருட்களை எடுத்து கொடுக்க மாடான். அவன் எழுந்து நின்றதை கண்டதும் இல்லை. உதவிக்கு நிற்கும் சிறு பையன் தான் பொருட்களை எடுத்து கொடுப்பன். ஒரு நாள் இவள் கடையில் பரீட்சைக்காண பேப்பேர் வாங்க சென்றாள். அன்று அவளது கஷ்ட காலம் அந்த பையன் வரவில்லை. இவளுக்கு நேரம் ஆகி விட்டது சீக்கிரம் தரும்படி கேட்டாள் . கடைக்கார ராசாவால் எடுத்து கொடுக்க முடியவில்லை. இவள் வற்புறுத்தவே அதை உள்ளுக்கு வந்து எடுக்கும்படி சொன்னான். இவளுக்கு கோவம் வந்தது . ஏன் "உங்களால் முடியாதோ "? என்று ஏசி விடாள். சற்றும் எதிர் பாராத ஒரு சம்பவம் நடந்தது . ராசா கதிரையில் இருந்து குதித்து கால்களை இழுத்தவாறே அதை எடுத்து கொடுத்தான். இவளுக்கு திகைப்பாக போய் விட்டது . ராசா கால் விளங்க்காதவனா ? மிகவும் கவலைப்படாள். அவன் மீது இரக்க பட்டாள். இவ்வாறே இவர்களது நட்பு காதலாகியது.

இங்கு ராசாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவன் பிறவியில் சாதாரண பையனாக தான் இருந்தான். ஐந்து வயதுக்கு பின் ஒரு கடுமையான காய்ச்சல் வந்து ஒரு ஊசி போடார்களாம் அதன் பின் தான் இப்படி ஆகியது என்றும் இடுப்புக்கு கீழே கால்கள் பலம் அற்றவையாக போய் விட்டன . ஆரம்பத்தில் கால் களை இழுத்து நடமாடுவான். பின்பு தந்தை ஒரு சக்கர நாற் காலி வாங்கி கொடுத்தார். இவனுடன் கூட பிறந்த்த்வர்கள் எழு பேர் எவருக்கும் இப்படி இல்லை. அவனது தந்தை ஒரு சிறு தொழில் அதிபராயிருந்தார். இவன் மீது மிகவும்பற்று உள்ளவராயிருந்தார். இவன் தான் இல்லாத காலத்தில் சிரமபடுவானே ........யார் கவனிக்க போகிறார்கள் என்று கவலைபட்டு இந்த சிறு கடையை போட்டு கொடுத்தார். காலப்போக்கில் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். சகோதரர் களும் ஒவ்வொருவராக் திருமணமாகி சென்று விட்டனர். ராசா மட்டும் தனித்து விடப்படான். இடயில் இவனிடம் உதவி பெற சகோதரர்கள் வந்து போவார்கள். தன் சோக கதையை ஒருநாள். மாதவிக்கு சொல்லியிருக்கிறான் ராசா.

அன்றிலிருந்து அவன் மீது ஒரு இரக்கமும் , நேசமும் அவளுக்குள் உருவாகி அது காதலாகியது. இதை கேள்வி பட்ட் மாதவியின் பெற்றார் கடுங்கோபபட்ட்னர். நொண்டி என்றும் ஏளனம் செய்தனர். ஒருநாள் இவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் தாலி கட்டி கொண்டனர். அன்றிலிருந்து மாதவி பெற்றவரால் வெறுக்க பட்டாள். இரண்டு குழந்தைகள் பிறந்த போதும் எவரும் அவளை அணைக்க் வில்லை. ராசாவின் தந்தை இறந்த பின் அவனது வீடு இவன் பெயருக்கு எழுத பட்டதை அறிந்து ராசாவின் சகோதரர்களும் வேறுபாடு காட்ட தொடங்கினர். அந்த கிராமத்தில் இருக்க விரும்பாத ராசா குடும்பம் வீட்டை விற்று பணத்தை திரட்டி , ஒரு மணிக்கூடு திருத்தும் கடை ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். அவனது விடா முயற்சியும் மாதவியின் ஒத்துழைப்பையும் அவர்களை வாழ்வில் முன்னேற்றியது. வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஒரு வண்டி வாங்கி விடார்கள். அதில் விடாமுயற்சி உள்ள ராசா கை மூலம் இயக்கும் வாகன அனுமதி பெற்றான். மணிக்கூட்டு கடையிலும் பணிக்கு நான்கு பேர் வைத்தது கொண்டார்கள். நகரத்தில் உள்ளவீட்டையும் சொந்தமாக்கி கொண்டார்கள். ராசா இருந்து கொண்டு செய்யும் பணிகளில் மிகவும் ஆர்வமுள்ளவன். விரைவில் தொழில் நுட்பங்க்களை கற்று கொள்வதில் சிறந்தவன். அவனது ஆசையெல்லாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது தான். தன் பிள்ளைகளை படிப்பித்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டும் , கடைசிவரை மாதவியை வைத்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் ..

கால் ஊனமுற்றாலும் ஊனபடாத இதயத்தை புரிந்து கொண்டது .........அவளுக்குள் ஒரு மனம் ........கதை உண்மை பெயர்கள் கற்பனை. .

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியின் கதைகளில் ஏதோவொரு உண்மை எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும். அதேபோல இக்கதையிலும் ஒரு குடும்பத்தின் வாழ்வு பதியப்பட்டுள்ளது.

உங்கள் கதையின் நாயகன் போல் எனக்கும் ஒரு நண்பன் இருந்தான். ஆனால் அவன் இங்கு யேர்மனியில் பதின்னான்கு வயதில் புலம்பெயர்ந்து தனியே தன்னை மேம்படுத்திக் கொண்டான். ஒரு கலைவிழாவில் முதல் அறிமுகமானான். நல்ல அரசியல் ஞானம் உலகியல் உலகப்போராட்டங்கள் என யாவையும் படித்திருந்தான். பாதியில் தடைப்பட்ட தமிழ் படிப்பை தன்னார்வத்தினால் தொடர்ந்து தமிழ்மணி பட்டமும் பெற்றான். பல மாணவர்களை தமிழில் உருவாக்கினான்.

சமாதான காலத்தில் ஊருக்குப் போனான். இரண்டாவது தடவையாக ஊருக்குப் போனவன் திரும்பி வரவில்லை. அங்கேயே இருந்து போராடப்போவதாக ஒரு போராளியானான். பின்னர் ஒரு போராளியைத் திருமணமும் செய்து கொண்டான். ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ந்து அரிய நல்ல பல விடயங்களை எழுதிவந்தான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்ன ஆனான் என்ற எதுவுமே தெரியாது.

அந்தத்தோழனின் நினைவுகளயும் உங்கள் கதையின் கதாயநாயகனின் தன்னார்வ முயற்சியும் நினைவுபடுத்திப்போயுள்ளது.

அக்கா அருமையான கதை உங்கள் ஆக்கங்களில் எப்போதும் ஒரு

வலியும் அதே சமயம் வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளும் நிறைய

அடங்கி இருக்கும்..............தொடர்ந்து எழுதுங்கள் அக்கா!!!!!!

வாழ்த்துக்கள் அக்கா!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கங்கள் எல்லாம் இருந்தும் ,பட்டமும்,பணமும் இல்லை என்று காதலை முறித்துக்கொள்ளும் பெண்கள் மத்தியில் மாதவி வித்தியாசமானவள்தான்

கால் ஊனமுற்றாலும் ஊனபடாத இதயத்தை புரிந்து கொண்டது .........அவளுக்குள் ஒரு மனம் ........கதை உண்மை பெயர்கள் கற்பனை. .

இப்படியான மனம் இலட்சத்தில் ஒருவருக்குத்தான் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கங்கள் எல்லாம் இருந்தும் இபட்டமும்இபணமும் இல்லை என்று காதலை முறித்துக்கொள்ளும் பெண்கள் மத்தியில் மாதவி வித்தியாசமானவள்தான்

உங்களின் பணத்தையும் பட்டத்தையும் கோண்டுபோய் குப்பையில் போடுங்கள்.எங்கள் சமுதாயம் எதற்கு எடுத்தாலும் பெண்களையே குற்றம் கண்டு பிடித்து பழக்கப்பட்டதாயிற்றே.ஏதாவது ஒருவிசயத்திலயாவது பெண்களைச் சாடாமல் இருந்திருக்கிறதா.....?பட்டத்திற்காகவும்,பணத்திற்க

Edited by yagini

  • கருத்துக்கள உறவுகள்

இது புத்தனினின் எண்ணக் கருத்து:

அங்கங்கள் எல்லாம் இருந்தும் பட்டமும் பணமும் இல்லை என்று காதலை முறித்துக்கொள்ளும் பெண்கள் மத்தியில் மாதவி வித்தியாசமானவள்தான்

இது என்னுடைய கருத்து:

உங்களின் பணத்தையும் பட்டத்தையும் கோண்டுபோய் குப்பையில் போடுங்கள்.எங்கள் சமுதாயம் எதற்கு எடுத்தாலும் பெண்களையே குற்றம் கண்டு பிடித்து பழக்கப்பட்டதாயிற்றே.ஏதாவது ஒருவிசயத்திலயாவது பெண்களைச் சாடாமல் இருந்திருக்கிறதா.....?பட்டத்திற்காகவும் பணத்திற்கh

கவும் அலைபவர்களை விரல் விட்டு எண்ணலாம்.ஏன்...நல்ல மனம் உள்ள ஒருவர் வேண்டும் எண்டு எந்த ஒரு பெண்ணும் காத்திருப்பதில்லையா....?எல்லோரும் காதலை முறித்துத் தான் வாழ்கிறார்களா...?நீங்கள் நல்ல பெண்களை சந்திக்க வில்லைப் போலும் அதனால் தான் உங்களுக்கு இப்படி எழுதத் தோன்றி உள்ளது.பெண்களை இப்படிச் சொல்கிறீர்களே...எந்தவொரு ஆணாவது வந்து சொல்லட்டும் பாப்பம் நான் ஒரு பெண்ணை விரும்புறன் அவளுக்காகவே இருப்பேன் எப்போதும் எண்டு சொல்லவே மாட்டார்.மனம் வராது.இவள் இல்லாது விட்டால் இன்னுமொருத்தி வந்துட்டுப் போவாள் எண்டு தான் நினைப்பார்கள்.ஆனாலும் பொது வாக சுயமாக சிந்திக்கும் எந்தவொரு பெண்ணும் தப்பு பண்ண மாட்டாள்.பட்டம் என்ன பட்டம்....?பணம் என்ன பணம்....?நாங்கள் என்ன தான் ஆட்டம் ஆடினாலும் கடைசியில் போகும் இடம் வெறும் ஆறு அடிதான் இதை எல்லோரும் உணரவேண்டும்.ஊனப்பட்டவருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி ...........என் கதைக்கான உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.

புத்தன் ..........உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.

தமிழ் மாறன்..........என் கதைகளுக்கு கருத்து பகிர்வதில் நீங்களும் முக்கியமானவர். உங்களுக்கும் என் நன்றிகள்.

யாயினி ..........புதியவர் என்றாலும் ஆர்வத்துடன் வந்து கருத்து சொல்லி தட்டிக் கொடுக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.

மற்றும் என் கதையை படித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உண்மைக்கதை அழகு அம்மணி.

எளிய நடை. யாரும் புரிந்து கொள்ளக்கூடியதான எழுத்தோட்டம்.

வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி. எங்கே காணோம் என்று பார்த்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்கா

காதல் எதனையும் எதிர்பார்க்காமல் வருவது.. அத்துடன் பெண்களின் மனமும் மிகவும் இளகிய குனம் கொண்டது...அதனாலேயே இரு உள்ளங்களும் சேர்ந்தும் கொண்டது...

இன்று இருக்கும் உலக ஓட்டத்தில் அன்பெனும் சொல் நிலைத்து நிற்பதற்குக் காரணம் இப்படியான தூய்மையான உள்ளங்களும் இருப்பதால் தான்.....

கதை சொன்ன விதம் மிக அழகு....

வணக்கம் நிலாமதி அக்கா,

கதையும், கதை சொல்லும் பாங்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் இரக்கப்பட்டு, கவலைப்பட்டு, பாவப்பட்டு காதலிப்பது அல்லது திருமணம் செய்வது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துக்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை அக்கா. உடல் உறுப்பு ஊனமானாலும் மனம் ஊனமாகாமல் இருந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்பதற்கு இக்கதையை விட வேறென்ன உதாரணம் வேண்டும். உங்கள் ஆரம்ப கதைகளுக்கும் இப்போ உள்ள கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உங்கள் எழுத்தோட்டம் நிறையவே மாறியுள்ளது. வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி ...........ராசா ராசன் உங்கள் பதிவுக்கு என் நன்றிகள்.

நுனாவிலான் ..........உங்கள் கணிப்பு சரியே தொட்டில் பிள்ளை தொட்டிலிலா இருக்கும் ..என்னை தமிழ் எழுத வைத்த யாழ்களத்துக்கு என் நன்றிகள். அண்ணா கொஞ்சம் வளர்ந்துடேன்...... என்று தான் சொல்லணும். என் வலைபூவிலும் நட்புகள் இருகின்றன. யாழ் களம் என் பிறந்த வீடு . வலைப்பக்கம் என் புகுந்த வீடு இங்கும் அங்குமாய் .........உலவும் நிலா.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி. எங்கே காணோம் என்று பார்த்தேன்.

நிலாமதியின் கதை என்றால் வராமல் விடுவேனா

உங்கள் கதைகளில எல்லோரும் சொன்னது போல் ஓரு உண்மை இருந்த கொண்டே இருக்கிறது நிலாமதி.

நான் யாழ் வராமல இருந்த சமயத்தில கூட இங்கு உலவும் போது உங்கள் கதைகள் வாசித்திருக்கின்றேன். முந்திய கதை நடைக்கும இப்போதையதுக்கும நிறைய வித்யாசம். உங்கள தமிழ் கூட மேருகேறி இருக்கின்றது. தொடர்ந்தும எழுதுங்கள்... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா எனக்கும் கால் ஏலாத ஒரு உடன் பிறவா அக்கா இருக்கா நான் ஏதும் எழுதி அவ மனசு கஸ்டபடகூடாது

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சில உள்ளங்கள் இன்னும் இருப்பதால்தான் பூமி இன்னும் சுத்துகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிய சகி...........உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி .நான் வளர்ந்து இருப்பது உங்களைப்போன்ற நல் உள்ளங்களின் ஆதரவினால் தான்.

தொடர்ந்து இணைந்து இருங்கள். நன்றி.நிலாமதி.

ஜீவா .........சஜீவன் உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.....நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.