Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமயமும் சமூகமும்

Featured Replies

"சமயமும் சமூகமும்"

--------------------

சைவ சரபம் மா.பட்டமுத்து

நாகரிகம் என்ற பெயரால் பண்பாடற்றசெயல்கள் பலவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் காலமிது. சமயம் மாந்தரின் ஆன்ம லாபத்துக்குதவும் நெறிகளின் தொகுப்பு என்ற எண்ணம் மக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. மதம் என்ற சொல்லைக் கேட்டவுடன் இன்றைய அரசியல்வாதிகளும், வாலிபர்களும் தங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இளைஞர் சமூகம் இலெளகிக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளமையால், கடவுள் பக்தி, மதம், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்து விட்டது. இந்த இழிநிலைக்குக் காரணம் யாது?

விஞ்ஞான படைப்புக்கள் இவ்வுலகை இன்பலோகமாக்கி விடும் என்ற பொய்க் கனவு, மனம் போன போக்கில் மாந்தரைச் செல்ல விடாது தடுத்து, ஒழுக்கத்தினை வளர்க்கும் நியமங்கள் மதங்களில் நிறைந்து காணப்படும் நிலைமை, மனிதரின் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டிவிட உதவும் எண்ணற்ற சந்தர்ப்பங்கள், சமயச் சான்றோர் காட்டிய வழிகளில் அவநம்பிக்கை என்னும் இவை போன்றவையே மக்களின் பண்பாட்டுக் குறைவுக்குக் காரணங்களாம்.

மதச் சார்பற்ற நாடாம் இது. சைவ சமய ஆலயங்களில் நடக்கும் பல செயல்களைக் கவனித்தால், அக்கொள்கை சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்ற ஐயம் திண்ணமாக எழும். சைவாலயத்தின் திருக்கோபுரம் ஸ்தூல லிங்கம் என்பது சிவாகமங்களின் கூற்று. ஆனால் அதன் மீதோ தேசீய விழா நாட்களில் இலெளகிக சம்பந்தமான கொடிகள் பறக்கின்றன.

கல்வி நிலயங்களிலோ சமய உணர்வு வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களே இல்லை. மாணவரின் இளம் உள்ளங்களில் இறைவனைப் பற்றிய எண்ணங்கள் எழுவதற்குரிய வாய்ப்புக்கள் ஆண்டு மிகக் குறைவு. ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, அரசியல் இவையே மாணவர்க்குக் கற்பிக்கப்படும் வேதங்கள். அவை மனிதனிடம் உள்ள விலங்கியல்பினை நீக்க உறுதுணையாகா என்பதை "It was also proved that education, including science and engineering education, was no guarantee against animality and criminality"- [swarajya - 2-5-1964] என்பதால் உணர்க.

மனதை மயக்கும் சூழ்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பயின்று வரும் மாணவன் தனது மனத்தின் மாண்பினைப் பற்றிய எண்ணமே இல்லாது உலக வாழ்வில் மூழ்குகிறான். கண்ணைக் கவரும் படங்கள் நிறைந்த சுவடிகள், திரைப்படங்கள், உலக இன்பத்தை மிகைப் படுத்திப் பேசும் சொற் பொழிவுகள் ஆகியவை அம்மாணவனை மதத்திலிருந்து வெகு தொலைவிற்கு அகற்றி விடுகின்றன. சமய மரபுகளைப் பின்பற்றி வரும் பெரியோர்களை ஏளனஞ் செய்து மகிழ்வது அவனது வாழ்வின் அடுத்த கட்டம். "கற்றதனாலாய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அரெனின்" என்பன போன்ற திருக்குறட்பாக்களெல்லாம் அவனது கவனத்தைக் கவரமாட்டா. அவனுக்குக் கடவுள் பக்தி சிறிதளவு இருக்குமேனும் அதனையும் அழித்துவிட எண்ணற்ற அரசியல் வாதிகள் ஆயத்தமாக உள்ளனர்.

சிவாலய சொத்து மதச் சார்பற்ற கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது. இலெளகிகக் கல்லூரிகளும், பள்ளிகளும் சிவாலயங்களின் ஆதரவில் நிறுவனம் செய்யப்படுகின்றன. ஆனால் அக்கல்வி நிலயங்களில் சித்தாந்த சைவக் கருத்துக்களும் போதிக்கப்படுமா? அண்ணாமலைப் பல்கலைக் கழக உப அத்யட்சகர் டாக்டர் C.P.இராமசாமி ஐயரவர்கள், "They failed to teach religion in educational institutions on the pretext that their's was a secular state and in the fear of incuring the minister's displeasure. Temple funds were being spent IN LAKHS for running an "anatomical museum" to satisfy the wishes of the Chief Minister of a state" [The Hindu 11-5-1964] என்று திருப்பதியில் பேசிய உரை ஈண்டு நினைவு கூரற்பாலது.

சைவாலயங்களில் பிறமதச் சார்புடைய சொற்பொழிவுகளுக்கு இடம் தருதல் சரியா? வேற்றுமத கதா கால§க்ஷபங்கள், புத்தகங்கள் ஆகியவற்றிற்குச் சைவ மடங்கள் ஆதரவு நல்குதல் சரியா? சைவ மாணவர்களுக்கு நமது சமயத்தின் சால்பினை எடுத்துரைக்க வேண்டாமா? சித்தாந்த சைவர்கள் இவற்றைச் சிந்திப்பார்களாக.

  • கருத்துக்கள உறவுகள்

சிவாலய சொத்து மதச் சார்பற்ற கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சிவனின் சொத்தை கொள்ளை அடிப்பவன் குலம் நாசமாக போகும் என்று சொல்வார்கள் , ஆறுமுகநாவலர் ஐயா .

ஆனாலும் ....... சிவனின் சொத்தை பாவித்து ...... நாலு குழந்தைகள் , நாலு எழுத்தை படித்தால் புண்ணியமாக போகட்டுமே.

சைவாலயங்களில் பிறமதச் சார்புடைய சொற்பொழிவுகளுக்கு இடம் தருதல் சரியா? வேற்றுமத கதா கால§க்ஷபங்கள், புத்தகங்கள் ஆகியவற்றிற்குச் சைவ மடங்கள் ஆதரவு நல்குதல் சரியா? சைவ மாணவர்களுக்கு நமது சமயத்தின் சால்பினை எடுத்துரைக்க வேண்டாமா? சித்தாந்த சைவர்கள் இவற்றைச் சிந்திப்பார்களாக.

வேற்று மதங்கள் என்று நீங்கள் சொல்ல வருவது வைஷ்னவ - சமஸ்கிருத மதத்தையா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா!

சில சந்தேகங்கள்..

1) புத்தனின் தகப்பனின் தகப்பன் என்ன மதம்?

2) இயேசுவின் தகப்பனின் தகப்பன் என்ன மதம்?

3) பிறக்கும் போது நீங்கள் என்ன மதம்?

4) போகும் போது என்ன மதமாக இருப்பீர்கள்?

இன்று மதத்தின் பேரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லவே முடியாது.

பார்த்து இரசித்த ஒரு வீடியோ...

http://www.youtube.com/watch?v=MeSSwKffj9o...feature=related

இதில் தகாத வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.

  • தொடங்கியவர்

வேற்று மதங்கள் என்று நீங்கள் சொல்ல வருவது வைஷ்னவ - சமஸ்கிருத மதத்தையா ?

அனைத்து மதப் பிரசாரமும் இன்று நடை பெறுகிறது. வைஷ்ணவம், மாயாவாதம். ஏன் பெளத்த, கிறிஸ்தவ பிரசாரம் கூட ஆலய வீதிகளில் நடைபெறுகிறது.

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகமண்ணை உங்களிட்டை ஒரு கேள்வி?

மனிசனாய் பிறந்தவன் தன்னட்டை இருக்கிறதெல்லாத்தையும் அப்பப்ப மாத்துறான்.

காசை மாத்துறான்.

காதலியை மாத்துறான்..

கட்டினவளை மாத்துறான்...

காரை மாத்துறான்....

கலரை மாத்துறான்.....

கட்டின வீட்டை மாத்துறான்......

தான் படிச்ச படிப்பை மாத்துறான்.......

தான் பிறந்த நாட்டு பிறப்புரிமையை மாத்துறான்........

நாடுவிட்டு நாட்டை மாத்துறான்.......

தான் இருந்த மதத்தை மாத்துறான்.............

தாய்தகப்பன் வைச்ச பெயரை மாத்துறான்.............

ஆனால்..

ஏன்??

சாதியைமட்டும் மாத்தேலாமல் கிடக்கு????

இப்ப ...

என்னவெண்டால்!!!!!!!!

நளவர் சாதியில் இருந்த குமாரசாமி வண்ணார் சாதிக்கு அல்லது வெள்ளாளர் சாதிக்கு மாறுவது

எப்படி?

ஆறுமுகமண்ணை உடனை பதில் வேணும் :blink:

  • 1 month later...

ஆறுமுகமண்ணை உடனை பதில் வேணும் :unsure:

கு.சா அண்ணா சாதி மாற வேண்டுமாயின் நல்ல சாதிப் பெண்னை கல்யாணம் கட்டுங்கள். :unsure::o

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நாவலரே,

நாள் என் செயும் வினைதான் என் செயும்

எனை நாடிவந்த கோள் என் செயும்

கொடுங்கூற்றென் செயும் குமரேசர்

இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்

சண்முகமும் தோளும் கடம்பும்

எனக்கு ( நாவலர்)முன்னே வந்து தோன்றிடினே

இதை நன்றாகப் படித்திருக்கின்றிர்கள் என்று நினைக்கின்றேன்.

உங்கள் ஆன்மீகப் பணிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

வாத்தியார்

...............

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகமண்ணை உங்களிட்டை ஒரு கேள்வி?

மனிசனாய் பிறந்தவன் தன்னட்டை இருக்கிறதெல்லாத்தையும் அப்பப்ப மாத்துறான்.

காசை மாத்துறான்.

காதலியை மாத்துறான்..

கட்டினவளை மாத்துறான்...

காரை மாத்துறான்....

கலரை மாத்துறான்.....

கட்டின வீட்டை மாத்துறான்......

தான் படிச்ச படிப்பை மாத்துறான்.......

தான் பிறந்த நாட்டு பிறப்புரிமையை மாத்துறான்........

நாடுவிட்டு நாட்டை மாத்துறான்.......

தான் இருந்த மதத்தை மாத்துறான்.............

தாய்தகப்பன் வைச்ச பெயரை மாத்துறான்.............

ஆனால்..

ஏன்??

சாதியைமட்டும் மாத்தேலாமல் கிடக்கு????

இப்ப ...

என்னவெண்டால்!!!!!!!!

நளவர் சாதியில் இருந்த குமாரசாமி வண்ணார் சாதிக்கு அல்லது வெள்ளாளர் சாதிக்கு மாறுவது

எப்படி?

ஆறுமுகமண்ணை உடனை பதில் வேணும் :(

பேசாம கிறிஸ்தவரா மாறுங்கோ.

எங்கட பழைய ஆக்கள் கிறிஸ்தவரா மாறினதுக்கு இதுகும் ஒரு காரணம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம கிறிஸ்தவரா மாறுங்கோ.

எங்கட பழைய ஆக்கள் கிறிஸ்தவரா மாறினதுக்கு இதுகும் ஒரு காரணம் தானே.

கிறிஸ்தவரா மாறியும் பரம்பரை பரம்பரையாக பழைய சாதியைத் தொங்கிப் பிடிச்சுக்கொண்டிருக்கிற கதையும் (குறிப்பா தமிழ்நாட்டில) இருக்கிறது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறிஸ்தவரா மாறியும் பரம்பரை பரம்பரையாக பழைய சாதியைத் தொங்கிப் பிடிச்சுக்கொண்டிருக்கிற கதையும் (குறிப்பா தமிழ்நாட்டில) இருக்கிறது..! :lol:

இவர்கள் கிறிஸ்தவராக மாறினாலும் சில சைவ பாரம்பரியங்களையே கடைபிடிக்கின்றனர்.

பொதுவாக தமிழ் கிறிஸ்தவர்கள் இரண்டுங்கெட்டான் நிலையிலேயே வாழ்கின்றனர்.

இவர்கள் உண்மைகளை உணரா வண்ணம் ஏதோ ஒரு வகையில் உதவிகளை பெற்று அடிமையாக வாழ்கின்றனர் என்றே

நினைக்க தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா அண்ணா சாதி மாற வேண்டுமாயின் நல்ல சாதிப் பெண்னை கல்யாணம் கட்டுங்கள். :rolleyes::lol:

ம்...நல்ல ஆலோசனைதான்.

சாதிமாறி திருமணம் செய்த பலரை எனக்குத்தெரியும்.

ஏதோ இளமைத்துடிப்பில் திருமணம் செய்தவர்கள்

இன்று.....

வயது போகப்போக....

ஆசா பாசங்கள் குறையக்குறைய....

வெவ்வேறு குடும்பபிரச்சனைகள் தலைதூக்கும் போது....

போயும்போயும் இந்த.......கட்டினனே என்பவர்களும்?

எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் என்பவர்களும்?

அததுகள் தங்கடை குணத்தை காட்டும் என்பவர்களும்?

அடிக்கடி புலம்பியதை என் காதால் கேட்டிருக்கின்றேன்!

பாசை தெரியாதவர்களை கட்டினால் நல்லம் .....மிச்ச விசேசம் :rolleyes::lol:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

ம்...நல்ல ஆலோசனைதான்.

சாதிமாறி திருமணம் செய்த பலரை எனக்குத்தெரியும்.

ஏதோ இளமைத்துடிப்பில் திருமணம் செய்தவர்கள்

இன்று.....

வயது போகப்போக....

ஆசா பாசங்கள் குறையக்குறைய....

வெவ்வேறு குடும்பபிரச்சனைகள் தலைதூக்கும் போது....

போயும்போயும் இந்த.......கட்டினனே என்பவர்களும்?

எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் என்பவர்களும்?

அததுகள் தங்கடை குணத்தை காட்டும் என்பவர்களும்?

அடிக்கடி புலம்பியதை என் காதால் கேட்டிருக்கின்றேன்!

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா எத்தனையோ பேர் சாதி பார்க்காமல் காதலித்து விட்டு பின்பு பிரச்சனை பட்டு இருக்கிறார்கள்...சில பேர் சாதி பார்க்காமல் காதலித்தாலும் அவர்களுக்கு உள்ளே பிரச்சனையில்லா விட்டாலும் அவர்களின் சாதிக்கிடையான பிரச்சனையின் போது பிரிந்தும் இருக்கிறார்கள்.

கு.சா அண்ணா சாதி மாற வேண்டுமாயின் நல்ல சாதிப் பெண்னை கல்யாணம் கட்டுங்கள். :(:lol:

எது நல்ல சாதி ?

வெள்ளைக் காரியைக் கட்டினால் பிரச்சனையே இல்லை. சாதி சம்பிரதாயம் பாக்கிற ஆக்களெல்லாம் எல்லாத்தையும் மறந்து பல்லை இளித்துக் கொண்டு நிற்பினம். எந்த இனத்தோடையும் சேர்ந்து தமிழை மறந்து இனம் அழிந்து போகலாம். ஆனால் ஒரு சாதி இன்னொரு சாதியோட சேரக் கூடாது. தமிழன் இன்னொரு தமிழனோட சேர்ந்தால் சமூகப் பிரச்சனை குடும்பப் பிரச்சனை எல்லாம் வரும். :(

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் காரியைக் கட்டினால் பிரச்சனையே இல்லை. சாதி சம்பிரதாயம் பாக்கிற ஆக்களெல்லாம் எல்லாத்தையும் மறந்து பல்லை இளித்துக் கொண்டு நிற்பினம்.

அட இதுவும் நல்லாத்தான் இருக்கு! அப்படியே சின்னிவிரலாலை நெத்தில ஒரு திருநீற்றுக் கீற்றும் வைத்து குங்குமப் போட்டும் வைத்து விட்டால்....! இடைக்கிடை தமிழையும் சொல்லிக் கொடுத்து தமிழையும், சமயத்தையும் சேர்த்தே வளக்கலாம்! :(

ஒரு நல்ல பகுத்தறிவு உள்ள மனுஷ சாதியை பாருங்கோ... (சரியான கஷ்டம்...) தேடித் பார்த்தல் ஒன்று இரண்டு அத்தி பூத்தாப் போல இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா எத்தனையோ பேர் சாதி பார்க்காமல் காதலித்து விட்டு பின்பு பிரச்சனை பட்டு இருக்கிறார்கள்...சில பேர் சாதி பார்க்காமல் காதலித்தாலும் அவர்களுக்கு உள்ளே பிரச்சனையில்லா விட்டாலும் அவர்களின் சாதிக்கிடையான பிரச்சனையின் போது பிரிந்தும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டியது பிரியிறதுக்கு ஒரு காரணம். சாதி வேறாக இருந்தால் அது இலகுவான காரணம் ஆகிவிடுகிறது.

எழுபது வரைக்கும் ஹோர்மோன் சுரக்காட்டில் வில்லங்கம்தான்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.