Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகுதாளத் திருமாவும் திருந்தாத சில புலம்பெயர் தமிழரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thiruma2.jpg

இந்த வார ஒரு பேப்பரிற்காக

சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்..

பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்...

நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த 26ந் திகதி ஈழத்தில் யுத்தத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக காற்றுவழிக்கிராமம் என்கிற ஒரு நிகழ்வினை செய்யவிருக்கிறார்கள்..இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையானதும் அவசியமானதுமான ஒரு நிகழ்வு. அதனை மனதார வரவேற்கிறேன்..ஆனால் இந்த நிகழ்விற்கு திருமாவளவனை சிறப்புரையாற்ற அழைத்திருப்பதுதான் இழவு வீட்டில் திருமண மந்திரம் ஓதுவதைப்போல இருக்கின்றது..

ஈழத்தமிழரின் இன்றைய இன்னல்கள் இழப்புக்கள் அனைத்திற்கும் காரணமான இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஒரேயொரு கதிரைக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் அவர் மீது கட்டிவைத்திருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தவர்தான் திருமா..பல்லாயிரம் தமிழரின் வாழ்வை அழித்த சோனியாவை சென்னைத் தீவுத்திடல் கூட்டத்து மேடையில் வைத்து சோனியா அம்மையாரை வாழ்க என்று கையுயர்த்தி கோசம் போட்டு தன் தமிழீழ மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பின் வேடத்தை கலைத்துவிட்டவர்...சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டாலும்..வென்று கொடிபிடித்து கோட்டைக்குள் போனபின்னர் இன்று மானிலத்திலும் மத்தியிலும் ஆழும் கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்..அதற்கு பிறகாவது ஈழத்தில் தினம் தினம் அல்லல் பட்டும் செத்து மடியும் தமிழரிற்காக உருப்படியாக ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை ..

எங்காவது ஒரு மேடையில் பிரபாகரன் திரும்ப வருவான் ..5 ம்கட்ட ஈழப்போர் வெடிக்கும் ..தமிழீழம் மலரும்..அது மலர்ந்ததும் அதைப் பிடுங்கி நாங்கள் மாலையாபோட்டுக்கலாம் என்று.. வெறும் வெட்டிப்பேச்சுக்கள் மட்டுமல்ல.. அந்த மேடையில் வைத்துத்தான் அவர் சோனியாவை நோக்கி.."எங்கள் அன்னை ஈழத்தமிழரிற்காவும் உதவுங்கள் என்று மன்றாட்டமாய் வேண்டிக்கொள்கிறேன்" என்று ஏதோ மாதா கோயிலில் வாசலில் முட்டுக்காலில் மெழுகுதிரியுடன் நிற்பவனின் வேண்டுதலைப்போல ஒரு வேண்டுதலையும் வைப்பார்..கலைஞராவது ஈழத்தமிழரை காப்பாற்ற அடிக்கடி தந்தியடிப்பார் .. இவரால் ஒரு கடிதம் கூடவா எழுதமுடியாது..

இப்படித்தான் கடந்த மாதம் ஜெர்மனியில் றைனை என்கிற நகரில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் வைத்து. கேக்கிறதற்கு கேனையர்கள் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற துணிவில் இந்தியாவையும்..அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகப் பேசியது மட்டுமல்ல 5ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்கிற வீராவேசப் பேச்சுக்களை வீசியெறிந்து விட்டுப்போனார். ஆனால் இந்தியா விமான நிலையத்தில் இறங்கியதுமே மறுபடியும் அதே அன்னையிடம் மறுபடியும் மன்றாட்டம்..இவைகளையெல்லாம் விட்டு விடுவோம்..புலம்பெயர் தமிழரெல்லோரும் சேர்ந்து தங்கள் உறவுகளிற்காக மருந்தும் உணவுப்பொருட்களும் அனுப்பிய வணங்கா மண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியிருந்து..அப்

போது இலங்கையரசை கண்டித்து வீராவேசமாக கண்டன அறிக்கைகளை விட்ட திருமா அவர்கள்..

அதே வணங்காமண் கப்பல் இந்தியக்கடல் எல்லையில் நின்றபடி அந்த உணவுப்பொருட்களை இந்தியாவிலுள்ள ஈழத்து அகதிகளிற்காவது கொடுக்க உதவுங்கள் என்று ஒரு வேண்டு கோளை வைத்தனர்..அந்த வேண்டு கோள் திருமாவிடமும் வைக்கப்பட்டது..இது இரண்டு அரசுகள் சம்பத்தப்பட்ட விடயம் தன்னால் எதுவுமே செய்யமுடியாது எனகழண்டுகொண்டார்.பின்னர் அந்த விடயத்தை மனிதம் என்கிற மனிதவுரிமை அமைப்பு பொறுப்பெடுத்து பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதற்கான வேலைகளை செய்து அவை நிறைவடைந்து வணங்கா மண் கப்பல் இலங்கைக்கு திரும்ப செல்லப்போகின்றதென்பது உறுதியானதும்.. அந்தக் கப்பலை அனுப்பவதற்காக பின்நின்று உழைத்த சிலரிடம் தன்னுடைய ஆட்களை அனுப்பி ஆவணங்களை கைப்பற்றி அந்தக்கப்பல் தன்னுடைய முயற்சியினால்தான் இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி அறிக்கைவிட்டு கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைத்தவர் தான் இந்த ஆயுதமேந்தாத காகிதப்புலி.. ஆனால் மனிதம் அமைப்பினரின் கட்டுக்கோப்பான உறுதியான நடவடிக்கைளினால் இவரது தகிடுத்தனம் பலிக்கவில்லை...இன்னமும் இவர்போன்ற அரசியல் இலாபக்கணக்கு மட்டுமே போடத்தெரிந்த இந்திய இறக்குமதிகளை நம்பியா எமது வாழ்வாதாரப் போராட்டத்தை நடாத்தப் போகின்றோம்..இவர்களின் வீராவேப் பேச்சுக்களிற்கு உணர்ச்சிவசப்பட்டு வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவா புலம்பெயர் இளையசமூகம் இருக்கப் போகின்றது..புலம்பெயர் இளைய சமூகமே உங்களிற்குள் உணர்வில்லையா?? உங்கள் உறவுகளிற்கு நீங்கள் உதவுவது உங்கள் உரிமையில்லையா??இவர் போன்ற காவடிகள் இந்தியாவிருந்,து வந்து சொல்லித்தான் நாம் எமது உறவுகளிற்கு உதவப்போகிறோமா. எனவே இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் தேவையா?? முடிவெடுங்கள்..

Edited by sathiri

  • Replies 50
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருமா தீபத்தில் சொல்வது..

ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் மாறாமலேயே இருக்கின்றது. அதாவது ஈழப் போராட்டத்திற்கு எப்பவுமே எதிரானதுதான். அதற்காக ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுக்காமல் விட்டால் கிடைக்கும் சிறு உதவிகூடக் கிடைக்காமல் போகலாம் என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

Thiruma2.jpg

இந்த வார ஒரு பேப்பரிற்காக

[bசெயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்..

பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்...

மாண்புமிகு சிறுத்தைப்புலியை இப்படி பழப்புளியென எழுதியதற்காக யாழ் இணையம் வழக்கு மன்றில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. விசாரணைகளின் முடிவில் திருமா மீது சாத்திரி பழப்புளி வடுவிட்டமைக்கான தண்டனை அறிவிக்கப்படும்.

பராக் பராக் பராக்...... டம..டம..டம..டம...டம்.டம்..டம்............

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உரித்துக் காட்டிய நல்ல கட்டுரை சாத்திரியார் .

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ...... திருமாவை , காங்கிரஸ் வேண்டாத விருந்தாளியாகவே பார்க்கின்றது .

ஆனால் ...... திருமா , கருணாவுக்கு முக்கியமான விருந்தாளி .

கணக்கு எங்கோ உதைக்குது .......

அரசியல்லை உது எல்லாம் சகஜமப்பா ..........

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உரித்துக் காட்டிய நல்ல கட்டுரை சாத்திரியார் .

அரசியல்லை உது எல்லாம் சகஜமப்பா ..........

உண்மையை உரிச்சிட்டார் சாத்திரி சாத்திரியை கனபேர் உரிக்கப்போகினம் சிறி :unsure: அதுக்காக ஒரு சொட்டுக்கண்ணீர் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உரிச்சிட்டார் சாத்திரி சாத்திரியை கனபேர் உரிக்கப்போகினம் சிறி :unsure: அதுக்காக ஒரு சொட்டுக்கண்ணீர் :lol:

சாத்திரியாருக்கு , சனிமாற்றம் வேலை செய்யத் தொடங்கப் போகுது போலை ...... சாந்தி . :rolleyes:

சாத்திரியின் கட்டுரை உண்மையானதே!!!!!!

உண்மையை சொல்லி விட்டு உதை வாங்குவதில் தப்பில்லை!!!!

இந்த கள்ள அரசியல் வாதிகளிற்கு

ரிகட் கொட்டேல் சரக்கு உல்லாசமாய் இருக்க அழகிய பெண்கள்

எல்லாம் கொடுத்து வர வேற்று 30 நிமிடம் பேசிப் பேசியே ஊசுப்பேத்தி விட்டு

போவதற்கு செலவாகும் பணத்தை தமிழீழ பணத்திற்கு மாற்றி பார்த்தால்

அந்த பணமே 1 வருடத்திற்கு அந்த குழந்தைகளை பராமரிக்க போதும் என்பதை

அறியாத புண்ணாக்கு புலத்து தமிழன் இருக்கும் வரை இப்படியான மன்னிக்க முடியாத

நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.................

இளையோர்கள் எண்டாலும் இவற்றை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்

இல்லையேல் புண்ணாக்கு புலத்து தமிழனின் செயல்கள் அத்தனையும்

இடையன் உழைத்து மடையன் கையில குடுக்கிறதிற்கு சமனானதாகிவிடும்............

..................

Edited by thamilmaran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி

நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை....

ஐம்பதினாயிரம் மக்கள் செத்து விழுந்துகொண்டிருந்த போது தனது நாற்காலிக்காக பேரம் பேசிய ஓரு மனிதன் தான் இந்த திருமா.... ஏன் தான் இந்த ஆளை கூப்பிடுறாங்களோ தெரியவில்லை.... அதுவும் பட்டினி கிடந்து நாட்டுக்காக உயிர்னீத்த ஓர் தியாகியின் நினைவு தினத்துக்கு பேச இவரிடம் என்ன தகுதி கண்டார்களோ தெரியவில்லை....

திருமா இது தகுமா?

இப்படி திருமாவை கேள்விகேட்க நீங்கள் யார்?நீங்கள் என்ன செய்தனீங்கள் ?திருமா உண்ணாவிரதம் இருந்தவர் நீங்கள் புலத்தில இருந்து உண்ணுர விரதம்தானே செய்தனீங்கள் அவரை குறை சொல்ல உங்களுக்கு என்ன தகுதியிருக்கு ?

இப்படி எல்லாம் இனி கேள்விகள் வரும் சாத்திரி நல்ல பதில்களை இப்பவே தயார்படுத்தவும்

திருமாவளவன் அவர்களே இதுவரை கால உங்கள் ஈழ ஆதரவுக்கு நன்றி இனி உங்கள் மண்ணில் உங்கள் தலித் மக்கள் விடுதலை தொடர்பாக போராடுங்கள்.

எப்பதான் எங்கட ஆக்கள் திருந்தப் போகினமோ? காங்கிரஸ் தான் ஈழ தமிழரின் அழிவுக்கும் அவலத்துக்கும் காரணம் என்று தெரிந்த பின்னும் அக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட பச்சோந்திகளை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் மக்களை என்னவென்று சொல்லுவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமா இது தகுமா?

இப்படி திருமாவை கேள்விகேட்க நீங்கள் யார்?நீங்கள் என்ன செய்தனீங்கள் ?திருமா உண்ணாவிரதம் இருந்தவர் நீங்கள் புலத்தில இருந்து உண்ணுர விரதம்தானே செய்தனீங்கள் அவரை குறை சொல்ல உங்களுக்கு என்ன தகுதியிருக்கு ?

இப்படி எல்லாம் இனி கேள்விகள் வரும் சாத்திரி நல்ல பதில்களை இப்பவே தயார்படுத்தவும்

கேள்விகள் கேட்பவர்கள் என்னிடம் நேரடியாகவே தொ.பேசி மூலம் கேட்கலாம் பதில்களை நான் கொடுக்கிறேன். வெருட்டினால்தான் பயம்..எனக்கு உடுப்போடை உச்சா போயிடும் :rolleyes::o

Edited by sathiri

மாண்புமிகு சிறுத்தைப்புலியை இப்படி பழப்புளியென எழுதியதற்காக யாழ் இணையம் வழக்கு மன்றில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. விசாரணைகளின் முடிவில் திருமா மீது சாத்திரி பழப்புளி வடுவிட்டமைக்கான தண்டனை அறிவிக்கப்படும்.

பராக் பராக் பராக்...... டம..டம..டம..டம...டம்.டம்..டம்............

...........எடுத்த புளியா?...........எடுக்காத புளியா? :rolleyes::o :o

  • கருத்துக்கள உறவுகள்

...........எடுத்த புளியா?...........எடுக்காத புளியா? :rolleyes::o :o

சமயம் பாத்து உதைக்கிறதென்பது உதுதானோ மருமகன் ? :D

கேள்விகள் கேட்பவர்கள் என்னிடம் நேரடியாகவே தொ.பேசி மூலம் கேட்கலாம் பதில்களை நான் கொடுக்கிறேன். வெருட்டினால்தான் பயம்..எனக்கு உடுப்போடை உச்சா போயிடும் :lol: :lol:

அப்ப தொலைபேசியால உங்களுக்கு துப்புறவைக்கு ??? :D

சாத்திரியாருக்கு , சனிமாற்றம் வேலை செய்யத் தொடங்கப் போகுது போலை ...... சாந்தி . :lol:

சனியும் சும்மா இல்லை சிறி அட்டமத்தான் குந்தியிருக்கிறான் :lol: (இத்தாலிப்பக்கத்தாலையும் எல்லாப்பக்கத்தாலையும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாருக்கு , சனிமாற்றம் வேலை செய்யத் தொடங்கப் போகுது போலை ...... சாந்தி . :o

ஓம் போலை கிடக்கு சிறியண்ணா மனுசன் உருப்படியா சொல்லி இருக்கு :o (அதுக்காக இதுக்கு முதல் உருப்படியா சொல்லவில்லை என்று நான் சொல்ல வரலை)

எல்லாருக்கும் சரி என்று தோன்றும் கருத்தை சொல்லி உள்ளார்.

எண்டாலும் இனி நாங்கள் அவ்வளவு சீக்கிரமா உசுப்பேறவும் மாட்டம் விசிலடிக்கவும் மாட்டம்...என நினைக்கிறேன்

ஏற்கனவே நொந்து நூடில்ஸா அந்து அவலா போட்டம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thiruma2.jpg

.இன்னமும் இவர்போன்ற அரசியல் இலாபக்கணக்கு மட்டுமே போடத்தெரிந்த இந்திய இறக்குமதிகளை நம்பியா எமது வாழ்வாதாரப் போராட்டத்தை நடாத்தப் போகின்றோம்..இவர்களின் வீராவேப் பேச்சுக்களிற்கு உணர்ச்சிவசப்பட்டு வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவா புலம்பெயர் இளையசமூகம் இருக்கப் போகின்றது..புலம்பெயர் இளைய சமூகமே உங்களிற்குள் உணர்வில்லையா?? உங்கள் உறவுகளிற்கு நீங்கள் உதவுவது உங்கள் உரிமையில்லையா??இவர் போன்ற காவடிகள் இந்தியாவிருந்,து வந்து சொல்லித்தான் நாம் எமது உறவுகளிற்கு உதவப்போகிறோமா. எனவே இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் தேவையா?? முடிவெடுங்கள்..

சூப்பரு..மாமு..சூப்பரு...

ஒரே ஒரு சின்ன கேள்வி?

பிரபாகரன் உங்க தம்பியா? :rolleyes:

இடதுசாரி மாவோஸ்ட்களை அழிப்பது தான் எனது குறிக்கோள் என்று தமிழன் சிதம்பரம் இன்று அறிக்கை விட்டுள்ளார்...

ஈழததமிழருக்கா திருமா குரல் கொடுக்கிறார் உவரும் தமிழன்........

போங்கடா நீங்களும் உங்கட தமிழ்பற்றும்....

  • கருத்துக்கள உறவுகள்

இடதுசாரி மாவோஸ்ட்களை அழிப்பது தான் எனது குறிக்கோள் என்று தமிழன் சிதம்பரம் இன்று அறிக்கை விட்டுள்ளார்...

ஈழததமிழருக்கா திருமா குரல் கொடுக்கிறார் உவரும் தமிழன்........

போங்கடா நீங்களும் உங்கட தமிழ்பற்றும்....

cool :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இடதுசாரி மாவோஸ்ட்களை அழிப்பது தான் எனது குறிக்கோள் என்று தமிழன் சிதம்பரம் இன்று அறிக்கை விட்டுள்ளார்...

ஈழததமிழருக்கா திருமா குரல் கொடுக்கிறார் உவரும் தமிழன்........

போங்கடா நீங்களும் உங்கட தமிழ்பற்றும்....

தணல்பறக்குது ஜில் :rolleyes:

சாத்திரி அண்ணா உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே. ஆனால் அதை நீங்கள் சொல்வதற்கு தகுதியற்றவர். சென்ற ஆண்டு இந்தநேரம் விடுதலையை தாங்கிபிடிக்கின்ற தூணாக இருந்த நீங்கள் இன்று வாந்தியும் எடுக்கின்றீர்கள். திருமாவளவன் யார் அவனுக்கு என்ன தேவை எங்களைப்பற்றி என்ன அக்கறை. இப்ப கொஞ்ச நாட்களாக நீங்களும் சாந்தியும் எடுக்கும் வாந்தி போதும். சிலகாலங்களின் பின்னர் நீங்கள் தூணாக மாறுவீர்கள் .ஏனென்றால் நீங்களும் பச்சோந்திகளே.

அண்ணா உண்மையை சொன்னால் கோபம் கொள்ள மாட்டீர்கள்தானே?

:rolleyes::o:o:lol::lol:

சாத்திரி அண்ணா உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே. ஆனால் அதை நீங்கள் சொல்வதற்கு தகுதியற்றவர். சென்ற ஆண்டு இந்தநேரம் விடுதலையை தாங்கிபிடிக்கின்ற தூணாக இருந்த நீங்கள் இன்று வாந்தியும் எடுக்கின்றீர்கள். திருமாவளவன் யார் அவனுக்கு என்ன தேவை எங்களைப்பற்றி என்ன அக்கறை. இப்ப கொஞ்ச நாட்களாக நீங்களும் சாந்தியும் எடுக்கும் வாந்தி போதும். சிலகாலங்களின் பின்னர் நீங்கள் தூணாக மாறுவீர்கள் .ஏனென்றால் நீங்களும் பச்சோந்திகளே.

அண்ணா உண்மையை சொன்னால் கோபம் கொள்ள மாட்டீர்கள்தானே?

:o:lol::lol::lol::lol:

என்னடா இவ்வளவு நேரமாய் ஆளைக் காணேல்லை என்று பார்த்தேன்.

வந்திட்டாரையா... வந்திட்டாரு

சரி சரி இனி ஆரம்பியுங்கோ....... :o

(சாத்திரி சாந்தி ஆட்களோட

முற்பிறவி பகை ஏதும் இருக்குமோ :D )

திக் திக் தொடரும் மர்மங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது சாத்திரி .எல்லோரும் மனங்களுக்குள் நினைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

இந்த திருமா பற்றி ஒரு குறுக்குவெட்டு கட்டுரை இதிலும் விரிவாக யாராவது எழுத வேணும்.

வருணாச்சிரம தர்மமும் சாதியும்தான் இந்து மதத்தை காப்பாற்றியவை என்றும் அர்ச்சனை செய்பவன் அர்ச்சனை செய்யவேணும் என்றும்

மலம் அள்ளுபவன் மலம்தான் அள்ள வேண்டும் என்று சொன்ன காந்தியின் காங்கிரசில் இணைந்து தலித் மக்களுக்கு சேவை

செய்ய போகிறேன் என்று தன்னுடைய மக்களைக்கூட ஏமாற்றும் இவர் எப்படி எங்களின் விடுதலைக்கு உதவுவார்????

அவரைக் கூப்பிட்டு பொய் கக்கவைக்கும் எம்மவர்களை என்ன சொல்வது..?

....... இன்று திருமாவின் பேட்டியை GTVயில் பார்த்தேன். வேதனையாக இருந்தது. எமக்காக சாக துணிந்து சாகும்வரை இருந்த திருமா ......... இந்திய தேர்தல் இறுதி நேரத்தில் கருணாநிதி ... "ஈழத்தில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டு விட்டது. இந்திய அரசின் கோரிக்கையை சிங்கள அரசு ஏற்றுக்கொண்டு விட்டது" .......... பிரட்சனைகளே முடிந்து விட்டது போல மிகப்பெரிய நாடகத்தை, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் மூலம் பரவவிட்டு .... தேர்தல் வெற்றிக்காக தொப்புள்கொடி உறவு இனத்தை அழிவதற்கு ஆடிய நாடகத்துக்கு .... இன்று தன்னை நிரபராதி என சொல்ல பாடுபடும் திருமாவும் உடந்தையாகத்தானே இருந்தார்!!!!!!!!

சாத்திரியார் ஒரு சிறு ஆதங்கம் ......

......... முதலில் நாம் சரியாகவா செய்தோம்? எமக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் நழுவ விட்டோம்! நாமே எமக்கான கொள்ளியை வைத்தோம்! பின்பு என்ன நியாயம் இருக்கிறது, மற்றவரை குற்றஞ்சாட்ட?????????? ...... இன்று இந்தியாவில் என்ன உலகிலேயே எமக்கு நண்பர்கள் இல்லை!! ... எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் ஓரிருவரையும், சிறு தவறுகளுக்காக ஒதுக்க வேண்டுமா??

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது திருமாவின் அரசியல் பிரவேசம் காலம் பதில் சொல்லும்

எதிலும் அவசரப்படுவது எமது இயல்பு அதனால்தான் இன்று முள்ளிவாய்க்காலில் முழுதாய் முடிந்தோம்

இனியாவது நண்பர்களை சம்பாதிப்போம் எதிரிகள் வேண்டாம் திருமாவின் தேவை நாளைதான் தெரியும்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது திருமாவின் அரசியல் பிரவேசம் காலம் பதில் சொல்லும்

எதிலும் அவசரப்படுவது எமது இயல்பு அதனால்தான் இன்று முள்ளிவாய்க்காலில் முழுதாய் முடிந்தோம்

இனியாவது நண்பர்களை சம்பாதிப்போம் எதிரிகள் வேண்டாம் திருமாவின் தேவை நாளைதான் தெரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின்ரை செத்தவீடுமுடிஞ்சு எட்டுச் செலவுக்குப்பிறகுதான் ....................

தமிழ்நாட்டின்ரை ஒருசில உண்மையான அரசியல் வெளிப்பாடு கொஞ்சமாவது வெளியிலை தெரியும்.

ஏனெண்டால் அண்டுதொடக்கம் எங்கடை பலபிரச்சனையளுக்கு உவனும் ஒரு சகுனி :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.