Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழிச்சிகள்

Featured Replies

இன்று (அக்டோபர் 10) தமிழீழ பெண்கள் எழுச்சி தினம். இந்த நாளில் இந்தக் கவிதையை மீண்டும் படிக்கும் போது சூனியம் சூழுது மனசுக்குள்

  • Replies 60
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று (அக்டோபர் 10) தமிழீழ பெண்கள் எழுச்சி தினம். இந்த நாளில் இந்தக் கவிதையை மீண்டும் படிக்கும் போது சூனியம் சூழுது மனசுக்குள்

லெப்.மாலதியின் நினைவுநாளும் தமிழீழப்பெண்கள் எழுச்சிநாளும் இன்று. விடுதலைப்புலிகளின் வரலாற்றில் முதல் வீரச்சாவடைந்த முதல் வீராங்கனை மாலதி.

தடையுடைக்க எழுச்சியுடன் நிமிர்ந்த பெண்கள் இன்று தடைமுகாம்களில் அவலமுறுகிறார்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்

உலகிலேயே பெண்களிற்கென்றுதனியாக பெண்களாலேயே வழி நடத்தப்பட்ட பலபடைப்பிரிவுகளை கொண்டிருந்த போராட்ட அமைப்பு மட்டுமல்ல..ஒரு நாடாகவும் இருந்தது தமிழீழத்தில்தான்..புலிகள் அமைப்பில் வேகம் இருந்த அளவிற்கு விவேகம் இல்லாமைதான் ..இன்று அதே பெண்கள் மட்டுமல்ல அமைப்பே இப்படி சீரழிந்து போனதற்கு காரணம்.. புலிகளின் புலனாய்வு பிரிவில் முக்கியமாக பலர் இலங்கை இந்திய கூட்டுச்சதிக்கு துணைபோனதுமட்டுமல்ல சில தளபதிகளும் இத்தனைக்கும் காரணம் என்று அடித்துச்சொன்னது மட்டுமல்ல சிலரின் பெயர்களையும் சொன்னார் என் சகோதரி....நம்ப முடியாமல் அதிர்ச்சியாகத்தானிருந்தது..த

ற்சமயம் அந்த புலனாய்வு பிரிவு நபர்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு வந்து வசதியாக இருக்கிறார்கள்..அது மட்டுமல்ல வெளிநாடுகள்உங்களை கட்டாயம் காப்பாற்றும் என்று அளவிற்கதிமானதொரு நம்பிக்கையை வெளிநாட்டு அமைப்பாளர்களும்தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்ததால்..இ

றுதியில் ஏதாவது மாற்றம் நிச்சயம் வருமென்று தாங்கள் நம்பியிருந்ததாகவும்..ஆனால் மே 15ற்கு பின்னர் இயக்கத்திற்குள்ளேயே யாரை யார் நம்புவது என்கிற சந்தேகம் வந்துவிட்டாம்..அந்தளவிற்கு இலங்கை புலனாய்வு பிரிவினரின் ஊடுருவல் இருந்ததால்..அத்தனையும் கைவிட்டு போகின்றது என்று அப்போதுதான் புரியத் தொடங்கியது என்றார்..ஆனால் ஈழ விடுதலைப்போராட்டத்தில் புலிகள் என்றது ஒரு அத்தியாயம் அது புலிகளுடன் முடிந்து விடாது அது ஏதோ ஒரு வழியில் ஏதோ ஒரு வடிவத்தில் தொடர வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமும்...

சுமங்களா, நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், அதிலும் எவ்வளவு தூரம் உண்மை என்பதும் கேள்விக்குறியே. மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது என்பது நிச்சயமான உண்மை. ஆனால், அதன் உண்மைத்தன்மைகள் கேள்விக்குரியனவே. விடுதலைப் புலிகள் என்பது ஒரு வரலாறு. எதிர்காலத்தில் இவ்வாறானதொரு வரலாறுவரக்கூட சாத்தியமில்லை. அந்தத் தலைவனால்மட்டுமே அதனைச் செய்யமுடியும். நம்பிக்கையோடிருப்போம். வலியும், வேதனையும்தான் தமிழனின் வரப்பிரசாதம் என்றாகிவிட்டது.

வளைய முட்கம்பிகள்

வற்றியொடுங்கிய

உடலும் முகமும்

வயதையும் வடிவையும்

வைத்து

விடிய விடிய நடக்கும்

விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்

மகிழமரத்தில்

மெதுவாய்

சாய்ந்துகொண்டேன்

கால்கள்வழியே

கரைந்தோடிய

கட்டிஇரத்தம்

கண்டதும்

கவலையடைந்தான்

காவலிற்கு நின்ற

சிப்பாய்

அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு

அவமானமடைந்திருக்கலாம்

ஆனாலும்

யோனிகள் மீதான

விசாரணைகள்

தொடர்ந்து கொண்டேயிருக்கும்..

ஏனெனில் நாங்கள்

தமிழிச்சிகள்

வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது..

வளைய முட்கம்பிகள்

வற்றியொடுங்கிய

உடலும் முகமும்

வயதையும் வடிவையும்

வைத்து

விடிய விடிய நடக்கும்

விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்

மகிழமரத்தில்

மெதுவாய்

சாய்ந்துகொண்டேன்

கால்கள்வழியே

கரைந்தோடிய

கட்டிஇரத்தம்

கண்டதும்

கவலையடைந்தான்

காவலிற்கு நின்ற

சிப்பாய்

அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு

அவமானமடைந்திருக்கலாம்

ஆனாலும்

யோனிகள் மீதான

விசாரணைகள்

தொடர்ந்து கொண்டேயிருக்கும்..

ஏனெனில் நாங்கள்

தமிழிச்சிகள்

அக்கா உங்கள் கவிதை பார்த்து அதற்கு பதில் எழுத வேண்டும் என்பதற்காக தான் இந்த இணையத்தில் உறுப்பினரானேன்.

எம்மின பெண்களின் வீரத்தினை கவிதைகளாக வடித்து எழுதிய எழுத்தாணிகளின் மை ஈரம் காயும் முன் அதே பெண்களின் அவல நிலையை கவிதையாக்க வேண்டிய நிலை உங்ளுக்கு வந்ததையிட்டு நான் உளமார வருந்துகிறேன். இது உங்களையும், உங்கள் சகோதரியையும் என்னுடைய உடன் பிறப்புகாளாக பார்த்ததினால் வந்த வருத்தம் மட்டும் அல்ல. இந்த நிலை உருவாக, இந்த கால கட்டத்தில் எதுவுமே செய்ய முடியாமல் வாழும் என் கையறு நிலையினையும் உணர்ந்து தான் வருந்துகிறேன்.

எல்லவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்ற வரையறையற்ற வியாக்கியானத்தி விட உங்கள் சகோதரியிடம் சொல்லுங்கள்..உங்கள் வலியினை புரிந்துகொள்ளக்கூடிய சகோதரன் உள்ளான் என்று மட்டும் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.

ஆனால் நான் கண்டிருக்கிறேன்..

கணவனோடு வாழ்ந்துவிட்டு அசைலம் அடிப்பதற்காக திருமணமே ஆகவில்லை என்று சொல்லி பெற்றெடுத்த குழந்தையோடு நான் கற்பிழந்தவள் எதிரியால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவள் என்று சொல்லி பிழைப்பு நடத்தவும் எம்மவர்கள் தயாராக இருக்கின்றனர். இப்படியான சிலரை மருத்துவ உலகில் சந்தித்து திகைத்துப் போயிருக்கிறேன். இவர்களை எதிரியும் சிதைக்கவில்லை.. போராட்டமும் சிதைக்கவில்லை. சொந்த வசதிக்காக தம்மைத் தாமே சிதைத்துவிட்டு நடிக்கிறார்கள். இப்படியானவர்களையும் பெண்கள் இனங்காட்ட முன் வர வேண்டும்.

....

இன்னொரு விடயம்.... எல்லாவற்றிற்கும் தளபதிகளையும் போராளிகளையும் விவேகமற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவர்கள் வென்றிருந்தால் விவேகமானவர்கள்.. தோற்றதால் விவேகமற்றவர்கள் என்றாகிவிட முடியாது.

ஒரு உண்மைப் போராளியின் சகோதரியாக புலிகள் விவேகமற்றவர்கள் என்ற கருத்து வந்திருக்க முடியாது.

புலிகள் தம்மால் இயன்றதை இறுதி வரை செய்தனர் தான். தளபதிகளும் சேனைகளும் விலைபோவது புலிகளுக்கு மட்டுமான விடயம் அல்ல. அது உலகெங்கும் நடக்கும் விடயம் தான்.

பிரச்சனையே எதிரியை சரியாக புரிந்து கொள்ளாத மக்களும்.. தமது போராட்டத்தை பாதுகாக்கத் தவறிய தமிழர்களுமே அன்றி புலிகளை இவ்வீழ்ச்சிக்கு முக்கிய பொறுப்பாளிகள் ஆக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. 35 வருடங்களா தங்கள் வாழ்வை அர்ப்பணித்துப் போராடியவர்கள் அவர்கள். அதே காலப்பகுதியில் ஊரை விட்டு போராட்டத்தை விட்டு ஓடி வந்த தமிழர்கள் பல்லாயிரமாகும். இதுதான் எம் வீழ்ச்சிக்கு நாம் எடுத்து வைத்த முதலடி.

அதுமட்டுமன்றி.. கவிதையின் நாயகியை எங்கள் சகோதரியை சிதைத்தவனுக்கு.. பொன்னாடை போர்த்து மகிழும் இவளும்.. தமிழிச்சி என்று தான் சொல்லிக் கொள்கிறாள்.

tamil1.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தைகள் இல்லை நம் தமிழீழ பெண்கள் அனுபவிக்கும் நரக வேதனையில் இதுவும் ஒன்று

  • தொடங்கியவர்

அக்கா உங்கள் கவிதை பார்த்து அதற்கு பதில் எழுத வேண்டும் என்பதற்காக தான் இந்த இணையத்தில் உறுப்பினரானேன்.

எம்மின பெண்களின் வீரத்தினை கவிதைகளாக வடித்து எழுதிய எழுத்தாணிகளின் மை ஈரம் காயும் முன் அதே பெண்களின் அவல நிலையை கவிதையாக்க வேண்டிய நிலை உங்ளுக்கு வந்ததையிட்டு நான் உளமார வருந்துகிறேன். இது உங்களையும், உங்கள் சகோதரியையும் என்னுடைய உடன் பிறப்புகாளாக பார்த்ததினால் வந்த வருத்தம் மட்டும் அல்ல. இந்த நிலை உருவாக, இந்த கால கட்டத்தில் எதுவுமே செய்ய முடியாமல் வாழும் என் கையறு நிலையினையும் உணர்ந்து தான் வருந்துகிறேன்.

எல்லவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்ற வரையறையற்ற வியாக்கியானத்தி விட உங்கள் சகோதரியிடம் சொல்லுங்கள்..உங்கள் வலியினை புரிந்துகொள்ளக்கூடிய சகோதரன் உள்ளான் என்று மட்டும் சொல்லுங்கள்.

உங்கள் வார்த்தைகளிற்கு நன்றிகள் அன்புச் செல்வன்..என் சகோதரி மளதளவில் கொஞ்சம் தேறிவருகிறார்..தமிழகத்தில் அவரிற்கருகில் சில நல்லநண்பர்கள் கிடைத்திருப்பதால்..விரைவில் அவர்பழைய நினைவுகளில் இருந்து மீழுவார் என்கிற நம்பிக்கை பிற்ந்திருக்கின்றது..இனி அவர் தன் வாழ்விற்காக போராட வேண்டிய நிலையும் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

Manri Sumangkala? ungkal kavithaikkum sakothariyin azumaikkum thalai panikiren.

V.I.S.Jayapalan

Nanri.

  • 7 months later...

உங்கள் விளக்கத்துக்கு நன்றி ராஜா அண்ணை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.