Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:மாவோயிஸ்ட் தலைவர்

Featured Replies

இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது.

இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது. இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ‘’உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம். அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.

சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.

எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம் - கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் - கேரளா எல்லைப்பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’என்று கூறியுள்ளார்.

இணைய இணைப்பு : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18946

  • Replies 71
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான அனைத்து ஆதரவுக்கரங்களையும் வேறுபாடின்றி அணைத்துக் கொள்வதே சிறந்தது. இந்தியாவின் நலன்பார்த்து.. வாழப் போய் இருந்த தேசத்தையும் சிங்களவனிடம் பறிகொடுத்து.. உறவுகளின் வாழ்க்கையைத் தொலைத்து.. முட்கம்பிக்குள்ளும்.. ஊரூராவும்..நாடு நாடாவும் அலைந்து திருகின்றோம். எவனுமே எங்களின் உரிமைகளை மதிக்கிறான் இல்லை..! :)

அடுத்த கட்ட நகர்வுக்கான சிறந்த ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்ட நகர்வுக்கான சிறந்த ஆரம்பம்.

எப்படி வெளி நாட்ட்டில் இருந்து கொண்டா??? :):):)

சொல்லுக்கு முன் செயல் இருப்பதே வீரம்.

எதிரியை எப்படி ஒழிப்பேன் எனும் திட்டத்தை அவனுக்கே அறிவித்து...கொஞ்சம் பகுத்து அறிவை வளர்த்து செயல்படுங்கள்...

கணபதிக்கு ஓர் அறிவுரை:

தயவு செய்து உதவ மனம் இருந்தால்...முதலில் தமிழக முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு முதலில் உதவுங்கள், தமிழக தமிழர்களுக்கு முட்கம்பிக்குப் பின் தமிழர் படும் இன்னலை விளக்கப்படுத்துங்கள், தமிழகத்தில் பிரிவினைவாதத்தை களையுங்கள், முதலில் தமிழக மீனவனுக்கு நவீன ஆயுதத்தை தாருங்கள் பிறகு கடல் கடக்கலாம்.

நக்கீரனுக்கும் பத்திரிகை விற்க ஒன்று கிராபிக் மூலம் படம் போட வேண்டும் இல்லையேல், பரப்பரப்பாய் இப்படி ஏதாவதை எடுத்து விட வேண்டும். வன்னி மக்களின் வாழ்வோடு விளையாடுவதே பலபேருக்கு தொழிலாகிவிட்டது.

வாய்ச் சொல்லில் வீரர்கள். இன்னமும் எம் மக்களின் சாவும் ரணமும்தான் இவர்களுக்கு வேண்டும்

முதலில் இந்த கணபதி யார் என்பது சந்தேகத்துக்குரியது, நக்கிரனில் எழுதி வரும் அடிகளாரும் கொஞ்சம் கொஞ்சமாய் முகத்தை காட்ட துவங்கியுள்ளார்.

போராட்டம் உச்சத்திலிருந்த போதெல்லாம் அமைதியாய் இருந்துவிட்டு இப்போ பேசுவது நகைப்பாய் உள்ளது. தமிழ் மக்களை கொலவதற்கு உதவிய இந்தியா பற்றி வாயை திறக்காமல் இலங்கை அரசை மட்டும் பயமுறுத்த முனையும் இது போன்ற கணபதிகளிடம் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும்

நக்சலைட்டுகளையும் , கம்யூனிஸ்ட்களையும் நம்ப முடியாது...

இவர்களிடம் 303 ரைபிள் தான் நவீன ஆயுதம்!

:lol: :lol: :lol:

வன்னி மக்களின் வாழ்வோடு விளையாடுவதே பலபேருக்கு தொழிலாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாத்தையும் செய்யிறதோட சீனாவுக்கும் கொஞ்சம் சொல்லி இலங்கைக்கு அதரவளிக்கிறதைக் குறைக்க வச்சால்தான ஏதாவது; பிரயோசனமிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலரின் வன்னி மக்கள் தொடர்பான நீலிக்கண்ணீரை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

போர் தொடங்க முன்னர் வன்னி மக்கள் அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வெளியேற வேண்டாம் என்ற போது.. இதே மனிதர்கள் புலிகள் தங்கள் பாதுகாப்பிற்காக மக்களை தூண்டி விட்டு அப்படிச் செய்விக்கின்றனர் என்று எழுதினார்கள்.

பின்னர் போர் உச்சமடைந்த போது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போனால் மக்கள் விடுதலை பெற முடியும் என்றார்கள்.

இப்போ.. வன்னி மக்களுக்கு போராட்டத்தைக் கைவிட்டு சிங்கள அரசிடம் சேவகம் செய்வதால் தான் விடுதலை கிடைக்கும் என்கிறார்கள்.

இவர்களின் கருத்தியல் பரினாம வளர்ச்சி என்பது எவ்வாறு எமது போராட்டத்தை மக்கள் மத்தியில் உள்ள போராட்ட உணர்வை நசுக்குவது என்பதாக இருக்கிறதே அன்றி மக்களின் நலன் கருதியல்ல.

உண்மையில் மக்களின் நலன் கருதியதாக இருந்தால் 2006 இல் ராஜபக்ச அரசு போரைத் திணித்த போது அதற்கு எதிராக இவர்கள் செயற்பட்டு மக்களைக் காப்பாற்றி இருப்பார்கள். உண்மையில் இவர்களிடம் அரச விசுவஸா செயற்பாடுகளே தென்படுகின்றன. வன்னி அல்லது வாகரை அல்லது யாழ்ப்பாண மக்கள் தொடர்பான அக்கறையல்ல.

மாவோயிஸ்டுக்களிடம் ஆயுதம் வாங்கி போராட வேண்டும் என்பது அல்ல தேவை. இன்றைய தேவை எமது இனத்துக்கான பிராந்திய சர்வதேச இராஜதந்திர நகர்வுகளே. அதற்காக மாவோயிஸ்டுக்களின் உதவிக் கரங்களைப் பற்றிக் கொள்ளுதல் தவறன்று. நாம் இந்தியாவுக்கு ஈடாக அதற்கு எதிரான நாட்டோடும் நட்புப் பாராட்டும் போதே இந்தியாவை எம் வழிக்குக் கொண்டு வர முடியும். சீனாவுடன் நெருங்கி உறவாடிக் கொள்வதன் மூலம் இந்தியாவை தன்னருகில் வைத்துக் கொண்டது சிங்கள தேசம். எம்மிடம் அந்தளவுக்கு சாணக்கியமான இராஜதந்திர நகர்வுகள் இருக்கவில்லை. அதன் காரணமாகத்தான் எமது மக்களும் போராளிகளும் வகை தொகை இன்றி அழிக்கப்பட்ட போதும்.. இப்போ சிறை பிடிக்கப்பட்டுள்ள போதும்.. நாம் வாழாதிருக்கிறோம். எவரும் எமக்கு உதவ முன்வரவில்லை. காரணம் அவர்களின் இராஜதந்திர நலனோடு எம்முடைய போராட்ட அரசியல் நகர்வுகளை நாம் செய்யத் தவறிவிட்டதுடன் இந்தியா மற்றும் தமிழக அரசியல்வாதிகளை நம்பி எமது போராட்டத்தின் திசை தீர்மானிக்கலாம் என்று தவறாக எடை போட்டிருந்தோம். ஆனால் அதற்கான பலாபலனையே இன்று அறுவடை செய்திருக்கின்றோம்.

இதில் வன்னி மக்கள் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தான் பாதிப்புக்களை சந்தித்திருக்கின்றனர். எம்முடைய நகர்வுகள் போராட்ட இலக்கை கருவறுப்பதாக அன்றி எம்மக்களின் போராளிகளின் தியாகங்கள் வீண் போகாத வகைக்கு இராஜதந்திர வழிகளூடாவது எமது போராட்ட இலக்கை எட்ட முன்வருவதே சாணக்கியத்தனமானது.

ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த போது அது தவறான பாதை என்று சொல்லிக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். அந்தக் கூட்டம் இன்று அந்த நச்சரிப்பை நிறுத்திவிட்டு அரசுடன் இணைந்து செயற்படுகிறது. ஆயுதப் போராட்டத்தால் செய்ய முடியாது என்றால் வேறென்ன வழியில் தமிழர்களின் உரிமைகளை நிலை நிறுத்தப் போகிறீர்கள்.. என்றால் அதற்குப் பதில் இல்லை. சிங்கள அரசுடன் இணைந்து செயற்படுவதே ஒரே வழி என்று சொல்கின்றனர். சிங்கள அரசுடன் 1948 இல் இருந்து இணைந்து செயற்பட்டதன் விளைவுதான் இப்போராட்டம் என்பதை வெகு இலகுவாக தங்கள் சுயநலக் கருத்தியலுக்காக மறந்துவிட்டு.. கிளிப்பிள்ளை பாடப் ஒப்பிப்பதல்ல இன்றைய தேவை. வன்னி மக்கள் இது ஒரு போதும் விடுவிக்க உதவாது.

ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்புப் பெற்று ஒரு அதிரடித்தாக்குதல் மூலம்.. வவுனியாவை விடுவித்துக் கொண்டு கிளிநொச்சி நோக்கி முன்னேறின்.. நிச்சயம் வன்னி மக்களை விடுவிக்கலாம். அது சாத்தியமா..??! நிச்சயம் சாத்தியம். எப்படி.. எமக்கு ஒரு வலுவான வல்லரசு ஆயுத படைப்பலம் அளிக்கும் என்றால்.. நிச்சயம் அது சாத்தியம். அல்லது எமது மக்களின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதை சுட்டிக்காட்டி.. சியராலியோன் போன்று ஐநா அமைதிப்படையை எமக்கான தாயக நிலப்பரப்பில் நிறுத்திக் கொள்ளக் கோருவது இன்னொரு மாற்றீடாகும். அதைவிடுத்து கருணாநிதியும் சோனியாவும் கண்ணிவெடி அகற்றி எமது மக்களை மீளக்குடியமர்த்தி மறுவாழ்வளிப்பார்க்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தால்.. அது ஈடேற முன் பல உயிர்களைப் பலிகொடுக்கும் நிகழ்வே நிகழும்.

போரின் போது பலியானால்.. புலிகள் பலியிடுகிறார்கள் என்று கத்தும் கூட்டம்.. இன்று வன்னி மக்களை அரச கட்டுப்பாட்டுக்குள் இழுத்து வைத்து கொலை செய்வதற்கு சொல்லும் காரணம்.. அவர்கள் புலிகள். இப்படிப்பட்ட கூட்டத்தினரிடம் இருந்து வன்னி மக்களை என்ன அந்தக் கடவுகளைக் கூட காக்க முடியாது..!

புலம்பெயர் தமிழர்களே!

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

நாம் இனத்திற்காக எதைச்செய்தோம்.ஆம் இறுதிப்போர்இடம் பெற்றபோது வீதியில் இறங்கினீர்கள்.அதை விட என்ன செய்தீர்கள்.

உங்கள் மனச்சாட்சியைக்கேட்டுப்பாருங்கள்.ஒவ்வொருமுறையும் இரத்தக்களரி ஏற்படும் போதுதான் நம்மவர்கள் உணர்ச்சிப்பட்டு எழுந்துள்ளோம்.உங்கள் உணர்ச்சிக்காக இன்னும் தமிழரை நரபலி எடுக்கவிடுவதா? சொல்லுங்கள் உறவுகளே.... சொல்லுங்கள்.நாம் தூரத்தில் எதைச்செய்வது, எப்படிச்செய்வது என்று மனதைச்சாந்திசெய்து சம்பாதிக்கச்சென்றுவிட்டீர்களா? இப்போராட்டம் நம்மைநம்பித்தான் உள்ளது என்பதை ஏன் மறந்தீர்கள் ?உங்கள்பிஞ்சுகளை நச்சுவாயுத்தீயில் பொசுக்கினானே எதிரி அதை ஏன் உலகுக்கு சொல்லத்தயங்குகிறீர்கள்.ஒரு நாளில் ஒரு மணித்தியாலத்தையாவது இனத்திற்காக செலவலிக்க ஏன் தயங்குகிறீர்கள்.கொண்டாட்டங்களுக்கும் களியாட்டங்களுக்கும் செலவலிக்கும் நேரத்தைக்கணக்கிட்டுப்பாருங்கள்.நம்மினத்தை அழித்த எதிரி அமெரிக்கா வரவுள்ளான்.

என்ன செய்யப்போறீர்கள்? உங்களால் அவனைத்தடுக்கமுடியுமா?தடுத்தேயாகவேண்டும். இப்படி ஏதாவதுசெய்யுங்கள்.வீண்செய்திகளைப்படித்து வீணாகாதீர்.

post-3001-12561670861875_thumb.jpg

எப்படி வெளி நாட்ட்டில் இருந்து கொண்டா??? :lol::lol::lol:

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்த ஒரு வருட மாவீரர் விபரங்களை நீங்கள் அறிந்திருந்தால் உங்களிடம் இந்து இப்படியான சொல் வந்திருக்காது.வெளிநாட்டில் இருக்கும் எல்லோரும் உயிருக்கு பயந்தும் வளமான தங்களின் எதிர்காலத்திற்காகவும் வெளிநாடு வரவில்லை.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் நிண்டீங்களென்றால் உங்களுக்கு விளங்கும்.

வாய்ச் சொல்லில் வீரர்கள். இன்னமும் எம் மக்களின் சாவும் ரணமும்தான் இவர்களுக்கு வேண்டும்

நாம் இழந்தோம்?

2ம் உலக யுத்தத்தில் யூதர்கள் இழந்ததை விடவா அல்லது ஐரொப்பா ரசியா இழந்ததை விடவா நாம் இழந்து விட்டோம்?

ஏன் இழந்தோம்?

சிலரின் தியாகத்திலே பலர் குளிர்காய நினைத்ததால் இழந்தோம். இன்று சிங்களவன் அடைத்துவைத்திருக்கும் முள் வேலிக்குள்ளே வாழப்பழகிய நாங்கள் அன்றே ஆயுதம் ஏந்தியிருந்தால் ஏன் இன்று இந்த நிலமை? இன்று பெற்றோரின் கண் முன்னே நீங்கள் படிப்பித்து பெரிய பதவிகளுக்காக காத்திருந்த உங்கள் பிள்ளைகளை கொடியவன் உங்கள் கண் முன்னே சின்னாபின்னமாக்கும் போது என்ன செய்ய முடிகிறது உங்களால்?

வன்னி மக்களை பற்றி இன்று கவலைப்படும் நீங்கள் விடுதலைப் போராட்டம் சிறு பின்னடைவைக் கண்டால் என்ன நடக்கும் என்பதை ஏன் அன்று சிந்திக்க மறந்தீர்கள்? உங்களுக்கான விடுதலையை வேறு யாராவது விலைகொடுத்து வாங்கித் தருவார்கள் என்று பாத்துத் கொண்டிருந்வீர்களா??

முன்பும் யாரோ தமிழ் நாட்டில் சொன்னார்கள், ஈழ மக்களுக்கு எதாவது நடந்தால் 6 கோடி தமிழ் மக்களும் சும்மா இருக்க மாட்டார்கள் என்று.

இன்று சிங்களவன் அடைத்துவைத்திருக்கும் முள் வேலிக்குள்ளே வாழப்பழகிய நாங்கள் அன்றே ஆயுதம் ஏந்தியிருந்தால் ஏன் இன்று இந்த நிலமை?

உண்மைதான் அன்றே இந்த உறவுகள் கேணல் ரூபன் விடுத்த அழைப்பை ஏற்றிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலரின் வன்னி மக்கள் தொடர்பான நீலிக்கண்ணீரை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

போர் தொடங்க முன்னர் வன்னி மக்கள் அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வெளியேற வேண்டாம் என்ற போது.. இதே மனிதர்கள் புலிகள் தங்கள் பாதுகாப்பிற்காக மக்களை தூண்டி விட்டு அப்படிச் செய்விக்கின்றனர் என்று எழுதினார்கள்.

பின்னர் போர் உச்சமடைந்த போது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போனால் மக்கள் விடுதலை பெற முடியும் என்றார்கள்.

இப்போ.. வன்னி மக்களுக்கு போராட்டத்தைக் கைவிட்டு சிங்கள அரசிடம் சேவகம் செய்வதால் தான் விடுதலை கிடைக்கும் என்கிறார்கள்.

இவர்களின் கருத்தியல் பரினாம வளர்ச்சி என்பது எவ்வாறு எமது போராட்டத்தை மக்கள் மத்தியில் உள்ள போராட்ட உணர்வை நசுக்குவது என்பதாக இருக்கிறதே அன்றி மக்களின் நலன் கருதியல்ல.

உண்மையில் மக்களின் நலன் கருதியதாக இருந்தால் 2006 இல் ராஜபக்ச அரசு போரைத் திணித்த போது அதற்கு எதிராக இவர்கள் செயற்பட்டு மக்களைக் காப்பாற்றி இருப்பார்கள். உண்மையில் இவர்களிடம் அரச விசுவஸா செயற்பாடுகளே தென்படுகின்றன. வன்னி அல்லது வாகரை அல்லது யாழ்ப்பாண மக்கள் தொடர்பான அக்கறையல்ல.

போரின் போது பலியானால்.. புலிகள் பலியிடுகிறார்கள் என்று கத்தும் கூட்டம்.. இன்று வன்னி மக்களை அரச கட்டுப்பாட்டுக்குள் இழுத்து வைத்து கொலை செய்வதற்கு சொல்லும் காரணம்.. அவர்கள் புலிகள். இப்படிப்பட்ட கூட்டத்தினரிடம் இருந்து வன்னி மக்களை என்ன அந்தக் கடவுகளைக் கூட காக்க முடியாது..!

வெட்டி ஒட்டியதற்கு குறைநினைக்கவேண்டாம்

இவர்களுக்கு எழுதி எனது பொன்னான நேரத்தை மண்ணாக்க விரும்பவில்லை

நன்றி

நாம் இழந்தோம்?

2ம் உலக யுத்தத்தில் யூதர்கள் இழந்ததை விடவா அல்லது ஐரொப்பா ரசியா இழந்ததை விடவா நாம் இழந்து விட்டோம்?

ஏன் இழந்தோம்?

சிலரின் தியாகத்திலே பலர் குளிர்காய நினைத்ததால் இழந்தோம். இன்று சிங்களவன் அடைத்துவைத்திருக்கும் முள் வேலிக்குள்ளே வாழப்பழகிய நாங்கள் அன்றே ஆயுதம் ஏந்தியிருந்தால் ஏன் இன்று இந்த நிலமை? இன்று பெற்றோரின் கண் முன்னே நீங்கள் படிப்பித்து பெரிய பதவிகளுக்காக காத்திருந்த உங்கள் பிள்ளைகளை கொடியவன் உங்கள் கண் முன்னே சின்னாபின்னமாக்கும் போது என்ன செய்ய முடிகிறது உங்களால்?

வன்னி மக்களை பற்றி இன்று கவலைப்படும் நீங்கள் விடுதலைப் போராட்டம் சிறு பின்னடைவைக் கண்டால் என்ன நடக்கும் என்பதை ஏன் அன்று சிந்திக்க மறந்தீர்கள்? உங்களுக்கான விடுதலையை வேறு யாராவது விலைகொடுத்து வாங்கித் தருவார்கள் என்று பாத்துத் கொண்டிருந்வீர்களா??

யூத மக்களின் எண்ணிக்கைக்கும், போராட்டத்திற்கும் எமது மக்களின் எண்ணிக்கைக்கும் போராட்டத்திற்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகள் கூட புரியாத உங்களால் இப்படி மூச்சிரைக்க தான் முடியும்

நீங்கள் இங்கு ஆவேசமாக கேட்பதாக கேட்ட அனைத்து கேள்விகளையும் உங்கள் நிலைக்கண்ணாடி முன் கேட்டுப்பாருங்கள்.

இன்னமும் தமிழகமும் இந்தியாவும் ஆயுதம் அள்ளிக் கொடுக்க மீண்டும் நாம் போராட தொடங்கலாம் என்று பகல் கனவை காண்பதற்கும், மீண்டும் ஒரு முறை ஈழ மக்களின் அவல வாழ்வுக்காக ஆவேசப்பட்டு குழறவும் நான் தயாரில்லை. முடிந்தால் கணபதியும் நக்சலைட்டுகளும் ஆயுதம் தந்து தமிழீழம் காண மீண்டும் போராடும் போது நீங்கள் இணைவீர்களானால், அல்லது உங்கள் பிள்ளைகளை சகோதரங்களை அனுப்பிவீர்களானால், எனக்கும் ஒரு தகவல் தாங்கள்... உங்களுடன் இணைகின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 36 நாள் தான் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

மாவோயிஸ்ட்டுக்கள் தரும் ஆதரவை ஏற்றுக் கொள்ளப் போகிறோம். அதன் மூலம் சீனாவை நோக்கி நகரப்போகிறோம் என்றாலே இந்தியனுக்கு குழப்பம் அதிகரிக்கும்.சீனனையும் ஆதரிப்போம் அமெரிக்கனையும் ஆதரிப்போம். நமக்குக் காரியந்தான் நடக்க வேண்டும். இப்போது அதைச் செய்து தான் அந்தப் போரில் சிறிலங்கா வென்றிருக்கிறது.

யூத மக்களின் எண்ணிக்கைக்கும், போராட்டத்திற்கும் எமது மக்களின் எண்ணிக்கைக்கும் போராட்டத்திற்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகள் கூட புரியாத உங்களால் இப்படி மூச்சிரைக்க தான் முடியும்

நீங்கள் இங்கு ஆவேசமாக கேட்பதாக கேட்ட அனைத்து கேள்விகளையும் உங்கள் நிலைக்கண்ணாடி முன் கேட்டுப்பாருங்கள்.

இன்னமும் தமிழகமும் இந்தியாவும் ஆயுதம் அள்ளிக் கொடுக்க மீண்டும் நாம் போராட தொடங்கலாம் என்று பகல் கனவை காண்பதற்கும், மீண்டும் ஒரு முறை ஈழ மக்களின் அவல வாழ்வுக்காக ஆவேசப்பட்டு குழறவும் நான் தயாரில்லை. முடிந்தால் கணபதியும் நக்சலைட்டுகளும் ஆயுதம் தந்து தமிழீழம் காண மீண்டும் போராடும் போது நீங்கள் இணைவீர்களானால், அல்லது உங்கள் பிள்ளைகளை சகோதரங்களை அனுப்பிவீர்களானால், எனக்கும் ஒரு தகவல் தாங்கள்... உங்களுடன் இணைகின்றேன்

போராட்ட வெற்றியை எதையும் தாங்கும் மன உறுதியே தீர்மானிக்கிறது என்ன எங்கள் விடுதலைப் போரின் அடிப்படை தத்துவமே தெரியாத உங்களுக்கு இப்படி இணையங்களில் எழுதி போராட்ட உணர்வை மழுங்கடிக்கத்தான் தெரியும்.

வெளிநாடு ஏன் வந்தீர்கள் என்றால் நாட்டில புலி ஆக்கள பிடிக்குது அதுதான் உயிருக்கு பயந்து இங்கு ஓடி வந்தனான் என்று உங்களில் எத்தனை பேர் புலிகளையும் தமிழீழ மண்ணையும் வித்திருப்பீங்கள் என்று உங்களையே கேட்டுப் பாருங்கள். ஆவேசம் என்பது இன உணர்வு.இனம் அழியும் போது தானாகவே வருவது.இனம் அழியும் போது அமைதியாக இருந்து வேடிக்கை பார்குகும்-இனத்தின் குருதியிலே குளிர்காயும்-எனது மச்சான் அல்லது எனது சகோதரர் போராளி என்று அவர்களின் தியாகத்திலே இது வரை குளிர் காய்ந்த உங்களால் என்னத்தை இனி எழுத முடியும். என்ன செய்வது கட்டப் பொம்மனும் எட்டப் பொம்மனும் பிறந்தது ஓரோ மண்ணில் தான் என்பது யதார்த்தமான உண்மையே!

தமிழகமும் இந்தியாவும் ஈழத் தமிழினத்தின் எதியான பின்பு இந்தியத்தின் பலவீனமே எமது பலம் என்ற யதார்த்தத்தை உங்களைப் போன்றோர் ஏற்க மறுப்பது இன்னும் இந்தியாவை நம்புங்கள் என்பதற்கு சமம்.

இன்றும் சரி இனி எப்போதும் சரி ஆயுத பாசை தான் எமது எதிரிகளுக்கு புரியும். அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தால் நிம்மதி விடுதலை எனக் கூறிய மக்களே இதை ஏற்றுத் கொண்டு அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டார்கள். இவைகள் உங்களுக்கு எங்கே விளங்கப் போகிறது.

மற்றவன் சொல்லி இணைவதல்ல போராட்டம்.இன உணற்சியோங்க விடுதலை வேண்டி தானாக போரட்டத்தில் இணைவதே போராட்டம். எந்தவொருவரும் நீ போராடு என்று கூறி தலைவர் போராட புறப்படவில்லை. தன் மக்களையே நம்பி மக்களின் பலத்திலே உருவானதே புலிகள் படை.

யுதர்களை போல நாமும் அழிக்கப் பட்டோம். அதே யூதர்களை போல மீண்டு வருவோம் எதிரிகள் நடுநடுங்க.

அப்போது உங்களை நோக்கியும் அழைப்பு வரும். முடிந்தால் பங்களியுங்கள் இல்லையேல் தமிழன் என்ற அடையாளத்தை தொலைததுவிட்டு வாழுங்கள் ஈழ விடுதலைக்கு தொந்தரவு செய்யாலம்.............

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 36 நாள் தான் இருக்கு..

என்னத்துக்கு குட்டிப்பையா . :lol:

போராட்ட வெற்றியை எதையும் தாங்கும் மன உறுதியே தீர்மானிக்கிறது என்ன எங்கள் விடுதலைப் போரின் அடிப்படை தத்துவமே தெரியாத உங்களுக்கு இப்படி இணையங்களில் எழுதி போராட்ட உணர்வை மழுங்கடிக்கத்தான் தெரியும்.

உங்களைப் போன்ற வெத்து வேட்டுகளும் விசைப்பலகை மன்னர்களும் வசதியாக வாழ்ந்து கொண்டு ஈழ மக்களை நோக்கி போராடுங்கள ஆயுதம் தாரோம் என்று சவடால் போடுவதுதான் போராட்டத்தின் அடிப்படைத் தத்துவம் என்றால் அந்த தத்துவம் பற்றி எனக்குத் தெரியாது. மக்களின் எதையும் தாங்கும் சக்தி பற்றி அந்த மக்கள் கதைக்க் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வசதியாக வந்து அங்கு எஞ்சிப் போயிருக்கும் மக்களைப் பார்த்து ஆயுதம் தருவோம் போராடு என ஏவல் விடும் உங்களைப் போன்றவர்கள் கதைப்பதில் எந்த பயனும் இல்லை

வெளிநாடு ஏன் வந்தீர்கள் என்றால் நாட்டில புலி ஆக்கள பிடிக்குது அதுதான் உயிருக்கு பயந்து இங்கு ஓடி வந்தனான் என்று உங்களில் எத்தனை பேர் புலிகளையும் தமிழீழ மண்ணையும் வித்திருப்பீங்கள் என்று உங்களையே கேட்டுப் பாருங்கள்.

நீங்கள் வந்த முறை பற்றி கதைக்கின்றீர்கள் என்று நம்புகின்றேன். எனக்கு அப்படி வரவேண்டிய அவசியம் இருக்கவில்லை

ஆவேசம் என்பது இன உணர்வு.இனம் அழியும் போது தானாகவே வருவது.இனம் அழியும் போது அமைதியாக இருந்து வேடிக்கை பார்குகும்-இனத்தின் குருதியிலே குளிர்காயும்-எனது மச்சான் அல்லது எனது சகோதரர் போராளி என்று அவர்களின் தியாகத்திலே இது வரை குளிர் காய்ந்த உங்களால் என்னத்தை இனி எழுத முடியும். என்ன செய்வது கட்டப் பொம்மனும் எட்டப் பொம்மனும் பிறந்தது ஓரோ மண்ணில் தான் என்பது யதார்த்தமான உண்மையே!

இதே ஆவேசம் இப்ப மட்டும்தான் வருகின்றதா? முதலாம் ஈழப் போரிலும், இரண்டாம் ஈழப் போரிலும், மூன்றாம் ஈழப்போரிலும் கூட மக்கள் அழிந்தார்கள். இனம் அழிந்தது. அடிப்படை கட்டுமானம் எல்லாம் சிதறடிக்கப்பட்டது. அப்போது எங்கே போனது உங்கள் ஆவேசம்? தலைவர் இருக்கின்றார், அவர் பார்த்துக் கொள்வார் என்று ஓடி வந்தீர்களா? என்னைப் போல் வெளிநாட்டுக்கு ஓடி வந்து ஒழிக்கும் முன் எங்கே போனது அந்த ஆவேசம்? என் குடும்பத்தில், உறவுகளில் எத்தனை பேரை இழந்தேன் என்று கணக்குக் காட்டுவதால் என்னால் குளிர்காய முடியாது. அப்படி இழந்தவர்களால் உள்ளுக்குள் அழத்தான் முடியும். ஆனால், அப்படி மக்களின் இழப்பை உணர்வுபூர்வமாக உணர முடியாத உங்களைப் போன்றவர்களால் மட்டும்தான் மக்கள் எதையும் தாங்க வேண்டும், தாங்கிப் போராட வேண்டும் என்றும் எதிர்பார்த்து கொண்டு பொப்கோர்னுடன் விசிலடித்துக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் இருந்து விண்ணாளம் கதைக்க முடியும்

தமிழகமும் இந்தியாவும் ஈழத் தமிழினத்தின் எதியான பின்பு இந்தியத்தின் பலவீனமே எமது பலம் என்ற யதார்த்தத்தை உங்களைப் போன்றோர் ஏற்க மறுப்பது இன்னும் இந்தியாவை நம்புங்கள் என்பதற்கு சமம்.

உங்கள் உலக அரசியல் பற்றியும் சர்வதேச அரசியல் பற்றியும் அறிந்து கொண்டதில் எனக்கு புல்லரிக்கின்றது. உங்களைப் போன்ற அரை வேக்காட்டு அதி மேதாவிகள் தான் எட்டப்பர்களை விட மோசமாக போராட்டத்திற்கு ஊறு விளைவித்தவர்கள். சரி, நீங்கள் சொல்வது போன்றே இந்தியாவின் பலவீனம் தான் எம் பலம் என்றால், அந்த பலவீனம் நோக்கி இந்தியா இன்று நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை எதனை வைத்து நிறுவுகின்றீர்கள்? அப்படி பலகீனமாகிப் போனால், அது எமக்கு எவ்வகையில் சாதகமாக போகும்? சீன விஸ்தரிப்பில் இந்தியாவின் பலவீனம் இலங்கை சிங்கள பேரினவாத அரசை விட எமக்கு எப்படி சாத்தியமாகப் போகும் என்பதை விளக்குவீர்களா? அமெரிக்காவுக்கு ஒரு டிகோ-கார்சியா போன்று சீனாவுக்கு இலங்கை அமையப் போவதை இது எப்படி அசாத்தியாமாக்கும் என்றாவது உங்களின் சர்வதேசிய அறிவை வைத்து விளக்குவீர்களா?

இன்றும் சரி இனி எப்போதும் சரி ஆயுத பாசை தான் எமது எதிரிகளுக்கு புரியும். அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தால் நிம்மதி விடுதலை எனக் கூறிய மக்களே இதை ஏற்றுத் கொண்டு அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டார்கள். இவைகள் உங்களுக்கு எங்கே விளங்கப் போகிறது.

ஆக அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தால் நிம்மதி என்றுதான் இந்த மக்கள் வந்தெதென்று கூறி அவர்களின் முகத்தில் காறி உமிழ்கின்றீர்கள்? இனி இழக்கவும், தாங்கவும் எதுவும் இல்லையென்று எல்லாராலும் ஈற்றில் அநாதையாக்கப்பட்டு பேரவலத்தினைச் சந்தித்த இந்த மக்கள் விரும்பித்தான் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தார்கள் என்ற இலங்கை பேரினவாத அரசின் அதே கூற்றைத்தான் மீண்டும் இங்கே நீங்கள் உரைக்கின்றீர்கள். உங்களுக்கும் சிங்கள அரசின் பேச்சாளருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அத்துடன், அரசை நம்பி வந்தவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களைப் பார்த்து, "பார்த்தீர்களா இப்ப என்ன ஆச்சு" என்ற Sadism நிறைந்த நையாண்டித்தனம் தான் உங்களின் கருத்தில் இருக்கின்றது

மற்றவன் சொல்லி இணைவதல்ல போராட்டம்.இன உணற்சியோங்க விடுதலை வேண்டி தானாக போரட்டத்தில் இணைவதே போராட்டம். எந்தவொருவரும் நீ போராடு என்று கூறி தலைவர் போராட புறப்படவில்லை. தன் மக்களையே நம்பி மக்களின் பலத்திலே உருவானதே புலிகள் படை.

100% உண்மை, மறுக்கவில்லை. அதனால்தான் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணைந்து 30000 மேற்பட்டோர் தம்மை ஆகுதியாக்கி காவியமானார்கள். ஆனால் நீங்கள் இணையவில்லையே? என்னைப் போல், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் போல் நீங்களும் ஓடி வந்தவர் தானே? ஆனால் அப்படி வந்துவிட்டு, பேரவலம் சந்தித்த மக்களைப் பார்த்து ஆய்தம் தாரோம் போராடுங்கள் என்று ஏவல் செய்யவல்லவா முனைகின்றீர்கள்.

அடக்குமுறை இருக்குமட்டும், அதற்கான எதிர்வினை இருக்கும். ஆனால் அந்த எதிர்வினையை எப்படி ஆற்றுவது என்பதை அந்த மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நீங்களோ, நானோ, கணபதியோ அல்ல தீர்மானிப்பது. மீண்டும் ஆயுதம் ஏந்துவதா அல்லது வேறு விதமாக போராடுவதா அல்லது, சிறீ லங்கா எனும் ஒரே தேசத்துக்குள் முஸ்லிம் மக்களைப் போல இரண்டறக் கலந்து விடுவதா என்பது அவர்களின் தெரிவு. அந்த தெரிவுக்கு அந்த நிலத்திலிருந்து பிரிந்து வந்த எமக்கு எந்தவிதமான செல்வாக்கு செலுத்தவும் அருகதையில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அந்த மக்கள் நிச்சயம் உங்களைப் போன்ற புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு, வசதியான பாதுகாப்பான வாழ்வை வாழ்ந்து கொண்டு தமக்கு கட்டளையிடும் பேர்வழிகளிடம் இனி ஏமாறப் போவதில்லை.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்த ஒரு வருட மாவீரர் விபரங்களை நீங்கள் அறிந்திருந்தால் உங்களிடம் இந்து இப்படியான சொல் வந்திருக்காது.வெளிநாட்டில் இருக்கும் எல்லோரும் உயிருக்கு பயந்தும் வளமான தங்களின் எதிர்காலத்திற்காகவும் வெளிநாடு வரவில்லை.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் நிண்டீங்களென்றால் உங்களுக்கு விளங்கும்.

இதைத்தான் பலபேர் சொல்லி திரிகிறார்கள் தமிழ்நிலா [வெளிநாடு சென்றிருக்கிறோம் ஆனால் பற்று இருக்கிறது நாங்கள் பணம் கொடுப்போம் ,உதவியும் செய்வோம் ஆனால் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் ] ஆனால் அடுத்தவர்கள் பிள்ளைகளை பலிகொடுப்போம் இப்படித்தான் இருக்கிறது உங்கள் கதை யாரும் வரப்போவதும் இல்லை போராட போவதும் இல்லை இப்படி பேசி கொண்டு இருக்காமல் அகதிகளுக்கு உதவுங்கள் [உங்கள் உறவுகளூக்கு]

அப்படி என்னதான் இருக்கிறது அந்த கட்டுநாயக்கா விமான நிலையத்தில்[ஒரு வேளை ஆள் விழுங்கும் இயந்திரம் ஏதாவது இருக்குமோ]

நிழலி

Posted Yesterday, 11:22 PM

முடிந்தால் கணபதியும் நக்சலைட்டுகளும் ஆயுதம் தந்து தமிழீழம் காண மீண்டும் போராடும் போது நீங்கள் இணைவீர்களானால், அல்லது உங்கள் பிள்ளைகளை சகோதரங்களை அனுப்பிவீர்களானால், எனக்கும் ஒரு தகவல் தாங்கள்... உங்களுடன் இணைகின்றேன்

இப்படி கேட்காதீங்கோ நிழலி அந்த அக்கா ஓடபோகிறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.