Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனியில் வெளிநாட்டவர் சபைக்கான தேர்தலில்.சாந்தி ரமேஸ் போட்டியிடுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யெர்மனிய வெளிநாட்டவர் சபைக்கான 2009 தேர்தல்

08.11.09 அன்று யேர்மனியின் Rheinland Pfalz மானிலத்தின் புதிய வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது Rheinland Pfalz மானிலத்தில் 57நகரங்களில் நடைபெறுகிறது. 5வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில் இம்முறை 1200வரையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாண்டு 465ற்கு மேற்பட்ட பெண்கள் இத்தேர்தலில் வெட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.இதில் ஈழத்தமிழ் பெண்மணியான சாந்தி ரமேஸ் வவுனியனும் போட்டியிடுகிறார்..

JD500993.jpg

Ministerpresident Kurt Beck அவர்கள் ஈடார் ஒபஸ்ரைன் நகர வேட்பாளர்களுடன்...

கடந்த திங்கட்கிழமை (02.11.09) அன்று Rheinland Pfalz மானிலத்தின் Ministerpresident Kurt Beck அவர்கள் வேட்பாளர்களைச் சந்தித்து உரையாடினார். இந்நிகழ்வில் Rheinland Pfalz மானிலத்தின் பல நகரங்களிலிருந்தும் பல வேட்பாளர்கள் Ministerpresident Kurt Beck அவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பானது பல்லின மக்களுடனனான சந்திப்பாக அமைந்திருந்தது. பல விடயங்கள் பரிமாறப்பட்டதுடன் பல்லினத்தவர்களுடனான ஓர் அறிமுகமாகவும் அமைந்திருந்தது.

JD500994.jpg

ஈடார் ஒபஸ்ரைன் நகர வேட்பாளர் குழுவினர்

post-1260-1257610246819_thumb.jpg

Edited by sathiri

  • Replies 61
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி ரமேஸ் வவுனியன் வெற்றிபெற வாழ்த்துகிறேன். :lol:

வெளிநாட்டவர் சபை என்பது என்ன? Ausländerbeirat?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர் சபை என்பது என்ன? Ausländerbeirat?

ஜெர்மனியிலை இருக்கிறவங்களிற்கே டொச்சிலை சந்தேகமா?? நான் மொழி பெயர்த்து தேடி பார்த்ததிலை அவை அல்லது சபை எண்டு காட்டுது

வெளிநாட்டவர் சபை என்பது என்ன? Ausländerbeirat?

ஓம்.

Ausländerbeirat = Beiräte für Migration und Integration

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் பல வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.வென்றவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டது மட்டுமே நடந்தது. அவுஸ்ராண்ட பைறாற் உரிய தேர்தலே அது .வெளிநாட்டவர்களுக்கான ஆலோசனைச்சபையே அது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர் சபை என்பது என்ன?

council தானே

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தியக்கா...

இந்தத் தேர்தலில் பல வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.வென்றவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டது மட்டுமே நடந்தது. அவுஸ்ராண்ட பைறாற் உரிய தேர்தலே அது .வெளிநாட்டவர்களுக்கான ஆலோசனைச்சபையே அது.

ஏன் புலவர் அப்படிப் போட்டி போட்டு தங்களை வளர்த்துக் கொள்வதில் ஏதும் பிரச்சனையோ??

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11531_103768209640195_100000210488292_103753_1015969_n.jpg

***

Edited by இளைஞன்
தணிக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சாந்தி ரமேஸ். வெற்றி உங்கள் கதவை தட்டட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி ரமேஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

தேர்தல் வாக்குறுதியாக ..... இலவச தொலைக்காட்சி ,Gas அடுப்பு , புரியாணி பார்சல் எல்லாம் உண்டா ? :D

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் சாந்தி அக்கா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சாந்தி அக்கா

அக்கா..கொடிபிடிக்க,போஸ்டர் ஒட்ட ஆக்கள் தேவை என்றால் வருவோமில்லை.. :D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11531_103768209640195_100000210488292_103753_1015969_n.jpg

***

சந்தியிலை இப்பிடி கரண் கம்பத்திலை தொங்க விட்டிட்டாங்களே????

வெற்றிபெற வாழ்த்துக்கள் சாந்தி அக்கா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் புலவர் அப்படிப் போட்டி போட்டு தங்களை வளர்த்துக் கொள்வதில் ஏதும் பிரச்சனையோ??

தமிழர்களுக்காக என்று சொல்லாது, தனக்காக என்று சொல்லி போட்டியிட்டால், அதில் நேர்மை இருக்கும். :D

இந்தத் தேர்தலில் பல வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.வென்றவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டது மட்டுமே நடந்தது. அவுஸ்ராண்ட பைறாற் உரிய தேர்தலே அது .வெளிநாட்டவர்களுக்கான ஆலோசனைச்சபையே அது.

ஆனால் போட்டியிடும்போது மட்டும் தமிழர்களின் ரட்சகர்கள் போன்று பாசாங்கு செய்வார்கள். :lol:

Edited by சித்தன்

வெற்றிபெற வாழ்த்துக்கள் சாந்தி அக்கா

யக்கோவ் ..வாழ்ட்டுக்கல்......

சாந்தியக்கா ... வெற்றி பெற வாழ்த்துக்கள்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். நேற்று நடைபெற்ற வெளிநாட்டவர் சபைக்கான தேர்தலில் வெற்றிபெற்று நகர நிர்வாக சபைக்குத் (Stadtrat) தேர்வாகியுள்ளேன்.

(Stadtrat என்ற சொல்லுக்கு யேர்மனியில் உள்ள மொழியில் டிப்ளோம் எடுத்த பகுத்தறிவாளர்கள் வேறு ஏதாவது அர்த்தம் இருந்தால் அறியத்தந்தால் நானும் அறிந்து கொள்வேன்)

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர் சபை என்பது என்ன? Ausländerbeirat?

பகுத்து அறியும் வல்லமை மிக்க உங்களுக்கும் சந்தேகமா ? நமப முடியவில்லை சபேசன் ? நீங்கள் 14வயதில் யெர்மனிக்கு வந்தவர். நான்21வயதில் யெர்மனிக்கு வந்தவள். ஆக உங்களுக்கு உள்ள அளவு புலமைக்கு அருகில் இந்த மொழிமாற்றம் அல்லது மொழிபெயர்ப்பு எனக்குத் தெரியாது என்று சொல்வதில் எந்தச் சிக்கலும் எனக்கு இல்லை.

Ausländerbeirat என்ற சொல் உங்களுக்கு புதுமையான அல்லது கேள்விக்குறியுடனான சொல் இல்லை. இதை நீங்கள் கேள்வியிட்டதன் காரணத்தை இங்கு விபரிப்பதைத் தவிர்க்கிறேன். உங்களையும் விட சிறு வயதில் யெர்மன் வந்த இளைஞன் இந்தச் சொல்லுக்கான விளக்கம் போட்டுள்ளார். ஆக பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பு முடித்த இளைஞனின் விளக்கத்திலும் சந்தேகம் இருந்தால் வேறு யாரையும் தான் தேட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் பல வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.வென்றவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டது மட்டுமே நடந்தது. அவுஸ்ராண்ட பைறாற் உரிய தேர்தலே அது .வெளிநாட்டவர்களுக்கான ஆலோசனைச்சபையே அது.

Idar.Oberstein இல் 1999இல் ஒரு தமிழரும் அதற்கு முதல் ஒரு தமிழரும் போட்டியிட்டார்கள். 1999இல் போட்டியிட்டவர் செய்குழுவிற்குள் செல்வதற்கான அனுமதி பெற்றார்.அதற்கு முந்திக் போட்டியிட்டவர் இந்தியர்களுடன் கூட்டாகக் கேட்டார். ஆனால் தேர்வாகவில்லை. அதற்குப் பின்னர் வந்த சட்டம் யேர்மன் குடியுரிமை பெற்றவர்களால் தேர்தலில் நிற்க முடியாதென்று வந்தது. அதன் பின்னர் Idar.Oberstein இல் எந்தத் தமிழரும் இந்த சபைக்குள் போகவில்லை. போகவும் முயற்சிக்கவில்லை.

2005இற்குப் பின்னர் புதிய சட்டத்தில் யேர்மன் குடியுரிமை பெற்றவர்களும் வாக்களிக்க தேர்தலில் நிற்க வசதியிருக்கிறது.

இதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பதை மாற்றி எதையும் முயற்சிக்கவில்லையென்று சொல்லுங்கள். தனக்குத் தேவையானவற்றைத் தேடித்தான்தான் தனக்காக செயற்பட வேணும். யாராவது வீட்டுப்படிதாண்டி தீத்திவிடு என்று காத்திருந்தவர்களால் எந்தப்பயனையும் அறிய முடியவில்லை.

இந்த வெளிநாட்டவர் சபையில் என்ன இருக்கிறது என்ற விளக்கமும் தெரியவில்லை. மற்றும் இந்தத் தேர்தல் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ நடக்கவில்லை நடப்பதுமில்லை. யேர்மனிய சட்டத்துக்கு உட்பட்டு யேர்மனிய நகரசபைகளால் நடாத்தப்படுகிறது. இதில் இலங்கை இந்திய அரசியல் விளையாட்டுக்களுக்கு இடமில்லை. இதை இங்குள்ள அனைவரும் அறிவார்கள். (நீங்களும்)

உதவிப்பணத்தில் வாழவேணுமெண்ட கொள்கையாளர்களை இந்தச் சபைகளோ அல்லது இந்நாட்டு நிர்வாகங்களோ முயற்சியுள்ள மனிதர்களாகக் கணிப்பதுமில்லை கவனிப்பதுமில்லை. நோகாத உழைப்பில் வாழ நினைப்பவர்களுக்கு எதுவித பயனும் எங்கிருந்தும் கிடைப்பதில்லை.

இங்குள்ள இலங்கையின் பெரும்பான்மையினத்தவரிடமிருந்து கிடைக்கும் மெண்டிஸ் போத்தலுக்காகவும் இலங்கைத் தூதரகத்துக்கு இலகுவாகப் போய்வரும் அனுமதியும் போதுமென்று Idar.Oberstein இல் வாழ்ந்த சில தமிழர்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்கள் புலவர்.

Idar.Oberstein இல் வென்று தங்களை வளர்த்த தமிழர்களை யாரென்று இனங்காட்டினால் நானும் அதுபற்றி அறிந்து கொள்ளலாம்.

வாழ்த்துக்கள் சாந்தியக்கா...

ஏன் புலவர் அப்படிப் போட்டி போட்டு தங்களை வளர்த்துக் கொள்வதில் ஏதும் பிரச்சனையோ??

நன்றிகள் தூயவன்.

புலவர் யாராலோ மிகவும் நொந்து போனார் போலுள்ளது. தானும் செய்யாது செய்யிறவனையும் விடாத நல்ல குணம் புலவரை சித்தரை விட்டு வைக்குமா என்ன ?

புலவர் ஏதோ இலங்கை இந்திய தேர்தல் போல கதைவிடுகிறார். ஐரோப்பிய நாடொன்றில் இத்தகைய தனிமனித வளர்ப்புகள் இல்லை.

வாழ்த்துகள்

நன்றிகள் கறுப்பி.

வாழ்த்துக்கள் சாந்தி ரமேஸ். வெற்றி உங்கள் கதவை தட்டட்டும்!

நன்றிகள் பெப்ஸி

சாந்தி ரமேஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

தேர்தல் வாக்குறுதியாக ..... இலவச தொலைக்காட்சி ,Gas அடுப்பு , புரியாணி பார்சல் எல்லாம் உண்டா ? :lol:

நன்றிகள் சிறி.

இலவசமாக இப்போதைக்கு எதுவும் தருவதாக இல்லை. இங்கால் பக்கம் வரும்போது தெரிவித்தால் புரியாணி கொத்துரொட்டி எனது கைவண்ணத்தில் செய்து தரலாம். :D

தேர்த்தலில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் சாந்தி அக்கா.

நன்றிகள் நுணாவிலான்.

Edited by shanthy

வாழ்த்துக்கள் சாந்தி! :lol: உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன்! :lol:

உங்கள் வெற்றிப் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!:D

Edited by ராசராசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.