Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய துணை கொலைப் படை தலைவன் வரதராஜப் பெருமாளின் மகள் நீலாம்பரி

Featured Replies

imgnews.jpg

நீலாம்பரி என்றதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது படையப்பாவில் வரும் நீலாம்பரியைத் தான். ‐ தன்னுடைய காதல் சுயகௌரவம் தன்மானம் என்பவற்றில் பெண்ணுக்குள்ள அவாவையும் உரிமையையும் அவளுடைய அளவுக்கதிகமான ஆசையாகத் தான் தமிழ் சினிமா இதுவரை கண்டு வருவது தமிழ் சினிமாவினுடையது மட்டுமல்ல தமிழ் சமூகத்தினுடைய அவலமும் கூட. –

எனினும் இங்கு நான் குறிப்பிடுவது படையப்பாவின் நீலாம்பரியை அல்ல. அது சினிமாவில் வந்த நீலம்பரி. இது இனிமேல் சினிமாவில் வரப் போகின்ற நீலாம்பரி.

அந்த நீலாம்பரி ஒரு இலங்கையர். ஆனால் தன் சிறுவயதிலேயே இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்தவர். தமிழ்நாட்டுக்கு அல்ல. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திற்கு. அங்கு அவர் படிக்கச் செல்ல பாடசாலை வசதி கூட இருக்கவில்லை.

neelambari201.png

ஒரு ரியூசன் ஆசிரியர் தான் வீட்டிற்கு வந்து பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். அவரிடமிருந்து தான் ஹிந்தியைக் கற்றுக் கொண்டேன் என்கிறார் நீலாம்பரி.

ஆனால் அங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால் ராஜஸ்தானுக்கு பெயர வேண்டி ஏற்படுகிறது. அங்கு சோபியா என்ற பாடசாலையில் சேர்ந்து கொள்கிறார். எங்கள் மீது எல்லோருடைய கவனமும் விழுந்து கொண்டே இருந்தது. ஏனெனில் எமக்கு பாதுகாப்புக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எப்போதும் எங்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் வகுப்புக்களுக்குச் செல்லும் போது கூட அவர்கள் வந்தார்கள் என்கிறார் நீலாம்பரி.

பரத நாட்டியத்தை தனது அன்ரியிடம் இருந்து கற்றுக் கொண்ட அவர் கதகளியை மணிக் சந்திடம் கற்றுக் கொண்டார். அமைதியான வெட்க சுபாவமுள்ள பெண்ணான அவர் மெல்ல மெல்ல ஒரு கலைஞராகப் பரிணமித்தார்.

பாதுகாப்பு காரணமாக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து இறுதியாக டில்லியை வந்தடைந்தார்கள் அவரது குடும்பத்தினர். அதன் பின்னர் அவர் சட்டத்துறைக் கல்வியை முடித்தார். நாடகத்துறையில் ஈடுபாட்டுடன் செயற்பட ஆரம்பித்தார்.

டில்லியில் இடம் பெற்ற ஒரு நாடக மேடையேற்றத்தைத் தொடர்ந்து தான் நீலாம்பரிக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கிறது. பம்பாய் மித்ரய் (டீழஅடியல ஆவைவயi) என்ற மலையாளப் படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க நீலாம்பரியை அணுகியிருக்கிறார். அத்திரைப்படத்தின் கதை அவரை மிகவும் கவர்ந்ததால் அவர் உடனடியாகவே நடிக்கச் சம்மதித்தார்.

மலையாளத் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளைக் கையாண்டு வருவதாகவே நீலாம்பரி கருதுகிறார். அதனால் இது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்கிறார் அவர். மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்களும் நெறியாளர்களும் தமது பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்கும் சிறந்த திரைப்படங்களை உருவாக்கவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் கருதுகிறார்.

பம்பாய் மித்ரய் திரைப்படத்தை உமர் ஹரிக்காட் என்ற நெறியாளர் இயக்குகிறார். எங்களுக்கு எந்தச் சந்தேகமுமில்லை. நீலாம்பரி நடித்த நாடகத்தை நாங்கள் டில்லியில் பார்த்தோம். அந்நாடகத்தில் அவர் ஒரு ஊடகவியலாளராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அப்பாத்திரத்திற்கு அவர் மிகச் சரியான வடிவம் கொடுத்திருந்தார். இத்திரைப்படத்திலும் அவர் ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளராகவே நடிக்கிறார். எனவே அந்த நடிப்பை இங்கும் எதிர்பார்க்கலாம் என்றார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்.

இது நீலாம்பரியினுடைய முதலாவது திரைப்படம் என்றாலும் அவருடைய நடிப்பு துல்லியமானது. நான் டில்லியில் நாடகங்களில் நடித்து வருகிறேன். அது தவிர நாடகத்தை சமூகப் பிரச்சினைகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாக நான் காண்கிறேன் என்கிறார் நீலாம்பரி.

இவ்வளவிறிகுப் பின்னரும் இந்த நீலாம்பரி யார் என்று நீங்கள் ஊகித்திருக்க வாய்ப்புக் குறைவு என்று தான் எண்ணுகிறேன்.

இந்த நீலாம்பரி வேறு யாருமல்ல. இலங்கையின் முதலாவது மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாளின் புதல்வியே தான்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள் இறுதியாக இந்த மாகாண சபை முறைமை எந்தப் பயனும் அற்றது என்று கூறி தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியவர்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் இருக்காமல் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழ்ந்து வந்தவர்.

அதன் போது வரதராஜப் பெருமாளுடைய குடும்பத்தினரும் அவருடன் கூடப் புலம் பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு குழந்தையாகவே இலங்கையை விட்டுப் புலம் பெயர்ந்த நீலாம்பரி இன்று சமூக ஆர்வலராகவும் ஒரு கலைஞராகவும் பரிணமித்திருக்கிறார்.

மூலம்: My link

Edited by நிழலி

  • தொடங்கியவர்

அன்பான நீலாம்பரிக்கு,

நீ நலமா...நான் இன்னும் நலமில்லை

உன் தந்தையின் கொலைகார ஏஜென்டுகளால் என் நண்பன் யாழ்ப்பாணத்தில் என் கண்முன்னே இந்திய ஏவல் நாய்களின் முன் கொல்லப்பட்ட காட்சி இன்னும் என் கண் முன் நிற்கின்றது

என் பாடசாலை Prefect அகிலன் கொடூரமாக கொல்லப்பட்டு அவரை Mortuary யில் சுட சுட இரத்தம் வழிய பார்த்த போது நாசியினுள் ஏறிய இரத்த நெடி இன்னும் காயாமல் மனதில் உள்ளது

நீ நலமா...நான் இன்னும் நலமில்லை

என் கண்முன்னே இழுத்து சென்று கட்டாய இராணுவ படையில் (தமிழ் தேசிய இராணுவம்) சேர்க்கப் பட்ட என் நண்பன் சோமியை அவன் தாய் நா உலர சாகும் வரை தேடியும் கிடைக்க வில்லை.. தேடித் தருவாயா

நீ நலமா...நான் இன்னும் நலமில்லை

நீ பரத நாட்டியம் ஆடுவாயாம்.. செய்திகள் சொல்கின்றன...பாரதம் ஆடிய ஆட்டத்திற்கு உன் தந்தை எம் இனம் கொன்ற கதையையும் நாளை ஆடுவாயா? கிருஷ்ணனின் லீயை ஆடும் அதே கால்கள் உன் தந்தையின் லீலைகளையும் ஆடுமா?

:நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரகாசனின் மகளும்(தந்தை செல்வ நாயகத்தின் பேர்த்தி)'வானம் வசப்படும்' படத்தில் நடித்திருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் கருணா, பிள்ளையானின் பிள்ளைகளும் இந்தியா திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பினம் போல கிடக்கிறதே.

என் பாடசாலை Prefect அகிலன் கொடூரமாக கொல்லப்பட்டு அவரை Mortuary யில் சுட சுட இரத்தம் வழிய பார்த்த போது நாசியினுள் ஏறிய இரத்த நெடி இன்னும் காயாமல் மனதில் உள்ளது

முரசொலிப் பத்திரிகையில் வந்த செய்தி காரணமாக முரசொலி ஆசிரியரின் மகன் அகிலனைக் கொன்று விட்டார்கள். கல்வியில் நன்றாகப் படிக்கக் கூடியவர்.

முரசொலிப் பத்திரிகையில் வந்த செய்தி காரணமாக முரசொலி ஆசிரியரின் மகன் அகிலனைக் கொன்று விட்டார்கள். கல்வியில் நன்றாகப் படிக்கக் கூடியவர்.

அகிலன் அண்ணா கல்வியில் மட்டுமல்ல, கிறிக்கட் விளையாட்டிலும் யாழ் மாவட்டத்தில் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர். ஒரு 18 வயது நிரம்பிய ஆளுமையுள்ள ஒரு இளைஞனை முளையிலேயே கிள்ளி எறிந்த கயவர் கூட்டத்தின் தலைவன் ஒருவனுடைய மகள். இந்த சதிகாரக் கூட்டத்தினால் ஒரு அகிலன் மட்டுமல்ல பல அகிலன்கள் கருவறுக்கப்பட்டுள்ளார்கள்.

நீலாம்பரி மன்னித்துவிடுங்கள். உங்கள் பெருமையிலும் புகழிலும் பங்குகொள்ள நாங்கள் தயாராக இல்லை.

புலத்தில இருக்கிர நாங்கள் இவரை அழைத்து கலை விருந்து வைச்சாலும் வைப்போம் .

நடிகைமார் என்றால் எங்களுக்கு ஒரு இது தானே.மகிந்தா செய்த அட்டுழியத்தையே மறந்து போய் வாக்கு போடப்போரம்.வரதர் 20 வருடத்திற்கு முதல் செய்ததை மறந்தால் போச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

neelambari9.jpg

neelambari2.jpg

neelambari8.jpg

விடியப்பறமே புல்லரிக்குது (8.14)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வயதுபோட்டுது....... புல்லரிப்போடு சரி.

இப்போதுதான் வயதுக்கு வந்த எங்களுக்கு....? அந்த வயதை கடந்து வந்தவர்தானே நீங்கள் அதை எழுத தேவையில்லை?

இந்த அன்ரியை திரும்ப கூட்டிகொண்டுபோய் தமிழர்தரப்பு பிரதிநிதியாக்கி வடக்குகிழக்கில மகிந்தஐயாவுக்கு சார்பா தேர்தலில் நிப்பாட்ட முடியாதோ?

நாங்கள் விடுமுறையில போயெண்டாலும் ஒருக்கா வாக்க குத்திவிடுவோமே?

ஏர்போட்டில் இறங்கினவுடன் பாஸ்போட்டில் ஒரு குத்து

வெளியில போய் அவாவின்ர சின்னத்தில ஒரு குத்து

அப்பிடியே ஏறி வந்துடுவிமில்ல....

வரதராஜபெருமாள பார்த்தால் ஒரு கோனி மாதிரி இருக்கிறார்........ இவா நிமிந்து நிற்க்கிறா? றோ காரரின் பால குடிச்சு வளாந்;தவாவோ?

பார்க்கவே சாக்லேட்டில செய்த "றோ"போ மாதிரியிருக்கு அதுதான் கேட்டனான்

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளத் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளைக் கையாண்டு வருவதாகவே நீலாம்பரி கருதுகிறார். அதனால் இது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்கிறார் அவர். மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்களும் நெறியாளர்களும் தமது பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்கும் சிறந்த திரைப்படங்களை உருவாக்கவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் கருதுகிறார்.

neelambari2.jpg

விடியப்பறமே புல்லரிக்குது (8.14)

மலையாளப் படம் என்றால் , நீலப் படமா ?

ஐயோ ..... எனக்கும் புல்லரிக்குதப்பா ......

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் நிழலி அவர்கடகு,

நெத்திப்பொட்டில் அடித்ததுபோல் சொற்பிரயோகங்கள். நவீன உலகின் அதிநவீன துப்பாக்கியால் கச்சிதமாகக் குறிபார்த்துச் சுட்டாலும் வாசிப்பவர்களது மூளையில் இத்தனை சிலர்pப்பினை ஏற்படுத்தாது. சிலவேளை, உங்களின் பதிவினை வேறுயாராவது வாசித்தால் நான் பெறுகின்ற உணர்வினைப் பெறுவார்களா எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காலத்தின் வலியினையும் அதைத்தொடர்நது வந்த வலிகளையும் உங்ளைப் போலவே நானும் அனபவித்தவன் அதனாலோ என்னவோ உங்கள் கருத்துக்கள் எனது உணர்வகளடன் ஒத்துப்போகின்றன. ஆகவே நான் இக்கருத்தினிற்கு ஆமேன் சொல்வதனால் எனது கருத்தாகவும் பதிவுசெய்துகொள்கிறேன். மேலும் ஒரு விடையம், என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா ஒரு துரோகியை விமர்சிக்கும்போதுகூட உன்னதாமான சொல்லாடல்கள் பிறக்கின்றன.

அன்பான நீலாம்பரிக்கு,

நீ நலமா...நான் இன்னும் நலமில்லை

உன் தந்தையின் கொலைகார ஏஜென்டுகளால் என் நண்பன் யாழ்ப்பாணத்தில் என் கண்முன்னே இந்திய ஏவல் நாய்களின் முன் கொல்லப்பட்ட காட்சி இன்னும் என் கண் முன் நிற்கின்றது

என் பாடசாலை Prefect அகிலன் கொடூரமாக கொல்லப்பட்டு அவரை Mortuary யில் சுட சுட இரத்தம் வழிய பார்த்த போது நாசியினுள் ஏறிய இரத்த நெடி இன்னும் காயாமல் மனதில் உள்ளது

நீ நலமா...நான் இன்னும் நலமில்லை

என் கண்முன்னே இழுத்து சென்று கட்டாய இராணுவ படையில் (தமிழ் தேசிய இராணுவம்) சேர்க்கப் பட்ட என் நண்பன் சோமியை அவன் தாய் நா உலர சாகும் வரை தேடியும் கிடைக்க வில்லை.. தேடித் தருவாயா

நீ நலமா...நான் இன்னும் நலமில்லை

நீ பரத நாட்டியம் ஆடுவாயாம்.. செய்திகள் சொல்கின்றன...பாரதம் ஆடிய ஆட்டத்திற்கு உன் தந்தை எம் இனம் கொன்ற கதையையும் நாளை ஆடுவாயா? கிருஷ்ணனின் லீயை ஆடும் அதே கால்கள் உன் தந்தையின் லீலைகளையும் ஆடுமா?

:நிழலி

மிகவும் நாகரீகமான, சிறப்பான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

உது பொம்பளை புள்ளையே எனக்கு பார்த்த கப்பலில் பாவிக்கிற பொம்மை மாதிரி இருக்கு [ஏன் ,எதற்கு என்ற கேள்விகள் கேட்க கூடாது] :lol:

என்னைய்யா ஆம்பிளைக்கு பொம்பிளை வேசம் போட்ட மாதிரி இருக்கு

இது போசமால் அரவாணியாக நடிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் எல்லாம் காலம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1983ம் ஆண்டு வடக்கிலே 13 இராணுவத்தை கொன்றதிற்காக கொழும்பிலே எனக்கு அடித்தார்கள்.

அது எனக்கு சரியெனப்படவில்லை.

அண்ணன் விட்ட பிழைக்காக தம்பியை உதைப்பதும் மகன் விட்ட தவறுக்காக தாயை எரிப்பதும் நல்லதாகப்படவில்லை.

தகப்பன் விட்ட தவறுக்காக தகப்பனை தண்டிப்பதை பரவாயில்லை எனச் சொன்னாலும் அதற்காக பிள்ளைகளை தண்டிப்பது நல்லதல்ல.

யோசித்து பாருங்கள்! எனது தந்தை குடித்துவிட்டு ரோட்டிலே விழுந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும். (அத்துடன் எனது வயது 3 ஆக இருந்தால்?)

சிறிதளவு கருணை இருப்பது எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லது.

அன்புடன் அகதி

உங்கள் தந்தை குடித்து விட்டு ரோட்டில் விழுந்தால் அது செய்தி அல்ல. அதற்காக உங்களுக்கு அடித்தாலும் அது செய்தி அல்ல. ஏனெனில் எம்மைப் பற்றி, எம்மைப் போன்ற தனிநபர்களைப் பற்றி பொது சனம் எவரும் அக்கறை கொள்ளப் போவதில்லை.

ஆனால், வரதராஜப் பெருமாள் பொது மகன் அல்ல. அப்படி அவர் இருந்திருந்தால், ஒரு ஈழப் பெண் நடிகை ஆனார் என்ற ரீதியில்தான் வந்திருக்கும். ஆனால் வரதராஜப் பெருமாளின் மகள் என்பதால் தான் இந்தப் பெண் விசேட கவனிப்பிற்கு உரியவராகின்றார். அதனால் தான் அது செய்தியாகின்றது. அதுவும் ஒரு விதமான அனுதாபத்தை தரக்கூடிய விதமாகத் தான் இந்த செய்தியை சம்பந்தப் பட்ட இணையம் வெளியிட்டும் இருந்தது. தந்தையின் தவறுக்கு மகளை தண்டிப்பது தவறுதான், ஆனால் அதே தந்தையின் 'செல்வாக்கை' தன் ஒளிவட்டமாக கருதும் ஒருவரிடம் கேள்விகளை முன் வைப்பது தவறு அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

என்னைய்யா ஆம்பிளைக்கு பொம்பிளை வேசம் போட்ட மாதிரி இருக்கு

இது போசமால் அரவாணியாக நடிக்கலாம்

உங்களூக்கு அந்த பெண்ணையோ அல்லது பெண்ணீன் அழகையோ விமர்சிக்க விருப்பம் என்றால் விமர்சியுங்கள் ஆனால் தேவையில்லாமல் ஒரு பிறப்பை விமர்சிக்காதீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1983ம் ஆண்டு வடக்கிலே 13 இராணுவத்தை கொன்றதிற்காக கொழும்பிலே எனக்கு அடித்தார்கள்.

அது எனக்கு சரியெனப்படவில்லை.

அண்ணன் விட்ட பிழைக்காக தம்பியை உதைப்பதும் மகன் விட்ட தவறுக்காக தாயை எரிப்பதும் நல்லதாகப்படவில்லை.

தகப்பன் விட்ட தவறுக்காக தகப்பனை தண்டிப்பதை பரவாயில்லை எனச் சொன்னாலும் அதற்காக பிள்ளைகளை தண்டிப்பது நல்லதல்ல.

யோசித்து பாருங்கள்! எனது தந்தை குடித்துவிட்டு ரோட்டிலே விழுந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும். (அத்துடன் எனது வயது 3 ஆக இருந்தால்?)

சிறிதளவு கருணை இருப்பது எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லது.

அன்புடன் அகதி

வணக்கம் அகதி!

உங்கள் கருத்து இங்கே பலருக்கு நெத்தியடியாக இருக்கும்.

அதுசரி

தாய்தேப்பன் விட்ட பிழைக்கு பிள்ளையை நொந்து என்னபலன்

கிழவிக்கு டிங்கர் வேலை செய்து பெயின்ற் அடித்த மாதிரி கிடக்கு. :lol::wub::):D ரதிக்கு இப்ப என்னவாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.