Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25,000 சீனர்கள் வட கிழக்கில் ,கேள்விக் குறியாகும் இந்தியாவின் தென்மண்டலப் பாதுகாப்பு

Featured Replies

யோவ் வசம்பு சீனக்காரன் புணரமைப்பு வேலைகளில் அதிகம் ஈடுபடுவதை கண்டேன் இங்கு .அவர்கள் வீதி புணரனைப்பு ,துறைமுக வேலைப்பாடுகளிலும் கனரக வாகனம் ஓட்டுவதையும் கண்டேன் அதைதான் சொல்லவந்தேன் :D:lol:

:oஆ(சாமி) நானும் புணரமைப்பு வேலைகளில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பாட்டால், நீங்கள் உங்கள் பாணியிலேயே அதைச் சரி செய்து விடுவீர்களென்பதைத் தான் சொன்னேனுங்கோ...... :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தகவல் முழுக்க முழுக்க தவறானது. சக இயக்க படுகொலைகளை ஆரம்பித்து வைத்ததும் தனிநபர் கொலைகளை ஆரம்பித்து வைத்ததும் புலிகளே. சுந்தரம் படுகொலை, அளவெட்டி படுகொலைகள் முதல் துரையப்பா கொலையென அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போது இந்தியாவோ, இந்திய உளவுப்படையோ எங்கு வந்தது. அது போல் சிங்கள அரசுடன் முதன் முதலில் கைகோர்த்ததும் விடுதலைப்புலிகளே. பிரேமதாசா காலத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்த விடுதலைப்புலிகள், அப்போது நினைத்திருந்தால்க் கூட பிரேமதாசாவுடன் இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து ஒரு முடிவை எட்டியிருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டவே இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்தனர்.

ஆழ்ந்த வாந்தி............. வதந்தி. திட்டமிடபட்டு காலநேரம் மறகை;கபட்டதோடு............ ஏதோ மற்றஎல்லோரும் இராணுவமுகாம் தகர்ப்பில் கண்ணும்கருத்துமாய் இருக்க புலிகள் செய்துவிட்டார்போன்ற பரோட்டா வாந்தி.

துரையப்பாவின் கொலை தமிழ்ஈழ விடுதலைபாதையில் எவ்வளவு முக்கியமானது என்பது. அதை நேரடியாக செய்தோராலேயே தெளிவாக சில புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதபட்டுள்ளன.

தெளிவதற்கு தெளிவுவேண்டுமல்லவா? அதற்கு அவர் பொறுப்பாளிகள் அல்ல.

புலிகள் தொன்றுதொட்டே சொல்லிவந்தார்கள். "தமிழுழத்திற்கு தடையான அனைத்தையும் உடைப்போம்" சுதந்திர தழிழ்ஈழமே எமது தாகம். எமது இறுதிமூச்சு உள்ளவரை எமது தாகம் இதுதான்.

சிதம்பரமும் கரம்பரமும்................ காட்டிகொடுப்பிலும் துரோகத்திலும் ஈடுபட்டால்....? அதற்கு அவர்களா பொறுப்பாளிகள்.

இதிலும்விட சிங்களவங்கள் எடுப்பதுபோல் நேராகவே மீன்ரொட்டி வாந்தியை எடுத்துவிட்டிருக்கலாம்............. புலிகள் 250000 மக்களை கொன்றார்கள் என்று!

நன்றி சூறாவளி தங்கள் கருத்திற்கு. இங்கே தவறான கருத்துகளைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். இங்கே பிழை செய்யாதவர்களென்று எவரும் கிடையாது. அதற்காக ஒருவரின் தவறை தவறென்பதும், அடுத்தவரின் தவறை நியாயப்படுத்துவதும் கூட தவறானதே. கடந்த காலங்களில் நடந்த தவறுகளை எல்லோரும் திருத்திக் கொண்டு, எனியாவது அந்த மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டியதே தற்போதைய தேவை.

இது சூப்பர்! நன்றி!

ஆனால் உங்களின் மேலே உள்ள கருத்து இந்த கருத்தோடு கொஞ்சமும் தொடர்பில்லாது உள்ளதே?

அங்கே ஒரு சாரர்தானே பந்தாடுபடுகின்றார்கள்.

மருதங்கேணி,

களத்தில் கொஞ்சம் நாகரீகமாகக் கருத்தாடப் பாரும். எந்தப் பக்கம் போனாலும் மலம் அள்ளுவது வாந்தி எடுப்பது என்பன தவிர்ந்து தங்களால் கருத்து எழுத முடிவதில்லை. ஒருவேளை உமது தொழில் சார்ந்து கருத்தெழுதுகின்றீரோ என்னவோ?? ஒன்றில் பொய்யையும் புரட்டையும் எழுதுகின்றீர். முடியாவிட்டால் உமது தொழில் சார்ந்து எழுதுகின்றீர். இப்படியான கருத்துகளால் உம்மால் மற்றவர்களைக் கேவலப்படுத்த முடியாது. அண்ணாந்து துப்பி நீர் துப்பியதை நீரே தான் உள்வாங்கிக் கொள்கின்றீர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தகவல் முழுக்க முழுக்க தவறானது. சக இயக்க படுகொலைகளை ஆரம்பித்து வைத்ததும் தனிநபர் கொலைகளை ஆரம்பித்து வைத்ததும் புலிகளே. சுந்தரம் படுகொலை, அளவெட்டி படுகொலைகள் முதல் துரையப்பா கொலையென அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போது இந்தியாவோ, இந்திய உளவுப்படையோ எங்கு வந்தது. அது போல் சிங்கள அரசுடன் முதன் முதலில் கைகோர்த்ததும் விடுதலைப்புலிகளே. பிரேமதாசா காலத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்த விடுதலைப்புலிகள், அப்போது நினைத்திருந்தால்க் கூட பிரேமதாசாவுடன் இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து ஒரு முடிவை எட்டியிருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டவே இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்தனர்.

ஹட்டன் நகரத்தில் சந்திரசேகரனது பிரச்சாரக் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எப்.பினது பிரசாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு வடக்கு கிழக்கு முதலமைச்சர் என்ற பந்தாவுடன் மெய்காவற்படை, கூலிப்படை சகிதம் வரதராஜப்பெருமாள் வந்திருந்தார். அவரைப் பார்க்கவென்று ஓரளவு கூட்டம் கூடியிருந்தது. வசந்தனும், சந்திரனும் கூட அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். அவர்கள் அங்கே செல்லும் போது புளொட்டில் இருந்த வேறு இருவரை அவர்கள் பார்த்தார்கள். ஒருவர் புளொட்டின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ஈஸ்வரன், மற்றவர் வசந்தனுக்கு சமகாலத்தில் பயிற்சி பெற்ற முகுந்தன் என்பவர். இருவரும் நீண்ட காலத்திற்கு முன்பே புளொட்டை விட்டு விலகி ஒதுங்கியிருந்தார்கள்.

ஈஸ்வரன் பல மாதங்களாகவே கொட்டகலை பகுதியில் தங்கியிருந்து ரியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். முகுந்தன் ஏன் மலையகத்திற்கு வந்தான் என்பது தெரியாது. ஆனால் வசந்தனுக்கும், சந்திரனுக்கும் சிந்தனை வேறு திசையில் சென்றது. அதாவது அவர்கள் இருவரும் சங்கிலியையும், உமாமகேஸ்வரனையும் கொல்லவே (அப்போதுதான்) மலையகம் வந்திருப்பதாக கதைகட்டிவிட்டு உமாமகேஸ்வரனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொல்லி தாங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக நம்பவைத்து அவரைக் கொன்றுவிடலாம் என்றும் பழியை அவர்கள் இருவர் மீதும் போட்டுவிடலாம் என்றும் அவர்கள் திட்டமிட்டனர்.

உமாமகேஸ்வரனுடன் ராபின் மட்டுமே கொழும்பிலிருந்து வந்திருந்தான். ஏற்கனவே சங்கிலியுடன் பாதுகாப்புப் பணிக்கென்று அவனையும் சேர்த்து மூவர் மட்டுமே இருந்தனர்.

எனவே, ஈஸ்வரனையும், முகுந்தனையும் கொலை செய்ய வேண்டும் என்று உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் வகையில் எடுத்துச் சொல்லுவது சங்கிலியையும் அவனுடன் இருந்த மற்ற இருவரையும் அதைச் செய்து முடிக்கும் வேலைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவது உமாமகேஸ்வரனுக்கு ராபினுடன் சேர்ந்து தாங்களும் பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்று சொல்லி உடனிருந்து அவரையும் ராபினையும் கொலை செய்வது என்பது அவர்கள் திட்டமாக இருந்தது.

எனவே உடனேயே அவர்கள் அவசரஅவசரமாக தலவாக்கலவுக்குத் திரும்பி சந்திரசேகரனது தேர்தல் அலுவலகமான பஞ்சலிங்கம் ஸ்டோரில் வந்து உமாமகேஸ்வரனையும், சங்கிலியையும் தேடினார்கள்.

சங்கிலி அவர்கள் இருவரையும் இரகசியமாக பிடித்து தட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஜே.வி.பி. பயிற்சி முகாம் பகுதிக்குச் சென்று விட்டான். மற்றவர்களை கதிரவன்(திவாகரன்) பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை கவனி;க்க அழைத்துச் சென்றுவிட்டார்.

அங்கு யாரையும் காணாத நிலையில் அவர்கள் அங்கிருந்த சந்திரசேகரனின் உதவியாளரான ராஜாவிடம் உமாமகேஸ்வரனும் சிவாவும் (சங்கிலியின் மலையகப் பெயர் அவன்தான் சங்கிலி என்பது யாருக்கும் தெரியாது) எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியுமா? என்று அவர்கள் கேட்டனர்.

தங்களது கூட்டங்களுக்கு பாதுகாப்புக்கு வந்தவர்கள் என்ற வகையில் மட்டுமே அவர்களைப் பற்றி அறிந்திருந்த ராஜா சிவா எங்கே போனார் என்று தெரியாது. உமா நேற்றே கொழும்புக்கு போய்விட்டதாக சிவா சொன்னாரே உங்களுக்குத் தெரியாதா? என்றார்.

அவர்களுக்குப் பேரதிர்ச்சியாகப் போய்விட்டது. அடே எல்லாப் பிளானும் வீணாப் போச்சு என்று சலித்துக் கொண்டனர். தங்களது திட்டம் தெரிந்துதான் அவர் கொழும்புக்கு போனார் என்று சிந்திக்க அவர்களது அறிவுக்குத் தோன்றவில்லை.

இனி மலையகத்தில் நின்று பிரயோசனம் இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு சங்கிலி அல்லது கதிரவன் வந்தால் தாங்கள் கொழும்புக்குப் போவதாக சொல்லும்படி சொல்லிவிட்டு பஸ் ஏறினார்கள்.

ஈஸ்வரனும், முகுந்தனும் உமாவை தட்ட காத்திருந்த செய்தியை அவசரமாக தெரிவிக்க வந்தவர்களைப் போல அவர்கள் கொழும்பு அலுவலகத்திற்கு சென்றார்கள்.

அவர்கள் அங்கு வந்திருந்த செய்தியையும், கொண்டு வந்த செய்தியையும் ராபின் மூலமாக அறிந்த உமாமகேஸ்வரனுக்கு தான் சொன்ன வேலையை ஒழுங்காக செய்யாமல் தப்பிவிட்டதற்காக சங்கிலி மீது கோபம் ஏற்பட்டது. உடனடியாகவே தொலைத்தொடர்பு நிலையம் மூலமாக (கொழும்புக்கும், மலையகத்திற்கும் தனியாகத் தொலைத் தொடர்பு நிலையம் புளொட்டிற்கு இருந்தது) சங்கிலியுடன் தொடர்பு கொண்டு அவனை வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார். அவன் தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த நேரத்தில் நீங்கள் இங்கே இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் உங்கே வந்துவிட்டார்கள். அவர்களைத் தந்திரமாக இங்கே திரும்பி அனுப்பி வையுங்கள் என்று உமாவுக்குச் சொன்னான்

உமாமகேஸ்வரனுக்கு அவர்களை மீண்டும் அங்கே திரும்பி அனுப்ப ஏனோ மனம் இடந்தரவில்லை. சங்கிலி கோபத்தில் ஏதாவது ஏடாகூடமாக செய்து முடித்தால் மலையக வேலைகள் பாழாகிப் போய்விடுவதோடு சங்கிலியும் மாட்டுப்பட நேரும் என அவர் பயந்தார். எனவே உடனேயே அவர்கள் இருவரும் மலையகத்திலிருந்து கதிரவனிடம் சொல்லாமல் திரும்பி வந்தது தவறு என்றும் அதற்கான விளக்கத்தை எழுதி கொழும்பு அலுவலகப் பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டு முள்ளிக்குளம் முகாமுக்கு உடனடியாக திரும்பிப் போகும்படி கடிதம் எழுதி அனுப்பினார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வசந்தனுக்கும், சந்திரனுக்கும் தாங்கள் சொன்ன ஈஸ்வரன் கதையை உமாமகேஸ்வரன் நம்பவில்லை என்று தெரிந்தது. எனவே அவர் எழுதியுள்ளபடி முகாமுக்குச் சென்று வேறொரு சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து உள்ளுக்குள் இருந்தே அவரை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணினார்கள். முகாமுக்குச் செல்லாமல் கொழும்பில் நின்றால் நிச்சயமாக அவருக்கு தங்கள் மேல் சந்தேகம் வரும் என்று அவர்கள் பயந்தார்கள்.

வசந்தனைப் பொறுத்தவரை தன்னுடைய திட்டம் இன்னமும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். தான் தமிழகம் சென்று திரும்பிய விடயம் கூட அவருக்குத் தெரியாது என்றே அவன் நினைத்திருந்தான். அவர் சொல்லியபடிதான் இரகசியமாக யாழ்ப்பாணம் போனதாகவும் அங்கே புலிகளுக்கு தெரியாமல் பல இடங்களுக்குச் சென்று புளொட்டின் முன்னாள் ஆதரவாளர்களைச் சந்தித்து தேர்தலில் DPLFகுக்கு வோட்டுப் போடும்படி கேட்டுக் கொண்டதாகவும் கதையளந்திருந்தான்.

உமாமகேஸ்வரன் இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதவர் போல நடந்து கொண்டார். வசந்தன் விடயத்தை அவர் கையாண்ட விதம் என்பது அவரது 80களின் தொடக்க கால நடவடிக்கைகளுக்கும், இறுதி கால நடவடிக்கைகளுக்குமுள்ள வேறுபாட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

80களின் நடுப்பகுதிவரை அதாவது பின்தளக்காலத்தில் உமாமகேஸ்வரனுக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால் தனிப்பட்ட முறையில் ஒருவர் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்று தெரிந்துவிட்டால் அவரை நீண்ட காலம் உயிரோடு விட்டுவைக்க. அவர் விரும்பவில்லை. (உ-ம் சந்ததியார், சிவனேஸ்வரன் கொலைகள்) இதை சிலர் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பலவீனம் என்று சொல்லுவார்கள். சிலர் இது அராஜகம் என்று சொல்வதுண்டு. அவரது விசுவாசிகளே இது தலைமைத்துவத்துக்குரிய சாணக்கியம் என்று வாக்காலத்து வாங்குவதுண்டு. எது எப்படியோ பிள்தளக் காலத்தில் உமாமகேஸ்வரனது மறுபக்கம் என்பது இப்படித்தான் இருந்தது.

இந்த மறுபக்கத்தை பயன்படுத்தத் தெரிந்து கொண்ட குடாநாட்டு பயில்வான்கள் கூட்டம் (புளொட்டுக்குள் இருந்த) உமாமகேஸ்வரனுக்காக உமாமகேஸ்வரன் பெயரால் உமாமகேஸ்வரன் சொன்னதாக சொல்லிக் கொண்டு பல திருவிளையாடல்களை நடத்தினர். சுழிபுரம் கொலைகள் முதற்கொண்டு ஒரத்த நாட்டு (தமிழ் நாடு) புதைகுழிகள் வரை அதில் அடக்கம். இதில் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டது10 என்றால் செய்யப்பட்டது 100.

தான் சைட் அடித்த தமிழ்நாட்டுப் பெண்ணை தனக்குக் கீழே இருந்த ஒருவன் காதலித்துவிட்டான் என்பதற்காகவே அவனைப் புலிகளின் உளவாளி என்று முத்திரை குத்தி உமாமகேஸ்வரனின் உத்தரவு என்ற பெயரில் ஒரத்த நாட்டு சவுக்கு மரத்திற்கு உரமாக்கிய சம்பவம் மக்கள் யுத்தத்தின் மகத்தான வரலாறு.

உமாமகேஸ்வரன் தன்னுடைய தவறுகளுக்கு அந்தப் பயில்வான்கள் கூட்டத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தன்னுடைய பெயரால் அந்தப் பயில்வான்கள் செய்த தவறுகளை அவர் தட்டிக் கேட்க முடியாமல் போனார். அதன்மூலம் அந்தத் தவறுகளுக்கு அவரே காரணகார்தாவாகவும் ஆனார்.

80களின் பிற்பகுதியில் புளொட்டில் ஏற்பட்ட உடைவைத் தொடர்ந்து வந்த தோல்விகள், புளொட்டின் சீரழிவுத் தன்மை இவையெல்லாம் உமாமகேஸ்வரனை முழுமையாக மாற்றிவிட்டது என்று சொல்லா விட்டாலும் கொஞ்சம் மாற்றியது. எதிராளிகளை அவர் விட்டுப்பிடிக்க ஆரம்பித்தார். பயில்வான்கள் சுயமுடிவுகள் எடுப்பதை இயன்றவரை தவிர்க்க முயற்சித்தார்.

http://sivasinnapodi1955.blogspot.com/2008/09/20.html

நுணாவிலான்,

உமாமகேஸ்வரன் ஏதோ உத்தமர் என்று நான் குறிப்பிட்டேனா?? நான் எழுதிய கருத்திற்கும் நீங்கள் இணைத்திருக்கும் உமாமகேஸ்வரன் பற்றிய செய்திக்கும் எந்த விதத்தில் நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்கள். படுகொலைகளை யார் ஆரம்பித்தார்கள் என்ற தங்களின் தவறான கருத்தைத் தான் நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,

உமாமகேஸ்வரன் ஏதோ உத்தமர் என்று நான் குறிப்பிட்டேனா?? நான் எழுதிய கருத்திற்கும் நீங்கள் இணைத்திருக்கும் உமாமகேஸ்வரன் பற்றிய செய்திக்கும் எந்த விதத்தில் நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்கள். படுகொலைகளை யார் ஆரம்பித்தார்கள் என்ற தங்களின் தவறான கருத்தைத் தான் நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.

நாகரீகமான கருத்துகளை முன்வைத்துவிட்டு நாகரீகமான பதில்களை எதிர்பார்க்கவும்.

இலங்கையில் மரதண்டனை என்பது எப்போதோ சட்டத்திலேயே உள்ளது. படுகொலை என்பது வேறு மரதண்டனை என்பது வேறு.

வாந்திகளை எடுப்பவர்கள் எடுத்தகொண்டே இருக்க வேண்டும்...........

நாம்வாசித்துகொண்டே இருக்க வேண்டும்?

இரண்டையும் குழைத்து எல்லா உண்மைகளையும் புதைத்து உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் பரோட்டா போடலாம். நாங்கள் அதே பரோட்டாவை கொஞ்சம் சூடாக்கி திருப்பிதரும்போதுதான் சுடுகின்றதா?

என்ன அண்னே போகிற போக்கில் நாகரீகத்தின் அர்த்தத்தையே மாற்றிவிடுவீங்கள்போல.....?

நாகரீகமான கருத்துகளை முன்வைத்துவிட்டு நாகரீகமான பதில்களை எதிர்பார்க்கவும்.

இலங்கையில் மரதண்டனை என்பது எப்போதோ சட்டத்திலேயே உள்ளது. படுகொலை என்பது வேறு மரதண்டனை என்பது வேறு.

உண்மை தான் நாகரீகம் தெரிந்தவர்களிடம் நாகரீகத்தை எதிர் பார்க்கலாம், அடுத்தவர்களிடம் எதிர் பார்ப்பது தவறு தான். மரண தண்டனை என்பது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசிலுள்ள நீதிமன்றங்களால் நிறைவேற்றப்படுவது. இதனை உம்மை போன்றவர்கள் முட்டாள்த் தனமாக (உமது பாணியில் வாந்தி) எழுத வெளிக்கிட்டால் சிங்கள அரசும், தாம் தமிழர்களைக் கொன்றதை நியாயப்படுத்தத் தான் உதவும். முட்டாள்த் தனமான கருத்துகளால் அனைத்துப் பக்கங்களையும், நகைச்சுவைப் பகுதியாகவோ அல்லது சாக்கடையாகவோ மாற்ற முயற்சிக்கின்றீரா?? :D:lol:

இந்தத் தகவல் முழுக்க முழுக்க தவறானது. சக இயக்க படுகொலைகளை ஆரம்பித்து வைத்ததும் தனிநபர் கொலைகளை ஆரம்பித்து வைத்ததும் புலிகளே. சுந்தரம் படுகொலை, அளவெட்டி படுகொலைகள் முதல் துரையப்பா கொலையென அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போது இந்தியாவோ, இந்திய உளவுப்படையோ எங்கு வந்தது. அது போல் சிங்கள அரசுடன் முதன் முதலில் கைகோர்த்ததும் விடுதலைப்புலிகளே. பிரேமதாசா காலத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்த விடுதலைப்புலிகள், அப்போது நினைத்திருந்தால்க் கூட பிரேமதாசாவுடன் இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து ஒரு முடிவை எட்டியிருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டவே இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்தனர்.

அளவெட்டி இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோரை

படுகொலை செய்தது புளொட் நீங்கள் எல்லாவற்றையும்

புலிகளின்ர தலையில போட்டிருவீங்க போலக்கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வீரமும் துரோகமும் எங்களுக்குத் தேவையற்ற ஒரு கட்டுக்கதை

Posted by admin | Posted in முகப்பு | Posted on 02-10-2009 0

(கற்சுறா)

2009 மே18 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக இலங்கை அரசால் அழித்தொழிக்கப்பட்டபின் அங்கு தோன்றியிருக்கும் அரசியல் மாற்றம் என்பது சிறிதளவேனும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறதா என்று நாம் கணக்கிடவேண்டும். நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் ஈழத்து மக்கள் தாம் எவராலும் கணக்கெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு இந்தத் தேர்தலை முடிந்தளவு புறக்கணித்துள்ளார்கள்.

மக்களால் தேர்தல் புறக்கணிக்கப்பட்ட அளவுக்கு கூட மக்கள் மீது அக்கறை கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்க்கட்சிகளால் புறக்கணிக்க முடியவில்லை. நடந்து முடிந்த பேரழிவைக் கணக்கிலெடுக்காது தேர்தலில் பங்குபற்றியதை விடவும் கீழ்தரமாக தமக்குள் மோதிக் கொண்டன. நீண்டகாலத்தின் பின் தோர்தல் வாக்குறுதிகளும் மற்றவர்களைத் துரோகிககள் என்ற மேடைப் பேச்சுக்களுமாக அத்தனை தமிழ்க்கட்சிகளும் இந்தத் தேர்தல் ஊடாக மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற முயற்சித்தன என்பதே உண்மை. கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக பாசிசச் சூழலுக்குள் மாறிமாறி பந்தாடப்பட்ட மக்கள் இன்று யுத்தம் தின்று துப்பிய சக்கைகளாய் முகாம்களுக்குள் இழந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 25வருடங்களாக துரோகிகளாகவும் எட்டப்பர்களாகவும் தமிழ்மக்களுக்கு விடுதலைப்புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட மாற்று இயக்கங்கள் எனப் பெயரெடுத்த அனைத்து ஈழவிடுதலை இயக்கங்களும் தற்போது “மிக முனைப்போடு” இயங்கத் தொடங்கியிருக்கின்றன. 1980களில் தமிழ் மக்களிடத்தில் மிகத்தீவிரமாக தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்தபோதும் விடுதலைப்புலிகளது ஏக இராணுவக் கொள்கை அவர்களைத் தமிழ் மக்களிடத்திலிருந்து அந்நியப்படுத்தியது. விடுதலைப்புலிகளது கட்டுப்பாடற்ற பகுதிகளில் தம்மைத் தக்கவைத்துக் கொண்ட போதும் இந்த மாற்று இயக்கங்கள் அவ்வளவு எளிதாக மக்களை அணுக முடியவில்லை.

1970களின் பிற்பகுதியில் தமிழ் மக்களது விடுதலையை முன்நிறுத்தித் தொடங்கப்பட்ட இயக்கங்கள் 1980களில் பல பிரிவுகளைக் கொண்டதாக மாறியது வரலாறு. இந்த வகைப் பிரிவுகள் ஒவ்வொன்றும் மிகச்சாதாரணமாக தமக்குள் மோதிக்கொள்ளும் வகையில் பிரச்சனைகளைக் கொண்டிருந்தன. தமது பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழீழம் என்று பெயரிட்ட அத்தனை இயக்கங்களும் ஒருவரை ஒருவர் அழித்துவிடும் எண்ணத்திலேயே தமது வேலைத்திட்டங்களை அப்போது வைத்திருந்தனர்.

1986ம் ஆண்டு பல ஆயிரம் ரெலோவின் போராளிகளுடன் தலைவர் சிறீ சபாரத்தினத்தை கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கையிற்குள் வைத்து புலிகளால் சுட்டு வீழ்தப்பட்டதில் நிறுத்தப்பட்டது ரெலோவின் செயற்பாடு. அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஈழத்தில் விடுதலைப்புலிகளால் ஈ.பி.ஆர். எல்.எவ். இயக்கம் தடைசெய்யப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட கிழக்குமகாணத்தைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கப் போராளிகள் பலர் விடுதலைப்புலிகளால் கணக்கில்லாமல் அழிக்கப்பட்டார்கள். அதன்பின் தமிழ்நாட்டிலிருந்த பத்மநாபா உள்ளிட்ட தலைமை உறுப்பினர்கள் 13 பேர் புலிகளால் அழிக்கப்பட்டதுடன் அவர்களது செயற்பாடும் நிறுத்தப்பட்டது.

புளொட்டின் செயலதிபர் முகுந்தன் அவர்கள் தனது பதவியிலிருந்து விலத்த வேண்டும் என்று கோரிக்கைவைத்து சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் நடந்த (தள) மாநாட்டுடன் புளொட் தனது அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்திக் கொண்டது. 1988 வருடம் சங்கிலியனுடன் இருந்த நாற்பதுக்கும் அதிகமான புளொட் உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா முகாமை விடுதலைப்புலிகள் தாக்கி அழித்தார்கள். ஈரோஸ் பாலகுமார் அவர்கள் புலிகளால் உள்ளிளுக்கப்பட்டு உயிர்பிச்சை கொடுக்கப்பட்டதுடன் ஈரோசும் தனது தனித்த செயற்பாட்டை நிறுத்தியது.

இவ்வாறு விடுதலைப்புலிகளது ஆயுத அதிகாரம் என்பது தமிழ்மக்களுக்கான விடுதலை வேண்டிப் புறப்பட்ட அனைத்து விடுதலை இயக்கங்களையும் தமிழ் மக்களிடத்திலிருந்து அப்புறப்படுத்தியது. அதற்கு விடுதலைப்புலிகள் சொன்ன ஒரே காரணம் துரோகிகள். ஆனால் ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தினரும் விடுதலைப் புலிகளுக்கு இணையான இராணுவபலம் கொண்டவர்களாக இருந்தவர்கள். இலங்கை இராணுவத்தை விட இவர்கள் மீதான அச்சமே விடுதலைப்புலிகளுக்கு அதிகமாக இருந்தது.

வடகிழக்கிலிருந்து இவர்கள் முற்றாக துரத்தப்பட்ட பின் தமது பாதுகாப்புக்காகவேனும் இந்திய இராணுவத்துடனும் இலங்கை இராணுவத்துடனும் சேர்ந்து கூட்டாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. தமிழ்க்கட்சிகளாக பதிவுசெய்யப்பட்ட இந்த இயக்கங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் தமது அலுவலகங்களைத் திறந்து இயங்கிவந்தார்கள். அப்போதும் இவர்களுக்கெதிரான ஆயுத வன்முறைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டார்கள். இன்றுவரை இந்த இயங்கங்கள் ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை விடுதலைப்புலிகளது ஆயுதத்திற்குப் பலி கொடுத்தே வந்துள்ளன. கட்சி நிலையிருந்து விலகிய புளொட் மோகன் மற்றும் ராசீக் போன்றவர்கள் விடுதலைப்புலிகளது வன்முறையை சிறிய ஆயுதக்குழுவாக இயங்கி (இலங்கை இராணுவத்துடன்) எதிர்த்து வந்தார்கள். விடுதலைப்புலிகள் என்று சந்தேகித்த எந்த நபராக இருந்தாலும் கொலை செய்வதே அவர்களது நோக்காக இருந்தது. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கந்தன் கருணை படுகொலையில் இரத்தமும் சதையுமாகத் தப்பி வந்தவன் நான். எனக்குத் தமிழீழமோ தமிழ் மக்களது விடுதலையோ நோக்கமல்ல ஒரு புலி இருக்கும் வரையும் கொலை செய்வேன் என்ற தொனிபட நான்தான் ராசீக் என்ற கட்டுரை மூலம் சரிநிகரில் எழுதியிருந்தான் ராசீக்.

இறுதிப் போரின் கணக்கை விட முக்கியமானது இந்தவகையான இரண்டு கொலை முரண்பாடுகள். இவர்களது இந்த முரண்பாடுகளில் பலியாகியவர்களது கணக்கை யார் கூட்டி எடுப்பது என்பது மிக முக்கியமானதல்லவா? தற்போது ராசீக்கையோ அல்லது புளொட் மோகனையோ மாவீரர்களாக, வீரமறவர்களாக நாம் தமிழ்சமூகத்தில் அடையளப்படுத்திவிட முடியுமா? விடுதலைப்புலிகள் இல்லாத பிரதேசங்களில் தமது செயற்பாடுகளை முன்னிறுத்திய தமிழ்க் கட்சிகள் 25 வருடங்கள் கழித்து தமிழ் மக்களிடத்தில் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளாலும் இராணுவத்தாலும் கொல்லப்பட்ட தமது போராளிகளுக்கும் மக்களுக்குமாக வீரமக்கள் தினம் உலகெங்கும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளால் கொண்டாடப்பட்ட மாவீரர்தினத்திற்குள் இவர்களால் அடையாளமிடப்பட்டபவர்கள் எப்படி கணக்கெடுக்காமல் விடப்பட்டார்களோ அதே போல் இவர்களது வீரமக்கள் தினத்திற்குள்ளும் கணக்கெடுக்கப்படாமல் பலர் விடுபட்டுப்போகிறார்கள். இங்கே மிக கூர்மையாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் விடுதலைப்புலிகளது மாவீரர் தினத்திலிருந்து இவர்களது வீரமக்கள் தினம் எவ்வகையில் மாறுபட்டது என்பது? விடுதலைப்புலிகளது பாசிசச் செயற்பாடுகள் குறித்து எதிர்குரலை வெளிப்படுத்தும் இவர்கள் தமது கைகள் இரத்தக் கறை படியாதவை என்று சொல்லி எங்கும் கொண்டோடிப் புதைக்க முடியாது.

யாழ்ப்பாணத்து அசோகா கொட்டலும், இந்தியச் சவுக்கந்தோப்புக்களும், சுழிபுரம் சுடுமணலும் நாம் மறந்து விடமுடியாதவையாகத்தானே இன்னும் இருக்கிறது. நீங்கள் கடந்தகால கறைபடிந்த கைகளைக் களுவாது மக்களிடத்தில் எந்த முகத்துடன் போய்ச் சேர்ந்திருப்பீர்கள்? புதியபாதை அழைக்கிறது தோழா/ நாம் புரட்சி வெல்ல உழைத்திடணும் தோழா/ பகுத்தறிவை வளர்த்திடணும் தோழா/ மூடப் பழமைகளைக் களைந்திடணும் தோழா. என்று மக்களைத் தோழமையுடன் வழிநடத்திய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தம்மிடம் நம்பிவந்த தமது இயக்கப் போராளிகளை எப்படியெல்லாம் கொலை செய்தது என்பதை வரலாறு மறந்து விடவில்லை. ஈழவிடுதலைக்காக செயற்ப்பட்ட இயக்கங்களில் வர்க்க விடுதலை பற்றியும் சமூகவிடுதலை பற்றியும் மக்களிடத்தில் புரிந்துணர்வை ஏற்படுத்திய இயக்கங்களில் புளொட் இயக்கத்தினரும் முக்கியமானவர்கள். அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்று கோசம் இட்டவர்கள் அவர்கள். ஒரு புரட்சிகர இயக்கத்தை இராணுவரீதியாக வளர்ப்பதை விட மக்களை அரசியல் மயப்படுத்துவதே முக்கியமானது என்று கருதிச் செயற்பட்டவர்கள்.

இவ்வாறு மிகப்பெரிய திட்டமிடலுடன் கிளம்பிய அந்த இயக்கம் தனது அழிவை எவ்வாறு ஏற்படுத்தியது என்பது முக்கியமான விடையம். மற்றய இஙக்கங்கள் போலல்லாது புளொட் இயக்கத்தை அதன் உறுப்பினர்களே உருக்குலைத்தார்கள். யாழ் ஸ்கந்தவரோதையாக் கல்லூரியில் 1986ம் வருடம் பெப்ரவரி 19 தொடக்கம் 24 வரை நடைபெற்ற மாநாடே அவர்களது கடைசி மாநாடாக இருந்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபராக இருந்த முகுந்தன் என்ற உமாமகேஸ்வரனால் செய்யப்பட்ட வன்முறைகள் கொலைகள் குறித்து அங்கே முன்வைக்கப்பட்டது. முகுந்தனின் கொலைகாரக் கையாளான சங்கிலியன் என்ற கந்தசாமியின் பாத்திரம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அந்த மாநாட்டிற்கு வரமறுத்த முகுந்தன் தனது அடியாட்களுடன் இன்னுமொரு மாநாடு நடாத்த எண்ணியிருந்தார் என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினது மத்திய குழு அறிக்கை தெரிவிக்கிறது. 23.07.1986இல் ஈஸ்வரன் அசோக் ராஜன், குமரன், சேகர், செந்தில், பாபுஜி, ஆதவன், முரளி ஆகிய மத்தியகுழுவினர் கையெழுத்திட்ட அறிக்கை முகுந்தனது அராஜகங்களை அப்பட்டமாகத் தெளிவுபடுத்துகிறது. கந்தரோடையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டின் நோக்கங்களாக மூன்று முக்கிய விடையங்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறது. 1. முகு ந்தன் கடைப்பிடித்து வரும் எதேச்சதிகார ,அராஜக நடவடிக்கைகளை நிராகரித்து உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டுவது. 2. முகுந்தனின் தலைமையில் கழகத்துக்குள் நடந்தகொலைகளை விசாரணை செய்வதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்குமான அமைப்புகளை ஏற்படுத்துதல். 3. கழகத்தைச் சீர்குலைவுப்பாதைக்குக் கொண்டு சென்ற முகுந்தனின் மூலஉபாயமற்ற அரசியல் இராணுவப் போக்குகளைகண்டிப்பதும் சரியான அரசியல் இராணுவ மூலஉபாயத்தை வகுப்பதற்கான அடிப்படையை உருவாக்குதல் போன்றவற்றுடன் இம்மநாட்டின் தீர்மானங்களில் மிகமுக்க்கியமானது முகுந்தனால் இரகசியமாக உருவாக்கப்பட்டு உட்கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் பயன்படுத்தப்பட்ட உளவுப்படை பற்றி ஆராய்வதும் அவற்றிற்கு சரியான தீர்வு காண்பதுமாகும். என்று கூறுகிறது அந்த அறிக்கை. சந்ததியார் கொலை உட்பட 38 கொலைகளுக்கு முகுந்தன் பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக அந்த அறிக்கை சுட்டுகிறது. தொடர்ந்து செல்லும் அவ்வறிக்கை, கழகத்தின் தோழர்களினாலும் அனைத்து அங்கங்களினாலும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்ட முகுந்தன், கண்ணன், வாசுதேவர், கந்தசாமி, மாணிக்கதாசன் ஆகியோர் பெரும்பான்மை மத்தியகுழு உறுப்பினர்களின் முடிவின்படி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுகிளன்றனர் என்றும் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் மாநாட்டில் இவர்கள் சுதந்திரமாக கலந்து கொண்டு தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

புளொட் இயக்கத்தின் மிகச் சிறந்த அறிவுஜீவியான சந்ததியாரைக் 10. 09. 1985 இல் புளொட் தலைமையால் கடத்திக் கொலை செய்யப்பட்டதை அந்த நாளிலேயே டேவிட் ஐயா அவர்கள் கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும் என்ற சிறு நூல் மூலம் அம்பலப்படுத்தியிருந்தார். உடுவிலைச் சேர்ந்த தோழர் சிவனேஸ்வரன் அவர்களே முகுந்தனின் பல கொலைகளது நேரடிச்சாட்சியம் என்றபடியால் அவரை அடித்துச் சித்திரவதை செய்து கொன்றதாக அவரது சகோதரி எழுதிய கடிதத்தையும் பிரசுரித்த டேவிட் ஐயா அவர்களது அறிக்கை அதுவரை புளொட் அமைப்பு 286 கொலைகள் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. முகுந்தன், பிரபாகரனுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் பயந்து ஒழித்திருந்த நாட்களில் சந்ததியார் தன் உயிரையும் மதியாது முகுந்தனைக் காப்பாற்றியவர். முகுந்தன் தமிழகத்தில் ஒழிந்து மறைந்திருக்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை ஈழத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எடுத்துச்சென்றவர் சந்ததியார். முகுந்தன், சந்ததியாருக்கும் மற்றய போராளிகளுக்கும் செய்த சதிச் செயலுக்கு தமிழினம் பழிவாங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. என்று எழுதிமுடித்திருந்தார் டேவிட் ஐயா அவர்கள்.

அவர் எழுதி சில வருடங்களில் புளொட் இயக்கத்தினராலேயே முகுந்தன் இலங்கையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு கொலைகார இயக்கத்தை அதன் உறுப்பினர்களே செயலிழக்கப்பண்ணியது முதல் முறையாக நடந்தது. இங்கே முக்கியமான விடையம் என்னவென்றால் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தினது உட்கொலைகள் வன்முறைகள் எல்லாம் ஈழவரலாற்றில் மிக அப்பட்டமான முறையில் பதிவாகிக் கிடக்கிறது. ஈழமக்கள் தமது பிள்ளைகளை முகுந்தனதும் சங்கிலியனதும் கொலைவெறிக்கு பலிகொடுத்திருக்கிறார்கள். 1980களின் ஆரம்பத்தில் வன்னியிலிருந்து மிகப்பெருமளவிலான இளைஞர்கள் யுவதிகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்தார்கள். இந்தியப் பயிற்சிக்காக பலர் கப்பலேறினார்கள். ஏறியவர்களில் பலர் திரும்பிவரவில்லை. திரும்பி வந்தவர்களில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவேயிருந்தார்கள். இப்படியெல்லாம் இருக்க தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் சொல்வது போல் ‘நாங்களும் தவறு விட்டிருக்கிறோம்’ என்று ஒற்றை வரியில் இலகுவாகச் சொல்லிவிட்டுப் போக முடியுமா? என்பதுதான். முகுந்தன் தலைமையில் இருந்த புளொட் அமைப்பிற்கும் தற்போது சித்தார்தன் தலைமையிலுள்ள புளொட் அமைப்பிற்கும் நாம் எவ்வகையில் வித்தியாசத்தைக் காண்பது? முகுந்தனையும் மாணிக்கதாசனையும் சங்கிலியனையும் கொலைகாரர்கள் என்று அடையாளப்படுத்தி வெளியேற்றிய புளொட் அமைப்பு எது? தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்ற அமைப்பு தனது தலைமையை மாற்றியமைத்த பின் அனைத்துவித அராஜகங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளியிட்டு ஒரு ஜனநாயக செயற்பாட்டுத்தளத்தில் இயங்கமுனைவது என்பது பெரிதும் வரவேற்கப்படவேண்டியதே.

ஆனால் கழகத்திற்குள் இருந்த அராஜகவாதிகளை வெளியேற்றிய தள, பின்தள மாநாட்டுக்குழு அராஜகவாதத்தை ஒழித்து, ஜனநாயக மத்தியத்தவத்தையும் உட்கட்சி ஜனநாயகத்தையும் ஸ்தாபனக் கோட்பாடாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதற்கே மாநாடு நடக்க இருப்பதாகச் சொல்லியது. ஆக, இன்றிருக்கின்ற சித்தார்த்தன் தலைமையிலான புளொட் என்பது முகுந்தனை நிராகரித்த புளொட்டா? அல்லது முகுந்தன் வழி செயற்படும் புளொட்டா என்று கேட்கவேண்டியுள்ளது? முகுந்தன் தலைமையிலான புளொட் இயக்கத்தின் தொடர்ச்சியல்ல தற்போதிருக்கும் புளொட் என்றால் அந்தக் கொலைகாரர்களுக்கு வீர அஞ்சலி எப்படிச் செய்ய முடியும் என்பது முதற்கேள்வி? இல்லை அதே தொடர்ச்சிதான் என்று சொன்னால் புலிகளை விமர்சிக்கவோ தவறு என்று சொல்லவோ உங்களுக்கு என்ன யோக்கியதை உண்டு? என்பது இரண்டாவது கேள்வி. முகுந்தனதும் சங்கிலியன் மாணிக்கதாசன் போன்றவர்களின் மிகவும் குறுகிய நலன்களுக்காகவும் முட்டாள்தனங்களுடனும் நடாத்திமுடிக்கப்பட்ட கொலைகள் புளொட்டின் வரலாறு எங்கும் பரவிக்கிடக்க அவர்களை செந்தோழர்கள் என்றும் வீரமக்கள் என்றும் நமது மக்களிடம் அஞ்சலி செய்யச் சொல்லிக் கேட்பது என்ன நியாயம்? சுழிபுரம் பிரதேசத்தில் புலிகளுக்கு துண்டுப்பிரசுரம் ஒட்டவந்த ஆறு இளைஞர்களது ஆணுறுப்பையும் வெட்டி அவர்களது வாயில் வைத்து தலைதெரிய புதைத்தவனல்லவா உங்கள் சங்கிலியன். அவனை எப்படி தோழர் சங்கிலியன் என்று வாய்கூசாமல் அழைக்கிறீர்கள் நீங்கள். அதே மக்களிடம் அவனை மாவீரன் என்று சொல்லி வீரமக்கள் தினம் கொண்டாடச் சொல்கிறீர்கள். புலிகளின் கொலை வெறி கொண்ட பொட்டனுக்கும் உங்கள் சங்கிலியனுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள். அதன் பிறகு அவனுக்கு வீரமக்கள் தினம் கொண்டாடலாம். கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும் என்று உங்கள் கொலை வெறி பற்றி எழுதிய டேவிட் ஐயா இந்தியாவில் இன்னும் வாழ்கிறார் அவரை சென்று கேளுங்கள் அதன் பிறகு முகுந்தனை தோழர் என்று எல்லோரும் அழைக்கலாம். சந்ததியார் என்கின்ற வசந்தன் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் நீங்கள் தோழராக்கி மாவீரம் கொண்டாடினால் ஒருபோதும் நீங்கள் மக்களிடத்தில் நிலைத்து நிற்கப்போவதில்லை. விடுதலைப்புலிகள் என்ற பாசிசத்தை எதிர்த்து நின்ற நீங்கள் உள்ளுக்குள்ளே உங்களது மிகப்பெரிய பாசிசத்தை மறைத்து வைத்தீர்கள். அந்தப் பாசிசத்தினை மறைத்து நாமும் தவறு விட்டிருக்கிறோம் என்று மழுப்பிவிட்டுப் போகமுடியாது. நமதுமக்கள் இழந்தது ஒன்றும் ஒருநேரச் சோறும் ஒட்டுத்துணியுமல்ல. இழந்தது வாழ்வு. உங்களால் ஒருபோதும் திருப்பிக் கொடுக்க முடியாது.

உங்களது அசிங்கமான கொலை வெறிக்கு ஒரு உதாரணம், ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பயிற்சி என்று போன இளைஞர்கள் பலர் ஆரம்பத்தில் ஜட்டியில்லாமல் பயிற்சி செய்து கஸ்டப்பட்டிருக்கிறார்கள். பல நாட்களின் பின்பே அமைப்பினர் ‘அப்பிள் ஜட்டி’ வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி முடித்து இலங்கை திரும்பும் போது கடற்கரையில் வைத்து இலங்கையில் இருந்து புதிதாக தமிழ்நாட்டுக்குப் பயிற்சிக்காக வந்தவர்கள் ஜட்டியில்லாமல் வருவதைப்பார்த்து தங்களுடைய ஜட்டியைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார்கள். புதிதாக வந்தவர்கள் பயிற்சி முகாமுக்கு வந்தவுடன் அவர்களைப் புலன் ஆய்ந்த கந்தசாமியின் புலனாய்வு அவர்கள் இந்தியஅப்பிள் ஜட்டி அணிந்திருப்பதைப் பார்த்து விடுதலைப்புலிகளே தமது அமைப்பிற்குள் ஊடுருவி விட்டார்கள் என முட்டாள் தனமாக சந்தேகித்து ஐவரையும் உடனே கொலை செய்ததாக நேரடிச் சாட்சியங்களே உண்டு. இந்தியப் பயிற்சி முடித்து வரும் வழியில் கப்பலில் இருந்து எத்தனையோ பேரைக் கடலுக்குள் எறிந்து விட்டு வந்த கதைகளும் உண்டு. இப்படி உங்கள் கொலை வதைகள் குறித்து ஆயிரம் கதைகள் உண்டு நம்மிடம். ஆனால் நீங்களோ உங்கள் கொலைகார முகங்களுக்கு வீரமுலாம் பூசுகிறீர்கள். தயவுசெய்து உங்கள் பாசிசச் சிந்தனையை புரட்சிகரமாக்காதீர்கள். இப்படியே போனால் கடந்த தேர்தலை விட பலமடங்கு தோல்வியையே நீங்கள் சந்தித்துக் கொள்வீர்கள்.

கடந்த கால்நூற்றாண்டு யுத்தத்தில் இருந்த கொலைக்காலாசார யுகத்தில் யாருடையதோ நலனுக்காக இன்றுவரை இழந்த உயிர்களை இனியும் யாரும் தமது நலனுக்காக பாவிக்க முடியாது. அவர்களை வீரமக்கள் என்றும் துரோகிகள் என்றும் மாவீரர்கள் என்றும் எந்த அரசியல் இலாபங்களுக்காகவும் யாரும் பிரித்து வைக்க முடியாது. முடிந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஈழத்தில் இனி ஒரு கொலை நடக்காமல் இருக்க வழி செய்வதே.

http://www.thuuu.net/?p=299

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டேன் புளோட்டின் உள் வீட்டு சதியினால் தான் சுந்தரம் கொல்லப்பட்டார் என பழைய கழக உறுப்பினர்கள் எழுதியிருந்தார்கள் இது உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தகவல் முழுக்க முழுக்க தவறானது. சக இயக்க படுகொலைகளை ஆரம்பித்து வைத்ததும் தனிநபர் கொலைகளை ஆரம்பித்து வைத்ததும் புலிகளே. சுந்தரம் படுகொலை, அளவெட்டி படுகொலைகள் முதல் துரையப்பா கொலையென அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போது இந்தியாவோ, இந்திய உளவுப்படையோ எங்கு வந்தது. அது போல் சிங்கள அரசுடன் முதன் முதலில் கைகோர்த்ததும் விடுதலைப்புலிகளே. பிரேமதாசா காலத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்த விடுதலைப்புலிகள், அப்போது நினைத்திருந்தால்க் கூட பிரேமதாசாவுடன் இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து ஒரு முடிவை எட்டியிருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டவே இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்தனர்.

மாமா புலிகளுக்கு மாமனிதர், நாட்டுப்பற்றாளர் எண்டு பட்டம் குடுத்து கௌரவிக்க தெரியும், அவர்கள் அப்பிராணிகள்.... 2000 முன்னம் இந்த நடைமுறை இருக்கேல இருந்திருந்தால் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் திருச்செல்வம் தங்கத்துரை கனகரத்தினம் சரோஜினி எல்லாருக்கும் ரெண்டத்தில ஒரு பட்டம் குடுத்திருப்பினம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நாகரீகம் தெரிந்தவர்களிடம் நாகரீகத்தை எதிர் பார்க்கலாம், அடுத்தவர்களிடம் எதிர் பார்ப்பது தவறு தான். மரண தண்டனை என்பது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசிலுள்ள நீதிமன்றங்களால் நிறைவேற்றப்படுவது. இதனை உம்மை போன்றவர்கள் முட்டாள்த் தனமாக (உமது பாணியில் வாந்தி) எழுத வெளிக்கிட்டால் சிங்கள அரசும், தாம் தமிழர்களைக் கொன்றதை நியாயப்படுத்தத் தான் உதவும். முட்டாள்த் தனமான கருத்துகளால் அனைத்துப் பக்கங்களையும், நகைச்சுவைப் பகுதியாகவோ அல்லது சாக்கடையாகவோ மாற்ற முயற்சிக்கின்றீரா?? :D:lol:

எனது முட்டாள்தனமனான கருத்துக்களால் எவ்வளவு பெரிய கெடுதியை உருவாக்காப்பார்த்தேன். உரிய நேரத்தில் வந்து நீங்கள் சுட்டிகாட்டி உள்ளீர்கள் நன்றிகள்!

ஆனால் ஏதோ சட்டம்... அரசாங்காம்... நீதிமன்றம்... என்றல்லாம் எழுதியுள்ளீர்கள். அப்போ இது ஏதும் இல்லாமல் பள்ளியில் படித்துகொண்டிருந்த பிள்ளைகள் மீது குண்டுபோட்டு கொன்றதையும். நான் முட்டாள்தனமாக எழுதுவதால் மரணதண்டனை என்று கூறிவிடுவினமோ?

சிங்களவன் தானே கூறுவான் என்று கூறியிருக்கின்றீர்களே.............? நான் உங்களுக்குதானே பதில் எழுதியுள்ளேன்.

படுகொலையையும் மரணதண்டனையையும் ஒன்றாக குழைத்து பரோட்டா போடலாகாது என்றுதான் நான் எழுதியுள்ளேன்.

ஒரு விடயத்தை பற்றி நடுநிலமையாக இருப்பதென்பது இருபக்க விழைவுகளையும் அலசியபின்தான். எது நியாயமோ அதன்பக்கம் இருக்கவேண்டும். நடுநிலமை என்பதே சும்மா ஒரு பம்பாத்துதான்............... தமிழனாக இருந்தால் புலிகளுக்கு துரோகியாக இருக்க வேண்டும் அல்லது புலிகளுடன் ஆதரவாக இருக்கவேண்டும். இதில் நடுநிலமை என்பவர்கள் எங்கே இருப்பது?

புலிகள் தமிழ்ஈழம் பெற்றால் நன்று. ஆனால் பெற்றவிதம் பிழை.?

தவறானவர்களை தண்டிக்கின்றார்கள் ஆதலால் புலிகள் தவறு செய்கின்றார்கள்?

இந்த பம்மாத்து நடுநிலமை என்பதே ஏதோ ஒரு போலிதனத்தை விற்றுவிட துடிக்கும் ஒரு வியாபார யுத்திதான். இல்லை நடுநிலமை என்று ஒன்று உண்டு என்றால் அதை தெளிவுபடுத்த வேண்டும். (புலிஎதிர்பிற்கும் புலிக்குமிடையில்).

தவறு செய்தவர்களை மக்களை விற்று பிழைப்புபார்த்தவர்களை. புலிகள் தமிழினத்தில் இருந்து அகற்றினார்கள் இனத்தின் மீது காதல் கொண்ட எவனுமே இதைதான் உலகத்தில் இதுவரை செய்திருக்கின்றார்கள். புலிகள் ஒன்றையும் புதிதாக செய்யவில்லை.

அப்படி அகற்றபட்டவர்கள் நேர்மையானவர்கள் என்றும் அவர்களை அகற்றியது தவறு என்றும். நீங்கள் ஒரு கருத்தை கூறினால் அது பிழையானது என்று என்னால் எடுத்த எடுப்பில் கூறமுடியாது. ஆனால் அவர்கள் எந்தவித்தில் நேர்மையானவர்கள் அவர்களை அகற்றியது ஏன் தவறு என்றும் நீங்கள் சுட்டிகாட்டி உங்கள் கருத்ததை முன்வைத்தால்தான் அது ஒரு கருத்தாகபடும்.

அதைவிடுத்து மதிவறண்டனாங்"கள்" போல் எதையாவது கொட்டினால் சரி என்று கொட்டிவிட்டு. நாகரீகம் பற்றி எமக்கு வகுப்பெடுத்தால்..... தகுமா?

நாகரீகமான கருத்துகளுடன் நாகரீகமாகவே நான் கருத்தாடுகின்றேன். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அவித்துகொட்டுவதை அப்படியே அள்ளி தின்ன வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கில்லை. எனது கருத்துக்கள் நாகரீகமானவை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை............... ஆனால் நாகரீகமான கருத்துக்ளுடன் நான் நாகரீகமாகவே இருக்கின்றேன்.

எல்லாவற்றையும் சரியாக செய்ய புலிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. நானும் நீங்களும் ஒருவேளை புலிக்கு போயிருப்பின் நாமும் புலிகள்தான் எமது அத்தனை செயல்களும் புலிகளின் பெயராலேயே வெளிவந்திருக்கும். அதற்காக விட்பிழைகளை திருத்துகிறோம் என்று பூச்சாண்டி காட்டுவதை பூந்துபார்க் நாம் பூலோகத்திற்கு இன்றோ நேற்றோ வரவில்லை.

புலிகள் பிழைவிட்டார்கள் இப்போது இல்லாது போய்விட்டார்கள்.............. இந்த பிழைவிடாத கொழும்பில் இருந்து கூட்டிகொடுக்கும் கூட்டம் இப்பபோய் சரிவிடலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

மாமா புலிகளுக்கு மாமனிதர், நாட்டுப்பற்றாளர் எண்டு பட்டம் குடுத்து கௌரவிக்க தெரியும், அவர்கள் அப்பிராணிகள்.... 2000 முன்னம் இந்த நடைமுறை இருக்கேல இருந்திருந்தால் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் திருச்செல்வம் தங்கத்துரை கனகரத்தினம் சரோஜினி எல்லாருக்கும் ரெண்டத்தில ஒரு பட்டம் குடுத்திருப்பினம். :D:lol:

கொடுத்திருப்பார்கள்தான் பாவம் இந்த அப்பாவிகள் அதற்கு முன்னமே போய்விட்டார்களே?

இனத்திற்காக எத்தனையை கொடுத்தார்கள்................. முடியாது முடியாது எல்லாவற்றையும் எழுத என்னால் முடியாது. இதில் இந்த சரோஜினி இரவு என்று கூடபார்க்காமல் சேவைகளை கொட்டினார். (அதெல்லாம் அப்ப பகலிலோ செய்யிறது என்று திட்டிவிடாதீர்கள்).

தமிழினம் சும்மா தலைநிமிர்ந்து ஆடிச்சு................. பாவி புலிகள் விட்டார்களா?

மருதங்கேணி,

களத்தில் கொஞ்சம் நாகரீகமாகக் கருத்தாடப் பாரும். எந்தப் பக்கம் போனாலும் மலம் அள்ளுவது வாந்தி எடுப்பது என்பன தவிர்ந்து தங்களால் கருத்து எழுத முடிவதில்லை. ஒருவேளை உமது தொழில் சார்ந்து கருத்தெழுதுகின்றீரோ என்னவோ?? ஒன்றில் பொய்யையும் புரட்டையும் எழுதுகின்றீர். முடியாவிட்டால் உமது தொழில் சார்ந்து எழுதுகின்றீர். இப்படியான கருத்துகளால் உம்மால் மற்றவர்களைக் கேவலப்படுத்த முடியாது. அண்ணாந்து துப்பி நீர் துப்பியதை நீரே தான் உள்வாங்கிக் கொள்கின்றீர்.

மருதங்கேணியைப் பற்றிச் சொல்லமுன்பு தாங்கள் மதிப்புக்குரிய வசம்பு அவர்களே , நீங்கள் பொய் சொல்லுவது இல்லையாக்கும். இப்பகுதியில் அளவெட்டிப் படுகொலையப் பற்றி நீங்கள் சொன்ன பொய் ---

நீங்கள் யாராவது கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் எப்படிப் பதில் அளித்திருக்கிறீர்கள் என்று தான் உங்களின் கடந்த காலங்களில் யாழில் பதிந்த கருத்துக்கள் சொல்கின்றது திரு மதிப்புக்குரிய கெளரவ வசம்பு அவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்டுதொடக்கம் கூப்பன்கடையிலை ஓசி சீனவெள்ளைப்பச்சை அரிசியை திண்டு வளர்ந்ததுதான் சிறிலங்கா நாடு :lol:

சிங்கள அரசுக்கு இந்தியன் ஒரு தொட்டுநக்கிற ஊறுகாய் மட்டும்தான் :D

சுருக்கமாய் சொல்லப்போனல் சிறிமா காலத்திலிருந்தே சீனா சிறிலங்காவிலை இரண்டு காலையும் நல்லவடிவாய் நிலைநிறுத்திவைச்சிட்டுது.

இந்தச்சிறப்பிலை கரவுபுடிச்ச இந்தியன் தன்னையே நம்பமாட்டான்

எப்பிடி பக்கத்துவீட்டானை நம்புவான்?

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியைப் பற்றிச் சொல்லமுன்பு தாங்கள் மதிப்புக்குரிய வசம்பு அவர்களே , நீங்கள் பொய் சொல்லுவது இல்லையாக்கும். இப்பகுதியில் அளவெட்டிப் படுகொலையப் பற்றி நீங்கள் சொன்ன பொய் ---

நீங்கள் யாராவது கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் எப்படிப் பதில் அளித்திருக்கிறீர்கள் என்று தான் உங்களின் கடந்த காலங்களில் யாழில் பதிந்த கருத்துக்கள் சொல்கின்றது திரு மதிப்புக்குரிய கெளரவ வசம்பு அவர்களே.

அதெல்லாம் நாகரீகமான நடுநிலமை வாதமுங்கோ................... உங்களைபோலவே எனக்கும் முன்பு புரிவதில்லை. போக போகதான் அண்ணாச்சி என்ன எழுதுகிறார் அதில் எம்மட்டு நாகரீகம் எத்தனை நடுநிலமை என்று எல்லாம் புரிஞ்சிச்சு. பிறகென்ன புல்லரிப்புதான்!

இவரது நாகரீகம் பற்றி ஏற்கனவே இவரது கருத்துகளை மேற்கோள்காட்டி சிலர் சுட்டிகாட்டியிருக்கின்றார்கள். இதில் எமக்கு வகுப்பெடுக்கின்றார். ஏதோ நாங்கள் நாகரீகமாகவே எழுதுகிறோம் என்று அடமபிடிப்பது போல். வாந்திக்கு வாந்தி பிராந்திக்கு பிராந்தி இதுதான் எனது புதிய கொள்கை. நிர்வாகம் எல்லாவற்றையும் சேர்த்து தூக்க வேண்டும் இது எனது அவா!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எம்மில் பலருக்கு மேற்குலகு சம்பந்தமாக ஒரு பரிவான போக்குக் காணப்படுகிறது. மனிதாபிமானம் சிறிதாவது உள்ளவர்கள் என்று அடிக்கடி மேற்கின் மீதான தமது காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், இதே மேற்குலகு, இந்திய சீன கூட்டுத் தமிழின அழிப்பின்போது அதற்கு உடந்தையாகவும் ஒத்தாசையாகவும் இருந்தது என்பதை மறந்துவிடுகின்றனர்.

தமிழ்த்தேசியவாதிகளான புலிகளின் ஆயுதக் கொள்வனவுகள், நிதி வளங்கள் மீதானா கெடுபிடிகள் மற்றும் தடையுத்தரவுகள், புலிகள் முன்னின்று நடத்திய தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் மீதான சர்வதேசத் தடை...இவை போன்ற திட்டமிட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மூலம் எமது போராட்டத்தை ஒரு முடங்கு நிலைக்கு கொண்டு வந்ததே இந்த மேற்குலக மனிதாபிமானவாதிகள்தான் என்பதை நாம் இலகுவில் மறந்து விடுகிறோம்.

பலர் நினைப்பதுபோல எமது தேசிய விடுதலைப் போராட்டம் மீதான உச்ச ராணுவ அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது மகிந்த எனும் போலித் தேசிய வாதச் சிங்களவன் நாட்டின் தலைவரான தருணத்தில் இருந்தல்ல. மாறாக இந்த அழுத்தம் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" எனும் ஒரு அமெரிக்க எண்ணெய்க் கம்பனி முதலாளியும் பின்னர் சரித்திரத்திலேயே அமெரிக்க ஏகாதிபத்தியம் பெற்ற மிக முட்டாள்த்தனமான அதிபருமான புஷ்ஷின் காலத்திலிருந்துதான்.

புலிகள் சமாதான ஒப்பந்தம் நோக்கித் திரும்பியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்த பயங்கரவாதம் மீதான போர். பின்னர் பேச்சுவார்த்தை நாடகங்கள் மூலம் நாம் அலைக்கழிக்கப்பட்டதும், ரணிலின் சர்வதேச வலையமைப்பிற்குள் புலிகளை வீழ்த்தும் கைங்கரியங்களும் நடந்தேறியதும் இதே காலத்தில்த் தான்.

ஆகா மேற்குலகால் தொடக்கி வைக்கப்பட்ட எமது தேசிய விடுதலைப் போராட்டம் மீதான் அழுத்தம் என்பது 2008 இலும் பின்னர் 2009 இலும் இந்திய சீன கூட்டு பிராந்திய வல்லாதிக்க சக்திகளால் முற்றான ராணுவ அழித்தொழிப்பின் மூலம் சிதைக்கப்பட்டது.

இந்தில் சீனாவும் இந்தியாவும் தமக்கே உரிய விருப்பு வெறுப்புகளுக்காக இந்த தமிழின அழிப்பைச் செய்து முடித்தன.

இந்தியாவைன் நூறாண்டுப் பழமை வாய்ந்த வெளியுறவுக்கொள்கை இன்னும் ராம - ராவண யுத்த காலத்தை தனது மைய்யப்புள்ளியாக வைத்துக் கருமமாற்றி வருவதாலும், இயல்பான திராவிட எதிர்ப்புக் கொள்கையாலும் இந்தியா எப்போதுமே எமக்குச் சார்பான நிலையை எடுக்குமென நினைப்பது தவறு.

எமைக்கிருக்கும் ஒரே வழி சீனாதான். அது இனவழிப்பில் பிரதான பங்கு வகித்திருந்தாலும், அதன் நோக்கங்கள் பொருளாதாரம் சம்பந்தமானவை.

ஆகவே சீனாவுடன் கூடுச் சேர்வதன் மூலம் இந்திய தேசியவாதத்தையும் அதன் பிராந்திய வல்லரசுக்கனவை அழிப்பதுமே நாம் செய்ய வேண்டியது.

இந்தியா எனும் விருப்பமின்றிக் கட்டாயப்படுத்தப்பட்டுச் சேர்க்கப்பட்ட வெவ்வேறான நாடுகளின் இந்தச் சாம்பாரை உடைத்தெறிய வேண்டும். அதற்கு நாம் சீனத்துடன் கைகோப்பதில் தப்பில்லை.

2009 மே18 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக இலங்கை அரசால் அழித்தொழிக்கப்பட்டபின்

:D:lol:

----------------------------------------------------------------------------------------------------------------

முடிந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஈழத்தில் இனி ஒரு கொலை நடக்காமல் இருக்க வழி செய்வதே.

http://www.thuuu.net/?p=299

:o:o

ஆயுதங்கள் அமைதியாகவிருக்கிறதே தவிர கைமாறவில்லை

வாய் மூடியுள்ளதே தவிர பேச்சு நின்று போகவில்லை.

புலிகள் இல்லையென்றால் அதே கொள்ளைக்காக போராடி புலிகளால் ஒடுக்கப்பட்டதாக எண்ணும் நீங்கள் ஏன் இன்னும் சிங்களவனின் சேலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறீர்கள். புலிகள் இல்லாத இந்தச் சூழலில் நீங்கள் மக்களுக்காகவாவது( :o ) குரல் கொடுக்கலாமே? உங்களால் முடியாது ஏனென்றால் புலிகளே உங்களையும் வாழவைக்கும் சக்தி

அதெல்லாம் நாகரீகமான நடுநிலமை வாதமுங்கோ................... உங்களைபோலவே எனக்கும் முன்பு புரிவதில்லை. போக போகதான் அண்ணாச்சி என்ன எழுதுகிறார் அதில் எம்மட்டு நாகரீகம் எத்தனை நடுநிலமை என்று எல்லாம் புரிஞ்சிச்சு. பிறகென்ன புல்லரிப்புதான்!

இவரது நாகரீகம் பற்றி ஏற்கனவே இவரது கருத்துகளை மேற்கோள்காட்டி சிலர் சுட்டிகாட்டியிருக்கின்றார்கள். இதில் எமக்கு வகுப்பெடுக்கின்றார். ஏதோ நாங்கள் நாகரீகமாகவே எழுதுகிறோம் என்று அடமபிடிப்பது போல். வாந்திக்கு வாந்தி பிராந்திக்கு பிராந்தி இதுதான் எனது புதிய கொள்கை. நிர்வாகம் எல்லாவற்றையும் சேர்த்து தூக்க வேண்டும் இது எனது அவா!

என்ன மருதங்கேணி நல்ல சூடாயிருக்கிறீங்கள் போல........

சில அறிவாளிகளின் கருத்துக்களை ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டுவிட வேண்டும்.

இது ஒவ்வொரு தமிழனும் தன் உரிமைக்காக வரலாற்றுப்பணி செய்ய வேண்டிய காலம்.

என்ன செய்வது சில தடைக் கற்கள் தவறவிடப் பட்டுவிட்டன ஆரம்பத்திலேயே .............காலம் பதில் சொல்லும் விரைவில்.....

மருதங்கேணி,

களத்தில் கொஞ்சம் நாகரீகமாகக் கருத்தாடப் பாரும். எந்தப் பக்கம் போனாலும் மலம் அள்ளுவது வாந்தி எடுப்பது என்பன தவிர்ந்து தங்களால் கருத்து எழுத முடிவதில்லை. ஒருவேளை உமது தொழில் சார்ந்து கருத்தெழுதுகின்றீரோ என்னவோ?? ஒன்றில் பொய்யையும் புரட்டையும் எழுதுகின்றீர். முடியாவிட்டால் உமது தொழில் சார்ந்து எழுதுகின்றீர். இப்படியான கருத்துகளால் உம்மால் மற்றவர்களைக் கேவலப்படுத்த முடியாது. அண்ணாந்து துப்பி நீர் துப்பியதை நீரே தான் உள்வாங்கிக் கொள்கின்றீர்.

ஏன்..?? மலம் அள்ளுவது என்ன கேவலமான தொழிலா...???

வெள்ளைகாறரின் மிச்சங்களை கிளீன் பண்ணி சீவியம் நடத்திக்கொண்டு, வெள்ளையளையே ஊத்தை எண்டு விளிக்கும் சனமாச்சே நாங்கள்...... :lol:

சீன சிங்கள உறவு வலிமை அடைவதுதான் தமிழருக்கு நீண்ட கால நோக்கில் நன்மை தரும். இதனால் இந்தியா தன்னுடைய அயலுறவுக் கொள்கையை மீள்பரிசீலனை செய்ய நிர்பந்திக்கப் படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை பற்றி நடுநிலமையாக இருப்பதென்பது இருபக்க விழைவுகளையும் அலசியபின்தான். எது நியாயமோ அதன்பக்கம் இருக்கவேண்டும். நடுநிலமை என்பதே சும்மா ஒரு பம்பாத்துதான்............... தமிழனாக இருந்தால் புலிகளுக்கு துரோகியாக இருக்க வேண்டும் அல்லது புலிகளுடன் ஆதரவாக இருக்கவேண்டும். இதில் நடுநிலமை என்பவர்கள் எங்கே இருப்பது?

புலிகள் தமிழ்ஈழம் பெற்றால் நன்று. ஆனால் பெற்றவிதம் பிழை.?

தவறானவர்களை தண்டிக்கின்றார்கள் ஆதலால் புலிகள் தவறு செய்கின்றார்கள்?

இந்த பம்மாத்து நடுநிலமை என்பதே ஏதோ ஒரு போலிதனத்தை விற்றுவிட துடிக்கும் ஒரு வியாபார யுத்திதான். இல்லை நடுநிலமை என்று ஒன்று உண்டு என்றால் அதை தெளிவுபடுத்த வேண்டும். (புலிஎதிர்பிற்கும் புலிக்குமிடையில்).

தவறு செய்தவர்களை மக்களை விற்று பிழைப்புபார்த்தவர்களை. புலிகள் தமிழினத்தில் இருந்து அகற்றினார்கள்

இனத்தின் மீது காதல் கொண்ட எவனுமே இதைதான் உலகத்தில் இதுவரை செய்திருக்கின்றார்கள்.

புலிகள் ஒன்றையும் புதிதாக செய்யவில்லை.

அப்படி அகற்றபட்டவர்கள் நேர்மையானவர்கள் என்றும் அவர்களை அகற்றியது தவறு என்றும். நீங்கள் ஒரு கருத்தை கூறினால் அது பிழையானது என்று என்னால் எடுத்த எடுப்பில் கூறமுடியாது.

ஆனால் அவர்கள் எந்தவித்தில் நேர்மையானவர்கள் அவர்களை அகற்றியது ஏன் தவறு என்றும் நீங்கள் சுட்டிகாட்டி உங்கள் கருத்ததை முன்வைத்தால்தான் அது ஒரு கருத்தாகபடும்.அதைவிடுத்து மதிவறண்டனாங்"கள்" போல் எதையாவது கொட்டினால் சரி என்று கொட்டிவிட்டு. நாகரீகம் பற்றி எமக்கு வகுப்பெடுத்தால்..... தகுமா?

நாகரீகமான கருத்துகளுடன் நாகரீகமாகவே நான் கருத்தாடுகின்றேன்.

எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அவித்துகொட்டுவதை அப்படியே அள்ளி தின்ன வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கில்லை. எனது கருத்துக்கள் நாகரீகமானவை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை............... ஆனால் நாகரீகமான கருத்துக்ளுடன் நான் நாகரீகமாகவே இருக்கின்றேன்.

எல்லாவற்றையும் சரியாக செய்ய புலிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.

நானும் நீங்களும் ஒருவேளை புலிக்கு போயிருப்பின் நாமும் புலிகள்தான்

எமது அத்தனை செயல்களும் புலிகளின் பெயராலேயே வெளிவந்திருக்கும்.

அதற்காக விட்பிழைகளை திருத்துகிறோம் என்று பூச்சாண்டி காட்டுவதை பூந்துபார்க் நாம் பூலோகத்திற்கு இன்றோ நேற்றோ வரவில்லை.

புலிகள் பிழைவிட்டார்கள் இப்போது இல்லாது போய்விட்டார்கள்.............. இந்த பிழைவிடாத கொழும்பில் இருந்து கூட்டிகொடுக்கும் கூட்டம் இப்பபோய் சரிவிடலாமே?

புலிகள் பிழைவிட்டார்கள் இப்போது இல்லாது போய்விட்டார்கள்.............. இந்த பிழைவிடாத கொழும்பில் இருந்து கூட்டிகொடுக்கும் கூட்டம் இப்பபோய் சரிவிடலாமே?

இவைதான் என் கருத்தும்

நன்றி

மன்னிக்கவும் வெட்டி ஒட்டியதற்கு

வெள்ளைகாறரின் மிச்சங்களை கிளீன் பண்ணி சீவியம் நடத்திக்கொண்டு, வெள்ளையளையே ஊத்தை எண்டு விளிக்கும் சனமாச்சே நாங்கள்...... :lol:

மிகவும்

ஆணித்தரமான

யதார்த்தமான

அதேநேரம் சுடும் உண்மை.

என்ன மருதங்கேணி நல்ல சூடாயிருக்கிறீங்கள் போல........

சில அறிவாளிகளின் கருத்துக்களை ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டுவிட வேண்டும்.

இது ஒவ்வொரு தமிழனும் தன் உரிமைக்காக வரலாற்றுப்பணி செய்ய வேண்டிய காலம்.

என்ன செய்வது சில தடைக் கற்கள் தவறவிடப் பட்டுவிட்டன ஆரம்பத்திலேயே .............காலம் பதில் சொல்லும் விரைவில்.....

:lol:அடடா உங்க கருத்தைப் பார்த்த நேரம் முதல் தொடையெல்லாம் பயத்திலை நடுங்குதுங்கோ.....வேட்டியைக் களைந்து விட்டு பாவாடைப் பெயரில் பதுங்கியிருந்து, காகிதப் புலியாய் பாயும் தாங்கள் என்னை போட்டுத் தள்ளப் போறியளோ?? உங்களைத் தனிப்பட சந்தித்து ஏதாவது கையூட்டுத் தந்தால் விட்டு விடுவியள் தானே. எதற்கும் தனிமடலிலோ அல்லது மின்னஞ்சலிலோ அறிவீயுங்கள். :):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.