Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இறந்து விட்டார் என செய்தி வந்ததும் ஜயர் பெரிதாய் கத்தி அழுததாய் ஒரு இணையத்தில் போட்டு இருந்தார்கள் உண்மை,பொய் தெரியாது :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குலம் சுவிசில் புலிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் இறுதி யுத்தத்தின் பொழுது புலம்பெயர் மக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள் என அனைத்துலக செயலக பொறுப்பாளர் நெடியவனுடன் முரண்பட்டாதால் சுவிசில் நடந்த கூட்டத்தில் நெடியவனாலும் வாகீசனாலும் அப்துல்லாவினாவும் அடித்து உதைக்கபட்டு மண்டபத்தை விட்டு வெளியே தூக்கி எறியப்பட்டவர்.நெடியவவனே முதலில் இவரை கதிரையால் தாக்கினார். தமிழீழம் கிடைக்கும்வரை கலியாணமே செய்யமாட்டேன் என வாந்தவரிற்கு கிடைத்த பரிசு அவ்வளவுதான். ஆனால் மற்றையவர்கள் கும்பமாக வாழ்கின்றனர்.

குலம் என்பவர் அடிவாங்கிய கரணங்கள்:

தலைவருக்கு மாவீரர் நாளில் வீரவணக்கம் தெரிவிக்க விரும்பியது.

சுவிஸ் வங்கிகளில் தனிப்பட்ட முறையில் ஆயிரம் ஆயிரமாக கடன் பெற்று கொடுத்த காசுகளை திருப்பி அவர்களுக்கு கொடுக்க சொன்னது( சில குடும்பங்கள் பிரிந்து போனது வேற கதை)

தலவரின் வீரச்சவை அறிவித்து அதில் இருந்து அடுத்த கட்ட போராட்டங்களை முன் எடுப்பது.

இவை பற்றி பேசிய போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.

இவை இதில் சமந்த பட்ட என் உறவினர் மூலம் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டத்தில் முதலாவது வாழும் சாட்சி … நூலுருவில்..

mool.jpg

ஈழப் போராட்டடம் ஆயுதப் போராட்டமாகத் துளிர்விட்ட ஆரம்பக் காலப்பகுதியின் வாழும் சாட்சி கணேசன்(ஐயர்). ஐயர் என்ற புனைபெயரில் அறியப்பட்ட கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரபாகரனோடு ஆரம்பித்தவர்களில் ஒருவர். பல சிக்கல்கள் நிறைந்த தனது அரசியல் நினைவுகளை ஐயர் இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்திருந்தார்.

இவரின் பதிவுகள் பல புதிய தகவல்களோடு செழுமைப்படுத்தப்பட்ட வடிவில் நூலுருவில் வெளியாகின்றது. உலகம் முழுவதும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் ஐயரின் நூல் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசியல் குறித்த விமர்சனம் என்பது சேறடிப்பாக அன்றி எதிர்கால எதிர்ப்பியக்கத்தை அனுபவங்களிலிருந்து செழுமைப்படுத்தும் செயற்பாடாக அமையவேண்டும் என்பதே ஐயரின் கருத்து.

சமூக உணர்வுள்ள அனைவர் மத்தியிலும் ஐயரின் அனுபவ வரலாறு ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கியிருந்தது.

பேரினவாத்தின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் வீரம்மிக்க போராட்டத்திற்கு ஐயரின் நூல் காத்திரமான பங்களிப்பை வழங்கும்.

தமிழ் நாட்டில் நூல் ஏலவே வெளியாகியுள்ளது. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றுப் பதிப்பகத்தின் புத்தகச் சந்தையில் ஐயரின் நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று!

கடை எண் 404 -405.

5.1.2012 முதல் 17.1.2012 வரை.

பிரித்தானியாவில் இனியொருவும், கனடாவில் தேடகம் அமைப்பும், பிரான்சில் சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் நூல் வெளியீட்டை ஏற்பாடுசெய்துள்ளன.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

http://inioru.com/?p=25476

Link to comment
Share on other sites

ஜயரின் பதிவுகள் படித்திருந்:தேன். பிரபாகரன் வடமihட்சியை சார்ந்தவராக இருந்தாலும் புலிகள் அமைப்பு வளர்ந்து பலம் பெறுவதற்கு புன்னானைக்கட்டுவனும் குப்பிளானும்.ஏழாலையுமே முக்கிய கிராமங்களாக ஆரம்ப காலத்தில் செயற்பட்டது. புலிகள் அமைப்பிற்கு ஆரம்ப காலங்களில் பெரும் உதவிகள் செய்தவர்களில் ஜயர் மட்டுமல்ல விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவரான கி.பி அரவிந்தன் போன்றவர்களே தங்கள் பதிவுகளில். M.S.R என்கிற .எம். ராஜேந்திரன் என்பவரை பற்றி பதிவிடாமல் விட்டிருக்கிறார்கள். இது தவறுதலானதா அல்லது வேண்டுமென்றே தவிரக்கப்பட்டதா என தெரியவில்லை. ஆனால். கி.பி அரவிந்தன் இதுபற்றி என்னிடம் கூறியபொழுது தான் தவறுதலாக அவரைபற்றி குறிப்பிடவில்லை ஞாபகங்களின் தேய்வு என்று கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியோருவில் வந்த 'ஐயரின் தொடருக்கு' கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பல தரவுகள் பதியப்பட்டும், விடைகள் கிடைக்கவில்லை. வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு புத்தகத்தில் திருத்தப்படும் என கூறினார்கள். அதன் பின்பு அவர்கள் கூறிய விடயம் 'இனியோருவில்' இடம்பெறவில்லை.

இது முழுதாகத் திருத்திய பதிப்பாக இருக்குமென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.