Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு: நிழலி

Featured Replies

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு

நெல்லாடிய நிலமெங்கே

சொல்லாடிய அவையெங்கே

வில்லாடிய களமெங்கே

கல்லாடிய சிலையெங்கே

தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே

மு.கு

ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகின்றேன் இது விமர்சனமோ அல்லது திறனாய்வோ அல்ல. இப்படியான அற்புதமான சினிமாவை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒரு விமர்சகனும் அல்ல. அத்துடன் இந்தச் சினிமா பற்றிய புரிதல்களில் பல இடங்களில் இடைவெளிகளும் எனக்கு ஏற்பட்டன. வரலாறு பற்றிய போதிய அறிவும் இல்லாததால் இந்த அற்புதப் படைப்பிற்கான விமர்சனமாக இதனை ஒருபோதும் எடுக்க வேண்டாம்...இது ஒரு குறிப்பு மட்டுமே

0

இன்று அண்மையில் வந்த, செல்வராகவன் இயக்கத்தில் உருவான அற்புதமான படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்' எனும் புதிய திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்த்தேன். வழக்கமான சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி, மிக மிக வேறுபட்ட அனுபவத்தையும், நுண்ணுணர்வுகளால் புரிந்து கொள்ளப்பட்டு எழுத்தால் பகிரப்பட முடியாத உணர்வுகளையும் இந்தப் படம் எனக்கு தந்தது. அத்துடன் படத்தின் மையக்கருத்தும், படத்தின் முடிவும் முள்ளிவாய்க்காலுடன் உறைந்து போயிருக்கும் ஈழப்போராட்டத்தைப் பற்றிய நுணுக்கமான ஒரு பதிவாகவும், அதன் எதிர்காலப் போக்குப் பற்றிய நூலிழை எதிர்வு கூறலாகவும் அமைந்து இருக்கின்றது

இந்தக் குறிப்பில் ஆயிரத்தில் ஒருவனின் கதையை எழுதக்கூடாது என்று உத்தேசித்து ஆரம்பிக்கின்றேன்.

1.

போரும் அமைதியும் எனும் ரொல்ஸ்ரோயின் காவியத்தின் மையக்கருத்து 'போர் என்றும் ஓய்வதில்லை' என்றே சொல்வேன். யுத்தம் என்பது இன்றோ நேற்றோ தொடங்குவதில்லை. அதன் காரணங்கள் நீண்ட வரலாறு கொண்டவை. யுத்தம் ஒன்று சமூகங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையில் ஆரம்பித்தால் அதற்கான காரணங்கள் ஒரு நீண்ட வரலாற்று பின்னணியை கொண்டு இருக்கும். அதே போல் எந்த யுத்தமும் முடிவடைவதும் இல்லை. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தலைமுறைகளால் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு யுத்தம் இன்று தவிர்க்கப் பட்டால் அது நாளையோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அல்லது ஒரு ஆயிரம் வருடத்தின் பின்னோ இடம் பெறவே செய்யும். ஆனால் யுத்தம் என்பது மானுட வரலாற்றினை முன்னோக்கவும், இழுத்துக் கட்டி வைத்திருக்கவும் என்று எப்பவும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. போரற்ற வாழ்வு எது? போரற்ற தமிழன் வரலாறு தான் எது?

2.

தஞ்சையில் பாண்டிய மன்னனால் சோழ பேரரசு அழிக்கப்படுகின்றது. அழிக்கப்பட்ட பேரரசில் இருந்து தப்பிக் கொண்ட இளவரசனும் இன்னும் சிலரும் பாண்டிய பேரரசின் சின்னமான சிலையொன்றுடன் தப்பி, தேசங்கள் கடந்து யாருமற்ற தீவொன்றில் மறைந்து விடுகின்றனர். தான் தன் பரம்பரை எல்லாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை விட்டு அகல்கின்றான் சோழ பேரரசன். அந்தச இளவரசனையும், சின்னத்தையும் தேடி பாண்டிய பேரரசின் பரம்பரை பல நூற்றாண்டுகள் கடந்தும் வெறி கொண்டு அலைகின்றது.

நெல்லாடிய நிலமெங்கே

சொல்லாடிய அவையெங்கே

வில்லாடிய களமெங்கே

கல்லாடிய சிலையெங்கே

தாய் தின்ற மண்ணே

***************

அடிமையாக வாழ்ந்த தமிழன், ஈழம் எனும் சிறு பகுதியில் மானமுடன் வாழ ஆசைப்படுகின்றான். வரலாறு சப்பித்துப்பிய எச்சமாய் போனவன் தனக்கென்ற தேசம் பற்றி கனவு கொண்டும், என்றாவது ஒரு நாள் பெரும் தேசம் புகுவான் என்றும், தன் எல்லா சக்தியும் கொண்டு சிறு தேசம் கட்டி, உயிரை அடை காக்கின்றான். எதிரியால் அபகரிக்கப்பட்ட நிலம் எங்கும் மீண்டும் தன் புலிக்கொடி பறக்கும் என்று காத்திருக்கின்றான்

*****************

பாண்டிய பரம்பரை நெஞ்சில் வஞ்சினம் கொண்டு சோழனை தேடுகின்றது. தப்பிய இளவரசனின் பரம்பரையால் என்றாவது தன் பேரரசிற்கு ஆபத்து என்று வெறி கொண்டு அலைகின்றன. ஆண்டுகள் மாறுகின்றன, களம் மாறுகின்றது, வரலாறும் மாறுகின்றது. ஆனால் தாய் நிலம் இழந்தவனும், அபகரித்தவனும் மாறும் களம் தமக்கானதாய் கனிய காத்திருக்கின்றன. 800 ஆண்டுகள் கழிந்தும் போர் மட்டும் ஓயாமால் வெவ்வேறு களங்களினூடும், தளங்களினூடும் பயணம் செய்கின்றது. நிலம் இழந்தவனும், தன் இன மானச் சின்னத்தை எதிரியிடம் இழந்தனும் வெறி கொண்டு தம் பக்க நியாயங்களுக்காக காத்திருக்கின்றன

"தமிழர் காணும் துயரம் கண்டு

தலையை சுற்றும் கோளே.. அழாதே

என்றோ ஒரு நாள் விடியும் என்றே

இரவை சுமக்கும் நாளே.. அழாதே

நூற்றாண்டுகளின் துருவை தாங்கி

உறையில் தூங்கும் வாளே.. அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ

என்னோடழும் யாழே.. அழாதே"

சோழ பரம்பரை காத்திருக்கின்றனர்... தாங்கமுடியா துயர்களை தாங்கி விடிவு ஒன்றுக்காய் மட்டுமே ஒரு சிறு நிலமதில் உயிர் சுமக்கின்றனர். அந்த நிலத்தின் சட்டங்கள் வேறு, நியாயாதிக்கங்கள் வேறு, பண்பாடு வேறு. ஆனால் அனைத்தும் மீண்டும் தம் சுதந்திர வாழ்வு பற்றிய ஒற்றைப் புள்ளியில் சுழல்கின்றன.

பாண்டியனின் புதிய பரம்பரையின் ஒரு வித்து சோழனின் இடம் பற்றி அறிகின்றது, திட்டமிடுகின்றது, தேடுகின்றது, தேடி இறுதியில் பல பொறிகள் (Traps)கடந்து அவனை வீழ்த்த முனைகின்றது, 800 வருடங்களாக காத்திருந்த வெறியும், நிலம் மீள காத்திருந்த கனவும் சந்திக்கின்றன. அனைத்தையும் இழந்த சோழ பரம்பரை தனக்கிருக்கும் குறைந்த வளத்துடன் போரிடுகின்றது.

ஈற்றில், ஆக்கிரம்மிப்பு வெறியும், பலமும் கொண்ட பாண்டிய பரம்பரை நவீன ஆயுதங்களின் துணையுடன் மீண்டும் சோழனை வீழ்த்துகின்றது. எவரின் உதவியும் அற்று (அல்லது ஒதுக்கி) தன் சொந்த கால்களின் பலத்துடன் மட்டுமே நின்ற சோழப்பரம்பரை மீண்டும் தோற்கின்றது. தலைமை தாங்கிய அரசன் படுகொலை செய்யப்படுகின்றான். பலர் தம் குரல்வளையை அறுத்து தற்கொலை செய்கின்றனர். பலர் சிறை பிடிக்கப்படுகின்றனர். பெண்கள் வல்லுறவுக்குள்ளாகின்றனர். அவர்களை காக்க முனையும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்

மீண்டும் அந்தப் சோழ பரம்பரையில் ஒருவனும், அவனுடன் கூடவே சிலரும் தப்பிக்கின்றனர்.. மீண்டும் சோழனின் பயணம் தொடர்கின்றது..தான் இழந்த நிலம் மீட்கும் வரை ஓயாது என்று அந்தப் பயணம் தொடர்கின்றது. தப்பிய அவனைத் தேடி பாண்டிய வம்சத்தின் துரத்துதலும் தொடர்கின்றது

**************

முள்ளிவாய்க்காலில் இந்தத் தலைமுறையின் விடுதலை வேட்கை பலம் கொண்டவர்களால் அடக்கபடுகின்றது. ஆனால் போர் மட்டும் ஓயவில்லை. இன்னொரு களம், இன்னொரு காலம் நோக்கி நகர்கின்றது; தமிழர் தன் சுதந்திரத்தினை அடையும் வரையும் எதிரி தன் இருப்பை சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவும் வரைக்கும் இந்தப் போர் ஓயப்போவதில்லை

****************

3

இப்படி ஒரு சினிமா தமிழில் இது வரைக்கும் வரவில்லை என்றே சொல்வேன். முன் பாதி முழுதும் மாயாஜாலம் நிறைந்த (தமிழர்களின் மாயாவாதம்) காட்சிகள், பின் பாதி மானுடம் முழுதும் நிரம்பி இருக்கும் உயிர் வாழ்தலுக்கான போட்டி. போர் என்பது மனித வாழ்வில் பிழைத்து இருக்க (Survival) தவிர்க்க முடியாதது. 99% அடிமை உணர்வில் ஆட்கொண்டு பணிந்து போனாலும் மிச்சம் இருக்கும் 1% சுதந்திரம் பற்றி தன்னுணர்வு கொண்டு தன் சமூக விடுதலைக்காக தொடர்ந்து போர் செய்ய முனையும் என்பதை சினிமாவில், அதுவும் தமிழ் சினிமாவில் பதிவு செய்த திரைப்படம் இது. சக காலத்தில் நிகழ்ந்த பெரும் போராட்டம் ஒன்றின் உறைநிலையை (அல்லது தற்காலிக முடிவை) கருப்பொருளாக்கி சினிமா தந்த செல்வராகவன் பாராட்டுக்குரியவராகின்றார். ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் Perfection என்பது அதிசயிக்கத்தக்கது. எல்லாக் காட்சிகளிலும் Frame இற்குள் அகப்பட்ட அனைத்தும் முழுமையாக இருக்கின்றது. சின்ன சின்ன விடயங்களில் கூட அதிக பட்ச அக்கறை காட்டியிருப்பதும் உணரக்கூடியதாக இருக்கின்றது

4

ஆனால் இந்தத் திரைப்படம் எத்தனை பேரைச் சேரும் என்பது கவலைக்குரிய கேள்வி. நான் இன்று பார்க்கும் போது திரையரங்கு எங்கும் சலிப்பான குரல்களையும், 'எப்படா படம் முடியும்' என்ற சில குரல்களையும் கேட்க முடிந்தது. வேட்டைக்காரன் போன்ற நாலாம்தர சினிமாக்களை வரவேற்கும் ஒரு சமூகத்தில் இத்தகைய படங்கள் வெற்றி பெற்றால், அதுவே பெரும் சாதனை

=========================================================

பி.கு 1:

இதனை இந்தப் பகுதியில் இணைத்தது அனைவரும் (ஆகக் குறைந்தது ஈழத் தமிழர்கள் ) கண்டிப்பாக பார்க்க தூண்ட வேண்டும் என்பதற்காகவே.

பி.கு 2:

திரைப் படத்தின் இறுதியில், கொல்லப்பட்ட தலைவனின் உடலை மிச்சமிருப்பவர்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடக்கம் செய்வதை காணும் போது, நெஞ்செங்கும் ஒரு குற்ற உணர்வு வந்து அடைக்கின்றது

===========================

பாட்டு:

Edited by நிழலி
பிழைகளை திருத்த

  • Replies 65
  • Views 16.4k
  • Created
  • Last Reply

இந்தப் படம் குறித்து பதிவுலகில் விமர்சனங்கள் சில பார்த்தேன். அவைகள் அனைத்தும் தமது தேடலுக்கான தீனி இல்லை என்றளவிலேயே சலிப்பை கொட்டியிருக்கின்றது. எமது சூழலும் நெருக்கடியான வாழ்க்கையும் பல கேணங்களில் இந்தப்படத்துடன் ஒத்துப்போவதாகவே உங்கள் பதிவு அமைகின்றது. ஆனால் எம்மவருக்கும் இந்த நுணுக்கம் புரியவில்லையாயின் தமிழக ரசிகர்களை விட மட்டமானவர்களாகவே நாம் இருப்போம்.

பதிவிற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இந்த பாடாலை கேட்டும் போதே யோசித்தேன், எமது பிரச்சினைக்கு ஒத்த பாடலாக இருகிறதே என்று, கதைபடிக்கும் மனநிலை இல்லை என்பதால் பலமுறை இந்த தலைப்பை பார்த்தும் இதனுள் நுளைவதில்லை, கதைக்கு சுகன் பதில் எழுதி இருப்பதால் என்ன எழுதி இருகிறார் என்ரு பார்ப்போம் என்று நுளைந்தேன், அனது அனுமானம் சரியாகத்தான் இருகிறது. பொதுவாகவே சினிமாபடங்கள் பார்க்கும் மனநிலை இல்லை, பார்ப்பதும் இல்லை, உங்களது பதிவு இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது. நாமும் காத்திருப்போம் எமது நிலம் மீளும் வரை, அதற்காக உழைத்திருப்போம், பதிவிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் செல்வராகவனின் அனைத்து படங்களையும் ரசித்து பார்ப்பேன்...இந்தப் படம் அவர்கள் 3 வருடத்திற்கு முன் எடுக்க தொடங்கையிலேயே தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் எதிர் பார்ப்போடு காத்திருந்தேன் ஆனால் சமீப காலமாக நான் படம் பார்ப்பதையே விட்டு விட்டேன்..தியேட்டருக்கு போய் படம் பார்த்து ஜந்து வருடங்கள் ஆகிறது.படம் வெளி வந்து விட்டது என இந்தியா வலைப்பதிவுகளை பார்த்து தெரிந்து கொண்டேன் ஆனால் சுகன் சொன்னது மாதிரி ஒருவரும் இப் படத்தை பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை...படம் புரியவில்லை என எழுதியிருந்தனர்...தங்களுக்கே படம் புரியவில்லை என்றால் அடிமட்ட மக்களுக்கு எப்படி புரியும் என கேள்வி எழுப்புகின்றனர்...ஆனால் தங்கள் வலைப்பதிவில் ஈழத்தை பற்றியும் எழுதுகின்றனர்.

எனக்கு இப் படத்தை தியேட்டரில் பார்க்க விருப்பம் இங்கு ஜங்கரன் திரையிடுகிறது என அறிந்தேன்...ஆனால் எம்மவர்களால் மற்றப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு இப் படத்திற்கு கிடைக்குமா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா என்ற ரீதியில் கருத்துச் சொன்னால் தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத ஓர் திரைப்படம்... புகழ்வதற்குப் பல விடயஙள் எதைப் புகழ்வதென்றே தெரியவில்லை. செல்வராகவன் தமிழ் திரையுலக ஜாம்பவான் இயக்குனர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுமளவுக்கு பிரமாதமான ஓர் படைப்பு தந்திருக்கிறார்....

படம் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு...? சில இடங்களில் குறிப்பாக அந்த ' நெல்லாடிய நிலமெங்கே' பாடலைக் கேட்கும் போது கண்கள் கலங்கி விடுகிறது. இன்னுமொரு பாடலுக்கிடையில் வரும் வரும் 'புலிக்கொடிபொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி கொறிப்பதுவோ' என்ற பாடல் வரிகளும் நெஞ்சைத் தைக்கிறது...

நிழலி சொன்னது போல ஈழப்போராட்டத்தைப் பற்றிய ஓர் நுணுக்கமான ஓர் பதிவாகவும் இந்தப் படம் இருப்பது முற்றிலும் உண்மை...

படம் முடியும்போது போடப்படும் ஓர் வசனத்தைப் பார்த்து ' நிச்சியமாக இது நடக்கும் எங்கள் சரித்திரத்திலும் என்று வாய் முணுமுணுக்க கனதியான நெஞ்சுடன் வெளிவர வைத்த ஓர் அருமையான திரைப்படம்.

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

நான் தியேட்டரில் படம் பார்ப்பதுவே இல்லை இருப்பினும் உங்களது இந்தப்பதிவை பார்த்தவுடன், படம் பார்க்கவேண்டும் என எனது மனம் தூண்டுகின்றது, முயற்சிக்கிறேன்.

இணைப்புக்கு நன்றி!

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு

நெல்லாடிய நிலமெங்கே

சொல்லாடிய அவையெங்கே

வில்லாடிய களமெங்கே

கல்லாடிய சிலையெங்கே

தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே

அருமையான உணர்வுகளுக்குள் வரை போகும் ஒரு பாடல்...

http://agnicreation.com/A/Aayirathil%20Oruvan/Tamilmp3world.Com%20-%20Thaai%20Thindra%20Manne%20(Classical%20Version).mp3

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன் இதன் விழக்கம் தேவை?

  • கருத்துக்கள உறவுகள்

நான் திரையரங்களில் அண்மைக்காலமாக தென்னிந்தியத்திரைப்படங்கள் பார்ப்பதில்லை. தொலைக்காட்சிகளிலேயே பார்ப்பதுண்டு. நிழலியின் இப்பதிவை வாசித்தபின்பு இப்படத்தினை திரையரங்கில் சென்று பார்க்கவேணும் போலத் தோன்றுகிறது. ஆனால் சிட்னியில் இப்படம் நேற்றுடன் திரையரங்கில் இருந்து எடுத்து விட்டார்கள். குப்பையான படங்கள் சிட்னியில் 3, 4 கிழமை ஒடுவதுண்டு. ஆனால் தரமான இப்படம் 5 நாட்களுடன் பார்வையாளர்கள் குறைவு காரணமாக நிறுத்தி விட்டார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ரீமா சென்னை மூடி வைச்சுக்காட்டினா யார் பார்ப்பினம். எப்படி இந்திய சனத்தொகை பெருகும். எழுத்தறிவே 60% உள்ள ஒரு மக்கள் கூட்டத்திடம் சரித்திரத்தை கதைக்கிறது.. அவ்வளவு உசிதமல்ல. ஒரு பிரியாணிப்பாசலுக்கு வாக்குகளை அள்ளிப்போட அலையும் கூட்டத்திடம்... வரலாறு போராட்டம் விடுதலை பற்றி அறிவூட்டல் செய்யமுடியுமா என்ன..???!

புலம்பெயர் நாடுகளில்.. சனத்துக்கு தேவை.. ஒரு கிலுகிலுப்பூட்டும் சினிமா. அப்பதான் அவையின்ர சேட்டைகளை அரங்கேற்ற வசதியாக இருக்கும். இப்படியான மனநிலைகளில் வாழ பழக்கிவிடப்பட்டுள்ள மந்தைகளிடம்.. காத்திரமான படைப்புக்கள் வெற்றியடையும் என்று எதிர்பார்ப்பது கல்லில் நாருரிப்பது போன்றது.

செல்வராகவனே தன் படத்தைப் பற்றி தானே பத்திரிகைகளைக் கூட்டி விமர்சனம் செய்ய வேண்டிய அளவுக்கு ஆயிரத்தில் ஒருவன் வந்து நிற்கிறது. பாவம்.. தரமான இந்திய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இந்திய மக்களின் ரசனைக்கும் அவர்களின் கற்பனைக்கும் இடையில் இடைவெளி பலமாக இருக்கிறது.

ஒரு மசாலா படத்தை தந்திருந்தால் இந்த நேரம் அதுக்கு வலைப்பூக்கள் அது இதென்று பிச்சிக்கிட்டு விமர்சனம் அளிக்கப்பட்டிருக்கும். ரீமா சென் நீச்சல் உடையில் தோன்றி அசத்தினார் என்று ஒரு வரி போட்டாலே போதும்.. கூட்டம் அலைமோதி விசில் அடிக்கும்..! அவங்களும் அவங்கட சினிமாவும்.. அவங்கட மக்களும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரீமா சென்னை மூடி வைச்சுக்காட்டினா யார் பார்ப்பினம். எப்படி இந்திய சனத்தொகை பெருகும். எழுத்தறிவே 60% உள்ள ஒரு மக்கள் கூட்டத்திடம் சரித்திரத்தை கதைக்கிறது.. அவ்வளவு உசிதமல்ல. ஒரு பிரியாணிப்பாசலுக்கு வாக்குகளை அள்ளிப்போட அலையும் கூட்டத்திடம்... வரலாறு போராட்டம் விடுதலை பற்றி அறிவூட்டல் செய்யமுடியுமா என்ன..???!

புலம்பெயர் நாடுகளில்.. சனத்துக்கு தேவை.. ஒரு கிலுகிலுப்பூட்டும் சினிமா. அப்பதான் அவையின்ர சேட்டைகளை அரங்கேற்ற வசதியாக இருக்கும். இப்படியான மனநிலைகளில் வாழ பழக்கிவிடப்பட்டுள்ள மந்தைகளிடம்.. காத்திரமான படைப்புக்கள் வெற்றியடையும் என்று எதிர்பார்ப்பது கல்லில் நாருரிப்பது போன்றது.

செல்வராகவனே தன் படத்தைப் பற்றி தானே பத்திரிகைகளைக் கூட்டி விமர்சனம் செய்ய வேண்டிய அளவுக்கு ஆயிரத்தில் ஒருவன் வந்து நிற்கிறது. பாவம்.. தரமான இந்திய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இந்திய மக்களின் ரசனைக்கும் அவர்களின் கற்பனைக்கும் இடையில் இடைவெளி பலமாக இருக்கிறது.

ஒரு மசாலா படத்தை தந்திருந்தால் இந்த நேரம் அதுக்கு வலைப்பூக்கள் அது இதென்று பிச்சிக்கிட்டு விமர்சனம் அளிக்கப்பட்டிருக்கும். ரீமா சென் நீச்சல் உடையில் தோன்றி அசத்தினார் என்று ஒரு வரி போட்டாலே போதும்.. கூட்டம் அலைமோதி விசில் அடிக்கும்..! அவங்களும் அவங்கட சினிமாவும்.. அவங்கட மக்களும்..! :lol:

எந்திரனுக்கு இணையம் அதிரும் எல்லோ :):(:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரீமா சென்னை மூடி வைச்சுக்காட்டினா யார் பார்ப்பினம்

நெடுக்ஸ் படம் பாக்கல்லைபோல.. மேலாடை கழண்டு விழும் நிலையில் உணர்ச்சிவசப்பட்டு ரீமா நடிக்கும் பல காட்சிகள் படத்தில் உண்டு. இதனாலேயே பெண்கள் தியேட்டர்களுக்கு வரவில்லையென்று தயாரிப்பாளர் ஆபாச காட்சிகளை கத்தரித்ததாக செய்தியுண்டு. நெடுக்ஸ் இந்தபடத்தை பார்த்தால் அவரது விமர்சனம் கலாச்சாரத்தை முன்னிறுத்தி இந்தப்படம் படுமோசமானது என்றே அமையும்.

படத்தின் பாடல்கள் 2 வருடத்துக்கு முன்பே எழுதப்பட்டன என்பதை சினிமா நண்பர்கள் சொன்னார்கள். சூட்டிங் கூட சென்ற வருட ஆரம்பத்திலேயே முடிந்துவிட்டதாம். கிராபிக்ஸ் வேலைகளும் தயாரிப்பாளர் - இயக்குனருக்கிடையேயான புடுங்குப் பாடுகளுமே படத்தை தாமதப்படுத்தின என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக நான் வாசித்த, கேட்ட பார்த்த நல்ல பதிவுகளை, ஆக்கங்களை தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவதுண்டு. அதே போல தெரிந்தவர்களும் தாங்கள் வாசித்த ஆக்கங்களை எனக்கு அனுப்புவார்கள். நேற்று அமெரிக்காவில் இருந்து ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் நிழலியின் இப்பதிவு எனக்கு கிடைத்தது. வாசித்துப்பார்த்தேன். பிறகு தான் யாழில் வந்து இப்பதிவை வாசித்து விட்டு எனது கருத்தை எழுதினேன். இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது. இப்படத்தை திரையிடுவோரின் இணையத்துக்கு சென்று பார்த்தேன் . வியாழன் முதல் திங்கள் வரை 5 நாட்கள் மட்டுமே இப்படம் சிட்னியில் திரையிடப்பட்டிருந்தை அறிந்தேன். அவர்களிடம் தொடர்பு கொண்டு இனி எப்பொழுது இப்படத்தை திரையிடப் போறீர்கள் என்று கேட்க, திரையரங்கில் இப்படத்தைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக இனி இப்படத்தை திரையிட மாட்டார்கள் என்று சொன்னார்கள். எனினும் நிழலியின் இப்பதிவை தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன். அவர்களில் சிலருக்கும் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். மாலையில் 'அதிகப்பேரின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 2 காட்சிகள் வரும் சனி,ஞாயிறு தினங்களில் காண்பிக்கப்படும்' என்ற செய்தி கிடைத்தது. 4வாரம் சிட்னியில் ஒடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேட்டைக்காரன் சிட்னி வாழ் ஈழத்தமிழர்கள் பலர் புறக்கணித்ததினால் 2 வாரத்துடன் நிறுத்தப்பட்டது.(2 வாரமும் மிகவும் சிறிய ஆசனங்கள் கொண்ட அரங்கில் திரையிடப்பட்டது) 5 நாட்கள் ஒடிய ஆயிரத்தில் ஒருவன் மேலதிமாக 2 காட்சிகள் காண்பிக்கப்படுவதற்கு நிழலியின் இப்பதிவும் ஒரு காரணம்.

  • தொடங்கியவர்

கருத்துகளை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்... வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கவும்

இளங்கவியும் இந்தப் படத்தை பார்த்து கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி. இளங்கவி குறிப்பிட்டுள்ளதைப் போல எனக்கும் 'நில்லாடிய நிலம்' எங்கே பாடலை கேட்ட போது மனதுக்குள் ஏதோ ஒன்று உடைந்து ஓடியது..மனம் கனத்து கண்ணீரைத் தந்தது

இத்தகைய திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றியடைய வேண்டுமாயின் இடைப்பட்ட காலத்தில் இந்தமாதிரியான Magical Realism இனை அடிப்படையாக கொண்ட வேறு திரைப்படங்கள் வந்து பார்வையாளருக்கு கொஞ்சமாவது பரிச்சயத்தை உருவாக்கியிருத்தல் வேண்டும். ஆனால் நாலாம்தர சினிமாவையே தொடர்ந்து வழங்கும் ஒரு சினிமா முறையில் இருந்து திடீரென வரும் இத்தகைய படங்கள் பலரை சென்றடையாமல் விடுகின்றது. இங்கு செல்வராகவன் செய்தது ஒரு பெரும் பாச்சல்...இவரது இந்த சினிமாவை இன்னும் 20 வருடங்களின் பின் வரும் தலைமுறை சிலவேளை தலையில் தூக்கி வைத்து போற்றும் என்று நினைக்கின்றேன். இடையில் புதுமை செய்ய முனைபவர்கள் சிலர் மேலும் இந்தவகையான சோதனைகளை செய்வார்கள் என்று நம்பலாம்.

வணிக ரீதியில் தோற்பதற்கு இந்த திரைப்படம் பற்றி வந்த காட்சிப்படங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். விளம்பரங்களில் / வெளியான புகைப்படங்களில் ஒருவனை (கதாநாயகனை) இரு பக்கமும் இரு அழகிய பெண்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு படுப்பது போல காட்டினால் ஒரு சாதாரண ரசிகர் எதனை எதிர்பார்த்து திரையரங்கு செல்வர் என்பதும், அது நிறைவேறாமல் போய், முற்றிலும் வேறான கதைக்களத்தையும் காட்சிகளையும் காட்டினால் ஏமாறுவார் என்பதும் யதார்த்தமே.

'சுப்ரமணியபுரம்', 'வெண்ணிலா கபடி குழு', 'நான் கடவுள்' போன்ற திரைப்படங்களையே பார்க்காத/பார்க்க விரும்பாத எம் புலம்பெயர் சினிமா பார்க்கும் சமூகத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' தோல்வியை அடைவது மிக எதிர்பார்க்க கூடியதே என்று நினைக்கின்றேன். உண்மையில் தமிழக சினிமா ரசிகர்களை விட புலம்பெயர் தமிழ் சினிமா ரசிகர்கள் மோசமான மசாலா பட விரும்பிகள் என்பதுதான் உண்மை

பொதுவாக நான் வாசித்த, கேட்ட பார்த்த நல்ல பதிவுகளை, ஆக்கங்களை தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவதுண்டு. அதே போல தெரிந்தவர்களும் தாங்கள் வாசித்த ஆக்கங்களை எனக்கு அனுப்புவார்கள். நேற்று அமெரிக்காவில் இருந்து ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் நிழலியின் இப்பதிவு எனக்கு கிடைத்தது. வாசித்துப்பார்த்தேன். பிறகு தான் யாழில் வந்து இப்பதிவை வாசித்து விட்டு எனது கருத்தை எழுதினேன். இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது. இப்படத்தை திரையிடுவோரின் இணையத்துக்கு சென்று பார்த்தேன் . வியாழன் முதல் திங்கள் வரை 5 நாட்கள் மட்டுமே இப்படம் சிட்னியில் திரையிடப்பட்டிருந்தை அறிந்தேன். அவர்களிடம் தொடர்பு கொண்டு இனி எப்பொழுது இப்படத்தை திரையிடப் போறீர்கள் என்று கேட்க, திரையரங்கில் இப்படத்தைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக இனி இப்படத்தை திரையிட மாட்டார்கள் என்று சொன்னார்கள். எனினும் நிழலியின் இப்பதிவை தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன். அவர்களில் சிலருக்கும் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். மாலையில் 'அதிகப்பேரின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 2 காட்சிகள் வரும் சனி,ஞாயிறு தினங்களில் காண்பிக்கப்படும்' என்ற செய்தி கிடைத்தது. 4வாரம் சிட்னியில் ஒடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேட்டைக்காரன் சிட்னி வாழ் ஈழத்தமிழர்கள் பலர் புறக்கணித்ததினால் 2 வாரத்துடன் நிறுத்தப்பட்டது.(2 வாரமும் மிகவும் சிறிய ஆசனங்கள் கொண்ட அரங்கில் திரையிடப்பட்டது) 5 நாட்கள் ஒடிய ஆயிரத்தில் ஒருவன் மேலதிமாக 2 காட்சிகள் காண்பிக்கப்படுவதற்கு நிழலியின் இப்பதிவும் ஒரு காரணம்.

சத்தியமாக உடம்பெல்லாம் சந்தோசம் பரவியது இதனை வாசிக்கும் போது. நான் பாட்டுக்கு யாழில் வந்து எழுதுவதற்கு கூட கொஞ்சமாவது வலு இருப்பதை பார்க்கும் போது சந்தோசமாகவும் பொறுப்புணர்வு சார்ந்து கொஞ்சம் பயமாகவும் இருக்கு. நன்றி கந்தப்பு

=================

இதில் இளங்கவியைத் தவிர வேறு எவரும் படத்தை பார்த்து விட்டு தம் அனுபவங்களை பகிரவில்லை (காவடி பார்த்தாரா இல்லையா என்பது தெளிவாக இல்லை). யாராவது பார்த்தீர்களாயின் உங்கள் அனுபவத்தையும் பகிரவும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குறிப்பில் ஆயிரத்தில் ஒருவனின் கதையை எழுதக்கூடாது என்று உத்தேசித்து ஆரம்பிக்கின்றேன்.

என நிழலி குறிப்பிட்டிருந்தாலும் மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்ற விமர்சனத்தினை இங்கு இணைக்கின்றேன்.

___________________________________________________________________________

"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு தமிழீழ முழக்கம்

செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தை தமிழ் திரையுலகின் புதிய சிகரம் என்றே சொல்லுவேன் நான்

வழக்கமாக தனது பாணியில் , இன்றைய 18 வயசு இளசுகளின் நவீன , காமம் கலந்த காதலை கொஞ்சம் வன்முறையான பூச்சில் சொல்லி கடைசி பதினைந்து நிமிடத்தில் உணர்வுக்குவியலைக் கொட்டி நம்மை நெகிழ வைத்து திருப்தி செய்யும் வித்தையிலேயே இந்த முறையும் ஜொலித்திருப்பார் செல்வராகவன் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் படம், பார்த்த பின்புதான் செல்வராகவன் நிஜமாகவே எவ்வளவு பெரிய கலை மேதை என்பதும் அதைவிட முக்கியமாக எவ்வளவு பெரிய தமிழ் இன உணர்வாளன் என்பதும் புரிய எனது இதயத்தில் ஒரு கம்பீரச் சிங்கமாய் வீற்றிருக்க ஆரம்பித்து விட்டார் செல்வா.

பிரபாகரன் மரணத்தையும் ஈழ போராட்டததையும் வெள்ளித் திரையில் கம்பீரமாக சுமார் 1000 ஆண்டு தமிழின வரலாற்றோடு சேர்த்து (குறியீடாகவே) மிக உயர்ந்த தரத்தில் பதிவு செய்தது செல்வா என்ற பெருமையைக் காலத்தால் அழிக்க முடியாது.

தொல்பொருள் ஆய்வுத் துறை....., வியட் நாம் அருகே உள்ள தீவுப பக்கம ஒரு ஆராய்ச்சிக்குப் போய் காணாமல் போகும் பேராசிரியர்....., அவரைக் கண்டுபிடிக்க விரும்பும் மகள் .... ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட ஒரு சகலகலாவல்லி பெண் அதிகாரி .....,அவளுடன் கருத்தொத்த ஒரு கம்பீரமான முன்னாள் ராணுவ அதிகாரி , எடுபிடி வேலைக்காக மதுரையில் இருந்து மண் மணம் மாறாத 30 ஆட்கள் ......என்று இன்றைய கால ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் துவங்கும் படம் ,போகப் போக ஹாலிவுட் படங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு கருத்தியலின் உச்சம் தொடுகிறது.

3000 ஆண்டுகளாக தமிழன் சேர . சோழ , பாண்டியன் என்ற பிரிவினையில் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்ததன் நவீன கால நீட்சியாக கதை சொல்லி இருக்கும் செல்வாவுக்கு ஒரு அழுத்தமான கை குலுக்கல்.( நவீன கால சூழலில் சேரனை லாவகமாக கதையில் இருந்து தவிர்த்திருக்கும் இன ரோஷத்துகுப் பாராட்டுக்கள்)

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்..... சோழ பாண்டியப் போர் ....! சோழ அரசன் தனது மகனின் உயிரைக் காப்பாற்ற அவனை கடல்கடந்து அனுப்புகிறான் . அதோடு பாண்டியர்களுக்குச் சொந்தமான குலதெய்வச் சிலை ஒன்றையும் சோழ இளவரசனிடம் கொடுத்து அனுப்புகிறான். அது மீண்டும் பாண்டியர் வசம் கிடைக்கக் கூடாது என்பதற்காக .வியட்நாம் சென்று பல தீவுகளுக்கு அப்பால் சென்று காடு, மலை , நீர் , காற்று, மணல்,கொடிய விலங்குகள் , மனித மாமிசம் தின்னும் பழங்குடியினர் (இவர்கள் சோழனின் விசுவாசிகள் ) என்று எல்லா விதங்களிலும் ஆபத்துள்ள பாதை வழியே போனால்தான் அடைய முடியும் என்ற வகையில் ஒரு நிலப்பரப்பில் அதைக் கொண்டு சென்று இளவரசன் மறைத்து வைக்கிறான். அதைப் பின் தொடர்ந்து போன பாண்டிய தளபதி ஒருவன் அது குறித்து வரைந்து வைத்த வரைபடத்தின் துணையோடு இன்று இந்த நவீன குழு பயணப் படுகிறது . விபரீதமான பிரம்மாண்டமான ஆபத்துகளைக் கடந்து (படத்தில் பார்த்து பிரம்மியுங்கள்) ஒரு வழியாக சென்று அடைந்தால்.....

யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா......

அங்கு ஒரு சோழ சாம்ராஜ்யமே இன்றும் இருக்கிறது.அன்று போன சோழ இளவரசன் மற்றும் நண்பர்களின் வழிவந்த சமுதாயம்.! பழந்தமிழ் பேசிக் கொண்டு, காட்டுவாசித் தன்மைகள் ஒரு மாதிரிக் கலந்து அதே நேரம் பழந்தமிழர் முறைப்படியும் வாழ்ந்து கொண்டு .... அதே நேரம் உணவுப் பஞ்சத்துடன் ...

அவர்களுக்குத் தலைவனாக ஒரு சோழ தேவன்.. பற்பல காலமாய் வாழும் ஒரு வயது முதிர்ந்து பழுத்த மூப்பன்.

அங்கு போன பின் கதையே வேறு.

எல்லோரையும் அழைத்துப் போன அந்த சகலகலாவல்லியான பெண் அதிகாரி (ரீமா சென் )அந்தப் பாண்டிய அரசனின் வழிவந்தவள் .இத்தனை பரம்பரையாக வாழையடி வாழையாகக் குலதெய்வச் சிலையை மீட்கப் போராடி, இந்தத தலைமுறையில்தான் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது . அந்த முன்னாள் ராணுவ அதிகாரியும்(அழகம் பெருமாள்) பாண்டிய பரம்பரையில் வந்தவர்தான் . மதுரையில் இருந்து வந்த அந்த எடுபிடிக் கும்பலின் முக்கிய இளைஞன் (கார்த்தி)முற்பிறவியில் சோழ நாட்டோடு சம்மந்தப்பட்டவன் . தொல்பொருள் அதிகாரியைத் தவிர அவள் மகள்( ஆண்ட்ரியா) கூட ஒருவாறு பண்டைச் சோழ நாட்டோடு சம்மந்தப்படுகிறார்கள்.

மீண்டும் போர் ...

இதில்தான் ஈழப் போராட்டத்தை குறியீடாக , ஆனால் அழுத்தமாகச் சொல்லி கலை இமயமாய் உயர்ந்து விட்டார் செல்வராகவன்.

ஆனால் அதற்கும் முன்பே படத்தில் சிலாகிக்க எண்ணிலடங்கா விசயங்கள் உண்டு

வெற்றிகரமாக ஓடிய ஒரு பழைய படத்தின் பெயரை அல்லது பாடலை எடுத்துக் கொண்டு அந்தப் பழைய படம் சம்மந்தப் பட்ட யாருக்கும் எந்த விதத்திலும் ஒரு மரியாதைக்குக் கூட நன்றி சொல்லாமல் , அந்தப் பழைய படம் பற்றியும் பழைய கலைஞ்ரகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்கள் போல புதுப் படத்தை எடுத்து முடித்து விடும் படைப்புச சுரண்டல் பேrவழிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது .

பழைய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பெற்ற "அது அந்தப் பறவை போல பாடலை செல்வராகவன் இந்தப் புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக ஒரு கண்ணியமான பாணியில் ரீமிக்ஸ் செய்துள்ளார் .பாட்டில் எம்.ஜி.ஆர இருக்கிறார் . டி.எம் .எஸ் இருக்கிறார் .விஸ்வநாதன் இருக்கிறார். எந்தப் பழைய கலைஞரும் புறக்கணிக்கப் படவில்லை . கொத்து பரோட்டா போடப் படவில்லை.செல்வராகவனின் கருத்து நேர்மை அபாரமானது .

மணிபல்லவம், கபாடபுரம் போன்ற சரித்திர நாவல்களில் நாம் படித்துப் பிரம்மித்த சூரிய ஒளி நிழல் பாதை அற்புததத்தை இதில் நடராஜப் பெருமான் நிழலாகக் காட்சி வடிவத்தில் பார்க்கும்போது ஏற்படும் பிரம்மிப்பு ....! அதே போல் காந்தளூர்ச்சாலை வரலாற்று நாவலில் நாம் படித்த கவண்கல் தொழில் நுட்பம் இங்கே காட்சியாக.!

இப்படியாக பழந்தமிழனின் அறிவியல் அறிவை இன்றைய சினிமாவின் மூலம் உலகின் முன் கம்பீரமாய்க் கொடுத்திருக்கும் செல்வாவுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.ஷாட் அமைப்பில் , ஃபிரேமிங்கில் ஹாலிவுட்டுக்கு வகுப்பெடுத்திருக்கிறார் செல்வா.

ஆனால் இது எல்லவற்றையும் விட... ஈழத் தமிழனின் போராட்டத்தை இதில் புகுத்திய விதம் பரணி பாடற்குரியது .

காட்டில் காட்டும் சோழ சாம்ராஜ்யம் பேசும் பதினெட்டாம்(பதினான்காம்?) நூற்றாண்டுத தமிழ் உரையாடல்கள்....அந்த உரையாடல்களில் ஈழத் தமிழின் பேச்சுத் தொனியையும் பல ஈழத் தமிழ் வார்த்தைகளையும் குழைத்தது ....( கதை நடப்பது ஒரு தீவில் உள்ள காட்டில்தான் .தவிர , தீவில் வாழத் துவங்கிய முதல் மனித இனமாகவும் இந்தச சோழ சமூகம் காட்டப் படுகிறது

.அதனால்தான் மொழியில்லாத நர மாமிசம் தின்னும் ஆதிவாசிகள் இவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக சொல்கிறார் செல்வா) என்று அந்த சோழ சமூகத்தை ஈழ சமூகமாகவே காட்டுகிறார் செல்வா.

அப்படியானால் எதிரியான சிங்களனைப் பாண்டியனாகக் காட்டுவது ஏன் என்று கேள்வி வரலாம

அதற்குப் பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் வரலாறு .

முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பாண்டிய மன்னனின் மணிமுடியைச் சிங்கள மன்னன் ஒருவன் அபகரித்துச் சென்றதாகவும் பகை அரசன் என்றாலும் ஒரு தமிழ் அரசனின் மணிமுடியை சிங்களன் கவர்ந்து சென்றதற்காக ராஜராஜ சோழன் வருந்தியதாகவும் தந்தையின் ஆசைப்படி பின்னாளில் ராஜேந்திர சோழன் அந்த சிங்கள மன்னனை வீழ்த்தி அதை மீட்டு வந்ததாகவும் வரலாறு சொல்கிறது .

அதை சற்று மாற்றி குலதெய்வச் சிலை ......சோழன் பாண்டியன்... என்று கதை அமைத்து இருக்கிறார் செல்வா. நேரடியாகச் சொன்னால் நமது தணிக்கைத் துறை அனுமதிக்காதே. தவிர சிங்களனுக்கு மாமனாராக இருக்கிற நமது அரசியல்வாதிகளும் சுய நல அதிகாரவர்க்கமும் பிரச்னை செய்யுமே.

தவிர இன்றைய சுழலில் பாண்டியன் என்ற குறியீடு ஒரு விதத்தில் நம் தமிழனுக்கே துரோகியாக இருக்கும் நம்மூர்த் துரோகிகளையும் குறிக்கிறதே.

அப்படியானால் பாண்டியனின் குலதெய்வச் சிலையை சோழன் திருடினான் என்று கூறுவது.. சோழனின் மீதுதான் தவறு என்ற அர்த்தம் வரும்போது அது ஈழப் பிரச்னையில் தமிழர்கள்தான் தவறானவர்கள் என்று கூறுவது போல வருகிறதேஎன்று தோன்றலாம்.

இல்லை.

சிலை திருடப்பட்ட விசயம் சொல்லப்படும் வரை கதையாகப் பயணிக்கும் படம் அதன் பிறகுதான் குறியீடாகப் பயணிக்கிறது .இப்படியெல்லாம் குழப்பாமல் நேரடியாகச் சொல்லி இருந்தால் அடுத்து செல்வராகவன் தமிழ்இன உணர்வோடு சொல்லியிருக்கும் காட்சிகளைச் சொல்ல இங்குள்ள சிங்கள அடிவருடிகள்

அனுமதிக்க மாட்டார்கள் . தவிர சிலை கவர்தல் என்பது அவர்கள் செய்த தவறுக்குப் பழிக்குப் பழியாகத்தான் என்ற புரிதலும் வருகிறது .

அபபடி என்ன சொல்லி இருக்கிறார் செல்வா என்கிறீர்களா?

ஈழத் தமிழினத்தின் குறியீடாக வரும் சோழ தேவனை(ரா.பார்த்திபன்) , சிங்கள இனக் குறியீடாக வரும் பாண்டிய இளவரசியான( பெண் அதிகாரி) நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறாள்.தியாக உணர்வோடு போரிடும் சோழர்களை பாண்டிய ஆட்கள் துப்பாக்கி ,

பாராசூட், கனரக ஆயுதம் உள்ளிட்ட வகையில் குழுக் குழுக்களாக வந்து

கொல்கிறார்கள்.(கவனிக்க: ஏழு நாட்டு ராணுவம்). சோழர்கள் வீரப் போர் தியாகப் போர் புரிகிறார்கள்(விடுதலைப் புலிகளைப் போல)

கடைசியில் சோழர்களைத் தோற்கடிக்கும் நவீன கும்பல் அப்பாவி ஆண் பெண்களைக் கட்டிவைத்து கும்பல் கும்பலாக அடைத்து வைத்து

கொடுமைப் படுத்துகிறது(முள் வேலி முகாம்கள்...!புரிகிறதா? ஆரம்பத்திலேயே சோழ தேவனிடம் ஒரு பெண் ஈழத் தமிழ் வார்த்தைகளும் தொனியும் கலந்த பண்டைத் தமிழில் முறையிடுவாள் "ஒழுங்கா சோறு கிடைக்காதது மட்டுமில்ல....மலங்கழிக்கக்

கூட வழியில்லாமல் கஷ்டப் படுறோம்"என்று)

அப்பாவிப் பெண் களைக் தனித்தனியாக ஒரு கும்பலே தூக்கிச் சென்று

கூடாரங்களில் வைத்துக் கற்பழிக்கின்றனர்(சொல்லவும் வேண்டுமோ?) இறுதியில் சோழ தேவன் ஒரு நீர் நிலை ஓரத்தில் செத்து விழுகிறார்(பிரபாகரன் உடல் என்று சிங்கள ராணுவம் காட்டிய உடல் நீர் நிலை அருகில்தானே கிடந்தது) சோழ தேவனின் குடும்பம் அழிக்கப் பட கடைசி மகனை மட்டும் அந்த மதுரைக்கார ஆனால் முற்பிறவியில் சோழனாக இருந்த இளைஞன் காப்பாற்றத் தூக்கிக் கொண்டு ஓட , சோழனின் பயணம் தொடரும் என்று படத்தை முடிக்கிறார் செல்வராகவன்.

தவிர , பிரபாகரனின் குறியீடாக வரும் சோழ தேவனின் பணிப்பெண்டிரின் முகத் தோற்றமும் பாவனைகள் பெண் விடுதலைப் புலிகளின் சாயலை ஒத்துள்ளது.

ஒரு திரைப்படம் என்ற வகையில் இதை அணுகினால் வழக்கமான

செல்வராகவன் படத்துக்கே உரிய சில ஆபாச , கழிவுக் காட்சிகள் இதிலும் உண்டு.சில லாஜிக் மீறல்கள் கூட இருப்பதாக வாதிடலாம்.

வியட்னாம் பக்கத்தில் சோழ சாம்ராஜ்யம் என்று காட்டுகின்றனர். சோழன் எப்போது அங்கே போனான்? என்று ஒரு கேள்வி

ஜப்பானில் ஆஸ்திரேலியாவில் எல்லாம் சோழர் காலத்து மிகப் பிரம்மாண்டமான கோவில் மணிகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும்போது வியட்னாம் சோழனுக்கு சுண்டைக்காய்தான். காரணம் இங்கே பிராமணர்களையும் சமஸ கிருதத்தையும் ஆதரித்த

ராஜராஜசோழன் வரலாறு மட்டுமே பாதுகாக்கப்பட்டது . அதற்கு 800 ஆண்டுகளுகு முன்பு மாபெரும் விஞ்ஞானச் சாதனையாக கல்லணை கட்டிய கரிகாலச் சோழனின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப் பட்டது . ஆக வியட்னாம் குறிப்பிடப்படுவது பிரச்னை இல்லை.

இன்றைக்கும் அங்கு வாழ்கிற அந்தச் சோழர்கள் பச்சை மாமிசம் சாப்பிடுவதாகக் காட்டுவது நியாயமா? என்றொரு கேள்வி .

அங்குள்ள காட்டுமிராண்டி மக்களோடு கலந்து அவர்களை விசுவாசியாக மாற்றிவாழும் மக்களுக்கு அந்தப் பழக்கம் இருப்பதாகக் காட்டுவது பெரிய குற்றமில்லை..

கடைசியில் விமானம் மூலம் போய்த் தாக்கும் நவீன பாண்டிய வம்சம், ஆரம்பத்தில் கால் நடையாகப் போய் ஏன் இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? இந்த சாட்டிலைட் யுகத்தில் ஒரு காரின் எண்ணையே சாட்டிலைட்டிலிருந்து பார்க்க முடியும் எனும்போது ஒரு சமுதாயம் வாழ்வதை கண்டு பிடித்து விமானத்திலேயே போய்த் தாக்கலாமே என்று கூட கேட்கிறார்கள் .இதற்கும் கூட பதில் சொல்லலாம் .ஆனால்

இவ்வளவு லாஜிக் பார்த்தால் படம் எடுக்க முடியாது சினிமா எடுக்க முடியாது என்ற பதிலே இங்கு போதுமானது .

திடீரென்று அமானுஷ்யம் போல காட்சிகள் வந்து குழப்புகிறது என்கிறார்கள் .

சும்மா இருக்கும் உங்களை நைட்ரஸ் வாயுவை முகர வைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்க முடியும் என்பது விஞ்ஞானம் என்று ஒத்துக் கொள்ளூம் நாம் ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நிற்கும் நிலையில காது கிழியும் ஒலிகளை ஏற்படுத்தி ஏன் பைத்தியமாக்க முடியாது?

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சே இல்லாமல் கற்களை மட்டும் அடுக்கி கல்லணை கட்டிய இனத்தில் .... பின்னாளில் மறைந்து போன தொழில் நுட்பங்கள் எத்தனை எத்தனையோ.அப்படி ஒரு தொழில் நுட்பமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும் .

இது ஒரு வரலாற்று விஞ்ஞான அமானுஷ்ய நுட்பப் படம் .

தவிர , இத்தனைக் குழப்பங்களையும் கொடுத்தால்தான் படத்தில் காட்டப் படும் ஈழ ஆதரவை சேதாரமில்லமல் வெளிப்படுத்த முடியும்.

இல்லாவிட்டால் நமது தணிக்கைப் பிரிவும் காவடி தூக்கு அரசியல் வியாதிகளும் சும்மா இருக்க மாட்டார்களே

படத்தில் எல்லாக் கலைஞர்களும் வியப்புக்குரிய உழைப்பை வழங்கி இருந்தாலும் ......

வருடத்துக்கு பத்துப் படங்களில் நடித்து கோடிகளால் உண்டியலை நிரப்பிக் கொண்டு போகும் நமது நடிகைகளுக்கு மத்தியில் , இந்தப் படத்தின் தரத்துக்கு மரியாதை தந்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் இந்தப் படத்துக்கு முழு உழைப்பையும் வழங்கிய நடிகை ரீமாசென்னுக்கு ஒரு கம்பீரமான கைகுலுக்கல் .

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் பற்றி உலகமே சிலாகிக்கிறது . அவதாரில் பழங்குடி மக்களை நவீன நயவஞ்சக மனிதன் அழிக்க முயல்வதும் அதை எதிர்த்து அவர்கள் வாழ முயல்வதும் நவீன மனிதனில் ஒருவனே அதற்கு உதவுவதும் கதை .

ஆயிரத்தில் ஒருவனில் பழங்குடிக்குப் பதிலாக சோழ (ஈழ) இனம்.

அவதாரில் ஒரு நவகால மனிதனே பழங்குடி மக்களின் நியாயம் உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறான்.

இதில் மதுரைக்கார இளைஞன்.

அதில் போலவே இதிலும் ஒரு தனித்துவ சமுதாயம் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது .

அவதார் கற்பனைக் கதை ..

எனவே அதில் பழங்குடி மக்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனால் இந்த இரண்டாம் ஆயிரத்தில் ஒருவன் படம் , கடந்த மே மாதம் முதல் ஈழத்தில் ரத்தமும் சதையுமாக நாம் பார்த்து வரும் தியாக வரலாறு.

அவதார் படத்தின் கதை என்னவென்றே தெரியாத காலத்தில் அப்படி ஒரு கதையை இங்கே செல்வா உருவாக்கியிருக்கிறார் .

வரைகலைத் தொழில் நுட்பம் , முப்பரிமாணத் தொழில் நுட்பம் என்று பார்த்தால் அவதார் சிகரம் தொட்ட படம். ஆனால் கருத்தியல் என்று பார்த்தால் ஆயிரத்தில் ஒருவனின் கால் தூசுக்கு ஆகாது அவதார்.

ஆனால் ஒரு கற்பனைக் கதையை , கோக்கும் பீட்ஸாவும் விழுங்கிக் கொண்டு கைதட்டி ரசித்து வசூலைக் கொட்டும் தமிழன், ஆயிரம் பிரச்னைகள் வரும் சூழலில் நேக்காக ஈழப் போராட்டத்தை திரையில் பதித்திருக்கும் ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்து 'ஒண்ணுமே புரியல ' என்று குறை சொல்லிப் புறக்கணித்து விட்டுப் போகிறான், என்னமோ எல்லா ஆங்கிலப் படங்களையும் (தமிழில் டப் செய்தாலும்) புரிந்துதான் பார்ப்பது போல.

33 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 15 கோடி ரூபாய் வசூலிக்கும் என்கிறார்கள்.இந்த நல்ல படத்துக்கு பூட்ட காசாவது வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறது மனம் .

இந்தப் படத்தை இதே பட்ஜெட்டில் ஆங்கிலத்தில் ( இண்டியன் இங்லீஷிலாவது) எடுத்து அப்படியேவோ அல்லது டப் செய்தோ வெளியிட்டிருந்தால்... அதே கோக்கும் பீட்ஸாவுமாக வந்து பார்த்து புரியாத இடங்களில் வழக்கம் போல சிரித்தோ கைதட்டியோ 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........' என்று சொல்லி இருப்பான் நம்ம

தமிழன் , மன்னிக்கவும் தமிளன் !

இந்தப் படம் தமிழனுக்குதான் புரியாது . மற்றவர்களுக்குப் புரியும்.

உணர்வு இருந்தால் படத்தின் அடிப்படையாவது புரியும்.வரலாறு நிறைய

அறிந்து திரைப்படத் தொழில் நுட்பமும் புரிந்தால் ரொம்பப் பிடிக்கும்.

என்னதான் குறைத்து மதிப்பிட்டாலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான படம்.

படத்தில் பல குறைகள் உள்ளன என்பதை (ஒரு வாதத்துக்காக ) ஒத்துக் கொள்ளும் சூழல் சில இடங்களில் வந்தால் கூட....ஈழப் போராட்டத்தை வெள்ளித் திரையில் பல இடர்ப்பாடுகளையும் மீறி அழுந்தப் பதித்திருக்கும் செல்வராகவனுக்கு ஒரு வீர வணக்கம்.

Edited by விதுரன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்களுடைய கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன், ஆனால் ஒரு மாற்றத்துடன். தமிழநாட்டு ரசிகர்களும், விமர்சகர்களும் நீங்கள் கூறிய சில விடையங்களுக்குள் உள்ளடக்கப்படுபவராக இருக்கலாம், ஆனால் எண்பத்துஏழு விழுக்காடு கல்வியறிவுள்ளவர்களாக தம்மைக்கூறிப் பெருமைப்படும் ஈழத்தமிழினத்தின் அதுவும் புலம்பெயர் தமிழினத்தின் பேதமையை எங்க சொல்லி எந்தச்சுவரில் முட்டுறது. நாற்றம் பிடித்தவர்கள், இப்போதும் யாராவது சாவான் அவனது பெயர் சொல்லி அசைலம் அடித்து வயித்தையும், தமது பணப்பைகளையும் நிரப்ப நினைக்கும் மனிதர்களை அதிகமாகக் கொண்ட புலம்பெயர் இனக்குழுமமாக இருக்குமாகவிருந்தால் அது ஈழத்தமிழர்கள் குழுவாகத்தான் இருக்கும். இதில் என்னையும் விலக்கிக்கொள்ள நான் முயற்சிக்கவில்லை. காரணம் என்னில் இருந்தே நான் ஏனையோரையும் அறிந்து கொள்கிறேன். என்ன செய்வது பாழ்பட்டுப்போன கோபம் என்னைக் கண்டபடி எழுதத்தூண்டி, வில்லங்கத்தில் மாட்டிவிடுகின்றது.

செல்வராகவா உனக்குக் கோடி வணக்கங்கள். நீ எதை மனதில் வைத்து இப்படத்தின் கதையை அமைத்தாயோ எனக்குத்தெரியாது ஆனால் இந்தப்பாழாப்போன கதை எங்களது வரலாற்றோடல்லோ ஒத்துப்போகின்றது. அதனாலே கண்களில் வடியும் நீர்த்துளிகளுடன்.........நீ மனிதனடா

'டைம்லைன்' தழுவலா ஆயிரத்தில் ஒருவன்?

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19

ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன.

இந்தப் படம் சொந்தமாக தனது மூளையில் உதித்த கதை என்றும், யாரையும் பார்த்து காப்பியடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், அப்படி ஒரு வேளை காப்பியடித்தது நிரூபிக்கப்பட்டால் தான் வைத்திருக்கும் எஞ்ஜினியரிங் டிகிரி சான்றிதழை எடுத்துக் கொண்டு வேறு வேலைக்குப் போய்விடுவேன் என்றும் மகா ஆத்திரத்தோடு இயக்குநர் செல்வராகவன் நேற்று கூறியிருந்தார்.

'தனது டிகிரி சான்றிதழை முடிந்தால் அவர் தேடி எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது', என்று கிண்டலாக சிரிக்கிறார்கள் செய்தியாளர்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதை ஏற்கெனவே 2003ம் ஆண்டு வெளியான டைம்லைன் (Timeline) என்ற படத்தின் தழுவல் என்றும் ஆதாரத்தோடு செய்திகள் வெளியாகியுள்ளன.

"செல்வராகவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக எல்லோரும் அந்தப் படத்தைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. கலை என்று வந்தபிறகு தமிழென்ன, ஆங்கிலமென்ன... நன்றாக இருந்தால் ரசிக்கப் போகிறார்கள்... இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள், அது ரஜினி - கமல் படங்களாக இருந்தாலும்" என்கிறார்கள் விமர்சகர்கள்.

"அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் தலைப்பே ஒரிஜினல் கிடையாது. கிளாடியேட்டர் போன்ற பெரும் சாதனைப் படைத்த படங்களின் காட்சியமைப்புகளை அப்பட்டமாக எடுத்தாண்டுள்ளார் செல்வராகவன். குறிப்பாக படத்தின் மையக் கரு, டைம்லைன் படத்தினை அப்பட்டமாக தழுவியதே. இதைச் சொன்னால் செல்வராகவனுக்கு ஏன் கோபம் வருகிறது...?" என்றும் கேள்வி எழுப்புகின்றனர், நேற்று அவரது பிரஸ் மீட்டில் கலந்து கொண்டவர்கள்.

ஒரு பெண் சிறுநீர் கழிப்பதை அப்படியே படமாக்குவதுதான் கலை ரசனையா? என்பது இவர்கள் கேள்வி.

சரி... டைம்லைன் படத்தின் கதை என்ன?

ஜூராஸிக் பார்க் படத்தின் கதை எழுதிய மைக்கேல் கிரிக்டன் உருவாக்கிய கதைதான் டைம்லைன்.

பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த சண்டையின்போது, பலமான ஆங்கிலேயர்களை பிரெஞ்சுப் படை தோற்கடிக்கிறது.

14-ம் நூற்றாண்டில் 'நூறாண்டுப் போர்கள்' நடந்த காலத்தில் இந்த சம்பவம் நடக்கிறது. அப்போது ஒரு பிரெஞ்சு கிராமமே முற்றாக எரிக்கப்படுகிறது.

அந்த கிராமத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய போகிறது ஒரு குழு. அப்போது அவர்கள் 14-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது மீண்டும் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் போர் மூளுகிறது.. என்று போகிறது அந்தக் கதை.

80 மில்லியன் டாலர் செலவில் 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்டு, படுதோல்வியைத் தழுவிய படம் இது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலக் கதை கிட்டத்தட்ட டைம்லைன் படத்தை ஒத்ததே என்கிறார்கள்.

இதைவிட கொடுமை, செல்வராகவனின் இந்தப் படத்தை ஈழத்து நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி சிலர் அபத்தமாக உளறிக் கொட்டுவதுதான், என்கிறார்கள் காட்டமாக.

20 நிமிட காட்சிகள் குறைப்பு!

இதற்கிடையே படம் புரியவில்லை, அருவருக்கத்தகையில் உள்ளது என்ற ரசிகர்களின் புகார், ரசிகர்கள் வருகை அடியோடு குறைந்துவிட்டதாக விநியோகஸ்தர்களின் நெருக்குதல் காரணமாக இந்தப் படத்தின் 2 பாடல்கள் உள்ளிட்ட 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Thatstamil.com

  • தொடங்கியவர்

சொந்தமாக கருத்துச் சொல்லிக்கொண்டிருந்த வசம்பு, இப்போது கவர்ச்சிப் படங்களையும், ஆபாசமான பின்னூட்டல்களையும் பிரசுரித்து வரும் மூன்றாம்தர ஊடகமான தற்ஸ்ரமிலை கொப்பியடிச்சு போடவேண்டிய நிலைக்குப் போனது காலத்தில் கோலம்

சொந்தமாக கருத்துச் சொல்லிக்கொண்டிருந்த வசம்பு, இப்போது கவர்ச்சிப் படங்களையும், ஆபாசமான பின்னூட்டல்களையும் பிரசுரித்து வரும் மூன்றாம்தர ஊடகமான தற்ஸ்ரமிலை கொப்பியடிச்சு போடவேண்டிய நிலைக்குப் போனது காலத்தில் கோலம்

நான் எனது கருத்தை எப்போதும் சொந்தமாகத் தான் எழுதி வருகின்றேன். அதுபோல் பல தடவை தற்ஸ்தமிழ் உட்பட பல ஊடகங்களின் செய்திகளை இணைத்தும் வந்துள்ளேன்.ஆனால் இப்போது நான் இணைத்த செய்தி மட்டும் நிழலிக்கு குத்தல் குடைச்சலை ஏற்படுத்தினால் நான் என்ன செய்ய முடியும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தமாக கருத்துச் சொல்லிக்கொண்டிருந்த வசம்பு, இப்போது கவர்ச்சிப் படங்களையும், ஆபாசமான பின்னூட்டல்களையும் பிரசுரித்து வரும் மூன்றாம்தர ஊடகமான தற்ஸ்ரமிலை கொப்பியடிச்சு போடவேண்டிய நிலைக்குப் போனது காலத்தில் கோலம்

இந்த மூன்றாம்தர ஊடகம் யாழில் கோலோச்சிய காலங்கள் மறந்து போனவைகளா?

இதைவிட கொடுமை, செல்வராகவனின் இந்தப் படத்தை ஈழத்து நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி சிலர் அபத்தமாக உளறிக் கொட்டுவதுதான், என்கிறார்கள் காட்டமாக.

படத்தில் வரும் சில அல்லது பல காட்சிகளோடு எமது துன்ப துயரங்களை ஒப்பிட்டு இனம்காண்பது எமது சூழல் சார்ந்து நிகழ்வதில் தவறேதும் இல்லை. முன்னர் நிழலியால் இணைக்கப்பட்ட ஒரு பாடலையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

இதன் களம் ரவுடியிசம் சம்மந்தப்பட்டது ஆனால் எம்மால் அது வேறுவிதமாக எமது சூழ்நிலைக்கேற்ப ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

http://www.youtube.com/watch?v=3OTYvliNEqw

இந்த பாடலின் களமும் வேறானது ஆனால் இது எமது உணர்வுகளை எமது சூழல் சார்ந்து ஐக்கியப்படவைக்கின்றது. இந்தப் பாடல் தனியே கருத்தளவில் அன்று சுனாமி அனர்த்தத்தின் போது தொடர்ச்சியாக வானொலிகளில் ஒலிபரப்பப் பட்டு பெருமளவு நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரட்ட உதவியது.

பிறகளங்களாகினும் பிறகளங்களின் கருக்களை மையமாக வைத்து அமைக்கப்படுவதாகினும் அவற்றை நுகர்வோராக நாம் இருக்கின்றபோது அதை எமது சூழல் சார்ந்து உள்வாங்குவது ஆரோக்கியமானதே. ஆகக் குறைந்தது எமது துயரத்தை மீள நினைவுபடுத்தவும் நம்பிக்கை பெறவும் அதை பயன்படுத்துகின்றோம் என சாதகமான நோக்கில் உணரமுடியும்.

படத்தின் இறுதிக்காட்ச்சியில் வரும் சண்டைக்காட்ச்சி சுத்தமான பூச்சுத்தல்...

துவக்குகளோடு நிக்கும் சீருடை தரித்த சிலர் வெட்ட வெ்ளிகளில் நிண்று கொண்டு சேழர்களின் படைகளோடு கைகலப்பில் ஈடுபடுவது போல நெருங்கி வந்து நிண்டு சண்டை பிடிப்பது எல்லாம் தாங்க முடியாத குறை...

நல்ல பாறைகள் நிறைந்த பிரதேசங்களில் எதற்காக அந்த சோழர்களை எதிர்க்க வந்த துவக்கு வீரர்கள் மறைவுகளின் நிண்று கொள்ளாமல் வெட்டவெளிகளுக்கு வந்தார்கள் எண்றுதான் புரியவில்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற 15ம் திகதி முதல் 17ம் திகதி வெள்ளி, சனி, ஞாயிறு காட்சிகளில் இப்படம், பிரித்தானியாவில் காண்பிக்கப்பட்ட படங்களில் அதிகவசூலில் 22ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 7 திரையரங்கில் £29,517 வசூலை அள்ளி இருக்கிறது.

http://www.filmcounciluk.com/article/16366/UK-Box-Office-15---17-January-2010

இந்த படத்தை பார்த்ததில இருந்து எனக்கு தூக்கமே வரவில்லை காரணம் சோழர்களை எவ்வளவு இழிவாக காட்ட முடியுமோ அவ்வளவு இழிவாக காட்டியுள்ளனர்.

சோழர்கள் மக்களின் உயிர்களை மதிப்பதில்லை என்ற வகையில் படத்தை எடுத்திருக்கிறார் செல்வராகவன்

மக்களின் தலையை இரும்புப்பந்தால் அடித்து கொலை செய்வது ஒரு விளையாட்டு போலவும்,அதை சோழ அரசர்கள் பார்த்து ரசிப்பது போலவும் காட்சிகளை அமைத்துள்ளார் செல்வராகவன்

சோழநாட்டு மக்கள் தற்கொடை செய்வார்கள் அரசனுக்காக என்ற கருத்தையும் புகட்டியுள்ளார்,எதற்கு எடுத்தாலும் குரல் வளையை வெட்டி தற்கொலை செய்பவர்கள் சோழமக்கள் என்ற கருத்தை நாசுக்காக காட்டியுள்ளார் செல்வராகவன்

சோழர்கள் காமபித்தர்கள் என்றும் சொல்லாமல் சொல்லியுள்ளார் செல்வராகவன்

மொத்தத்தில் சோழர்களை காட்டு மிராண்டிகளாக காட்டியுள்ளார்.அந்த சோழர்களைப் போலத்தான் ஈழத்தவர்களும் என்ற பாணியில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைகாட்டி எம்மை மட்டம் தட்டியுள்ளார்

பாண்டியர்களை சிங்களவர்களாக நினைத்து அவர்களை படித்தவர்கள் ,அமைச்சர்கள், இராணுவ அதிகாஇகள் என்று உச்சத்தில் வைத்துள்ளார் செல்வராகவன்

இந்த படத்தை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

அதாவது உங்கடை செங்குருதியில சோழம் கமகமக்கிது எண்டு சொல்லுறீங்கள்..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.