Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாய்தான் இருக்குது.அது சரி எங்கட கானிக்கை ஒரு வைரவர் சிலை

வைக்கிறது என்டாலே சிங்களவனிட்டடை அனுமதி பெற வேனுமே :rolleyes:

அதுதானே

  • Replies 86
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்கால் சம்பவம்கூட இன்றியமையாததாகவே எனக்குப்படுகின்றது.

வீட்டில எல்லாரும் சுகம்தானே? போன வருஷம் எல்லா நாட்களும் வேளாவேளைக்குச் சாப்பாடு கிடைத்ததுதானே?? தடிமன், காச்சல் என்று ஒன்றும் கஸ்டப்படவில்லைத்தானே???

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயக்கத்தில் இருந்தவர்களை கட்டினாங்களாக்கும்.

அப்ப சரி arjun. நாங்களும் றெடி.

உருப்படியான வேலைகளைச் செய்வோம்.

எல்லா பூசாரிமாரும் புலத்திற்கு வந்திட்டினம் அதுதான் தாறுமாறாக குழையடி நடக்குது :rolleyes:

வேப்பிலையும் இறக்குமதியாகிறதாம் புத்தன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

***

பாத்தியளோ எண்ட சமூககல்வி வாத்தி என்ன ஏமாத்தி போட்டார், சாத்திரியாருக்கு சொல்லி கொடுத்ததை எனக்கு சொல்லி கொடுக்க இல்லை, நாலு பக்கமும் கடல் சூழ்ந்தது தீவு எண்டும் மூன்று பக்கம் கடலும் ஒரு பக்கம் நிலமும் சூழ்ந்த்து தீபகற்பகம் என்று சொல்லி ஏமாத்தி போட்டார் :):lol::lol:

19க்கு பிறகு சனம் எல்லாம் நிறம் மாறுது அது போல யாழ்பாணமும் தீவாக மாறி விட்டது, சிறீலங்கா தீபிகற்பகமாகமாறிவிட்டது, இப்படித்தான் எல்லாத்தையும் மாத்துகினமோ தெரியவில்லை. :lol:

எத்தனையோ பாத்து விட்டோம் இதையும் பாக்கமாட்டமோ, எல்லா சனத்துக்கும் நல்ல குழையடி எங்கேயோ நடக்குது, எது வரை என பார்ப்போம். :lol::lol::lol:

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

சித்தன் நான் தவறாக அரத்தம் கொண்டு விட்டேன் மன்னிக்கவும்..தீவையும்..தீபகற்பத்தையும் குழப்பிட்டன்.நன்றி

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒற்றுமை "கொடி கட்டிப் பறக்கிற" நேரத்தில் சாத்திரியின் கட்டுரை அந்த ஒற்றுமைக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்குது. நல்லது சாத்திரியார். சாத்திரியார் யாழில வந்து "நான் முன்னால் புலி" எண்டு சொன்ன நேரம், நெடுக்கர் அந்த திடீர் அறிக்கையிடலைப் பற்றி சந்தேகம் வெளியிட்டிருந்தார். அது நியாயமான சந்தேகம் தான் போல..பணி தொடரட்டும் சாத்து. இனியென்ன பிழைப்பு எந்தப் பக்கம் இழுக்குதோ அங்க போக வேண்டியது தானே இதுக்கேன் சுத்தி வளைப்பான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் சும்மா பகிடி பகிடியாய் எழுதி இருந்தாலும் உண்மையில சிந்திக்க வைக்கிற கட்டுரை. கன விடயங்கள் கனக்க பேருக்கு கசந்தாலும் மறுக்க முடியாத உண்மைகள். ஒரு நல்ல விடயம் என்ன என்றால் இன்னும் இந்த கட்டுரை களத்தில் இருந்து தூக்கப்படவில்லை.

சாத்திரியார், நீங்கள் ஊரை விட்டு கிளம்ப முன்னம் கோடி வேலிக்க நாலு கதியாலை சுப்பண்ணை தள்ளிப்போட்டவர் எண்டு சொன்னனியள். இப்ப நிலமை என்ன என்று அதையும் ஒருக்கா பாத்துக்கொண்டு வாங்கோ இந்த முறை போகேக்கை சரியோ?

Edited by samiyar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒற்றுமை "கொடி கட்டிப் பறக்கிற" நேரத்தில் சாத்திரியின் கட்டுரை அந்த ஒற்றுமைக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்குது. நல்லது சாத்திரியார். சாத்திரியார் யாழில வந்து "நான் முன்னால் புலி" எண்டு சொன்ன நேரம், நெடுக்கர் அந்த திடீர் அறிக்கையிடலைப் பற்றி சந்தேகம் வெளியிட்டிருந்தார். அது நியாயமான சந்தேகம் தான் போல..பணி தொடரட்டும் சாத்து. இனியென்ன பிழைப்பு எந்தப் பக்கம் இழுக்குதோ அங்க போக வேண்டியது தானே இதுக்கேன் சுத்தி வளைப்பான்

ஜஸ்ரின் நான் யாழில் வந்து நான் முன்னால் புலி என்று விட்ட அறிக்கையை அந்த திரியை ஒருக்கால் தேடி எடுத்துத் தரவும் ..ஏனென்றால் நான் எந்தக்காலத்திலும் யாழில் வந்து முன்னால் புலி என்று அறிக்கை விட்டது கிடையாது...அதே நேரம் என்னுடைய பிழைப்பிற்கும்..நான் எழுதியிருக்கும் விடயத்திற்கும்..உள்ள சம்பந்தத்தையும் தெளிவு படுத்தினால் எனக்கும் புரியும்;...ஊரில் உள்ள மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயிப்பது தவறா??அதனை வெளிநாடுகளில் உள்ளவர்வர்கள் திணிக்கவேண்டாம்..என்பது எனது வாதம்..அது பிழையாக உங்களிற்கு தோன்றினால் அது ஏன் பிழை என்பதனை தெளிவாக முன் வையுங்கள்..நன்றி

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்று திசைமாறி தனிப்பிட்ட விருப்பு வெறுப்புக்களோடு போராட்டக்கதை பேசுவோர் அதிகரித்துள்ளனர்!

திசைகள் மாற்றப்பட்ட பயணங்கள் பயணிக்க முன்பே முட்டுக்கட்டை போடுவதற்காய் நிரயாய் பலர் தம்மை தயார்ப்படுத்தி கொண்டுள்ளனர்.விடுதலைக்காய் எமது இனம் கொடுத்த விலையும் அவர்களது அர்பணிப்பு கட்டுரைக்குள், கவிதைகக்குள் தனி மனித பேச்சுக்குள் கொச்சைப்படுத்தப்படுகின்றது.

இதன் பெயர் அக்கறையா? இல்லை அனாமதேய நக்கலா?!

எமது இனம் கொடுத்த விலையில் எனது பங்கும் சேர்ந்தேதான் உள்ளது நிதர்சன் அவை வெற்றிடமாகவேயுள்ளது.. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது நான் அந்த விலையை கொச்சப் படுத்தியிருப்பதை நிருபித்தால் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன்..மற்றும்படி என்னிடமிருந்து வெளிப்பட்டிருப்து ஆதங்கம்..அவ்வளவுதான்..

உங்கள் ஆதங்கம் சரியாவே இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குள் வெளிக்காட்ட முடியாத சோகமும், கோபமும் இருப்பதை உணரமுடிகின்றது. கையாலாகதனத்துடன் தாயகத்தில் மக்கள் இருக்கின்றனர் என்பதை பலருடன் பேசியதிலிருந்து அறிய முடிந்தது. 100 க்கு அறுபது வவீதமான மக்கள் ஏதோ ஓருவகையயில் போராட்டத்துடன் சம்பத்தப்பட்டு அவை பற்றி தொடர்ந்து பேச முடியாமல் தாயகத்தில் இருக்கின்றனர். அவர்களது குரலாய் நாம் (நாங்கள் எல்லோரும்) ஒலிப்பத தவறாகுமா? களத்தில் வீரச்சாவடைந்த ஒவ்வோரு போராளியின் கனவுககளையும் புலம்பெயர்ந்த மக்கள், பிரதிபலிக்க விரும்புகின்றனர். அதற்க்குள் இருக்கும் அமைப்பு சார், தனிநபர் சார் போட்டிகளுக்கு அப்பால் மக்கள் அப்பழுக்கற்ற நல்ல சிநந்தனையோடு தான் செயற்ப்படுகின்றனர்.

நீங்கள் சொன்னது போல கனடாவில் குடியுரிமை பெற்றவர்களுக்கு தழிழீழத்தின் அவசியம் இல்லாத போது அதை ஏன் தாயக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.?

உங்ககளையும் உங்கள் கருத்துக்களையும் மட்டும் நான்குறிப்பிடவில்லை சாத்திரியரே!

எமக்குள் பலர், அமைபு சார், தனிநபர் சார் போட்டிகளுக்குள் தாயகத்தில் எமக்காக மடிந்த வீரர்களை மறந்து கட்டுரைகளையும், கவிதைகளையும் வரைவது ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளது.

தாயக மக்கள் தமிழீழம் வேண்டாம் என்பது கூட அந்த மக்கள் எமது வீரர்கள் சிந்திய குருதியை, அவர்களது அப்பழுக்கற்ற தியாகதத்தை புரியாதவவர்களாகவும்,அவர்களது தியாகத்தை கொச்சைப்படுத்தியவர்களாகவுமே கணிகக்கப்படுவார்கள்.

மீண்டும்... புலம்பெயர்வாழ் தமிழ் பேசும் மக்களாகிய நானும் நீங்களும் எமக்காக, அல்லது எமது சுயத்தின் விழிப்புக்காக தமிழீழத்தை அடையவிரும்பவில்லை. அது தாயகத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காகவே!

தவறாக ஏதாவது எழுதியிருந்ததால் மன்னிக்க...!

வட்டுக்கோட்டைக்கு வாக்கு போட போகேல்லையோ

ஊரிலை கூட்டமைப்பு தாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் தான் தீர்வு என்பதில் உறுதியாகவிருக்கின்றோம் என்று அறிக்கையும் விட்டு விட்டார்கள். சனம் வேறு வட்டுக்கோட்டை, நாடு கடந்த தமிழீழம் என்று உச்சரித்தால் வாய்க்கரிசி போடுற நிலையிலை இருக்கினம். இந்த நிலையில் இப்ப எங்கே வாக்கெடுப்பு நடக்குது. பணச் சடங்கல்லோ நடக்குது. :):lol:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஒரு தீபகற்பம்...யாழ்ப்பாணம் ஒரு குடா என்றுதான் சின்னவயதிலை சமூகக்கல்வி வாத்தியார் சொல்லித் தந்த ஞாபகம்..யாழ்ப்பாணத்தை தீபகற்மாய் மாத்திட்டாங்களா??? :lol:

நீங்கள் எல்லாம் பத்திரிகைக்கு கட்டுரை எழுதிறீங்கள்?

ஆனையிறவு பாலத்தை விடுத்து யாழ்பாணத்தை வரைபடத்திலேனும் பார்த்ததுண்டா?

அவனையும் இவனையும் சாடி உங்கள் போன்றோரால் வாழமுடியுமே தவிர. சுயமாக எதுவும் முடியாது என்பதை நீங்களே அடிக்கடி எழுதுகின்றீர்கள்.

தொடருங்கள்.....................

ஏன் தோற்றோம் என்பதற்கான பதில் இதற்குள் உண்டு ஐயா....

தமிழனின் தலை எழுத்து இது..

மாற்றவேண்டும்

தங்களைப்போன்றோர் நிறைய எழுதவேண்டும்

நேரத்தை ஒதுக்குங்கள்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி தாங்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தையும் போட்டு எழுதியிருப்பதால் நானும் நேரடியாகவே எழுதுகின்றேன்

இதுதான் எமது இனத்தின் சாபக்கேடு

எனக்கு முன்பு தமிழக உறவு சொன்னதாக ஞாபகம்

தன்னைவிட மற்றவன் அறிவாளி என்று சொல்லும் யாழ்ப்பாணதமிழன் ஒருவனை காட்டமுடியுமா என்று...

இந்த சாபக்கேடு தொடர்கிறதுதங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அது தெரிகிறது

நான் இங்கு தங்களைப்பற்றி சில இடங்களில் விசாரித்தேன்

கவனம்.....???

என்றே பதில் வந்தது

மன்னிக்கவும்

வெளிப்படையாக எழுதுவதற்காக....

வணக்கம் விசுகு நீங்கள் சொன்னதைப் போலவே இன்று நேற்றல்ல இயக்க விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலத்திலிருந்தே பகிரங்கமாகத்;தான் எனது கருத்துக்களை சொல்லியும் எழுதியும் வருபவன் திருடர்கள் தான் ஒழித்திருந்து கதைப்பார்கள்....அதே போல நீங்கள் வெளிப்படையாக சொல்லதென்று விட்டு எதையுமே சொல்லவில்லையே யார் யாரிடம் விசாரித்தீர்கள் என்றும் யார் யார் என்ன சொன்னார்கள் என்றும் வெளிப்படையாகவே எழுதலாம்..பயப்படத் தேவையில்லை...கவனம் என்பதற்கு பல அர்த்தங்கள் எடுக்கலாம்.. அது எந்தக் கவனம் என்பதை தெளிவாக எழுதவும்...அல்லது இங்கு எழுத தயங்கினால் அல்லது பயந்தால் எனது இலக்கத்திற்கு தொ.பே எடுத்து சொல்லவும் நன்றி..0611149470

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் நான் யாழில் வந்து நான் முன்னால் புலி என்று விட்ட அறிக்கையை அந்த திரியை ஒருக்கால் தேடி எடுத்துத் தரவும் ..ஏனென்றால் நான் எந்தக்காலத்திலும் யாழில் வந்து முன்னால் புலி என்று அறிக்கை விட்டது கிடையாது...அதே நேரம் என்னுடைய பிழைப்பிற்கும்..நான் எழுதியிருக்கும் விடயத்திற்கும்..உள்ள சம்பந்தத்தையும் தெளிவு படுத்தினால் எனக்கும் புரியும்;...ஊரில் உள்ள மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயிப்பது தவறா??அதனை வெளிநாடுகளில் உள்ளவர்வர்கள் திணிக்கவேண்டாம்..என்பது எனது வாதம்..அது பிழையாக உங்களிற்கு தோன்றினால் அது ஏன் பிழை என்பதனை தெளிவாக முன் வையுங்கள்..நன்றி

நேதாஜி தனது இராணுவ கட்டமைப்பை இந்தியாவிற்கு வெளியில் வைத்தே கட்டினார். காரணம் பாதுகாப்பானதும் எதிர்பாரத நேரத்தில் களம் இறக்கும் எண்ணமும்................ இந்திய விடுதலை என்பதில் அவருக்கிருந்த இலட்சிய உறுதியுமாகும். அப்போது வெள்ளையனுக்கு அடிமைகளாக கிடந்து அதில் சந்தோசம் கண்ட இந்தியர்கள் இலட்சம் அளவில் இருந்தார்கள்தான். அதற்காக தனது சொந்த நாட்டின் தலைவிதியை மாற்ற நேதாஜிக்கு உரிமையில்லை என்று புலம்ப நீங்கள் யார்?

அடிமைவாழ்வு உங்களுக்கு இனிக்கிறாதா? சுவையுங்கள் ஏதோ தெரிந்த தமிழை வைத்து நாலு கட்டுரை வடியுங்கள். ஏன் எதற்கு என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்க போவதில்லை.

அதற்காக புலத்தில் உள்ளவர்களுக்கு போராட அனுமதி கொடுக்கும் அதி உயர்சானிஸ்தர் வேலையில்லாம் உங்களுக்கு எட்டாதது. (என்று நான் சொல்லவில்லை நீங்கள்தான் எழுதுகின்றீர்கள்) தாயத்தில் உள்ள மக்கள்?

அது புலத்தில் உள்ளவர்களின் தாயும் தந்தையும் அண்ணனும் அக்காளும் பிள்ளைகளும்.................... எமது குடும்ப சுமைதாங்கியாகத்தான் பொருளாதார நெருக்கடியை சமளிக்க இருந்த ஒரே வழிதான் புலபெயர்வு. இந்த இடைவெளியை வைத்து அப்படியே எமக்கான உறவை நீங்களும் ஈப்பிடிபியும் தான் பிரிக்கின்றீர்கள். அதற்கான சரியான காரணத்தை நீங்கள்தான் எழுத வேண்டுமே தவிர.

உங்களுக்கு நாங்கள் விளக்கங்கள் எழுத வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

மருதங்கேணி ஜயாவிற்கு வணக்கங்கள்..நேதாஜி வெளி நாட்டில் அதாவது மலேசியாவிலும்..சிங்கப்பூரிலும் பர்மாவிலும் தன்னுடைய இராணுவ கட்டமைப்பை கட்;டினார்..அவரது இராணுவ கட்டமைப்பிற்கு அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய இராணுவ பலம் கொண்ட ஜெர்மனியும் ஜப்பானும் பின் புலமாக நின்றது..அவர் கட்டமைத்த இராணுவ அமைப்புடன் தானும் நேரடியாக களமிறங்கி இந்தியாவில் மணிப்பூர் மானிலம் வரை இங்கிலாந்து இராணுவத்துடன் மோதியபடி முன்னேறினார்.அதே நேரம் அவரின் இராணுவ அமைப்பிற்கு இந்தியாவிலும் தொடர்புகளும் உறுப்பினர்களும் இயங்கி வந்தனர்....நேதாஜியின் முன்னேறும் இராணுவத்துடன் அவர்களும் இணைந்து போரிட்டனர்.. வரலாறுஎங்களிற்கும் தெரியும்...அதே போல புலம் நீங்களும் போராடுவதற்கு ஒரு இராணுவ அமைப்பினை கட்டமைத்து இலங்கை இராணுவத்துடன் போரிடுவதற்காக உங்கள் படையணியை இலங்கையில் கொண்டு போய் இறக்குவதற்காக தயாரிப்புக்களை மேற் கொள்ளுங்கள் அதே போல நிலத்தில் வாழும் மக்களையும் இன்றைய காலத்திற்கேற்ப ஆயுதமேந்தி போராட தயார் படுத்துங்கள்.உங்களிற்கு பின்புலமாக ஒரு வல்லரசையாவது உதவிக்கு அழையுங்கள்.. அந்த படையணியின் முதலாவது சிப்பாயாக நான் முதல் வரத் தயார்..முதலாவது சிப்பாயாக எனது பெயரான சிறி என்பதனை இணையுங்:கள்.. விலாசம் தொ.பே இலக்கங்களும் யாழில் பகிரங்கமாக இட்டுள்ளேன்..அதைவிட்டு நீங்களும் முடிந்தால் தெரிந்த தமிழில் ஏதாவது எழுதுங்கள்..வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்கு கேளுங்கள் பிழைப்பை நடத்துங்கள்.இன்று யேர்மனியிலும் சுவிசிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்கு கேட்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வாய்கூசாமல் துரோகிகள் என்று எழுதுதியும் சொல்லியும் வருகிறார்களே அவர்களை விமர்சிக்கும் உரிமையை உங்களிற்கு தந்தது யார்?? அதற்கான உரிமை உங்களிற்கு என்ன உள்ளது?? அவர்களை இணைப்பதற்கான பின்னால் நடந்த பெரும் முயற்கிகள் ஏதாவது உங்களிற்கு தெரியுமா???.??.இறுதியாக எனக்கு விளக்கம் எழுத வேண்டிய தேவை இல்லையென்று நீங்களே எழுதி விட்டு எதற்காக விளக்கம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள் நன்றி.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் நான் யாழில் வந்து நான் முன்னால் புலி என்று விட்ட அறிக்கையை அந்த திரியை ஒருக்கால் தேடி எடுத்துத் தரவும் ..ஏனென்றால் நான் எந்தக்காலத்திலும் யாழில் வந்து முன்னால் புலி என்று அறிக்கை விட்டது கிடையாது...அதே நேரம் என்னுடைய பிழைப்பிற்கும்..நான் எழுதியிருக்கும் விடயத்திற்கும்..உள்ள சம்பந்தத்தையும் தெளிவு படுத்தினால் எனக்கும் புரியும்;...ஊரில் உள்ள மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயிப்பது தவறா??அதனை வெளிநாடுகளில் உள்ளவர்வர்கள் திணிக்கவேண்டாம்..என்பது எனது வாதம்..அது பிழையாக உங்களிற்கு தோன்றினால் அது ஏன் பிழை என்பதனை தெளிவாக முன் வையுங்கள்..நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53350

உங்களிடம் கந்தப்பு நேர்காணல் செய்து இருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53350

உங்களிடம் கந்தப்பு நேர்காணல் செய்து இருந்தார்.

நுணாவிலான் இதலிpருந்தே உங்கள் புரிதல் புலனாகின்றது..இப்படித்தான் உங்கள் விடுதலை மற்றும் தேசியம் பற்றிய புரிதல்களும் அவசரமானது என்பதனை உறுதிப் படுத்துகின்றது..எனவே இனிமேலாவது அவரப்பட்டு எழுந்தமானமான தீர்மானங்களை தயவு செய்து எடுக்காதீர்தீர்கள்..மருதங்கேணியும் இதனைத்தான் நான் யாழில் அறிக்கை விட்டதாக அவசரப்பட்டு எழுதியிருந்தார் என்பதும் எனக்கு தெரிந்துதான் திரியை இணைக்கச் சொல்லி கேட்டிருந்தேன்...இந்த நீங்கள் இணைத்த நேர்காணல் என்பதும் கந்தப்பு என்னிடம் கண்ட நேர் காணல் அல்ல....இந்த நேர்காணல் என்பது மோகன் கந்தசாமி என்கிற நபர் தன்னுடைய இணையத்தளத்திற்கான நேர்காணலில் நான் வழங்கியிருந்த பதில்களை கந்தப்பு யாழில் இணைத்திருந்தார்..சாதாரணமான இந்த விடயங்களை கூட கவனிக்காத அல்லது புரிந்துகொள்ள முடியாத உங்களால் எப்படி ஒரு இனத்தின் தேசியம் வாழ்வாதாரம் உணர்வுகள் ..தேவைகள் என்பவற்றை எப்படி புரிந்து கொள்ளப் போகிறீர்கள்.. தயவு செய்து பதில் செல்லுங்கள்..ஓடி ஒழியாதீர்கள்..

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் நீங்கள் கேட்ட இணைப்பை கேட்டபடியால் தான் அவ்விணைப்பை கொடுத்தேன்.கீழுக்கும் எழுதி உள்ளேன் கந்தப்புவால் இணைக்கப்பட்டது என்று. அது தவறு கந்தப்புவால் இணைகக்ப்பட்டது என வந்திருக்க வேண்டும்.அது சரி நான் ஏன் ஓட வேண்டும்?? எனக்கு அரசியல் ஞானம் உங்கள் அளவுக்கு இல்லை.ஏனெனில் நான் அரசியல் வாதி இல்லை.சாதரணமானவன். பேட்டி கொடுத்தால் எங்கென்றாலும் அதற்கு ஏன் தயங்குகிறீர்கள்? கொடுத்தனான் என்று துணிந்து சொல்ல வேண்டியது தானே.

நுணாவிலான் எங்கே த... ய... ங்... கி.. னேன்.. என்னுடைய செவ்வி என்று சொல்வதற்கு.. மற்றும்படி கந்தப்பு நேர்காணல் செய்திருந்தார் என்று அழுத்த திருத்தமாக தமிழில் எழுதியுள்ளீகள்.கந்தப்புவால் இணைக்கப் பட்டது என்று எழுதியிரக்கவில்லை...திரும்பவும் படிக்கவும்..உங்கள் தவறை தவறு என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு நீங்கள் சொன்னதைப் போலவே இன்று நேற்றல்ல இயக்க விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலத்திலிருந்தே பகிரங்கமாகத்;தான் எனது கருத்துக்களை சொல்லியும் எழுதியும் வருபவன் திருடர்கள் தான் ஒழித்திருந்து கதைப்பார்கள்....அதே போல நீங்கள் வெளிப்படையாக சொல்லதென்று விட்டு எதையுமே சொல்லவில்லையே யார் யாரிடம் விசாரித்தீர்கள் என்றும் யார் யார் என்ன சொன்னார்கள் என்றும் வெளிப்படையாகவே எழுதலாம்..பயப்படத் தேவையில்லை...கவனம் என்பதற்கு பல அர்த்தங்கள் எடுக்கலாம்.. அது எந்தக் கவனம் என்பதை தெளிவாக எழுதவும்...அல்லது இங்கு எழுத தயங்கினால் அல்லது பயந்தால் எனது இலக்கத்திற்கு தொ.பே எடுத்து சொல்லவும் நன்றி..0611149470

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் கருத்தை வைத்தபடியால் தங்களைப்பற்றியும்

என்னைப்பற்றி மட்டுமே குறிப்பிடமுடியும்

இயக்கத்திலிருந்ததாக சொல்லும் தாங்கள் சாட்சியை காட்டிக்கொடு என்று கேட்பது...

ஆனால் எமது தேடல் இத்துடன் நின்றுவிடாது...

எல்லோருடனும் நாம் சந்திக்கும் காலம் வரும்

அதுவரை..

மற்றும் தங்களது எழுத்துக்களையும் பேட்டிகளையும் நீண்டநாட்களாக கவனித்து ஏமாந்ததனாலேயே ...

இங்கு கருத்தை முன் வைத்தேன்

இதோ தங்களது சிலோன் தமிழர்கள் என்ற சொல்லுக்கான பதில் தங்களிடமிருந்தே....

நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.

நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அ�

  • கருத்துக்கள உறவுகள்

Pழளவநன 03 ஆயசஉh 2009 - 11:22 யுஆ

அன்புள்ள சாத்திரி அண்ணாவுக்கு பேராளிகளில் முன்னாள் போராளி இன்னாள் போராளி என்றெல்லாம் கிடையாது.அண்ணையினுடைய தலைமைத்துவத்தை உண்மையாகவே ஏற்றுக்கொண்ட எந்த ஒரு போராளியும் தான் மாவீரர் ஆகும் வரைபோராளியாகவே வாழ்ந்து மடிவான்.அவன் போர்களத்தை விட்டு வெளியேறினாலும் தாயக விடுதலைக்கான பணிகளை செய்துகொண்டுதான் இருப்பான்.வெளியில் இனம்காட்டாமல் பல நூற்றுக்கணக்கான போராளிகள் தாயக விடுதலைக்கான தங்கள் பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் முன்னாள் தலைவர் என்பது போல் முன்னாள் போராளி என்ற பதம் தங்களை கொச்சைபடுத்தவது போல் அமைந்துள்ளது.

அத்துடன் போராளிகள்யாரும் நேர்காணல் கொடுப்பதை இயக்கம் அனுமதிப்பதில்லை.குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்த அனுமதியுண்டு.இங்கே கருத்தெழுதும் பலர் இவர் அங்கே இருக்கிறார்.அவர் இங்கே இருக்கிறார். என்று எழுதுகிறார்கள்.சில வேளைகளில் அந்த நபர் போராட்டத்தை விட்டு முற்றாக ஒதுங்கியிருக்கலாம்.அல்லது தாயக செயற்பாட்டில் இணைந்திருக்கலாம்.இப்படியான தகவல்கள் எதிரிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.இப்படி முன்னாள் போராளிகள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் பேட்டி கொடுக்க வெளிக்கிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஏதிரிக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தது போலாகிவிடும்.இது எனது தாழ்மையான கருத்து

வுhளை pழளவ hயள டிநநn நனவைநன டில யவாலையn: 03 ஆயசஉh 2009 - 10:25 Pஆ

இது ஒரு ஈழத்தமிழனின் கருத்து 2009 பங்குனியில்.....எனது கருத்தும் அதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தாயகத்தில் சிங்கள ஆதிக்கமும் இந்திய வல்லாதிக்கமும் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது தாயகத்தில் கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சேமிப்புக்களை வைப்பதை விட்டு சர்வதேச வங்கிகளில் வைப்புக்களை வைக்க சர்வதேச வங்கிக் கிளைகளை வடக்குக் கிழக்கிற்கு எடுத்து வர வேண்டும்.

புலம்பெயர் மக்கள் மேற்குலக பல்கலைக்கழகங்களோடு ஒன்றிணைந்து தனியார் உயர்கல்வி நிறுவனங்களை வடக்குக்கிழக்கு எங்கனும் நிறுவி தமிழ் மக்களின் கல்வி அறிவூட்டலையும் அடுத்த நூற்றாண்டிற்கு அவசியமான தொழில்நுட்பக் கல்வியையும் வழங்க வேண்டும். பெருகி வரும் ஆசியப் பொருளாதார போட்டி தொழில்நுட்பக் கல்வி கற்ற உயர் கல்வியாளர்களின் தேவைகளை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்வதோடு மேற்குலகில் இருந்து வரும் விஞ்ஞானக் கல்வியில் அக்கறையின்மை அதற்கான தேவையை இன்னும் அதிகரிக்கும்.

தமிழர்கள் தமிழர் பிராந்தியங்களின் பிரதான முதலீட்டாளர்களாக இருப்பதோடு பெறப்படும் பொருளியல் வளத்தைக் கொண்டு தமிழர் தேசத்தின் உட்கட்டுமானங்களை வளப்படுத்த வேண்டும்.

கொங்கொங் சிங்கப்பூர் போன்று நாமும் துரிதமாக வளரும் சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்தின் பார்வையை செல்வாக்கை எம்மை நோக்கி திருப்பி சிங்கள ஆதிக்கத்திற்கும் எதிரான எமது அரசியல் விடுதலைக்கான குரலை உலகு செவிமடுக்கச் செய்ய முடியும்.

தமிழர்கள் இயன்றவரை சேமிப்புக்களை குறைத்துக் கொண்டு உட்கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் வர்த்தகம் கல்வி சுகாதாரம் சேவைகள் சுற்றுலாத்துறை என்று முதலீடுகளில் அவற்றை இட்டு தமிழர் தேசங்களை வளமிக்கதாக்குவதோடு எமது வளங்களை நாமே பயன்படுத்தும் நிலைக்கு வரவேண்டும். அந்நியருக்கு எமது வளங்கள் சிங்கள ஆதிக்க சக்திகளால் விற்கப்படுவதும் எமது வளங்களைச் சுரண்டி எடுக்க வரும் அந்நியமுதலீட்டாளர்களை முறியடிக்கவும் நாம் விரைந்து செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் வன்னி மற்றும் திருமலை மட்டக்களப்பை மையமாக வைத்து இந்திய சீன முதலீட்டாளர்களும் கல்வி நிறுவனங்களும் படையெடுக்கும் இன்றைய காலத்தில் நாம் எமது தேசத்தின் உட்கட்டுமானங்கள் கல்வி மற்றும் இதர தேவைகளை அடுத்த நூற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில் கட்டி எழுப்ப வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் அழிவோடு ஐரோப்பா எப்படி எழுச்சி கண்டதோ அப்படிக்கு நாமும் எமது தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

சிங்கள ஆதிக்க சக்திகளும் இந்திய சீன ஆதிக்க சக்திகளும் எமது வளங்களைச் சுரண்டி இலாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது. அந்த நிலையை தவிர்த்து நாம் சர்வதேச அளவில் பேசக் கூடிய அளவிற்கு எமது பொருளியலை கட்டி எழுப்பி செல்வாக்குள்ளவர்களாகும் நிலை வரின் நிச்சயம் கொங்கொங் சிங்கப்பூர் போன்று நாமும் ஒருநாள் உலகால் வியந்து பார்க்கப்பட்டு எமது அரசியல் உரிமைகள் தொடர்பில் உலகை நோக்கி காத்திரமான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தைப் பெறலாம்.

ஆயுதப்போராட்டம் ஊடான விடுதலை என்பது சாத்தியப்படாத நிலையில் எமது போராட்ட வடிவங்களை எமது தேசத்தின் வளர்ச்சியோடு ஒருமித்துக் கொண்டு இட்டுச் செல்ல வேண்டும். ஏற்கனவே சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள எமது தேசத்தைக் கட்டி எழுப்பி எமக்கு தேவையான அத்துணை வளங்களையும் சேவைகளையும் நாமே எமது தேசத்தில் நிறைவு செய்யும் போது சிங்கள ஆதிக்கத்தில் இருந்து நாம் முழுமையாக விடுதலை பெற முடியும்.

எமக்கான நவீன துறைமுகங்கள்.. விமான நிலையங்கள்.. வைத்தியசாலைகள்.. பல்கலைக்கழகங்கள் என்று சர்வதேசத்தோடு இணைந்து நாம் பணிகளை முன்னிட்டுச் செல்லும் போது சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு தடைபோட முடியாது. எமது தேசம் எங்கனும் நவீன கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். நெடிய அதிவேக வீதிகள் மேம்பாலங்கள் நவீன அதிவேக தொடரூந்து நிலையங்கள் நடுத்தர சர்வதேச விமான நிலையங்கள் என்று எமது தேசத்தை எமது மனித மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி கட்டி எழுப்ப வேண்டும்.

வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 4 துறைமுகங்களாவது அமைக்க வேண்டும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான வழியை எம்மை நோக்கி இழுக்க வேண்டும்.

வெறுமனவே தமிழீழம் அமையும்.. அப்போது மட்டுமே ஊருக்குப் போக வேண்டும் கட்டுமானம் கட்ட வேண்டும் என்றிருப்பதும் நன்றல்ல. அதேபோன்று ஏதோ கொலிடேக்குப் போனம் இடம்பார்த்தம் விடீயோ எடுத்தம் என்ற நிலையும் இல்லாமல் போக வேண்டும்.

பொருளியல் பலத்தைக் காட்டி எமது அரசியல் பலத்தை வெல்ல நாம் எனிப் போராட வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஜப்பான் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியா மிக விரைந்து வளரும் பொருளியல் சக்தியாக உள்ளது. இந்த நிலையில் மேற்குலகம் பொருளியலில் பிந்தங்கிச் செல்லும் சூழல் இருப்பதால் அவர்களுக்கு தெற்காசியாவில் தமது நட்புப் பொருளியல் தளம் ஒன்று உருவாவது எதிர்க்கப்படக் கூடியதல்ல. அதேவேளை ஆசிய பொருளியல் சக்திகளோடு நேரடிப்பகை பாராட்டாது அதேவேளை அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லாது சிங்கள தேசம் எமக்கு அளிக்கும் அல்லது கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்திய அரசியல் உரிமையை எமக்கு சாதமாக்கிக் கொண்டு நாம் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே தமிழர் தேசத்தை அடுத்த நூற்றாண்டில் உலகம் வியக்க முன்னேற்றிச் செல்ல முடியும்.

கள்ளக்காட் போட்ட தமிழனா இப்படி எழுந்து நிற்கிறான் என்று இந்த உலகம் எம்மை உற்றுநோக்க வேண்டும். ஒரு பொருளியல் பலம் மிக்க இனமாக நாம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் இந்த உலகம் எம்மைப் போட்டு மிதித்திருக்குமா..??! சிங்கப்பூரை எந்த நாடாவது போருக்கு இழுக்குமா..??! இல்லை. அது இராணுவ பலத்தால் அல்ல பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பொருளியல்பலத்தால் அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

நாம் சிந்திக்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசை அரசியல் ரீதியில் தமிழர்களின் தேவையைச் சொல்லிக் கொண்டிருக்க நிறுவிக்கொண்டு தாயகத்தை எமது பொருளாதாரத்தை வளங்களைக் கொண்டு நாமே கட்டி எழுப்ப வேண்டும். சிங்கள ஆதிக்கம் மற்றும் இதர சக்திகளின் ஆதிக்கத்துக்குள் எமது பொருண்மியம் வளம் செல்ல அனுமதிக்கக் கூடாது. தமிழீழம் வரும் வரை காத்திராமல் நாம் இன்றே செயற்பட வேண்டும்.

தொடர்ந்து தாயகம் புலம்பெயர் மக்கள் என்று பிரித்துப் பேசிக் கொண்டிராமல் இரண்டு மையங்களும் இணைந்து செயற்படும் நிலை உருவாக வேண்டும். எம்மிடம் உழைக்கும் சக்தி இருக்கிறது. பொருண்மிய திறன் இருக்கிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு இருக்கிறது. சிறந்த உல்லாசப்பிரயாணத்துறைக்கான வழிமுறைகள் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது உலகில் வளர்ந்து வரும் இரண்டு பெரிய பொருளியல் சக்திகள் இருக்கும் கேந்திர ஸ்தானத்தில் இருந்து கொண்டும் எமது நிலத்தை வளத்தை சுடுகாடாக விட்டுவிட்டு குளிர்நாடுகளில் கூலிக்கு மாரடிப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதிலும் அந்தக் கூலியில் இருந்து முதலாளி ஆகும் நிலைக்கு நாம் வளர முயற்சிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை.

எள்ளி நகையாடல்கள் அல்ல..!

தேவை இல்லாத நக்கல், நையாண்டிகளையும், பழம் பெருமைகளையும் பேசிக்கொண்டிருப்பதை விட்டு விட்டு இது போல் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யலாமே????

இதில் நானும் ஒன்றை இணைக்க விரும்புகிறேன்....

இன்றைய பொருளாதார வளர்சிக்கு முக்கியமாக இருப்பது பங்கு சந்தைகள்...

அதில் இலங்கையில் உள்ள சில பெரிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்....

புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றே தமிழகத்தில் உள்ள பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்..

ஆனால் களத்திற்க்கு வந்த பிறகு தான் தெரிகிறது இங்கு உள்ள நிலை...

நம்மில் உள்ள வேறுபாடுகளை முதலில் களைந்து விட்டு நல்லது எதாவது செய்வோம் (முடிந்தால்)....

அர்ஜுன் உங்கள் தேடலுக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது என்று நம்புகிறேன்...

மன்னியுங்கள் எம்மை

எம்மோடு கூடப்பிறந்தது இது

பிரபாகரனாலேயே முடியவில்லை இதை ஒழிக்க......

அதற்கு அவரே பலியானார் என்பது மிகவும் வேதனையான உண்மை..

நன்றி

தங்களது நேரத்திற்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் கருத்தை வைத்தபடியால் தங்களைப்பற்றியும்

என்னைப்பற்றி மட்டுமே குறிப்பிடமுடியும்

இயக்கத்திலிருந்ததாக சொல்லும் தாங்கள் சாட்சியை காட்டிக்கொடு என்று கேட்பது...

ஆனால் எமது தேடல் இத்துடன் நின்றுவிடாது...

எல்லோருடனும் நாம் சந்திக்கும் காலம் வரும்

அதுவரை..

மற்றும் தங்களது எழுத்துக்களையும் பேட்டிகளையும் நீண்டநாட்களாக கவனித்து ஏமாந்ததனாலேயே ...

இங்கு கருத்தை முன் வைத்தேன்

இதோ தங்களது சிலோன் தமிழர்கள் என்ற சொல்லுக்கான பதில் தங்களிடமிருந்தே....

நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.

நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அ�

வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.

மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்..விசுகு

Pழளவநன 03 ஆயசஉh 2009 - 11:22 யுஆ

அன்புள்ள சாத்திரி அண்ணாவுக்கு பேராளிகளில் முன்னாள் போராளி இன்னாள் போராளி என்றெல்லாம் கிடையாது.அண்ணையினுடைய தலைமைத்துவத்தை உண்மையாகவே ஏற்றுக்கொண்ட எந்த ஒரு போராளியும் தான் மாவீரர் ஆகும் வரைபோராளியாகவே வாழ்ந்து மடிவான்.அவன் போர்களத்தை விட்டு வெளியேறினாலும் தாயக விடுதலைக்கான பணிகளை செய்துகொண்டுதான் இருப்பான்.வெளியில் இனம்காட்டாமல் பல நூற்றுக்கணக்கான போராளிகள் தாயக விடுதலைக்கான தங்கள் பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் முன்னாள் தலைவர் என்பது போல் முன்னாள் போராளி என்ற பதம் தங்களை கொச்சைபடுத்தவது போல் அமைந்துள்ளது.

அத்துடன் போராளிகள்யாரும் நேர்காணல் கொடுப்பதை இயக்கம் அனுமதிப்பதில்லை.குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்த அனுமதியுண்டு.இங்கே கருத்தெழுதும் பலர் இவர் அங்கே இருக்கிறார்.அவர் இங்கே இருக்கிறார். என்று எழுதுகிறார்கள்.சில வேளைகளில் அந்த நபர் போராட்டத்தை விட்டு முற்றாக ஒதுங்கியிருக்கலாம்.அல்லது தாயக செயற்பாட்டில் இணைந்திருக்கலாம்.இப்படியான தகவல்கள் எதிரிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.இப்படி முன்னாள் போராளிகள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் பேட்டி கொடுக்க வெளிக்கிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஏதிரிக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தது போலாகிவிடும்.இது எனது தாழ்மையான கருத்து

வுhளை pழளவ hயள டிநநn நனவைநன டில யவாலையn: 03 ஆயசஉh 2009 - 10:25 Pஆ

இது ஒரு ஈழத்தமிழனின் கருத்து 2009 பங்குனியில்.....எனது கருத்தும் அதுதான்

அந்தக் குறிப்பிட்ட ஒரு சிலரில் நானும் ஒருவன் என்று வைத்துக் கொள்ளுங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.