Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு அங்கிள் தொடர்ந்து எழுதுங்க...படிக்க ஆவாலாய் இருக்கிறோம்....... :lol::lol:

  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் முகத்தாரண்ண, பெரியப்பு அந்த சுட்டியை தந்தால் நாமும் பார்ப்போமே.

நல்ல கருப்பொருள் முகத்தார்.

தாயகத்தில் சொந்த தெரிவால் இருந்து சேவையாற்றுபவர்கள், வெளிநாடு சென்று பின்னர் பங்களிப்பு செய்வேண்டும் என்று ஆர்வத்தோடு திரும்பி தாயகத்து அதிகரித்த நிபுணத்துவத்தோடு வருபவர்கள் என இரு தரப்புமே தேவை.

ஏல்லோருமே தாயகத்திலிருந்து விட்டால் மருத்துவத்துறை மாத்திரமல்ல பல துறைகளில் நிபுணத்துவங்கள், தொழில்நுட்ப வழர்ச்சிகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இன்று எமது சமுதாயத்திற்கு கிடைத்திருக்காது.

சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் ஊரில் ஏனோ தானே என்று மாட்டுப்பட்டு கிடக்கிறோம் என்று புழுங்கிக் கொண்டு பொறுப்பில் இருப்பவர்கள் சில வேளைகளில் மாற்றங்களின் முன்நேற்றங்களிற்கு தடையாக இருக்கிறார்கள். இவர்களை விட புலத்தில் பிறந்து, அல்லது சிறு வயதில் வந்து வழர்ந்தவர்கள் தாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போதும் தாயகத்திற்கு பங்களிப்பு செய்ய என செல்பவர்கள் பல மடங்கு மேல்.

முகத்தார் வீடு அசத்தல்..! வெளிநாடுகளில் கற்கும் பெறும் அறிவு மற்றும் அநுபவங்களை தாயகத்தோடு பகிர்ந்து கொளப்படுவது அவசியம்..! இன்று பல்கலைக்கழகங்களே நேரடியா பல கல்விசார் சாரா துறைகளில் ஒருவருக்கு ஒருவர் சேவைகள் மற்றும் விடயங்களைப் பகிர்ந்துகொள்கின்றன....!

மேலும் சிங்கள மாணவர்கள் தாய் நாட்டின் மீது வைத்திருக்கும் அக்கறை போல தமிழ் மாணவர்களிடம் இல்லை..! வெறும் சுயநலப்போக்குக்தான் அதிகம்..! மற்றவர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்ல தமிழர்கள் பின்னிற்பதில்லை..! ஒரு சிலரே தங்களை செயல்வீரர்கள் ஆக்குகிறார்கள்..! அவர்கள் அமைதியாக அதை சாதித்தும் விடுவார்கள்..! அப்படியான தமிழ் மாணவர்களையே தமிழர் கல்விச் சமூகம் உருவாக்க வேண்டும்...! வெறும் பெயருக்கும் புகழுக்கும் சேவை அளிக்க வருபவர்களிடம் தாயகப்பற்று என்பது கிடைக்க வாய்ப்பில்லை...! அவர்களிடமிருந்து அவசியமான சேவைகள் நேர்த்தியாகப் பெறப்படலாம் என்றும் எதிர்பார்க்க முடியாது..! :P :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி அக்காவின்ட அறிவுரை மெத்தச் சரி, எங்கட ஆக்கள் அறிவுரை செய்வினம் அதுவும் இலவசமா இணயத்தில பிளந்து கட்டுவினம்.போராட்டத்திற்கு ஒரு சதமோ இல்லாடி அவயின்ட உழப்பயோ குடித்திருக்க மாட்டினம்.

இன்றய இணய யுகத்தில புலத்தில இருந்து கொன்டே கன வேலை களத்தில செய்யலாம்.எதுவுமே செய்யாம தங்கட சொந்த வேலயப் பாத்துகொண்டு ,இணயத்துக்க பதுங்கி இருந்துகொண்டு மற்றவைக்கு அறிவுரையும் ,ஆலோசனையும் பிளந்து கட்டுவினம் எங்கட தமிழ் ஆக்கள்.

ஆஹா... நன்றாக இருக்கின்றது முகத்தார்.

வாழ்த்துக்கள்.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நன்றாக இருக்கு முகத்தார் ஐயா தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் :P

அங்கிள் சூப்பர். தாயகத்தில் தமது சேவையை வழங்குவது எவ்வளவு ஒரு பெருமைக்குரிய விடயம் என்பதை பலர் விளங்கிக்கொள்கிறார்கள் இல்லை.

ஆனால் புலத்தில் படிக்கும் (மருத்துவம்) பலர் தாயகத்தில் தம் சேவையை அளிக்க போவதாக கூறுகிறார்கள். பாரட்டப்பட வேண்டிய விடயம்.

முகத்தார் கலக்கிறீங் போங்க இன்னும் நிறைய விடயங்களை எதிர்பார்க்கின்றேன்.

தாத்தா கலக்கிவிட்டீங்கள் அதுதான் நீங்கள் போட்டு வைத்திருந்த ரீயைத்தான் சுூப்பராக இருக்கு தொடர்ந்து இவ்வாறு கலக்குங்கள் புதுப் புது விடையங்களை.

உங்கள் ஆக்கங்களை லண்டன் ஒரு பேப்பரில் பார்க்கும் போது மிக்க சந்தோசமாய் இருந்தது.

டாக்டர் : குளிசை தேவையிலை ஊசி ஒண்டு போட்டு விடுறன் டக் கெண்டு வலி குறைஞ்சிடும்

முகத்தார் : அப்ப ஜயா நான் வேட்டியை கொஞ்சம் இறக்கி விடட்டே. . .

டாக்டர் : அது உங்கடை விருப்பம் ஆனா நான் ஊசியை கையிலைதான் போடப் போறன்

:lol::lol::lol::lol:

முகத்தாரில் புதிய தொடர்கள் நல்ல கருப்பொருட்களை தாங்கி வருவதை மகிழ்ச்சியாக இருக்கின்றது. சிரிக்க வைக்கும் அதே நேரம் சிந்திக்க வைக்கவும் செய்கின்றீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் முகம்ஸ்.

:lol::lol: ஆகா...அங்கிள்..சூப்பர்..தொடருங்

:lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol:

டாக்டர் : எத்தனை நாளா கால் வலி உங்களுக்கு இருக்கு

முகத்தார் : பொட்டுக்கிலாலை புகுந்த நாளிலை இருந்து ஜயா. .

டாக்டர் : என்ன பொட்டுக்கிலாலையோ ?

ரொம்ப நல்லா எழுதுறீங்க முகத்தார் அங்கிள்... :P

சரி அதென்ன பொட்டுக்கிலாலை ... அதுக்குள்ள புகுந்த நாளில் இருந்தா... :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டுக்கிலாலை போறது என்பது வந்து, வேலிக்குள்ள சிறு துவாரம் வைத்து அதனு}டாக போகின்றது. போகும்போது கஸ்டப்பட்டுத் தான் போகவேண்டும். புரிகின்றதோ குழந்தாய் :wink:

பொட்டுக்கிலாலை போறது என்பது வந்து, வேலிக்குள்ள சிறு துவாரம் வைத்து அதனு}டாக போகின்றது. போகும்போது கஸ்டப்பட்டுத் தான் போகவேண்டும். புரிகின்றதோ குழந்தாய் :wink:

ஆகா அப்படியா... துவாரம் என்றது வேலில வாற ஓட்டையை தானே சொல்லுரீங்க... சரி சரி விளங்குது .. நன்றி .. :lol: சரி ஏன் அதுக்குள்ளால போகோணும் முன் வாசல் இருக்கும் தானே அதால போகேலாதா ? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அப்படியா... துவாரம் என்றது வேலில வாற ஓட்டையை தானே சொல்லுரீங்க... சரி சரி விளங்குது .. நன்றி .. :lol: சரி ஏன் அதுக்குள்ளால போகோணும் முன் வாசல் இருக்கும் தானே அதால போகேலாதா ? :roll:

எங்கள் சனத்துக்கு பின்கதவாலே போய்த் தானே பழக்கம். பழக்கதோசத்தை மாத்தேலுமா?

பின்கதவு என்பதுக்கு அர்த்தம் கேட்காதீங்க, :wink: :lol:

எங்கள் சனத்துக்கு பின்கதவாலே போய்த் தானே பழக்கம். பழக்கதோசத்தை மாத்தேலுமா?

பின்கதவு என்பதுக்கு அர்த்தம் கேட்காதீங்க, :wink: :lol:

ம்ம் ஒழுங்கா முன் வாசலால வந்திருந்தால் முகத்தார் அங்கிள் க்கு இந்த மாதிரி கால் வலி வந்திருக்குமா...? சரி பழக்க தோசத்தை மாத்தேழாதெண்டு சொல்லுறீங்க..ஒண்டும் செய்யேலாது.. :wink: :lol:

அட பின்கதவு எண்டால் என்ன எண்டு தெரியுமே பயப்பிடாதீங்க இதுக்கெல்லாம் அர்த்தம் கேக்க மாட்டன் :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் ஒழுங்கா முன் வாசலால வந்திருந்தால் முகத்தார் அங்கிள் க்கு இந்த மாதிரி கால் வலி வந்திருக்குமா...?

அங்கிளுக்காக ரெம்பப் பரிதாபப்படுகின்றியள். அவர் கொஞ்சம் கஸ்டத்தில இருக்கின்றாராம். என்ர வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட்டியள் என்றால் கொடுத்து விடுகின்றேன். :wink: :lol:

அங்கிளுக்காக ரெம்பப் பரிதாபப்படுகின்றியள். அவர் கொஞ்சம் கஸ்டத்தில இருக்கின்றாராம். என்ர வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட்டியள் என்றால் கொடுத்து விடுகின்றேன். :wink: :lol:

ம்ம் அதுக்கென்ன அப்படியே உங்க வங்கியின் விலாசத்தை எழுதிவிடுங்க ... சரி அனுப்பினா முகத்தார் அங்கிள் கையில கிடைக்கும் தானே .... :wink: :roll: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் அதுக்கென்ன அப்படியே உங்க வங்கியின் விலாசத்தை எழுதிவிடுங்க ... சரி அனுப்பினா முகத்தார் அங்கிள் கையில கிடைக்கும் தானே .... :wink: :roll: :lol:

அனுப்புங்கோவன் பாப்பாம். 8) 8) :lol:

அனுப்புங்கோவன் பாப்பாம். 8) 8) :lol:

ஆகா இது அவர்ட கையில கிடைக்கது போல இருக்கு அங்கிள் வந்தோன்ன எதுக்கும் கேட்டுட்டு அனுப்புறன்... :wink:

குழந்தாய்யை ஏமாத்தி காஸ் வாங்க பாக்குறீங்க போல .. :lol: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன இங்க ஒரே சில்லெடுப்பாக் கிடக்குது.ஒரு காசு அனுப்ப இவ்வளவு கஸ்ட்டப் படுறியள்.

அப்படி தூயவன் ஏமாத்துவார் எண்டா, என்ன மாதிரி ஒரு நம்பிக்கை , நாணயமான மனிசனிட்டத் தந்தா ,முகத்தானின்ட்ட குடுக்கிறன்.

என்ன உண்டியல் தானே போடுவியள், புளுகர் பொன்னையா,சுன்னாகம் கள்ளுத் தவறணை,4 ஆம் கட்டை,சுன்னாகம். எண்டா அது வந்து சேரும்.புளுகர் எண்டா ஊர் முழுக்க யாரெண்டு தெரியும்.என்னத் தெரியாதவை ஒருத்தரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு.

இதென்ன என்ர பிழைப்பில மண் அள்ளிப்போடவெண்டே திரிகின்றியள்? பதிலுக்கு நானும் அள்ளிப் போடவேண்டிவரும். :evil: :lol:

  • தொடங்கியவர்

முகத்தார் வீடு அங்கம் 13

(முகத்தார் வெளி விறாந்தையில் படுத்திருக்கிறார் இந்த நேரம் சாத்திரி அங்கு வறார்)

சாத்திரி : என்ன முகத்தான் முகட்டைப் பாத்து யோசிச்சுக் கொண்டிருக்கிறாய் என்ன விசயம்?

முகத்தார் : அட..அட..டே சாத்தரியே வா.. . .வா . .இந்த வயசிலை என்னத்தை யோசிக்கிறது சும்மா படுத்திருக்கிறன்

சாத்திரி : பிள்ளையளை சொகுசா வெளியிலை அனுப்பிப்போட்டு தனியக் கிடந்து ஏன் யோசிக்கவேணும்

முகத்தார் : நான்மட்டுமே இஞ்சை கன பேரின்ரை நிலை இதுவாத்தானே கிடக்குது அது சரி இந்த வாழ்க்கையை விட்டுட்டு எங்களை குளிருக்கைப் போய் சாகச் சொல்லுறீயே

சாத்திரி : நல்ல சாட்டு உங்களுக்கு இந்த சொத்துப் பத்துகளை விட்டுட்டுப் போக மனமில்லை எண்டு சொல்லன்

முகத்தார் : இப்ப தனிய இருக்கிறது பிரச்சனையில்லை சாத்திரி வெளிநாட்டுக்காசு வரத் தொடங்க மனுசிக்காரியும் சோம்பேறியாப் போனாள் ஒருவேலையும் செய்யிறாள் இல்லை சாப்பாட்டை கூட கடையிலை எடுத்தா என்னவெண்டு கேக்கிறாள் எனக்கும் முந்தின மாதிரி வேலைசெய்ய உடம்பு விடுகுதில்லை

சாத்திரி : பின்னை 2 பேருக்கு என்னத்தை சமைச்சுக் கிழிக்கப்போறீயள் ஒரு வித்தியாசத்துக்கு கடையிலை சாப்பிட்டாத்தான் என்ன. . . ?

முகத்தார் : ஆனா சாத்திரி எங்கடை வயசுக்கு வருத்தங்கள் எங்கை எண்டு எட்டிப் பாக்குது இதுக்கை கடைச் சாப்பாட்டை திண்டு அதுக்கு வழி திறந்து விட்டமாதிரி போயிடுமே

சாத்திரி : அதுவெண்டால் உண்மைதான் ஆனா எங்கடை பெண்டுகளுக்கு இது விளங்குதில்லை என்ரை வீட்டிலும் இதே விளையாட்டுத்தான் என்ன செய்யிறது

முகத்தார் : எனக்குப் சமைக்கிறது பெரிய வேலையில்லை மனுசிகாரி ஒருசின்னசப்போட்டுத் தரலாம்தானே முந்தநாள் சட்டிபானை கழுவுறன் மனுசிக்காரி வந்து ஏதோ உதவி செய்யிறன் எண்டுட்டு பானை ஒண்டை எடுத்து கையிலை வைச்சு நிண்டநிலையிலை கழுவினா நான் சொன்னன் அம்மா. . பானையை கையிலை வைச்சு கழுவப்பிடாது எண்டு டக் எண்டு கையை விட்டுட்டாள் பானை நெருங்கிப் போச்சு பாத்தியளே கையிலை வைச்சுக் கழுவாட்டி இப்பிடித்தான் விழுந்துடையும் என்கிறாள் அப்ப என்ன செய்யிறது. . . .

சாத்திரி : முகத்தான் உன்ரை பிரச்சனை விளங்குது இப்பிடியான சின்னசின்ன வேலைக்கு ஒரு பிள்ளையை வீட்டோடை வைச்சிருந்தா நல்லம்தானே

முகத்தார் : பிள்ளையெண்டா நீ சொல்லுறது எனக்கு விளங்கேலையே

சாத்திரி : அதுதாண்டா வேலையாள் மாதிரி ஒரு பிள்ளையை வைச்சிருந்தால் தொட்டாட்டு வேலைகளுக்கு சுகம் எண்டு சொல்லுறன்

முகத்தார் : இந்தக்காலத்திலை எங்கை போய் இதுகளைத் தேடுறது

சாத்திரி : நீ ஓம் எண்டு சொல்லு எனக்கு தெரிஞ்ச ஒருஆள் இருக்கிறார் இந்த சுனாமியாலை பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அகதி முகாம்களிலை இருக்குத்தானே மனுசன் கொண்டு வந்து தரும்

முகத்தார் : சாத்திரி என்ன சொல்லுறாய் அந்த பாவப்பட்ட பிள்ளைகளை கொண்டு வந்து வேலை வாங்கிற அளவிலை என்ரை மனநிலை இல்லைக் கண்டியோ. .

சாத்திரி : முகத்தான் நீ ஏன் அப்படி நினைக்கிறாய் இஞ்சை எத்தனை பேர் முகாங்களுக்குப் போய் தங்கடை சொந்தக்கார பிள்ளை எண்டு கூட்டி வந்து வீட்டோடை வைச்சிருக்கினம்

முகத்தார் : அப்பிடி கூட்டிட்டு போற ஆட்கள் தங்கடை சொந்தப் பிள்ளை மாதிரிப் பாத்திச்சினம் எண்டால் பிரச்சனையில்லை இதை விட்டுட்டு தங்கடை பிள்ளைகளை ஒரு மாதிரியும் இந்தபிள்ளைகளை ஒருமாதிரியும் பாத்தால் அது கடவுளுக்கே அடுக்காது

சாத்திரி : முகத்தான் நீ நினைக்கிற மாதிரி தமிழ்ச் சனம் செய்ய மாட்டுதுகள் அங்காலை தென்னிலங்கைப் பகுதிலை நிறைய நடந்திருக்கு எண்டு அறிஞ்சன்

முகத்தார் : சாத்திரி எங்களுக்கு தெரியவரேலை எண்டு சொல்லு எங்கடை சனத்திலையும் இப்பிடி மனநிலையுள்ள ஆட்கள் இருக்கத்தான் செய்யினம் ஏதோ வெளிப்பகட்டுக்காக உதவி செய்யிறதெண்டு கூட்டிட்டுப் போய் பிறகு தங்கடை சுயரூபத்தை அந்த பிஞ்சிட்டைக் காட்டுவினம்

சாத்திரி : இப்ப அகதி முகாமிலை சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படுகிற இந்தப் பிள்ளைகளை தங்களோடை கூட்டிட்டுப் போய் சாப்பாடு குடுத்து வைச்சிருக்கிறதே பெரிய உதவிதானே

முகத்தார் : சாத்திரி குழந்தைகளுக்கு தனிய சாப்பாடு குடுத்தா காணுமெண்டு நீ நினைக்கிறாய் சின்ன வயசிலை அப்பா அம்மாவை இழந்த பிள்ளைகளின்ரை மனத்தாக்கத்தை அறிய வேணும் இப்பிடி கூட்டிட்டுப் போற ஆட்கள் தாங்களே அந்தப் பிள்ளைக்கு அப்பா அம்மாவா மாறி தங்கடை பிள்ளைகளோடை சரி சமனா நடத்தவேணும் அப்பிடி செய்தால்தான் அந்த பிள்ளைகள் சாதாரண நிலைக்கு வருவதுக்கு சந்தர்ப்பம் இருக்கு கண்டியோ. . .

சாத்திரி : எங்கையடாப்பா இப்பிடிச் சனம் செய்யப் போகுது சொந்த சகோதரத்தின்ரை பிள்ளையையே பிரித்துப் பாக்கிறதுகள் அந்த பிள்ளைகளையா பாக்கப் போகுதுகள்

முகத்தார் : அதுதான் சொல்லுறன் அப்பிடி மனநிலை இல்லாத ஆட்கள் பேசாமல் இருக்கிறதுதான் என்னதுக்கு பேருக்கு கூட்டிட்டு வந்து அந்த பிள்ளைகளை மேலும் காயப்படுத்த வேணும்

சாத்திரி : முகத்தான் அந்த காலத்திலை மலைநாட்டுப் பக்கம் வாத்தி தொழிலுக்கு போண சனம் என்ன செய்தது கஷ்ட்டப்பட்ட குடும்பத்துக்கு உதவி செய்யிறதெண்டு இஞ்சை வீட்டு வேலைக்கு பிள்ளையளை கொண்டு வந்தவையெல்லோ

முகத்தார் : பாத்தியே படிப்புச் சொல்லிக் குடுக்கிற வாத்திமாரே பிழை விட்டிருக்கினம் பிறகென்ன. .

சாத்திரி : இதுக்கை ஓடருக்கு கூட்டி வந்து சொந்தக்காரருக்கு குடுத்த ஆட்களும் இருக்கினம்

முகத்தார் : சாத்திரி என்னைப் பொறுத்த மட்டிலை வீட்டிலை கஷ்;டமெண்டால் வேலைக்கு ஒரு ஆளை வைக்கிறது தப்பில்லை அதுக்காண்டி படிக்கிற பள்ளிக்கூடம் போற அப்பா அம்மா இல்லாத பிள்ளைகளை வைச்சிருக்கிறது மன்னிக்கமுடியாது

சாத்திரி : அட . . நீ ஏதோ கஷ்டப்படுகிறாய் உதவி செய்வம் எண்டு பாத்தன் இதுக்கு இன்னோரு வழியிருக்கு பொண்ணம்மாக்கா காதிலை போட்டியெண்டா நீ யொரு வேலையும் செய்யவேண்டி வராது அவவே எல்லாம் செய்வா. . .

முகத்தார் : அதென்ன ஜடியா சொல்லு பாப்பம் . . .

(இரகசியமாக முகத்தாரிடம் சொல்லி விட்டு சாத்திரியார் போகிறார்)

பொண்ணம்மா : என்ன சமையல் இன்னும் தொடங்காமல் கூட்டாளியோடை என்ன கதை வேண்டிக்கிடக்கு

முகத்தார் : ஒண்டுமில்லையப்பா இப்ப எல்லாம் முந்தின மாதிரி வேலை செய்ய உடம்பு ஒத்துவருகுதில்லை. அதுதான் சாத்திரியிட்டை சொல்லிக் கொண்டிருந்தனான்

பொண்ணம்மா : அதுக்கு என்னவாம் சொல்லிப் போட்டுப் போறார் கூட்டாளி. .

முகத்தார் : 25 வயசிலை ஒரு பெம்பிளைப்பிள்ளை இருக்காம் விருப்பம் எண்டால் சொல்லச் சொன்னான் சேர்த்து விடுகிறானான் எனக்கும் ஒத்தாசை இருக்கும்தானே நீர் என்ன சொல்லுறீர். . . .?

(பொண்ணம்மாக்கா எதுவும் பேசாமல் அறைக்குள் போய் சிறிது நேரத்தில் திரும்பி வாறா)

முகத்தார் : இப்ப எங்கையப்பா சீலையை உடுத்துகொண்டு கிளம்பிட்டீர். . . ?

பொண்ணம்மா: இருங்கோ வாறன் ஒருக்கா முனியம்மாவைச் சந்திச்சுப் போட்டு. . . .

முகத்தார் : (மனசுக்குள்) அப்பா சாத்திரி இண்டைக்கு மட்டும் மாட்டினா. . சங்குதான்டீ உனக்கு. . . .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.