Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே துரோகிகள் , என முத்திரை குத்தும்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே துரோகிகள் , என முத்திரை குத்தும் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசியவாதிகள்(?)

[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 12:41.34 மு.ப | இன்போ தமிழ் ]

maviirareast2010.jpg

சிறி லங்காவின் ஆறாவது அரசுத் தலைவர் தேர்தல் சில படிப்பினைகள்

சிறி லங்காவில் நடந்து முடிந்த ஆறாவது அரசுத் தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்குக் குறைவான வாக்குகளும், சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அவருக்குக் கூடுதலான வாக்குகளும் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்தல் முடிவானது, சிறி லங்கா என்பது இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை மற்றுமொருமுறை உணர்த்தி நிற்கிறது. அத்துடன், தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப் பட்டதை அடுத்து தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு விடுவார்கள், சிங்கள தேசத்துக்கு அஞ்சி ஒடுங்கி சரணாகதி அடைந்து விடுவார்கள் என்ற சிங்களப் பேரினவாதிகளின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி உள்ளது.

இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச படுதோல்வியத் தழுவுவார் என்றே தமிழ் மக்களில் அநேகர் எதிர்பார்த்தார்கள். எதிர்பார்த்தார்கள் என்பதை விட விரும்பினார்கள் என்பதே மிகப் பொருத்தமானது. அதற்கு எதிர்மாறாக, விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிக்கக் காரணமாய் அமைந்த மகிந்தவிற்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் படியான தோல்வி ஒன்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற சிந்தனையே சிங்கள மக்களில் அநேகர் மகிந்தவிற்கு வாக்களிக்கும் நிலையைத் தோற்றுவித்தது எனலாம். வழக்கமாக ஐ.தே. கட்சியின் செல்வாக்குப் பிரதேசங்கள் எனக் கருதப்படும் இடங்களில் கூட இம்முறை மகிந்த ராஜபக்சவிற்குக் கிடைத்த அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைக் கொண்டு இதனை ஊகித்துக் கொள்ளலாம்.

சிங்கள, தமிழ்த் தேசங்களின் சிந்தனையோட்டத்தில் நிலவும் முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டுள்ள இந்தத் தேர்தல் மூலம், விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியல் தோற்கடிக்கப்பட்டமை சிங்கள மக்களுக்கு எத்துணை தூரம் மகிழ்ச்சியான விடயம் என்பதுவும், தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதை தற்போதைய நிலையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதுவும் நன்கு வெளிப்பட்டுள்ளது.

தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் உள்ளமை உணர்த்தப் பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியற் சக்திகளுக்கு ஆதரவு வழங்கவும், பேரினவாதிகளின் பின்னே செல்லும் கைக்கூலிகளை நிராகரிக்கவும் தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் இத்தேர்தல் வெளிப்படுத்தி உள்ளது.

1949 முதல் தமிழ் மக்களின் குரலாகப் பரிணமித்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பரிணாமம் பெற்றுள்ள கட்சிக்கு என்றென்றும் தமிழ் மக்களின் ஆதரவு தொடரவே செய்கின்றது என்பது இத்தேர்தலில் மீண்டும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அக்கட்சி பின்பற்றி வரும் கொள்கையே இதன் பிரதான காரணம் எனினும், ஏனைய தமிழ் விரோதக் கட்சிகள் மீதான வெறுப்பும் ஒரு உபரிக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இம்முறை தமிழ் மக்கள் வாக்களித்த விதத்தை உற்று நோக்கும் போது ஒருவிடயம் நன்கு புலனாகின்றது. கிழக்கு மாகாணத்தில் - குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் - தமிழ் மக்கள் உற்சாகமாகவும், உறுதியாகவும், தைரியமாகவும் கலந்து கொண்ட அளவிற்கு யாழ் குடாநாட்டு மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டவில்லை. அச்சுறுத்தல் காரணமாகவே யாழ் குடாநாட்டு மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதை விடவும் அக்கறையின்மை காரணமாகவே அவர்கள் வாக்களிக்கவில்லை எனக் கூறுவதே பொருத்தமானது.

karuna21.jpg

ஏனெனில், அச்சம் காரணமாக வாக்களிப்பைத் தவிர்ப்பதானால் மட்டக்களப்பு மக்களும் வாக்களித்திருக்க முடியாது. மாறாக, அவர்கள் அச்சமடையவும் இல்லை, கருணா குழுவினரால் வீசியெறியப்பட்ட எலும்புத் துண்டுகளான ஆயிரம் ரூபாய், சாராயப் போத்தல் என்பவற்றால் சலனம் அடையவும் இல்லை. கைத்துப்பாக்கியை நெற்றியில் வைத்து அச்சுறுத்திய நிலையிலும் கூட அதனைக் கவனத்தில் கொள்ளாமல் மகிந்தவிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.

* ‘மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே கருணா குழுவினர், துரோகிகள்’ என முத்திரை குத்தும் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசியவாதிகள்(?) சிலர் இதன் பிறகாவது தமது திருவாய்களை மூடிக் கொள்ள வேண்டும்.

மறுபுறம், மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதிலும் கூட, தமிழர் விகாரத்தைக் கையாளும் விடயத்தில் தனது அணியில் உள்ளவர்கள் எவருமே பொருத்தமான நபர்கள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருப்பார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடாத்தி தமிழர் விவகாரத்தைக் கையாளப் போவதாக அவர் அறிவித்திருப்பதை இதன் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மகிந்தவின் இந்த அறிவிப்பு ஈ.பி.டி.பி.யினருக்கு ஏற்படுத்தியுள்ள உதறலின் வெளிப்பாடாகவே டக்ளஸ் தேவானந்தாவின் பதவி விலகல் நாடகத்தையும், யாழ் குடாநாட்டில் வலிந்து ஏற்பாடு செய்யப்பட்ட கடையடைப்பையும் நோக்க வேண்டியுள்ளது. இடது சாரித் தத்துவத்தைக் கரைத்துக் குடித்த டக்ளசுக்கு தமிழ் மக்களின் இதயத் தடிப்பை அறிந்து கொள்ள முடியாமற் போயுள்ளமை விந்தையிலும் விந்தை.

* தமிழ்த் தேசியத்தையே தாம் ஆதரிப்பதாக தேர்தல் முடிவு மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளமை மகிந்த தரப்பிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகவே கோப்பாய் மற்றும் சாட்டி மாவீரர் துயிலும் இல்லங்கள் அடித்து நொருக்கப் பட்டுள்ளன. ஆனால், இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் மனங்களில் இருந்து பிரபாகரனின் நினைவை அகற்றிவிட முடியும் என மகிந்தவோ, டக்ளசோ, கருணாவோ நினைத்தால் முடிவில் எமாந்தே போவார்கள் என்பது நிச்சயம்.

* இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்க தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்திருந்தாலும், தமிழ்த் தேசிய அரசியலின் இதயம் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டில் தமிழ் மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்களித்திருந்தமை பாராதூரமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம். அதிலும், வாக்களித்திருந்தோரில் இளையோரின் பங்களிப்பு மிக மிகக் குறைந்திருந்தமையானது விசேட கவனத்துக்கு உரியது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்த் தேசிய அரசியலின் இயங்கு சக்தியாக விளங்கி வந்த இளையோர், மாறியுள்ள காலச் சுழலில் அரசியலை விட்டுத் தூரப் போக நினைப்பது ஆபத்தான அறிகுறி.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக பணி காத்திருக்கின்றது. குடாநாட்டில் வாக்களிக்க மனமின்றி இருக்கும் 75 வீதமான மக்களையும் அடுத்துவரும் பொதுத் தேர்தலுக்கு இடையில் வாக்களிக்கும் மனோ நிலைக்குக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய முகங்களையும் - அடிப்படைக் கோரிக்கையோடு சமரசம் செய்யாத வகையில் - புதிய கோசங்களையும் அறிமுகஞ் செய்ய வேண்டும்.

ஒரு அரசியல் இயக்கத்தின் வெற்றி அடித்தட்டு மக்களை அதிகளவில் வென்றெடுப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய ஒரு சக்தியாக விளங்குவதாககத் தெரியவில்லை. எனவே, பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இச் சந்தர்ப்பத்தில் அதன் தலைவர்கள் விரைவாகவும், விவேகமாகவும் செயற்படுவதே சாலச் சிறந்தது.

சண் தவராஜா

நன்றி - இன்போதமிழ்

* தமிழ்த் தேசியத்தையே தாம் ஆதரிப்பதாக தேர்தல் முடிவு மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளமை மகிந்த தரப்பிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகவே கோப்பாய் மற்றும் சாட்டி மாவீரர் துயிலும் இல்லங்கள் அடித்து நொருக்கப் பட்டுள்ளன. ஆனால், இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் மனங்களில் இருந்து பிரபாகரனின் நினைவை அகற்றிவிட முடியும் என மகிந்தவோ, டக்ளசோ, கருணாவோ நினைத்தால் முடிவில் எமாந்தே போவார்கள் என்பது நிச்சயம்.

அதாவது தலைவர் பிரபாகரனை மனதிலை வைத்து இருக்கும் மக்கள் தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்குகளை போட்டனர் எண்டு சொல்ல வருகினம்... அதுதான் தேசிய வாதமும் எண்டுகினம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்று கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை, எத்தனைதடவை சொன்னாலிம் சிலருக்கு புரிவதில்லை, சரத்துக்கு மக்கள் வாகளித்தன் காரணம் வனைவிட கொடியோனா எம்மக்கள் 50000பேரை ஒன்றொழிக்க ஆனையிட்ட மிகிந்தனை வெளியேற்றுவது மட்டுமே, தமிழ் மக்களின் உனவுகளுக்கு மதிபளி்க்க பழகிகொள்ள வேண்டும். :rolleyes:

2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்த புலிகளை மக்கள் முழுமையாக அங்கீகரித்தனர்... அதை சம்பந்தன் அங்கீகரிக்க இல்லையே... அதை அவர் முதலில் அங்கீகரிக்கட்டும்.. பிறகு நாங்கள் அவனை அங்கீகரிக்கலாம்..

2005 முடிவே மோசமான நிலைக்கு காரணம் - சம்மந்தர்

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091226_samband.shtml

கேட்க்க

http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/12/bb/091226_tnaregrets_au_bb.asx

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரையின் நோக்கம் இல்லாத ஒரு சிந்தனையை உள்ளது என்பதாகக் காட்டுதல்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பிரதேசவாதத்தை வெறுத்து ஒதுக்கி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. துரோகிகள் என்று பார்த்தால் வட தமிழீழத்தில் இருந்து வந்தவர்கள் தான் பலர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டிருக்கின்றனர். அப்படி இருக்க புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் கருணாவை மையப்படுத்தி மட்டக்களப்பு மக்களை துரோகிகள் என்று நினைக்கின்றனர் என்று காட்டுவதன் நோக்கம் கருணாவின் கீழ்த்தரமான பிரதேசவாத அரசியலுக்கு மக்களின் ஆதரவை பெற்றுக்கொடுக்கும் செயல் போல தெரிகிறது. இக்கட்டுரை வெளிப்படைக்கு ஒரு மாதிரியும் உள்நோக்கத்தில் பல நச்சுத்தன்மைகளையும் கொண்டுள்ளது.

இன்னொரு இடத்தில் டக்கிளஸ் தேவானந்தாவை இடதுசாரி தத்துவஞானியாக கட்டுரையாளர் காட்டவிளைகிறார். டக்கிளஸ் தேவானந்தா ஆரம்பம் முதலே இராணுவப் பிரிவில் இருந்து வன்முறை மூலம் ஈ பி ஆர் எல் எவ் இல் அதிகாரத்தை தக்க வைக்க முயன்று பல தமிழ் மக்களைப் படுகொலை செய்து புலி எதிர்ப்பு காட்டிக் கொடுப்பு அரசியல் மூலம் தன்னை பாதுகாத்துக் கொண்டவர். இவரை இடதுசாரியத்தின் பிதா மகனாகக் காட்டுவதன் நோக்கம் என்ன..???! டக்கிளஸ் உண்மையில் ஒரு அரசியல்வாதி என்றே கருதப்படத் தகுதியற்றவர்.

தயவுசெய்து இப்படியான தமிழ் தேசியவாதிகள் அப்படி நினைக்கினம்.. இப்படி நினைக்கினம்.. புலம்பெயர் மக்கள் அப்படி நிக்கினம். மட்டக்களப்பு மக்கள் இப்படி நிக்கினம்.. என்று அவரவர் தங்கள் தங்கள் சுய அபிப்பிராயங்களை மக்களின் பெயரால் விதைக்கும் நாசகார நச்சுக்கட்டுரைகள் தொடர்பில் அவதானமாக இருந்து செயற்படுங்கள்.

Edited by nedukkalapoovan

தமிழ் கூட்டமைப்பு தலைவரை அவன், இவன் என ஏக வசணத்தில் விழித்து இருப்பது ஒரு பண்பற்ற செயலாகும் இத கள நிர்வாகம் நீ்க்க பரிந்துரை செய்கிறேன். :rolleyes:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களை கொன்று குவித்த பொன்சேகாவிடம் கூட்டணி வைத்த சம்பந்தன்அவர்கள் ஒரு தமிழ் தியாகி தேச துரோகி அல்ல

தாம்தாம் நினைப்பதை புலம்பெயர்மக்கள் நினைக்கினம் என்று சொன்னால்தான் சனம் நம்புமாம், கட்டுரையையாவது வாசிக்குமாம். :rolleyes:

தமிழர்களை கொன்று குவித்த பொன்சேகாவிடம் கூட்டணி வைத்த சம்பந்தன்அவர்கள் ஒரு தமிழ் தியாகி தேச துரோகி அல்ல

"எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்" இது ஆன்றோர் வாக்கு சரத் அம்பு, மகிந்தன் எய்தவன், யார் இதில் முதல் வீழ்தபடவேண்டியவர் என்று, சனத்துக்கும் தெரிஞ்சு இருக்கு, அதன் தலமைக்கும் தெரிஞ்சு இருக்கு. இது அரசியல் சாணக்கியம்.

தமிழ் கூட்டமைப்பு தலைவரை அவன், இவன் என ஏக வசணத்தில் விழித்து இருப்பது ஒரு பண்பற்ற செயலாகும் இத கள நிர்வாகம் நீ்க்க பரிந்துரை செய்கிறேன். :rolleyes:

காட்டிக்குடுக்கிறது தமிழனுக்கு என்ன புதுசோ...?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பு தலைவரை அவன், இவன் என ஏக வசணத்தில் விழித்து இருப்பது ஒரு பண்பற்ற செயலாகும் இத கள நிர்வாகம் நீ்க்க பரிந்துரை செய்கிறேன். :rolleyes:

ஆமோதிக்கின்றேன்

கீழேயுள்ள கட்டுரையை வாசிக்கும் போது சம்பந்தரின் அந்தர் பல்டி மிக தெளிவாகின்றது.

பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் புரிந்துணர்வுடன் தனித்து போட்டியிட முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அதேசமயம் தமிழ்முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு பங்கம் ஏற்படாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து எமது மக்கள் பெரும்பான்மை சமூகத்தோடு சம உரிமையுடன் வாழும் சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடத்திய கூட்டுச் செய்தியாளர் மாநாட்டிலேயே ஆர்.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைப் பலமானதாகக் கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றுபட்டிருப்பதாகவும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் இதனோடு இணைத்துக் கொண்டு எமது ஒற்றுமைப் பலத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;வரக்கூடிய பொதுத்தேர்தல் தொடர்பில் நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாம் தனித்தே போட்டியிடுவோம். இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. எனினும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இரு சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கருதி மிகவும் ஒற்றுமையுடன் இத்தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றோம்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பி அதனைத் தொடர்ந்து பேணுவதற்கானதொரு புரிந்துணர்வை நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

பொதுத்தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்குப் பங்கம் ஏற்படாத

விதத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட நாம் உறுதிபூண்டிருக்கின்றோம். தமிழ், முஸ்லிம் மக்கள் அதனையே எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். அவர்களின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகவே நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதித் தேர்தல் முடிந்திருக்கும் ஒரு சூழ்நிலையில், பொதுத்தேர்தலை எதிர்கொள்ளப்போகும் வேளையில் தெற்குச் சிங்கள மக்களுக்கு எவ்வாறானதொரு செய்தியை கொல்லப்போகிறீர்கள்? என்று சிங்கள ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறியதாவது;நாம் எப்போதும் சிங்கள மக்களோடு ஒன்றுபட்டு வாழவே விரும்புகின்றோம். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் வேறுபட்டு இந்த நாட்டில் வாழக்கூடாது. பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கிருக்கும் உரிமைகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இருக்க வேண்டும்.

நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.

அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் சகல சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கியதால் அந்த நாடுகள் இன்று நல்லமுன்னேற்றம் கண்டுள்ளன. அபிவிருத்தியில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு வழியை நாமும் பின்பற்றினால் அடுத்த 10 வருடங்களில் எமது நாட்டையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும். இந்தச் செய்தியையே தென்னிலங்கை சிங்கள மக்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்ள%27என்றார்.

http://parantan.com/pranthannews/srilankanews.htm

இதை கேள்வி கேக்க தமிழனுக்கு கருத்து சுந்தந்திரம் கிடையாது... சம்பந்தன் இன்னும் தன்னை முழுமையாக வெளிக்காட்ட வில்லை...

Edited by தயா

இது சிங்களவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி, புலிகள் இல்லாத நிலையில் நாடு பிரிப்பு என்பது எட்டாதகனி, எட்டாகனிக்கு கொட்டாவி விடுவதை விட கிடைக்ககூடியதற்க்கு போராட வேண்டும், இப்போது எமக்கு தேவை, மக்களது விடுதலை, போராளிகளது விடுதலை, சிறைகளில் பல ஆண்டுகளாக வாடுபவர்களின் விடுதலை, அவர்களது பாதுகாப்பு, அவர்களுக்கான இருப்பிட, வாழ்வை சீரமைபதற்கான உதவிகள், அத்தோடு எல்லோருக்கும் இருப்பது போண்ற சம உரிமை,

சிங்களவர்களின் வாக்கினால் மட்டும் வென்ற சனாதிபதி இருக்கும் நாட்டில், இவற்றை பெறவே நாம் நீண்ட நாட்கள் போராட வேண்டி இருக்கும்.முதலிம் உடனடியாக தேவையானதை நிறைவேற்றுவோம், அதுதான் அந்த மக்களுக்கும் தேவையானது. அதுதான் அந்த மக்களின் தலைமையின் கடமையும்.

சம உரிமை கிடைக்காத போது போராட்டம் தொடரவே செய்யும்,

சங்கிலியன் வீழ்ந்தபோதும் நினைத்து இருப்பார்கள் இனி அவ்வளவுதான் என்று

பண்டாரவன்னியன் வீழ்ந்தபோதும் நினைத்து இருப்பார்கள் இனி அவ்வளவுதான் என்று

புலி வீழ்ந்தபோதும் நினைத்து இருப்பார்கள் இனி அவ்வளவுதான் என்று

காலம் யாருக்காவும் காத்திருப்பது இல்லை, ஒருகட்டத்தில் அது மீண்டும் திரும்பும்.

Edited by சித்தன்

மெல்லுவதற்கு நல்ல கட்டுரை,பிரதேசவாதம் இருந்ததுண்மை மறைந்ததுண்மை .தற்போது திரும்பவும் லேசா தலையெடுத்துள்ளதும் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்லுவதற்கு நல்ல கட்டுரை,பிரதேசவாதம் இருந்ததுண்மை மறைந்ததுண்மை .தற்போது திரும்பவும் லேசா தலையெடுத்துள்ளதும் உண்மை.

கருணா, பிள்ளையானை நிரகரித்ததின் மூலம் மட்டகளப்பு மக்கள் தெளிவாக பிரதேச வாதத்தை நிராகரித்து இருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி, புலிகள் இல்லாத நிலையில் நாடு பிரிப்பு என்பது எட்டாதகனி, எட்டாகனிக்கு கொட்டாவி விடுவதை விட கிடைக்ககூடியதற்க்கு போராட வேண்டும், இப்போது எமக்கு தேவை, மக்களது விடுதலை, போராளிகளது விடுதலை, சிறைகளில் பல ஆண்டுகளாக வாடுபவர்களின் விடுதலை, அவர்களது பாதுகாப்பு, அவர்களுக்கான இருப்பிட, வாழ்வை சீரமைபதற்கான உதவிகள், அத்தோடு எல்லோருக்கும் இருப்பது போண்ற சம உரிமை, சிங்களவர்களின் வாக்கினால் மட்டும் வென்ற சனாதிபதி இருக்கும் நாட்டில், இவற்றை பெறவே நாம் நீண்ட நாட்கள் போராட வேண்டி இருக்கும்.முதலிம் உடனடியாக தேவையானதை நிறைவேற்றுவோம், அதுதான் அந்த மக்களுக்கும் தேவையானது. அதுதான் அந்த மக்களின் தலைமையின் கடமையும்.

சம உரிமை கிடைக்காத போது போராட்டம் தொடரவே செய்யும்,

சங்கிலியன் வீழ்ந்தபோதும் நினைத்து இருப்பார்கள் இனி அவ்வளவுதான் என்று

பண்டாரவன்னியன் வீழ்ந்தபோதும் நினைத்து இருப்பார்கள் இனி அவ்வளவுதான் என்று

புலி வீழ்ந்தபோதும் நினைத்து இருப்பார்கள் இனி அவ்வளவுதான் என்று

காலம் யாருக்காவும் காத்திருப்பது இல்லை, ஒருகட்டத்தில் அது மீண்டும் திரும்பும்.

நேரம் கிடைப்பதில்லை ஐயா எழுதுவதற்கு..

என் கருத்தும் இன்றைய மக்கள் கருத்தும் இதுதான்

எழுதுங்கள் தொடர்ந்து ............

நன்றிகள் தங்களது நேரத்திற்கு....

மலையோடு முட்டுபவர்கள் புத்திசாலி எனின் முட்டட்டும்

எமக்கு வேறு வேலை இருக்கிறது

அர்த்தமற்ற தலைப்பு.

இதுவரை, எனக்கு தெரிந்தவரை, தமிழ் பொதுமக்கள், புலம் பெயர்ந்து வாழும் மக்கள் யாரும் மட்டக்களப்பில் பிறந்தவர்கள் துரோகிகள் எனச் சொல்லியதைக் கேட்கவில்லை.

இது மிக அபந்தமான கற்பனை தலைப்பு. கட்டுரையை வரைந்தவர் தமிழினத்துக்கு தீமை செய்ய முனைந்துள்ளார்.

அப்படி என்றால் யாழ் மக்கள் குறைவாக வாக்களித்தைக் கண்டவுடன், தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிச்சுப் போட்டினம் என்று ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து நெடுக்கால போவானில் இருந்து சங்கதி வரை கட்டுரை வரைந்தது எந்த பார்வைக்குள் அடக்கம்? கிழக்கில் 55% மானவர்களும் (முக்கியமாக தமிழர்கள் அதிகம் இருக்கும் மட்டக்களப்பில்), மலையகத்தில் அதை விட அதிகமானோரும் வாக்களித்து இருக்கும் போது இந்த புலம்பெயர் கட்டுரையாளர்கள் எல்லாம் யாழ்ப்பாண முடிவுடன் மட்டும் மல்லுக்கட்டியது ஏன்?

ஆனால் சிங்கள கொள்கை வகுப்பாளர்கள், இதனை பிரதேசம் சார்ந்த முடிவாக எடுக்கப்போவதில்லை. தமிழர்கள் போரில் வெற்றி ஈட்டிய மகிந்தவை ஆதரிக்கவில்லை, ஆகவே அவர்கள் இன்னும் தமிழ் தேசிய விடுதலை உணர்வில் இருந்து வெளியே வரவில்லை என்று முடிவை எடுத்து எம் தேசிய அடையாளங்களை சிதைக்கும் வேலைகளின் முன்னரை விட இன்னும் ஆழமாக இறங்குவார்கள்

நாம் குறிகிய, ஒற்றைச் சிந்தனை கட்டுரையாளர்களின் முடிவை சரி என்று மல்லுக்கட்டிக் கொண்டிருப்போம்

Edited by பிழம்பு

இல்லை என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது நீர் எந்த இடமமெண்டு கேட்பார்கள் ,மட்டக்களப்பு என்பேன் பின்னர் என்னிடம் அவர்கள் பேசும் விதம் நழுவல் பேச்சாகத்தான் இருக்கும் சற்றுநேரத்தில் அவர்கள் என்னுடன் பேசமாட்டார்கள்...ஒரு சிலர் மட்டுமே இப்படி என்றில்லை நான் சந்தித்த 50 % பேர் இப்படித்தான்.

தமிழ் சனம் விசரில நிக்குது பலமுடிவுகழுக்கு அதுவே காரணம்.நாட்டில் மாத்திரமல்ல புலம் பெயர்ந்த நாடுகளில் கூட இதே நிலைதான். மே 18, உலகமே சேர்ந்து எங்களை அழித்ததில் இருந்து இன்னமும் எவருமே மீளவில்லை.அதுவும் உடனடியாத்தேர்தல் வந்தவுடன் இன்னமும் குழப்பமாகிவிட்டது.சகலரும் தாங்கள் எடுக்கும் முடிவே சரியானது என்றும் அதுவே தூர நோக்கில் விடிவைகொண்டுவரும் என்றும் கதை அளக்கின்றார்கள்.

உண்மைநிலை எவருக்கும் இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.அதனால் தான் இத்தனை முரண்பாடுகளும்.

வட்டுக்கோட்டை தீர்மானம்.

நாடு கடந்த தமிழீழ அரசு.

டீ என்.ஏ யின் குளறுபடி நிலை.(சரத் ஆதரவு,சுயேட்சை,மகிந்த ஆதரவு,பகஸ்கரிப்பு) இந்த நாலில் எதைத்தெரிவதென்று அவர்களால் ஒரு ஏகமனதான முடிவிற்கு வரமுடியவில்லை இருப்பினும் தாங்கள் ஒற்றுமை என்று அறிக்கைகள் வேறு.

இதைவிட டக்கிளஸ்,சித்தார்த்தன்,கருணா,பிள்ளையான் தேர்தலில் 2,3 சீற்றுகள் எடுக்கும் திட்டங்கள்.

தேர்தல் முடிவுகள் என்னத்தை சொல்லி நிற்கின்றது.

தலைவர்களை விட,ஆய்வாளர்களை விட,புலம் பெயர்ந்தவர்களை விட, புலத்தில் இருக்கும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.வடக்கு,கிழக்கு,முஸ்லிம்,மலையகம் என்று இனியும் பிரித்து எம்மை நாமே கூறு போட்டு கொச்சைபடுத்தாமல் ஒரு பொது வேலைதிட்டத்தின் கீழ் வேலை செய்ய சம்பந்தன் எல்லோரையும் காலக்கெடு,நிபந்தனை கொடுத்து அழைக்க வேண்டும்.வாராதவர்களை விட்டு தொடர்ந்து தமிழன் தனது சுயநிர்ணய உரிமைகளுக்காக சர்வதேசத்துடனும்,சிங்களத்துடனும் போராட வேண்டும்.

இனியும் மத,பிரதேசவாதத்தின் தலைப்பில் ஆய்வுகள் நடாத்துவது எரிகிறநெருப்பில எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

தலைவர்களை விட,ஆய்வாளர்களை விட,புலம் பெயர்ந்தவர்களை விட, புலத்தில் இருக்கும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

வடக்கு,கிழக்கு,முஸ்லிம்,மலையகம் என்று இனியும் பிரித்து எம்மை நாமே கூறு போட்டு கொச்சைபடுத்தாமல் ஒரு பொது வேலைதிட்டத்தின் கீழ் வேலை செய்ய சம்பந்தன் எல்லோரையும் காலக்கெடு,நிபந்தனை கொடுத்து அழைக்க வேண்டும்.வாராதவர்களை விட்டு தொடர்ந்து தமிழன் தனது சுயநிர்ணய உரிமைகளுக்காக சர்வதேசத்துடனும்,சிங்களத்துடனும் போராட வேண்டும்.

இனியும் மத,பிரதேசவாதத்தின் தலைப்பில் ஆய்வுகள் நடாத்துவது எரிகிறநெருப்பில எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

தலைவர்களை விட

ஆய்வாளர்களை விட

புலம் பெயர்ந்தவர்களை விட

புலத்தில் இருக்கும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

நன்றி ஐயா

உங்களையும் வேறு கோணத்தில் அறிமுகமாக்கிவிட்டார்கள் போல் எனக்கு தற்போது தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சனம் விசரில நிக்குது பலமுடிவுகழுக்கு அதுவே காரணம்.நாட்டில் மாத்திரமல்ல புலம் பெயர்ந்த நாடுகளில் கூட இதே நிலைதான். மே 18, உலகமே சேர்ந்து எங்களை அழித்ததில் இருந்து இன்னமும் எவருமே மீளவில்லை.அதுவும் உடனடியாத்தேர்தல் வந்தவுடன் இன்னமும் குழப்பமாகிவிட்டது.சகலரும் தாங்கள் எடுக்கும் முடிவே சரியானது என்றும் அதுவே தூர நோக்கில் விடிவைகொண்டுவரும் என்றும் கதை அளக்கின்றார்கள்.

உண்மைநிலை எவருக்கும் இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.அதனால் தான் இத்தனை முரண்பாடுகளும்.

வட்டுக்கோட்டை தீர்மானம்.

நாடு கடந்த தமிழீழ அரசு.

டீ என்.ஏ யின் குளறுபடி நிலை.(சரத் ஆதரவு,சுயேட்சை,மகிந்த ஆதரவு,பகஸ்கரிப்பு) இந்த நாலில் எதைத்தெரிவதென்று அவர்களால் ஒரு ஏகமனதான முடிவிற்கு வரமுடியவில்லை இருப்பினும் தாங்கள் ஒற்றுமை என்று அறிக்கைகள் வேறு.

இதைவிட டக்கிளஸ்,சித்தார்த்தன்,கருணா,பிள்ளையான் தேர்தலில் 2,3 சீற்றுகள் எடுக்கும் திட்டங்கள்.

தேர்தல் முடிவுகள் என்னத்தை சொல்லி நிற்கின்றது.

தலைவர்களை விட,ஆய்வாளர்களை விட,புலம் பெயர்ந்தவர்களை விட, புலத்தில் இருக்கும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.வடக்கு,கிழக்கு,முஸ்லிம்,மலையகம் என்று இனியும் பிரித்து எம்மை நாமே கூறு போட்டு கொச்சைபடுத்தாமல் ஒரு பொது வேலைதிட்டத்தின் கீழ் வேலை செய்ய சம்பந்தன் எல்லோரையும் காலக்கெடு,நிபந்தனை கொடுத்து அழைக்க வேண்டும்.வாராதவர்களை விட்டு தொடர்ந்து தமிழன் தனது சுயநிர்ணய உரிமைகளுக்காக சர்வதேசத்துடனும்,சிங்களத்துடனும் போராட வேண்டும்.

இனியும் மத,பிரதேசவாதத்தின் தலைப்பில் ஆய்வுகள் நடாத்துவது எரிகிறநெருப்பில எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

கடவுளான அர்ஜுன், இன்றுதான் இவ்வளவு தெளிவாக நீங்கள் எழுதியதை புரிந்து கொண்டிருக்கிறன்... சரியான அரசியல் கருத்து... இப்படியே தொடர்ந்து எழுதினால் என்ன?

2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்த புலிகளை மக்கள் முழுமையாக அங்கீகரித்தனர்... அதை சம்பந்தன் அங்கீகரிக்க இல்லையே... அதை அவர் முதலில் அங்கீகரிக்கட்டும்.. பிறகு நாங்கள் அவனை அங்கீகரிக்கலாம்..

2005 முடிவே மோசமான நிலைக்கு காரணம் - சம்மந்தர்

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091226_samband.shtml

கேட்க்க

http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/12/bb/091226_tnaregrets_au_bb.asx

இந்தக்கருத்தில் இருப்பது போல இனிமேல் யாரும் டக்கிளைசையோ கருணாவையோ பிள்ளையானையோ ஒருமையில் யாழில் விளிக்க மாட்டார்கள் விளித்தால் வெட்டப்படும் எண்று நம்பலாமா...??

இங்கை இனிமேல் யாரையும் துரோகி எண்றும் அழைக்க அனுமதிக்க கூடாது... காரணம் அவர்களுக்கும் தமிழர்களில் ஆதரவாளர்கள் உண்டு அவர்களின் மனதையும் அது புண்படுத்தும்...

:huh: இலங்கையில் இனவாதம் இருக்கிறது...

:huh: பவுத்த மதவாதம் இருக்கிறது.. மற்றைய மதங்களுக்கும் வாதம் இருக்கிறது.

:huh: தமிழ் மக்களிடம் சாதி வாதம் இருக்கிறது. குறிப்பாக குடாநாட்டில்.

:lol: சாதியத்துடன் பிரதேச வாதமும் இருக்கிறதுஇ வடமராச்சியான் தென்மராச்சியான் எண்டு நீண்டு கொண்டே போகும்.

:lol: மட்டக்களப்பில் பிரதேச வாதமும் இருந்தது... இருந்தாலும் என்ன தவறு? குடாநாட்டு மக்களுக்கு இருக்கலாமா?

இப்ப புலிகளும் இல்லை.. தனிநாடும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தையே நாங்கள் ஏற்கவில்லை அப்ப வடக்கு கிழக்கு இணைப்பை நாம் எப்படி கோரமுடியும்? வடக்கையும் கிழக்கையும் மகிந்த இனிக்கப் போறதுமில்லை... ஆனால் அவனே திரும்பவும் சனாதிபதியாக தெரியும் செய்யப்பட்டிருக்கான்.

ஆக எல்லாத்தையும் கூட்டிக் களிச்சுப்பர்த்தால் மகிந்த தரவிருக்கும் அதிகாரப்பகிர்வே அதிகம்.

நாங்கள் தமிழர்களோடு சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம். ஏற்ற தாழ்வுகள் தமிழர்களை ஒற்றுமையாக வாழ விடாது. தமிழ் மக்களால் சமூக ஏற்ற தளவுகள் மற்றும் பிரதேச வித்தியாசங்கள் மற்றும் இன ஒற்றுமைகளை பேணி வாழவும் தெரியாது.

அனால் சிங்கல்வர்களுடனோ அல்லது வேறு மேலாதிக்க இனத்தினுடனோ அமைதியாக வாழ கூடியவர்கள்.

உதாரணத்துக்கு கொழும்பில் தமிழர்களும், புலத்தில் தமிழர்களும். இப்படியாக முரண்பாட்டின் மையமாக வாழும் தமிழ் மக்களை ஒன்றுபடுத்த புலிகளை தவிர யாரால் முடியும்?

யார் முயன்றாலும் அவர்கள் பலம் இல்லாதிருந்தால் அவர்கள் நிச்சயமாக துரோகிகலாவார்கள்.

ஏனென்றால் தமிழர்களின் இயற்கையான குணத்தை மாற்ற முனைபவர்கள் தமிழர்களுக்கு துரோகிகள் தானே?

ஏதோ புலிகள் கைகளில் ஆயுதம் இருந்ததனால் அவர்கள் துரோகிகள் ஆகவில்லை ஆனாலும் மாற்றுக்கருத்தாளர்கள் பார்வையில் புலிகளும் துரோகிகலாமே. கணக்கு என்னமோ சரிதான்.

எங்களுக்கு தனிநாடு தேவையா? அதுக்கு நாங்கள் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் யாழ் மக்கள் குறைவாக வாக்களித்தைக் கண்டவுடன், தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிச்சுப் போட்டினம் என்று ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து நெடுக்கால போவானில் இருந்து சங்கதி வரை கட்டுரை வரைந்தது எந்த பார்வைக்குள் அடக்கம்? கிழக்கில் 55% மானவர்களும் (முக்கியமாக தமிழர்கள் அதிகம் இருக்கும் மட்டக்களப்பில்), மலையகத்தில் அதை விட அதிகமானோரும் வாக்களித்து இருக்கும் போது இந்த புலம்பெயர் கட்டுரையாளர்கள் எல்லாம் யாழ்ப்பாண முடிவுடன் மட்டும் மல்லுக்கட்டியது ஏன்?

ஆனால் சிங்கள கொள்கை வகுப்பாளர்கள், இதனை பிரதேசம் சார்ந்த முடிவாக எடுக்கப்போவதில்லை. தமிழர்கள் போரில் வெற்றி ஈட்டிய மகிந்தவை ஆதரிக்கவில்லை, ஆகவே அவர்கள் இன்னும் தமிழ் தேசிய விடுதலை உணர்வில் இருந்து வெளியே வரவில்லை என்று முடிவை எடுத்து எம் தேசிய அடையாளங்களை சிதைக்கும் வேலைகளின் முன்னரை விட இன்னும் ஆழமாக இறங்குவார்கள்

நாம் குறிகிய, ஒற்றைச் சிந்தனை கட்டுரையாளர்களின் முடிவை சரி என்று மல்லுக்கட்டிக் கொண்டிருப்போம்

நீங்கள் சரியான கணிப்பீடு இன்றி இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறீர்கள். நான் யாழ் மக்கள் குறித்த இந்தத் தேர்தலை புறக்கணித்தார்கள் என்று எழுதியதைக் காண்பிக்க முடியுமா..???! தேர்தலில் 20% க்கும் குறைவான வாக்குகளே பதிவாகின என்று டெயிலிமிரர் சொன்ன தகவலையே நான் பிரசுரித்திருந்தேன்.

நான் எனது அறிவுக்கு எட்டிய காலத்தில் இருந்து அவதானித்து வருகிறேன். தமிழ் மக்கள் அதிகம் வாக்குப்பதிவை செய்த காலங்களாக 1989 மற்றும் 2004 ஆண்டு காலத் தேர்தல்கள் விளங்கின. இவை இரண்டிலும் விடுதலைப்புலிகளின் நேரடி மறைமுக வாக்களிப்புக் கோரிக்கைகள் மக்களை நோக்கி வைக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் மக்கள் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலிலும் வாக்களிக்கவில்லை. இது ஒன்றும் மக்கள் அறியாமையால் வாக்களிக்கத் தவறியுள்ளனர் என்பதாகாது. மக்களுக்கு வாக்களிப்பு ஜனநாயகத்தில் சிறீலங்கா அரசு நடத்தும் தேர்தல்களில் நம்பிக்கை இல்லை என்பதைத்தான் காட்டி நிற்கிறது. உலகெங்கும் இப்போ எல்லாம் மக்கள் வாக்களிப்பின் மீது அக்கறை இழந்து காணப்படுவது தெரிகிறது. ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட 50% க்கும் குறைவான மக்களே சில நாடுகளில் வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இழப்பின் அடையாளமாகக் கூடக் கொள்ளலாம். ஆனால் உலகம்.. குறிப்பாக அமெரிக்க சார்பு உலகம் 15% வாக்களிப்பையும் தனக்குத் தேவை என்றால் மிகப்பெரிய ஜனநாயகமாகக் காட்டி பிழைப்பு நடத்த நன்கு கற்றுக் கொண்டே இருக்கிறது.

தமிழ் மக்கள் சிங்கள அரசின் தேர்தல்களில் வாக்களிக்க அக்கறையற்று இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அது 1987 இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்து தொடர்ந்தே வருகிறது. ஓரிரு தடவை புலிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து மக்கள் அதிகம் வாக்களிக்க முற்பட்டிருந்ததை தவிர வடக்குக்கிழக்கு வாக்காளர்கள் சிங்கள ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தே வாழ்கின்றனர். வாழ வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் உண்மையும் கூட..! :huh:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.