Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

Featured Replies

http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

என் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்

லண்டனில் கடந்த வருடம் மே மாதம் ஊண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார். இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது "சன்" மற்றும் "மெயில்" பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் இவர்மேல் எழுந்துள்ள விமர்சங்களால், இவர் சமூக வாழ்கை பாதிப்படைந்தது என்றும், உண்ணாவிரதத்தை நிறுத்த பிரித்தானியாவில் சிலர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு, பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்துவிட்டதாக தன் மீது வீண் பழிபோடுகிறார்கள் என பரமேஸ்வரன் தெரிவித்தார். குடியுரிமை கிடைக்கவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த அவர் அவ்வாறு யாராவது நிரூபித்தால் தாம் தீக்குழிக்கக் கூடத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

தனது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும், தன்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வீண் பழிகளைப் பற்றி விழக்கியும் அவர் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அக் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்புற்கு நன்றி ஆளவந்தான்.

தலைவர், மாவீரர்கள், மக்கள் உயிர் முக்கியமென நினைத்து உண்ணாவிரதம் இருந்தவனுக்கு இப்படி ஒரு பட்டம். என்ன சனமோ...

பரமேஸ்வரன் மேல் குற்றம் என்று நிரூபிக்காமல் போனால், அவர் மேல் குற்றம் சாட்டியவர்கள் தீக்குளிக்க வேணும், அல்லது தீக்குளிக்க வைக்க வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கியதும் இங்கிலாந்து பொறுப்பாளர்களுக்கும் பிரித்தானிய தமிழர்பேரவை

மேத்திரிமாருக்கும் தலைகிறுகிறுக்க தொடங்கிவிட்டது. சட்டம்,ஒழுங்கு,ராஜதந்திரநகர்வு,தொழில்கட்சிஅரசுக்கு இடைஞ்சல்செய்யாமல்

இருத்தல் போன்ற காரணங்களைச் சொல்லி வன்னிக்கு தொலைபேசி அழைப்புகளை பொறுப்பாளநாதாரிகள் மூலமும்

பி.ரி.எவ் பண்ணையார்கள் மூலமும் செய்தார்கள்.

உங்களுடைய வேலை முடிந்துவிட்டது.இனி இளைஞரின் காலம்.வழிவிடுங்கோ' என்று சொல்லப்பட்டது.

தங்களைமீறி பரமேஸ்வரன் செய்தபோராட்டத்துக்கு அவர்கள் இடைஞ்சல் செய்தார்கள்.

உண்ணாவிரதம் முடிந்தபின்னரும் தாங்களே இங்கிலாந்துத் தமிழர்களுக்கு எசமானர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக

பரமேஸ்வரனை பற்றி வதந்திகளை அவிட்டுவிடுகிறார்கள்.

தானும் செய்யான் தள்ளியும் கிடவான்.

இதுகளுக்கு நாடுகடந்த அரசு வேறு!!

பரமேஸ்வரன் மீது சாட்டப்படும் குற்ரச்சாட்டு மிகவும் கண்டிக்க படவேண்டியது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பரமேஸ்வரன் இந்த புரளிக்கூட்டத்திட்காக மெனெக்கெட்டு பதில் சொல்லுறாரோ தெரியேல்ல. தம்பி, இரவு சம்பந்தம் போல வண்டிய வைச்சிருக்கிரவன் யாராவது சும்மா கிழப்பி விடுவான், நீ இதுக்கெல்லாம் மினக்கிடாத. தமிழ் ஈழத்தில கண்ணை வைச்சிரு.

குற்றம் கூறிய ஒருத்தர் கூட தெருக்களில் ஒரு மணி நேரம் கூட போராட்டக்காலங்களில் நின்றிருக்கமாட்டார்கள்...

தலைவரின் கொள்கையை அறிவுரையை வாழ்நாளில் கடைபிடிப்பவர்களா இவர்கள்?

அப்போ பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று ???

அப்போ பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று ???

முருகா - உண்ணாவிரதம் இருந்து பாருங்கள் - விடை கிடைக்கும்!!

செய்வீர்களா - அல்லது கேள்வி கேட்க மட்டும்தான் தெரியுமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரெழுச்சியை உண்டாக்கிய பரமேஸ்வரனின் பேராட்டத்தில் அவரின் அர்ப்பணிப்பு என்பது கேள்விக்கு அப்பால் அப்பழுக்கற்ற புனிதமாகும். அதே நேரம் இளையோரை சிலர் பாவிக்க முயல்வது பரமேஸ்வரன் சொன்னது போலவே உண்மையும் கூட. இளையோர் சக்தி யாரினதோ எண்ணங்களுக்கு விரையாமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்க்கு வழி கிடைக்குமாக இருந்தால் புலத்தில் தலமை போட்டிக்குள் இருக்கும் இரு சாராரின் நிலையை உடைத்தெறிந்து முன்னோக்கி நகர முடியும்.

பரமேஸ்வரன் கூறியவை அனைத்துமே உண்மை.எனது அனுபவதிலும் இதனை அவதானித்து இருக்கிறேன்.முன் நின்று போராடுபவர்கள் மக்களை அணிதிரடுபவர்கள் வேறாகவும், தலமை வேறாகவும் இருக்கிறது.கூட்டங்களைக் கூட்டுவார்கள் கதைதைத்தையே திருப்பித் திருப்பிக் கதைப்பார்கள்.போராட்டங்களை முன் நின்று நாடாத்த மாட்டார்கள்.இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொலாவர்கள்,ஆனல் எதையும் தாங்களாகாச் செய்ய மட்டார்கள்.

பரமேஸ்வரன் களம் இறங்குங்கள் உங்கள் பின் மக்கள் நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களே இனித் தலைமை தாங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

என் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்

லண்டனில் கடந்த வருடம் மே மாதம் ஊண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார். இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது "சன்" மற்றும் "மெயில்" பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் இவர்மேல் எழுந்துள்ள விமர்சங்களால், இவர் சமூக வாழ்கை பாதிப்படைந்தது என்றும், உண்ணாவிரதத்தை நிறுத்த பிரித்தானியாவில் சிலர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு, பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்துவிட்டதாக தன் மீது வீண் பழிபோடுகிறார்கள் என பரமேஸ்வரன் தெரிவித்தார். குடியுரிமை கிடைக்கவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த அவர் அவ்வாறு யாராவது நிரூபித்தால் தாம் தீக்குழிக்கக் கூடத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

தனது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும், தன்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வீண் பழிகளைப் பற்றி விழக்கியும் அவர் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அக் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo

என்ன வாக்குறிதி வழங்கினார்கள், அதனல் என்ன பயன் நடந்தது?

வன்னியில் இருந்த 50000 மக்களையும் சாகவிடாது கப்பல் விட்டு ஏத்து வோம் என்றார்களா?

அல்லது போராளிகள் அனைவரையும் காப்பற்று வோம் என்றார்களா?

அல்லது நாட்டுக்கு திருப்பி அனுப்புவோம் என்று பயம் உறுதினார்களா?

அல்லது அயர்லாந்து பராளமண்ற உறுப்பினரையே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத்தன் விட்டோம் கடைசிவரை காப்பாத்தவில்லை அதே நிலைதான் உமக்கும் வரும் என கை விரித்து விட்டார்களா?

சரி அந்த நேரம்தான் சொல்ல வில்லை ஏதாவது நல்லது நடக்கும் என மழையிலும் பனியிலும் உங்களக்கு ஆதாரவு தந்து இரவுபகலாக உங்களோடு இருந்த மக்கள் விட்டு விட்டார்கள், அந்த காரணம் என்ன என்று இப்போதும் கூறமுடியாதா?

கூறமுடியாவிட்டால் இனி எப்படி உங்க பின்னால் மக்கள் வருவார்கள்.

:rolleyes::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரனைப் பார்த்து கேள்விகள் கேட்கும் அருகதையும் தார்ப்பரியமும் யாருக்கும் கிடையாது (நான் உட்பட)

இங்கு எழும் சில கேள்விகளைப் பார்க்கும்போது சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் ஒருவர் இறுதியில்

அவர் இறந்துதீர வேண்டும். அவரின் உண்ணாவிரதப்போராட்டம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது.எத்தகைய அதிர்வுகளை

ஏற்படுத்தியது என்றுதான் பார்க்கவேண்டும்.

எங்களுக்காக ஒருவர் சிலுவை சுமந்தால்தான் அவருக்கு பின்னால் சுற்றுலாபோவோம் என்று கூறும் மனப்பான்மை ஈனத்தனமானது.

தேசியதலைவர்கூட 86ல் சென்னை திருவான்மியுர் வீட்டில் இந்தியஅரசுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து

பின் கைவிட்டவர்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரது உண்ணாவிரதம் போற்றுதற்குரியது, அதனால்தான் குஞ்சு குறுமான் தொடக்கம் வயது போனதுகள் வரை மாறி மாறி அவர்பக்கத்தில் துணையாக இருந்தார்கள், இங்கிலாந்து அரசு கொடுத்த உறுதி மொழி என்ன , அதனால் தமிழ் மக்கள் அடைந்த பயன் என்ன?

எந்த உறுதி மொழியும் வழங்கபடவில்லை, இப்படியே விட்டால் அவர் மரணம் அடைந்து விடுவார் அதனால் அவரை அதில் இருந்து விடுவித்தோம் என சொல்லுங்கள் அதை நாம் மனதார ஏற்று கொள்கிறோம். ஒரு உயிர் காப்பாற்றபடுவதற்கு நாமும் ஆதரவு தருகிறோம், சர்வதேசத்தை நம்பிதான் முள்ளி வாய்காலில் 50000 மக்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இங்கிலாந்து அரசு, உறுதி மொழி என கூறி ஆதரவு தந்த மக்களையே ஏமாற்றவேண்டாம. இனியும் சர்வதேசத்தை நம்பும் நிலையில் மக்கள் இல்லை.

பொடி பரமேஸுவுக்கு நல்லா வேணும்........

விடுதலை, சுயகௌரவம், மானம் மண்ணங்கட்டி எண்டு திரியும் தமிழ் தறுதலைகளுக்கு படிப்பினையாக அமையட்டும்.

:rolleyes:

இனியும் சர்வதேசத்தை நம்பும் நிலையில் மக்கள் இல்லை.

சும்மா போங்ககையா போங்க.. முக்காவாசி ஈழவர்கள் சரத்பொன்சேக்காவை நம்பியிருந்ததுகள்.. நீங்கள் வேற.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா போங்ககையா போங்க.. முக்காவாசி ஈழவர்கள் சரத்பொன்சேக்காவை நம்பியிருந்ததுகள்.. நீங்கள் வேற.... :rolleyes:

எதுக்கு சரத்தை நம்பினார்கள் சரத் தனிநாடு தருவார் என்றா? :lol::D சரத்தை வச்சு மகிந்தனை கவுக்கதான் நம்பினார்கள், சிங்கள சனம் அரைவாசியாவது இன துவேசம் இல்லாது சரத்துக்கு அரைக்கு அரவாசி சிங்கள சனம் வாக்கு போடும் என நாம் நினைத்தோம. :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு சரத்தை நம்பினார்கள் சரத் தனிநாடு தருவார் என்றா? :rolleyes::lol: சரத்தை வச்சு மகிந்தனை கவுக்கதான் நம்பினார்கள், சிங்கள சனம் அரைவாசியாவது இன துவேசம் இல்லாது சரத்துக்கு அரைக்கு அரவாசி சிங்கள சனம் வாக்கு போடும் என நாம் நினைத்தோம. :D

60 வருடமாக சிங்கள மக்களுக்கு இனவாதம் எனும் போதை மருந்து ஏற்றப்பட்டுள்ளது. அந்த போதையில் இருந்து சிங்கள மக்கள் என்றுமே திரும்ப மாட்டார்கள்.

பரமேஸ்வரன் காலம் கடந்தாவது வந்து நடை பெற்றதை சொன்னார்.இவர் போன்ற இளைஞர்கள் தான் தமிழர்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.புலிகளின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் பச்சோந்திகளை மக்கள் இனம் கண்டு அவர்களின் சுயமுகத்தை மக்களுக்கு அறிய வைக்கவேண்டும்.

சித்தன் உங்கள் கேள்விகளில் நிருபிக்கப்படவேண்டிய நியாயங்களுண்டு. ஆனால் பரமேஸ்வரன் போன்ற ஒருவர் அந்தச் சூழ்நிலையில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தபோது அனைத்துத் தமிழரும் ஆதரவு கொடுத்தார்கள். அவர் மரணமடையக் கூடாது என்பதில் நான் உட்பட பலபேர் இங்கு கருத்து எழுதியிருந்தோம்.

அவர் செய்த உண்ணாவிரதப் போராட்டம் பல இடங்களில் உணர்வலைகளைத் தோற்றுவித்து அவருக்கு ஆதரவான உண்ணாவிரதங்களை தமிழர் வாழுமிடங்களிலெல்லாம் நடைபெறச் செய்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு வாக்குறுதி கொடுக்கப் பட்டதோ இல்லையோ பரமேஸ்வரன் அநியாயமாக உயிரை விட வேண்டிய அவசியம் இல்லை.முருகதாசன் உயிரை விட்டதற்கு எந்த பலனும் கிடைக்க வில்லை.நீங்களும் நானும் வீதியில் ஊர்வலம் போனதை விட அவரின் போராட்டம் கடுமையானது.அதை நாம் கொச்சைப் படுத்தாமல் இருக்க வேண்டும்.அந்த உறுதிமொழிகளைத் தெரிந்து என்ன பண்ணப் போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

-----

பரமேஸ்வரன் காலம் கடந்தாவது வந்து நடை பெற்றதை சொன்னார்.இவர் போன்ற இளைஞர்கள் தான் தமிழர்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.புலிகளின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் பச்சோந்திகளை மக்கள் இனம் கண்டு அவர்களின் சுயமுகத்தை மக்களுக்கு அறிய வைக்கவேண்டும்.

அந்த பச்சோந்திகளின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க ஏன் தயங்குகின்றார்கள்.

இவர்களை அடையாளம் காட்டாவிட்டால் தொடர்ந்தும் குழப்பங்களை ஏற்படுத்தவே செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes:

Edited by four four bravo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் உங்கள் கேள்விகளில் நிருபிக்கப்படவேண்டிய நியாயங்களுண்டு. ஆனால் பரமேஸ்வரன் போன்ற ஒருவர் அந்தச் சூழ்நிலையில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தபோது அனைத்துத் தமிழரும் ஆதரவு கொடுத்தார்கள். அவர் மரணமடையக் கூடாது என்பதில் நான் உட்பட பலபேர் இங்கு கருத்து எழுதியிருந்தோம்.

அவர் செய்த உண்ணாவிரதப் போராட்டம் பல இடங்களில் உணர்வலைகளைத் தோற்றுவித்து அவருக்கு ஆதரவான உண்ணாவிரதங்களை தமிழர் வாழுமிடங்களிலெல்லாம் நடைபெறச் செய்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.

அவரது உண்ணாவிரதத்தை நான் மிக மிக மதிக்கிறேன், அவரை காப்பாற்றுவதற்காகத்தான் உண்ணாவிரதம் நிறுத்தபட்டது என்றால் , அதை நான் மணபூர்வமாக ஏற்று கொள்கிறேன், அவர் காப்பாற்றபடுவதையே நானும் விரும்புவேன்.

எனது ஆதங்கம் என்ன வெண்றால் இங்கிலாந்து அரது ஏதோ உறுதி மொழி கொடுத்து நிறுதப்பட்டிருபது, சர்வதேசத்தின் மீது இன்னமும் மக்களை நம்பிக்கை வைத்திருக்கும் படி முனைப்பு படுத்துவதாக இருகிறது, அதனால்தான் கேட்டேன் என்ன உறுதி மொழி தந்தார்கள் என்று, 50000 மக்கள் உயிருடன் புதைகபட்டபோது சர்வதேசத்துக்கு வராத மனிதாபிமாணம், இனியும் வரும் என்று, நம்ப வைப்பது முட்டள்தனம், அவர்களது பொய் முகங்கள் உரிக்கப்பட வேண்டும், எமது விடுதலை எமது கைகளில் மட்டமே தங்கியிருகிறது என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அந்த பச்சோந்திகளின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க ஏன் தயங்குகின்றார்கள். இவர்களை அடையாளம் காட்டாவிட்டால் தொடர்ந்தும் குழப்பங்களை ஏற்படுத்தவே செய்வார்கள்.

களத்துப் புலிகளின் கடந்தகாலத் தவறுகளை, மீள் பார்வைக்குட்படுத்துவது எதிர்காலச் செயற்பாட்டுக்கு துணைபுரியும் என்பவர்கள். கடந்த ஒரு வருடத்தில் எமக்கருகில் என்ன நடந்தது என்பதை மீள் பார்வைக்கு, பரமேஸ்வரன் அவர்கள் உடைய அனுபவக் கருத்திலிருந்து ஆரம்பித்தால் புலத்தில் புதிய எழுச்சி ஏற்படும்.

Edited by kalaivani

அந்த பச்சோந்திகளின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க ஏன் தயங்குகின்றார்கள்.

இவர்களை அடையாளம் காட்டாவிட்டால் தொடர்ந்தும் குழப்பங்களை ஏற்படுத்தவே செய்வார்கள்.

அதான் சொல்லுற்மே.. பச்சை சட்டை போட்டவர்... கண்ணாடி போட்டவர்... மானாவில் தொடங்கும் தெருவுக்கு அடுத்ததெருவில் இருப்பவர் எண்டு.. போதாதா?... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.