Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல்

Featured Replies

இன்று உலகெலாம் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. உங்களில் பலர் காதலை உணர்ந்திருக்கக் கூடும். என்னுடன் சேர்ந்து கவிதையை அனுபவிப்பீர்கள் என நினைக்கிறேன். :D:lol:

காதல் என்ற மூன்றெழுத்தை

கண்டு சொன்ன கடவுள் யார்?

மந்திர வித்தை கொண்டிந்த

சொல்லை செய்த சிற்பி யார்?

சீறும் புலியாய் இருந்தவர்கள்

பெட்டிப்பாம்பாய் போன கதையென்ன !

கையால் எழுதா, காதால் கேளா

வாயால் பேசா மொழி இதுவே

இரு இதயம் மட்டும் பேசுகின்ற

கடவுள் தந்த அன்பு மொழி

ஒன்றை ஒன்று விட்டகலா

ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற

அன்பு என்னும் ஆலயத்தின்

அர்ச்சனை மந்திரம் காதல் மொழி

எத்தனை ஆண்டு, எத்தனை தூரம்

எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும்

அத்தனை நாளும் என்னிதயம்

உன்னை நினைத்துக் கவிபாடும்

அன்பில் பிறந்த நட்பு இது

பண்பில் வளர்ந்த காதல் இது

எத்தனை தடைகள் வந்தாலும்

தூள் தூளாக உடைத்தெறியும்

காமம் தேடும் உலகத்தில்

உன் காதல் தேடி நான் வந்தேன்

உடலை ரசிக்கும் கூட்டத்தில்

உன் மனதை ரசிக்க நான் வந்தேன்

எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்

இத்தனை நாளும் அறியாமல்

குருடர் போல வாழ்ந்துவிட்டோம்

இனி இருள்கள் அகலும் கவலை விடு

உலகம் எங்கள் காலடியில்

நாளைய பொழுது நம் கையில்

வாழ்க்கை என்னும் புத்தகத்தை

படித்துப் பார்க்க புறப்படுவாய்

கவலை தோய்ந்த மனிதர்கள்

கனவாய் போன கதையறிவாய்

சரித்திரத்தின் பக்கங்களில் எம்

பெயர் பதிக்க எழுந்து வா

அன்புடன்

- ஈழத்திருமகன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்திருமகன் அண்ணா,

காதலர்தின வாழ்த்துக்கள்.

கவிதை நல்லா இருக்கு,

கலக்கிறிங்க சந்துரு... :D

i give a one point

Edited by ஜீவா

  • தொடங்கியவர்

ஈழத்திருமகன் அண்ணா,

காதலர்தின வாழ்த்துக்கள்.

கவிதை நல்லா இருக்கு,

கலக்கிறிங்க சந்துரு... :D

i give a one point

மிகவும் நல்லது. உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள் ஈழத்திருமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலகெலாம் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. உங்களில் பலர் காதலை உணர்ந்திருக்கக் கூடும். என்னுடன் சேர்ந்து கவிதையை அனுபவிப்பீர்கள் என நினைக்கிறேன். :D:lol:

காதல் என்ற மூன்றெழுத்தை

கண்டு சொன்ன கடவுள் யார்?

குருடர் போல வாழ்ந்துவிட்டோம்

இனி இருள்கள் அகலும் கவலை விடு

உலகம் எங்கள் காலடியில்

நாளைய பொழுது நம் கையில்

கவலை தோய்ந்த மனிதர்கள்

கனவாய் போன கதையறிவாய்

அன்புடன்

- ஈழத்திருமகன் -

காதலர்களுக்குக் கணவன் மனைவியாகிக் கரை சேர வாழ்த்துகிறோம்.

  • தொடங்கியவர்

வாழ்த்திய இனிய இதயங்கள் மச்சான், நொச்சி இருவருக்கும் நன்றி. உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காதலர் தின வாழ்த்துக்கள், ஈழதிருமகன். கவிதை அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது உங்களின் கவி வரிகள் நன்றி..அத்தோடு உங்களுக்கும் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்.ஒரு புள்ளி என் சார்பாகவும் போட்டாச்சு. :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதிருமகன்.....கவிதை வரி அழகு. தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்

.புள்ளி ஒன்று போடாச்சு....

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கூறிய இனிய இதயங்கள் நுணாவிலான், யாயினி, நிலாமதி ஆகியோருக்கும் எனது நன்றிகளும் இனிய காதலர் தின வாழ்த்துக்களும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.