Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை: போட்டியிட்டு வெற்றிபெறுமாறு மகிந்த பணிப்பு

Featured Replies

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதியமைச்சரான கணேசமூர்த்தி, அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளமை தெரிந்ததே

GTN

Edited by நிழலி

காலம் கெட்டுப்போய்க் கிடக்கு கண்டபடி அடம்பிடித்துக் கொண்டு அறிக்கையெல்லாம் விடக்கூடாது ஜெனரலாகவிருந்த பொன்ஸ்சுக்கே இந்த நிலமையென்றால் கிழக்கு விடிவெள்ளியெல்லாம் எம்மாத்திரம். போதாதற்கு தட்டயங்கள் வேற கண்டில வெடிவைச்சவனென்று கறுவிக்கொண்டிருக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியிட்டு வெற்றிபெறுமாறு மகிந்த பணிப்பு

= வெளியே போய் உயிருடன் வா பார்க்கலாம்

போட்டியிட்டு வெற்றிபெறுமாறு மகிந்த பணிப்பு

= வெளியே போய் உயிருடன் வா பார்க்கலாம்

கட்டளை---- அத கொஞ்சம் சாதுரியமாக லாவகப்படுத்தி பணிப்பு என்று சொல்லினம்.வேற மாதிரிச் சொன்னால் ---மவனே எனி வாலாட்டினால்???????

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் உள்ளவரைதான் கருநாயும், பிள்ளையுண்டானும் மகிந்தாவின் செல்லப்பிள்ளைகள்.

காட்டிக்கொடுத்து எல்லோரையும் முடிந்துவிட்டால் பின்னர் காட்டிக்கொடுத்தவராகத்தானே கடைசியாக முடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தவறான செய்தி என நினைக்கிறேன் டெய்லி மிரரில் அவர் தேசிய பாதுகாப்பு பட்டியல் மூலம் தான் தெரிவு செய்யப்படுவார் எனப் போட்டிருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தவறான செய்தி என நினைக்கிறேன் டெய்லி மிரரில் அவர் தேசிய பாதுகாப்பு பட்டியல் மூலம் தான் தெரிவு செய்யப்படுவார் எனப் போட்டிருந்தது.

ரதி இவர்கள் எஜமானுக்கு இனியும் தேவையா? தேவையென்றால் தேசியபட்டியல் மூலம் தெரிவு செய்யப்படலாம். வம்பர்கள் பாடு இனி திண்டாட்டம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா போட்டியிடுவதினால் மகிந்தாவுக்குத் தான் இலாபம். வெல்லுவதற்காக அதிகளவு கள்ள வாக்குகள் பதியச் செய்வார். இதனால் மகிந்தாவின் கட்சிக்கு வாக்குகள் அதிகரிக்கும்.

வெளில பெருசா கதை வராட்டிலும் உந்த ஒட்டுண்ணிகளை களட்டி விடும் வேலைகளை ராசபக்ச கொதரங்கள் தொடங்கிவிட்டார்கள்.

ஏற்கனவே டங்கருக்கு இருக்கும் மதிப்பை குறைக்கும் வேலைகள் தொடங்கியாச்சு. நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் முடிவில் இருந்து இவங்களால பெரிசா பிரயோசனம் இல்லையெண்ட முடிவுக்கு வந்திருப்பாங்கள்.

இவங்களை ஒதுக்கி அமைச்சர் அன்னிக்கையும் குறைச்சு மேற்கை ஓரளவுக்கு திருப்திப்படுத்துவதில் மகிந்த முயலக்கூடும்.

எது எப்படியோ புலிகள் போனதோட இவர்களுக்கும் சங்கு ரெடி. எத்தினதரம் சொன்னம் வேண்டாண்டா இது கூடாதென்று கேட்டாங்களா... என்ன ஆட்டம் போட்டங்கள்?

இது மாத்திரம் இல்லை இனத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேவையில்லை என்று கொத்தா ஒருக்கா சொன்னதை பார்த்தேன். கூட்டமைப்புக்கும் சங்கு ஊதாப்போராங்கள் போலத்தான் கிடக்கு. (நாங்களும் அதுக்கு போட்டிதான் ஆதாரம்: யாழ்க்களம்).

கூட்டிக்களிச்சுப்பார்த்தால் வரும் தேர்தலோட கணக்கா மறும்போலத்தான் தெரியுது.

Edited by Sooravali

போட்டியிட்டு வெற்றிபெறுமாறு மகிந்த பணிப்பு

= வெளியே போய் உயிருடன் வா பார்க்கலாம்

இது தான் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கும் சங்கு ஊதாப்போராங்கள் போலத்தான் கிடக்கு. (நாங்களும் அதுக்கு போட்டிதான் ஆதாரம்: யாழ்க்களம்).

கூட்டிக்களிச்சுப்பார்த்தால் வரும் தேர்தலோட கணக்கா மறும்போலத்தான் தெரியுது.

ஏதோ எம்மால் முடிந்தது..............???????

கூட்டமைப்புக்குள் வெட்டு, குத்து, இடைவெளி, துடைப்பு, முழுக்கு, கரணம்,........ என்று எத்தனை ஆயிரம் திரிகள் இங்கு முளைத்துள்ளன

நாங்கள் என்ன சும்மா ஆட்களா...

தமிழர்கள்

எமக்கு நாமே புதைகுழி தோண்டாவிட்டால் இனத்தின் பண்பு மாறிவிட்டதாகாதா......?????

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியவேண்டியது ஒன்றே ஒன்றுதான்

இங்கு எழுப்பப்படும் சிக்கல்கள் பற்றியோ

அச்சங்கள் பற்றியோ

எதிர்கால தடுக்கல்கள் பற்றியோ

கூட்டமைப்பிலுள்ள எவருக்கும் தெரியாதா...?

அவர்கள் எமது மக்கள் பற்றி சிந்திக்கும் தகமையை இதுவரை கொண்டிருக்கவில்லையா...?அனுபவமும் தேசியபற்றும் எமக்கு மட்டுமே சொந்தமா...?

இன்று அந்த மக்களுடன் நிற்பவர்கள் அவர்கள்

அந்த மக்களின் விருப்புகளை கேட்டுத்தான் தமது முடிவுகளை எடுப்பதாக சொல்லும்போது...

அதை நாம் ஏற்க மறுப்பதேன்....?

நான் யாழ்ப்பாணத்தில் சிலருடன் கதைத்தபோது...

இவர்களது முடிவை ஆதரிப்பதாகத்தான் சொன்னார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று டக்லசுக்கும் முரளிக்கும் மரியாதை குறைவதற்கு கூட்டமைப்பின் இந்த மக்கள்மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையே காரணம்

ஏன் இந்தியா இந்தியா என்று புலம்புகின்றீர்கள்

நீங்கள் சொல்லுவதுபோல் கூட்டமைப்பு வழிமாறுவது என்றால் இப்பவே மகிந்த கதவைத்திறந்துதான் வைத்துள்ளார் கூட்டமைப்புக்கு...

ஆனால் அவர்கள் அதற்குள் செல்லாது விலகி இருப்பது ஏன் என்பதனை லாவகரமாக நாம் பதுக்கி விடுகின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துபரிமாறி ஆராய்ந்து அலசுவது ஒரு வழியில் நல்லதுதான், முதலில் சொன்னார்கள் மிகிந்தாவுடன் கூட்டமைப்பு கூட போகிறது என்று, அதற்கு எத்தனை அலசல், ஆராட்சி,கருத்து முறுகல் வந்தன, அது பொய்யான போது எல்லாம் பனிபோல் கரைந்து விட்டது, சில வேளை இந்த கருத்துகள் கருத்தில் கொள்ளப்பட்டே அந்த முடிவு எடுக்கபட்டாதாய் இருந்தால், இப்போது பரிமாறும் கருத்துக்களும் கருத்தில் கொள்ளபடும்தானே, ஆகவே இதுவும் நல்லதுக்கே, கஜேந்திரனுக்கு சீட்டு கிடையாது என கூறப்படுவது தர்கத்துக்குரியதுதான், இந்த கருத்துக்கள் கருத்தில் கொள்ளப்பட்டால் நல்லமுடிவே எடுக்கப்படும், ஏற்கபடும் முடிவு வரும்போது இப்போது கருத்தாடும் கருத்துக்கள் கரைந்து விடும், இப்படி நடந்தால் இதுதான் நடக்கும் என முதலிலியே கருத்தாடுவது நன்மையே, நல்லமுடிவை எடுபதற்க்கு, இக்கருத்துகளும் காரணமாக இருக்கலாம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரனுக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்று கூறுபவர்கள் மே 19க்கு பின்னர் கஜேந்திரன் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நோர்வேயில் இருந்தவாறு சில இணையத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்ததாகவும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்ப முடியாத நிலையிலும் கஜேந்திரன் இலங்கைக்கு திரும்பியதும், மஹிந்தவுக்க்கு ஆதரவாக செயற்படப்போகிறார் என்றும் பல வதந்திகள் வந்ததை பலரும் அறிவர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கட்சிக்குள் நடக்கும் சில ஒழுக்காற்று நடவடிக்கைகளை வெளியில் இருந்து உறுதிப்படுத்தாத தகவல்களை வைத்து விமர்சனம் செய்வது அழகல்ல...

எந்தப் புத்துக்குள்ளை எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும்?????? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரனுக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்று கூறுபவர்கள் மே 19க்கு பின்னர் கஜேந்திரன் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நோர்வேயில் இருந்தவாறு சில இணையத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்ததாகவும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்ப முடியாத நிலையிலும் கஜேந்திரன் இலங்கைக்கு திரும்பியதும், மஹிந்தவுக்க்கு ஆதரவாக செயற்படப்போகிறார் என்றும் பல வதந்திகள் வந்ததை பலரும் அறிவர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கட்சிக்குள் நடக்கும் சில ஒழுக்காற்று நடவடிக்கைகளை வெளியில் இருந்து உறுதிப்படுத்தாத தகவல்களை வைத்து விமர்சனம் செய்வது அழகல்ல...

எந்தப் புத்துக்குள்ளை எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும்?????? :D

கஜேந்திரனுடன் ஒருதடவை பாரீஸில் பேச வாய்ப்பு கிடைத்தது, எனது உறவினர் வீட்டில், அவர் ஒரு பல்கலைகழக மாணவராய் இருந்தவர், விடுதலைபோரில் ஆர்வம கொண்டவர், யாழ்சனம் பயத்தில் அடங்கி இருந்தபோது துணிந்து பல்கலைகழக மாணவரோடு சேர்ந்து பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி தமிழ்சாதியை விளிக்கவைத்தவர், அதுபின்னர் உலகம் முழுதும் விரிவடைந்தது. நேரடியாக விடுதலைபுலிகளால் கூட்டமைப்புக்குள் உள்வாங்கபட்டவர் இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். கூட்டமைப்பிலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளால் பாரளமண்றத்துக்கு தெரிவானவர், அவருக்கு சீட்டு கிடையாது எனசொல்வது ஏற்று கொள்ள முடியாது, இக்கருத்துகளும் கருத்தில் கொ்ள்ளப்படும் என நம்புவோம்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா !

மக்கள் தமிழீழத்தில் இந்திய ஆதிக்கத்தை விரும்புகின்றார்களா?

மக்கள் முன்னாள் பா. உ.க்களை விலக்கக் கோரினார்களா?

மக்கள் சரத்துடன் கூட்டமைக்கச் சொன்னார்களா?

மக்களின் விருப்பம்

தமிழினத்தின்

தனித்துவம்

சுய நிர்ணயம்

சுய ஆட்சி

இவற்றைப்பற்றி சம்பந்தர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

தெளிவு படுத்துவாரா?

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு அண்ணா !

மக்கள் தமிழீழத்தில் இந்திய ஆதிக்கத்தை விரும்புகின்றார்களா?

மக்கள் முன்னாள் பா. உ.க்களை விலக்கக் கோரினார்களா?

மக்கள் சரத்துடன் கூட்டமைக்கச் சொன்னார்களா?

மக்களின் விருப்பம்

தமிழினத்தின்

தனித்துவம்

சுய நிர்ணயம்

சுய ஆட்சி

இவற்றைப்பற்றி சம்பந்தர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

தெளிவு படுத்துவாரா?

வாத்தியார்

...............

மக்கள் சொன்னார்களா? சம்பந்தரை அரசியலுக்கு வர சொன்னார்களா? மக்கள் சொன்னார்காள? காலையில் சாப்பிட சொல்லி, மக்கள் சொன்னார்களா? உங்களை வெளிநாடுக்கு போகச்சொல்லி, மக்கள் சொன்னார்களா? உங்களை இந்த கருத்துகளை எழுதுபடி? :D:blink::wub:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் விருப்பம்

தமிழினத்தின்

தனித்துவம்

சுய நிர்ணயம்

சுய ஆட்சி

இவற்றைப்பற்றி சம்பந்தர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

தெளிவு படுத்துவாரா?

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

இதனை அடைவதற்கு இப்போது இந்தவழியை மட்டும்தான் உலகம் எமக்கு விட்டுவைத்துள்ளது

அதை எம்மைவிட

அங்குள்ள மக்கள் நன்கு அறிவர்

தங்களது அடுத்த கேள்விக்கு பதில்

இதற்கு நேரடியாக பதில் எழுத இன்று வேறுயாராவது ஈழத்தில் இருந்தால் தெரியப்படுத்தவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.