Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போன ஊர்குருவி

Featured Replies

அது ஒரு கற்பனை செய்து பார்க்க முடியாத பயண அனுபவம்.

அதுவும் இலங்கையில் பிறந்த தமிழன் அதுவும் புலம் பெயந்த நாடுகளில் ஒன்றில் இருந்து இலங்கைக்கு சமாதான காலத்தின் பின் யுத்தம் தொடங்கிய அந்த காலங்களில் செல்லும் போது புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்ககட்சிகளில் வெளிவரும் செய்திகளை படித்தபின் அடி வயிற்றில் புளியை கரைக்காதா என்ன ?

விமான நிலையத்தில் கடத்தல்கள், அதுவும் தாண்டி கொழும்பு நகருக்குள் சென்றால்

அங்கு கடத்தல் அல்லது காணாமல் போதல், அதுவும் தாண்டி நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு குறிப்பாக வடபகுதிக்கு போனால் உயிருக்கே உத்தவாதம் கிடையாது என்ற பாங்கான செய்திகளையே புலம் பெயர் ஊடகங்கள் அந்த நாட்களில் வெளியிட்ட வண்ணம் இருந்தன. ஆனால் ஆங்காங்கே இப்படியான சம்பவங்கள் சில நடந்தன தான்.

கட்டுநாயக்காவிற்கு முதன் முதல் சமாதனத்தின் பின் 2007 இல் சென்றேன். அந்த நேரத்தில் நான் எனக்கு தெரிந்த தெய்வங்களிடம் எனக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்று நேர்த்திக்கடன் வைக்காத குறையாக வேண்டிக்கொண்டு சென்றேன்.

விமானத்தில் இருந்து இறங்கிச் செல்லும் போது மிகுந்த பயப்பீதியுடன், குடிவரவு பரிசோதகர்கள் இருக்கும் மேசைகளுக்கு செல்வதற்கு மிகுந்த பயத்துடனும் ஏனைய பயணிகளுடன் நானும் வரிசையில் நின்றேன். நான் ஒரு தமிழன் அதுவும் புலம் பெயந்த நாடு ஒன்றில் இருந்து செல்லும் பயணி ஒருவன். எனது முறையும் வந்தது நான் அந்த குடிவரவு அதிகாரியிடம் எனது கடவுச்சீட்டை மிகுந்த பயத்துடன் கொடுத்தேன் அவரும் அதைனை திறத்து பார்த்துவிட்டு சில தடவைகள் ஆம் என்று தலையாட்டுவது போல் தலையாட்டினார். நான் நினைத்தேன் என் கதையும் இன்று சரி என்று மீண்டும் தெய்வங்களிடம் வேண்டுகின்றேன்.

குடிவரவு அதிகாரி ஏதோ கணனியில் பார்த்துவிட்டு எனது கடவுச்சீட்டில் இறப்பர் முத்திரையை பதித்துவிட்டு கொச்சைத்தமிழில் எத்தனை காலம் வெளிநாட்டில் வசிக்கின்றீர்கள் என்று கேட்டார். நானும் பொய் சொல்லாது எனது வெளிநாட்டுவாழ்வின் காலத்தை சொன்னேன் மீண்டும் ஒரு தலையாட்டல் அத்தோடு கடவுச்சீட்டும் என் கைகளிற்கு வந்து சேர்கின்றது. மிகுந்த கலக்கத்துடன் அருகில் நிற்கும் எவரையும் திரும்பிப்பார்க்காமல் எனது பயணப்பொதிகளை எடுப்பதற்காக அந்த இடத்தை நோக்கி விரைகின்றேன். இடையே வரி இல்லாமல் பொருட்களை விற்பவர்கள் என்னருகே வந்து ஐயா வெளிநாட்டில் இருந்து வருகின்றீர்களா? என்று கேட்கும் போது என் அடிவயிறு கலங்கும்.

ஒரு மாதிரி ஊடகங்களில் கூறப்படும் 1 வது கடத்தல் வலயத்தில் இருந்து தப்பித்துவிட்டோம் என்கின்ற நிம்மதியுடன் சுங்க பரிசோதனை இடம் நோக்கிச் செல்கின்றேன். இனி வருவது இரண்டாம் கடத்தல் வலயம் அதாவது பயணிகளை வரவேற்கும் வரவேற்பாளர்கள் தாமதிக்கும் இடம் அது. அதுக்கும் பிரதான வாயிலுக்கும் இடைப்பட்ட பகுதிதான் புலம் பெயர் ஊடகங்களில் மிகுந்த ஆபத்தான இடம் என்று வர்னிக்கப்பட்ட பகுதி. அந்த இடம் நோக்கி செல்லும் போது மிகுந்த பயத்துடனும் நடுக்கத்துடனும் செல்கின்றேன். அங்கு இரு மருங்கிலும் ஆயுதம் தாங்கிய விமானப்படையினர் நிற்கின்றனர். இடையிடையே சாதாரண உடையுடன் சிலர் நிற்கின்றனர் இவர்கள் தான் கடதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புலனாய்வுத்துறையினரோ அல்லது கருணா, டக்கிளசு குழுவினரோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு செல்லும் போது மீண்டும் ஐயா என்று குரல்கள் கேட்கின்றது.. பயம் வயிறை கலக்குகின்றது. பின்னர் தான் அவர்கள் வாடகை வண்டி ஓட்டுனர்கள் என்று தெரிய வந்தது. வாடகை வாகனம் என்று சொல்லி பின்னர் கடத்திவிடுவார்களோ என்ற பயம் ஒருபக்கம் அப்படியே வெளிவாயிலுக்கு சென்றேன். அங்கு எம் உறவுகள் தாமதித்துக்கொண்டிருந்தனர்.

என்னை கண்டதும் ஓடிவந்து எனது பொதி வண்டியை வாங்கிக்கொண்டு எமது வாகனம் தரித்து நிற்கும் இடத்துக்கு செல்கின்றோம். என்ன பயங்கரமாக கடத்துகின்றார்களாம் என்று பேச்சுக் கொடுத்தேன். ஆம் தம்பி இடைக்கிடை இங்கு நடக்கின்றது என்று இணையத்தில் பார்கின்றோம் என்று அவர்களும் சொல்கின்றனர். அப்போ ஏன் என்னை கடத்தவில்லை என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டு வேண்டுதல் செய்த தெய்வங்களுக்கு தற்காலிகமாக நன்றி சொல்லிகொண்டு வாகனத்தில் ஏறி விமான நிலைய வளாகம் தாண்டி கொழும்பு நகர் நோக்கி செல்கின்றோம்.

தெருவின் இருமருங்கிலும் விமான நிலைய வளாகத்தில் ஆயுதம் தாங்கிய விமானப்படை சிப்பாய்களின் கண்கள் எமது வாகனத்தை உற்று நோக்கத் தவறவில்லை. ஆனால் வாகனம் நிறுத்தப்படவில்லை. இப்போ கட்டுநாயக்க / கொழும்பு வீதியில் செல்கின்றோம் அங்கும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் ஐநூறு மீட்டர்களுக்கு இருவர் வீதம் நிற்கின்றனர். ஆனால் அவர்களும் எம் வாகனத்தை மறிக்கவில்லை. சக்தி வானொலி சத்தமாக வண்டியில் ஒலிக்கின்றது. இது தமிழர்கள் செல்லும் வாகனம் என்பது போக்குவரத்து நெரிசலில் அருகில் வருபவர்களுக்கு இலகுவில் புரிந்துவிடும் எனவே அண்ணா சற்று வானொலியின் சத்தத்தை குறைத்து கொள்ளுங்கள் என்று சாரதிக்கு சொல்கின்றேன். அவரும் நான் சொன்னதை கேட்டு சற்று குறைப்பது போல் செய்கின்றார் ஆனால் நான் எதிர்பார்த்தது போல் இல்லை.

இப்படியே களனிப்பாலத்தை வந்தடைகின்றோம். அங்கு தான் கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படும். சாரதி தவிர்ந்த எமக்கோ சிங்கள பாசை தெரியாது. எமக்கருகில் வந்த ஒரு இராணுவத்தினன் ஏதோ கேட்க நான் ஆங்கிலத்தில் நீங்கள் சொல்வது புரியவில்லை என சொல்ல நான் தமிழ் பேசுவேன் என கொச்சை தமிழில் பதில் கூறினார் அந்த இராணுவத்தினன். அதன் பின் எமது அடையாள அட்டைகள், கடவுச்சீட்டு என்பவற்றைப் பர்த்த அவர் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றார். ஒரு நட்பான உரையாடல்.... எதிர்பார்க்கவே இல்லை. எமது வண்டி வெள்ளவத்தை நோக்கிச் செல்கின்றது.

தொடரும்.....

  • Replies 90
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது வேறை ஆருக்கோ வக்கலத்து வாங்கிறமாரி இருக்கு, அதனால ஒரு சிவப்பு புள்ளியைக் குத்திவிடுறன். மன்னிச்சுக் கொள்ளுங்கோ விடிவெள்ளி.

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறை ஆருக்கோ வக்கலத்து வாங்கிறமாரி இருக்கு, அதனால ஒரு சிவப்பு புள்ளியைக் குத்திவிடுறன். மன்னிச்சுக் கொள்ளுங்கோ விடிவெள்ளி.

ஆரம்பமே தப்பு...

Edited by விசுகு

இதில் கூறப்பட்டிருப்பதை நான் ஏற்றுக்கொள்வேன், அனேகமானோர் இந்த மாதிரியான பீதியுடன் போகின்றார்கள், உண்மையில் ஆங்கிலமோ சிங்களமோ சரளமாக பேசத்தெரிந்தவர்க்கு பிரச்சனை ஏதும் நடந்ததாக நான் இதுவரை அறியவில்லை.(விதிவிலக்கு சிவப்பு பட்டியலிலுள்ளவர்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

சில நாட்களுக்குமுன் கிளிநொச்சியில் தலை வெட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டவர்கள் சிவப்போ....

அப்படியாயின்

சிவப்பை எதுவும் செய்யலாம் என்கின்ற நாடு பயமற்றதோ...?

இவ்வளத்தையும் எழுதி விட்டு சிறிலங்காவிற்கு கூவி :wub: அழைக்கின்றீர்களோ என்பக்கத்தில்

இது உங்கள் வியாபார நிறுவனமோ

என் பக்கம்

www.tamiltravels.com

Edited by tamilsvoice

அப்போ

சில நாட்களுக்குமுன் கிளிநொச்சியில் தலை வெட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டவர்கள் சிவப்போ....

அப்படியாயின்

சிவப்பை எதுவும் செய்யலாம் என்கின்ற நாடு பயமற்றதோ...?

அந்தக் கருத்தில் கூறவரவில்லை அப்படியானோர் பயணத்தை தவிர்த்துக் கொள்ளலாம். நாடு சுத்தமாகக் கூடிய சூழல் இன்னும் வெகுதூரத்திலுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்படி சொல்லவில்லை

வரலாறு எழுதுவதற்கும்

வக்காலத்து வாங்குவதற்கும்

தங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று சொல்லாதீர்கள் சிற்பி ஐயா....

அந்தக் கருத்தில் கூறவரவில்லை அப்படியானோர் பயணத்தை தவிர்த்துக் கொள்ளலாம். நாடு சுத்தமாகக் கூடிய சூழல் இன்னும் வெகுதூரத்திலுள்ளது

சிவப்பு குத்தப்பட்டவர்கள் மட்டும்தான் தண்டிக்கப்படுகின்றனர் என்ற கருத்திலிருந்து நீங்கள் இன்னும் பின் வாங்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்து குருவி கழுகுப்பார்வை உங்கள நோக்கி திரும்பியிருக்கு.

பாத்து குருவி கழுகுப்பார்வை உங்கள நோக்கி திரும்பியிருக்கு.

ஏன் கொத்தி கொண்டு போய் காசு கேக்க போறியளோ...??? அதுதான் நீண்டகாலமாய் நடக்குதே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கொத்தி கொண்டு போய் காசு கேக்க போறியளோ...??? அதுதான் நீண்டகாலமாய் நடக்குதே...

அண்ணை பொய்கை எப்ப வருவார்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பொய்கை எப்ப வருவார்? :wub:

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன புதுசா 2007 ஆண்டு போன கதையை இப்பசொல்லிகொண்டு நாளுக்குநாள் ஸீன் மாறிக்கொண்டு போகுது ஏதாவது சொல்லவந்தால் நேரடியாக சொல்லாமே

அண்ணை பொய்கை எப்ப வருவார்? :lol:

என்ன கடுமையாக தேடிறியள்.? ஏதாவது தேவையோ.? :wub:

தகவலுக்கு நன்றி

எங்கை நீங்கள் சேரவேணுமோ அங்கை சேந்திட்டியள்.

  • தொடங்கியவர்

இங்கு நான் யாருக்கும் வகாலத்து வாங்கவரவில்லை 2007 முதல் 2010 வரை நான் போன பயணங்களின் அநுபவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றேன். எனக்கு நடந்தவைகள் நடக்காதவைகளை தான் நான் எழுத இருக்கின்றேன். உங்களை திருப்திப்படுத்த நான் பொய் ஏதும் எழுத வேண்டிய தேவை இல்லை. தமிழ் ரவல்ஸ் மூலம் இலங்கைக்கு மட்டுமல்ல நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் மிகவும் மலிவான விலையில் போகலாம் அது எமது தனிப்பட்ட விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே...உங்கள் அனுபவங்கல்...உங்களுக்கு இனிமையாக இருக்கலாம்...இதை இப்ப எழுதவேண்டிய அவசியம் என்ன?இரத்த வாடைகளும் இழப்புகழும் இன்னோரன்ன வேதனைகளும் தீரவில்லை....உங்கள் சுயதேவைப் பூர்த்தியை ஆறுதலாக ஆரம்பிக்கவும்....இப்போது இது நேரமல்ல...

அனுபவங்கள்தானே தொடர்ந்து சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் உந்த ஊர்குருவியார் ஏனாம் ஊரைவிட்டு பறந்து வெளிநாட்டுக்கு ஓடிவந்தவர். இப்படி திரும்பிப் போய்.. "சோ" காட்டவோ.

அசைலம் கிடைக்கும் வரை சிங்களவன் அடிக்கிறான் உதைக்கிறான்.. புலி சுடுகுது குத்துது பிடிக்குது எண்டுங்கோ.. உள்ள சர்வதேச சட்டங்களை எல்லாம் மீறி களவா வந்து.. அசைலம் கிடைச்சு.. பாஸ்போட்டுகளும் கிடைச்ச உடன.. ஊருக்குப் பறக்கிறமாம்.. ஊர்ப்புதினம் பேசிறமாம். நல்லா இருக்குங்கோ உங்கட நியாயம்.

இந்த உலக நாடுகள் எந்த தயவுதாட்சண்ணியமும் இன்றி இலங்கையில் இருந்து களவாக நுழைந்து அகதி அந்தஸ்துக் கோரி நிரந்தர வதிவுரிமை அல்லது இன்னொரு நாட்டின் குடியுரிமை பெற்ற பின் சிறீலங்காவிற்குள் நுழைய முற்படும் அனைத்துத் தமிழர்களினதும் விசாவை ரத்துச் செய்து அவர்களை நிரந்தரமாக சிறீலங்காவிற்கு அனுப்புவதாக அறிவித்தால்.. ஊர்க்குருவியாருக்கு ஒண்டுக்கு போக வெளிக்கிட்டிடும். வந்திட்டாங்கையா.. ஊரையே ஏச்சுப் பிழைச்சுக்கொண்டு.. ஊருக்கே உபதேசமும் வேற..!

சிங்களவன்ர நிர்வாக நடைமுறையில இவ்வளவு நம்பிக்கை.. பற்றுறுதி உள்ளவை ஏனாம்.. புலம்பெயரினம்...???! :):unsure:

Edited by nedukkalapoovan

அப்போ

சில நாட்களுக்குமுன் கிளிநொச்சியில் தலை வெட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டவர்கள் சிவப்போ....

அப்படியாயின்

சிவப்பை எதுவும் செய்யலாம் என்கின்ற நாடு பயமற்றதோ...?

கிளிநொச்சியில் கொலைசெய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் இல்லை ஒரு தொகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டு கிணற்றில் எறியப்பட்டனர்.

இந்த உலக நாடுகள் எந்த தயவுதாட்சண்ணியமும் இன்றி இலங்கையில் இருந்து களவாக நுழைந்து அகதி அந்தஸ்துக் கோரி நிரந்தர வதிவுரிமை அல்லது இன்னொரு நாட்டின் குடியுரிமை பெற்ற பின் சிறீலங்காவிற்குள் நுழைய முற்படும் அனைத்துத் தமிழர்களினதும் விசாவை ரத்துச் செய்து அவர்களை நிரந்தரமாக சிறீலங்காவிற்கு அனுப்புவதாக அறிவித்தால்.. ஊர்க்குருவியாருக்கு ஒண்டுக்கு போக வெளிக்கிட்டிடும். வந்திட்டாங்கையா.. ஊரையே ஏச்சுப் பிழைச்சுக்கொண்டு.. ஊருக்கே உபதேசமும் வேற..!

நானும் அதை வரவேற்கிறேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லுறத நம்பி, உங்கட ரவல்ஸ்மூலம் ஊருக்கு போய் ஏதவது நடந்தால், போறவருக்கு நஸ்டஈடு வழங்குவீர்கள் என்றால் ஊருக்கு போகலாம் என்ற பிரச்சாரத்தை தொடரவும் :unsure::):)

  • தொடங்கியவர்

அது சரி அப்பு நெடுக்கால போவான் சட்டரீதியாக வெளிநாடு வந்து. நேர்மையாக உழைக்கும் தாங்கள் ஒரு போதும் இலங்கைக்கு போனதில்லையா? அல்லது போகப்போவதில்லையா? நீரும் பஞ்சம் பிளைக்க வந்தவர் என்ற ஒன்றை ஒத்துக்கொள்ளும். உமக்கு என்ன அங்கு சிறீ லங்கா ஆமி பெரும் கொடுமை செய்தவங்களோ? உண்மையில் கொடுமைகளை அனுபவித்தவர்கள் பெரும்பாலும் சிறீ லங்காவில் தான் இன்னும் வசிக்கின்றனர். அப்படி நீர் எதிர்பார்கின்ற மாதிரி உமக்கு தனிநாடு வேண்டும் என்று விரும்பி இருந்தால் ஏன் தாயகத்தில் இருந்து போராடி நாட்டை பிடித்திருக்கலாமே? குடும்பத்தோடு வெளிநாடுகளில் அடுக்குமாடியில் பதுங்கியிருந்துகொண்டு அங்கு இருக்கும் மக்களை தானே காவு கொடுதீர்கள். எம் விடுதலைக்காக தம் உயிரினை ஈந்த போராளிகள் + மக்களை நான் தலை சாய்த்து வணங்குகின்றேன். ஆனாலும் உங்களைப் போன்றவர்கள் செய்யும் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏதோ கடத்துறாங்கள் வெட்டுறாங்கள் கருக்குகின்றார்கள் என்று கூக்குரலிட்டு இணையம் இணையமாக புலம்பி திரிந்தீர்கள் ? நான் இவ்வளவு தடவைகள் சத்தமேதும் இல்லாமல் போய் வந்துவிட்டேன் அப்போ ஏன் இவைகள் எனக்கு நடக்கவில்லை? அப்போ நான் என்ன ஒட்டுக்குழு என்று சொல்கின்றீர்களா? ஏதோ சில பிரச்சினையான ஆட்களுக்கு இப்படியானவைகள் நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்களுக்கும் இது தான் நிலை என்று புலம்பித்திரியக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குப் போன ஊர்க்குருவி by vidivelli

என் பக்கம் (www.tamiltravels.com) promoted by vidivelli

Conflict of Interests..!

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அப்பு நெடுக்கால போவான் சட்டரீதியாக வெளிநாடு வந்து. நேர்மையாக உழைக்கும் தாங்கள் ஒரு போதும் இலங்கைக்கு போனதில்லையா? அல்லது போகப்போவதில்லையா? நீரும் பஞ்சம் பிளைக்க வந்தவர் என்ற ஒன்றை ஒத்துக்கொள்ளும். உமக்கு என்ன அங்கு சிறீ லங்கா ஆமி பெரும் கொடுமை செய்தவங்களோ? உண்மையில் கொடுமைகளை அனுபவித்தவர்கள் பெரும்பாலும் சிறீ லங்காவில் தான் இன்னும் வசிக்கின்றனர். அப்படி நீர் எதிர்பார்கின்ற மாதிரி உமக்கு தனிநாடு வேண்டும் என்று விரும்பி இருந்தால் ஏன் தாயகத்தில் இருந்து போராடி நாட்டை பிடித்திருக்கலாமே? குடும்பத்தோடு வெளிநாடுகளில் அடுக்குமாடியில் பதுங்கியிருந்துகொண்டு அங்கு இருக்கும் மக்களை தானே காவு கொடுதீர்கள். எம் விடுதலைக்காக தம் உயிரினை ஈந்த போராளிகள் + மக்களை நான் தலை சாய்த்து வணங்குகின்றேன். ஆனாலும் உங்களைப் போன்றவர்கள் செய்யும் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏதோ கடத்துறாங்கள் வெட்டுறாங்கள் கருக்குகின்றார்கள் என்று கூக்குரலிட்டு இணையம் இணையமாக புலம்பி திரிந்தீர்கள் ? நான் இவ்வளவு தடவைகள் சத்தமேதும் இல்லாமல் போய் வந்துவிட்டேன் அப்போ ஏன் இவைகள் எனக்கு நடக்கவில்லை? அப்போ நான் என்ன ஒட்டுக்குழு என்று சொல்கின்றீர்களா? ஏதோ சில பிரச்சினையான ஆட்களுக்கு இப்படியானவைகள் நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்களுக்கும் இது தான் நிலை என்று புலம்பித்திரியக்கூடாது.

நான் சிறீலங்காவிற்கு எந்த தேவையற்ற சுற்றுலாப் பயணமும் செய்வதில்லை. தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சவால்கள் வன்முறைகள் நிறைந்திருக்கிறது.. மனிதர்கள் ஆபத்தை எதிர்கொள்ளக் கூடிய சூழல் நிலவுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் தான் பயணிப்பேன். அபரிமிதமான பொய் உறுதிமொழிகள் தரமாட்டேன்.

மனித உரிமை அமைப்புக்கள் கூட எச்சரிக்கும் அளவிற்கு உள்ள நிலையை.. நான் எனது நலன் சார்ந்து மட்டும் தீர்மானித்து மறுதலிக்க முயலமாட்டேன்.

உங்கள் கருத்து என்னவென்றால் உங்களுக்கு நிகழ்தால் மட்டும் தான் அது உண்மை மற்றவர்களுக்கு நிகழ்ந்தால் அது பற்றி நீங்கள் வருத்தப்படப் போவதில்லை என்பதுதான்.

இந்த வருத்தம் தமிழர்களில் ஒரு விடயத்தில் இருப்பதில்லை. வெளிநாட்டுக்கு ஓடி வரும் போது எல்லா தமிழர்களும் தாங்கள் நேரடியாக பாதிக்கப்படாத போதும் கல்லெறி படாமல் காலைத் தூக்கிக் கொண்டு ஓடும் நாய் போலத்தான் ஓடி வருவார்கள். வந்து செற்றிலான பின்.. நமக்கு எங்கே கல்லெறி விழுந்தது என்று தான் கேட்பார்கள். :unsure::)

காரணம்.. கல்லெறிபட்ட மக்கள் இன்னும் அதிகம் ஊரோடுதான் வாழ்கிறார்கள். கல்லெறிபடாமல் காலை தூக்கிக் கொண்டோடியவர்கள் தான் புலம்பெயர் தேசங்களில் அதிகம். இதுதான் யதார்த்தம். உண்மை. அந்த வகையில் உங்களுக்கு உண்மையான கல்லெறியின் வலி தெரிய வாய்ப்பில்லை.

நாங்கள் கல்லெறியும் வாங்கி இருக்கிறம். சிங்களத்தின் அனைத்துப் பரிமான வன்முறைகளையும் கண்டிருக்கிறோம். ஒட்டுக்குழுக்களின் பிள்ளை பிடியில் இருந்து.. மண்டையன் குழுவின் கோணிப்பை கலாசாரம் தொடங்கி.. கருணாவின் பொம்பிளைப் பொறுக்கி கலாசாரம் வரை கண்டிருக்கிறோம். உங்களுக்கு என்று ஒன்று நடக்கும் போதுதான் அதை உண்மை என்று நம்பவும் அதுவரை நடிக்கவும் கற்றுக் கொண்ட போலித் தமிழர்களாக வாழும் நிலையில் நாங்கள் இல்லை. ஏனெனில் நாங்கள் கல்லெறிபட்ட மக்கள். எம்மோடு கல்லெறி வாங்கியவர்களையும் அதன் வலிகளையும் உணர்ந்திருக்கிறோம். இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு.

இருந்தும் நாங்கள் எங்கள் மக்களின் வலியை.. போராளிகளின் தியாகத்தை.. போராட்டத்தை காட்டிக் கொடுத்து போராளிகள் மீது பழிசொல்லி வாழ நினைக்கவும் இல்லை. அதுவே போராட்டத்திற்கு செய்த ஒரு நற்காரியம் என்று நான் நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அதை வரவேற்கிறேன்...

நானும் அதை வரவேற்று ஒரு பச்சை குத்தியுள்ளேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.