Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகி திலீபனின் நினைவு தூபி உடைப்பு: ஐங்கரநேசன் மற்றும் ஆனந்தசங்கரி கண்டித்து அறிக்கை! சம்பந்தர் தொடர்ந்தும் மௌனம்!!

Featured Replies

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபனின் நினைவுதூபி உடைக்கப்பட்டதை கண்டித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட கண்டன அறிக்கை வருமாறு:

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் சிலரினால் அடித்து இடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த இடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் அரசியல் நலன்களுக்கு திலீபனின் சிலை பெருந்தடையாக அல்லது அச்சுறுத்தலாக விளங்கி இருக்க வேண்டும். இதனைத் தாங்க முடியாத சக்திகளே இந்தப் பண்பாட்டுக் கொலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் நினைவுத்தூபிகளை அழிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருந்து ஒருபோதும் நினைவுகளை அகற்றிவிட முடியாது.

திலீபனின் தூபி உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், திலீபன் போன்ற போராளிகளின் இலட்சியத்தையும் போராட்ட மார்க்கத்தையும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஆவர். இவர்கள் திலீபன் போன்றவர்களுக்கும் சமூகத்தில் இடமுண்டு என்பதை ஏற்கத் துணிச்சல் அற்ற பேர்வழிகள் ஆவர். இத்தகைய சக்திகளின் அதிகார ஆதிக்கம் அரசியல் கலாச்சாரமாகவே பரிணாமம் பெற்றுவிட்டது. இவர்களே அநாகரிக காலகட்டத்தை நோக்கிச் சமூகத்தையும் வழிநடத்தப் போட்டி போடுகிறார்கள்.

போராட்ட காலங்களில் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைவிடங்கள், சின்னங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் வைத்திய சாலைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நாகரிக மரபு உண்டு. இதைவிட போர்க்காலங்களில் சரணாகதி அடைந்தவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் உயிர்நீத்தவர்கள் யாவரையும் கௌரவமாக நடத்தவேண்டிய பொறுப்பும் உண்டு. இதுவரையான உலக அனுபவம் இதைத்தான் வெளிப்படுத்துகின்றது.

இலங்கையில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையிலான மோதலில் கூட எல்லாளன் இறந்தபோது துட்டகைமுனு எல்லாளனுக்கு உரிய மரியாதை கொடுத்து உடலை அடக்கம் செய்ததாகவே எமக்கு வரலாறு கற்பிக்கின்றது. ஆனால், இந்த மரபு பின்னர் வந்த பௌத்த சிங்கள தலைமைகளிடம் அறவே இல்லாமல் போய்விட்டது.

யுத்தக் கைதிகள் பரிமாற்றம், யுத்த தர்மம் போன்ற உயர் விழுமியங்கள் பற்றிக் குறித்துப் பேசக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட அல்லது சூறையாடப்பட்ட பண்பாட்டுச் சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென்ற கடமைப்பாடு உண்டென கருத்துரைக்கும் போக்கும் எழுச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் திலீபனின் நினைவுத்தூபி உடைப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அநாகரிக சக்திகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேகம் கொண்டு வருகின்றார்கள் என்பதையே இது அடையாளம் காட்டி வருகின்றது.

போர் வெறுப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய சக்திகள் தம்மை போரியல் வெளியுள்ளவர்களாகவே அடையாளம் காட்டுகின்றனர். இவை சமாதானம், அகிம்சை சுட்டும் வாழ் புல நெறிகளுக்கு எதிரானவை. திலீபன் போன்ற குறியீடுகள் உணர்த்திய அரசியல் மார்க்க முறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்தில், திலீபன் எதை எதிர்த்து நின்றானோ அந்த அரசியல் வழிமூலம் திலீபனின் தூபி உடைப்பு நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுக் கொலை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தொடரக்கூடாத வழிமுறையும் கூட.

தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் அறிக்கை

ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தீவிரமாக போராடிய திலீபன் தமிழ் மக்களின் கனவும் இலட்சியமும் நிறைவேறவேண்டுமானால் அதற்கு சரியான வழி தந்தை செல்வா அமரர் அமிர் போன்றோர் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியின் அகிம்சை ரீதியிலான போராட்டமே.

இந்தப் போராட்டமே சரியென உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர் திலீபன். இறுதியில் ஓர் அகிம்சைவாதியாக உயிர்நீத்தார் அவர். அவ்வாறான இலட்சியத்தை கொண்டவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது காட்டுமிராண்டித்தனமான செயல் மட்டுமல்ல மன்னிக்கமுடியாத வரலாற்று துரோகமும் கூட.

ஒருவரின் நினைவாக அமைக்கப்படும் நினைவு தூபிகளும் சரி சின்னங்களும் சரி உடைக்கப்படுவதென்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இவ்வாறான மிலேச்சத்தனமான செயலை தமிழர் விடுதலை கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெளியிட்ட அறிக்கை

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக காந்திய வழியிலே போராடிய ஈழத்துக் காந்தியே அண்ணன் திலீபன். மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு மருத்துவ மாணவனாக இருக்கும்பொழுது தமிழ் மக்களின் அவல வாழ்வு கண்டு அவர்களது நிம்மதியான வாழ்வுக்காக அகிம்சை வழியில் போராடிய உத்தம புருசர். நீராகாரம் அருந்தாமல் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தனது உடம்பை உருக்கி உரமாக்கியவர். இலங்கைத்தீவில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாகப் பூசிக்கப்படும் உயரிய மனிதர்.

வணக்கத்திற்குரிய வகையிலே தமிழ் மக்களால் அவரது நினைவாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவாலயம் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கோரக் கரங்களால் சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து ஒவ்வொரு தமிழனது நெஞ்சமும் அக்கினிப் பிளம்பாகியது. மரணித்த மாவீரனது கல்லறையை காட்டுமிராண்டித்தனமாகச் சிதைத்த செயலை தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

eelanesan

  • கருத்துக்கள உறவுகள்

சரி நாளைக்கு சம்பந்தர் அறிக்கை விட்டால் ,"தியாகி திலீபனின் நினைவு தூபி உடைப்பு: ஐங்கரநேசன் மற்றும் ஆனந்தசங்கரி,சம்பந்தர் கண்டித்து அறிக்கை! என்று தலைப்பு இடுவீர்களா?".

இதற்காக நான் சம்பந்தர் பக்கம் என்று நினைக்கவேண்டாம். இப்ப ஊடகங்கள் தங்களின் ஆதரவுக்கு ஏற்ப செய்திகளை வெளியிட்டு வருகிறது. சம்பந்தரின் இந்தியா சார்பு கொள்கையை விமர்சியுங்கள். ஆனால் சங்கரி சொன்னார், டக்லஸ் சொன்னார், சம்பந்தர் சொல்லவில்லை என்று தலைப்பு இடவேண்டாம். ஏன் கஜேந்திரன் பொன்னம்பலம் கூட இன்னும் கண்டித்து அறிக்கை விடவில்லை. ஏன் நீங்கள் ,"தியாகி திலீபனின் நினைவு தூபி உடைப்பு: ஐங்கரநேசன் மற்றும் ஆனந்தசங்கரி, கண்டித்து அறிக்கை!, சம்பந்தர், கஜேந்திரன் பொன்னம்பலம் தொடர்ந்தும் மெளனம் " என்று தலைப்பு இடவில்லை.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைவரின் தகப்பானாரின் மறைவுக்கு கஜேந்திரன் பொன்னம்பலம் கூட அறிக்கை விடவில்லை.ஏன் அஞ்சலி கூட செய்யவில்லை. ஆனால் சம்பந்தர் அஞ்சலி செய்தார்.

யாழில் வந்த பழைய செய்திகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைய ஐயாவின் பூதவுடலுக்கு நேற்று 1000க் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர் கூடவே நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்ச்நதிரன் ,சொலமன் சிறில் ,பத்மினி சிதம்பரநாதன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் , வினோ நோகதாரலிங்கம், கே .துரைரட்ணசிங்கம் ,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67810

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67761

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67804

ஏன் சம்பந்தன் கவலை தெரிவித்தால் அல்லது அறிக்கைவிட்டால் திலீபனின் தூபியை இடித்தவர்கள் என்ன திருப்பி கட்டவா செய்வார்கள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர்ட தூபி லண்டன் பாலிமன் சுகயாரிலதான் வைக்கவேணும். :lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்ட தூபி பாலிமன் சுகயாரிலதான் வைக்கவேணும். :lol:

தலைவருக்கு தூபி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தூபியாக எழுந்து நிற்கவோ.. எதிரியின் கால் பிடித்து.. பிழைப்பு நடத்தவோ.. போராடியவர்கள் அல்ல. அவர்கள் எப்போதுமே மரணத்தை அணைத்தபடியே போராடினார்கள்.வீரர்கள் தூபிகளில் எழுந்து நிற்பதில்லை.

சிங்கள தேசத்திற்கு ஒரு சக்கை அனுப்புறது ஒன்றும் பெரிய வேலையில்லை. அதனையும் சிங்களவரும் உங்களைப் போன்றவர்களும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குண்டு போதும் அனைத்து மாயா ஜாலங்களையும் தகர்தெறிய. ஆனால் அதுவல்ல இன்றைய தேவை. இந்த உலகம் சிங்களப் பேரினவாதத்தை இனங்காண்கிறதோ இல்லையோ.. இலங்கைக்குள் ஐக்கியத்தை தேடும் அதேவேளை.. பிற நாடுகளில் பிரிவினையை வேண்டுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

இந்த உலகின் போக்கை மாற்றாமல்.. சிங்கள தேசத்தை தண்டித்துப் பயனில்லை. சிங்களம் ஆடும். இந்த உலகம் மாறும் வரை. அதுவரை நாம் இராஜதந்திரப் போர் செய்தபடி.. கொஞ்சம் தணிந்திருப்பதே நன்று. அந்த வகையில் மெளனித்திருக்கும் துப்பாக்கிகளை மீண்டும்.. சீற வைத்துப் பார்க்க முனைவது சிங்களப் பேரினத்தின் பேரழிவிற்கே வகை செய்யும்..!

இப்படித்தான் 1989 இலும் சிலர் கொக்கரித்தார்கள். இறுதியில்.. 1991 இல் பிரியாவிடை பெற்றுக் கொண்டார்கள். :D:huh:

Edited by nedukkalapoovan

நெடுக்கு ஐங்கரநேசன் மாஸ்டரிட்ட தாவரவியல் படிக்க இல்லையோ. உங்களை அப்பவே கொட்டிலுக்கை வச்சு குட்டித்தாக்கி இருக்கவேணும். இப்ப தோளுக்கு மேல வளந்துட்டீங்கள். என்னமோ வாத்தியார் அவ்வழி பையங்கள் எவ்வழி..

ஜங்கரநேசன் எலக்சனில் நிற்கப்போகின்றார் என பல மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன்.தாவரவியல் டியூசன் கொடுத்த கதை இப்பதான் தெரியும்.இவருக்கு படிக்கிற காலத்தில ஒரு சின்ன உதவி செய்தனாங்கள் இப்ப நினைத்தாலும் சிரிப்பாக இருக்கின்றது.(ஒரு---- கடிதம் எழுதி கொடுத்தோம்)

அது ஒரு நிலாக்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு ஐங்கரநேசன் மாஸ்டரிட்ட தாவரவியல் படிக்க இல்லையோ. உங்களை அப்பவே கொட்டிலுக்கை வச்சு குட்டித்தாக்கி இருக்கவேணும். இப்ப தோளுக்கு மேல வளந்துட்டீங்கள். என்னமோ வாத்தியார் அவ்வழி பையங்கள் எவ்வழி..

ஒரு புகழ் பெற்ற போராளியின் சகோதரரும் தேர்தலில் போட்டியிடப் போகிறார். இவர் புலம் பெயர்ந்த நாட்டில் பேராசிரியராகக் கடமை புரிந்தவர்.

  • தொடங்கியவர்

சரி நாளைக்கு சம்பந்தர் அறிக்கை விட்டால் ,"தியாகி திலீபனின் நினைவு தூபி உடைப்பு: ஐங்கரநேசன் மற்றும் ஆனந்தசங்கரி,சம்பந்தர் கண்டித்து அறிக்கை! என்று தலைப்பு இடுவீர்களா?".

கண்ணில் கோளாறா கந்தப்பு இதை அந்த இணையத்திடம் கேளுங்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்ச்நதிரன் ,சொலமன் சிறில் ,பத்மினி சிதம்பரநாதன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் , வினோ நோகதாரலிங்கம், கே .துரைரட்ணசிங்கம் ,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் பா.அரியநேத்திரன்

இவர்கள் அஞ்சலி செலுத்தியதாக படங்களில் இருந்தால் காட்டுங்கள்

இதில் எங்கேயும் சம்பந்தர் அறிக்கை விடவில்லை பாருங்கோ கந்தப்பு

தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7.JPG

விளக்கமாக வாசிக்கவும் கூட்டமைப்பு வெளியிடவில்லை என்று சொல்லவில்லை அதுவும் அவர்கள் தனிநபர் விருப்பாகவே வெளியிட்டிருக்கின்றார்கள் ஆனால் அது போல் சம்பந்தரோ அல்லது கூட்டமைப்பு சார்பாகவோ ஒரு அறிக்கை வெளியிடவில்லை

ஏனைய தலைவர்கள் என்று கூட்டமைப்பு சுரேஸ் மாவையைத் தான் குறிப்பிட்டிருக்கின்றார்கள் அப்போது கூட்டமைப்பு பிரியவில்லை பாருங்கோ

Edited by tamilsvoice

  • தொடங்கியவர்

ஒரு புகழ் பெற்ற போராளியின் சகோதரரும் தேர்தலில் போட்டியிடப் போகிறார். இவர் புலம் பெயர்ந்த நாட்டில் பேராசிரியராகக் கடமை புரிந்தவர்.

தளபதி தீபன் அவர்களது உடன்பிறப்பின் கணவருக்கு நியமனம் கொடுக்கப்பட்டுள்ளது இவரையா சொல்லுகின்றீர்கள் அவர்களே பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்குரல் ,தராக்கி ஆகியோர் முன்பு ஒரே குரலில் விடுதலைப்புலிகளுக்காக ஆதரவு கருத்துக்களை எழுதினார்கள். ஆனால் தற்பொழுது சம்பந்தர் குழு, கஜேந்திரன் குழு என இரண்டாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரிந்தபின்பு தங்களின் கருத்துகளுக்காக தராக்கி - திலிபனின் தூபியை உடைத்தவர் கஜேந்திரன் குழு என்று எழுதுகிறார். தமிழ்க்குரல் இணையம் ஒன்றில் வந்த செய்தியான திலீபனின் நினைவு தூபி உடைப்பு சங்கரி கண்டனம், சம்பந்தர் மெளனம் என்றதை இணைக்கிறார். நாளை சம்பந்தரும், கஜேந்திரரும் ஒன்றாகச் சேரலாம். சம்பந்தரைப் பிடிக்காதவர்கள் சம்பந்தரின் இந்தியா விசுவாசத்தை விமர்சியுங்கள். கஜேந்திரனைப் பிடிக்காதவர்கள் கஜேந்திரனின் நிலைப்பாட்டை விமர்சியுங்கள். அதைவிட்டு இருவரும் செய்யாதவற்றை இங்கு பதியவேண்டாம்

தமிழ்க்குரல் ,தராக்கி ஆகியோர் முன்பு ஒரே குரலில் விடுதலைப்புலிகளுக்காக ஆதரவு கருத்துக்களை எழுதினார்கள். ஆனால் தற்பொழுது சம்பந்தர் குழு, கஜேந்திரன் குழு என இரண்டாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரிந்தபின்பு தங்களின் கருத்துகளுக்காக தராக்கி - திலிபனின் தூபியை உடைத்தவர் கஜேந்திரன் குழு என்று எழுதுகிறார். தமிழ்க்குரல் இணையம் ஒன்றில் வந்த செய்தியான திலீபனின் நினைவு தூபி உடைப்பு சங்கரி கண்டனம், சம்பந்தர் மெளனம் என்றதை இணைக்கிறார். நாளை சம்பந்தரும், கஜேந்திரரும் ஒன்றாகச் சேரலாம். சம்பந்தரைப் பிடிக்காதவர்கள் சம்பந்தரின் இந்தியா விசுவாசத்தை விமர்சியுங்கள். கஜேந்திரனைப் பிடிக்காதவர்கள் கஜேந்திரனின் நிலைப்பாட்டை விமர்சியுங்கள். அதைவிட்டு இருவரும் செய்யாதவற்றை இங்கு பதியவேண்டாம்

கந்தப்பு

கெடுகுடி செர்கேளாது...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கந்தப்பு சொல்ல வந்தது இறுதிக்கட்டப் போரில் பலியான லெப்.கேணல் அமுதாப்பின் மூத்த சகோதரர் செல்வா பற்றித்தான் என்று நினைக்கிறேன். அவர் இங்கு அவுஸ்த்திரேலியாவில் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு தற்போதுதான் இலங்கைக்குச் சென்றுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாக தேர்தலில் போட்டியிடப்போகும் இவர் ஒரு முழுமையான அரசியல்வாதிக்குரிய அனைத்து சிறப்பியல்புகளையும் கொண்டவர். தான் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் அதை எப்படியாவது தனது திறமையைக் கொண்டு நியாயப்படுத்திக் கொள்ளும் ஆற்றலுடையவர். தற்போது கூட்டமைப்பிலிருந்தாலும் வெற்றி பெற்றால் மகிந்தவுடனும் சேரக்கூடியவர். அதையும் மிகவு நாசுக்காக நியாயப்படுத்தக் கூடியவர்.

அப்படி ஒரு தம்பிக்கு இப்படி ஒரு அண்ணா !!!!!

:lol: கந்தப்பு சொல்ல வந்தது இறுதிக்கட்டப் போரில் பலியான லெப்.கேணல் அமுதாப்பின் மூத்த சகோதரர் செல்வா பற்றித்தான் என்று நினைக்கிறேன். அவர் இங்கு அவுஸ்த்திரேலியாவில் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு தற்போதுதான் இலங்கைக்குச் சென்றுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாக தேர்தலில் போட்டியிடப்போகும் இவர் ஒரு முழுமையான அரசியல்வாதிக்குரிய அனைத்து சிறப்பியல்புகளையும் கொண்டவர். தான் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் அதை எப்படியாவது தனது திறமையைக் கொண்டு நியாயப்படுத்திக் கொள்ளும் ஆற்றலுடையவர். தற்போது கூட்டமைப்பிலிருந்தாலும் வெற்றி பெற்றால் மகிந்தவுடனும் சேரக்கூடியவர். அதையும் மிகவு நாசுக்காக நியாயப்படுத்தக் கூடியவர்.

அப்படி ஒரு தம்பிக்கு இப்படி ஒரு அண்ணா !!!!!

செல்வா வவுனியாவில் பிறந்தவர். அங்கே கஜேந்திரன் அணி போட்டியிடவில்லை. சம்பந்தர் அணியே போட்டியிடுகிறது. அதனால் அவர் சம்பந்தர் அணியில் போட்டியிடுகிறார். சம்பந்தர் அணியில் போட்டியிடுவதினால் மகிந்தாவுடன் சேரக்கூடியவர் என்று பொய்யான தகவலைப் பரப்பாதீர்கள். மாவீரர் குடும்பத்தில் வந்த ஒருவர் வீண்பழி சொல்ல வேண்டாம்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இப்ப சங்கரியும் தலைவர் ஆகிட்டார். கலிகாலம்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சிவகுமாரன்,

செல்வாவைப்பற்றித் தெரிந்தபடியினால்த்தான் எழுதினேன். மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்கும் தெரியும், செல்வா யாரென்றும் தெரியும். காலம் போகப் போக நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்குரல் ,தராக்கி ஆகியோர் முன்பு ஒரே குரலில் விடுதலைப்புலிகளுக்காக ஆதரவு கருத்துக்களை எழுதினார்கள். ஆனால் தற்பொழுது சம்பந்தர் குழு, கஜேந்திரன் குழு என இரண்டாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரிந்தபின்பு தங்களின் கருத்துகளுக்காக தராக்கி - திலிபனின் தூபியை உடைத்தவர் கஜேந்திரன் குழு என்று எழுதுகிறார். தமிழ்க்குரல் இணையம் ஒன்றில் வந்த செய்தியான திலீபனின் நினைவு தூபி உடைப்பு சங்கரி கண்டனம், சம்பந்தர் மெளனம் என்றதை இணைக்கிறார். நாளை சம்பந்தரும், கஜேந்திரரும் ஒன்றாகச் சேரலாம். சம்பந்தரைப் பிடிக்காதவர்கள் சம்பந்தரின் இந்தியா விசுவாசத்தை விமர்சியுங்கள். கஜேந்திரனைப் பிடிக்காதவர்கள் கஜேந்திரனின் நிலைப்பாட்டை விமர்சியுங்கள். அதைவிட்டு இருவரும் செய்யாதவற்றை இங்கு பதியவேண்டாம்

நான் இதுவரை கூட்டமைப்பின் அவசியம் பற்றியும் அதன் ஒற்றுமை பற்றியுமே எழுதி வருகின்றேன்

அதே நேரம் திரு.கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் போன்றோரது தியாகங்களை நான் அறிவேன்

அதனால்தான் இங்கு உள்ளவர்கள் பலவாறு என்மீது சேறு பூசியபோதும் .....

நான் திருப்பி திரு.கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் பற்றி எழுதுவதில்லை

எழுதவும் மாட்டேன்

இதற்கு பதிலாக நானும் கேட்கமுடியும்

கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகள் தேசவிரோத குற்றமென அறிவித்திருக்கும் ஸ்ரீலங்கா அரசு

இரு நாடுகள் என்ற இவர்களின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டுள்ளதே...

எந்த ஒப்பந்த அடிப்படையில் என்று கேட்கலாம்

அந்த கேள்வியில் நியாயமும் இருக்கிறது

ஆனால் திரு.கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் அவர்களை எனக்கு தெரியும்

அவர்கள் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு ஐங்கரநேசன் மாஸ்டரிட்ட தாவரவியல் படிக்க இல்லையோ. உங்களை அப்பவே கொட்டிலுக்கை வச்சு குட்டித்தாக்கி இருக்கவேணும். இப்ப தோளுக்கு மேல வளந்துட்டீங்கள். என்னமோ வாத்தியார் அவ்வழி பையங்கள் எவ்வழி..

ஐங்கரநேசன் சேர் எங்கட பிரண்டு. எங்கட வீட்டுக்கு கிட்டதான் அவரும் இருந்தவர் கந்தர்மடத்தில..! ஆனால் நாங்கள் அப்போ சின்னப் பொடியள். யுனிவேர்சலில் கொஞ்சக் காலம் படிச்சிருக்கேன். ஆனால் ஐங்கரநேசன் சேரிடம் படிக்கவில்லை. மீன் தொட்டி பார்க்கிறதுக்கென்றே யுனிவேர்சலில் போய் சேர்ந்து.. அந்தக் கொடுமைகளை ஏன் பேசுவான். அங்க ஒரு வடிவான செக்கி அக்கா இருந்தவா எல்லோ. அவா இப்ப எங்கையோ தெரியாது..! அது மட்டும் நல்ல ஞாபகமா இருக்கு.! :lol::huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அணியில் எவர் நின்றாலும்.. மாவீரர்களின் மக்களின் இலட்சியங்களை விட்டுக்கொடுக்க முனையக் கூடாது. தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் தாயக நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு போரால் சீரழிந்து போயுள்ள எமது இனத்தின் சமூக பொருண்மிய அரசியல் கட்டுமானங்களைப் பலப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதற்காக மகிந்தவை சார்ந்திருக்க வேண்டும் என்பதல்ல முக்கியம். மகிந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச அரசுகளின் தூதரக மட்ட உறவுகளை தமிழ் தேசியத்தை நேசிக்கும் உறுப்பினர்கள் பலமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் இந்தியா சீனா பாகிஸ்தான் அமெரிக்கா இதர மேற்குலக நாடுகள்..இஸ்ரேல்.. ரஷ்சியா கியூபா வியட்நாம் வடகொரியா தென்கொரியா தாய்லாந்து சிங்கப்பூர் மலேசியா அரபுநாடுகள் என்ற எந்தப் பிரிவினையும் இன்றி எல்லா நாடுகளின் ஆதரவையும் எமக்காக்கிக் கொண்டு சிங்களத்தின் இராஜதந்திர நகர்வுகளுக்கு சமனாக நாமும் எமது நிலையை உலகிற்கு சொல்லி உலகின் சார்பை ஆதரவை எமதாக்கிக் கொள்ள முனைய வேண்டும். தனித்து இந்திய ஆதரவோ.. அல்லது மேற்குலகின் ஆதரவோ ஆபத்தானதும் அன்றி அவர்கள் எம் மீது செல்வாக்குச் செய்ய முயலும் போது கட்டுப்பாடுகளை இழக்க நேரிடும்.

தமிழ் தேசியவாதிகள் கம்னிசிய நாடுகளோடும் ஜனநாயக நாடுகளோடு உறவுகளை வளர்ப்பது போன்று வளர்க்க முற்பட வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்திற்கு மறைமுகமாக என்றாலும் உதவி நின்ற நாடுகளோடு எமது உறவுகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக எரித்திரியா, தென் ஆபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகளோடும் எமது உறவுகள் மேம்பட வேண்டும். சிங்களத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தமிழர்கள் நகர்ந்து சென்று தம்மை அரசியல் ரீதியில் ராஜதந்திர ரீதில் பலப்படுத்தினால் அன்றி மகிந்த பிச்சை போடுவான் அவனின் காலைக் கட்டிக்கிடப்போம்.. இந்தியா ஆதரவு அளிக்கும் அதுவரை காத்துக்கிடப்போம் என்றால் மீண்டும் பல முள்ளிவாய்க்கால்களையே எதிர்கால சமூகத்திற்கு நாம் பரிசளிக்க முடியும். பல திலீபனின் சிலைகளை உடைபடுவதையே காண வேண்டியும் இருக்கும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கந்தப்பு

தராக்கி தங்களின் கருத்துகளுக்காக தராக்கி - திலிபனின் தூபியை உடைத்தவர் கஜேந்திரன் குழு என்று எழுதுகிறார்.

தராக்கி ஆரம்பம் முதலே இப்படியான விசமத்தனமான பிரச்சாரங்களிலேயே ஈடுபட்டுள்ளர் கருணாவும் கயேந்திரனும் ஒன்று என்று கூட அவர் சம்பந்த மோகத்தில் இருக்கின்றார்

தமிழ்க்குரல் இணையம் ஒன்றில் வந்த செய்தியான திலீபனின் நினைவு தூபி உடைப்பு சங்கரி கண்டனம், சம்பந்தர் மெளனம் என்றதை இணைக்கிறார்.

உங்களுக்காக செய்தியை மாற்றமுடியுமா ? இப்போது தான் எழுதுகின்றீர்கள் போலும் இவ்வளவு காலமும் மண்ணுக்குள் தலையை வைத்திருந்தீர்களா ? இங்கே இதை விட எல்லாச் செய்திகளும் யாழில் இருக்கின்றது மற்றவர்களும் என்ன சொல்கின்றார்கள் என்பதற்காகவே அவை இணைக்கப்பட்டிருக்கின்றது என்பது போல் இதுவும் பாருங்கோ

சம்பந்தரைப் பிடிக்காதவர்கள் சம்பந்தரின் இந்தியா விசுவாசத்தை விமர்சியுங்கள். கஜேந்திரனைப் பிடிக்காதவர்கள் கஜேந்திரனின் நிலைப்பாட்டை விமர்சியுங்கள்.

நீங்கள் வந்துவிட்டீர்கள் என்பதற்காக திரும்ப முதலிருந்து எழுத முடியுமா ? முன்னய பதிவுகளைப் பாருங்கள்

அதைவிட்டு இருவரும் செய்யாதவற்றை இங்கு பதியவேண்டாம்

செய்யாததை செய்யவில்லை என்று தானே சொல்லுகின்றோம் சம்பந்தர் அறிக்கைவிடவில்லை தானே பாருங்கோ

sivakumaran

இப்ப சங்கரியும் தலைவர் ஆகிட்டார். கலிகாலம்.

அவர் எப்பவும் கூட்டணியின் தலைவர் பாருங்கோ

  • தொடங்கியவர்

இங்கே சிலர் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக கருத்தெழுதுவதாக முதலைக் கண்ணீர் விடுகின்றார்கள்

அப்படியாரும் எழுதவில்லை பெரும்பாலானவர்கள் சம்பந்த விசுவாசத்தால் தான் எழுதுகின்றார்கள் அதுவும் கயேந்திரன் அணியைத் துரோகிகளாகவும் சித்தரிக்கின்றார்கள்

தங்களால் தூக்கிவீசப்படுபவாகள் அரசியலில் அநாதைகளாகி விடுவார்கள் என்று எண்ணிய எஸ்.எம்.எஸ். ஆணி இன்று கதிகலங்கி நிற்பதைப் பார்க்க முடிகின்றது.

குருவிக் கூட்டை உடைத்தது நியாயமா?

ஓற்றுமையாக இருந்த கூட்டமைப்பு என்பது, தேசியத் தலைமையால் குருவிக் கூடொன்று கட்டுவது போன்று உருவாக்கப்பட்டது. ஓவ்வொரு சுள்ளித்தடிகளை ஒவ்வொன்றாக காவிவரும் குருவி எத்தனை க~;டப்பட்டு அந்தக் கூட்டைக் கட்டியது என்பது அதற்கு மட்டுமே தெரியும். அந்தக் கூட்டை உடைப்பவர்களுக்கு அது புரியாது.

தமிழர் தேசிய தலைமை மௌனித்து அரூபமாகியுள்ள இந்தக் காலத்தை, தனிப்பட்ட பழுவாங்கலுக்கு சாதகமாக்கிய எஸ்.எம்.எஸ். ஆணி, செய்வதறியாத நிலையில் அவலக்குரல் எழுப்புகின்றது.

கஜேந்திரன் – பத்மின p- கஜேந்திரக்குமார் ஆகியோருக்குப் பாடம் புகட்ட முனைந்த சம்பந்தர் (ஏவற்பிராணிபோல) அது தமக்கே வேட்டுவைக்குமென்று ஒரு போதும் எண்ணியிருக்காததால், ‘தமிழர் தாயகம் பறிபோகின்றது’ என்று அலறத் தொடங்கியிருப்பதைக் கேட்கமுடிகின்றது.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டிகளாக எஸ்.எம்.எஸ். ஆணியை தமிழ் மக்கள் பார்க்கும் காலத்தை உருவாக்கியவர்களே இவர்கள் தான். ஒருவர் தமது முகத்தில் தாமே காறி உமிழ்வதை எவரால் தடுக்க முடியும்.

தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகின்றதா?

“சம்பந்தர் தோற்றால் திருமலையில் தமிழ பிரதிநிதித்துவம் பறிபோகும்” என்றொரு புதக்குரல் எழுப்பப்படுகின்றது.

வேறொரு தமிழர் திருமலையில் வெற்றிபெற்றால், அது தமிழர் பிரதிநிதித்துவம் இல்லையா?

“திருமலைதான் சம்பந்தர், சம்பந்தர் தான் திருமலை” என்பவர்கள் “இந்தியாதான் இந்திரா, இந்திரா தான் இந்தியா” என்று கோ~மெழுந்ததையடுத்து அன்று இந்தியாவுக்கு நேர்ந்ததை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஓர் இனத்தை அழிக்க முனைபவர் ஜனநாயக மரபுக்கிணங்க தோற்கடிக்கப்படின், அது இனத்துக்கு நன்மையை விளைவிக்குமே தவிர, எந்தத் தீமையையும் ஏற்படுத்தாது எனபது தமிழ் மக்களின் கருத்து.

இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தைப் பார்க்கலாம்.

கடந்த வாரம் மூதூரில் தேர்தல் கூட்டமொன்றில் சம்பந்தர் உரையாற்றினார். “இந்தத் தேர்தலிலும் நான் தோல்வியுற்றாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேன்” என்று ஆவேசத்துடன் முழங்கினார்.

இது எதனை உணர்த்துகின்றது?

“திருமலையில் தமிழருக்கான ஒரு பிரதிநிதித்துவம் போனாலும், பரவாயில்லை, நான் நாடாளுமன்ற உறுப்பினராவேன்” என்பது நாடாளுமன்றக் கதிரை மோகத்தையே முன்னிறுத்திக் காட்டுகின்றது.

திருமலையில் இன்று என்ன நடைபெறுகின்றது. கடந்த காலத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருந்தன போன்ற விபரங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

- தமிழ்த்தேசியன்

நன்றி: ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70433

இந்த இரு அணிகளில் யார் தோற்றாலும் அவமானமும் பின்னடைவும் தமிழர்களுக்குத் தான்

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.